விஜய் டி.வி-யில் பாட்டுப் பாடவா என்றொரு நிகழ்ச்சி. கலந்து கொள்பவர் தேர்ந்தெடுக்கும் பாடலின் வரிகள் எதிரே ஸ்க்ரோல் ஆகிக் கொண்டிருக்க. பங்கேற்பாளர் பாடிக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு இடத்தில் வரிகள் நிறுத்தப் படுகிறது. அங்கே வரும் வார்த்தைகளை பாடுபவர் மனதிலிருந்து நினைவு படுத்திப் பாடினால் அடுத்த கட்டம்... இப்படி..
நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நிகழ்ச்சியின் காம்பியரரான அனுராதா ஸ்ரீராமின் உடையலங்காரம்.. ஸாரி.. உடையலங்கோலம்... யப்பா சாமி.. சகிக்கவில்லை. அழகாக புடவையோ, சுடிதாரோ கூடப் போடலாம். மாடர்ன் ட்ரஸ் போட வேண்டாமெனச் சொல்ல வில்லை. (சொன்னாலும் கேட்டுறப் போறாங்க...) ஆனால் இப்படியா கன்றாவியாக வருவது.
யாராவது சொல்லுங்கப்பா...
**********************
கிரிக்கெட்டில் பங்களாதேஷின் அதிரடியை எத்தனை பேர் கவனிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் ஸ்ரீலங்கா செய்ததை சத்தமில்லாமல் செய்து வருகிறார்கள். ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸுடன், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்று வந்தார்கள். (ஒரே ஒரு 20-20 மட்டும் விண்டீஸ் வென்றது) என்னதான் சீனியர்ஸ் இல்லையென்றாலும் சொந்த மண்ணில் இப்படியா மண்ணைக் கவ்வுவார்கள்? அடுத்ததாக ஜிம்பாப்வேயுடனான ஐந்து ஒருநாள் போட்டிகளில் நான்கில் வென்றிருக்கிறார்கள். அதுவும் ஒரு போட்டியில் 312ஐ சேஸ் செய்து வென்றிருக்கிறார்கள். அந்தப் போட்டியில் ஜிம்பாப்வே வீரர் CK Coventry 154 பந்துகளில் 194 ரன்கள் எடுத்து சயித் அன்வர் நமக்கெதிராக எடுத்த சாதனையை சமன் செய்து சாதனை படைத்தாலும், சேஸ் செய்த பங்களாதேஷின் தமீம் இக்பாலின் 154 ரன்களால் ஜிம்பாப்வே தோல்வியே அடைந்தது!
பங்களாதேஷுக்கு நல்லதொரு எதிர்காலம் தெரிகிறது!
*************************
ரொம்ப நாள் கழித்து சீரியல்கள் பார்க்கும் ஆசை வந்தது. கோலங்கள், அரசியெல்லாம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று நான்கைந்து நாள் பார்த்தேன். அபி (தேவயானி) அழுதுகொண்டும், ஓடிக் கொண்டும் இருக்கிறார். யாரோ மோனிகா கடத்தப்பட்ட (அல்லது கொலையா?) வழக்காம். அங்கே அரசி (ராதிகா) ஏதோ ஆபரேஷனில் இருக்கிறார். அதே ஓட்டம், அதே அழுகை அதே டண்ட்டடாய் மியூசிக் என்று கொடுமையாய் இருக்கிறது. பேசாமல் மோனிகா கொலை வழக்கை அரசி கையாண்டு முடிப்பதாகவும், செல்வியின் (இதுவும் ராதிகா) தங்கைதான் அபி என்றும் கொண்டுபோய் இரண்டு சீரியலையும் மிக்ஸ் செய்து முடித்துத் தொலைக்குமாறு சட்டசபையில் ஏதாவது தீர்மானம் கொண்டு வரலாம்.
