வடிவேலு படங்களில் பயன்படுத்தும் வசனங்கள் எல்லா தட்டு மக்களிடமும் நீக்கமற நிறைந்து புழங்கிக் கொண்டு வருகிறது. ஒரு தமிழன் இருக்கிறார் - அவர் கைவண்டி தள்ளுபவராயினும், கார்ப்பரேட் ஆஃபீஸ் சீஃப் ஆக இருப்பினும் ஒரு நாள் ஒரு முறையேனும் அவர் வடிவேலுவின் வசனமேதாவதைப் பேசாமலிருப்பாரென்றால், அவர் பேசாதவராயிருப்பாரென்பதே நிஜம்!
இன்றைக்கு ஒரு சில வசனங்களைப் பற்றிப் பார்ப்போம்..
******************
ஆணிய புடுங்க வேண்டாம்...!
ஃப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற வசனமிது. வடிவேலு, ரமேஷ் கண்ணாவையும், அப்பிரசண்டிகளாக (!!!) வேலைக்குச் சேர்ந்த விஜய்-சூர்யாவையும் கண்டு எப்போதும் கடுப்பிலிருப்பார். மூவரையும் அழைத்து, அதில் ரமேஷ் கண்ணாவைப் பார்த்து ‘நீ மேல போய் தேவையில்லாத ஆணியையெல்லாம் புடுங்கு’ என்பார். (ஒரு வீட்டு Renovation வேலைக்கான காண்ட்ராக்ட் எடுத்திருப்பார்) ரமேஷ் கண்ணாவுடன், இவர்கள் இருவருமே மாடியில் ஏற ‘ஏய்.. நீ எங்க போற.. நீ எங்க போற.. நீ எங்க போற..’ என்று சூர்யாவின் தோளில் Bagஆல் தட்டி திட்டுவார். உடனே விஜய் ‘நீங்கதானே ஆணியப் புடுங்கச் சொன்னீங்க?’ என்று கேட்பார். உடனே வடிவேலு ‘நான் சொன்னது அவன.. ‘ என்று விட்டு ‘ஆணியப் புடுங்க வேண்டாம்’ என்பார். மூவருமே இறங்கிவிடுவார்கள். மறுபடி ரமேஷ் கண்ணாவைப் பார்த்து ‘நீ ஏண்டா வர்ற?’ என்று கேட்பார். ‘நீங்கதானே ஆணியப் புடுங்க வேண்டாம்னீங்க?’ என்பார். மறுபடி வடிவேலு ‘டேய்.. நான் சொன்னது இவனுகள.. நீ போய் தேவையில்லாத ஆணியவெல்லாம் புடுங்கு’ என்பார். அப்போது ரமேஷ் கண்ணா கேட்கும் ஒரு கேள்வியும் அதற்கு வடிவேலுவின் பதிலும் சரித்திரப் புகழ் வாயந்தது!
ரமேஷ் கண்ணா: “தேவையிருக்கற ஆணி தேவையில்லாத ஆணின்னு எப்படித் தெரிஞ்சுக்கறது?”
வடிவேலு: ‘நீ புடுங்கறதெல்லாம் தேவையில்லாத ஆணிதான்’
இந்தப் படத்திற்குப் பிறகு ஆணி பிடுங்குதல் என்றால் வேலை செய்வது என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆஃபீஸ்ல ஆணி அதிகம் என்றால் வேலை அதிகம். ஆணியப் புடுங்க வேண்டாம்’ என்றால் நீ சும்மா இருந்தாலே போதும். ஒண்ணும் பண்ணவேணாம் என்றர்த்தம்!
நானும் ரௌடிதான்..நானும் ரௌடிதான்..நானும் ரௌடிதான்
தலைநகரம் என்ற படத்தில் இடம்பெற்றது இது.
