எந்தவிதமான நக்கலோ, நையாண்டியோ, குசும்போ, மொக்கையோ இல்லாமல் சீரியஸாக உங்களுக்கு சில யோசனைகள் சொல்லலாமென்றிருக்கிறேன். (சீரியஸாவா? நீயா? – ன்னெல்லாம் கேக்கப்படாது!)
என்னிடம் பேசும் சில நண்பர்கள் `சூரியன் உதிக்குதோ இல்லையோ, தினமும் ஏதாவதொரு பதிவு போட்டுடறியே, எப்படி?’ என்று கேட்பதுண்டு. எப்படி என்று நான் யோசித்தபோது..
1) தமிழில் தட்டச்சு செய்ய, NHM Writer போன்ற மென்பொருளைப் பதிவிறக்கம் செய்துவைத்துக்கொண்டு எம். எஸ். வேர்ட் ஃபைலில் தட்டச்சு செய்யவும்.
2) ப்ளாக்கரில் போய் தட்டச்சு செய்வதால் எரிச்சல்தான் மிஞ்சும்! நாம் திருத்தம் செய்வது ஒருபுறமும் அந்தத் திருத்தங்கள் வேறெங்கோ போய் உட்காருவதும் நடக்கும்.
3) பதிவு எழுதும்போது, ஏதேனும் விளக்கங்களுக்காக நீங்கள் இணைய உதவியை நாடி, இணையத்தை திறக்க நேர்ந்தால் அதை மட்டும் பார்த்துக், குறிப்பெடுத்துக் கொண்டு, இணையத் தொடர்பை துண்டித்துவிடவும்.
4) எக்காரணம் கொண்டும் பதிவெழுதும்போது, யாருடைய வலைப்பக்கத்தையும் திறந்துவைத்துக்கொள்ளாதீர்கள்! உங்கள் வலைப்பக்கம் உட்பட! Reference-க்காக என்றால், ஏற்கனவே சொன்னபடி, அதை முடித்துக்கொண்டு உடனடியாக மூடிவிடவேண்டும்.
5) எக்காரணம் கொண்டும் பதிவெழுதும்போது கூகுள் டாக் போன்ற ச்சாட்டிங்கை திறக்காதீர்கள்.
6) எக்காரணம் கொண்டும் பதிவெழுதும்போது உங்கள் மின்மடலைத் திறக்காதீர்கள்.
7) சுருக்கமாக, இணையத்தொடர்பின்றி எழுத ஆரம்பித்து, எழுதி முடித்தால் நிறைய நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
8) குறைந்தது மூன்று நாட்களுக்கான பதிவாவது (இரண்டு நாளைக்கானதாவது....) என்ன எழுதப் போகிறீர்கள் என்பதை வரையறுத்துக் கொள்ளுங்கள்.
9) உங்களுக்கு ஏதேனும் யோசனைகள் தோன்றின், அதை ஒரு குறிப்பேட்டில், குறிப்பெடுத்து வைத்துக் கொண்டே வரலாம்.
10) அந்தப் பதிவை எப்படி ஆரம்பித்து, எப்படிக் கொண்டுசெல்லப் போகிறீர்கள் என்று மனதில் அசை போட்டுக் கொண்டேயிருங்கள்.
11) முடிந்தால் பதிவெழுத உட்காரும்போது, அலைபேசியை அணைத்துவிடுவது உசிதம்.
12) பதிவெழுதி முடித்து, சரிபார்த்து திருத்தங்களை செய்துமுடித்த பின், இறுதியாக உங்கள் வலைப்பக்கத்தைத் திறந்து புதிய பதிவிடுவதற்கான பெட்டியைத் திறக்கவும்.
