Monday, May 25, 2009

நடிகர் விஜய்க்கு....அன்புள்ள ‘இளைய தளபதி’ விஜய்க்கு..


சமீபகாலமாக பலரையும் பிடித்து ஆட்டும் பார்ட்டி மேனியா உங்களையும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என பல்வேறு குறிப்புகளின் மூலம் உணர்கிறோம்.

’பார்ட்டி மேனியா’ என நான் குறிப்பிடுவது சிம்பு, த்ரிஷா, விஷால் வகையறா நடிகர்களுக்கு இருக்கும் சாட்டர்டே பார்ட்டி அல்ல. கட்சி. கட்சி ஆரம்பிக்கும் நோய்.


நான் சூப்பர்ஸ்டார் வாரிசு என்று சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் நடுவில் ரஜினி எதற்கு என்று டைரக்டாக எம்.ஜி.ஆரின் வாரிசாக உங்களைக் காட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள். வில்லு படத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்கிற பாட்டில் டைட்டில் ஆரம்பிக்கும்போதே என்னைப் போன்ற பலருக்கும் கிலி பிடித்து ஆட்டியது. அடுத்த படத்தின் பெயரும் வேட்டைக்காரன். அதற்கடுத்து ‘உரிமைக்குரல்’ என்று உறுதிப்படுத்தாத வட்டாரங்களிலிருந்து தகவல் வருகிறது. சரி.. திடீரென்று ஏன் இந்த எம்.ஜி.ஆர் பாசம் என்றால்.. டைட்டிலில் கொடியைக் காண்பித்து கட்சி துவங்கும் ஆசையை வெளிக்காட்டி விட்டீர்கள்.


மேலும் அதை உறுதிப்படுத்துவது.. ஆனந்த விகடனில் வெளியான உங்கள் பதில். ‘நான் கட்சி துவங்க வேண்டும் என்பது என் ரசிகர்களின் விருப்பம். என் பிறந்தநாளன்று நல்ல முடிவு சொல்லுவேன்’ என்றிருக்கிறீர்கள்.

உங்களைக் கட்சி துவங்கச் சொல்லுபவன் உங்களின் உண்மையான ரசிகனாய் இருக்க முடியாது. அதை நம்பி நீங்கள் கட்சி துவங்கினால் அது எப்படி இருக்கும் என்பது கடந்த கால கட்சி துவங்கிய வரலாறுகளைப் பார்த்தாலே புரியும்.

டிகர் திலகம் சிவாஜி கணேசன் சொன்னால் தீக்குளிக்கக் கூட தயாராக இருந்த இளைஞர் கூட்டம் இருந்தது. நாம் மிகவும் மதிக்கும் இலக்கியப் பேச்சாளர் தமிழருவி மணியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவாஜி கணேசனுக்காக ஒரு நண்பரை அடித்த கதை சொல்லியிருந்தார். தி.மு.க. ஆதரவாளனான சிவாஜி கணேசன் திருப்பதி சென்று வந்தது விமர்சனத்துக்குள்ளாகவே மனக்கசப்போடு இருந்து 1961ல் காமராஜர் மீதுள்ள அன்பால் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க ஆரம்பித்தார். 1982ல் இந்திரா காந்தி அமைச்சரவையில் ராஜ்யசபா உறுப்பினராகவும் ஆனார். பிறகு 1988 பிப்ரவரியில் தமிழக முன்னேற்ற முன்னணி என்று சொந்தக் கட்சி ஆரம்பித்தார். 1989 தேர்தலில் போட்டியிட்டு எல்லா இடங்களிலும் தோற்றது அந்தக் கட்சி. சிவாஜி கணேசனே திருவையாறு தொகுதியில் தி.மு.க வேட்பாளரிடம் பத்தாயிரத்து சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தோல்விக்குப் பிறகு வி.பி.சிங்கின் அழைப்பின் பேரில் கட்சியை கலைப்பதாக அறிவித்து விட்டு தொண்டர்களை ஜனதா தளத்தில் சேரச் சொன்னார். அப்போது அவர் சொன்னது.

ட்சி ஆரம்பிக்கும் அவசியம் எனக்கிருக்கவில்லை. ஏனோ நிர்பந்திக்கப்பட்டேன். எனது கட்சியும் நானும் அடைந்த தோல்வி என் வாழ்வின் மிக சங்கடமான சூழ்நிலைகளில் ஒன்று. என்ன செய்ய? தவறான முடிவுகளை நாம் எடுக்கும்போது அதனால் வரும் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்?”

டுத்தது விஜய டி. ராஜேந்தர். பல காலமாக தி.மு.கவிற்காக உயிரைக் கொடுக்கும் தொண்டராக இருந்த இவர், 1991ல் தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்கிற கட்சியைத் துவங்கினார். துவங்கும்போது மிகுந்த பரபரப்பு ஏற்படுத்திய இவர், மீண்டும் 1996ல் தாய்க்கழகத்துடன் இணைந்து பார்க் டவுனில் போட்டியிட்டு வென்றார். அதே பார்க் டவுனில் 2001 தேர்தலில் தோற்ற இவர் 2004ல் தி.மு.கவிலிருந்து விலகி ‘அகில இந்திய லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியைத் துவங்கி தி.மு.கவிற்கு எதிரான அ.தி.மு.க கூட்டணிக்கு தனது ஆதரவை (?) அளித்தார். ‘அள்ளி அள்ளிக் குடுப்பாங்க அம்மா. கிள்ளிக்கூட குடுக்க மாட்டார் கருணாநிதி’ என்றெல்லாம் அடுக்குமொழி பேசிய இவர், 2006 தேர்தலில் அம்மா ஒரு சீட்டைக்கூட தனது கட்சிக்கு ஒதுக்காதது கண்டு ‘நான் வாழ்வதில்லை தன்மானத்தை விட்டு.. சுயமரியாதை என் சொத்து.. உதயசூரியனுக்கு ஓட்டைக் குத்து’ என்று வசனத்தையும், ஆதரவையும் ஒருசேர மாற்றினார். இன்றுவரை அனைத்துக் கட்சி கூட்டம் என்றால் மட்டுமே இவர் தலை தெரிகிறது. மற்றபடி இவர் யாரை ஆதரிக்கிறார்.. இவர் கட்சியால் மக்களுக்கு.. அட்லீஸ்ட். இவருக்கு என்ன லாபம் என்பதெல்லாம் இவரது நியூமராலஜி குருவுக்கே வெளிச்சம்.