இந்தப் படத்தில் சுந்தர்.சி. ஒரு ரௌடியாக இருந்து, பின் திருந்தி வாழ்ந்து கொண்டிருப்பார். வடிவேலு அவர் ஏரியாவில் தனக்கு ‘நாய் சேகர்’ என்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு தானும் ஒரு ரௌடி என்று பறைசாற்றிக் கொண்டிருப்பார். ஒருமுறை டீக்கடை ஒன்றின் முன் நிஜமாகவே ரௌடிகள் பலருடன் வடிவேலு வம்புக்கிழுத்துக் கொண்டிருப்பார். அப்போது போலீஸ் ஜீப் வரும். ‘புதுசா வந்த இன்ஸ்பெக்டர் எல்லா ரௌடிகளையும் கூட்டீட்டு வரச் சொன்னார்’ என்று கான்ஸ்டபிள் எல்லாரையும்-வடிவேலுவைத் தவிர்த்து- ஜீப்பில் ஏறச் சொல்வார். இவர் ஏறப்போக ‘யோவ்.. நீ எங்க போற?’ என்று கான்ஸ்டபிள் கேட்பார். ‘நானும் இந்த ஏரியால ரௌடின்னு ஃபார்ம் ஆய்ட்டேன்யா.. இப்ப நான் வரலைன்னா என்னை எவனுமே மதிக்க மாட்டான்யா’ என்று கொஞ்சுவார். ‘நீ ரௌடின்னு நான் எப்படி நம்பறது’ என்று கேட்க.. ‘எல்லா ரௌடிக கூடயும் சரிக்கு சமமா நின்னு பேசிக்கிட்டிருந்தேனே.. பார்க்கலியா’ என்று ரகளை செய்து எப்படியோ கிளம்பும் ஜீப்பில் பின்னால் தொத்திக் கொள்வார். அப்படித் தொத்திக் கொண்டபின் வெளியே பார்த்து அவர் சொல்லும் டயலாக்தான்.. ‘எல்லாரும் பார்த்துக்கங்க... நானும் ரௌடிதான்.. நானும் ரௌடிதான்.. நானும் ரௌடிதான்’
ஆஃபீசில் நம்மை யாராவது பெரிய ஆள்போலப் பார்த்தாலோ, நம்ம பதிவை யாராவது சூப்பர்ன்னாலோ, நம்ம பதிவை யாராவது காப்பி அடிச்சு போட்டாலோ, நம்ம பதிவு பிரபல பத்திரிகைகள்ல வந்தாலோ நாமளும் இதைச் சொல்லிக்கலாம்!
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் பண்ணீட்டாய்ங்கடா
வின்னர் படத்தில் இடம்பெற்றது இது.
வடிவேலு ரியாஸ்கானிடம் அடிவாங்கி விட்டு வந்திருப்பார். (மிகப் புகழ்பெற்ற காட்சியிது) கன்னாபின்னாவென அடிவாங்கிவிட்டு வந்து பாலமொன்றின் மீது அமர்ந்திருப்பார். அப்போது அங்கே வந்து கொண்டிருக்கும் ஊர்க்காரர்கள் இரண்டு பேரில் ஒருவர் “அடிச்சுட்டு வந்த கைப்புள்ளைக்கே இவ்ளோ ரத்தம் வருதுன்னா.. அடி வாங்கினவன் உயிரோட இருப்பான்னு நெனைக்கறியா நீ?’” என்று உடன் வருபவரைப் பார்த்து கேட்ட வண்ணம் வடிவேலு க்ரூப்பை கடந்து செல்வார். இதைப் பார்த்து டரியலாகும் வடிவேலு தன் சகாக்களைப் பார்த்து இந்த வசனத்தைச் சொல்வார்.
நம்மைப் பார்த்து ‘நீங்க அழகா இருக்கீங்க.. யூத்தா இருக்கீங்க... சூப்பரா எழுதறீங்க’ என்றெல்லாம் யாராவது சொன்னால், தாராளமாக நாம் இந்த டயலாக்கை சொல்லிக் கொள்ளலாம்!
