Saturday, May 23, 2009

பிரபாகரன் மரணம் பற்றிய அதிர்ச்சி அறிக்கை வெளியாகும் - இலங்கை எம்.பி.

“பிரபாகரன் இறப்பு குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து விரைவில் ஓர் அறிக்கை வெளியாகும். அந்த அறிக்கை அதிர்ச்சி தரக்கூடியதாகவும், உலகை உலுக்கக் கூடியதாகவும் இருக்கும்” என்று இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

அமெரிக்கா, நார்வே நாடுகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, வெள்ளைக் கொடியோடு செஞ்சிலுவைச் சங்கத்திடம் சரணடைய வந்தபோது சர்வதேச விதிமுறைகளை மீறி நடேசன் உள்ளிட்டவர்களை நயவஞ்சமாகக் கொன்றுள்ளனர். சர்வதேச சதியால் விடுதலைப் புலிகள் மோசமான பின்னடவை சந்தித்துள்ளனர்.

புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதை விடுதலைப்புலிகள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

பிரபாகரனது மூத்த மகன் சார்லஸ் அந்தோணி இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவி, மகள், இளையமகன் ஆகியோர் குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் தெரியவில்லை.

இலங்கை அரசு காட்டியது பிரபாகரன் உடல்தானா என்ற சந்தேகம் உள்ளது. உண்மையில் பிரபாகரன் இறந்திருந்தால் ஊர் முழுக்க ஊர்வலம் எடுத்துச் சென்றிருப்பர்.

பிரபாகரனின் மூத்த சகோதரி சென்னையில் உள்ளார். அவரிடம் இருந்து மரபணுச் சோதனைக்கு மாதிரி எடுத்து, அவர்கள் காட்டிய உடலோடு ஒப்பிட்டு சோதனை செய்திருக்கலாமே!

சர்வதேச பத்திரிகையாளர்களையோ, இலங்கைப் பத்திரிகையாளர்களையோ அந்த உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. புலிகள் இயக்கத்தை யார் நடத்துவது என்பதை அந்த இயக்கத்தினர்தான் அறிவிக்க வேண்டும். பிரபாகரன் இறப்பு குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து விரைவில் ஓர் அறிக்கை வெளியாகும். அந்த அறிக்கை அதிர்ச்சி தரக்கூடியதாகவும், உலகை உலுக்கக் கூடியதாகவும் இருக்கும்.

‘இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் காயம்பட்டவர்களுக்கு உதவ மனிதாபிமான பணியாளர்களை அனுப்புகிறோம்; ஒரு கப்பலை அனுப்பி அப்பாவி பொதுமக்களை மீட்கிறோம்’ என்ற இரு கோரிக்கைகளை அமெரிக்க கப்பற்படைத் தளபதி, கடந்த வாரம் இந்தியாவிடம் வைத்தார். இந்த இரண்டையும் இந்தியா ஏற்கவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய, தமிழக அரசுகளின் செயல்பாடுகள் எங்களுக்கு வேதனையையும், ஏமாற்றத்தையும் தருகிறது. இலங்கையில் பெருமளவிலான படுகொலைகள் நடந்துமுடிந்த பின் ஐ.நா. செயலர் இலங்கை வந்துள்ளார். இந்த நாளை கறுப்பு நாளாகக் கடைபிடிக்கிறோம்.’

இவ்வாறு சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

- தினமலர்

குறிப்பு: மேலே உள்ளது இன்றைய தினமலரில் 11ம் பக்கம் வெளியான செய்தி. பிரபாகரனின் இறப்பைப் பற்றி இரண்டாம் ஹிட்லர் ராஜபக்‌ஷே சொன்ன செய்தியை முதல் பக்கம் போட்டிருக்கும் தினமலர், இந்தச் செய்தியை 11ம் பக்கம் வெளியிட்டிருக்கிறது. ஆகவேதான் அந்தப் பேட்டியை இப்படிப் பதிவாக வெளியிடுகிறேன்.

.

23 comments:

கிரி said...

//பிரபாகரனின் இறப்பைப் பற்றி இரண்டாம் ஹிட்லர் ராஜபக்‌ஷே சொன்ன செய்தியை முதல் பக்கம் போட்டிருக்கும் தினமலர், இந்தச் செய்தியை 11ம் பக்கம் வெளியிட்டிருக்கிறது//

கே கே தினமலர் இதை வெளியிட்டதே பெரிய விஷயம் ;-)

கானா பிரபா said...

கிரி சொன்னதை வழிமொழிகிறேன்

வாசுகி said...

உங்கட தலைப்பை பார்த்தாலே அதிர்ச்சியாகத்தான் இருக்கு.

