Tuesday, July 28, 2009

தொலைந்து போனவனின் தந்தை

விபத்து நடந்த சாலை


ற்றுமுன்னர்தான் அந்த
விபத்து நடந்திருந்தது.
யார் மீது தவறிருந்திருக்குமென
பலர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
இறந்தவனுக்கு வயது 20 இருக்குமா,
25 இருக்குமா என்று சிலர்
விசனத்தில் இருந்தார்கள்.
கல்யாணமாகியிருக்குமாவெனவும்
சிலருக்கு சந்தேகம் இருந்தது.
இன்னொரு அடிபட்டவனை
ஆம்புலன்ஸ் ஏற்றிச் சென்றிருந்தது.
போலீஸுக்குத் தகவல் சொன்னவன்
இளைஞனாயிருந்தான்.
அவன்தான் இறந்தவனின் உடன் வந்தவனின்
அலைபேசியை வைத்திருப்பதாகச் சொன்னார்கள்.
அதில் பார்த்து
யாருக்காவது தகவல் சொல்லலாமென
பச்சை சட்டை அணிந்த ஒரு பெரியவர்
சொல்லிக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரத்தில் அந்த சாலை
நெரிசலதிகமாக ஆகியிருந்தது.
எனக்கு வீட்டுக்குச் செல்ல நேரமாகிவிட்டிருந்தது.



------------------------------------------




தொலைந்து போனவனின் தந்தை


தியாகராஜன் பனிரெண்டாவது படித்து முடித்த
அடுத்த வருடம் தொலைந்து போனான்.
அவனது சமீபத்திய புகைப்படம் கிடைக்காமல்
நாங்களெல்லாம் க்ரூப்பாக இருந்த புகைப்படமொன்றை
அவனது தந்தை வாங்கிப் போனார்.
அந்தப் புகைப்படத்தில்
தியாகராஜனின் தலைமேல்
சார்லஸின் கைவிரல்கள் கொம்பு போல இருந்தது.
எங்கெல்லாமோ தேடியும் அவன் கிடைக்கவில்லை.
அவன் வீட்டு நாய்
ஒரு வாரமாக சாப்பிடாமலிருந்தது.
பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு
சென்ற மாதம் அவனது தந்தையைப்
பார்க்கச் சென்றிருந்தேன்.
அவன் வீட்டு முன்னறையில்
அந்த க்ரூப் ஃபோட்டோ மாட்டப்பட்டிருந்தது.
அதில் நான் என்னைத்
தேடிக் கொண்டிருந்தபோது
‘வாப்பா கிருஷ்ணா’ என்றபடி வந்தார்
தொலைந்து போனவனின் தந்தை.




.

33 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

உங்கள் கவிதையில் தொலைந்துபோனேன்.

நிகழ்வுகள் கண் முன்காட்டும் தன்மை உங்கள் எழுத்துக்கு உண்டு.

இதை படிப்பவர்கள் என்னை போலவே அந்த பெரியவரை பார்த்திருப்பார்கள்...!

ஸ்வாமி ஓம்கார் said...

எனக்கு ரெம்ப நாள ஒரு 'ஆசை' பரிசல் அதை செஞ்சுக்கவா? :)

அடுத்த கமெண்டில் அதை சொல்லறேன்

ஸ்வாமி ஓம்கார் said...

அது வந்து அது வந்து.........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மீ த பஸ்ட்.

முதல் முதலா ஒரு வலைபதிவுக்கு போடுறேன் :)

லக்கிலுக் said...

ரவிசங்கர் பாணி கவிதைகள். தொடருங்கள் பரிசல் :-)

லக்கிலுக் said...

