Thursday, May 21, 2009

எங்கே இருக்கிறாயோ அங்கேயே இரு!


அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. என் நண்பனிடமிருந்து அலைபேசி. திருப்பூரில் இலங்கையிலிருந்து வந்து பணிபுரியும் சிலர் ஞாயிறும் வேலை என்று தங்கள் நிறுவனத்தில் இருக்கும்போது நாலைந்துபேர் திரும்ப தங்கள் வீட்டுக்குப் போய்விட்டார்கள் என்றும் அவர்களுக்கு பிரபாகரன் பற்றிய ஏதோ தகவல் வந்திருப்பதால்தான் அப்படி கிளம்பிவிட்டார்கள் என்றும் சொன்னான்.

உடனே நான் அருகிலிருக்கும், இலங்கையிலிருந்து வந்து பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒருவரிடம் சென்று கேட்டபோது, “ஆமாங்க. பிரபாகரன் இறந்துட்டாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல அறிவிக்கப்போறாங்க. என் நண்பர்கள் இலங்லையிலிருந்து அழைத்துச் சொன்னார்கள்” என்றார்.

ஒன்றும் பேசமுடியாமல் வீட்டில் வந்து விழுந்தேன். சென்னை நண்பர்களிடமும் தொடர்பு கொண்டபோது ‘அதெல்லாம் இல்லவே இல்லை’ என்றார்கள்.

ஆனால் ஞாயிறு மதியத்திலிருந்து செய்தி சேனல்கள் பிரபாகரன் மகன் மரணமடைந்ததாகவும், உடனிருந்த தலைவர்கள் சிலரும் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்க ஆரம்பித்துவிட்டன.

அடுத்த நாளிலிருந்து பிரபாகரன் மரணத்தையும் - எந்த ஆதாரமோ, புலிகளின் வரலாறு குறித்த செய்திகளோ இன்றி கேள்விக்குறியோடு ஆரம்பித்து ஊர்ஜிதப்படுத்துதல் வரை - காட்டி குழப்படி வேலையை ஆரம்பித்தது அதே செய்தி சேனல்கள்.

ஐயா... நாங்கள் கையறு நிலையிலிருக்கிறோம். எங்களுக்கும், இலங்கைத்தமிழருக்குமான உறவு என்ன உறவென்றே சொல்ல இயலாத ஒன்று. அங்கே அவர்கள் உணவுக்கும், உறைவிடத்துக்கும் அல்லல்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஒரு குவளைத் தண்ணீருக்காக ஏங்கும் குழந்தையின் புகைப்படத்தை, கையில் கோக் அல்லது பெப்ஸியோடு ‘உச்’ கொட்டிப் படிப்பவர்கள்தான் நாங்கள். ஒத்துக் கொள்கிறோம்.

ஆனால் எங்கள் உணர்வுகள் வெளிப்படையானவை அல்ல. இன்றைக்கு துரோகி கருணாவை பெரிய **** மாதிரி பேட்டி எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சேனல்காரர்களுக்கு எதிராக குறைந்த பட்சம் தொலைக்காட்சியை அணைக்க மட்டுமே எங்களால் முடிகிறது.

முகவாட்டம் பார்த்து ‘என்ன ஆச்சு?’ என்று மனைவி கேட்டால் அலுவலகப் பிரச்சினை என்றும், அலுவலக நண்பர்கள் கேட்டால் ‘ஃபேமிலி ப்ராப்ளம்’ என்றும் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டு இறுகிய மனநிலையில் இருக்கிறோம் என்னைப் போன்ற பலர். எங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை.