13) எழுதிய பதிவை, அதில் பிரதியெடுத்து வைத்துக்கொண்டு, இடைவெளிகளெல்லாம் சரியாக வரவில்லையென்றால் EDIT HTML என்கிற OPTION போய் FORMATTING செய்துகொண்டு, POST OPTIONல் எப்போது பதிவை வெளியிட நினைக்கிறீர்களோ அந்த நாள், நேரத்தை குறிப்பிட்டுவிடவும். (உதாரணமாக வரும் ஆகஸ்ட் 15-க்காக ஏதேனும் பதிவு வெளியிட வேண்டுமென்றால் இப்போதே அடித்து, POST OPTIONல் ஆகஸ்ட் 15 தேதியையும், 9:00 AM என்றும் குறிப்பிட்டால், அந்த நேரத்தில் வெளியாகிவிடும்.)
14) இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது இப்போது மணி வியாழன் இரவு 11.45. இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் இதை முடித்து, நாளை காலை 8:30 என்று POST OPTIONல் குறிப்பிட்டால், அது நாளை காலை வெளியாகிவிடும். ஒருவேளை நான் இணையத்தை திறக்க முடியாவிட்டாலும், தமிழ்மணத்தில் வெளியிட, எனது நண்பர்கள் யாரிடமாவது, தமிழ்மண முகப்பில் இருக்கும் ‘இடுகையைப் புதுப்பிக்க’ என்ற பத்தியில் இணைய முகவரியை அடிக்கச் சொல்லி, அந்த இடுகையை வெளியிட்டுக் கொள்ளலாம்.
15) பதிவெழுத எந்த யோசனையும் இல்லாத போது, அலட்டிக்கொள்ளவே வேண்டாம்! ஏதாவது யோசனை இருந்து அதை எப்படி எழுத்தில் வடிப்பது என்பதுதான் கொஞ்சம் சிரமமான விஷயம். யோசனையே இல்லாமல் இருக்கும்போது, திடீரெனத் தோன்றும் சில விஷயங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும்!
இப்போதைக்கு இவ்வளவுதான். உண்மையாகச் சொல்வதென்றால் இன்று மட்டும்தான், நான் பதிவெழுதும் போது இவற்றையெல்லாம் கடைபிடிக்கிறேன். இத்தனை நாளாக இந்தமாதிரியெல்லாம் கடைபிடிக்கவேண்டும் என்று நினைத்ததோடு சரி! இன்று இணையத்தைத் திறக்காமலே இந்தப் பதிவை அடித்ததால் வெறும் 27 நிமிடங்களில் இதை அடித்துமுடித்தேன். சாதாரணமாக ஒரு பதிவெழுத இதற்கு முன்பு நான் எடுத்துக் கொண்ட நேரம் குறைந்தது 2 மணிநேரங்கள்!
ஆகவே, இது ஒரு சோதித்துப் பார்த்து சொல்லப்பட்ட யோசனைகள்.
முக்கியப் பின்குறிப்பு: இதிலிருக்கும் பல விஷயங்கள் பலருக்கு தெரிந்திருக்கலாம். பல விஷயங்கள் `இதெல்லாம் நான் எப்பவோ பண்ணினதுதானே’ என்று இருக்கலாம். நான் வலையெழுத வந்தபோது, நிறையத் தட்டுத் தடுமாறி, பலரது அறிவுரைகளைக் கேட்டுக் கேட்டு எழுதிக் கொண்டிருந்தேன். (இப்பவும் கூட!) அதுபோல புதிதாக வருபவர்களுக்கு இது உதவலாமே??
இதைவிடவும் வேறு சில யோசனைகளிருப்பினும் சொல்லவும். எல்லாவற்றையும் தொகுத்து, ஒரு கையேடு போல தயாரித்து (வடகரைவேலன் ஆப்செட் ப்ரஸ் வெச்சிருக்காருல்ல?) ஒவ்வொரு பதிவர் சந்திப்புக்கும், கோவைப் பதிவர்கள் சார்பாக வழங்கலாம் என்றொரு யோசனையுள்ளது. உங்கள் ஆதரவு தேவை!