கே. பாக்யராஜ். ‘என் வாரிசு’ என்று எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டவர் இவர். எம்.ஜி.ஆருக்காக உயிரையே கொடுக்கக்கூடிய அளவு அவர்மீது பற்று கொண்ட இவர் தனிக்கட்சி தொடங்கி, ஜெயலலிதாவை ஆதரித்து இப்போது தி.மு.கவை ஆதரிக்கிறார். இந்தப் பதிவை எழுதுவதற்காக எத்தனை தேடினாலும் இவரது கட்சியின் பெயர் கிடைக்கவில்லை.. நினைவிலும் இல்லை. இதிலிருந்தே இவர் கட்சியின் நிலையை அறியலாம். இவரும் இப்போது தி.மு.கவில்தான் ஐக்கியமாகி பிரச்சாரம் செய்தி கொண்டிருக்கிறார்.


இப்போது ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார் சாதித்தது என்ன? எல்லா இடங்களிலும் ஓட்டைப் பிரிக்கும் வேலையின்றி வேறு என்ன சாதிக்க முடிந்தது அவர்களால்? அதுவும் விஜயகாந்த் அந்த வேலையையாவது செய்கிறார் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். சரத்குமார் நிலை படு பரிதாபம். உங்களைப் போன்ற நடிகர்கள் அல்லாது கொங்கு முன்னேற்றப் பேரவை போல சாதிக்காரர்களும் கட்சி ஆரம்பித்து மக்களையும் நாட்டையும் குழப்புவதும், தங்கள் சுயலாபத்தைப் பெருக்குவதும்தான் நடந்துகொண்டிருக்கிறது. இவர்கள் மாதிரியானவர்கள் 2001ல் நான், 2016ல் நான், 2021ல் நான், 2025ல்நான் என்று ஆளாளுக்கு முதல்வர் பதவியை ரிசர்வ் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


இதையெல்லாம் சொல்ல நீ யார் என்று கேட்காதீர்கள். எனக்கும், என் மகள்களுக்கும், மனைவிக்கும் உங்கள் வேகம் பிடிக்கும். உங்கள் ரசிகர்கள்தான் நாங்கள். அந்த வேலையை நீங்கள் ஒழுங்காய் செய்தாலே போதும். என்னைப் போன்ற மக்களுக்கு இனி ஒரு புதிய கட்சி தேவையே இல்லை. அப்படி அரசியல் பாதைதான் வேண்டும் என்றால் ஜே.கே.ரித்தீஷ் போல பிரபலமான கட்சி ஒன்றில் இணைந்து கொள்ளுங்கள். எம்.ஜி.ஆரில் தொடங்கி பலரும் தி.மு.க/அ.தி.மு.க போன்ற ஆலமரத்தின் விழுதுகளாகத்தான் தங்கள் அரசியல் வாழ்வை ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி ஒரு கட்சியில் சேர்ந்து தொண்டனாக உழைத்து கஷடமெல்லாம் பட்டு பின்னாளில் ஏதேனும் பதவி கிடைத்தால் அதைத் தந்த மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்து...

இதெல்லாம் முடியுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்...

அதை விடுத்து தனிக்கட்சி கனவெல்லாம் காணாதீர்கள். ப்ளீஸ்.

நடிப்பு உங்கள் தொழில். நடியுங்கள். கமலஹாசனிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். திரைத்துறையிலேயே முழுமூச்சாய் இருங்கள். மனத்ருப்திகாக சேவை செய்ய கட்சியெல்லாம் அவசியமே இல்லை. ஆனானப்பட்ட ரஜினிகாந்தே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் களம் அது. அவரை ஆரம்பியுங்கள் என்று தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு கட்சி ஆரம்பிக்காமல் மறைமுகமாக அவர் நல்லது செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தவர்கள் அறிவார்கள். அறிவுள்ளவர்கள் உணர்வார்கள்.

எங்களுக்குத் தேவை கட்சியல்ல. உங்களால் முடிந்த நல்லது ஏதாவதை செய்து கொண்டே இருங்கள். அதுபோதும் எந்த பிரபல்யமுமின்றி இருக்கும் பலரும் பல சேவைகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு எந்த கட்சி பின்புலமோ, தலைவனாகத்தான் இருக்கவேண்டும் என்ற நிர்பந்தமோ இல்லை.

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகரிடம் காட்டுங்கள். ஏதாவது பலனிருக்கிறதா என்று பார்ப்போம்!

அளவில்லா அன்போடு
உங்கள் குத்துப்பாட்டுக்கு ஆட்டம்போடும்
சாதாரண ரசிகன்..

63 comments:

மேவி... said...

விஜய் நடித்த படத்தையே சில நேரம் பார்க்க முடியாது ...

இதில கட்சி வேறு .....
கிழிந்தது லம்பாடி லுங்கி....

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அவருக்கு இருக்கும் மாஸ் அப்பீல் யை நம்பியே வருகிறார்........

மேலும் சில ஓசி கைகளின் பேச்சை நம்பி சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ள போகிறார் என்று சொல்ல தோன்கிறது (அனா சொல்லல நோட் பண்ணிகோங்க)

Cable சங்கர் said...

ஒரு மூணு நாள் ஊர்ல இல்லைன்னா இப்படி பட்ட அதிர்ச்சி செய்தியெல்லாம் நடக்குது..:(:( முடியலை..

ஆ.சுதா said...

ஆனந்த விகடனில் வெளியான உங்கள் பதில். ‘நான் கட்சி துவங்க வேண்டும் என்பது என் ரசிகர்களின் விருப்பம். என் பிறந்தநாளன்று நல்ல முடிவு சொல்லுவேன்’ என்றிருக்கிறீர்கள்./

இந்த செய்தியை நானும் படித்தேன்.
உடனே நண்பர்களிடம் சொன்னேன் அடுத்ததா ஒரு விட்டடில் பூச்சி கிளம்பிடுச்சுன்னு. பாவம் அவரு என்ன நடக்க போவுதோ..!!

உங்கள் கடிதம் உரியவரிடம் கிடைத்து நல்லது நடக்க பிரியப் படுகிறேன்.

ALIF AHAMED said...

நடிப்பு உங்கள் தொழில். நடியுங்கள்.
//


இந்த வரி இப்படி இருக்க வேண்டும்

நடிப்பு உங்கள் தொழில்.முதலில் நடியுங்கள்...!!!