************************************
மகள்கள் படிக்கும் பள்ளியிலிருந்து ஆகஸ்ட் 15 விழாவுக்கு அழைத்திருந்தார்கள். போனால் ஒரு அருமையான தேசபக்திப் பாடலை கொஞ்சமும் சத்தமே வராத சவுண்ட் சிஸ்ட்த்தில் போட்டு, மைதானத்தில் ஆடும் குழந்தைகளுக்கு வரியும் இசையும் கேட்காமல் அவர்களை வெயிலில் நெளிய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராக அந்த ரிப்பேரான மைக் பிடித்து கேட்காத ஸ்பீக்கரில் ‘இந்த 63 வருடத்திலே நம் முன்னேற்றம் எங்கு சென்றிருக்கிறது என்றால்’ என்று ஆரம்பித்து பே-சி-க்-கொ-ண்-டி-ரு-ந்-தா-ர்-க-ள். பேசும் எல்லோரும் ஸ்டைலுக்காக மேடையில் அமர்ந்திருப்பவர்களைத் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் ஸ்பீக்கரில் புஸ் புஸ்ஸென்று வெறும் காத்துதான் வந்த்து. சிறப்பு விருந்தினராக வந்த ஒருவர் ‘நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்’ என்ற போது டாய்லெட் சென்று கொண்டிருந்த ஒரு தகப்பன் பயந்து போய் திரும்பி வந்தமர்ந்தார். கடைசியாக வந்த பள்ளி முதல்வரும் ‘நம் முன்னேற்றம்..’ என்று ஆரம்பிக்க நான் கோவமாக ‘ஒரு மைக்செட்டைக் கூட சரியா அமைக்கத் தெரியாத அளவில் இருக்கிறது’ என்று கத்தலாகச் சொல்ல எழுந்து சுற்றி இருப்பவர்கள் என்னைச் சுட்டெரிக்கும் நிலைக்கு ஆளாவேனென்பதால் பேசாமல் அமர்ந்து - முடிக்கும்போது கைதட்டிவிட்டு மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்தேன்.
************************
அதே விழாவில் பேசிய ஒருவர் அப்துல்கலாம் இந்தியாவை வல்லரசாக்க ஏன் 2020ஆம் வருடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று விம் பார் போட்டு விளக்கினார். அதாவது 20 வயது இளைஞனும், 20 வயது இளைஞியும் தீயவழிக்கெல்லாம் போகாமல் தேசமுன்னேற்றத்தை நோக்கில் கொண்டு செயல்பட்டால் 2020ல் இந்தியா வல்லரசாகுமாம்.
சரிங்...
***********************
நேற்றைய தினமலரில் முதல்பக்க நியூஸில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாததால் வாக்காளர்களுக்கு வெறும் 200 ரூபாய்தான் அன்பளிப்பு வழங்கப்பட்டதாகவும். இதனால் வாக்காளர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாகவும் செய்தி போட்டிருந்தார்கள். அப்படியே இருந்தாலும் வாக்காளர்களின் வருத்தம் நியாயமானதுதானே என்ற அனுதாப தொனியில் செய்தியிட்டது எனக்கென்னவோ பிடிக்கவில்லை.
உண்மையை ரசிக்கமுடியவில்லை.
***************************
கந்தசாமி பாடல்களை பிட்டு பிட்டாகக் (ச்சே.. அதில்லப்பா...) காண்பித்தார்கள். ஸ்ரேயாவின் சேஷ்டைகள் அட்டகாசமாக இருந்தது. விக்ரமிற்காக 50%, பாடல்களுக்காக 30%, ஸ்ரேயாவிற்காக 20% என்றிருந்த எதிர்பார்ப்பில் ஸ்ரேயாவிற்கான சதவிகிதம் கூடிக் கொண்டே போகிறது. பாடல்கள் ஏற்கனவே ஹிட். பாடல்கள் என்றதும் இன்னொன்று ஞாபகத்துக்கு வருகிறது. சமீபத்திய பாடல்களில் அழகர்மலையில் இளையராஜா குரலில் ‘கருகமணி.. கருகமணி’ கேட்கக் கேட்கப் பிடித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல ஆதவன் (சூர்யா-நயன்தாரா-கே.எஸ்.ரவிகுமார்) பட பாட்டை நாலுவரி ட்ரெய்லர் போடுகிறார்கள். அஞ்சனா அஞ்சனா என்றொரு பாடல். நாலுவரியே பித்துப் பிடிக்கவைக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ்! இன்றைக்கு இசை ரிலீஸாம். முதல் ஆளாக வாங்க ஆசை!