கீழே இருக்கும் இரண்டு பாராவும் கூட கவிதைதானா என்று படித்துச் சொல்லவும்! :-)

சற்றுமுன்னர்தான் அந்த விபத்து நடந்திருந்தது. யார் மீது தவறிருந்திருக்குமென பலர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இறந்தவனுக்கு வயது 20 இருக்குமா,
25 இருக்குமா என்று சிலர் விசனத்தில் இருந்தார்கள். கல்யாணமாகியிருக்குமாவெனவும் சிலருக்கு சந்தேகம் இருந்தது. இன்னொரு அடிபட்டவனை ஆம்புலன்ஸ் ஏற்றிச் சென்றிருந்தது. போலீஸுக்குத் தகவல் சொன்னவன் இளைஞனாயிருந்தான். அவன்தான் இறந்தவனின் உடன் வந்தவனின் அலைபேசியை வைத்திருப்பதாகச் சொன்னார்கள். அதில் பார்த்து யாருக்காவது தகவல் சொல்லலாமென பச்சை சட்டை அணிந்த ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் அந்த சாலை நெரிசலதிகமாக ஆகியிருந்தது. எனக்கு வீட்டுக்குச் செல்ல நேரமாகிவிட்டிருந்தது.

தியாகராஜன் பனிரெண்டாவது படித்து முடித்த அடுத்த வருடம் தொலைந்து போனான். அவனது சமீபத்திய புகைப்படம் கிடைக்காமல் நாங்களெல்லாம் க்ரூப்பாக இருந்த புகைப்படமொன்றை அவனது தந்தை வாங்கிப் போனார். அந்தப் புகைப்படத்தில் தியாகராஜனின் தலைமேல் சார்லஸின் கைவிரல்கள் கொம்பு போல இருந்தது. எங்கெல்லாமோ தேடியும் அவன் கிடைக்கவில்லை. அவன் வீட்டு நாய்
ஒரு வாரமாக சாப்பிடாமலிருந்தது. பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு சென்ற மாதம் அவனது தந்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவன் வீட்டு முன்னறையில் அந்த க்ரூப் ஃபோட்டோ மாட்டப்பட்டிருந்தது. அதில் நான் என்னைத் தேடிக் கொண்டிருந்தபோது
‘வாப்பா கிருஷ்ணா’ என்றபடி வந்தார் தொலைந்து போனவனின் தந்தை.

தராசு said...

வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

நன்றி ஸ்வாமிஜி!

@ லக்கி லுக்

தொலைந்து போனவனின் தந்தையை தொடர் பாராவாகத்தான் எழுதியிருந்தேன். கவிதையில் அதுவும் ஒரு பாணி என்று! கடைசியில்தான் மாற்றினேன்.

//கீழே இருக்கும் இரண்டு பாராவும் கூட கவிதைதானா என்று படித்துச் சொல்லவும்!//

நானெழுதுவதெல்லாமே கவிதையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் நீங்கள் எழுதியது குறித்து விமர்சிக்க எனக்கு தகுதியில்லை!

BTW, ஏன் யுவகிருஷ்ணாலேர்ந்து மறுபடி லக்கிலுக்காய்ட்டீங்க???

பரிசல்காரன் said...

@ தராசு

எதுக்கு வாழ்த்தறீங்க? லக்கி இப்படி விரட்டி விரட்டி அடிக்கறாரே.. அதுக்கா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

*இயற்கை ராஜி* said...

ஓ...இப்படி கூட கவிதை எழுதலாமோ:-)

silverhawks said...

"தொலைந்து போனவனின் தந்தை" இதை கவிதை என்று ஒப்புகொள்ள இயலவில்லை. கதை எழுதுவதற்கான எல்லா தகுதியும் உங்களுக்கு உண்டு.

எம்.எம்.அப்துல்லா said...

// இய‌ற்கை said...
ஓ...இப்படி கூட கவிதை எழுதலாமோ:-)


//

குட் கொஸ்டீன் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரெண்டு கவிதைகளுமே ரொம்ப நல்லா வந்திருக்கு பரிசல். ஆடம்பர வார்த்தைப் பூச்சுகளற்ற நேரடிக் கவிதைகள். தொடர்ந்து எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.

லக்கி, நீங்க பாராவாக எழுதியிருப்பதும் கவிதைதான் :)

Vinitha said...

நிஜமா நல்லா இருக்குங்க பரிசல் கிருஷ்ணா.

( நாங்கெல்லாம் எழுதுறதே கவிதை மாதிரி தான்... )

:-)

--
வினிதா

butterfly Surya said...

நல்லாயிருக்கு நண்பா.