புலிகளிடமிருந்து பிரிந்து அமைச்சராக மாறியிருக்கும் துரோகி கருணா என்ன தேசத் தலைவனா? அவன் வந்து சோனியா, ராகுல், கலைஞரை சந்தித்து ராஜீவ் கொலை பற்றி விளக்குவானாம். பிரபாகரனின் மகள், மகன் இவனுக்கும் மகன், மகளைப் போலத்தானாம். அதனால் அவர்கள் உடலை அடையாளம் காட்டும் மனநிலையில் அவன் இல்லையாம். அவனிடம் பேட்டி எடுக்க நேரமிருக்கும் உங்களுக்கு ஒரு அரை மணிநேரம் புலிகள் இயக்கம் எந்தச் சூழலில் ஆரம்பிக்கப்பட்டது என்பதைக் காண்பிக்கவியலாதா?

பிரபாகரன் மரணம் என்பது தனிமனிதன் மரணமல்ல. அவர் உயிரோடு இருப்பது பல தமிழர்களுக்கு உயிர்மூச்சாய் நம்பிக்கை தரும் ஒன்று. ஆங்கில செய்தி சேனல்களுக்குத்தான் இந்த வரலாறு பற்றி காண்பிக்க மனமில்லை என்றால் தமிழ் நாளிதழ்கள் சிலவும் எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவதுபோல் அஞ்சலி ரேஞ்சுக்கு எழுதித் தள்ளுகிறார்கள்.

மகன், பேரன், மகளுக்கு கேபினெட் பதவி உறுதி ஆனபின் இதுபற்றி கவிதை எழுதப் போகும் தமிழினத் தலைவரும், மகனுக்கு பதவி கிடைக்காத மருத்துவர்களும், திடீர் பாசத்தோடு பிரச்சாரம் செய்த தலைவியும், இந்த விஷயத்திலாவது ஒற்றுமை காத்து இனி இலங்கைத் தமிழருக்காக என்ன செய்யலாம் என்று யோசித்து - எங்களைத் தந்தி அனுப்பச் சொல்லாமல் - ஒரு முடிவுக்கு வாருங்கள்.

அதுவரை மாவீரா...

நீ எங்கே இருக்கிறாயோ அங்கேயே இரு!

35 comments:

கண்ணா.. said...

// மகன், பேரன், மகளுக்கு கேபினெட் பதவி உறுதி ஆனபின் இதுபற்றி கவிதை எழுதப் போகும் தமிழினத் தலைவரும், மகனுக்கு பதவி கிடைக்காத மருத்துவர்களும், திடீர் பாசத்தோடு பிரச்சாரம் செய்த தலைவியும் //

இப்பிடி ரெண்டு பக்கமும் வாருனா..நாங்க எப்பிடி உங்களை வார்ரது

SK said...

வாங்க பரிசல்..

அவுங்க தந்தி அடிக்க சொன்னாலும் நாம அடிப்பம்னே..

அவுங்க மிட்டாய் வாங்கி தர்றேன்னு சொன்னா நாமளும் நம்புவம்னே ..

அது தான் தமிழன்..

Dr.Rudhran said...

'மகன், பேரன், மகளுக்கு கேபினெட் பதவி உறுதி ஆனபின் இதுபற்றி கவிதை எழுதப் போகும் தமிழினத் தலைவரும், மகனுக்கு பதவி கிடைக்காத மருத்துவர்களும், திடீர் பாசத்தோடு பிரச்சாரம் செய்த தலைவியும், இந்த விஷயத்திலாவது ஒற்றுமை காத்து இனி இலங்கைத் தமிழருக்காக என்ன செய்யலாம் என்று யோசித்து - எங்களைத் தந்தி அனுப்பச் சொல்லாமல் - ஒரு முடிவுக்கு வாருங்கள்."

பேராசை நிறைவேறுவது...?

நானாக நான் said...