******************************
எப்படி இப்படியெல்லாம்...
வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவது எப்படி?
பார்த்துக் கொண்டிருக்கும் விண்டோவை மினிமைஸிவிட்டு பக்கத்திலேயே New Windowவில் உங்கள் ப்ளாக்கரை ஓபன் செய்யுங்கள். வலைப்பதிவு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடும்!
(இது என் சொந்தச் சரக்கல்ல... வேறொருத்தர் சொல்லி, ஸ்டிக்கர் போல என் மனசில் ஒட்டிக் கொண்டது!)
.
58 comments:
நல்லாத்தான் போயிட்டு இருந்து அவியல். கடைசில எப்புடி அப்பிடி!!!
//அபி (தேவயானி) அழுதுகொண்டும்,//
அந்த அம்மா அழுது அழுது ... கண் டாக்டர் சொல்லிட்டாராம் இன்னும் இப்படி கிளிசரின் போட்டால் கண்ணு போய்டும்னு..........
//நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நிகழ்ச்சியின் காம்பியரரான அனுராதா ஸ்ரீராமின் உடையலங்காரம்.. ஸாரி.. உடையலங்கோலம்... யப்பா சாமி.. சகிக்கவில்லை. அழகாக புடவையோ, சுடிதாரோ கூடப் போடலாம். மாடர்ன் ட்ரஸ் போட வேண்டாமெனச் சொல்ல வில்லை. (சொன்னாலும் கேட்டுறப் போறாங்க...) ஆனால் இப்படியா கன்றாவியாக வருவது.
யாராவது சொல்லுங்கப்பா...//
same blood
/சிறப்பு விருந்தினராக வந்த ஒருவர் ‘நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்’ என்ற போது டாய்லெட் சென்று கொண்டிருந்த ஒரு தகப்பன் பயந்து போய் திரும்பி வந்தமர்ந்தார்//
பரிசல் சிரிச்சு முடியல.. என்ன ஒரு ஸ்பாண்டியேனிட்டி...சூப்பர்.
//சிறப்பு விருந்தினராக வந்த ஒருவர் ‘நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்’ என்ற போது டாய்லெட் சென்று கொண்டிருந்த ஒரு தகப்பன் பயந்து போய் திரும்பி வந்தமர்ந்தார். //
கலக்கல் :)
//கடைசியாக வந்த பள்ளி முதல்வரும் ‘நம் முன்னேற்றம்..’ என்று ஆரம்பிக்க நான் கோவமாக ‘ஒரு மைக்செட்டைக் கூட சரியா அமைக்கத் தெரியாத அளவில் இருக்கிறது’ என்று கத்தலாகச் சொல்ல எழுந்து சுற்றி இருப்பவர்கள் என்னைச் சுட்டெரிக்கும் நிலைக்கு ஆளாவேனென்பதால் பேசாமல் அமர்ந்து - முடிக்கும்போது கைதட்டிவிட்டு மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்தேன்.//
இதை நிச்சயம் எதிர்பார்த்தேன் :)
மியாவ் மியாவ் பூனை பாடல் கேட்கும்போதே புரிந்து விடுகிறது , ஹ்ம்ம் " வெள்ளித்திரையில்" பார்க்க வேண்டும்
தல நானும் கேட்டேன் ஆதவன் பாடலின் நாலுவரியை, எங்க காப்பியடிச்சாலும் சரி, பாடலை மனதை கிறங்கடிக்குமாறு கொடுப்பதில் ஹாரிஸ் கில்லாடி.