********
பின் பின் குறிப்பு:- இந்தப் பதிவு போன வருடம் ஜூலையில் எழுதியது. இப்போது எனக்கே தேவைப்படுவதால் இந்த மீள்பதிவு!
.
67 comments:
எம் எஸ் வேர்டில் தட்டச்சு செய்வது பல HTML கோட்களையும் சேர்த்து பிளாக்கரில் கொண்டு வந்து விட வாய்ப்பு உள்ளது. Notepad ல் தட்டச்சு செய்வது நல்லது..... :)
//3) பதிவு எழுதும்போது, ஏதேனும் விளக்கங்களுக்காக நீங்கள் இணைய உதவியை நாடி, இணையத்தை திறக்க நேர்ந்தால் அதை மட்டும் பார்த்துக், குறிப்பெடுத்துக் கொண்டு, இணையத் தொடர்பை துண்டித்துவிடவும்.//
ம்கும் நான் எழுதி கிழிக்கிற கிழிக்கு இது ஒன்னு தான் குறைச்சல்.. அட நீங்க வேற பரிசல் நமக்கு அய்யனார் பிளாக்கை ஓப்பன் செஞ்சு வெச்சாதான் பதிவு எழுதவே மேட்டர் கிடைக்குது!!!
9) உங்களுக்கு ஏதேனும் யோசனைகள் தோன்றின், அதை ஒரு குறிப்பேட்டில், குறிப்பெடுத்து வைத்துக் கொண்டே வரலாம்.//
பதிவுக்கான மேட்டர் சைஸ் குறிப்பு போல இரண்டு வரியில் இருந்தால் என்ன செய்வது?
அப்பாவி சிறுவன்
குசும்பன்
பரிசு!
ஒங்க ஆலோசனைகள் நல்லா இருக்கு.
குறிப்பா HTML பத்தினது எனக்குப் புதுசு.
அதே மாதிரி நாம் விரும்புறப்போ பதிவேத்தம் தானா நடக்கும்னதும் புதுச் செய்திதான்.
வீடியோ கேமராவிலயும் நல்ல பரிச்சயம் இருக்கு உங்களுக்கு. உங்க பாதையைச் சரியாத் தேர்ந்தெடுத்திருக்கீங்களா? பனியன் தொழில் ஒங்க மனசுக்கு முழு திருப்தியளிக்குதா?
கே.கே.
பயனுள்ள பதிவு. எனக்கு இல்லை. நான் ஒரு நாளுக்கு ஒரு வரி வீதம் மெல்ல மெல்ல ஒரு ஆறு வரி குறும்பாவை ஒரு வாரத்தில் எழுதி உடனே பதிவு செய்ய பத்து நிமிடங்களே ஆகிறது என்று பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனுஜன்யா
உபயோகமான தகவல்கள்..
இவையெல்லாம் ஒருவர் தானாகவே அனுபவத்தில் தெரிந்துகொள்வார்கள் தான்.. அல்லது ஒன்றிரண்டாய் நண்பர்களிடம் இருந்து தெரிந்து கொள்வார்கள்..எல்லாத்தையும் தொகுத்தது நல்ல வேலை.
(இப்பல்லாம் ஐடியா , தகவல்கள் தான் அதிகமாகுது பதிவில் :)... )
@ தமிழ்ப்பிரியன்
நான் எம் எஸ் வேர்டில் தட்டச்சு செய்து, Notepadல் காப்பி செய்து போடுகிறேன்.
@ குசும்பன்
//பதிவுக்கான மேட்டர் சைஸ் குறிப்பு போல இரண்டு வரியில் இருந்தால் என்ன செய்வது?.//
பு.ப.போ.எ - இப்படிக் குறிப்பெடுத்துக் கொள்ளலாம்!
