
நாட்டு நடப்புகள்..
நாளைய திட்டங்கள்..
நேற்றுப் படித்த புத்தகம்..
நினைவில் நிற்கும் கவிதைகள் என..
பேச எத்தனையோ விஷயங்களிருக்க
பண்பாடென்ற பெயரில்
ஏதோ ஒரு சைத்தான்
உன்னையும் என்னையும் தடுக்க
உன் ஜன்னல் வழியே நானும்
என் ஜன்னல் வழியே நீயும்
வேடிக்கை பார்த்துக்கொண்டு..
வீணாகிப் போகிறது தோழி
இந்தப் பிரயாண நேரம்!
3 comments:
என் இரயில் பயணம் ஒன்று நினைவுக்கு வருகிறது(நெஞ்சில் ஆழப்பதிந்து விட்ட பயணமல்லவா!)பார்க்க;-
http://pithan.tamilblogs.com/2007/09/07
ரொம்ப சூப்பர்....விஜய் டி.வி பாணியில் சொல்லவேண்டுமென்றால் செம்ம செம்ம செம்ம செம்ம செம்ம.......
நிறைய ரயில் பயணங்களோ!
Post a Comment