
சமீபத்தில் (அல்லது) சென்ற வருடம் ஈரோடு சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது நான்கைந்து பேர் கொண்ட கொலைவெறிக் கும்பல் ஒன்று “நீ எப்படி வேட்டைக்காரன் பாஸ்ன்னு எழுதலாம்” என்று என்னைத் தாக்க முற்பட்டது குறித்து திரைத்துறையிலிருக்கும் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரைச் சந்திக்க வந்த மற்றொரு நண்பர் (இவரொரு விஜய் ரசிகர் என்பதறிக) அவரோடு உரையாடினார். அந்த உரையாடலின் சிறு பகுதி:-
**************************************
“நானும் விஜய்க்கு கதை சொல்லிருக்கேன்.. ஒப்பனிங் லைன் மட்டும்தான் சொன்னேன். ஒலகத்தரம்னெல்லாம் சொல்ல வரல.. பக்கா மசாலாதான். ஒரு ஆளு ஊர்லேர்ந்து சென்னைக்கு வந்து பெரிய தாதாகிட்ட அடியாளா சேரணும்னு ட்ரை பண்றான். அவனை காமெடி பீஸாவே எல்லாரும் பார்ப்பாங்க.. ஒரே ஒரு கட்டத்துல, அந்த தாதாவோட குருவா இருக்கறவரை இவன் காப்பாத்தறான். அப்பறம் ரெண்டு தாதா க்ரூப்புக்கும் சண்டை. யாராலன்னு பார்க்கறப்ப, ஹீரோ! க்ளைமாக்ஸ் என்னான்னா, “நீ ரௌடியா இருக்கறதுன்னா இரு. இல்லையா ஒண்ணு நாங்க உன்னை காலி பண்ணீடுவோம், இல்லையா ரெண்டு க்ரூப்ல ஒருத்தர் உன்னைப் போட்டுவாங்க”ன்னு போலீஸ் சொல்லுது. ஹீரோ என்ன முடிவெடுக்கறாங்கறதுதான் க்ளைமாக்ஸ்!” இப்படிதான் ஆரம்பிகிறார் அந்த விமர்சகர் உரையாடலை. எதிரில் விஜய்யின் ரசிகர் இதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
“இது நான் கண்டுபிடிச்சேன்னு சொல்ல மாட்டேன். பாட்ஷாவோட வேற ட்ரீட்மெண்ட்ல ஆன ஸ்க்ரிப்ட். அவ்ளோதான். ஆனா அதுக்குள்ள ப்ரகாஷ்ராஜ் விஜய்யைப் பார்த்து போக்கிரியைப் பத்தி பேசி, நம்ம கழண்டுக்க வேண்டியதாச்சு” குரலில் வருத்தமில்லாமல் சொல்வதை ரசிகர் ஆர்வமாய்க் கேட்கிறார்.
“விஜய்க்கு தேவை சாதாரண கதைதான். ஆனா பவர்ஃபுல் ஸ்கிர்ப்ட் தேவை. அத ஏன் யாரும் பாக்கறதில்லைன்னுதான் எனக்கு வருத்தம்”
“கரெக்ட் சார். என் வருத்தமும் அதுதான். ஒரு விஜய் ரசிகனா நான் பார்க்கறது என்னான்னா ஒரு படத்துல கதை மத்த மேட்டரெல்லாம் என்னான்னு பார்ப்பேன்.. அப்பறம் விஜய் ரசிகனான எனக்கு அவர் என்ன தர்றாருன்னு பார்ப்பேன்.. அப்படி பிரிச்சுதான் பார்ப்பேன். மத்த படங்களை நான் பார்க்கறதுக்கும் விஜய் படத்தை பார்க்கறதுக்கும் இதுதான் வித்தியாசம்”
“ஆனா ஒண்ணுப்பா... நடிக்கறதுக்குன்னு வந்துட்டா விஜய்யோட டெடிகேஷன் யாராலயும் அடிச்சுக்க முடியாது”
“எப்படிச் சொல்றீங்க?”
“நான் 27 நாள் இருந்தேன். போக்கிரி ஷூட்டிங்க்ல. நானும் நடிக்க போயிருந்தேன். மூணு சீன் நடிச்சும் ஒரு ஃப்ரேம்ல கூட வர்ல அதுவேற விஷயம். ஆனா ஸ்பாட்ல விஜயோட இன்வால்வ்மெண்டும், டெடிகேஷனும் பார்த்து அசந்துட்டேன்.”
