Wednesday, July 29, 2009

காதல் அழிவதில்லை

“டேய்... மகேஸ்வரி இங்கதான வரச் சொன்னா? மாத்தமில்லையே?” என்றான் ரமேஷ். என் நண்பன்.

கல்லூரியில் படிக்கும்போதே நான்கைந்து பேரைக் காதலித்து, அனைத்திலும் தோற்றிருந்தான் அவன். அதாவது அவனது காதலை யாருமே ஏற்கவில்லை.

வேண்டாம் இப்படிச் சொன்னால் அவனுக்கு மிகவும் கோவம் வரும்.

“போடாங்க..... முட்டைக்கண்ணியை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டான் ராஜா. இப்ப என்னாச்சு.. வாரா வாரம் நம்ம கூட சரக்கடிக்கறப்ப அவளை பேயி பிசாசுன்னு திட்டிகிட்டிருக்கான். நான் லவ் பண்ணின எந்தப் பொண்ணைப் பத்தி எவன் தப்பா பேசினாலும் வகுந்துடுவேன். அவ்ளோ லவ்வை இன்னும் எல்லார் மேலையும் வெச்சிருக்கேன் தெரிஞ்சுக்க.. என்னைப் போயி லவ்வுல தோத்தவன்னு சொல்லாதீங்க” என்பான்.

இவன் காதலித்த பெண்களைப் பத்தி யாரும் பேசக்கூடாதென்றால்.. எந்தப் பெண்ணைப் பற்றியும் யாரும் பேசக்கூடாதே என்று நினைத்துக் கொள்வேன்.

“என்னடா கேகே.... கேட்டதுக்கு பதிலே சொல்லல நீ? மகேஸ்வரி இங்கதான வரச்சொன்னா?” – என்றபடி என் நினைவைக் கலைத்தான் ரமேஷ்.

“ஆங்.. ஆமாடா.. மணி அஞ்சு ஆச்சு. இன்னும் காணோமே” என்றபடி.

ந்த இடத்தில் - நாங்கள் நிற்கிற இடத்திலல்ல. கதையில் இந்த இடத்தில் – மகேஸ்வரியைப் பற்றியில் சொல்லியாக வேண்டும். மின்னும் மாநிறத்தில் இருப்பாள். அருகிலுள்ள கல்லூரியில் பி.எஸ்.ஸி மூன்றாமாண்டு படிக்கிறாள். நாங்கள் வேலைக்குச் சென்று கொண்டிருந்த அலுவலத்தைத் தாண்டித்தான் தினம் சென்று கொண்டிருந்தாள் அவள். ஏதோ ஒரு நாள் அவளைப் பார்த்துத் தொலைத்துவிட்டான் ரமேஷ். அன்றைக்கு ஆரம்பித்தது எனக்கு..

“இதுவரைக்கு ஆறேழு பேரை லவ் பண்ணிருக்கடா நீ’ன்னு கிண்டல் பண்ணுவீங்களேடா.. ஏன் அந்த ஆறேழு பேரும் எனக்கு செட்டாவலன்னு இப்போதாண்டா தெரிஞ்சது”

“ஆறேழு பேரையும் செட் பண்ணிருந்தா அதுக்கு பேர் லவ்வாடா?” சிரிக்காமல்தான் கேட்க வேண்டும் அவனிடம். காதலைப் பற்றி பேசும்போது சிரித்தால் அவனுக்குப் பிடிக்காது.

“சும்மா இரு. இன்னைக்கு ஒரு பொண்ணைப் பார்த்தேன். வெள்ளைக் கலர் சுடிதார்ல..”

“சும்மா தேவதை மாதிரி இருந்தாளா?”

“டேய்... எப்படிடா இவ்ளோ கரெக்டா சொல்ற? பார்த்தியா?” என்றவனிடம்
“இதுதாண்டா அடுத்த டயலாக்.. எத்தனை வாட்டி கேட்டிருக்கேன் உன்கிட்டேர்ந்து.. பார்க்க வேற செய்யணுமாக்கும்?” என்று கேட்டேன்.

“ஆனா இவ நெஜமான தேவதைடா.. தேவதைங்கறதெல்லாம் கற்பனையில்லன்னு எனக்குத் தெரிய வெச்சவ” என்று ஆரம்பித்து வர்ணிக்க ஆரம்பித்தான்.

காதலிப்பவனுக்கு நண்பனாயிருப்பதன் கொடுமைகளை நீங்கள் உணரவேண்டுமென்றால் அப்படி இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் கோபிகிருஷ்ணனின் அம்மன் விளையாட்டு கதையைப் படியுங்கள். அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தான் ரமேஷ் என்னை.