:-)
@ சின்ன அம்மணி
அது அப்படித்தான்!
@ தருமி
ந(க்க)ல்லா சொன்னீங்க ஐயா!
@ யாசவி
நெறய பேரு அப்படி நெனைச்சும் ஏன் அந்தம்மா அப்படி வருதுன்னு தெரியலங்க.. இதுல வார்ட்ரோப் கர்டஸின்னு வெளம்பரம் வேற..
@ கேபிள் சங்கர்
ஐ! நட்சத்திரப் பாராட்டு!
@ வெட்டிப்பயல்
வேறென்ன நாம செய்ய முடியும் சொல்லுங்க? போய் ஆப்ளிஃபையர் எங்க வெச்சிருக்கீங்கன்னு நல்லெண்ணத்தோட கேட்டதுக்கு ஒரு டீச்சர் ‘சார்.. ப்ளீஸ் உட்காருங்க’ன்னுட்டாங்க.. உடனே உமா பேசாம கைதட்டீட்டிருங்கன்னுட்டாங்க. ப்ச்..
@ ப்ரகாஷ்
அதுல ஸ்ரேயா உதட்டை சுழிப்பாங்க பாருங்க...
Super... :)))
@ முரளிகுமார் பத்மநாபன்
நீங்கதான் எந்த ஊர் இசையையும் பிரிச்சு மேயறீங்களே! படம் வந்தப்பறம் அதோட ஆரிஜினைக் கண்டுபிடிச்சுச் சொல்லுங்க!
நன்றி ஸ்ரீமதி!
//@ ப்ரகாஷ்
அதுல ஸ்ரேயா உதட்டை சுழிப்பாங்க பாருங்க...//
Uvve.... :((
ஏகப்பட்ட விஷயங்களைக் கொடுத்திருக்கிறீர்கள்! பேர் அவியலா இருந்தாலும் நல்ல மசாலா... keep it going...
@ ஸ்ரீமதி
ஏன்மா.. ஸ்ரேயா பிடிக்காதா?
@ சரவணன்
தேங்க்ஸுப்பா!
// பரிசல்காரன் said...
@ ஸ்ரீமதி
ஏன்மா.. ஸ்ரேயா பிடிக்காதா?//
Mhum pidikkaadhu.. :((
//ஸ்ரீமதி said...
//@ ப்ரகாஷ்
அதுல ஸ்ரேயா உதட்டை சுழிப்பாங்க பாருங்க...//
Uvve.... :((
//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஸ்ரீமதிக்கு எதிராக அறப்போரில் ஷ்ரேயா ரசிகர் மன்றம் இறங்கும். இனி அவர் எழுதும் எல்லா கவிதைக்கும், பின்னூட்டத்தில் ஒரு அனுஜன்யா கவிதை போடப்படும். அவர் கடைக்கு வரும் கூட்டத்தை கலைக்கவே இந்த நடவடிக்கை.
ஸ்ரீமதி மன்னிப்பு கேள்!!!
சகாம் வெ.இண்டீஸ் தலைகள் யாரும் விளையாடவில்லை. அது ஒரு சொத்தை டீம். அதே போல் சிம்பாப்வே பற்றி சொல்லவே வேண்டாம்.. பஙக்ளாதேஷுகு நல்ல எதிர்காலம் உண்டு.. ஆனால் கன்சிச்ஸ்டென்ஸி இல்லை.. எனக்கு தெரிந்து ரொம்ப கஷ்டம்.. பார்ப்போம்..
//கார்க்கி said...
//ஸ்ரீமதி said...
//@ ப்ரகாஷ்
அதுல ஸ்ரேயா உதட்டை சுழிப்பாங்க பாருங்க...//
Uvve.... :((
//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஸ்ரீமதிக்கு எதிராக அறப்போரில் ஷ்ரேயா ரசிகர் மன்றம் இறங்கும். இனி அவர் எழுதும் எல்லா கவிதைக்கும், பின்னூட்டத்தில் ஒரு அனுஜன்யா கவிதை போடப்படும். அவர் கடைக்கு வரும் கூட்டத்தை கலைக்கவே இந்த நடவடிக்கை.