*****************************************************
ஒரு முறை நண்பர் ஒருவர் நீங்க ஆணி ஆணின்னு பேசிக்கறீங்களே அப்படீன்னா என்ன என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பினார். ஆகவேதான் இதுபோன்ற வாசகங்களுக்கான மூலமான வசனங்கள் குறித்து பதிவெழுதுகிறேன். மற்றபடி வேற ஆணி இல்லாததால் இந்த ஆணியைப் பிடுங்குவதாக எண்ண வேண்டாம்! :-)))))
வடிவேலு உபயோகிக்கும் டயலாக்குகள் ஒரு கடல். இப்போதைக்கு மூன்று முத்துகள் மட்டும். அப்பப்போ இது தொடரும்!
57 comments:
உண்மைதான்.
நல்ல வர்ணனைகள்
இப்போவே கண்ணக்கட்டுதே...
:)
அப்பப்ப தொடருமா?
ஸப்பா.. இப்பவே கண்ண கட்டுதே..
1) எனக்கு புடிச்ச டயலாக் எது தெரியுமா?
2) ஆக்ட்டுச்சுவலி நானும் எழுத யோசித்திருந்தேன்..
”வடை போச்சே”
ம்ம்ம் :))
நல்லாயிருக்கு நல்லாயிருக்கு நல்லாயிருக்கு . இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே எழுத வைக்கிறாங்கைய
//”வடை போச்சே”//
இந்த இரு வார்த்தையை அடிச்சுக்க இன்னும் ஏதும் வரல.
Koundamani dialogues kooda sila samayam use panrangha...Yedhavadhu particular software than venum nu kettakka "peteamax lighte dhan venuma?" nbangha..Apparam senthil karagattkaaran dialogue "Oru vilambaram..." adhuvum kooda use aahudhu...
Innum nirya aaraichi pannugha..Namaku pinnala vara snathadigal padichu artham purijukku vaangalle...
Krish
அவனா(ரா) நீயி
இந்த கொசு தொல்லை தாங்கலடா நாராயணா..
ரூம் போட்டு யோசிப்பாங்களோ
ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பாஸ்,
அந்த டயலாக்’ஐ விட்டுட்டிங்களே... :)
ஏன்யா..ஏன்..?
உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி மின் அஞ்சல் வருது!
எனக்கு ப்ளாக் ஐடி கொடுத்து படிக்க சொல்லி மட்டும் தான் மின் அஞ்சல் வருது!
அதை தடுக்க எதாவது வழி இருக்கா!?
Why blood....mm,, same blood..
இன்றைய சென்னைத்தமிழ் வடிவேலுவால் மதுரைத் தமிழாக மாற்றப்பட்டு வருகிறது :)
அன்பிலீவபிள்.! பத்து நாட்களாக எழுத எத்தனித்து நேரமில்லாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே சென்ற பதிவு இது.
வட போச்சே.!
தங்கமணியோடு சண்டையிடும் போது நான் பயன்படுத்துவது..
பீ கேர்ஃபுல்.! நான் என்னைச்சொன்னேன்.!
அய்யா சாமி.. தமிழ்ல இந்த சிரிப்பு செனலுங்க ஒரு நாளைக்கு பதிமூனாயிரம் வாட்டி இந்த கமெடிகளை எல்லாம் ஒளிபரப்பறாங்க. இந்த காமெடிகள் தெரியாம யாரும் இருக்க மாட்டாங்க. இதுக்கு ஒரு பதிவா? அதை வச்சி புதுசா எதுனா எழுதி இருப்பிங்கன்னு வந்தா இவரு தனியா விம் போட்டு வெளக்கறாரு.. உடனே அங்கிள் கிட்ட சொல்லி பகிரங்க கடிதம் எழுத சொல்லனும் போல இருக்கு.. பீ கேர் புல்.. நான் ஆதியை சொல்லலை.. என்னை சொன்னேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :(
இந்த பதிவு இதே ரீதியில் தொடர்ந்தால் உங்கள் வலைப்பூ ஹேக் செய்யப் படும். :)
ரூம் போட்டு யோசிபின்களோ ???!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் (இத விட்டுட்டீங்களே)
ஆணி புடுங்குதல் பற்றி நான் போட்ட பதிவு
http://nanaadhavan.blogspot.com/2008/12/blog-post_10.html
mudiyala...
neenga thane pathivulaga vadivelu ???