எப்படியோ அவள் பெயர் வீடு விபரங்களையெல்லாம் சேகரித்தோம். ஒரு மாதத்துக்கும் மேலாக சரியாக அவள் வரும் நேரம் அலுவலகத்துக்கு வெளியே சென்று நின்று கொள்வான். சும்மாயிராமல் என்னை வேறு அழைத்துக் கொள்வான். ‘ரெண்டு பேரும் நின்னா அவ யார் நம்மளை லுக்கு விடறான்’னு அவ குழம்பீடுவா.. நீ மட்டும் போடா’ என்றாலும் கேட்க மாட்டான். அவள் அணிந்து வரும் உடையின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஏதோ ஒரு வண்ணம் இவன் உடையில் இருக்கிறதென்பான். அவள் எங்காவது பார்த்தால் ‘என்னைப் பார்க்க வெக்கப்பட்டு வேற பக்கம் பார்க்கறா பாரு’ என்பான். அவள் கையை எதற்காவது உதறவோ, அல்லது நண்பிகளோடு பேசும்போது தலையை சிலுப்பிக் கொண்டாலோ ‘ச்சே.. எனக்கும் இதே மேனரிசம் இருக்கு. கவனிச்சியா’ என்பான். ஒரு நாள் அவள் வளையல்கள் ஏதுமில்லாத கைகளோடு கடந்தாள். அன்றைக்குத்தான் இவனும் இவனது வாட்சை ஏதோ ரிப்பேருக்காகக் கொடுத்திருந்தான். அவ்வளவுதான். அன்றைக்கு முழுவதும் இதே பேச்சுதான். ‘எப்படிடா... எப்படி இதெல்லாம்..’ என்று உருகித் தள்ளிவிட்டான். அவள் வலது காலில் வலது செருப்பும், இடது காலில் இடது செருப்பும் போடுவது கூட தன்னைப் பார்த்துதான் என்று சொல்லும் நிலைமைக்கு வந்துவிடுவான் என்று எண்ணிக் கொண்டேன். அதற்கு முன் அந்த சம்பவம் நடந்தது.

ஏதோ ஒரு நாள் நான் எதேச்சையாக அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது மகேஸ்வரி எதிரே வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் நேராக என்னை நோக்கியே வந்து கொண்டிருந்தாள். நான் திரும்பிப் பார்த்தேன். அலுவலகத்தில் எங்கள் அறை ஜன்னலில் ரமேஷ் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். இவளெதற்கு என்னை நோக்கி வருகிறாளென நான் குழம்பிப் போயிருக்கும்போதே ‘நாளைக்கு அஞ்சு மணிக்கு முனிசிபல் காம்ப்ளக்ஸ் செல்வா ஃபேன்சி கடைக்கு முன்னாடி வாங்க’ என்று மட்டும் சொல்லிவிட்டு கடந்துவிட்டாள்.

கொஞ்சம் கலாச்சாரக் கந்தாயங்களையெல்லாம் மறந்து விடுங்கள். நண்பனின் காதலியைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறானே என்றெல்லாம் எண்ணாமல் இதைப் படியுங்கள். மகேஸ்வரி அருகில் வந்து பேசியபோதுதான் கவனித்தேன். எவன் சொன்னது சிவப்பு நிறம்தான் அழகென்று? மாநிறத்தில் அப்படியொரு தேஜஸ்வினியாயிருந்தாள். செதுக்கி வைத்த மாதிரி நச்சென்று இருந்தாள். அருகில் வந்து பேசிச் சென்றபோது வீசும் காற்றில் அவள் வாசத்தை விட்டு விட்டுச் சென்றிருந்தாள். கொஞ்ச நேரம் இப்படியே நின்றிருந்தால், நான் அவளைக் காதலித்திருப்பேன். அதற்குள் ரமேஷ் என் முதுகைத் தட்டிக் கொண்டிருந்தான். ‘என்னடா பேய் பிடிச்சவனாட்டம் நிக்கற? என்ன சொன்னானு நாலு வாட்டி கேட்டுட்டேன்’ என்றான்.

“நாளைக்கு அஞ்சு மணிக்கு செல்வா கவரிங்கிட்ட வரச்சொன்னாடா” இதை எழுத்தில் ஒரே வரியில் எழுதிவிட்டேன். ஆனால் சொல்லும்போது தந்தி அடித்த மாதிரித்தான் சொன்னேன்.

‘எப்படிடா.. எப்படி இதெல்லாம்?’ என்றபடி ரமேஷ் வானத்தில் பறக்க ஆரம்பித்திருந்தான்.