“ஆமாமா.. நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஸ்க்ரிப்ட் செலக்ட் பண்றதுக்கு முன்னாடி ஆயிரத்தெட்டு குத்தம் குறை சொல்லுவாரு. கௌதம்மேனன் கூட சொல்லிருந்தார். ஆனா ஒத்துகிட்டு ஃபீல்டுக்கு வந்தா ஒரு கேள்வி கேட்காம நடிப்பாராமே?”
“ஆமாமா”
“திருமலை, கில்லி, மதுரை, திருப்பாச்சின்னு கலெக்ஷன்ல பெரிய நாலு படம் நடிச்சு அடுத்ததா ச்ச்சின்ல நடிக்கறாரு. அதுல மாஸ் ஹீரோன்னு எதுவும் காமிச்சுக்காம ஜாலியா நடிப்பாரு. வசீகராவுலயே சின்னப்பொண்ணு கால்ல விழுந்தெல்லாம் நடிச்சாரு. அதுமாதிரி விஜய்ட்ட பிடிச்சது அவர் டைரக்டருக்கு கொடுக்கற மரியாதை”
ரசிகர் தொடர, இடை மறிக்கிறார் விமர்சகர்: “மரியாதையெல்லாம் ஒண்ணும் கிடையாது.விஜய் படத்துல டைரக்டர் ஒண்ணும் கிடையாது. விஜய் கோவிச்சுட்டு செட்டை விட்டு போய்ட்டா மொத்தமும் காலி. அந்த பயத்தோடவேதான் வேலை செய்யணும். பிரபுதேவாவே ஒண்ணும் பண்ண முடியாது. விஜய்யை திட்டறதுக்கு பதிலா பக்கத்துல நிக்கறவனைத் திட்டலாம். அவ்ளோதான்”
“மரியாதையே இல்லைன்னா அப்பறம் எப்படி மறுபடி விஜய்கூடவே பண்றாங்க?”
“காசுதான். மத்தவங்க படம்னா 1000ஆ.. விஜய் படம்னா 5000!. பண்ணமாட்டாங்களா?”
“ஆனா என்னதான் கிண்டல் பண்ணினாலும் விஜய் படம் ஓப்பனிங் பிரமிக்க வைக்குதா இல்லையா? 2000ல என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சாரக்கண்ணா, கண்ணுக்குள் நிலவு நாலு ஃப்ளாப்புக்கப்பறம் ‘குஷி’க்கான ஓப்பனிங் எல்லாரையும் பிரமிக்க வெச்சுது. அதே மாதிரி புதிய கீதை, வசீகரா, பகவதி எல்லாம் ஃப்ளாப். திருமலைக்கு சரியான ஓப்பனிங்”
“கரெக்ட்தான். விஜய்யும் அஜீத்தும் இன்னைக்கு டாப் லிஸ்ட்ல இருக்காங்கன்னா எத்தனை ஃப்ளாப் குடுத்தாலும், மொத நாள் ஒப்பனிங் உலகம் பூரா இருக்குங்கறதுதான்”
“ஆமாம். அதுவும் என்கூட முதல்நாள் ஷோ பார்த்துட்டு வெறுத்து வித்தியாசமா விமர்சனம் எழுதினவர், அவரோட மகன் அடம்பிடிச்சான்னு அடுத்த நாளே குடும்பத்தோட போயிருக்காரு. நானும் தனியாப் பார்த்தேன். அடுத்த நாள் என் ரிலேஷன் பையனோட போய்ப் பார்த்தேன். இந்த ஃபேமலி ஆடியன்ஸ் மத்தவங்களுக்கு இல்லைங்கறதுதான் உண்மை. அதுதான் விஜய் படம் நூறு நாள் ஓடறதோட காரணம்”
“நூறுநாள், நூத்தம்பதுநாள் ஓட்டறதுக்கு பின்னாடி வேற ஒரு பெரிய கதை இருக்கு. அது நடிகனுக்காகன்னு நம்பீட்டிருந்தா உங்களைப் பார்த்து சிரிப்புதான் வருது”
“அப்பறம்?”
“தியேட்டர் வாடகை தயாரிப்பாளர்தான் குடுக்கணும் பார்த்துக்கங்க.. அதெல்லாம் சினிமா ரகசியம்பா”
-என்றவர் மேற்கொண்டு இதைப் பற்றி பேசமறுக்கிறார்.
அந்த அரைமணி நேரத்தில் இவர்களிருவரும் பேசியதிலிருந்து ஒன்று புரிந்தது...
அது....
நீங்களே சொல்லுங்களேன்..
.