ரைட்டு.
இது நர்சிம் டயலாக் இல்ல,இதுவும் வடிவேலு டயலாக் தான்.
:)
ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பீட்டாங்க. இதுவும் வடிவேலு டயலாக் தான்
நான் சிவனேன்னு இருந்துடுறேன்.. யாரு வம்பு தும்புக்கும் வரலப்பா..
-இது கூட வடிவேலு டயலாக்கோட ஒரு Modification தான்..
ஹ ஹ...
எங்க ரூம்ல இப்போ அடிக்கடி நடப்பது
அவன் இவனை அடிக்கச் செல்லும்போது
இவன்: வேணாம் சேகர் செத்துறுவான்.
அவன்: ம்ம் அது.
இவன்: அந்த சேகர் நீ தாண்டா...
btw, what happend to you Krishnakathai?
//ஆதிமூலகிருஷ்ணன் said...
அன்பிலீவபிள்.! பத்து நாட்களாக எழுத எத்தனித்து நேரமில்லாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே சென்ற பதிவு இது.
வட போச்சே.!
//
நீங்க என் பொழப்புல மட்டும் தான் விளையாடுறீங்கன்னு பார்த்தா ஒருத்தர விட்டு வைக்கிறது இல்ல
நான் அனுராதா ஸ்ரீராம் பத்தி எழுதலாம்னு நினைச்சேன்
நாங்க எல்லாம் சங்கி மங்கி
நீங்க எங்க அண்ணன் மங்கி சங்கி
இதும் வடிவேலு டயலாக் தான்
பரிசல், உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு மொக்கை பதிவை நான் எதிர் பாக்கல. நேரம் இல்லைன்னா, பதிவு போடாம இருந்துட்டு பிறகு நேரம் கிடைக்கும் போது, வழமையான நல்ல பதிவை இடலாம். நாங்க காத்திருப்போம். சும்மா ஹிட்டுக்காக பதிவு போட இங்க நிறைய பேரு இருக்காங்க.
சுந்தர்
ருவாண்டா
பாருங்க வணகமுடி அண்ணனுக்கு எவ்ளோ கோபம் வருது
இப்பத்தான் என் கந்தசாமி படம் விமர்சனத்தப் படிச்சிட்டு வந்துருப்பாருன்னு நினைக்கிறேன்.
ஒரே காமடிதான் போங்க....
why blood? same blood?
//வணங்காமுடி...! said...
பரிசல், உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு மொக்கை பதிவை நான் எதிர் பாக்கல. நேரம் இல்லைன்னா, பதிவு போடாம இருந்துட்டு பிறகு நேரம் கிடைக்கும் போது, வழமையான நல்ல பதிவை இடலாம். நாங்க காத்திருப்போம். சும்மா ஹிட்டுக்காக பதிவு போட இங்க நிறைய பேரு இருக்காங்க.
//
இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது!
(இது வடிவேலு டயலாக்!)
