Friday, February 13, 2009

அவியல் – 13.02.2009

மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..

“கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது”

“அப்படியே ஆகுக”ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.

ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து
“யாரப்பா.. நீ?”ன்னு கேட்டாராம்..

இவன் சொன்னானாம்... “மொக்கைமாமி”

பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல!
************************
கரண்டைக் கட் பண்றது யாருன்னு நமக்கெல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். கரண்டைக் கண்டுபிடிச்சது யாரு?

தாமஸ் ஆல்வா எடிசன்?

இல்ல! கரண்டைக் கண்டுபிடிச்சது பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். அவரு மழை பெய்யும்போது பட்டம் விட்டிருக்காரு. மழை நின்னிருக்கு. அப்போ மழை பெய்யறப்போ மாஞ்சாக்கயிறிலேர்ந்து ஒரு வைப்ரேஷன் மாதிரி வந்ததை உணர்ந்து, அப்படிக் கண்டுபிடிச்சதுதான் மின்சாரம். ஆனா அதைப் பயன்படுத்தற விதமா பயன்படுத்தணும்டா-ன்னு பல்பைக் கண்டுபிடிச்சதால தாமஸ் ஆல்வா எடிசன் அதிகமா பேசப்படறாரு!

****************************
பாரிஸில் ஒரு பிரபல ஓவியரின் ஓவியக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. ஆதாம் ஏவாள் குறித்த ஒரு நிர்வாண ஓவியம். அந்த ஓவியம் முன் நான்கைந்து குழந்தைகள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். கண்காட்சிக் கூடத்தின் நிர்வாகி ஒருவர் ‘இதேதடா.. வில்லங்கமான படம் முன் குழந்தைகள் இருக்கிறார்களே’ என்று அருகே போக, ஒரு சிறுமி அருகிலிருந்த சிறுவனைப் பார்த்துக் கேட்ட்து காதில் விழுந்தது.

“டே.. இதுல எது ஆம்பள.. எது பொம்பள?”

அட்டா.. வில்லங்கமான கேள்வி கேட்டுவிட்டாளே’ என்று இவர் இன்னும் அருகே சென்றபோது அவன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்...

“எப்படித் தெரியும்? அவங்கதான் ட்ரெஸ்ஸே போடலியே!”

குழந்தைகள்!

ஹூம்! நாம் தான் ‘பெரியவர்கள்’ ஆகிவிட்டோம்!!

*********************

உமா கேட்ட ஒரு கேள்வி அர்த்தமுள்ளதாக இருந்தது..

“இந்த சன் டி.விக்காரங்க சினிமா கே.டி-வில போடுவாங்க... பாட்டு சன் மியூசிக்ல போடுவாங்க. நியூஸ் சன் நியூஸ்ல போடுவாங்க. குழந்தைகள் ப்ரோக்ராம் சுட்டில போடுவாங்க. இப்போ காமெடிக்குன்னு ஆதித்யா-ன்னு ஆரம்பிச்சுட்டாங்க”

“சரி.. அதுல உனக்கென்ன பிரச்னை?”

“அப்போ சன் டி.வில என்னதாங்க போடுவாங்க? வெறும் சீரியலேவா?”

இது சீரியல் கொஸ்டின் இல்ல.. சீரியஸ் கொஸ்டின்தான்!

************************

நண்பர் ஒருவருக்கு வாட்ச் வாங்கினோம். பில்லுக்கு பின்னாடி Do’s & Don’ts”ன்னு போட்டிருப்பாங்களே.. அதுல ‘Don’t change the day/date between 10 pm and 2 am in your day/date watch’ன்னு போட்டிருந்தது. ஏன் இப்படி-ன்னு யோசிக்க கொஞ்சம் மண்டையைப் போட்டு குழம்பிக் கண்டுபிடிச்சேன்.. என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்!

****************
திருவனந்தபுரம் ஹைகோர்ட்டில் ஒரு பெரிய ஓவியம் வைத்திருக்கிறார்களாம். இரண்டு பேர் கையில் சட்டியுடன் நிற்கும் படமாம். ஒருத்தரிடம் மட்டும் கூடுதலாக பேப்பர் கட்டு ஒன்று இருக்குமாம்.

அனுசரித்துப் போங்கள். வழக்கு நடத்த ஆரம்பித்தால் சட்டிதான் மிஞ்சும் என்பதே அதன் பொருளாம். அப்போ அந்த பேப்பர் கட்டு?

