“யெஸ் சார்.. வெல்கம்” - யூனிஃபார்ம் அணிந்த இளைஞன் புன்சிரிப்போடு கண்ணாடிக் கதவு திறந்து வரவேற்றான்.
அது ஏறக்குறைய எல்லா நகரங்களிலும் கிளைபரப்பி, புதியதாக எங்களூருக்கு வந்திருக்கும் ஃபேமலி ப்யூட்டி சலூன்.
உள்ளே சென்றதும் சுற்று முற்றும் பார்த்தேன். உயரமான நாற்காலி ஒன்றில் உட்காரவைக்கப்பட்ட குழந்தையொன்று சிரித்தபடி கண்ணாடி பார்த்துக் கொண்டிருக்க அதற்கு வலிக்காமல் முடி வெட்டிக் கொண்டிருந்தார் ஒரு இளைஞர்.
“வாட் கேன் வி டூ ஃபார் யூ சார்?”
முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறை. அங்கங்கே ஆங்கில இதழ்கள். மெலிதான இசை கேட்டுக் கொண்டிருந்தது.
“ஹேர் ஸ்டைல் சேஞ்ச் பண்ணனும்”
“ஷ்யூர் சார். ஐ’ல் ப்ரிங் த புக்லெட்” என்றபடி என்னை அமரச் செய்துவிட்டு போனான்.
எனக்கு சின்ன வயது ஞாபகம் வந்தது.
நினைவு தெரிந்த நாளிலிருந்தே முடிவெட்டிக் கொள்ள நான் செல்வது பழனியண்ணன் சலூன்கடைதான். அவரும் எவரெஸ்ட் சலூன், ஹாலிவுட் சலூன், ஸ்டார் ஹேர்லைன்ஸ் என்று என்னென்னவோ பெயர் மாற்றியிருக்கிறார். ஆனாலும் அது எங்களுக்கு பழனியண்ணன் கடைதான். முடிவெட்டிக் கொள்ள என்றில்லாமல் நண்பர்கள் அவ்வப்போது கூடுமிடமாகவும் அது இருந்தது.
முடிவெட்டிக் கொள்ள போகும்போது கூட்டம் அதிகமாக இருந்தால் அவரே
“குமாரு.. எட்டரை மணிக்கு வர்றியா? சரியா இருக்கும்” என்பார்..
எட்டரை மணிக்குப் போனாலும் ஐந்தாறு பேர் அமர்ந்திருப்பார்கள். பழனியண்ணன் கண்ணால் ஒரு சைகை காண்பிப்பார். ‘கொஞ்சம் பொறுடா’ என்றர்த்தம் அதற்கு. அங்கிருக்கும் பெஞ்சில் அமர்வேன்.
அனைத்து தினசரிகளும், நாளிதழும் இருக்கும். சுவற்றில் பாம்பே டையிங் காலண்டரில் முன்னணி நடிகை சிரித்துக் கொண்டிருப்பாள். அனுராதா, டிஸ்கோ சாந்தி வகையறா ஒட்டப்பட்டிருக்காது எனினும் நிச்சயமாக நடிகைகளின் ப்ளோ அப்புகள் சுவற்றில் இருக்கும். கண்ணாடியில் மூலைகளில் சில விசிட்டிங் கார்டுகள் சொருகப்பட்டிருக்கும். ஒரே ஒரு கண்ணாடிக்கு நேர் எதிர் சுவற்றில் மற்றொரு கண்ணாடி மாட்டியிருப்பார். ‘இன்னொரு கண்ணாடி வாங்கணும் குமாரு. எங்க.. வர்றது கைக்கும் வாய்க்குமே சரியா இருக்கு’ என்பார்.
வாரமலரின் குறுக்கெழுத்துப் புதிரை நான் முடிப்பதற்குள் எனக்கான முறை வந்துவிடும்.
முடிவெட்டி முடித்து எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். ஓரிரு முறை ஒன்றும் கொடுக்காமலே ‘சினிமா போகணும்னே... அப்பா கேட்டா தரமாட்டாரு’ என்று அந்தக் காசை கமிஷனடித்திருக்கிறேன். ஒன்றுமே சொல்ல மாட்டார்.
நடுவில் நாங்கள் சொந்த வீடுகட்டி ஏரியா மாறிய பிறகு அவருடனான தொடர்பு குறைந்தது. கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தபிறகு அவரோடான தொடர்பு முற்றிலும் அற்றுப் போனது.
“எக்ஸ்யுஸ்மி சார்” - புக்லெட்டுடன் வந்த இளைஞன் என் ஃப்ளாஷ்பேக்கைக் கலைத்தான். “ ஃபோர் ஹண்ட்ரட் வரும்சார். உங்க ஃபேஸ் கட்டுக்கு இதோ இந்த நாலு ஸ்டைலும் பொருந்தி வரும் சார்” என்றான்.