@ லதானந்த்
மிக்க நன்றி அங்கிள்! இதே போல voice of wings இன்று ஒரு பதிவு போட்டிருக்கிறார். அது நீங்கள் ஒரு முறை என்னிடம் கேட்ட பிரச்சினையை (பின்னூட்டத்தில் பெயர் தெரிவதில்லை) சரி செய்யும். கொஞ்சம் இணையத்தொல்லை இருப்பதால் பிறகு சுட்டி தருகிறேன்!
//உங்க பாதையைச் சரியாத் தேர்ந்தெடுத்திருக்கீங்களா? //
உங்களை இப்போது என் தந்தையின் ஸ்தானத்தில் எண்ணிப்பார்த்துக்கொள்கிறேன்! நிஜமாகவே இந்தக் கேள்வி என்னை நெகிழ வைத்தது!
//பனியன் தொழில் ஒங்க மனசுக்கு முழு திருப்தியளிக்குதா?////
:-(((
ஸோமாவனதேவதா (உங்க ரமேஷ்வைத்யா!) ஒரு கவிதையை இப்படி முடிப்பார்... (”இருந்தாலும்” -என்கிற கவிதை)
உயரங்களின் ரசிகன் நான்
என் சுவடுகளில் மிதிபடும்
முகடுகளில் எனக்கொரு பரவசம்
என்று ஆரம்பித்து... இப்படி முடிப்பார்
“க்ளார்க்காய் இருக்கிறேன்
வயிற்றின் அபத்தம்!!”
@ அனுஜன்யா
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு ஆகாதுங்க!
@ கயல்விழி முத்துலெட்சுமி
//இப்பல்லாம் ஐடியா , தகவல்கள் தான் அதிகமாகுது பதிவில் :)... //
ஐ! அப்படியா? மகிழ்ச்சி!
(நாளைக்குப் போடப்போற ஒரு பதிவுக்கு நீங்க என்ன பின்னூட்டம் போடப் போறீங்கன்னு நானே அடிச்சு வெச்சிருக்கேன். மறக்காம பாருங்க!)
எம் எஸ் வேர்ட் 2003 ன்னா ஓகே. ஆனா பாருங்கோ 2007 ன்னா நகலெடுக்கும்போது XML (தமிழ்பிரியன் அண்ணா அது HTML அல்ல) க்குரிய வரிகளையும் சேர்த்து, ஒட்டும்போது கேவலமாக வருகிறது. அதைவிட பிளாக்கரில் தட்டச்சுவது கோடி சிறப்பு.
மதுவதனன் மௌ.
பதிவு எழுதுறது ஒரு வகையான துறவு பூணுதலே; பதிவெழுதுறது துறவறமாகும் என்றா சொல்லீங்க.
ஏன்னா, கூகிள் சாட்டை நிறுத்து, இணையத்தை பாக்காதே, அவுட்லுக்கைக்கூட திறக்காதே, போனை ஆஃப் பண்ணு, தொலைக்காட்சியை அணை, ரேடியோவை கண்காணாத காதுகேளாத தூரத்தில வை...etc..etc (கொஞ்சம் நான் எபெஃக்டுக்ககாக சேர்த்தது) :-)))
ரொம்பக்கஷ்டமாயிருக்கு இதுகளைத் தவிர்க்கிறது.
ஆனா நீங்க சொல்றது எவ்வளவோ உண்மை. தரமான படைப்புக்களோ அல்லது தரமான மொக்கைகளோ எழுதுவதென்றால் அதிலயோ மனதைக் குவித்தால் நேரத்தையும் மீதமாக்கலாம். தரத்தையும் அதிகமாக்கலாம். நல்ல பதிவு,
மதுவதனன் மௌ.
@ மதுவதனன் மௌ...
நான் 2003தான் வைத்திருக்கிறேன். மற்றவர்கள் கூகுள் ட்ரான்ஸ்லிடரேஷனில் அடித்து, வேர்டில் எடுத்துப் போட்டு.. அப்புறமாகக் கூட ப்ளாகரில் போடலாம்!
