Tuesday, May 26, 2009

அவியல் 26 மே 2009

300 ஃபாலோயர்கள் ரெண்டு லட்சம் ஹிட்ஸ் என்றெல்லாம் பீத்திக் கொள்வதை நிறுத்துடா என்றது சமீபத்தில் பார்த்த ஒரு வலைப்பூ. ஏப்ரல் 2009ல் (போன மாசம்க!) போலி ஐ.பி.எல். வீரர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள (www.fakeiplplayer.blogspot.com) வலைப்பூவின் ப்ரொஃபைலைப் பார்த்தவர்கள் இதுவரை ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர்! ஃபாலோயர்கள் 7883 பேர்! ஹிட் கவுண்டரெல்லாம் போடவில்லை அவர்! ஒவ்வொரு பதிவிற்கும் 250 முதல் ஆயிரக்கணக்கில் கமெண்டுகள் வந்து குவிகிறது!


கிசுகிசுன்னாலே அவ்ளோ இஷ்டம்பா நம்மாளுகளுக்கு!


****************

கோவைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது நாலைந்து ‘பசங்க’ வண்டியில் ஏறினார்கள். அவர்களோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே “‘பசங்க’ படம் பார்த்துட்டீங்களாப்பா?” என்று கேட்டதற்கு அவர்களில் ஒரு வாண்டு சொன்னது:-


“இன்னும் எங்கப்பா சி. டி. வாங்கீட்டு வரலைண்ணா”


ம்கும்! கிழிஞ்சது போ!


*********************

ஐ.பி.எல்-லில் அதிகமாக விளம்பரங்களில் தென்பட்டது கொல்கத்தா அணியினர்தான். எப்போது பார்த்தாலும் ஷாரூக் மற்றும் கொல்கத்தா அணியினரை சந்திக்க வேண்டுமா.. **** குடியுங்கள்’ என்ற விளம்பரம் வந்து கொண்டே இருந்தது. ரொம்ப அதிகம் பேர் அவர்களைச் சந்திக்க ஆவலாயிருந்தார்கள் போல. அவர்களே கிளம்பி அவசர அவசரமாக இந்தியா வந்துவிட்டார்கள்! ஓவர் வெளம்பரம் ஒடம்புக்கு ஆகாது!

ஃபைனலில் பெங்களூர் ஜெயிக்க வேண்டும் என்றும், டெக்கான் சார்ஜர்ஸ் ஜெயிக்கும் என்றும் நினைத்தேன். ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தது கேப்டன் இந்தியாக்காரர் என்ற எண்ணம்.

போன முறை ஷேன் வார்னே, இந்த முறை கில்கிறிஸ்ட் என்று ஆஸ்திரேலியா சீனியர்கள் கலக்கிக் கொண்டிருக்க.. நம்ம சீனியர்கள்...

நோ கமெண்ட்ஸ்!

**********************

கிரேசி கிரி பற்றி. அவன் சின்ன வயசில் வீட்டருகே உள்ள ஸ்டாப்பில் மினி பஸ் வந்து நின்றிருக்கிறது. விளையாட்டாய் ஏறி, இறங்கியிருக்கிறான். அடுத்த நாள் அவன் அண்ணனிடம் கம்ப்ளெய்ண்ட் போயிருக்கிறது. அண்ணன் பிரம்பை எடுத்துக் கொண்டு கோபமாக கேட்டதற்கு இவன் சொன்னானாம்.

“ஏறும் வழின்னு போட்டிருந்தது. ஏறினேன். பஸ்ஸுக்குள்ள இன்னொரு பக்கம் இறங்கும் வழின்னு போட்டிருந்தது... இறங்கீட்டேன்”

கிரி இந்த முறை சீரியஸாக இன்னொரு விஷயம் சொன்னான்.. டாஸ்மாக்கில் சரக்கு கிடைக்கவில்லை என்று புகார் போனால் பல அதிகாரிகளுக்கு திட்டுகளும், மெமோக்களும் பறக்கிறதாம். ஆனால் பல நூலகங்களில் நூல்கள் மிகக்குறைவாய் இருந்தாலும் கண்டுகொள்ளவோ மேல் நடவடிக்கை எடுக்கவோ யாரும் தயாரில்லை என்று புலம்பினான்.