நீங்கள் சொல்வதை முழுமையாக ஏற்றுகொள்கிறேன்! ஈழத்தமிழரை ஆதரிக்கிறேன் என்பதற்காக, தீக்குளிக்கவும் வேண்டம், விரதம் இருக்கவும் வேண்டாம். இனியாவது அங்குள்ள மக்களுக்காக என்ன செய்ய முடியும் என்பதை நம் அரசியல்வாதிகள் முடிவு செய்தால் நல்லது. எனென்றால் அவர்களுடைய வேலை இப்பொழுது முடிந்திருக்கிறது, அவரவர் பதவிகள் வாங்கியாயிற்று. மேலும் ஊடகங்கள் சொல்லும் செய்திகள் யாவும் எப்பொழுதும் அவசர செய்தியாக இருந்திருக்கிறதே தவிர, அவசியமான செய்திகள் வருவது தாமதமே. இப்பொழுதாவது, LTTE இயக்கம் ஏன் எப்படி வந்தது என்று டிவி க்கள் காட்டலாம். உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக திரைப்படங்களை காட்டவே நேரம் இல்லதே போது இது எப்படி நடக்கும் என்பதுவும் கேள்விக்குறியான விடயங்களே!!!

தமிழ் உதயன் said...

போயும் போயும் இந்த பிணம்தின்னும் மனிதர்களிடம் இன்னும் என்ன நம்பிக்கை உங்களுக்கு பரிசல்? அய்யன் வியாபாரம் முடிஞ்சு கல்லாகட்டிட்டு இருக்கிறார் டெல்லில..
அம்மா இங்க இன்னும் தோல்வில இருந்து மீளவில்லை...மருத்துவர் காசு பாக்கும் துறை அமையுமாறு தேர்தல் முடியலைனு வைத்தியம் பார்க்க போய்ட்டார்... இவங்களை இன்னுமா நம்புறிங்க??

தமிழ் உதயன்

அ.மு.செய்யது said...

ஒவ்வொரு வரியையும் படிக்க படிக்க மனம் கனக்கிறது.

உணர்வுகளை வெளிப்படையாக காட்டக் கூட
தயங்கி நிற்கும் தமிழன் பலவீனமடைந்து விட்டான்.

Anonymous said...

பிரபாகரன் இறந்து விட்டார் என சொல்லப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என்று செய்திகள் வருகின்றன. அதற்கு சாதகமாக இந்த தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது, பிரபாகரனின் உடல் என்று சொல்லப்பட்டதில் செய்யப்பட்ட பிரபாகரனின் தோற்றம் போன்ற மாஸ்கின் தடயம். சடலத்தின் முகத்தில் மொழு, மொழு வென்ற ஷேவ் செய்யப்பட்ட தோற்றம், தலையில் குண்டடிப்பட்டது போன்று வடிவமைக்கப்பட்ட மாஸ்கில் உள்ள கிளிசளின் பொய்த்தோற்றம், மேலும் இலங்கை இராணுவத்தின் மரபணு சோதனை என்கின்ற புளுகு ஆகியவை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதனை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன

Covairafi said...

பிரபாகரன் இறந்து விட்டார் என சொல்லப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என்று செய்திகள் வருகின்றன. அதற்கு சாதகமாக இந்த தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது, பிரபாகரனின் உடல் என்று சொல்லப்பட்டதில் செய்யப்பட்ட பிரபாகரனின் தோற்றம் போன்ற மாஸ்கின் தடயம். சடலத்தின் முகத்தில் மொழு, மொழு வென்ற ஷேவ் செய்யப்பட்ட தோற்றம், தலையில் குண்டடிப்பட்டது போன்று வடிவமைக்கப்பட்ட மாஸ்கில் உள்ள கிளிசளின் பொய்த்தோற்றம், மேலும் இலங்கை இராணுவத்தின் மரபணு சோதனை என்கின்ற புளுகு ஆகியவை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதனை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

இறக்கும் முன்பே அஞ்சலி பெறும் ஒரே மாவீரன் பிரபாகரன்தான். அவன் மருபடிஉம் இவர்கள் முன்னே தோன்றும்போது என்ன சால்ஜாப்பு கூறுவார்கள்?
"கடவுள் இருக்கிறான்,... கடவுள் இல்லை...." என்று கூறுவதற்கு எல்லோருக்கும் எவ்வளவு சாத்தியகூறுகள் உள்ளதோ, அது போல பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்று நம்புவதற்கும் பல சாத்தியங்கள் உள்ளன என்பதை யாரும் மறுக்க இயலாது.

raja said...