(இதெல்லாம் சொல்ல.. அதுவும் உங்களுக்கு சொல்லவே கூடாது நான்.. இப்போதான் உங்க பக்கத்தைத் திறந்தேன். கணினி மன்னனாக இருக்கிறீர்கள்!)
அப்புறம்..
பதிவெழுத தினமும் இரவு இரண்டு மணிவரையும், காலை 6 மணியிலிருந்தும் உட்காருகிறேன். இப்போ இணையம் இரு மாதங்களுக்கு இலவசம். பின்னால என்ன பண்றதுன்னு பயம்தான் இப்படியெல்லாம் யோசிக்க வெச்சது!
நல்ல பயனுள்ள கருத்துக்கள்... தொகுத்து வழங்கியமைக்கு நன்றிகள் :))
எனக்கு உங்க யோசனையை விட அத சொல்றதுக்கு முன்னாடி நீங்களே உக்காந்து கடைபிடிச்சீங்க பாருங்க அது..அது ரொம்ப பிடிச்சு இருந்துச்சுண்ணே.
@ சென்ஷி
என்னங்க.. இவ்ளோ சீரியஸா பின்னூட்டம் போட்டிருக்கீங்க? என்னாச்சு உங்களுக்கு? உடம்பு எதுவும் சரியில்லையா?
@ புதுகை எம்.எம்.அப்துல்லா (இப்படி முழுப்பெயரையுமா வைப்பீங்க? அடிக்கரதுக்கு கஷ்டமா இருக்குல்ல?!!)
யாராவது கேட்டுடுவாங்களோன்னு பயத்துலதான் அதையெல்லாம் சோதித்துப் பார்த்துட்டே அடிச்சேன்! ஆனா, நல்ல அனுபவமா இருந்தது!
hello nice post bro,
cud u pls help me,
am using win xp pro,
but thamil unicode eapadi kondu varathu???
>> I installed east Asian languages,
so i can view tamil unicode webs,
but dono how can i use that in ms word or blogger,
cud u pls explain,
thanks
வணக்கம்.
ஹாஹாா
NHM Writer எடிடரில் தமிழ் நல்லாவே வேலை செய்யுது.
நன்றி.
ah, but i tool 13 min to type this :P
anyhow thanks friends
//11) முடிந்தால் பதிவெழுத உட்காரும்போது, அலைபேசியை அணைத்துவிடுவது உசிதம்.//
இது கொஞ்சம் ஓவரா இருக்குங்க....
//11) முடிந்தால் பதிவெழுத உட்காரும்போது, அலைபேசியை அணைத்துவிடுவது உசிதம்.//
இது கொஞ்சம் ஓவரா இருக்குங்க....
டபுள் ஓவரா இருக்கே!
என்னைப் போன்ற பதிவுலகில் புதிதாய் உள்ளோருக்கு தங்களின் ஆலோசணைகள் உதவும்.
கோவை பதிவாளர்களில் கணனி மென்பொருள்/வன்பொருள்(s/w,h/w) வல்லுனரிடம் பதிவாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவாக்கும் முகமாக ஒரு சுட்டி கொடுக்க ஆசிரியர் சுப்பைய்யா அவர்கள் முன்வந்துள்ளார்கள்.
அது பற்றி தகவல் இருந்தால் ஆசிரியருக்கு தெரிவிக்கவும்.
மாணவர்கள் வகுப்பில் சேர்ந்தவண்ணம் உள்ளனர்.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 29 மறுமொழிகள் | விஜய்
@ புதுகை எம்.எம்.அப்துல்லா (இப்படி முழுப்பெயரையுமா வைப்பீங்க? அடிக்கரதுக்கு கஷ்டமா இருக்குல்ல?!!)
//
இதுக்கே இப்படின்னா புதுக்கோட்டை.எம்.முகமது அப்துல்லா அப்டின்னு கரெக்டா வச்சு இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க???
நல்ல விஷயம், நன்றி
பரிசல்காரன்
எனக்கு என்ன பிரச்சனை என்றால், எதை எழுதுவது என்று தீர்மானிப்பதுதான்.