ப்ச்!

****************************

தரை பம்பரங்கள்
கயிற்றில் சுற்றும்
திரைப் பம்பரங்கள்
வயிற்றில் சுற்றும்
வயிற்றுக்காகப் பிழைக்கலாம்
வயிற்றில் பிழைக்கலாமா?
-நெல்லை ஜெயந்தா

*********************
மெயிலில் வந்த ஒரு ஃபோட்டோ. ‘இந்தியாவில் கிரிக்கெட்டில் ஏன் முன்னேற்றமடைந்து வருகிறது என்றால்..’ என்ற கேப்ஷனுடன் இந்தப் புகைப்படம் வந்தது..
இன்னொரு நண்பர் மெயிலில் கேட்டார்.. “நம்ம ஃபீல்டிங் ஏன் மோசம்னு இப்பத்தான் தெரியுது. பாருங்க அடிக்கறதுக்கு முன்னாடியே ஓடறானுக...”

******

42 comments:

லோகு said...

*நானும் பெங்களூர் ஜெயிக்கணும்னு தான் நெனச்சேன்.. இதே காரணம்..

* நம்ம ஊர்ல பசங்க cd கிடைக்குது.. (நான் இன்னும் பாக்கல)

லோகு said...

நான் தா மொத போனியா.. நம்ம கை அவ்ளோ ராசியான கை கிடையாதே..

பரிசல்காரன் said...

இல்லல்ல லோகு. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் உங்களுது ‘ராசி’யான கைதான்!

pudugaithendral said...

ப்ரஸண்ட்

Mahesh said...

லைப்ரரி மேட்டர் வேதனை :(

Mahesh said...

லைப்ரரி மேட்டர் வேதனை :(

தராசு said...

//ஏப்ரல் 2009ல் (போன மாசம்க!)//

ஏப்ரல் 2009 போன மாசம் தானா????


//“நம்ம ஃபீல்டிங் ஏன் மோசம்னு இப்பத்தான் தெரியுது. பாருங்க அடிக்கறதுக்கு முன்னாடியே ஓடறானுக...”//

கலக்கல்

சென்ஷி said...

//“நம்ம ஃபீல்டிங் ஏன் மோசம்னு இப்பத்தான் தெரியுது. பாருங்க அடிக்கறதுக்கு முன்னாடியே ஓடறானுக...”//

கலக்கல்!

Truth said...

//7883 ஃபாலோயர்கள்
ஃபாலோ'வ'ர்க்கு தமிழாக்கம் ஃபாலோ'ய'ரா? :-)
இப்போ கூட இந்த அவியல் பதிவ படிக்கும் முன்னாடி, நானும் fakeiplplayer தான் படிச்சிக்கிட்டு இருந்தேன்.

//சி.டி மேட்டர்
நானும் பல முறை சொல்லி பாத்திருக்கேன். என்னய தான் பைத்தியக்காரன் மாதிரி ஒரு லுக்கு விடுறானுங்க. என்ன பன்றது?

//IPL
ஓவரா ஆடின ஷாருக், ப்ரீத்தி, ஷில்பா, பஜ்ஜிக்கு அரை இறுதியில் இடம் கிடைக்காமல் போனது எனக்கும் கொஞ்சம் சந்தோஷம் தான். நானும் பேங்களூர் ஜெயிக்கனும்னு தான் நினைச்சேன்.

//library
யாரையும் தப்பு சொல்ல முடியாது. supply-demand தான் economics.

கவிதை எனக்கு எழுதவும் வராது, படித்தாலும் புரியாது அண்ணே. ஆனா இந்த முறை புரிஞ்சிச்சு. :-)

ஃபோட்டோ காமெடியா இருந்தாலும், இரண்டாம் முறை பாக்கும் போது, கஷ்டமாத் தான் இருக்கு.