Prabhakaran maraivu enbathai ... ottu mothamana maraivu endru kural yezhupukindrana sadhikaara kumbalakal... aanal idhu udhayathirkana maraivu.... thargaliga maraivu....meendum varuvar... meendu varuvar....avar azhivirku apparpatavar...

raja said...

பிரபாகரன்..
மறைவு என்பது தற்காலிக மறைவு...
அவர் மறைவாக உள்ளார் என்பதே உண்மை...
மறைந்து விட்டார் என்பது நாடகம்...
தமிழ் மரிக்காது....
எதிரிகளின் தோல் உரிக்கும்....
எங்கு இருக்கிறாயோ அங்கேயே இரு...
எங்களுடன் எங்கும் இருக்கிறாய்...

பரிசல்காரன் said...

கண்ணா,
எஸ்.கே,
டாக்டர் ருத்ரன் சார்,
நானாக நான்,
தமிழ் உதயன்,
அ.மு.செய்யது,
கோவை ரஃபி,
கதிர் வீச்சு,
ராஜா
உணர்வுக்கும் பகிர்தலுக்கும் நன்றி!

தீப்பெட்டி said...

மனதின் ஓரத்தில் ஏதோ குற்றஉணர்வு உறுத்துகிறது..
கலங்கித்தான் விட்டோம்..
காத்திருப்போம் காலம் நல்ல பதில் சொல்லும்

பழமைபேசி said...

//மகன், பேரன், மகளுக்கு கேபினெட் பதவி உறுதி ஆனபின் இதுபற்றி கவிதை எழுதப் போகும் தமிழினத் தலைவரும்//

நீங்களுமா? எதிர்க்கட்சித் தலைவியே, ஒரு புரிந்துணர்வோடு அறிக்கை விடுற இந்த நேரத்துல, உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கலை.

பரிசல்காரன் said...

நன்றி தீப்பெட்டி

நன்றி பழமைபேசி

கார்க்கிபவா said...

:((((

நர்சிம் said...

ப்ச்

Arasi Raj said...

ஏதோ என் மனசை படிச்சு எழுதின மாதிரி இருக்கு பதிவு..

நம்மளை சுத்தி நிறைய பேரு இது பத்தி எதுவுமே நடக்காத மாதிரி இருக்குரப்போபட்ட நாம மட்டு ஏதோ வெறி பிடிச்சு ஆத்திரத்தோட சுத்துறோம்.......

வெறி எதுனால? நம்ம கையாலாகத் தனத்தை நினச்சு வெக்கப்பட்டு தான்

joe vimal said...

ஒவ்வொரு வரியும் அத்தனை உண்மை பரிசல் கை அறுபட்ட நிலைக்கு நாம் ஆளாகபட்டுவிட்டோம் .தமிழின தலைவர்,வாழும் பெரியார் என்றெல்லாம் சொல்லிகொள்பவர்கள் தம்மையும் தம் குடும்பத்தையும் கவனிக்கவே நேரம் போதவில்லை டெல்லி வரை சென்று மந்திரி பதவி வாங்க தான் நேரம் இருக்கிறது .

அய்யா கலைஞரே இந்திராவை போல் ,சே குவாரா போல் உறுதியாக உத்தரவிடுங்கள் உங்கள் பின்னே கோடி கணக்கான தம்பிகளும் ,தங்கைகளும் ஆயுதம் ஏந்தி ஈழத்தை மீட்டெடுப்போம் .