நன்றாக நடிப்பவர்கள் அரசியலில் சாதிக்க முடியும்...!!!

எ.கா : சமிபத்திய ஈழ நடிப்புகள் !!

தராசு said...

"குருவி" பறந்து காணாம போயாச்சு தல,

இனி "வில்லு" வந்தா என்ன, அத "வேட்டைக்காரன்" எடுத்துட்டு வந்தா என்ன?


சரி, சரி, ஒரு ரசிகனோட ஆதங்கம்னு நெனச்சு மனச‌ தேத்திக்கறோம்.

Bruno said...

விரிவான அலசல் பரிசல்

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற நடிகர்களை விட்டு விட்டது ஏன் என்று தெரியவில்லை :) :)

ரொனால்ட் ரீகன் என்று அமெரிக்காவில் ஒரு நடிகர் இருந்தார் தெரியுமா ??? :) :) :)

Bruno said...

Cowboy from Brooklynமற்றும்

Kings Rowஆகிய படங்களில் நடித்த ரீகனைத்தான் கூறுகிறேன்

கார்க்கிபவா said...

நச் சகா... ஏன் இந்த அவசரம்னு கேட்க மாட்டேன்.. இது தேவையே இல்லை.. என்னிடம் ‘துக்க’ விசாரித்த பலருக்கும் நான் சொன்ன பதில் திரையில் மட்டுமே நான் விஜயின் ரசிகன்..

அப்பா பேச்சைக் கேட்டு ஆரம்பிக்கட்டும்.. பலத்த அடி வாங்கி பின் வேண்டாமென மீண்டும் திரைத்துறையே கதி என வருவார்.. அதுதான் எனக்கும் வேண்டும்..

/ MayVee said...
விஜய் நடித்த படத்தையே சில நேரம் பார்க்க முடியாது//

யாராவ்து ஒரு நடிகர் பெயர் சொல்லுங்கள். அவர் நடித்த எல்லாப் படங்களும் பார்க்க முடியுமென...

// தராசு said...
"குருவி" பறந்து காணாம போயாச்சு தல//

குருவி ஃப்ளாப் தான் டவுட்டே இல்ல.. ஆனால் அதன் வசூல் பற்றி தெரியுமா? அது ஒரு லாபகரமன படம்..அதுதான் விஜய்.. நல்லப் படம் என்றால் நான் நடித்தால் கூட (த்தோடா) ஓடும்.. எப்படி இருந்தாலும் வசூலை குவிக்க விஜய் வேண்டும்.

Raju said...

அருமையா எழுதி இருக்கீங்க! எல்லாம் அரசியலில் சேர்ந்து கல்லாக்கட்ட தான்?

கண்ணா.. said...

விடுங்க பாஸ்..

அவனுகளே சொந்த செலவுல சூனியம் வைக்கணும்னு பாக்குறாங்க....

வைச்சுக்கட்டும்....

Suresh said...

அவங்க அப்பா ஒருத்தரே போதும்... விடுங்க பாஸ்

joe vimal said...

கார்க்கி சொன்னது முற்றிலும் உண்மை நமக்கு எது வருமோ அதை தான் செய்ய வேண்டும் தந்தை பேச்சை கேட்டு விஜய் தவறான முடிவு எடுக்க கூடாது .


விஜய் கட்சி ஆரமிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அவரது உண்மையான ரசிகனாக இருக்க முடியாது .

நர்சிம் said...

நல்ல ஆய்வு பரிசல். எனக்கென்னமோ இவரும் ரஜினி வழியைத் தான் பின்பற்றுவார் என்று தோன்றுகிறது.

எம்.எம்.அப்துல்லா said...

//இவரது கட்சியின் பெயர் கிடைக்கவில்லை.. நினைவிலும் இல்லை. //

MGR MAKKAL MUNNETRA KALAGAM

தராசு said...

//குருவி ஃப்ளாப் தான் டவுட்டே இல்ல.. ஆனால் அதன் வசூல் பற்றி தெரியுமா? அது ஒரு லாபகரமன படம்..அதுதான் விஜய்.. நல்லப் படம் என்றால் நான் நடித்தால் கூட (த்தோடா) ஓடும்.. எப்படி இருந்தாலும் வசூலை குவிக்க விஜய் வேண்டும்//

ஏங்க, யாருங்க அது, இப்ப‌டி உத்து உத்து பாக்குற‌து.

சித்த‌ க‌ண்ண‌ மூடுங்க‌, மீசையை தொட‌ச்சுகிட்டிருக்க‌ம்ல‌, ம‌ண்ணு பூரா தொட‌ச்ச‌துக்க‌ப்புற‌ம் க‌ண்ணுதொற‌க்க‌ணும், ச‌ரியா.

தீப்பெட்டி said...

கவலைய விடுங்க பாஸ்..

நாம இப்படி பதிவு போட்டு பேசுற அளவுக்கு ஒண்ணும் நடந்துறல..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எம்ஜியாரை வெறும் நடிகராக மட்டும் பார்ப்பதை விடுத்து, ஆளுங்கட்சியிலிருந்து பிரிந்து சென்று (அல்லது நீக்கப் பட்டு) தனிக் கட்சி ஆரம்பித்த கட்சியின் பொருளாளராகவும் பார்க்கவேண்டும்.
அதே போல் ஆளுங்கட்சியின் முக்கிய பிரச்சார பீரங்கி அவர் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
எண்டியாரின் பிரச்சனை முற்றிலும் வேறு. அப்போதைய காங்கிரஸ் முதல்வர் கட்சித் தலைமைக்காக விமான நிலையத்தில் காத்திருக்க, அவரைச் சந்திக்காமல் கட்சித் தலைமை உதாசீனப் படுத்தியது. என்வே அன்று மக்களின் ஆதாரவு பெற்றிருந்த முண்ணனி நடிகரான அவர் ஒட்டு மொத்த தெலுங்கு மக்களின் கௌரவப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு கட்சி ஆரம்பித்து தேர்தலைச் சந்தித்தார். அவரது முக்கிய கோஷத்தை எதிர்க்க வழிவகை இல்லாமல் காங்கிரஸ் அந்தத் தேர்தலில் தோற்றது.


ரீகன் நிலவரம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர் நடித்த காலகட்டமும் ஆட்சியில் அமர்ந்த கால கட்டமும் வேறு.