ஸ்ரீமதி மன்னிப்பு கேள்!!!//
முடியாது என்பதை இங்கு ஆணித்தரமாக கூறிக்கொள்ள(கொல்ல) ஆசைப்படுகிறேன் ;)))
@ கார்க்கி
அத ஒத்துக்கறேன்யா.. ஒரு கேம்லகூடவா ஜெயிக்க முடியாத டீம் அது? பெரிய தலைகள் விளையாடலைன்னாலும் கோச் எல்லாம் என்ன பண்ணீட்டிருந்தாராம்?
@ ஸ்ரீமதி & கார்க்கி
ஸ்ரேயாவுக்காக நாம் அறப்போரில்தான் ஈடுபடவேண்டும், வன்முறைகள் வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்!
@ கார்க்கி
ஸ்ரேயா-ஸ்ரீமதிக்கெதிரான சண்டையில் அனுஜன்யாவை வம்புக்கு இழுத்த உன் போக்கு பிடிக்கவில்லை. ஆகவே அதை எதிர்த்து நாளை நான் கவிதைகள் குறித்த வாதத்தின் மீள்பார்வையின் பாகம் ஒன்றை எழுதிவிடுவேனென எச்சரிக்கிறேன்!
அவியல் நல்ல கலக்கல்
//பரிசல்காரன் said...
@ கார்க்கி
ஸ்ரேயா-ஸ்ரீமதிக்கெதிரான சண்டையில் அனுஜன்யாவை வம்புக்கு இழுத்த உன் போக்கு பிடிக்கவில்லை. ஆகவே அதை எதிர்த்து நாளை நான் கவிதைகள் குறித்த வாதத்தின் மீள்பார்வையின் பாகம் ஒன்றை எழுதிவிடுவேனென எச்சரிக்கிறேன்!//
@ பரிசல் அண்ணா
ஒய் திஸ் மர்டர் வெறி??
@ கார்க்கி
பேசாம நாம சமாதானமா போயிடலாம்...
நன்றி கோஸ்ட்!
@ ஸ்ரீமதி
சமாதானப்போக்கை வரவேற்று ஸ்ரேயா மன்ற மகளிரணிப் பொறுப்பை மன்றத் தலைவர் மலேசியா விக்கி உனக்கு வழங்குவார்!
"எப்படி இப்படியெல்லாம்...
வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவது எப்படி?
பார்த்துக் கொண்டிருக்கும் விண்டோவை மினிமைஸிவிட்டு பக்கத்திலேயே New Windowவில் உங்கள் ப்ளாக்கரை ஓபன் செய்யுங்கள். வலைப்பதிவு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடும்!
(இது என் சொந்தச் சரக்கல்ல... வேறொருத்தர் சொல்லி, ஸ்டிக்கர் போல என் மனசில் ஒட்டிக் கொண்டது!)"
முடியல .......
ஏன் இந்த கொலை வெறி ........
(அது அடுத்த கட்டம் இல்லை ..... இன்னொரு கட்டம் அவ்வளவே .... இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது)
இது சரவண பவன் தரமான அவியல்
நீங்க யூத் ன்னு சொல்லுரிங்க .. பிறகு ஏன் கிரிக்கெட்யை எல்லாம் பார்க்குறிங்க .....
சீரியல் பார்ப்பது எல்லாம் அங்கிள் ஆகிவிட்டதற்கு சாட்சி
//எப்படி இப்படியெல்லாம்...
வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவது எப்படி?
பார்த்துக் கொண்டிருக்கும் விண்டோவை மினிமைஸிவிட்டு பக்கத்திலேயே New Windowவில் உங்கள் ப்ளாக்கரை ஓபன் செய்யுங்கள். வலைப்பதிவு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடும்!//
யாருங்க அந்த புனியவான் இந்த மாதுரி எல்லாம் மொக்கை போது ..