பரிசல் நான் உங்களுக்குப் போன பதிவில் இருந்து கமென்ட் போடுறேன்
ஆனா அவியல் வரைக்கும் எல்லோருக்கும் பதில் சொன்ன நீங்க போனப் பதிவில் இருந்து சொல்லவில்லை
இப்படி நான் சொன்னா
உடனே அது போனப் பதிவு இது இந்து பதிவு அப்படின்னு ஒரு வடிவேலு டயலாக் சொல்வீங்க
அதான் அதையும் நானே போட்டுடேன்
\\அய்யா சாமி.. தமிழ்ல இந்த சிரிப்பு செனலுங்க ஒரு நாளைக்கு பதிமூனாயிரம் வாட்டி இந்த கமெடிகளை எல்லாம் ஒளிபரப்பறாங்க. இந்த காமெடிகள் தெரியாம யாரும் இருக்க மாட்டாங்க. இதுக்கு ஒரு பதிவா? அதை வச்சி புதுசா எதுனா எழுதி இருப்பிங்கன்னு வந்தா இவரு தனியா விம் போட்டு வெளக்கறாரு.. உடனே அங்கிள் கிட்ட சொல்லி பகிரங்க கடிதம் எழுத சொல்லனும் போல இருக்கு.. பீ கேர் புல்.. நான் ஆதியை சொல்லலை.. என்னை சொன்னேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :(
இந்த பதிவு இதே ரீதியில் தொடர்ந்தால் உங்கள் வலைப்பூ ஹேக் செய்யப் படும். :)
\\
:-)
இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு
சகாதேவன்
வடிவேலு பதிவுன்னா படத்துல அவர கும்மற மாதிரி எல்லாரும் வந்து கும்மு கும்முன்னு நல்லா கும்மிடறாங்கப்பா. பதிவும் நல்லா இருக்கு. கும்முறதும் நல்லா இருக்கு.
Let us enjoy
@ இரும்புத்திரை அரவிந்த்
நன்றி அரவிந்த்
நன்றி அரவிந்த்
நன்றி அரவிந்த்
நன்றி அரவிந்த
நன்றி அரவிந்த்
நன்றி அரவிந்த
நன்றி அரவிந்த்
நன்றி அரவிந்த
(அதுக்கு எதுக்குப்பா நீ இத்தன தடவ திரும்பற??)
இதோ திரும்ப வந்துட்டேன்.
இன்னைக்கு எனக்கு நேரம் போகல.
இவ்ளோ நாள் என்னால கமென்ட் போட முடியல
அதான் இந்த கொலைவெறி.
இந்த பயபுள்ள எல்லாம் நம்மள யூஸ் பண்ணுதேன்னு நீங்க வடிவேலு மாதிரி சொல்றது எனக்கு கேட்குது
கந்தசாமி வடிவேலு பத்தாச்சா
முடியல
மென்மேலும் உங்கள் பணிகள் தொடரட்டும்....
இதை பாருங்கள்
வடிவேலு கல்லூரியில் படித்தால் ???
//SanjaiGandhi said...
அய்யா சாமி.. தமிழ்ல இந்த சிரிப்பு செனலுங்க ஒரு நாளைக்கு பதிமூனாயிரம் வாட்டி இந்த கமெடிகளை எல்லாம் ஒளிபரப்பறாங்க. இந்த காமெடிகள் தெரியாம யாரும் இருக்க மாட்டாங்க. இதுக்கு ஒரு பதிவா? அதை வச்சி புதுசா எதுனா எழுதி இருப்பிங்கன்னு வந்தா இவரு தனியா விம் போட்டு வெளக்கறாரு.. உடனே அங்கிள் கிட்ட சொல்லி பகிரங்க கடிதம் எழுத சொல்லனும் போல இருக்கு.. பீ கேர் புல்.. நான் ஆதியை சொல்லலை.. என்னை சொன்னேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :(
இந்த பதிவு இதே ரீதியில் தொடர்ந்தால் உங்கள் வலைப்பூ ஹேக் செய்யப் படும். :)
//
:)
//SanjaiGandhi said...
அய்யா சாமி.. தமிழ்ல இந்த சிரிப்பு செனலுங்க ஒரு நாளைக்கு பதிமூனாயிரம் வாட்டி இந்த கமெடிகளை எல்லாம் ஒளிபரப்பறாங்க. இந்த காமெடிகள் தெரியாம யாரும் இருக்க மாட்டாங்க. இதுக்கு ஒரு பதிவா? அதை வச்சி புதுசா எதுனா எழுதி இருப்பிங்கன்னு வந்தா இவரு தனியா விம் போட்டு வெளக்கறாரு.. உடனே அங்கிள் கிட்ட சொல்லி பகிரங்க கடிதம் எழுத சொல்லனும் போல இருக்கு.. பீ கேர் புல்.. நான் ஆதியை சொல்லலை.. என்னை சொன்னேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :(
இந்த பதிவு இதே ரீதியில் தொடர்ந்தால் உங்கள் வலைப்பூ ஹேக் செய்யப் படும். :)
//
அவனா நீயி :)
ஜெர்மனில, எங்க UNIVERSITY பசங்க (INDIANS, NOT ONLY TAMILIENS), வடிவேலு , விவேக் டயலாக் பேசாத மணி நேரமே கிடையாது ..