“எவ்வளவு நேரமாகும்?”
“ஒன் ஹவர்” என்றான்.
சம்மதித்து கிங்க்ஸ் என்றெழுதப்பட்ட அறைக்குள் அழைத்துச் செல்லப் பட்டேன். ஷாம்பூ வாஷ் என்று ஈஸி சேர் ஒன்றில் படுக்க வைத்து குளிக்க வைக்கப்பட்டேன். முடித்ததும் தலையை கருப்பு பூத்துவாலையால் துடைத்துவிட்டார்கள். எனக்கு மறுபடி பழனியண்ணனும் அவர் தோளில் கிடக்கும் ஈரிழைத்துண்டும் ஞாபகத்துக்கு வந்தது.
அரைமணி நேரம் தலையை என்னென்னவோ செய்தார்கள். நான் போட்டிருந்த டீ ஷர்ட் கொஞ்சமும் கசங்காமல் மென்மையாக என்னைக் கையாண்டார்கள். இடையே சில நிமிடங்கள் என் தலை காய அமரவைக்கப்பட்டபோது தடிமனான சில புத்தங்கங்கள் தரப்பட்டது. எதுவும் பழனியண்ணன் கடை வாரமலருக்கு ஈடாகுமாவெனத் தோன்றியது.
எல்லாம் முடிந்து என்னை சரிபார்த்துக் கொண்டே முன்னறையில் வந்து அமர்ந்தேன்.
பில் கொண்டு வரப்பட, காசை எடுத்து வைத்து விட்டு வாசல் நோக்கி நடந்தேன்.
கதவருகே வந்த இளைஞன் ‘தேங்க்யூ சார்’ என்று கண்ணாடிக் கதவைத் திறந்தான். வெளியே இன்னோவா ஒன்று வந்து நிற்க.. அந்த இளைஞன் ‘பாஸ் வந்துட்டாரு’ என்று உள்ளே திரும்பி குரல் குடுத்தவாறு எனக்கு புன்னகையைச் சிந்தினான். தூரத்தில் நின்ற இன்னோவாவிலிருந்து கதர் வேட்டி சட்டையோடு யாரோ இறங்குவது தெரிந்தது.
என் காரருகே செல்லும்போதுதான் இன்னோவாவிலிருந்து இறங்கி என்னைக் கடந்து செல்லும் நபரைப் பார்த்தேன்..
தோளில் அதே ஈரிழைத்துண்டோடு - பழனியண்ணன்.
.
42 comments:
hi parisal
padithuvittu varugiren
அருமையான கதை பரிசல்
பாஸ் திருப போய் கந்தசாமி படம் பார்க்க காசு வேணும் சொல்லி அந்த நானூறு ரூபாய வாங்கிட்டு வந்துருங்க
பரிசலண்ணே,
அழகான எளிமையான சிறுகதை.
இன்னோவா காரில் என யோசிக்கவில்லை, அவர் வருவார் எனவோ, அல்லது அந்த இளைஞன் அவரின் மகன் எனவே கற்பணை செய்திருந்தேன்.
பிரபாகர்.
ச் போட்ருக்கீங்களே,காப்பிரைட்
ப்ராப்ளம் ஒண்ணும் வராதே?
ட்விஸ்ட் சூப்பர்.
கதை நல்லா இருக்கு
அனைத்து தினசரிகளும், நாளிதழும் இருக்கும்// அதென்ன ரெண்டுக்கும் வித்தியாசம்?
நல்லதொரு டுபாக்கூர் கதை.!
இரும்புத்திரை அரவிந்த் said...
பாஸ் திருப போய் கந்தசாமி படம் பார்க்க காசு வேணும் சொல்லி அந்த நானூறு ரூபாய வாங்கிட்டு வந்துருங்க//
இதுக்கொரு ரிப்பீட்டு.!
மென்மையான கதை :))) அருமை அண்ணா...
// இரும்புத்திரை அரவிந்த் said...
பாஸ் திருப போய் கந்தசாமி படம் பார்க்க காசு வேணும் சொல்லி அந்த நானூறு ரூபாய வாங்கிட்டு வந்துருங்க//
ஹா ஹா ஹா :)))))))))))
ம்ம்.. என்னவோ சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன்.. இன்னோவாவா? ரைட்டு
சிகப்பு எழுத்துக்கள் நல்லா இருந்தது!
கடைசில டிராமாடிக்கான முடிவு! :)
Story Super Krishna....
Palanianna kooda pesavillaiya?....
nalla irukku chinna paiya
அட..... அப்புடியா....!! நல்ல முன்னேற்றம்...!!