நண்பர்களே எமக்கு கிடைத்த தகவலின் படி தலைவர் இன்னும் பத்திரமாக தான் இருக்கிறார் நக்கீரன் செய்தியும் நம்பிக்கை அளிக்கிறது .சுதந்திர வேட்கை அழிந்ததாக சரித்திரம் இல்லை .புயலென வருவார் தலைவர் தருவார் தனி ஈழத்தை .

Anonymous said...

யூத் புல் விகடனில் உங்க பதிவு....

//அந்தச் சேனல்காரர்களுக்கு எதிராக குறைந்த பட்சம் தொலைக்காட்சியை அணைக்க மட்டுமே எங்களால் முடிகிறது.//

எல்லா சேனல்களுக்கும் வரலாற்றை காட்ட நேரம் இருக்காது, sponsor அதற்க்கு கிடைப்பாங்களா?

Vijayashankar said...

// மகன், பேரன், மகளுக்கு கேபினெட் பதவி உறுதி ஆனபின் இதுபற்றி கவிதை எழுதப் போகும் தமிழினத் தலைவரும், மகனுக்கு பதவி கிடைக்காத மருத்துவர்களும், திடீர் பாசத்தோடு பிரச்சாரம் செய்த தலைவியும் //

:-((

ஆஹா ... இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே....

ஆதவா said...

பரிசல்,... சொல்லவியலா உணர்வை அழகாக சொல்லிவிட்டீர். கடந்த இரண்டு நாட்களில் நான் வேலை செய்தவைகளெல்லாவற்றிலும் Alter... கண்ணீரில்லை, வலியில்லை, ரணமில்லை, சொந்தமில்லை... ஆனால் ஏதோ ஒன்று.... இழந்த உணர்வு....

Thamira said...

பிரச்சாரம் செய்த தலைவியும், இந்த விஷயத்திலாவது ஒற்றுமை காத்து இனி இலங்கைத் தமிழருக்காக என்ன செய்யலாம் என்று யோசித்து - எங்களைத் தந்தி அனுப்பச் சொல்லாமல் - ஒரு முடிவுக்கு வாருங்கள்.
//

அபத்தமான வரிகள்.

தராசு said...

//மகன், பேரன், மகளுக்கு கேபினெட் பதவி உறுதி ஆனபின் இதுபற்றி கவிதை எழுதப் போகும் தமிழினத் தலைவரும், மகனுக்கு பதவி கிடைக்காத மருத்துவர்களும், திடீர் பாசத்தோடு பிரச்சாரம் செய்த தலைவியும், இந்த விஷயத்திலாவது ஒற்றுமை காத்து இனி இலங்கைத் தமிழருக்காக என்ன செய்யலாம் என்று யோசித்து - எங்களைத் தந்தி அனுப்பச் சொல்லாமல் - ஒரு முடிவுக்கு வாருங்கள்.//

கலக்கல் தல. கையை கட்டிகிட்டு சும்மா உக்கார்ந்திருப்பதை நினைத்தா வேதனையா இருக்கு.

Ramesh said...

Nanbarkale ungal unarvugalai mathikkiren, Intha Unmaiyeiyum purinthu kollungal,ini saagumvarai porunthakkodiyathu "ONDRU PATTAAL UNDU VAZHVU, OTTRUMAI NEENGIDIL ANAIVARUKKUM THAZHVU" ithuthan nammudaiya padippinai.

பரிசல்காரன் said...

நன்றி
கார்க்கி
நர்சிம்
நிலாவும் அம்மாவும்
Joe
மயில்
விஜய்
ஆதவா
ஆதி
தராசு
ரமேஷ்

@ ஆதி

நீங்களும் இன்னபிற நண்பர்களும் பதிவின் சாராம்சத்தை விடுத்து அந்த ஒரு வரிக்காக உணர்ச்சிவசப்படுவதை அறிகிறேன். பிழையிருப்பின் பொறுத்தருள்க.

Sundar சுந்தர் said...