ஜெயிச்சவனுக்கு மட்டும் எக்ஸ்ட்ராவா அந்த தீர்ப்பு நகல் இருக்குமாம். சபாஷ்!

********************
முரளிகண்ணன்( வரவேற்பறை), செல்வேந்திரன் (கவிதைகள்) என்று விகடனில் கலக்க, கார்க்கி, கேபிள் சங்கர், தாமிரா யூத் ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸில் இடம்பெற என்று எல்லாருக்கும் வாழ்த்துகள் சொல்வதை விட முக்கியமாய் விகடனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இப்படி எங்களை ஊக்குவிப்பதற்கு. (ஏற்கனவே யூத்து, யூத்து-ம்பாரு சங்கர். இனி கேட்கவே வேண்டாம்!)

********************
கல்யாண்ஜியின் ‘எல்லோர்க்கும் அன்புடன்’ என்ற கடிதத்தொகுப்பை சோர்வுறும்போதெல்லாம் எடுத்துப் படிப்பது வழக்கம். இதை நண்பர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது “அவரு அவர் நண்பர்களுக்கு எழுதின கடிதத்தைப் படிச்சா உங்களுக்கு எப்படி ரி-ஃப்ரெஷ் ஆகும்?”ன்னு கேட்டார்.

அவருக்கு பதிலாய் இதோ அந்தப் புத்தகத்தில் அங்கங்கே நான் அடிக்கோடிட்டவையில் சில..

* வேலைக்குப் போக ஆரம்பித்தபிறகு வேலைதான் எப்போதுமே வாழ்க்கையாகிவிடுகிறது

* வாழ்க்கை எப்போதுமே ஆதாரமற்றுப் போய்விடுவதில்லை.

* தனிமை நிரம்பிய ஆண்களின் பிற்பகுதி வாழ்க்கையில் நண்பர்கள் தருகிற வெளிச்சத்தை வேறு யாராலும் தரமுடிவதில்லை.

* எதையாவது தொடர்ந்தும், எதனாலோ தொடரப்பட்டும் கடைசிவரை செய்வினை, செயப்பாட்டுவினை ஆகிவிட்டது வாழ்க்கை.

* மூக்குத்தி இல்லாமலும் அழகாக இருக்கிற மூக்கு உலகத்தில் எவ்வளவு இருக்கிறது.

* தேவையற்ற இலைகள் உதிரும்படியாக மரமும், தேவையற்ற இறகுகள் உதிரும்படியாக பறவைகளும் இருக்கையில்., தேவையெற்றதெல்லாம் உதிரும்படியாகவே வாழ்வும் இருக்கும்.

*****************

37 comments:

Cable சங்கர் said...

//(ஏற்கனவே யூத்து, யூத்து-ம்பாரு சங்கர். இனி கேட்கவே வேண்டாம்!)//

இது தான் உள்குத்தா..?

Cable சங்கர் said...

சூப்பர் அவியல். இன்னைக்கு நான் தான் ப்ர்ஸ்டா..?

கார்க்கிபவா said...

ச்சே.. வை போச்சே.. இதுக்குதான் படிக்காமலே போடனுமோ?

Cable சங்கர் said...

//ச்சே.. வை போச்சே.. இதுக்குதான் படிக்காமலே போடனுமோ?//

அலோ.. முதல்லேயே நான் படிச்சுட்டுதான் போட்டேன்.. ஆம்ம்ம்ம்மாஆ..

Cable சங்கர் said...

தல உங்க பதிவு கூட யூத்புல் விகடன்ல வந்திருக்கு உங்களுடய காதலர் தின பதிவை போட்டிருக்காங்க.. வாழ்த்துக்கள்

Thamira said...

அந்த நேரத்துல‌தான் வாட்சுல நாள் மாறுவதற்கான சிறிய பற்சக்கரங்கள் சுழன்று கொண்டிருக்கும்.. சரியா?

அப்புறம் எல்லாமே நல்லயிருந்தது.. பதிவின் கடைசி வரியான‌ கல்யாண்ஜியின் வரிகள் ஹைலைட்..

அப்புறம் யூத்புல்லில் முழு கவிதை ஒண்ணும் போட்டுருக்காங்க.. அதை மத்தியானம் பிளாக்குல போட்டுடறேன்.