நீங்க கலக்குங்க..

நர்சிம் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ரெண்டு கவிதைகளுமே ரொம்ப நல்லா வந்திருக்கு பரிசல். ஆடம்பர வார்த்தைப் பூச்சுகளற்ற நேரடிக் கவிதைகள். தொடர்ந்து எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.
//

ஆறுமுகம்...

அப்பாவி முரு said...

////கீழே இருக்கும் இரண்டு பாராவும் கூட கவிதைதானா என்று படித்துச் சொல்லவும்!//



கொடிக்கம்பத்தை படுக்க வச்சு அளந்தா அது, நீளம்!

அதே கொடிக்கம்பத்தை நிக்க வச்சு அளந்தா அது உயரம்!!

விக்னேஷ்வரி said...

மிக அழகான வரிகள். ரொம்ப நல்லாருக்கு பரிசல்.

அத்திரி said...

//நெரிசலதிகமாக ஆகியிருந்தது.
எனக்கு வீட்டுக்குச் செல்ல நேரமாகிவிட்டிருந்தது.//

நிகழ்காலம்...............

ஆதவா said...

தற்செயலாக இந்த பக்கம் வந்தேன் பரிசல்.

முதல் கவிதை பிரமாதம். ஆனால் அதில் தவறுமில்லை. சுயநலம் சார்ந்த சிந்தனைகளோடு பாதங்கள் திரும்புவதில் என்ன தவறு இருக்கப் போகிறது. அவரவர்க்கு அவரவர் வாழ்க்கை...!!!

இரண்டாவது கவிதையில் அவன் வீட்டு நாய்
ஒரு வாரமாக சாப்பிடாமலிருந்தது. எனும் வரிகள் இடைஞ்சலாக இருப்பதாக உணருகிறேன் பின்னர், "அவனது தந்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன்" எனும் வரிகளுக்குப் பிறகு "அவன் வீட்டு" என்பதற்குப் பதிலாக "அவர் வீடு" என்று குறிப்பிடவேண்டுமென நினைக்கிறேன்.

நன்றாக இருக்கிறது

அன்புடன்
ஆதவா

பரிசல்காரன் said...

@ இயற்கை

ஆமாங்க!

@ silverhawks

THanks!

@ அப்துல்லா
கி கி கி

பரிசல்காரன் said...

@ ஜ்யோவ்ராம் சுந்தர்

ஜ்யோவ்ண்ணா..

உங்க ஒருத்தர் கமெண்டை எவ்ளோ நேரம் எதிர்பார்த்தேன் தெரியுமா? காலைலயே வந்து இதைச் சொல்லியிருக்கககூடாதா? கொஞ்சம் கெத்தா எல்லாருக்கும் பதில் சொல்லியிருப்பேன்ல!

@ வினிதா, வண்ணத்துப்பூச்சியார், நர்சிம்

நன்றி!

@ அப்பாவி முரு

கலக்கல்! நீர் அப்பாவி இல்ல.. அடப்பாவி!

@ விக்னேஸ்வரி & அத்திரி

மிகவும் நன்றி!

பரிசல்காரன் said...

@ ஆதவா

உங்களுக்குக் கொஞ்சம் விரிவாகவே...

//தற்செயலாக இந்த பக்கம் வந்தேன் பரிசல். //

அதுல என்ன தப்பு? ஐயோ தெரியாம வந்துட்டேன்னு சொல்ற மாதிரி இருக்கு! :-))))

முதல் கவிதை குறித்த விமர்சனத்துக்கு நன்றி!

//இரண்டாவது கவிதையில் அவன் வீட்டு நாய்
ஒரு வாரமாக சாப்பிடாமலிருந்தது. எனும் வரிகள் இடைஞ்சலாக இருப்பதாக உணருகிறேன்//

இதற்குப் பின்னே ஒரு கதை இருக்கிறது ஆதவா. கவிஞன் (நாந்தான்) என்ன சொல்கிறானென்றால் ஃபோட்டோ கொடுத்ததோடு நண்பர்களிடமிருந்து எந்த சலனமுமில்லை. நாய்கூட சாப்பிடாமல் இருந்து தன் துக்கத்தை தெரியப்படுத்துகிறது என்கிறார்.

