Friday, May 30, 2008

அவியல்-3

நடிகர் ரித்தீஷை ஓரிரண்டு பதிவுகளில் கிண்டலடித்துவிட்டேன். இந்த நிலையில், இந்த வார நக்கீரனில், (பக்கம் 25) ஒரு செய்தி போட்டிருந்தார்கள். கீழக்கரை அருகே ‘கும்பிடுமதுரை’ கிராமத்தை செர்ந்த அகமது-ரஹ்மத் தம்பதியரின் மகன் ஆசிரின் இதய ஆபரேஷனுக்காக ஒன்றரை லட்சம் கொடுத்தனுப்பியிருக்கிறார் ரித்தீஷ். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றுகூடச் சொல்லலாம். அதன்பிறகு நடந்தவைதான் ரித்தீஷைப் பாராட்ட வைக்கிறது. அந்த ஒன்றரை லட்ச ரூபாயில், பதினைந்தாயிரத்தை மட்டும் அந்தக் குடும்பத்திடம் சேர்த்துவிட்டு ‘யோவான்’ என்கிற கவுன்சிலர் தலைமறைவாகிவிட்டார்-ஸாரி-விட்டான். இதை நக்கீரன் மூலம் படித்து தெரிந்துகொண்ட ரித்தீஷ், ‘நமக்கென்ன’ என்றிருக்காமல் மறுபடி ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை நக்கீரன் அலுவலகத்திற்கு அனுப்பி, அந்தக் குடும்பத்திடம் சேர்த்துவிட்டார்! சபாஷ் ரித்தீஷ்! (ஆனாலும், ‘நாயகன்’ தலைப்புல படம் எடுக்கற உங்க யோசனையை மறுபரிசீலனை செய்யுங்க சார்!)

******************************************************
‘கண்ணும் கண்ணும்’ படத்துல வர்ற ‘பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி’ பாட்டின் இந்த வரிகளும், அதன் மெட்டும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது..

செடி நட்டதும் மலர் மொட்டுகள் விட உத்தரவிடுவோம் விதை இட்டதும் கனி சட்டென வர கட்டளையிடுவோம்-இளம் கன்னியர் இனி வெண்ணிலவினில் கப்பலும் விடுவோம் - எமை முட்டிட வரும் முட்செடிகளை முட்டி முட்டி முன்னேறுவோம்!
*****************************************************
‘தளபதி’ என்கிற வார்த்தைக்கு வாய் இருந்தால் அது கதறி அழுதிருக்கும் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு எல்லோரும் அதைப்போட்டு கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். இளையதளபதி(விஜய்), புரட்சித்தளபதி(விஷால்), சின்னத்தளபதி(பரத்) அப்புறம் வீரத்தளபதி(ரித்தீஷ்!!!) வேறு என்னென்ன வைக்கலாம் என்று ஐடியா இருந்தால் சொல்லுங்கள்..

என் ஐடியா- வெற்றித்தளபதி, பெரியதளபதி, வெட்டித்தளபதி(அதிகமாக அரிவாள் படங்களில் நடிக்கும் நடிப்பவர்), புதுமைத்தளபதி, இனிய தளபதி, இளமைத் தளபதி கடைசியாக யாராவது ‘கடைசி தளபதி’ என்றும் போட்டுக் கொண்டால் தேவலாம்.. ஏனென்றால் அதற்குப் பிறகாவது யாரும் போட்டுக் கொள்ளாமலிருப்பார்களா என்று பார்க்கலாம்!

******************************************************************
கொஞ்சம் பிசியாகி விடுவேன் என நினைக்கிறேன்.. டெய்லி ஒரு பதிவு போடுவதை விட்டு, இரண்டு, மூன்று என்று போட்டு பெரிய இவன் மாதிரி காட்டிக்கொண்டாயிற்று! இனி இப்படி எழுத முடியுமா என்று தெரிய வில்லை. (மேட்டர் இல்லன்னா இப்படியா சொல்றது-ன்னு நினைக்காதீங்க! நிஜமாவே சிஸ்டம் பக்கம் வர முடியாத அளவுக்கு வேற வேலைகள் கொஞ்ச நாளைக்கு!) பார்க்கலாம்.... ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க!

5 comments:

FunScribbler said...

//பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி’ //

எனக்கு ரொம்ப பிடிச்ச பாடலுங்க..

//‘கடைசி தளபதி’ என்றும் போட்டுக் கொண்டால் தேவலாம்//

ஹாஹா.. சூப்பர் காமெடி!

//வெட்டித்தளபதி//

ஹாஹா.. இது நல்லா இருக்கே!!

//பார்க்கலாம்.... ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க//

அவ்வ்வ்வ்வ்!!!

ambi said...

//கண்ணும் கண்ணும்’ படத்துல வர்ற ‘பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி’ பாட்டின் இந்த வரிகளும், அதன் மெட்டும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது..
//

எனக்கு ரொம்ப பிடிச்ச பாடலுங்க..

யாரு பாடினாங்க?னு சொன்னா உங்களுக்கு புண்யமா போகும். நடிகை பேரு உதய தாரா. (ஹிஹி, இதுல நாங்க தெளிவா இருப்போம்ல)

சென்ஷி said...

:))

நல்லாருக்குங்க உங்க எல்லா அவியலும்...

Girish.K said...

தளபதி பற்றி .

தமிழ் தளபதி (எப்போதும் தமிழ் பேசும் நடிகர்), தண்ணீ தளபதி (எப்போதும் தண்ணீ போட்டுபேசும் நடிகர்) கன்னீ தளபதி (எப்போதும் லவ் சுப்ஜெச்ட் நடிகர்), தளபதியின் தளபதி (எவனுக்கு பொறந்த நடிகனோ) இப்படி எல்லாம் இனி வரும்.

ஆய்ரம் தான் irrunthalum ஐநுரு தன் irrunthalum. தளபதி ன் அது ரஜினீ தான்.

கமெண்ட்ஸ் அடிகவ ய்னகு கஷ்டமா இர்ருக்கு யப்படி உங்கனால முடிஉது.

பரிசல்காரன் said...

தமிழ் மாங்கனி, அதான் வந்துட்டோம்ல!

அம்பி, அந்தப் பாட்டை பாடினது சுசித்ரா! (ஆடின உதய தாரா, பாடின சுசித்ரான்னு லேடீசா கேட்டீங்களே.. எழுதினது யாருன்னு கேட்டீங்களா?)

சென்ஷியாரே, உங்களை ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டிருந்தேன்! வந்ததுக்கு வந்தனம்!