Monday, May 26, 2008

விபரீத முடிவு!

இந்தப் பதிவு நம்ம தல லக்கிலுக் அவர்களுக்கு சமர்ப்பணம்!

அவன் இப்படி ஒரு விபரீத முடிவை எடுப்பான் என்று யாருமே எதிபார்க்கவில்லை. மனைவி, மகள்கள் எல்லாரும் அவனது நண்பர்களுக்கு போன் போட்டு, உதவி கேட்டு வருத்தப் பட்டுக்கொண்டிருந்தார்கள். அவனது பெற்றோருக்கு கூப்பிட்டு மனைவி சொன்ன போது பொரிந்து தள்ளிவிட்டார் அவன் தந்தை..

"ப்ளஸ் டூ-வுல பெயில் ஆனப்போ அவன் தூக்குல தொங்கப் போனான்.. அப்போ கூட நான் இந்த அளவுக்கு வருத்தப்படல.. எப்போ இப்படி ஒரு முடிவை எடுத்தானோ, இனிமே அவன என் மகன்-ன்னு எப்படி சொல்லிக்கறது?" என்று மிகவும் ஆதங்கப்பட்டார்.

மனைவி வேறு வழியில்லாமல் அவன் உற்ற நண்பன் செந்திலுக்கு போன் பண்ணி, விஷயத்தை சொன்ன போது அவனால் நம்ப முடியவில்லை..

"அவன் எப்படி இப்படி ஒரு முடிவை துணிஞ்சு எடுத்தான்-ன்னு தெரியலையே.. நீ கவலைப் படாதம்மா.. நான் இப்பவே அவன்கிட்ட பேசறேன்"

அவனை அழைத்துகேட்டபோது அவன் யார் பேச்சையும் கேட்கும் மன நிலையில் இல்லை என்பது தெரிந்தது..

"என் மனச மாத்த முயற்சி பண்ணாதே செந்தில்.. யார் என்ன சொன்னாலும் நான் எடுத்த முடிவுல மாற்றம் இருக்காது.."

"இல்லடா .. ஏற்கனவே இதுனால எத்தனையோ பேர் பாதிக்கப் பட்டு இன்னும் மீள முடியல.. இப்போ"

"போனை வை செந்தில்.. என்ன ஆனாலும் நான் பின் வாங்கப்போறதில்லை" சொன்ன படியே நுழைந்தான் "குருவி" படம் போட்டிருந்த தியேட்டருக்குள்!

10 comments:

சின்னப் பையன் said...

:-)))))))))))))))))

rapp said...

சூப்பர்

Keddavan said...

வாழ்க்கையில் எல்லோருக்கும் விரக்தி ஏற்படலாம்..அதற்க்காக இப்படி விபரீத முடிவை எடுப்பதா?... :)

Anonymous said...

நல்லா இருக்கு.

எனக்கு வந்த SMS கீழே.

வார்டர் : நாளைக்கு உனக்கு தூக்கு. கடைசியா ஒரு படம் பார்க்க அனுமதி. குருவி பார்க்கிறாயா?.

கைதி : அதுக்கு இன்னைக்கே தூக்கில போட்ருங்க.

ambi said...

:)))

வந்தியத்தேவன் said...

ஆனாலும் கலைஞர் டிவியிலும் சன் டிவியிலும் டாப் 10களில் குருவிதான் முதலிடம்.

களப்பிரர் - jp said...

விபரீத முடிவா ??

நான் கூட நீங்க உன்னொரு கவிதை எழுதீட்டீங்கலோனு நெனச்சேன் .... :) சும்மா கிண்டலுக்கு....

பரிசல்காரன் said...

கருத்து சொன்ன எல்லாருக்கும் வந்தனமுங்க! நான் இத எழுதிட்டு ரொம்ப பயந்து போய் இருந்தேன்! இருந்தாலும் உண்மைய சொல்ல வேண்டியது நம்மளோட சமூகக் கடமையில்லையா?
களப்பிரருக்கு ரொம்பத்தான் நக்கல் போங்கோ! இருங்க.. இருங்க.. எழுதறேன் பாருங்க!

lekha said...
This comment has been removed by a blog administrator.
பரிசல்காரன் said...

மிகவும் நாகரீகமான முறையில் பின்னூட்டமிட்ட லேகா அவர்களுக்கு நன்றி! சில உண்மைகள் கசக்கும்! விஜய் ரசிகராக இருந்துகொண்டு இதுவரை இந்தப் படத்தை நீங்கள் பார்க்காதது ஏன்? இந்த சரித்திரப் பெருமை வாய்ந்த திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள்! (எனக்கும் விஜய் பிரியமான நடிகர்தான்!)