'சேகர் செத்துருவான்' மட்டும் FACEBOOK ல சாதாரணமா 100 THREAD க்கு மேல போகும் ..
நெஸ்ட் மீட் பண்றேன் ..
//மற்றபடி வேற ஆணி இல்லாததால் இந்த ஆணியைப் பிடுங்குவதாக எண்ண வேண்டாம்! :-))))) /
கணேஷை மறுபடி வந்து உங்களுக்கு தொடர் பின்னூட்டம் போட சொன்னா தான் நீங்க அடங்குவிங்க போல இருக்கு.......(நாங்கெல்லாம் பிரச்சனைய போர்வைய போத்திகிட்டு தூங்க்ரவிங்க அப்பு!)
சும்மா சும்மா டாக்டராகுற இந்தக்காலத்துல, நிஜ மருத்துவர்கள் பண்ணக்கூடியதை பண்ணியிருக்கார் வடிவேலு.
சேலத்தில், விபத்தில் சிக்கி, கோமாவிலிருந்த ஒரு சிறுபிள்ளையை, சுயநினைவுக்கு மீட்டெடுக்க உதவியாக இருந்தது - அவருடைய காமெடிக்காட்சிகளே! (அட!) (நன்றி: குமுதம்)
காரணம் ஆயிரம்™
ஒரு பதிவ ஒப்பேத்திட்டீங்களே! எப்படி!
அப்படியே இந்த "டிஸ்கி" அப்படிங்கிற வார்த்தைக்கும் ஒரு விளக்கம் கொடுத்தா உங்களுக்கு புண்ணியமாப் போகும் சாமி!
அப்புறம் ஏதோ பதிவுன்னா கொஞ்சம் பெரிசாப் போடனுமேங்கிற கவலைல, காட்சியப் புளி போட்டு விளக்கியிருக்கத் தேவை இல்லனு நினைக்கிறேன். அது தான் எல்லா சேனல்களும் இதை வைச்சு தானே பொழப்ப ஒட்டிகிட்டிருக்காங்க.
"எதுக்கு இப்போ இந்தக் கொலவெறி?" - உங்க குரல் எனக்கு கேக்குது :-)
பரிசலு... வசனம் மட்டும் சொன்னால் போதும்... சிச்சுவேஷன் எல்லாம் மனக் கண்ணில ஓடும்.. அதவிட்டுட்டு சிச்சுவேசனெல்லாம் சொல்லி... நீ ஆணியே பிடுங்க வேணாம்..
அண்ணன் ஸ்னாப்ஜட்ஜ் அவர்களை லிஸ்டு போட சொல்லிருவோம் தல.. விசனம் வேணாம்!
வடிவேலுவை விட தங்கத்தலைவர் கவுண்டமணி இன்னும் பெட்டர் ஒன்-லைனர்கள் சொல்லியிருக்கிறார், வெறும் மீடியா ஹைப்பால் வாழ்பவர் வைகைப்பஞ்சர் என்பது என் கருத்து. சாரி சார்.
அள்ளிக் கொடுக்கிறேன்.. பிடிச்சுக்குங்க.. சங்கிலிய அறுக்கிறதும் அறுக்காததும் உங்க கையில
http://kiruthikan.blogspot.com/2009/08/blog-post_22.html
வர வர இந்த மொக்க மோகன் தொல்லை தாங்கல...
பரிசல் பக்கம்னு நினைச்சு வந்துட்டேன். ஸாரி.
என்னா வில்லத்தனம்..??
ஒப்பனிங் நல்லாத்தான் இருக்கு www.aanmigakkadal.blogspot.com
Post a Comment