//"அவன் வீட்டு" என்பதற்குப் பதிலாக "அவர் வீடு" என்று குறிப்பிடவேண்டுமென நினைக்கிறேன். ///

இதையும் நீங்கள் புரிந்துகொள்ளாதது ஆச்சர்யமாயிருக்கிறது! அதாவத் இதில் கவிஞன் (மறுபடி நாந்தான்!) என்ன சொல்கிறானென்றால்---

அவன் - தந்தையல்ல.. தியாகராஜன்தான். என்றேனும் தியாகராஜன் வருவானென்று வீட்டை தியாகராஜனின் வீடாகத்தான் அவர் (தந்தை) வைத்திருக்கிறார் என்பதே கவிஞனின் கருத்து!

இதையெல்லாம் சொன்னா வாசகனின் எண்ணத்தில் குறுக்கிடுவதாய் ஆகும்! என்றாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.

Kumky said...

ஹி..ஹி.
(லேசா தலய சொறிஞ்சிட்டே ரெண்டு மூனு தடவ படிச்சிட்டேன்)

யாத்ரா said...

இரண்டு கவிதைகளுமே மிகவும் பிடித்திருக்கிறது.

மணிகண்டன் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு பரிசல். அடிக்கடி எழுதுங்க.

பரிசல்காரன் said...

நன்றி கும்க்கி (இங்கெயே தான் இருக்கும் இன்னும் பல தடவை படிக்கலாம்!)

நன்றி யாத்ரா!

நன்றி மணிகண்டன்!

ஆ.சுதா said...

நல்ல கவிதைகள் பரிசல்.
இன்னும் நிரைய...!!

மதன்செந்தில் said...

ஹெல்லோ பரிசல் காரரே..

என் பெயர் செந்தில், என்னை உங்களுக்குத் தெரியாது ஆனால் உங்களை எனக்குத்தெரியும், லக்கியில் வலைபதிவில் இருந்துதான் வருகிறேன்..

நீங்கள் சுஜாதாவில் சிறு சிறு சிறுகதைகள் படிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்.. அதுல இருக்க ஒரு சிறுகதை அப்படியே உங்களோட கவிதையா மாறி இருக்கு...

உங்களுக்கு தெரியும் சுஜாதாவை படித்தவர்கள் இங்கு நிறைய ஸோ.. நம் எழுத்துக்களில் மற்றவர்களின் தாக்கம் இருக்கலாம் ஆனால் அவர்களின் ஆக்கம் இருக்க கூடாது..

நன்றி..

மதன் செந்தில்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

பா.ராஜாராம் said...

இரண்டு கவிதைகளுமே வார்த்தை ஜாலங்களற்ற அற்புதம் கிருஷ்ணா!வாழ்த்துக்களும் அன்பும்..

மங்களூர் சிவா said...

/
அப்பாவி முரு said...

////கீழே இருக்கும் இரண்டு பாராவும் கூட கவிதைதானா என்று படித்துச் சொல்லவும்!//



கொடிக்கம்பத்தை படுக்க வச்சு அளந்தா அது, நீளம்!

அதே கொடிக்கம்பத்தை நிக்க வச்சு அளந்தா அது உயரம்!!
/

சூப்பர்!

மங்களூர் சிவா said...

/
ஸ்வாமி ஓம்கார் said...

உங்கள் கவிதையில் தொலைந்துபோனேன்.

நிகழ்வுகள் கண் முன்காட்டும் தன்மை உங்கள் எழுத்துக்கு உண்டு.
/

வழிமொழிஞ்சிக்கிறேன்
:))

Eswari said...

///மங்களூர் சிவா said...
/
அப்பாவி முரு said...

////கீழே இருக்கும் இரண்டு பாராவும் கூட கவிதைதானா என்று படித்துச் சொல்லவும்!//



கொடிக்கம்பத்தை படுக்க வச்சு அளந்தா அது, நீளம்!

அதே கொடிக்கம்பத்தை நிக்க வச்சு அளந்தா அது உயரம்!!
/

சூப்பர்!//

repeatuuuuuuuuu