நல்ல பயனுள்ள தகவல்கள். நான் http://tamileditor.org/ ல் தட்டச்சு செய்து, வெட்டி ஒட்டிவிடுவேன்.
//" Karthik said...
பரிசல்காரன்
எனக்கு என்ன பிரச்சனை என்றால், எதை எழுதுவது என்று தீர்மானிப்பதுதான்."//
எதை எழுதுறதுனெல்லாம் கவலையே படாதீங்க.
எழுத்தாளன் ஆக மிக முக்கியமானது வாசித்தல். மிக அதிகமாக படிக்க வேண்டும். செய்திதாள்களில் நீங்கள் படிப்பவை உங்கள் மனதில் சில கருத்துக்களை ஏற்படுத்தும், அவை பாராட்டாகவோ, அல்லது கோபமாகவோ அல்லது நக்கல், நையாண்டியாகவோ இருக்கலாம். அதை எழுதுங்கள்.
படிக்கும் அல்லது படித்த புத்தகங்களில் உள்ள நிறை குறைகளை எழுதலாம்.
இது எல்லாம் மிக சீரியஸான பதிவர் என்ற பெயரை உங்களுக்கு ஏற்படுத்தினால், யாராவது ஒரு பதிவரை சந்தித்ததையோ அல்லது யாருடனாவது வலையுரையாடல் செய்ததையோ வைத்து மொக்கை பதிவுகள் வெளியிடலாம். உ.ம் எனது நேற்றைய பதிவு http://maraneri.blogspot.com/2008/07/blog-post_20.html
என்ன அறிவுரைகளா.. ரொம்ப நன்றிண்ணே.!
சூப்பர் அறிவுரைகளுக்கு நன்றிங்கோவ்...
வந்தவர்களுக்கு
நன்றி!
நன்றி சொல்லிட்டா திரை போட்டதா அர்த்தமில்லைதானே:))!
பயனுள்ள குறிப்புகள்!
வாங்க ராமலட்சுமியக்கா! எப்ப வேணா வரலாம்!
சும்மா ஒரு பின்னூட்டக் கடமை!
சகா, இப்பெல்லாம் எனக்கு 10 நிமிடம் கிடைத்தாலே ஒரு பதிவு எழுதி விடுகிரேன்.. அனுபவம் :))
என்னமோ போங்க சார்!!!!!!!
நல்ல அறிவுரைகள். HTML பற்றியது யூஸ்ஃபுல்லாக உள்ளது.
நல்ல வாசிப்பனுபவம் :-)
எப்படி இப்படியெல்லாம் யோசித்து பதிவு போடமுடிகிறது? இதுபோல எல்லாம் பதிவுபோட்டால் உங்களை என்ன சொல்லி பாராட்டுவது?
நல்ல வாசிப்பனுபவம் :-)
எப்படி இப்படியெல்லாம் யோசித்து பதிவு போடமுடிகிறது? இதுபோல எல்லாம் பதிவுபோட்டால் உங்களை என்ன சொல்லி பாராட்டுவது?
என்ன எழுதினாலும் படிச்சு பின்னுட்டம் போடுவாங்கன்னு நம்பிக்கை! மீ த 34. வேற என்ன சொல்றது?
அன்பின் கிருஷ்ணா
என்னை போன்ற புதியவர்களுக்கு தேவையான பதிவு. ஆனால் இதெல்லாம் உடற்பயிற்சி போலத்தான், 2-3 நாள் செய்வோம், பின்னர் நீர்த்துப்போய்விடும்.
ரொம்ப சீரியசாக கேட்கிறேன் - மொக்கைப் பதிவுகள் போடுவது எப்படி?? எவ்வளவு யோசிச்சாலும் எனக்கு வரவில்லை.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com
நல்ல பயனுள்ள குறிப்புகள்.. ;))
எல்லோருக்கும் தினம் ஒரு பதிவு போடச் சொல்லிடடு நீஙகளே ஒரு மீள் பதிவு போட்டா எப்பூடி?