ஆனால் கட்சி ஆரம்பிக்கவும், மக்கள் சேவை செய்யவும் எல்லோரும் உரிமை உண்டு என்பதே என் கருத்து. நடிகர் என்பதோ ஒரு தலைவரின் மகன் என்ற காரணத்தாலோ ஒருவரை நிராகரிப்பது தவறு என்றே நினைக்கிறேன். இது தொடர்பாக விரிவாக ஒரு இடுகை போடும் எண்ணமும் இருக்கிறது.

லோகு said...

உள்ளேன் அய்யா மட்டும்..

கருத்து எதுவும் போட தைரியம் இல்லை..

தீப்பெட்டி said...

//கட்சி ஆரம்பிக்கவும், மக்கள் சேவை செய்யவும் எல்லோரும் உரிமை உண்டு என்பதே என் கருத்து. நடிகர் என்பதோ ஒரு தலைவரின் மகன் என்ற காரணத்தாலோ ஒருவரை நிராகரிப்பது தவறு என்றே நினைக்கிறேன்//

இது வாஸ்தவமான பேச்சு..

அவர் படத்த பாத்து ரசிச்சோம்..
இனிமே அவர் அரசியல பாத்து சிரிப்போம்..
நல்லது பண்ணினா வரவேற்ப்போம்..
இல்லாட்டி எதிர் தரப்புக்கு ஓட்டு போடுவோம்..

அரசியலுக்கு வந்து அவர் அவமானபடக்கூடாதுனு ஒரு ரசிகரா நீங்க கவலப்படுறீங்க.. நானும் தான்..

ஆனா

அரசியலே அவமானமுனு நான் நினைக்கல..

Bleachingpowder said...

கார்க்கி MLA ஆகுறதுல உங்களுக்கு என்ன சார் காண்டு?

அப்பாடா இன்னைக்கு வேலை முடிஞ்சது

மங்களூர் சிவா said...

இந்த பதிவு எழுதி நேரத்தை வீணடித்ததற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் பரிசல்

பரிசல்காரன் said...

நன்றி மே வீ, கேபிள் சங்கர், ஆ.முத்துராமலிங்கம், மின்னுது மின்னல்

பரிசல்காரன் said...

@ தராசு

நேரடித் தாக்குதல்கள் எதுக்கு தல?

@ புரூனோ

டாக்டர் சார்.. தனிக்கட்சி ஆரம்பிச்சு தோத்தவங்களப் பத்தி மட்டும் சொல்லலாமேன்னுதான் சார்..

வெளிநாட்டு அரசியலா? உள்நாட்டு அரசியலே அவ்வளவா தெரியாது ஜி நமக்கு!

@ கார்க்கி - நன்றீ சகா. தேவையில்லதான். இன்னைக்கு எழுத வேற மேட்டர் சிக்கல!

@ Raju, Kanna, Suresh, Joe!

Thanks Dude!

@ நர்சிம், அப்துல்லா, தீப்பெட்டி, சுரேஷ், லோகு, ப்ளீச்சிங், சிவா

நன்றி.

நடிகர் கட்சி ஆரம்பிக்கக்கூடாது என்று சொல்லவில்லை. சொல்லவும் எனக்கு உரிமையில்லை,

தேவையில்லையே என்றுதான் கேட்கிறேன்!

தராசு said...

//நேரடித் தாக்குதல்கள் எதுக்கு தல?//

அய்யய்யோ, இது தாக்குதல் இல்ல. எல்லாம் அந்த மகிழுந்து சாவிய வம்புக்கிழுக்கத்தான். தப்பா நெனைக்காதீங்கண்ணோவ்.

Venkatesh Kumaravel said...

அகில உலக சூப்பர் ஸ்டாருக்கே டவுசர் தான்.. இப்போ அன்புத் தளபதி வேறயா? விடுங்க தல.. நமக்கும் கொஞ்சம் எண்டர்டெய்ன்மெண்ட் வேணாமா?

Joe said...

//
நடிப்பு உங்கள் தொழில். நடியுங்கள். கமலஹாசனிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
//
அதெல்லாம் செய்ய முயற்சித்தால் நல்லது தான். எனக்கென்னவோ அந்த மாதிரியெல்லாம் விஜய் செய்யமாட்டார் என்றே தோன்றுகிறது.

மாஸ் ஹீரோக்களுக்கு "நீ நடந்து வந்தாலே போதும் தலைவா" என்கிற கூட்டம் இருக்கும் வரை, அவர்கள் கொஞ்சமாவது நடிக்க முயல்வது சிரமம்.

P.K.K.BABU said...

MAPPU ILLANNA PITHAM OVER- AA POANAAL INDHA MADHIRI PAGAL KANAVU VANDHU POZHAPPA KEDUTHUTTUDHAN ADUTHA VAELAIYA PAKKUM. VIDHI VALIYADHU...

ரவி said...

இது மிகப்பெரிய வன்முறை.

நடிப்புதான் உன் தொழில், நடி. என்று சொல்வது உங்களது விருப்பத்தை அவர் மீது திணிப்பதற்கு சமமானது.

விஜயகாந்த் அரசியலில் குதித்தபோது ஏன் பதிவு எழுதவில்லை ? அவர் இன்றைக்கு மிகப்பெரிய சக்தியாக வளரவில்லையா ? அவரது கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக இல்லையா ?

எம்ஜியார் போல எதாவது ஒரு திராவிட கட்சியில் சேர், அதன் பிறகு பெரியாள் ஆகு என்பதும் மிக கொடூரமானது. அவ்வளவு காலம் காத்திருக்கவேண்டும், எம்ஜியாருக்கு அமைந்த சூழல் அமையவேண்டும், என்று எவ்வளவு உள்ளது ?

ஜே.கே ரித்திஷோடு இளைய தளபதியை ஒப்பிடது எல்லாவற்றையும் விட மிகப்பெரிய வன்முறை. வாழை மரத்தில் தூக்கில் தொங்கலாம் போல உள்ளது.

...........

யோவ் பரிசல்...புதுசா எவனாவது கம்பெனி ஆரம்பிச்சா அதில் சேர்ந்து அஞ்சு பத்து பார்க்கலாம், எதாவது கட்டப்பஞ்சாயத்துக்கு போனால் கோட்டரும் கோழி பிரியானியும் கிடைக்கும், விஜய் கட்சி பெயரை சொல்லி எதாவது நெடுஞ்சாலை பொறம்போக்கில் டீக்கடை வைக்கலாம் என்று கனவில் இருக்கும் பல இளைஞர்களின் கனவில் மண் அள்ளி போடாதீரும்...