“கேகே.. வர்றாடா.. வர்றாடா” என் ஃப்ளாஷ்பேக்கை கலைத்தான் ரமேஷ். “எப்படி வர்றா பாருடா” என்றான். உண்மைதான் மஞ்சள் நிற சுடிதார். கருப்பு ஷாலை கழுத்துக்குச் சுற்றியிருந்தாள். எங்கள் அருகே வந்ததும் என்னை நேருக்கு நேராகப் பார்த்து “நீங்க மட்டும் கடைக்குள்ள வாங்க” என்றுவிட்டு அந்தக் கடைக்குள் நுழைந்தாள்.

ஏன் எதற்கு என்று கேட்கவோ, ரமேஷிடம் ஏதும் சொல்லவோ செய்யாமல் அவளைத் தொடர்ந்தேன்.

வாசகர்கள் நினைக்கும் எந்தத் திருப்பத்திற்கும் இடம் கொடுக்காமல் மகேஸ்வரி நேரடியாகவே விஷயத்தைப் போட்டு உடைத்தாள். “உங்க ஃப்ரெண்டு டெய்லி என்னைப் பார்க்கறதும், லீவு நாட்கள்ல கூட எங்க வீட்டுப் பக்கம் சுத்தறதும் வேண்டாம்ன்னு சொல்லுங்க” அடுத்த வார்த்தையை அவள் சொல்லும் இடைவெளியிலும் நான் எதற்கோ காத்திருந்தேன். அப்படியேதும் சொல்லவில்லை. நானும் எதையோ எதிர்பார்த்திருந்தேனோவென இப்போது உணர்கிறேன்! “அவர் பார்க்கறதெல்லாம் என்னால தாங்க முடியறதில்லைங்க. நேரடியா வந்து சொல்லவும் மாட்டீங்கறாரு. அதான் நானே சொல்றேன். நான் அவரை லவ் பண்றேங்க” – கடையில் ஏதோ ஒரு குழந்தை பலூனை உடைக்கும் சத்தம் கேட்டது. “போய் சொல்லுங்க. இனியாவது இப்படி திருட்டுத் தனமா பார்க்கற வேலையெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க” இதைச் சொல்லும்போது அவள் கன்னங்களின் நிறமாற்றம் அவள் காதலைச் சொல்லிற்று.

ஒரு வாரத்துக்கு கொண்டாடினோம். அதற்குப் பிறகு எனக்குக் கொஞ்சம் ரமேஷிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்று நினைத்தேன். அதுதான் இல்லை.அவள் இதைச் சொன்னாள், அதைச் சொன்னாள் என்று போட்டு வறுத்தெடுக்கத் தொடங்கியிருந்தான். மகேஸ்வரி இவனை மிகப் புரிந்துவைத்தவளாயிருந்தாள்.

ஒரு வருடம் கழித்து மகேஸ்வரியின் வீட்டில் திருமணப் பேச்செடுக்க ஆரம்பித்தார்கள். தன் காதலைச் சொல்லிவிட்டாள். எதிர்பார்த்த எதிர்ப்பெல்லாம் இருக்கவில்லை. ரமேஷ்தான் வீட்டில் சொல்ல பயந்துகொண்டிருந்தான். மகேஸ்வரியின் தந்தையே ரமேஷின் வீட்டிலும் பேசி.. திருமணத்தை இனிதே முடித்து வைத்தார்கள்.

அவ்வளவுதான்.

இதெல்லாம் நடந்தது 12 வருடங்களுக்கு முன்.

சென்ற வாரம் ஊருக்குப் போயிருந்தபோது ரமேஷின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். “ஐ! கேகே... வா. வா..” என்றபடி மகேஸ்வரிதான் வரவேற்றாள். “அப்படியேதான்பா இருக்க நீ” என்றேன். சிரித்தாள். “ரமேஷ் இல்லையா?”

“குளிச்சிட்டிருக்காரு.. உட்காரு. டிஃபன் பண்றேன்... ராகவ்... கேகே அங்கிள் வந்திருக்காருடா” என்று தன் மகனின் அறை முன் நின்று சொல்லிவிட்டுச் சென்றாள். உள்ளேயிருந்து “அங்கிள் டென் மினிட்ஸ்ல வர்றேன்” என்று குரல் மட்டும் கேட்டது. கம்ப்யூட்டரில் இருப்பான்.

டீபாய் மீதிருந்த நாளிதழை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன். அப்துல்கலாமிடம் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கேட்க ஆரம்பித்திருந்தபோது “டேஏஏஏய்...” என்று முதுகில் தட்டியபடி அருகில் அமர்ந்தான் ரமேஷ்.