நல்ல குறிப்புகள்தான்.
தமிழ் பிரியன் said...
எம் எஸ் வேர்டில் தட்டச்சு செய்வது பல HTML கோட்களையும் சேர்த்து பிளாக்கரில் கொண்டு வந்து விட வாய்ப்பு உள்ளது. Notepad ல் தட்டச்சு செய்வது நல்லது..... :)
இதையும் சேர்த்து..
ஆமா நீங்க ஏன் பரிசல்காரன்?
//அணைத்துவிடுவது உசிதம். //
யப்பா..உசிதமணி, இவ்வளவு அறிவுரை சொல்லிட்டு இப்பல்லாம் ஏன் நீங்களே தினமும் பதிவு எழுதுறதில்லை??
:)
ஆஹா..பரிசண்ணா.. சூப்பரு போஸ்டிங்..
போஸ்டிங் பத்திய போஸ்டிங் போட்டு போஸ்டுக்கே ஒரு பெரிய போஸ்டு குடுத்துட்டீங்க உங்க போஸ்டுல..
மேலும் கலக்குங்க..!!
நல்ல போஸ்டிங்..
:-)
நல்ல மீள்பதிவு.
எதை எங்க டைப்பி ஒட்டி அப்புறம் கட்டிங் போட்டு மறுபடியும் ஒட்டிங்..?
குழப்பமா கீது வாத்யாரே....
இந்த HTML கோட் படுத்தும் பாட்டுல பதிவு போடவே ரொம்ப தயக்கமா கீதுங்னா..
என்னபாடு பட்டாலுமே எடிட்டிங் சரியா வர்ரதில்ல....
ஆனாலும் கொஞ்சம் புரியிர மாதிரித்தான் கீது....மைண்ல வச்சுக்கறேன்.
it was very useful.. MIKKA NANDRI :)
தலைவா நேரமில்லன்றது உண்மைதான்
அதுக்காக மீள்பதிவு கொஞ்சம் நெருடல்?
ஆனாலும் யூஸ்ஃபுல் டிப்ஸ்தான்......
நான் ஜிமெயில் கம்போஸ் மெயில் பக்கத்தை உபயோகித்து தட்டச்சு செய்கிறேன்.
romba payanulla pathivu. ;-)
vaalthukkalum nanriyum
ப்ளாக் ஆரம்பிப்பது எப்படி? என்பதை பற்றி பதிவெழுதலாம் என்று நினைத்து கொண்டிருந்த போது, இன்று ஜெயாடிவியில் கூப்பிட்டு அதையே செய்முறை விளக்கமாய் சொல்லச் சொன்னார்க்ள். விரைவில் தொலைக்காட்சியில்
நல்ல பயனுள்ள குறிப்புகள் கிருஷ்ணா!
ஒரு நாளைக்கு நான்கு பதிவுகள் போடுவது எப்படி என்பது பற்றி விவரமாக கோவி அவர்களை பதிவாக போடச் சொல்கிறேன்!
:)))!!!
இதனை இதனால் இவன் செய்யும்..........
எல்லாம் சரி ..... பிறகு யார்கிட்ட பதிவு எழுத ஐடியா கேட்பது என்று நீங்க சொல்லவே இல்லை ..... சொன்னால் நல்ல இருக்கும்
ஆலோசனைகளுக்கு நன்றி நண்பரே..
useful notes to me
யோவ் மொக்கை.. இது மீள் பதிவுன்னு சொல்லக்கூடாது. ஏற்கனவே படிச்சது மறந்துபோச்சா.. யார்றா அது இன்னொரு தாமிரான்னு பயந்தேபோயிட்டேன். அட்லீஸ்ட் பின்னூட்டங்களையாவது மீள்படுத்தாமல் போடலாமில்லை.