ஆனா எனக்கு ஒரு டவுட்டு.... பழனி அண்ணன் வாழ்க்கையில முன்னேறும்போது.... ஏதாவது போர்ஷான பேக் கிரவுன்ட் சாங் இருந்துதா....? இருந்தா கொஞ்சம் கேட்டு சொல்லுங்க...!! நானும் அந்த சாங்க போட்டுக்கிட்டு வாழ்க்கையில முன்னேருறேன்....!!
பரிசலு
நல்லா கீதுபா...அட மெய்யாலுமே தாம்பா.... எது.... அதாம்பா, கடைசில வந்த அந்த ட்விஸ்டு....
இத்த போலவே நானும் ஒண்ணு ட்விஸ்டோட எழுதி கீறேம்பா... வந்துதான் பாரேன்பா..
(தோப்பும்... புங்கை மரமும்... பின்னே ஞானும்
http://edakumadaku.blogspot.com/2009/08/blog-post_17.html)
//லவ்டேல் மேடி
பழனி அண்ணன் வாழ்க்கையில முன்னேறும்போது.... ஏதாவது போர்ஷான பேக் கிரவுன்ட் சாங் இருந்துதா....? இருந்தா கொஞ்சம் கேட்டு சொல்லுங்க...!! நானும் அந்த சாங்க போட்டுக்கிட்டு வாழ்க்கையில முன்னேருறேன்....!!//
அட்ரஸ் கொடுங்க... எஸ்.ஏ.ராஜ்குமார வூட்டாண்ட வர சொல்றேன்.... மரியாதை, பார்ட் 2க்கு போட்ட பாட்டு இருக்காம்... வசதி எப்படி?
climax twist expected.
ஃபிளாஷ் பேக் அருமையா இருந்தது.
// R.gopi said
அட்ரஸ் கொடுங்க... எஸ்.ஏ.ராஜ்குமார வூட்டாண்ட வர சொல்றேன்.... மரியாதை, பார்ட் 2க்கு போட்ட பாட்டு இருக்காம்... வசதி எப்படி? //
அடங்கொன்னியா.......
நம்மனால .... லா...லா.... லலலா...... சாங்குலயெல்லாம் முன்னேற முடியாது .....
நமக்கெல்லாம் டி.ஆர் மாதிரி ....... ஏ.... டண்டனக்கா..... ஏ...டணுக்குனக்கா..... சாங்குதான் நெம்ப கரக்ட்டு ......
ஏனுங் தலைவரே... என்ன சொல்றீங்கோ.....??
கணிக்கமுடியாத முடிவு.
நானும் அவர் இனோவா காரில் வருவார்னு எதிர்ப்பார்க்கலை.
பழனியண்ணன் படம் சுவரை அலங்கரித்ததுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
எப்படி அண்ணன் இப்படி உயர்ந்தார்?
சினிமாவில் ஒரே ஒரு ரூபாயில் ஒரே ஒரு பாட்டில் செல்வந்தர் ஆவது போலவா? :-)))))
கதை நல்லா இருக்கு.
தமிழ்ஸ்டுடியோவில் வந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.
//நான் போட்டிருந்த டீ ஷர்ட் கொஞ்சமும் கசங்காமல் மென்மையாக என்னைக் கையாண்டார்கள்//
அருமை.
:)
//என் காரருகே செல்லும்போதுதான்//
இத யாருமே கவனிக்கலியா?
அவ்வ்வ்வ்...
வேறு மாதிரி முடிவை எதிர்ப்பார்த்தேன்.
romba nala irukunga,,,,
பரிசல்காரன் said...
//என் காரருகே செல்லும்போதுதான்//
இத யாருமே கவனிக்கலியா?
அவ்வ்வ்வ்...
ayyo kavanikala...athan thiruba poi antha kadaisi varigalai padithaen....
mudinja bold letters la podinga ellarum gavanippanga :)
பழனியண்ணன் தொழிலை மட்டும் கத்துக்காம வியாபாரமும் கத்துகிட்டாரு போல! நல்லாருக்கு பன்ச்..
http://kgjawarlal.wordpress.com
வெட்டுக்கிளியல்ல நீயொரு.... ரேடியோல இந்த பாட்டுதானே கேட்டுகிட்டு இருந்தீங்க... பதிவெழுதும்போது
எளிமையான சிறுகதை
அழகா இருக்கு.
//Cable Sankar said...
climax twist expected.
அதே அதே.
பாஸ், என்னோட முடி வெட்டும் அனுபவம் இங்கே இருக்கு. படிச்சுட்டு சொல்லுங்க.
முடிவு நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை. நல்லா இருக்கு.