அபி அப்பா said...

\\இரண்டு பேர் கையில் சட்டியுடன் நிற்கும் படமாம்\\

என்ன கலர், பிங் தானே? ஏன்னா நாளை பிப் 14 ஆச்சே அதனால கேட்டேன்:-))

Mahesh said...

வழக்கம்போல சுப்பர் அவியல்.....

அவனுக்கு 'சா'வே வராது... ஆனா அதுக்கு பதிலா 'மா'னா தானெ வரும்னு சொல்லலயே :)))))

Vidhya Chandrasekaran said...

அவியல் நல்லாருந்தது:)

கார்க்கிபவா said...

சகா அந்த மொக்கமாமி மேட்டர். ஞாபகம் இருக்கா? எங்க புடிச்சிங்க?

கரண்ட் மேட்டர் current affairs இல்லைனாலும் எனக்கு தெரியும்..

இப்பெல்லாம் குழந்தைங்க அப்படியா?

சன் டிவில எல்லாத்தையும் கலந்து போடுவாங்க

முரளிகண்ணன் said...

அட்டகாச அவியல்

anujanya said...

அட்டகாச அவியல். Tiger roaring back to form. கல்யாண்ஜி எழுத்து ....ஆஹா!

அனுஜன்யா

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

மொக்கைசாமி வேண்டுதல் ரசிக்கும்படி இருக்கிறது.!

மாதவராஜ் said...

பரிசல்!

இன்று காலையில் படித்து விட்டேன். வங்கிக்கு உற்சாகமாக்வே கிளம்பலாம் என்றால். 10-5 வரை நான் 10-2வை நினைக்க வைத்து விட்டீர்களே! பாவம் வாடிக்கையாளர்கள்.

மொக்கை மாமி ஒருகணம் திடுக்கிட வைத்து சிரிக்க வைத்தார்கள்.

அருண் said...

//நண்பர் ஒருவருக்கு வாட்ச் வாங்கினோம். பில்லுக்கு பின்னாடி Do’s & Don’ts”ன்னு போட்டிருப்பாங்களே.. அதுல ‘Don’t change the day/date between 10 pm and 2 am in your day/date watch’ன்னு போட்டிருந்தது. ஏன் இப்படி-ன்னு யோசிக்க கொஞ்சம் மண்டையைப் போட்டு குழம்பிக் கண்டுபிடிச்சேன்.. என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்!//

From SwATCH :
Make sure you do not adjust the date between 10pm-2am ever!!! Do not ask me why because it just works this way. if you adjust between 10pm-2am, the date will jam or go half way.

This is because, it may damage the movement.

இராம்/Raam said...

//“அப்போ சன் டி.வில என்னதாங்க போடுவாங்க? வெறும் சீரியலேவா?”

இது சீரியல் கொஸ்டின் இல்ல.. சீரியஸ் கொஸ்டின்தான்//

கலக்கல்... :)

VIKNESHWARAN ADAKKALAM said...

அவியல் நல்லா இருக்குங்க பரிசல்....

Saminathan said...

டேஸ்டி அவியல் பாஸ்...மொக்கை மாமி சூப்பரு...

narsim said...

சா மேட்டர் சாப்பார்,ஸாரி, சூப்பர் பரிசல்..

அருமையான சுவை..

கல்யாண்ஜியின் வரிகள்..முத்தாய்ப்பு.

(யூத்ல "நம்ம" மேட்டர் வந்தது தெரியாதா..)

ஷாஜி said...

//பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல! //

---suoperb

T.V.ராதாகிருஷ்ணன் said...

“மொக்கைமாமி

super

Anonymous said...

பரிசல்,

தமிழிலக்கியத்துல கல்யாண்ஜி தவிர்க்கமுடியாத ஆளுமை.

//தனிமை நிரம்பிய ஆண்களின் பிற்பகுதி வாழ்க்கையில் நண்பர்கள் தருகிற வெளிச்சத்தை வேறு யாராலும் தரமுடிவதில்லை.//

என்னையும், உன்னைப் போன்றவர்களையும் நினைத்துப் பார்த்தேன் சரிதான்.

சென்ஷி said...