உமக்கு பொழப்பு இருக்கிறது, மாசமானால் சம்பளம் வாங்குகிறீர்...

வெட்டிப்பயல்களுக்கும் வெறும்பயல்களுக்கும் என்னதான் விடிவு ?

விஜய் அரசியல் கட்சியை வாழ்த்துவோம், வரவேற்போம்..

கொஞ்சம் கருப்பு பணம் வெளிய வரட்டுமே மக்கா..

பரிசல்காரன் said...

@ தராசு

நானும் ச்சும்மாத்தான் சொன்னேனாக்கும்!

@ வெங்கிராஜா & ஜோ

நன்றி!

@ செந்தழல் ரவி

யப்பா... ரொம்ப பயத்தோடதான் படிச்சேன் உங்க பின்னூட்டத்த!

கடைசி வரி சிந்திக்கவைக்குது!

சாணக்கியன் said...

பரிசல், நீஙக செம காமெடிங்க. இந்த மாதிரி புத்திசாலித்தனமான அறிவுரை எல்லாம் விஜய்க்கோ அவரோட ரசிகர்களுக்கோ புரியாது ஓய்... என்னோட இந்தப் படிவ படிச்சுப் பாருங்க நேரம் கிடைக்கும்போது... http://vurathasindanai.blogspot.com/2009/05/blog-post_21.html

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

கலையரசன் said...

ஹலோ பாஸ்....
கார்திக்கை விட்டுட்டீங்க?
கோவிச்சிக்கிட்டு படம் ஏதாவது
நடிச்சிடப்போறாரு...

இருந்தாலும் பாஸ்..
ஆசீத்து ரசிகருங்க (?)
அதிகமா இருக்குற இடத்துல
(வளைபதிவுகளில் மட்டுந்தான்)
இந்த பதிவிட தில் வேனும் மாமே!

ஷாஜி said...

karkki said...
என்னிடம் ‘துக்க’ விசாரித்த பலருக்கும் நான் சொன்ன பதில் திரையில் மட்டுமே நான் விஜயின் ரசிகன்..//

விஜயோட கோ.ப.செ சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன...

அவர் கட்சி ஆரம்பிச்சா உருப்படமாடுருனு அவரோட அதி தீவிர (திரைப்பட) ரசிகர் சொல்லிட்டாரு...

கட்டுரைக்கு நன்றி தல ....

இப்படிக்கு..
விஜயோட ஆட்டத்தை மட்டும் விரும்பும் 'தல' ரசிகன்.

Jeeva said...

கார்த்திக்கின் கட்சி வெற்றிநடை போடுவதை பற்றி எதுவுமே குறிப்பிடாதது ஏன் ?????

Kannan said...

பாவம் விஜய்.!?

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை தெரியும்னு நினைக்கிறன், ஹீரோ 'ZERO' ஆகாமல் இருந்தால் சரி.

கடைக்குட்டி said...

//
புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகரிடம் காட்டுங்கள். ஏதாவது பலனிருக்கிறதா என்று பார்ப்போம்!
//

செம நக்கல்ங்க உங்களுக்கு :-)

சகாதேவன் said...

டியர் விஜய்,

சினிமாவில் உங்களுக்கு வசனம் எழுதி தருவார்கள். நீங்கள் பேசலாம். பொன்னம்பலம் உங்களிடம் அடி வாங்கவே எல்லா படத்திலும் வருவார். எதிர் கட்சிக்காரரை நீங்கள் அப்படி செய்ய முடியுமா? அப்பா டைரக்டர். அவர் உங்களை என்னென்ன செய்யணும் என்று சொல்வார். அரசியலில் இதெல்லாம் முடியுமா? யோசியுங்கள்
சகாதேவன்

Rajes kannan said...

////// MayVee said...
விஜய் நடித்த படத்தையே சில நேரம் பார்க்க முடியாது//

யாராவ்து ஒரு நடிகர் பெயர் சொல்லுங்கள். அவர் நடித்த எல்லாப் படங்களும் பார்க்க முடியுமென...

// தராசு said...
"குருவி" பறந்து காணாம போயாச்சு தல//

குருவி ஃப்ளாப் தான் டவுட்டே இல்ல.. ஆனால் அதன் வசூல் பற்றி தெரியுமா? அது ஒரு லாபகரமன படம்..அதுதான் விஜய்.. நல்லப் படம் என்றால் நான் நடித்தால் கூட (த்தோடா) ஓடும்.. எப்படி இருந்தாலும் வசூலை குவிக்க விஜய் வேண்டும்.//////

ச்சே! என்ன நடந்தாலும், நாங்கல்லாம்... அப்படின்னு மீசைய தடவிட்டு போக இது மாதுரி ஆளுக இருக்க வரைக்கும் வில்லு விஜய் கட்சி தொடங்கலாம்.
நடிப்பு தான் வரலை, அரசியல் வருதானு பாப்போம்.

rkwinner said...

விஜய் என்பவரை ஒரு நடிகர் என்று முழுமையாக ஒத்துக் கொள்ள மனம் வரவில்லை. அவர் நன்றாக ஆடுகிறார் (குத்துப் பாட்டுகளில் மட்டும் - நாக்கை துறுத்திக் கொண்டு). நன்றாக ஃபைட் பண்ணுகிறார். ஆனால் நடிப்பு என்பதெல்லாம் சோ சோ ரகம் தான். இதில கட்சி புட்சி னெல்லாம் ஆரம்பிச்சா ஏற்கனவே இருக்கற அவரோட ரசிகர்கள் ஆரம்பத்தில் மகிழ்ந்தாலும் பின்னாலே ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க. அவரும் தான். ஜோசிய மொழியில் சொன்னா 'வில்லு ராசிக்காரரான விஜய் பொதுவாக தன் தந்தையின் அதீத யோசனைகளையும் நாக்கைத் துறுத்திக் கொண்டு எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரி ஆடி, நடிப்பதையும் தவிர்ப்பது மிக நல்லது. இல்லன்னா 'ஆடாதடா ஆடாதடா மன்னிதாஆஆ' னு பாடிக்கிட்டே அவர் ரோந்து போயிடுவாரு. டெபாஸிட்டை யாரு தர்றது?

கார்க்கிபவா said...