“எவ்வளவு நாளாச்சுடா பார்த்து” என்று விசாரித்துக் கொண்டிருக்கும்போது மகேஸ்வரி காஃபியுடன் வந்தாள்.

“ஐ!” கத்தினான் ரமேஷ். “மகேஸ்.. நீ க்ரீன் நைட்டி போட்டதை நான் கவனிக்கவே இல்ல. பாரேன் நானும் க்ரீன் கலர் டி ஷர்ட்தான் போட்டிருக்கேன்” என்று கத்தி என்னைத் திரும்பிப் பார்த்தான். “பார்த்தியா... எப்படிடா... எப்படி இதெல்லாம்...? ”

சில காதல்கள் அழிவதே இல்லை.



.

44 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை நண்பரே...!

கவிதை எதிர்பார்த்தேன்...!

பர்வால்ல, அடுத்த முறை வர்ரேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

கவிதை ரொம்ப பெரிசா இருக்கே? :)
சிலர் சொன்ன கருத்தை நிரூபிக்கும் முகாந்திரமா?

நன்று.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

தராசு said...

//இந்த இடத்தில் - நாங்கள் நிற்கிற இடத்திலல்ல. கதையில் இந்த இடத்தில்//

இந்த இடத்துல தான் பரிசல் அண்ணாச்சி தனியா நிக்கறாரு.

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்குங்க,
ஃபைனல் டச் நச்.

சரவணகுமரன் said...

சூப்பர்'ங்கண்ணா...

Cable சங்கர் said...

எ.. கம்பேக்..

கார்க்கிபவா said...

//இந்த இடத்துல தான் பரிசல் அண்ணாச்சி தனியா நிக்கறாரு//

பரிசல், அண்ணாச்சி தனியா நிக்கறார்ன்னு சொல்றீங்களா?

பரிசலும், அண்னாச்சியும் நிக்கறாஙக்ளா?

இல்லை, பரிசலை அண்னாச்சி என்கிறீர்களா?

விளக்கம் ப்ளீஸ் தராசண்ணே..

நல்ல கதை பரிசல். மீதி கருத்தை சுந்தர்ஜியும், லக்கியும் வந்து போன் பிறகு சொல்கிறேன் :)))

GHOST said...

காதல் அழிவதே இல்லை.

ஆண்மை குறையேல்.... said...

க‌ல‌க்குறீங்க‌ பாஸ்..."உங்க‌ முடிவு என‌க்கு பிடிச்சிருக்கு" நீங்க‌ளாவ‌து காத‌ல் பொய், நொள்ளைனு சொல்லாம‌ விட்டுடீங்க‌ளே...வாழ்க‌ வ‌ள‌முட‌ன்...

வெண்பூ said...

கலக்கிட்டீங்க பரிசல்.. நீங்க அருமையா கதை எழுதுவீங்கன்னு லக்கி சொன்னதை காப்பாத்தீட்டீங்க.. பாராட்டுகள்.

நாஞ்சில் நாதம் said...

:))

நிகழ்காலத்தில்... said...

சிறுகதை மாதிரி இல்லை, உண்மையில் நடந்தது போல் நன்கு அமைந்திருக்கிறது.
எழுத்து நடை இயல்பாக வந்திருக்கிறது.
வாழ்த்துக்கள்.,

ரமேஷ் என்கிற பெயர்தான்..!!??

தலைவர் சார்பாக.....:)))))

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகா இருக்கு பரிசல்.

Saminathan said...

//ரமேஷ் என்கிற பெயர்தான்..!!??

தலைவர் சார்பாக.....:))))) //

ஒஹோ....அப்படியா..!!!!

புன்னகை said...

//சில காதல்கள் அழிவதே இல்லை.//
நிஜம் தான்! :-)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசித்த ஒன்று! ரொம்ப நல்லா இருக்குங்க பரிசல்!

தராசு said...

//விளக்கம் ப்ளீஸ் தராசண்ணே..//

ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா...

பரிசலண்ணாச்சி, போதுமாய்யா.....

☼ வெயிலான் said...

// ரமேஷ் என்கிற பெயர்தான்..!!??

தலைவர் சார்பாக.....:)))))

ஒஹோ....அப்படியா..!!!! //

ஆஹா! நம்ம சங்கத்துகாரங்ங வேலய ஆரம்பிச்சிட்டாங்ஙப்பு......

butterfly Surya said...

கேகே.. அருமை.

என்ன சொல்ல போறீங்க என்று எதிர்பர்த்ததில் final touch .. சூப்பர்.

Unknown said...

இது உண்மைக்கதையா? ஏன்னா நிஜத்திலே இப்படி அதிகம் நடக்கறது இல்லை :-)

நர்சிம் said...