இன்னைக்கு அவியல் சூப்பர். [அவியல் அறுமைன்னு எழுதனும்னு தான் நினைச்சேன், ஆனா எந்த 'ற/ர' ன்னு தெரியல :-( ]

கார்க்கிபவா said...

பெங்களூருக்கு லக்கு அதிகம்.. அவரக்ள் வீரர்கள் டெஸ்ட் ப்ளேயர்ஸ். தென்னாப்பிரிக்க ஆடுகளம் தோதாக அமைந்து விட்டது.. மற்றபடி ஜெயிக்க வேண்டிய அணி, சென்னை என்பது என் கருத்து...

அவியல்.. ஓக்கே ரகம் தான்..

Mahesh said...

//அவியல் அறுமைன்னு எழுதனும்னு தான் நினைச்சேன், ஆனா எந்த 'ற/ர' ன்னு தெரியல //

வால்பையன் கிட்ட கேட்டீங்கன்னா "சொள்அலகண்" கிட்ட கேட்டு கரெக்டா சொல்லுவாரு :)))))

மேவி... said...

அந்த fakeiplplayer பிளாக் எழுவது ஒரு கிரிக்கெட் ஆளு இல்லை.... அவர் யாருன்னு அரசல் புரசல் யாக கேள்விப்பட்டேன்....

பசங்க படம் திருட்டு dvd சென்னை ல பீச் ஸ்டேஷன் ல செம sales..... 15 ரூபாய் தான்; நான் இன்னும் பார்க்கவில்லை.

கவுஜவும் போடோவும் நல்ல இருக்கு


மொத்தத்தில் "அவியல் 26 மே 2009" சுவை இருந்தும் சுடு இல்லை .

Unknown said...

Mahesh said...

//அவியல் அறுமைன்னு எழுதனும்னு தான் நினைச்சேன், ஆனா எந்த 'ற/ர' ன்னு தெரியல //

வால்பையன் கிட்ட கேட்டீங்கன்னா "சொள்அலகண்" கிட்ட கேட்டு கரெக்டா சொல்லுவாரு :)))))

அது வந்து அருமை ங்ணா.
ஹி..ஹி.

நாஞ்சில் நாதம் said...

பரிசல்

நூலகங்கள் நிலமை படு மோசம்.
கூடிய விரைவில் இழுத்து மூடி விடுவார்கள்
நம்மால் எதாவது செய்ய முடியுமா
அதாவது வலைபூ எழுத்தாளர்கள் மற்றும்
வாசகர்கள் மூலம். அடுத்த வலைபூ எழுத்தாளர்கள்
கூட்டத்தில் கலந்துரையாடவும்.

அன்புடன்
நாஞ்சில் நாதம்

Unknown said...

டாஸ்மாக் மேட்டர் ஒரு பெரிய ரோதனை.
குடிகாரர்களை எவன் மதிக்கிறான்?

தீப்பெட்டி said...

கலக்கல் பாஸ்
அவியல் நல்ல டேஸ்ட்..

Thamira said...

பக்கத்து வீட்டு பெண்ணின் பட்டுப்புடவையை ஆசையாக பார்த்துக்கொண்டே 'என்ன ஒரு 20000 இருக்குமா?' என்று கேட்கும் தங்கமணிகளின் குரலில் படிக்கவும்..

'என்ன அந்த ஐபிஎல் வலைப்பூ இப்போ ஒரு கோடி ஹிட்ஸ் வந்திருக்குமா பரிசல்.?'

Thamira said...

டாஸ்மாக் மேட்டர் ஒரு பெரிய ரோதனை.
குடிகாரர்களை எவன் மதிக்கிறான்?//

சரிதான் பிரதர்.. டாஸ்மாக்கோ, லைப்ரரியோ பிரச்சினை ஒண்ணுதான், இருக்கறத வாங்கிக்கணும் அவ்வளவுதான்.