அருமை .. ..
//ஆளாவேனென்பதால் பேசாமல் அமர்ந்து - முடிக்கும்போது கைதட்டிவிட்டு மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்தேன்.
//
ர.க.சா.
அவியல் கலக்கல்..
//கவிதைகள் குறித்த வாதத்தின் மீள்பார்வையின் பாகம் ஒன்றை எழுதிவிடுவேனென எச்சரிக்கிறேன்//
வன்முறை வேண்டாமென்று சொல்லிவிட்டு ஏன் இப்படி கொலை வெறி? ஷ்ரேயாவே வேணாம்.. நீங்க அமைதியா இருங்க போதும்..
//சமாதானப்போக்கை வரவேற்று ஸ்ரேயா மன்ற மகளிரணிப் பொறுப்பை மன்றத் தலைவர் மலேசியா விக்கி உனக்கு வழங்குவார்!//
இதை ஏற்றுக் கொண்டால் ஸ்ரீமதியை நாங்கள் மன்னித்து ஏற்று கொள்கிறோம்..
//அத ஒத்துக்கறேன்யா.. ஒரு கேம்லகூடவா ஜெயிக்க முடியாத டீம் அது? பெரிய தலைகள் விளையாடலைன்னாலும் கோச் எல்லாம் என்ன பண்ணீட்டிருந்தாராம்//
அந்த டீம்ல எல்லொருக்கும் பிரச்சினை. விளையாடிய வீரர்களில் பாதிப்பேரை கோச் ஒரு வாரம் முன்புதான் பார்த்தார்.
பஙக்ளாதேஷில் நல்ல வீரர்கள் இருக்கிறாரக்ள். அவரகள் இப்போது பெரிய சாதனை செய்யவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வாட்மோர் கோச்சாக இருந்த போது ஆடியதை விட இப்போது மட்டமாக ஆடுகிறாரக்ள்.
@ டம்பீமேவி
யூத் இல்லாதவர்கள்தான் அப்படிச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நானப்படி சொல்லத்தேவையேயில்லை அண்ணா..
@ ராஜராஜன்
உங்களுக்கு கீழ இருக்கறவர்தான்!
@ நர்சிம்
ந!
/அனுராதா ஸ்ரீராமின் உடையலங்காரம்.. ஸாரி.. உடையலங்கோலம்..//
கொடுமைண்ணே அது நமக்கு பார்க்க..
//உண்மையை ரசிக்கமுடியவில்லை.//
பரிசல் காரன் சிறந்த அறிவாளி இதுக்கும் அப்படி சொல்வீங்களா பரிசல்:))
*அதுவும் போன வாரம் படுமோசம்.
*ஆமாம். CK Coventry அசத்தல்.
*ஏன் இந்த விஷப்பரிட்சை.
*சமத்து.
*எப்படிங் இப்படியெல்லாம்.
*ம்,சேம் பிளட்.
*:)
//ரொம்ப நாள் கழித்து சீரியல்கள் பார்க்கும் ஆசை வந்தது. கோலங்கள், அரசியெல்லாம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று நான்கைந்து நாள் பார்த்தேன். அபி (தேவயானி) அழுதுகொண்டும், ஓடிக் கொண்டும் இருக்கிறார். யாரோ மோனிகா கடத்தப்பட்ட (அல்லது கொலையா?) வழக்காம். அங்கே அரசி (ராதிகா) ஏதோ ஆபரேஷனில் இருக்கிறார். அதே ஓட்டம், அதே அழுகை அதே டண்ட்டடாய் மியூசிக் என்று கொடுமையாய் இருக்கிறது. பேசாமல் மோனிகா கொலை வழக்கை அரசி கையாண்டு முடிப்பதாகவும், செல்வியின் (இதுவும் ராதிகா) தங்கைதான் அபி என்றும் கொண்டுபோய் இரண்டு சீரியலையும் மிக்ஸ் செய்து முடித்துத் தொலைக்குமாறு சட்டசபையில் ஏதாவது தீர்மானம் கொண்டு வரலாம்.
