Thursday, May 29, 2008

அவியல்-2

விஜய் டி.வி. ‘கலக்கப் போவது யாரு’ காமெடியில் கலக்கிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம். அதில் பங்கேற்பவர்கள் காமெடி பண்ணுவது போதாதென்று, நிகழ்ச்சி நடத்துபவர்களும் காமெடி பண்ணி நம்மை விலாநோக வைக்கிறார்கள். பின்ன என்னங்க, போன வாரம் அரையிறுதிக்கு நம்ம ‘வீரத்தளபதி’ ரித்தீஷ் நடுவராக வந்த சோகம் இன்னும் தீராத நிலையில், இந்த வார வைல்டு கார்டு ரவுண்டின் நடுவர் என்று ஒருவரின் பெயரைப் போட்டிருந்தார்கள் குமுதத்தில். படித்துவிட்டு புத்தகத்தை மூடிவிட்டேன்! இயக்குனர் பிரவீண் காந்த்! (உங்களையெல்லாம் பாத்தா எனக்கு சிப்பு, சிப்பா வர்து!)
------------------------------------------------------------------------------
நேற்று நண்பர் ஒருவரை சந்திக்க பைக்கில் சென்றேன். அவர் வருவதாய் சொன்ன இடத்தில் பைக்கை நிறுத்தியபடியே செல்போனை எடுத்து, (ஹியர்ஃபோன் இணைத்திருந்தேன்) நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். வண்டியை சைடு ஸ்டேண்ட் போடும்போது அருகிலே வந்தார் ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள்.

‘என்ன சார்.. வண்டி ஓட்டீட்டே போன் பேசுறீங்க?’

‘இல்லியே சார்.. நான் வண்டியை நிறுத்தீட்டுதான் பேசறேன்’

‘வண்டிய நிறுத்தீட்டு பேசறவரு எதுக்கு ஹியர்ஃபோன் வெச்சிருக்கீங்க?’

இன்னைக்கு இவருக்கு நினைச்ச வசூல் ஆகல போல’ என்று நினைத்தவாறே பேசி சமாளித்து அனுப்பினேன்.

எனக்கு எப்போதோ படித்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.

இங்கிலாந்தில் (யாரு கேக்கப் போறாங்க நம்மள? ஏதோ ஒரு ஊரைச் சொல்ல வேண்டியதுதான்!) ஒருமுறை வெடிகுண்டு வைத்திருந்ததாய் ஒரு நபர் கைதானார். எங்காவது அவர் வைத்து வெடித்திருந்தால் எத்தனை சேதமாகியிருக்கும் என்று போலீஸ் வழக்குப் போட்டது. அந்த நபரின் வழக்கறிஞர் கையும் குண்டுமாய் அந்த நபர் பிடிபட்டதால், தண்டனையை மட்டுமே குறைக்க வாய்ப்பிருப்பதாய் நம்பி, ஒரு வாதத்தை வைத்தார். ‘குண்டு வைத்திருந்தது உண்மை. அவர் அதை வெடிக்க வைக்க அல்லாமல், அழிப்பதற்காக எங்கோ கொண்டு சென்றிருக்கவும் வாய்ப்புள்ளதல்லவா?’ என்று. இந்த வாதத்திற்கு வலு சேர்க்க அவர் ஒரு விஷயம் சொன்னார். ‘வீதியில் எத்தனையோ பெண்கள் நடமாடிக்கொண்டிருக்க, வேறு பல ஆண்களும் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். அத்தனை ஆண்களிடமும், பெண்களை கற்பழிக்கக் கூடிய ஒரு உறுப்பு இருந்துகொண்டுதானிருக்கிறது. எல்லாரையும் சந்தேகப்பட்டு கைது செய்வீர்களா?’ அவரின் இந்த வாதத்தால் அந்த நபரை விடுதலையே செய்து விட்டார்களாம்!