அறிவிலி said...

//ஆனால் பல நூலகங்களில் நூல்கள் மிகக்குறைவாய் இருந்தாலும் கண்டுகொள்ளவோ மேல் நடவடிக்கை எடுக்கவோ யாரும் தயாரில்லை என்று புலம்பினான்.//

க்ரேசி இப்பல்லாம் ரொமப சீரியஸா ஆயிட்டாரோ?

//ப்ச்..//

:(

பரிசல்காரன் said...

நன்றி

புதுகைத்தென்றல்
மகேஷ்
தராசு
சென்ஷி
ட்ரூத்(சிறப்பு நன்றி.. பிரிச்சு மேஞ்சதுக்கு! - அருமை. அறுவைக்குத்தான் ’று’ வரும்!)


@ கார்க்கி - ஓகே!

பரிசல்காரன் said...

@ மகேஷ்

...:-))))))))))ROTFL!!

@ மே வீ

//சுவை இருந்தும் சுடு இல்லை //

பிஸ்டல் தரவா?? ‘சுடு’ங்க!

@ 4321

கும்க்கி.. ஏன் பேரு மாத்தீட்டீங்களா?

@ ஜின்

நல்லதொரு யோசனை.. பரிசீலிப்போம்..

@ தீப்பெட்டி, ஆதி, அறிவிலி

நன்றிங்ணா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

பரிசல்...அவியல் நன்றாய் இருக்கிறது.
நானும்...பெங்களூரு ஜெயிக்கணும்னு நினைச்சேன்...ம்ம்..

அ.மு.செய்யது said...

கடைசி போட்டோ கமெண்ட் தாறுமாறு...

ஹா..ஹா..

தமிழ் said...

/தரை பம்பரங்கள்
கயிற்றில் சுற்றும்
திரைப் பம்பரங்கள்
வயிற்றில் சுற்றும்
வயிற்றுக்காகப் பிழைக்கலாம்
வயிற்றில் பிழைக்கலாமா?
-நெல்லை ஜெயந்தா/

நச்

பரிசல்காரன் said...

நன்றி டி வி ஆர் ஐயா//

நன்றி அ மு செய்யது

நன்றி திகழ்மிளிர் (கவிதைகள் மேலுள்ள உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது!)

பரிசல்காரன் said...

ஐ! நாந்தான் 25!

(அல்பம்!)

Bala said...

//டாஸ்மாக் மேட்டர் ஒரு பெரிய ரோதனை.
குடிகாரர்களை எவன் மதிக்கிறான்?//

ஆமாப்பா....மனசு நோவுது

...நட்புடன் கார்த்திக்

http://karthiscraps.blogspot.com/

வாருங்கள் காதலிக்கலாம்....

விக்னேஷ்வரி said...

போன முறை ஷேன் வார்னே, இந்த முறை கில்கிறிஸ்ட் என்று ஆஸ்திரேலியா சீனியர்கள் கலக்கிக் கொண்டிருக்க.. நம்ம சீனியர்கள்... //

நானும் இதே தான் நினைச்சேன். :(

பல நூலகங்களில் நூல்கள் மிகக்குறைவாய் இருந்தாலும் கண்டுகொள்ளவோ மேல் நடவடிக்கை எடுக்கவோ யாரும் தயாரில்லை //

:(((((

புருனோ Bruno said...

கிரிக்கெட் கமெண்டுகள் டாப் க்ளாஸ்

Bhuvanesh said...

//ஃபைனலில் பெங்களூர் ஜெயிக்க வேண்டும் என்றும், டெக்கான் சார்ஜர்ஸ் ஜெயிக்கும் என்றும் நினைத்தேன். ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தது கேப்டன் இந்தியாக்காரர் என்ற எண்ணம்.//

இதே காரணம்.. கும்ப்ளே செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. கோமாவில் இருந்த ஒரு அணியை இதுவரை அழைத்துவந்ததே சாதனை தான் !!

கடைக்குட்டி said...