//
Nalla than iruku ungha idea..Mudhalla mudhalvarukku idhai pathi oru avasara thanthi anuppuvom :)
Krish
@ சூரியன்
கரெக்டு!
@ குசும்பன்
ஏய்ய்ய்.. சைலன்ஸ்!
@ நாடோடி இலக்கியன்
நன்றி நண்பா!
@ UM
ஐ! சரிதான்!
//குசும்பன் said...
பரிசல் காரன் சிறந்த அறிவாளி இதுக்கும் அப்படி சொல்வீங்களா பரிசல்:))
//
யோவ் குசும்பா இது எப்பிடியா உண்மையாகும்???
இஃகிஃகி
தல கமீனே பார்த்துடிங்களா? எப்போ? எப்படி???
டட்டடேன்ன்...டடட்..டட்ட.
நம்ம ரிங்டோனே இதுதான் ரெண்டுமாசமா.... :-(
\\சமீபத்திய பாடல்களில் அழகர்மலையில் இளையராஜா குரலில் ‘கருகமணி.. கருகமணி’ கேட்கக் கேட்கப் பிடித்துக் கொண்டே இருக்கிறது\\
தல கருகமணிக்கு அடுத்து ஒரு இந்தி படம் வந்திருக்கு கேட்டிங்களா பாட்டை
http://ragadhevan.blogspot.com/2009/08/2009.html
இந்த லிங்குல பாட்டு கேட்க கூடிய லிங்கும் பாட்டும் இருக்கும். கேளுங்கள் ;))
நல்லா தான் இருக்கு இந்த யோசனை எல்லாம்.. :-)
டம்பி மேவியைப் பார்த்துக் கேட்கிறேன்!
சீரியல் பார்க்காத அங்கிள் ஒருவர் இருக்கிறார்.தெரியுமா?
:)
அவியல் அருமை..
பின்னூட்டங்கள் அதைவிட..
நம்ம ஊருக்கு பக்கத்துலதான் இதெல்லாம் நடக்குறதா பேப்பர்ல அடிக்கடி போடுறாங்க.. ஆனா எனக்கு இது வரைக்கும் ஒரு பைசா கூட கிடைக்கல..
"லதானந்த் said...
டம்பி மேவியைப் பார்த்துக் கேட்கிறேன்!
சீரியல் பார்க்காத அங்கிள் ஒருவர் இருக்கிறார்.தெரியுமா?"
எனக்கு தெரியாதுங்க .....
"பரிசல்காரன் said...
@ டம்பீமேவி
யூத் இல்லாதவர்கள்தான் அப்படிச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நானப்படி சொல்லத்தேவையேயில்லை அண்ணா.."
ஏன் ஏற்கனவே கூறி யாகி விட்டதா ????
//வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவது எப்படி?//
வேணாம் வலிக்குது..:-(
அவியல் அற்புதம்.. :-)
ஒரு பாரா வேஸ்ட்.! கிரிக்கெட்டைத்தவிர மற்றதெல்லாம் அம்சம்.!!
பாட்டு : நிகழ்ச்சி துவங்குகையில் எவ்வளவு அழகாக ஒரு பாடலை பாடுகிறார் அனுராதா. ஏன் இந்தக்கோராமையான உடை? டிசைனர் கையில் கிடைச்சால் என்ன பண்ணலாம் பரிசல்? அப்புறம் டைமிங் சென்ஸ் ரொம்ப கம்மியா இருக்குது அவருக்கு கவனிச்சீங்களா? ஒரு காம்பியருக்கு இது பத்தாது.!
சீரியல் : எப்படி இப்படி விபரீத ஆசையெல்லாம் உங்களுக்கு வருகிறது?
பள்ளி : நம் வீரம் தெரிஞ்சதுதானே?