//காதலிப்பவனுக்கு நண்பனாயிருப்பதன் கொடுமைகளை நீங்கள் உணரவேண்டுமென்றால் அப்படி இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் கோபிகிருஷ்ணனின் அம்மன் விளையாட்டு கதையைப் படியுங்கள்//

மிக ரசனையான இடம் பரிசல்..

Actress Videos said...

Great Krishna...Nice postings...really superb..


Regards
Sakthi Dasan.S
Visit: http://www.ourembeddedmemories.com

Unknown said...

நாடோடி இலக்கியன் said...
///நல்லாயிருக்குங்க,
ஃபைனல் டச் நச்.///

ரிப்பீட்டோய்

Truth said...

உங்க பதிவுகளை படிச்சு ரொம்ப நாள் ஆச்சு. அருமையா இருக்கு பரிசல்.

சுபானு said...

அருமையாக இருக்கின்றது...

dharshini said...

கதை மிகவும் அருமை பரிசல் அண்ணா..
காதல் அழிவதில்லை.. ஃபைனல் சூப்பர்...

RaGhaV said...

//சில காதல்கள் அழிவதே இல்லை//

நச்ச் முடிவு.. :-)))

சூர்யா said...

kalakiteenga...thinamum unga bloga check panniduvaen...emathama ezhuthureenga..vaazhthukkal..
ippadikku..
ungal valaipathivu nanbar vattathil sera ninaikku..thambi

பரிசல்காரன் said...

கொஞ்சம் வேலையாக இருந்துவிட்டேன். பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த அனைவருக்கும் மிகவும் நன்றி!

கோபிநாத் said...

\\கடையில் ஏதோ ஒரு குழந்தை பலூனை உடைக்கும் சத்தம் கேட்டது.\\

:)))

நிலாமதி said...

நல்ல ஒரு காதல் கலியாணத்தில் முடிந்த திருப்தியில் .....
..காலமெலாம் காதல் வாழ்க. ...

Kavi said...

கதை சூப்பர்.

Anonymous said...

//கல்லூரியில் படிக்கும்போதே நான்கைந்து பேரைக் காதலித்து, அனைத்திலும் தோற்றிருந்தான் அவன். //
கடைசியாய் காதலில் ஜெயித்து இன்னும் மனைவியை காதலித்துக்கொண்டே இருக்கும் ரமேஷ் கதை மாதிரியே ஒரு கதை எனக்கும் தெரியுமே. !!

HVL said...

நல்ல கதை , சரளமான நடை .....
அருமை !

Rajan said...

//மகேஸ்வரி அருகில் வந்து பேசியபோதுதான் கவனித்தேன். எவன் சொன்னது சிவப்பு நிறம்தான் அழகென்று?//

நீங்க நம்ம ஜாதி !
நான் எல்லாம் எவ்வளவு !!!!!!!

Rajan said...

நாம இருக்கற வரைக்கும் காதல் அழியவே அழியாது .....!?????

-- said...
This comment has been removed by the author.
-- said...
This comment has been removed by the author.
-- said...

சில காதல்கள் அழிவதே இல்லை.

காதலிப்பவர்களின் நண்பர்கள்,
அவர்களால் அடையும் துன்பங்களைப் போலவே.


"காதல் அழிவதில்லை"
பரிசலாரின் எழுத்தைபோல...!

Thamira said...

சரியான மொக்கைக்கதை.! (இந்த மொக்கைக்கு அர்த்தம் என்னவென்று கார்க்கிக்கு போன் போட்டு கேட்கவும்)

அப்புறம் நீங்கள் தூயோன் தொகுப்பை வாசித்துவிட்டீர்கள் என நம்பிவிட்டோம். அப்படியே சுஜாதாவின் டைஹார்ட் ஃபேன் என்பதையும் அறிவோம்.

கார்ல்ஸ்பெர்க் said...

அண்ணா சூப்பர்..

Zen said...

This has come good. Good luck.

அரங்கப்பெருமாள் said...

அமைதியான ஏரியில் பரிசல் சவாரி போல இருந்தது. மீண்டும் பயணிப்போம்...

மங்களூர் சிவா said...

//காதலிப்பவனுக்கு நண்பனாயிருப்பதன் கொடுமைகளை நீங்கள் உணரவேண்டுமென்றால் அப்படி இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் கோபிகிருஷ்ணனின் அம்மன் விளையாட்டு கதையைப் படியுங்கள்//

இல்ல இந்த பதிவுலயே நல்லா புரிஞ்சிடுச்சு!
:)))))))))))))