//உலகை உலுக்கக் கூடியதாகவும் இருக்கும்//
தமிழ் மக்களை உலுக்காவிட்டால் சரி.
இப்ப தான் ஏதோ கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறோம்.

அத்திரி said...

குழப்பம்தான் மிஞ்சுகிறது

தீப்பெட்டி said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
எது நடந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலாக இருக்கவேண்டும்..

Vijay said...

இனிமேல் தமிழ்நாட்டில் பாலும் தேனும் வழிந்தோடும்! ;-)

தங்க முகுந்தன் said...

காலங்கடந்தமை ஒரு காரணம்!
உலகம் அனைத்துமே இலங்கை அரசுக்குச் சார்பாக இருந்தமை இரண்டாவது காரணம்!
விடுதலைப் புலிகள் மக்களுடைய நன்மையைக் கருதாமல் போரைத் தொடங்கியமை மூன்றாவது!
மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் - போரை ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று திட்டமிடப்படாதமையும் - மக்களை வெளியேற விடாமல் அனுமதி(பாஸ்) நடைமுறையைப் புலிகள் கடுமையாக வைத்திருந்தமை போன்ற அனைத்துக் காரணங்களுடன் ஒரு தெளிவான அரசியல் தீர்வை முன்வைக்காதமை போன்று அடுக்கிக் கொண்டே காரணங்களையும் குற்றங்களையும் சுமத்திக் கொண்டு போகலாம்.
என்னைப் பொறுத்தவரையில் நான் கடந்த 2008 செப்டெம்பர் 10இல் விடுத்த மனிதாபிமான பகிரங்க வேண்டுகோளை (எனது கிருத்தியம் வலைப்பதிவில் குறிப்பிட்டதுபோல்) யாராவது செவிமடுத்து நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்! இனியும் தாமதிக்காமல் உடனடியான உருப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்! இதை யார் செய்வது - எப்படிச் செய்வது என்பதே எனது மனதில் எழும் தற்போதைய கேள்வி!

Anonymous said...

அது இன்ப அதிர்ச்சி அறிக்கையாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

பகிர்வுக்கு நன்றி பரிசல்!

ஆதவா said...

:(

Raja said...

// Vijay said...
இனிமேல் தமிழ்நாட்டில் பாலும் தேனும் வழிந்தோடும்! ;-)

23 May, 2009 6:39//

தமிழ்நாட்டின் மீது ஏன் வெறுப்பு?

ஜீவன் said...

///‘இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் காயம்பட்டவர்களுக்கு உதவ மனிதாபிமான பணியாளர்களை அனுப்புகிறோம்; ஒரு கப்பலை அனுப்பி அப்பாவி பொதுமக்களை மீட்கிறோம்’ என்ற இரு கோரிக்கைகளை அமெரிக்க கப்பற்படைத் தளபதி, கடந்த வாரம் இந்தியாவிடம் வைத்தார். இந்த இரண்டையும் இந்தியா ஏற்கவில்லை.///


இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரெஸ் எடுக்கும் முடிவுகளால்! தமிழக தமிழர்களுக்கு மனோ ரீதியாக தனித்து விடப்பட்ட ஒரு உணர்வு ஏற்படுகிறது!
இது இந்திய ஒருமை பாட்டிற்கு நல்லதல்ல!!!

thequickfox said...

//பிரபாகரனின் மூத்த சகோதரி சென்னையில் உள்ளார். அவரிடம் இருந்து மரபணுச் சோதனைக்கு மாதிரி எடுத்து, அவர்கள் காட்டிய உடலோடு ஒப்பிட்டு சோதனை செய்திருக்கலாமே!//
இது இப்போ ரொம்ப முக்கியமோ உங்களுக்கு?
அவர் இறக்கவில்லை உயிரோடு இருக்கிறார் என்று புலி ஆதரவாளர்கள் சொல்திறார்கள். புலிகளான கிரி, கானா பிரபாவிடம் கேட்டுபாருங்கள்.

$anjaiGandh! said...

காலைலை தினமலர் படிக்கும் போது இதை கவனிச்சேன் மாம்ஸ்.. எப்போவாச்சும் பண்றவங்களா இருந்தா பெரிசா எடுத்துக்கலாம்.. எப்போவும் இதே கதை தானே.. அதான் நான் பெரிசா எடுத்துக்கலை.. முதல் பத்திய மட்டும் பெட்டி செய்தியா போடாம முழுசா போட்டதுக்கே நீங்க தினமலரை பாராட்டி பதிவெழுதனும்.. ;))

விடுங்க மாமா.. இவிங்க எப்போவுமே இப்டி தான். :)

mraja1961 said...

தினமலர் ஒதிக்கி தள்ளவேண்டிய ஒரு தமிழ் துரோக பத்திரிக்கை. அது திருந்தாது நாம் தான் திருந்தி வாங்குவதை நிறுத்தவேண்டும்.