போட்டோ சூப்பர் :-)

பரிசல்காரன் said...

@ நட்புடன் கார்த்திக்

நன்றி தலைவா..

-நட்புடன் கிருஷ்ணா

@ விக்னேஸ்வரி - நன்றி

@ புரூனோ - நன்றி டாக்டர் சார். மொட்டைமாடிக் கூட்டம் சிறப்பாக நடக்க வாழ்த்துகள்!


# புவனேஷ் - கரெக்டுங்க...
@ கடைக்குட்டி

நன்றி!

குசும்பன் said...

300 ஃபாலோயர்கள் ரெண்டு லட்சம் ஹிட்ஸ் என்றெல்லாம் பீத்திக் கொள்வதை நிறுத்துடா என்றது சமீபத்தில் பார்த்த ஒரு வலைப்பூ//

அடிக்கடி பாபா டெல்லி கனேஷ் நினைவுக்கு வருகிறார் பரிசல்:)))


//கிசுகிசுன்னாலே அவ்ளோ இஷ்டம்பா நம்மாளுகளுக்கு!//

அதுவும் கசமுசா கிசுகிசுன்னா ரொம்பவே!:) இருந்தாலும் உங்க கல்யாணவீட்டு கிசுகிசு பற்றி இன்னும் பலர் என்னிடம்கேட்டுக்கிட்டே இருக்காங்க:)))

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே,
சரக்கு வாங்கி விக்கிறேம்
புத்தகம் வாங்கி வைக்கிறோம்
வித்தா வருமானம்
வைச்சா என்ன வரும்?

கல்விய தனியாருக்கு தாரை வார்த்துட்டு , சாராயக்கடைய அரசாங்கம் ஏத்து நடத்துற கொடுமை நம்ம ஊர்ல மட்டும் தான் நடக்கும்.

ஆ.சுதா said...

மலைப்பா இருக்கு அந்தப் பதிவு.

தினேஷ் said...

// ஃபைனலில் பெங்களூர் ஜெயிக்க வேண்டும் என்றும், டெக்கான் சார்ஜர்ஸ் ஜெயிக்கும் என்றும் நினைத்தேன். ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தது கேப்டன் இந்தியாக்காரர் என்ற எண்ணம்.

போன முறை ஷேன் வார்னே, இந்த முறை கில்கிறிஸ்ட் என்று ஆஸ்திரேலியா சீனியர்கள் கலக்கிக் கொண்டிருக்க.. நம்ம சீனியர்கள்... //
தலை எனக்கும் இதே நினைப்புதான்.. ஆனா நினைப்பு பொலப்ப கெடுக்கும்னு சொல்வாங்களே , அது போல நாம நினைக்க அங்கே கும்ளேவுக்கு அல்வா...

Unknown said...

அவியல் நல்லாயிருக்கு..

தமயந்தி said...

ada.pasanga padathai pathi pasangata ketaram.. avanga appa inum cd vaangi tharala ANNA nu sonangalam.. kadavule!!!kadavule!!!

நர்சிம் said...

அடிபின்றீங்களே பரிசல்.. நெல்லை ஜெயந்தாவின் கவிதை கலக்கல்

அன்பேசிவம் said...

இன்னொரு நண்பர் மெயிலில் கேட்டார்.. “நம்ம ஃபீல்டிங் ஏன் மோசம்னு இப்பத்தான் தெரியுது. பாருங்க அடிக்கறதுக்கு முன்னாடியே ஓடறானுக...”

அட்டகாசம் போங்க ஹி ஹி ஹி

வால்பையன் said...

டாஸ்மார்க்கால தான் தமிழகத்துல பட்ஜெட்டும், சலுகைகலும் கிடைக்குது!

நூலகத்துல படிச்சி புத்தி வந்துட்டா, எவனாவது காசு வாங்கிட்டு ஓட்டு போடுவானா?

லாஜிக்கா யோசிங்க பாஸ்!

பட்டாம்பூச்சி said...

பதிவு கலவையா நல்லா இருக்கு :)