ரைட்டு :-)
R.Gopi
//லவ்டேல் மேடி
பழனி அண்ணன் வாழ்க்கையில முன்னேறும்போது.... ஏதாவது போர்ஷான பேக் கிரவுன்ட் சாங் இருந்துதா....? இருந்தா கொஞ்சம் கேட்டு சொல்லுங்க...!! நானும் அந்த சாங்க போட்டுக்கிட்டு வாழ்க்கையில முன்னேருறேன்....!!//
அட்ரஸ் கொடுங்க... எஸ்.ஏ.ராஜ்குமார வூட்டாண்ட வர சொல்றேன்.... மரியாதை, பார்ட் 2க்கு போட்ட பாட்டு இருக்காம்... வசதி எப்படி?
நா சொல்ல நினைச்சேன். இவங்க சொல்லிட்டாங்க
//சுவற்றில் பாம்பே டையிங் காலண்டரில் முன்னணி நடிகை சிரித்துக் கொண்டிருப்பாள். அனுராதா, டிஸ்கோ சாந்தி வகையறா ஒட்டப்பட்டிருக்காது//
-அண்ணா, இங்க யாரெல்லாம் இருந்தாங்க?
இன்னொரு முக்கியமான டவுட்.. ஹேர் ஸ்டைல் மாத்துற வயசெல்லாம் எப்பவோ உங்களுக்கு போயாச்சே??
நல்ல கதை பரிசல்
பரிசல்காரன் said...
//என் காரருகே செல்லும்போதுதான்//
இத யாருமே கவனிக்கலியா?
அவ்வ்வ்வ்...
ஆக மொத்தத்துல நம்ம எல்லாரும் கதையோட மையக் கருவை மிஸ் பண்ணிட்டோம்...
டும்.... டும்.... டும்....
இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,
பரிசல் காரரு கதை மசிரு சமாச்சாரம்.
அன்றைக்கும் இன்றைக்கும்.
1. வாடிக்கையாளர் உறவில் : நேற்று இருந்த அன்யோன்யம் போய், மரியாதையாய் அன்னியம் வந்தது என்கிறீர்.
2. சேவை : காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் காரியம் உடனே நடக்கும் என்கிறீர்.
3. தரம் : இன்னைக்கு பரவாயில்லங்கீறீர்.
இருந்தாலும் இதை கதை பதிவுன்னு சொல்லி ஏமாத்திப்புட்டீங்களே ஐயா !!!!
அது சரி கோபி அண்ணே ஈஸ்வரி அக்கா எல்லாம்... பேக்ரவுண்ட் மீசிக் வரைக்கும் போயி ஒவர் பில்ட் அப்ப குடுத்து, அப்பனே அப்பிட்டாங்க.... நம்பாத பரிசல்.
டும்....டும்....டும்....
நன்றாகயிருந்ததுங்க..
உங்க அனுமதியோட எனக்கு தோணுகிற ஒரு sentiment ஆன முடிவு கீழே..
//என் காரருகே செல்லும்போதுதான் இன்னோவாவிலிருந்து இறங்கி என்னைக் கடந்து செல்லும் நபரைப் பார்த்தேன்..
காதிலிருந்து செல்போனை பிரிக்கமுடியாமல், வளமையான நகைகள் அணிந்த ஒரு கோட்சூட் தொப்பைக்காரர் உள்ளே போனார்...
ஏனோ எனக்கு பழனியண்ணன் ஞாபகத்திற்கு வந்தார்..
---------------------------------
மீண்டும் நன்றி..
காரணம் ஆயிரம்™
/
இரும்புத்திரை அரவிந்த் said...
பாஸ் திருப போய் கந்தசாமி படம் பார்க்க காசு வேணும் சொல்லி அந்த நானூறு ரூபாய வாங்கிட்டு வந்துருங்க
/
ROTFL
:)))))))))))
//
முடிவெட்டி முடித்து எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். ஓரிரு முறை ஒன்றும் கொடுக்காமலே ‘சினிமா போகணும்னே... அப்பா கேட்டா தரமாட்டாரு’ என்று அந்தக் காசை கமிஷனடித்திருக்கிறேன். ஒன்றுமே சொல்ல மாட்டார்.
நடுவில் நாங்கள் சொந்த வீடுகட்டி ஏரியா மாறிய பிறகு அவருடனான தொடர்பு குறைந்தது. கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தபிறகு அவரோடான தொடர்பு முற்றிலும் அற்றுப் போனது.
//
உங்க தொடர்பு முற்றிலும் அற்றுப் போனதால் தான் அவர் பெரிய ஆள் ஆனார்னு நீங்க சந்தேகபடறீங்க.........ச்சே ச்சே அப்படியெல்லாம் இருக்காது........
பரிசல் IS BACK...
அன்புடன்,
ஒவ்வாக்காசு
புளிய மரத்தடியில் பெருமாளின் கையில் தலையை ஒப்படைத்த ஞாபகமெல்லாம் வருது
Post a Comment