//மகன், பேரன், மகளுக்கு கேபினெட் பதவி உறுதி ஆனபின் இதுபற்றி கவிதை எழுதப் போகும் தமிழினத் தலைவரும், மகனுக்கு பதவி கிடைக்காத மருத்துவர்களும், திடீர் பாசத்தோடு பிரச்சாரம் செய்த தலைவியும்//

கலக்கல்!

வசந்த் ஆதிமூலம் said...

அருமையான பதிவு. பரிசலின் உணர்வுகளுடன் இணைந்து கொள்கிறேன்.

விக்னேஷ்வரி said...

ஒரு குவளைத் தண்ணீருக்காக ஏங்கும் குழந்தையின் புகைப்படத்தை, கையில் கோக் அல்லது பெப்ஸியோடு ‘உச்’ கொட்டிப் படிப்பவர்கள்தான் நாங்கள். //

ஏற்றுக் கொள்ள வேண்டிய கொடுமை. :(

மகன், பேரன், மகளுக்கு கேபினெட் பதவி உறுதி ஆனபின் இதுபற்றி கவிதை எழுதப் போகும் தமிழினத் தலைவரும், மகனுக்கு பதவி கிடைக்காத மருத்துவர்களும், திடீர் பாசத்தோடு பிரச்சாரம் செய்த தலைவியும், இந்த விஷயத்திலாவது ஒற்றுமை காத்து இனி இலங்கைத் தமிழருக்காக என்ன செய்யலாம் என்று யோசித்து - எங்களைத் தந்தி அனுப்பச் சொல்லாமல் - ஒரு முடிவுக்கு வாருங்கள். //

ஏன் பரிசல் காமெடி பண்றீங்க.

வாழவந்தான் said...

பரிசல், மக்கள் தொலைகாட்சியில் புதன் அன்று இரவு 'ஈழம் அன்றும் இன்றும்' என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். 1948-1984 நடந்தவற்றை தொகுத்துவிட்டு அப்படியே முடிச்சுட்டாங்க. அது தொடர் மாதிரியும் தெரியலை.

Joe said...

மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை செய்ய முற்படுவோம் நாம் அனைவரும்.

அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி சேர்ப்பது, சிங்கள / இந்திய அரசியல்வியாதிகளின் கைகளில் சிக்காமல்?

ARV Loshan said...

நன்றிகள்.. உங்கள் உணர்வுகளுக்கும், எம்மைப் புரிந்து கொண்டமைக்கும்..

கணேஷ் said...

ஒவ்வொரு வரியும் சவுக்கடி போல உள்ளது, அனால் யாருக்காவது உறைக்குமா என்றால், பதில் இல்லை என்றுதான் வரும், முத்துக்குமார் சொன்னது போல் யாருக்கும் வெட்கம் இல்லை அவ்வளோதான் சொல்ல முடியும். ஆனால் நீங்கள் சொன்னது போல் அவருடைய இறந்த முகத்தை பார்த்த பொழுது சொல்ல முடியாத ஒரு வலி ஒன்று உருவானது உண்மை.

நாஞ்சில் நாதம் said...

பரிசல்,

எத்தனை முறை கொன்றிருப்பார்கள்
அந்த பீனிக்கல் பறவையை.

என்றாவது ஒரு நாள் ஈழம் வென்றிடும்
என்ற ஆசையில் நீங்களும் நானும்
அதன் அடுத்த கட்ட நடவடிகைகளில்
உலகின் எதோ ஒரு மூலையில் அல்ல
ஒவ்வரு மூலையிலும் அவர்.

கவலை கொள்ளாதே தோழா
அவர் உயிருடன் தான் உள்ளார்.

இப்படிக்கு,

தனி தமிழ் ஈழ ஆசையில்
நாஞ்சில் நாதம்

வாசுகி said...

உணர்வுகளை புரிந்து எழுதிய பதிவுக்கு நன்றிகள்.

தமிழன் தலை நிமிர்ந்து வாழ நல்ல காலம் பிறக்கும் என காத்திருப்போம்.