//அபி அப்பா said...
\\இரண்டு பேர் கையில் சட்டியுடன் நிற்கும் படமாம்\\

என்ன கலர், பிங் தானே? ஏன்னா நாளை பிப் 14 ஆச்சே அதனால கேட்டேன்:-))
//

ஹா..ஹா..ஹா.. :-)

நையாண்டி நைனா said...

/*அப்போ சன் டி.வில என்னதாங்க போடுவாங்க?*/
ஹான்... இது நல்ல கேள்வியா இருக்கே? மற்ற டி.வி-லே இருந்து காப்பி அடிச்ச ப்ரோக்ராம் போடுவாங்க.

நாமக்கல் சிபி said...

ரசிக்கும்படியான அவியல்!

சூப்பர்!

அபி அப்பா said...

\\நண்பர் ஒருவருக்கு வாட்ச் வாங்கினோம். பில்லுக்கு பின்னாடி Do’s & Don’ts”ன்னு போட்டிருப்பாங்களே\\

ஒரு வேளை டோண்டு சார் சிட்டிசன், சீக்கோவுக்கு போட்டியா கடிக்கார கம்பனி ஆரம்பிச்சிட்டாரோ:-))

அவர் பிளாக்ல போட்ட மாதிரியே வாட்ச்லயும் போட்டுட்டாரோ?

m said...

"தேவையற்ற இலைகள் உதிரும்படியாக மரமும், தேவையற்ற இறகுகள் உதிரும்படியாக பறவைகளும் இருக்கையில்., தேவையெற்றதெல்லாம் உதிரும்படியாகவே வாழ்வும் இருக்கும்."

arumai!

Athisha said...

அவியலில் நிறைய ஐட்டங்கள விட்டு அசத்துறீங்களே தல..!

Truth said...

//From SwATCH :
Make sure you do not adjust the date between 10pm-2am ever!!! Do not ask me why because it just works this way. if you adjust between 10pm-2am, the date will jam or go half way.

This is because, it may damage the movement.

ஐயயோ, நான் 6 ஸ்வாட்சு போன வருஷம் தான் வாங்கினே. தெரியாம வாங்கிட்டேனோ? :(

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்,

You born to write.. வேறு என்ன சொல்ல?

குழந்தை மனதை சொன்ன செய்தி அருமை.
எனக்கு ஒரு சந்தேகம்.. ஆதாம் ஏவாள் இருவருக்கும் தொப்புள் பகுதி எப்படி இருக்கும்?
:))

Natty said...

// என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்! //

என்னா

:)

GNU அன்வர் said...

இலங்கையில் மனித அவலத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான மனு!http://nattuboltu.blogspot.com/2009/02/blog-post_14.html

வெண்பூ said...

சுவையான அவியல் பரிசல்... வழக்கம்போல கலக்கல்..

நான் கட்டியிருக்குற டைட்டன் கடிகாரத்துல நேரம் மட்டும்தான் (குடுக்குற 800 ரூவாய்க்கி உனக்கு பின்ன நாள் நட்சத்திரம் எல்லாமா குடுப்பான்னு திட்டக்கூடாது) அதனால கொஸ்டின் சாய்ஸில் விடப்படுகிறது

வெண்பூ said...

சுவையான அவியல் பரிசல்... வழக்கம்போல கலக்கல்..

நான் கட்டியிருக்குற டைட்டன் கடிகாரத்துல நேரம் மட்டும்தான் (குடுக்குற 800 ரூவாய்க்கி உனக்கு பின்ன நாள் நட்சத்திரம் எல்லாமா குடுப்பான்னு திட்டக்கூடாது) அதனால கொஸ்டின் சாய்ஸில் விடப்படுகிறது

Anonymous said...

Hi

உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு

நன்றி.

உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

ஜோசப் பால்ராஜ் said...

//தனிமை நிரம்பிய ஆண்களின் பிற்பகுதி வாழ்க்கையில் நண்பர்கள் தருகிற வெளிச்சத்தை வேறு யாராலும் தரமுடிவதில்லை.//

இது பிற்பகுதியில மட்டுமில்லை.எல்லாப் பகுதியிலயுமே தனிமையில இருக்கவங்களுக்கு நண்பர்கள் தரும் வெளிச்சம் இருக்கே அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்னு தான்.

ஸ்ரீதர்கண்ணன் said...

இவன் சொன்னானாம்... “மொக்கைமாமி”

பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல!

:)))))