தினமலர் : உண்மைச்செய்தி வந்ததா? உண்மையாகவா?
கந்தசாமி : சரி மொக்கைப்படமாக இருக்கப்போவுது. ஹிஹி.. ஷ்ரேயாவைப் பார்க்காவிட்டால் கண்ணை நோண்டிவிடுவோம் என்றால் தாராளமாக என்று சொல்லிவிடுவேன்.
ஓவர் பில்டப் விக்ரமை பார்ப்பது அதைவிடவும் கொடுமைடா சாமி.!
அப்புறம் பலதடவைகள் நானும் என் பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறேன் போல.. அடடே.!
@ எம்.எம்.அப்துல்லா
எடுத்து வேற குடுக்கறீங்களே...
@ முரளி
கோவை கனகதாரா
@ கோபிநாத்
கேட்கறேன் கோபி.
நன்றி எஸ்.கே, நன்றி அங்கிள், நன்றி பேருந்துகாதலன், நன்றி பட்டிக்காட்டான்
@ கார்ல்ஸ்பெர்க்
நமக்கெல்லாம் ஓட்டு போடற வயசு வந்தப்பறம்தான் தெரியும்!
@ ராகவேந்திரன்
அழக்கூடாது!
@ ஆதிமூலகிருஷ்ணன்
நம்பறேன்யா.. முழுப் பதிவையும் படிச்சுட்டீரு!
//இது என் சொந்தச் சரக்கல்ல... வேறொருத்தர் சொல்லி, ஸ்டிக்கர் போல என் மனசில் ஒட்டிக் கொண்டது//
பறவாயில்ல வேறொருத்தர் சரக்கானாலும் நாங்களும் படிக்கத் தந்தமைக்கு பாராட்டுக்கள்.
இன்றைய இளையதலைமுறை பிளேயர்களில் சிறந்தவர் அஸ்ஹ்ரபுல் தான். உவ்வே யா? சைஸ் சீரோ ஸ்ரேயா ரசிகர் மன்றத்தின் சார்பாக கண்டனங்கள்
:)))))))
//ரொம்ப நாள் கழித்து சீரியல்கள் பார்க்கும் ஆசை வந்தது. கோலங்கள், ........ அதே ஓட்டம், அதே அழுகை அதே டண்ட்டடாய் மியூசிக் என்று கொடுமையாய் இருக்கிறது. பேசாமல் மோனிகா கொலை வழக்கை அரசி கையாண்டு முடிப்பதாகவும், செல்வியின் (இதுவும் ராதிகா) தங்கைதான் அபி என்றும் கொண்டுபோய் இரண்டு சீரியலையும் மிக்ஸ் செய்து முடித்துத் தொலைக்குமாறு சட்டசபையில் ஏதாவது தீர்மானம் கொண்டு வரலாம்.//
Same experience, same feelings.
//பேசும் எல்லோரும் ஸ்டைலுக்காக மேடையில் அமர்ந்திருப்பவர்களைத் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் ஸ்பீக்கரில் புஸ் புஸ்ஸென்று வெறும் காத்துதான் வந்த்து. //
good joke
//உண்மையை ரசிக்கமுடியவில்லை//
u r good citizen pa.
:)
/
அதாவது 20 வயது இளைஞனும், 20 வயது இளைஞியும் தீயவழிக்கெல்லாம் போகாமல் தேசமுன்னேற்றத்தை நோக்கில் கொண்டு செயல்பட்டால் 2020ல் இந்தியா வல்லரசாகுமாம்.
/
இருங்க அந்த 20வயது இளைஞியை மீட் பண்ணீட்டு வரேன்
:)))))))))
சிரித்து சிரித்து......;-)
அனுராதா ஸ்ரீராம் நிகழ்ச்சியில் ஏதோ உள்ளது. நிறையகேள்விப்பட்டேன். இனியாவது பார்க்க வேண்டும்.
சுவையான அவியல்.
Post a Comment