இந்தக் கதையைச் சொல்லி, ‘அதேமாதிரி ஹியர்ஃபோன் இருந்தாலே பேசீட்டுதான் வண்டி ஓட்டுவேன்னு அர்த்தமா?’ என்று அந்த கான்ஸ்டபிளிடம் கேட்க ஆசைதான். என்னிடம் வெறும் நாற்பது ரூபாய்தான் இருந்தது. இப்போதெல்லாம் பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய்க்கு கம்மியாகவும், போலீஸ்காரர்கள் நூறு ரூபாய்க்கு கம்மியாகவும் வாங்குவதில்லை என்று கேள்விப்பட்டதால் மூடிக்கொண்டு இருந்துவிட்டேன்.
--------------------------------------------------------------------------
"சார்.. Blog எல்லம் ஆரம்பிச்சு கலக்கறீங்களே"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைப்பா"

"போங்க சார்.. இவ்ளோ திறமைய எங்க வெச்சிருந்தீங்க இவ்ளோ நாள்?"

"அது எங்கிட்டயேதான் இருந்தது. அத விடு.. எழுதியிருந்ததுல உனக்கு எது புடிச்சது?"

"ஹி..ஹி.. இன்னும் நான் பாக்கல சார்"

"பாக்கலியா? அப்பறம் என்னமோ திறமை கிறமைன்ன?"

"இல்ல.. உங்க தம்பிகிட்ட நேத்து பேசிட்டிருந்தேன்.. அவரு தான் சொன்னார்"

"தம்பிக்கு எதுக்கு கூப்பிட்ட?"

"நமக்கு தெரிஞ்ச பொண்ணு ஒண்ணு இருக்கு. கம்பியூட்டரெல்லாம் தெரியும். நீங்கதான் எம்.டி.க்கு வலது கை ஆச்சே.. எப்படியாவது உங்க கம்பெனில சேத்து விட சொல்லி உங்க தம்பிட்ட பேசினேன்.. அப்பத்தான்.."

போடாங்.....
--------------------------------------------------------------------------------

6 comments:

நாடோடி இலக்கியன் said...

//இப்போதெல்லாம் பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய்க்கு கம்மியாகவும், போலீஸ்காரர்கள் நூறு ரூபாய்க்கு கம்மியாகவும் வாங்குவதில்லை என்று கேள்விப்பட்டதால் மூடிக்கொண்டு இருந்துவிட்டேன்//

:)

பரிசல்காரன் said...

வந்ததற்கு நன்றி! நிஜமில்லையா நாடோடி?

Thambi GIRISH said...

முதுகில் உணர்ந்தான்.
எப்படி? இந்த சிந்தனை? வெரி நைஸ் சூப்பர்.

லக்கிலுக் said...

ஆளாளுக்கு இந்த மாதிரி அவியல் போட்டு கலக்குனா நானெல்லாம் காண்டு கஜேந்திரன் பதிவு மட்டும் எழுதிட்டு காலத்தை கழிக்க வேண்டியது தான் :-(

பரிசல்காரன் said...

என்ன லக்கி சார், உங்களுக்கு பதிவு போட மேட்டர் இல்லையா? சும்மா வுடாதீங்க! ஒரு தடவை வெளில எட்டிப்பாத்தா அத வெச்சு ஒம்போது பதிவு போட்டு கலக்குற தல நீங்க!

தம்பி கிரீஷ் , நன்றி! எழுதும்போதே இந்த வரிகள் உன்னை கவரும் என்று நினைத்தேன்!

வெட்டிப்பயல் said...

//இப்போதெல்லாம் பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய்க்கு கம்மியாகவும், போலீஸ்காரர்கள் நூறு ரூபாய்க்கு கம்மியாகவும் வாங்குவதில்லை என்று கேள்விப்பட்டதால் மூடிக்கொண்டு இருந்துவிட்டேன்.//

Excellent...

மிகவும் இரசித்தேன்