/ச்சே! என்ன நடந்தாலும், நாங்கல்லாம்... அப்படின்னு மீசைய தடவிட்டு போக இது மாதுரி ஆளுக இருக்க வரைக்கும் வில்லு விஜய் கட்சி தொடங்கலாம்.
நடிப்பு தான் வரலை, அரசியல் வருதானு பாப்போம்//

ஹிஹிஹி.. ஹாஹாஹா... கிகிகிகி.. அய்யோ சிரிச்சி சிரிச்சு வயிறு வலிக்குது.. ஹய்யா... ஆஅ.. கிகிகிகிகி...

அத்திரி said...

அவர் ஒழுங்கா படத்துல நடிச்சாலே போதும்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thamira said...
This comment has been removed by the author.
Thamira said...

தல' ரசிகர்களிடமிருந்து பொட்டி வாங்கிவிட்டு பட்திவு எழுதிய பரிசலை வன்மையாக கண்டிக்கிறேன். என்ன நினைத்துக்கொண்டீர்கள் எங்கள் தளபதியை.!

எப்படியும் 2011ல் முதல்வராக்கியே தீருவோம். தளபதியே தயங்காதே.. இது போன்ற சலசலப்புகள் நமக்கு கால்தூசு..

(ஒரு நல்லகாரியம் நடந்தா பொறுக்காதா பரிசல் உங்களுக்கு.! அப்படியே அஜித்தையும், விஷாலையும் யாராவது கட்சி ஆரம்பிக்கச்சொல்லுங்க பிளீஸ்.! பின்ன எப்படித்தான் தமிழ் சினிமாவை காப்பாத்துறது?)

அன்பரசு said...

டாக்டர் தம்பிக்கு இன்னும் மப்பு தெளியலியா...? நாங்க அதையெல்லாம் (டேய்....சைலன்ஸ்...) இன்னும் மறக்கலீங்ணா.... (அப்புறம் சங்கவிதான் உங்க கட்சியோட கொ.ப.செ. ங்களா?) போங்கண்ணா...உங்களுக்கு ரொம்பக் குறும்புங்ணா...

ஜானி வாக்கர் said...

விஜய் அரசியலுக்கு போய் நாட்டு மக்களுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ( நடிக்காமா அரசியலுக்கு போறது) எவ்ளோ பெரிய சேவை செய்ய விருப்ப படுராரு, நீங்க அவங்க அப்பாவுக்கு கடிதம் போட்டு காரியத்தகெடுக்க பக்காறீங்க. ஏன்இந்த கெட்ட எண்ணம் உங்களுக்கு. உங்கள் கடிதத்தின் மூலம் விஜய் அவர் முடிவை மாற்றினால் நீங்கள் தான் முழு பொறுப்பு. தமிழ் கூறும் நல்லுலகம் தங்களை மன்னிகாது.

கோபிநாத் said...

ரொம்ப யோசிச்சிட்டேன் தல...யாரும் சொல்லாத மாதிரி பின்னூட்டம் போட தெரியல..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ

சுரேகா.. said...

Super..
Super...
Superrrrrrrrrr....

Sanjai Gandhi said...

மாமா உங்களுக்கு விஜய் மேல இம்புட்டு பாசமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :((

//இப்போது ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார் சாதித்தது என்ன? எல்லா இடங்களிலும் ஓட்டைப் பிரிக்கும் வேலையின்றி வேறு என்ன சாதிக்க முடிந்தது அவர்களால்?//

என்னா மாமா இது? எதோ ஜட்டிக் கொள்ளைக்காரங்க ரேஞ்சிக்கு ஆக்கிபோட்டிங்க..? :))

Sanjai Gandhi said...

//நடிப்பு உங்கள் தொழில்.முதலில் நடியுங்கள்...!!!


நன்றாக நடிப்பவர்கள் அரசியலில் சாதிக்க முடியும்...!!!

எ.கா : சமிபத்திய ஈழ நடிப்புகள் !!//

போட்டாரே ஒரு வெடிகுண்டு.. ;))

Sanjai Gandhi said...

//கொஞ்சம் கருப்பு பணம் வெளிய வரட்டுமே மக்கா..//


இதுக்கு எதுக்கு கட்சி ஆரம்பிக்கனும்? கம்பம் தொகுதி இடைத்தேர்தல்ல நிக்க சொல்லுங்க. அண்ணன் அஞ்சா நெஞ்சனுக்கு போட்டியா செலவு பண்ணாலே போதும். :)

"உழவன்" "Uzhavan" said...

தலைவரே.. அப்படியெல்லாம் இல்லை.. மானங்கெட்ட நம்ம தமிழ்நாட்டுல விஜய் கூட சிஎம் ஆனாலும் ஆகலாம். அரசியல்வாதிகள்ட எந்த கொள்கையுமே இல்லைனு சொல்லுறோம்.. நாம ஓட்டுபோட ஏதாவது கொள்கை வச்சிருக்கமா??? 500 குடுத்தா இவனுக்கு; 1000 குடுத்தா அவனுக்கு. இல்லை நம்ம ஜாதிக்காரன் கட்சி ஆரம்பிச்சா அவனுக்கு. இன்னிக்கு அழகிரி கேபினட் மந்திரியா பதவி ஏற்கப்போறாரு.. இப்படி இருக்கும்போது விஜய்யும் சிஎம் ஆனாலும் ஆகலாம். சத்தியமா நான் விஜய் ரசிகன் இல்லைங்க. அவரு படத்த தியேட்டர்ல போயி பாக்குற ஆளும் இல்ல

"உழவன்" "Uzhavan" said...

தலைவரே.. அப்படியெல்லாம் இல்லை.. மானங்கெட்ட நம்ம தமிழ்நாட்டுல விஜய் கூட சிஎம் ஆனாலும் ஆகலாம். அரசியல்வாதிகள்ட எந்த கொள்கையுமே இல்லைனு சொல்லுறோம்.. நாம ஓட்டுபோட ஏதாவது கொள்கை வச்சிருக்கமா??? 500 குடுத்தா இவனுக்கு; 1000 குடுத்தா அவனுக்கு. இல்லை நம்ம ஜாதிக்காரன் கட்சி ஆரம்பிச்சா அவனுக்கு. இன்னிக்கு அழகிரி கேபினட் மந்திரியா பதவி ஏற்கப்போறாரு.. இப்படி இருக்கும்போது விஜய்யும் சிஎம் ஆனாலும் ஆகலாம். சத்தியமா நான் விஜய் ரசிகன் இல்லைங்க. அவரு படத்த தியேட்டர்ல போயி பாக்குற ஆளும் இல்ல

சித்து said...