அன்புடன்
மகாராஜா

இரா.சுகுமாரன் said...

பிரபாகரன் இருக்கும் இடம் எப்படி தப்பித்தார் என விரிவாக எழுதி இலங்கை அரசுக்கு பலர் கருணாவை விட சிறப்பாக காட்டிக்கொடுக்கி்றார்கள். இதில் புலிகளின் உளவுப்பிரிவும் அடங்கும்

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

Anonymous said...

இதை 11ஆம் பக்கம் போடுற அளவுக்குக் கருணை காட்டுனதுக்காகவே தினமலரைப் பாராட்டணும் நீங்க. 'அக்மார்க் தமிழர்கள்' நாளிதழ்களீல் இதுபோல செய்தி ஏதும் வரவில்லையா?

Vijay said...

Read this too!

http://dbsjeyaraj.com/dbsj/archives/615

அறிவிலி said...

//ஆசிப் மீரான் said...
இதை 11ஆம் பக்கம் போடுற அளவுக்குக் கருணை காட்டுனதுக்காகவே தினமலரைப் பாராட்டணும் நீங்க. 'அக்மார்க் தமிழர்கள்' நாளிதழ்களீல் இதுபோல செய்தி ஏதும் வரவில்லையா?//

அதே. மற்ற "தமிழ்" பத்திரிக்கைகளில் என்ன போட்டிருக்கிறார்கள்?

ஆ.முத்துராமலிங்கம் said...

அந்த செய்தி என்னனு பார்ப்போம்

shaukath said...

//பிரபாகரன் இறப்பு குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து விரைவில் ஓர் அறிக்கை வெளியாகும். அந்த அறிக்கை அதிர்ச்சி தரக்கூடியதாகவும், உலகை உலுக்கக் கூடியதாகவும் இருக்கும்.//

அறிக்கை வந்திருக்கிறது ஆனால் அதிர்ச்சியாட்டும், உலகை உலுக்குறதாகவும்தான் இல்லை. அறிக்கையை படிக்க
http://news.yahoo.com/s/ap/20090524/ap_on_re_as/as_sri_lanka_immortal_rebel

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8066129.stm

http://www.abc.net.au/news/stories/2009/05/25/2579510.htm

சித்திரகுப்தன் said...

@shaukath,

சிவாஜிலிங்கம் எம்.பி சூசகமாக கூறிய பிரபாகரனின் மரணம் பற்றிய அதிர்ச்சி அறிக்கை இன்னமும் வெளியாகவில்லை...

பலரும் நினைப்பது போல அது பிரபாகரன் கொல்லப்பட்டதை புலிகள் வெறுமனே உறுதிப்படுத்தும் அறிக்கை அல்ல... மாறாக அது பிரபாகரன் எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றியதாக இருக்கும்...

பிரபாகரன் துப்பாக்கி சூடு பட்டு இறக்கவில்லை.. மாறாக.. அவரது தலையில் துப்பாக்கியால் பலமாக அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்..

அதனால்தான் அவரது தலையை துணியால் மூடி படம் எடுத்து காட்டினார்கள்.. முறையான பிரேத பரிசோதனை செய்யவுமில்லை, அதிகம் பேர் பார்பதற்கு அனுமதிக்கவும் இல்லை.

எந்த சூழ்நிலையில் பிரபாகரன் தலையில் அடித்து கொல்லப்பட்டார் என்ற உண்மை வெளிவர இன்னும் ப்ல நாட்கள் ஆகலாம்.

சித்திரகுப்தன் said...

@shaukath,

சிவாஜிலிங்கம் எம்.பி சூசகமாக கூறிய பிரபாகரனின் மரணம் பற்றிய அதிர்ச்சி அறிக்கை இன்னமும் வெளியாகவில்லை...

பலரும் நினைப்பது போல அது பிரபாகரன் கொல்லப்பட்டதை புலிகள் வெறுமனே உறுதிப்படுத்தும் அறிக்கை அல்ல... மாறாக அது பிரபாகரன் எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றியதாக இருக்கும்...

பிரபாகரன் துப்பாக்கி சூடு பட்டு இறக்கவில்லை.. மாறாக.. அவரது தலையில் துப்பாக்கியால் பலமாக அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்..

அதனால்தான் அவரது தலையை துணியால் மூடி படம் எடுத்து காட்டினார்கள்.. முறையான பிரேத பரிசோதனை செய்யவுமில்லை, அதிகம் பேர் பார்பதற்கு அனுமதிக்கவும் இல்லை.

எந்த சூழ்நிலையில் பிரபாகரன் தலையில் அடித்து கொல்லப்பட்டார் என்ற உண்மை வெளிவர இன்னும் ப்ல நாட்கள் ஆகலாம்.