அப்புறம் எனது அட்வைஸ் : தமிழ் எழுத ஈ-கலப்பை பயன்படுத்துங்கள். என் அனுபவத்தில் பெஸ்ட். பதிவேற்ற
'லைவ்ரைட்டரை' பயன்படுத்தலாம். ஆஃப் லைனிலும் எழுத நல்லதொரு சாய்ஸ். மேலும் போட்டோக்கள், விடீயோ ஏற்றுவதும் எளிது.
ஆலோசனைகள் அருமை... நீங்கள் ஏன் வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் பயன்படுத்தகூடாது நீங்கள் வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் (Windows Live Writer) வைத்து நேரடியா உங்கள் வலைபக்கத்தில் பதிவு செய்ய முடியும். வின்டோஸ் லைவ் ரைட்டர் பயன்படுத்தி வாரஇறுதி நாட்களில் எழுதியதை வார நாட்களில் பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் பதிவு செய்ய விரும்பும் தேதியை குறிப்பிட்டு பதிவு (Publish) செய்து விடுங்கள். அது சரியாக நீங்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வலைதளத்தில் பதிவு செய்து விடும். மேல் விபரங்களுக்கு ஹவ் டு யூஸ் வின்டோஸ் லைவ் ரைட்டர் என்ற என் பதிவை படிக்கவும் http://kmdfaizal.blogspot.com/2008/10/how-to-use-windows-live-writer.html
அருமையான ஆலோசனைகள். நன்றி.
கூடவே இவற்றை எல்லாம் முறையாகப் பயன்படுத்தி பதிவு வெளியிடும் பதிவர்களுக்கு 'இப்போது இருக்கும் வேலைக்கு' வேட்டு விழுந்தால் 'புதிய வேலை வாங்கித் தருவதற்கும் ஒரு ஆலோசனை சொல்லுங்கள் . :-)
நம்ம எப்பவுமே கூகிள் ட்ரான்ஸ்லிட்டரேசன் தான் :)
\\15) பதிவெழுத எந்த யோசனையும் இல்லாத போது, அலட்டிக்கொள்ளவே வேண்டாம்! ஏதாவது யோசனை இருந்து அதை எப்படி எழுத்தில் வடிப்பது என்பதுதான் கொஞ்சம் சிரமமான விஷயம். யோசனையே இல்லாமல் இருக்கும்போது, திடீரெனத் தோன்றும் சில விஷயங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும்!\\
எனக்கு பிடித்தது. :)))
அண்ணே நான் புதுசுங்க என்னையும் ஆட்டத்துக்கு சேத்துக்கோங்க....
நான் ரொம்ப நாளா உங்க பதிவு படிக்கறேனுங்கன்னோ !!!
அருமை பரிசல். நல்ல ஐடியாக்களின் தொகுப்பு. சுவையாகத் தொகுத்துள்ளீர்கள்.
போட்டது, தினமும் பதிவு எழுதுவது எப்படிங்கற பதிவு..... ஆனா திங்கட்கிழமைக்கு அப்புறம் உங்க பதிவு ஒண்ணியும் காணோமே...
ரைட்டு...
வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!
//தினமும் ஒரு பதிவு போடுவது எப்படி?//
தினமும் ஏன் எழுதனும்? எல்லாருக்கும் பகிரங்க கடிதம் வரவா? :))
//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//
இது எப்போ இருந்து? :(
தற்கொலைப் படை வைத்திருக்கும் பரிசலுகே இந்த நிலையா? :)
nanraga irunthathu.enakku oru uthavi vendum.ennudaiya blog il "panam" endru pathivu seithen.matrum oru pathivu ida(adhavathu marroru idugai ida theriyavillai.help me please.my blog is http//absaraa.blogpost.com
My email id :rathisaravanan07@yahoo.co.in
please help me immediately
நான் பதிவு எழுதும் போது செய்யும் தவறுகளை புட்டுப் புட்டு வைக்கிறீர்களே?
Post a Comment