/*உள்ளேன் அய்யா மட்டும்..

கருத்து எதுவும் போட தைரியம் இல்லை..*/

லோகுவின் இந்த கருத்தை வலி மொழிகிறேன்.

selventhiran said...

அந்த வேலையை நீங்கள் ஒழுங்காய் செய்தாலே போதும்.
என்னைப் போன்ற மக்களுக்கு இனி ஒரு புதிய கட்சி தேவையே இல்லை. அப்படி அரசியல் பாதைதான் வேண்டும் என்றால் ஜே.கே.ரித்தீஷ் போல பிரபலமான கட்சி ஒன்றில் இணைந்து கொள்ளுங்கள்.
அதை விடுத்து தனிக்கட்சி கனவெல்லாம் காணாதீர்கள். ப்ளீஸ்.
நடிப்பு உங்கள் தொழில். நடியுங்கள்.
கமலஹாசனிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
திரைத்துறையிலேயே முழுமூச்சாய் இருங்கள்.
மனத்ருப்திகாக சேவை செய்ய கட்சியெல்லாம் அவசியமே இல்லை.
எங்களுக்குத் தேவை கட்சியல்ல. உங்களால் முடிந்த நல்லது ஏதாவதை செய்து கொண்டே இருங்கள். அதுபோதும்
புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகரிடம் காட்டுங்கள். ஏதாவது பலனிருக்கிறதா என்று பார்ப்போம்!

அச்சச்சோ பரிசல்! என்னாச்சி உங்களுக்கு... நீங்க எழுதியதுதானா...?!

விக்னேஷ்வரி said...

நல்ல பதிவு பரிசல்.

Unknown said...

சொன்ன எங்கங்க கேக்குறாங்க..??

இப்போ பாருங்க நீங்க சொல்லிட்டிங்க..(சும்மா விளையாட்டுக்கு..)

இப்போ நாட்டுக்கு நல்ல அரசியல்வாதி தேவைதான்..
ஆனால், அரசியல் கட்சி அல்ல என்பது என் கருத்து கூட..
இதுக்குமேல மக்களை ஆண்டவன் தான் காப்பத்தனும்..

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

mathi - india said...

நீங்கள் ஏதோ சதி போல தெரிகிறது ,

எங்க விஜய் முதலமைச்சர் ஆகிறதுல உங்களுக்கு என்ன வோய் காண்டு ?

தமிழ் சினிமாவுக்கு விடிவுகாலம் பிறக்க விடமாட்டீங்க போல

vijayfans said...

பரிசோதித்து எழுதும் பரிசில்காரன் அவர்களே!

நாங்கள் ஈழத்தில் பிறந்து புலத்தில் வாழும் ஈழத்தமிழர்கள்.

நாங்கள் உங்கள் வழைப்பூவின் ஆதங்க ரசிகர்கள், ஆனால் உங்கள் வழைப்புவில் சமிபத்தில் வெளியான "நடிகர் விஜய்க்கு...." என்ற உங்கள் ஆதங்க கட்டுரையை,எழுதியிருந்திர்கள்.
எமது சுயனிர்னய உரிமைகளுக்காக இறுதி வரை உறுதியுடன் போராடிய எமது போராளிகள் நொந்து ஓய்ந்திருக்கும்
இந்த தருனத்தில்.

உங்களின் வழைப்பூவினை வாசிக்க நேரம் கிடைத்தது.

இந்தியா திரைப்பட நடிகர்களில், ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்து இருப்பவர் இந்தியத்தமிழன் இளையத்தளபதி விஜய் மட்டும்தான்.
உங்களின் விஜய் பற்றிய கருத்துக்களை நாம் வாசித்து பார்த்தவுடன் எமக்கு உங்கள் பரிசுத்தன்மைமீது கோபாம் வருகிறது.

இன்று ஈழத்தமிழர்கள் இவ்வாறு அடிமைகளாக இருக்க காரனம் இந்தியாவின் அரசியல்வாதிகளே!
அரசியல் வாதிகள் என்று குறிப்பிட்டது. தமிழக அரசியல்வாதிகளும் இந்திய மத்திய அரசையும்.
ஆனால் தமிழக மக்களை அல்ல. ஈழத்தில் தமிழர்களை சர்வதேச நாடுகள் கைவிட்ட பின்பும் அங்கு இருக்கும் தமிழர்கள் இறுதி வரை நம்பியிருந்தது, தமிழக மக்களையும் அரசியல் வாதிகளயும்.

சரி ஓகே உங்களின் கருத்துக்கு வருகிறேன்.

இன்று சினிமாவில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார் விஜய் அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என்று எழுதியிருந்தீர்கள்.

இப்பொழுது எல்லோரையும் அதிர வைக்கும் தமிழக சேய்திமட்டுமல்ல உலக செய்தி என்னவென்றால் விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதுதான்.
விஜய் அரசியலுக்கு வருவாரோ, இல்லையோ அரசியலில்தான் இருக்கிறார் எனலாம்.

தனது சினிமாத்துறையிலிருந்து மக்களுக்கு நற்பனிகள் பல, ஈழத்தமிழர்களுக்கு உண்ணாவிரதம் என்று அரசியல் வாதிகள் செய்யாத உரிமகளை கையில் எடுத்து விஜய் செய்து வருகிறார்.
அவ்வாறான இளஞர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை.

விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது
நல்ல நடிப்பைமட்டுமில்லை நற்பணிகளையும் இன்று அரசியல் வாதிகல்கூட செய்யாத மிகபெரும் வரலாறுகளையும் நற்பணிகளையும் செய்து வருகிறார் விஜய் என்றால் மிகையாகது.

சமிபத்தில் விஜய் செய்த மாபெரும் வரலாறு ஈழ்த்தமிழர்களை நிம்மதியடைய வைத்தது.
விஜய் 16/11/2008 அன்று ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தார் எந்த ஒரு அரசியல் வாதிகலும் ந்aடிகர்களும் செய்யாத தியாக உணர்வுகள் தமிழ் சினிமாவில் இருக்கும் விஜய் மற்றூம் குரல் கொடுக்கும் நடிகர்களை தவிர சில நடிகர்களுக்கும் இல்லையே...
அந்த பெரும் தமிழின தியாகிகளை நீங்கள் எவ்வாறு குறை கூறமுடியும்???

விஜய டி. ராஜேந்தர். கே. பாக்யராஜ். சிவாஜி கணேசன் வந்தாரு அவர்களால் அரசியலூக்கு வந்து சாதிக்க முடியாத ஒன்றையா விஜய் சாதிக்போகிறார் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.
அவர்கள் இருந்த காலம் வேறு, இன்று வேறு, இன்று குடிமக்களால் தேடுவது நல்ல ஒரு அரசியல்வாதிகளை.
அரசியலுக்கு தேவை நளைய உலக்கத்தை கட்டி எழுப்பவேன்டிய நல்ல இளஞ்ர்கள் தேவை.

தயவு செய்து யாரaiயும் குற்றம் சொல்லவதை இனிமேலாவது விடுங்கள்.

ஒருவன் தோல்வியை சந்திக்கும் போது அதனை பொருட்படுத்தாமல் ஊககப்படுத்தி பலப்படுத்தும் வழைப்பூக்களே இவ்வாறு என்றால்???

ஒருவன் வெற்றியடையும் போது அவனுக்கு பின்னால் ஆயிரம் பேர் முகம் தெரியாமல் இருக்கிறார்கள் என்றால் அவன் தோல்வியடையும் போது அவனுக்கு பின்னால் இரண்டாயிரம் பேர் இருக்கிறர்கள் என்பது உன்மை.

இந்த விமர்சனம் உங்களுக்கான எதிர் கருத்தல்ல, எங்களை பொறுக்க முடியாமல் விமர்சித்த எதிர் விமர்சனம்.

உங்களை நாம் பாதித்திருந்தால் மண்ணிக்குமாறு கேட்க்க உரிமை இருந்தால் மண்ணிக்கவும்.

நளைய உலகத்தை கட்டியெலுப்பவேண்டியவர்கள் நீங்களே
ஆகவே பலி சுமத்துவதை விடுத்து வழி சொல்லுங்கள்.


இப்படிக்கு
ஈழத்தில் பிறந்து புலத்தில் வாழும்
இளையதளபதி விஜய் ரசிகர்கள்
www.superstarvijay.blogspot.com

நன்றி

வால்பையன் said...

வருங்கால முதல்வரை இப்படி டிஸ்கரேஜ் பண்றது ந்ல்லாயில்ல!

Unknown said...

@ kanojan

உங்களுக்கு விஜய் பிடிக்கும் என்பதற்காக எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லையே..

//..இந்தியா திரைப்பட நடிகர்களில், ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்து இருப்பவர் இந்தியத்தமிழன் இளையத்தளபதி விஜய் மட்டும்தான்...//

மற்ற நடிகர்கள் யாரும் உங்களுக்காக போராடவில்லையா..?

//.. விஜய் 16/11/2008 அன்று ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தார் எந்த ஒரு அரசியல் வாதிகலும் ந்aடிகர்களும் செய்யாத தியாக உணர்வுகள்..//

அப்போ ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் போன்றோர் எல்லாம் உங்களுக்கு தியாகியாக தெரியவில்லையா..?
ஈழத்தமிழர்களுக்காக தினமும் போராடும் பல்லாயிரகணக்கான தமிழ் இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வர வேண்டியது இல்லையா..?
உங்கள் இளையத்தளபதி விஜய் மட்டும் வந்தால் போதுமா..?
அவர் அரசியலுக்கு வந்தால் தனி ஈழம் அமைத்து கொடுப்பாரா..??

விஜய டி. ராஜேந்தர். கே. பாக்யராஜ் எல்லாம் 1960 இல் நடிக்க வந்தார்களா..??

//.. இன்று குடிமக்களால் தேடுவது நல்ல ஒரு அரசியல்வாதிகளை...//

நாங்களும் அதைத்தான் சொல்கிறோம்..!!

இன்னும் நிறைய சொல்ல தோன்றுகிறது..
சபை நாகரிகம் கருதி..

இப்போ இவ்ளோதான்..

Unknown said...

அரசியல் என்பது பிரபலத்தை மட்டும் நம்பி செய்யப்படக் கூடாது.
இவர்களெல்லாம் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு ஏதாவது செய்தால் நல்லாயிருக்கும்... மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய விரும்பின் அரசியல் தவையில்லை...

அப்படி தெதாடங்கினாலும் 1977 படத்தின் தொடக்கப் பாடல் போல பாடல்களை போடாமல் இருந்தால் சரி..

vijayfans said...

பட்டிக்காட்டான் அவர்களே!

நாம் தமிழக மக்களை குற்றம் சொல்லவில்லை.
எமது உறவுகளுக்காக முத்துகுமார் தொடங்கி more 18 தமிழக தமிழ் உறவுகள் செய்த மாபெரும் தியாகம் வரலாறு என்றுமே மறக்காது

எமக்கு ஈழம் அமைத்து தரவேண்டும் என்று கூறிக்கொன்டு அரசியல் நாடகம் எமக்கு தேவயில்லை

இன்று விஜய் சினிமாவில் மட்டுமில்லை உலகத்திலே பிரபலமானவர்

நீங்கள் தியாகி முத்துக்குமாருடன் ஒரு நடிகரை ஒப்பிடுவது நியாயமா?

தாயக உறவுகளுக்கக தன் உயிரை தீயுக்குள் சமர்பித்த வீர முத்துக்கு வரலாறு கடமை பட்டுள்ளது

ஆனல் விஜய் தனது தனிபட்ட நடிப்பின் மூலம் எங்கள் மனதை கொள்ளையடித்தவர்

நீங்கள் குறிப்பிட்டீர்கள் வேறு நடிகர்கள் குரல் கொடுக்கவில்லையா என்று .
நாம் குரல் கொடுக்கவில்லையென்று சொல்லவில்லை...
விஜய் பற்றி எழுதிய பரிசில் காரன் அவர்களுக்கு நான் உதாரனமாக குறிப்பிட்டேன் விஜயை.
அவர் வேறு நடிகரை குறிப்பிட்டிருந்தாலும் நாம் கூறியிருப்போம்.

விஜய் பற்றி எழுதியதற்க்காக நாம் விஜயை ஆதரித்து எழுதியது தான் அவை அதற்காக
எமக்காக குரல் கொடுப்பவர்களை நாம் குற்றம் சொல்லவில்லை
அவர்களுக்கு எவ்வாறு நன்றி கூறப்போகிறோமே???


இப்படிக்கு
ஈழத்தில் பிறந்து புலத்தில் வாழும்
இளையதளபதி விஜய் ரசிகர்கள்
www.superstarvijay.blogspot.com
நன்றி