Monday, July 27, 2009

அடுத்த கட்டம்

ஞாபகமிருக்கிறதா?

எல்லோர்க்கும் பெய்யும் மழை என்ற என் சென்ற வருடத்து பதிவில் செஸ் வீராங்கனை மோஹனப்ரியா பற்றியும் அவருக்கு நண்பர் அப்துல்லா செய்த உதவிகளையும் குறிப்பிட்டிருந்தேன்.


இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர்?

“இந்த ஜூலை (2009) மாசம் நடந்த இரண்டு போட்டிகளில் - அதாவது - ஜுலை ஐந்தில் நடந்த 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும், சென்ற ஞாயிறு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் மாநிலத்திலேயே முதலாவதாக வந்திருக்கிறார்” என்கிறார் ஜெயச்சந்தர். மோஹனப்ரியாவின் தந்தை.


“அப்துல்லாவின் உதவிகள் உங்களுக்கு பயனுள்ளதாய் இருந்ததா?”

“நிச்சயமாக. நீங்கள் முன்பே குறிப்பிட்டிருந்தது போல டைமர் கருவி கூட இல்லாமல் இரவல் வாங்கித்தான் போட்டிகளில் மோஹனப்ரியா கலந்து கொண்டிருந்தார். அப்துல்லா டைமர் கருவியும், பயிற்சி எடுத்துக் கொள்ள ஒரு மடிக்கணினியும் தந்து உதவினார்.

அதுமட்டுமில்லாமல் சில டோர்னமெண்டுகளில் அவள் கல்ந்து கொள்ளவும் ஸ்பான்சர்ஷிப் செய்தார்”MOHANAPRIYA. J


"அதற்குப் பிறகு அவர் என்னென்ன ஜெயித்தார்?”

“நாக்பூரில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் தங்க மெடல் வாங்கினார். ஈரானில் நடந்த ஆசிய 14 வயதுக்குட்பட்டோரான போட்டியில் 4வதாக வந்தார். வியட்நாமில் நடந்த - கிட்டத்தட்ட 70 நாடுகள் பங்கேற்ற WORLD YOUTH CHESS CHAMPIONSHIPல் - 14வது இடத்தில் வந்தார்.

இதெல்லாம் போக Women International Master (WIM) ஆக மூன்று Norms பெற்றாக வேண்டும். மோஹனப்ரியா இரண்டு Norms பெற்றிருக்கிறார். இன்னொரு முக்கியமான விஷயம் - தமிழக அளவில் இதுவரை பெண்களில் யாரும் ஒரு Norm கூட பெற்றது கிடையாது. சமீபத்தில் Under 16, Under 19 இரண்டிலும் மாநில முதலாவதாக வந்திருக்கிறார்”


“படிப்பு?”

“அப்போது அவள் பத்தாவது படித்துக் கொண்டிருந்தார். ஆறுமாதம் பள்ளிக்கு செல்ல இயலாது. பல போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். பல செஸ் வீரர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் முகப்பேர் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் படிக்கிறார். ஆறு மாதம் பள்ளிக்கு போகாததால் ஸ்பெஷல் கோச்சிங் எல்லாம் கொடுக்க வேண்டியதாயிற்று. படிப்புக்கு. அந்த செலவு வேறு. பிறகு மீண்டும் வந்தபோது செஸ் விளையாட்டில் இடைவெளியானதால் வார்ம்-அப் தேவைப்பட்டது. ஆகவே கிராண்ட் மாஸ்டர் கோச்சை ஏற்பாடு செய்து கிட்டத்தட்ட 30000 செலவில் மோஹனப்ரியாவிற்கு பயிற்சி அளித்தேன்”

“இதற்கெல்லாம் பண உதவி?”

“நானாகத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அவ்வப்போது சில ஸ்பான்ஸர்ஸ் கிடைத்தாலும் நிரந்தரமாக யாரும் ஸ்பான்ஸர் செய்ய முன்வரவில்லை. என் இரண்டாவது மகள் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளது படிப்புச் செலவு, குடும்பச் செலவுகளிடையே மோஹனப்ரியாவின் கனவை காய்ந்துவிடாமல் கொண்டு செல்வது பெரும்பாடாகத்தான் இருக்கிறது

தமிழ்நாடு செஸ் அசோசியேஷன் அவர்களுக்குட்பட்ட அளவில் உதவி செய்துகொண்டிருக்கிறார்கள் என்றாலும் அது போதுவதில்லை. உதாரணத்திற்கு மாநில அளவில் வெற்றி பெற்றால் - அடுத்த கட்டமாக - தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்ப அவர்கள் ஒத்துழைப்பார்கள். அப்படி செல்லும்போது ஒரு நாளுக்கான படியாக ரூ.100 கொடுப்பார்கள். அது போதாதில்லையா? அதற்காகத்தான் ஸ்பான்சர்சைத் தேட வேண்டியதாயிருக்கிறது”


“தற்போதைக்கு உங்களுக்கு என்ன உதவி தேவைப்படுகிறது?”

“16 & 19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் மாநில அளவில் முதலாவதாக வந்தார் அல்லவா.. அதன் அடுத்த படியாக அதே பிரிவுகளில் தேசிய அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 25-செப்.5 வரை மும்பையிலும், செப்டம்பர் 15 -25 கேரளாவிலும் நடக்க இருக்கிறது. இடையில் செப் 6-15 நாக்பூரிலும் ஒரு டோர்னமெண்ட் நடக்க இருக்கிறது. அதற்கான கோச்சிங்கிற்காக இருபதாயிரம், மற்றும் போக்குவரத்திற்காக முப்பதாயிரம் செலவாகும் என எதிர்பார்க்கிறோம். இப்போதைக்கு அதுக்கான ஏற்பாடுகளில்தான் இருக்கேன். எங்கிருந்தாவது உதவி வந்தடையும் என்ற நம்பிக்கையிருக்கிறது”

வாழ்க்கை ஒரு சதுரங்கம். நிச்சயமாக உங்கள் மகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வீர்கள் ஜெயசந்தர்!
.


13 comments:

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் மோகனபிரியா

Mahesh said...

வாழ்த்துகள் மோகனபிரியா !!

வாழ்த்துகள் பரிசல் !! follow-up செய்ததற்கு...இது போன்ற பொருளாதாரத் தடைகள் அவரது ஊக்கத்தை தடை செய்யாமல் இருக்க ப்ரார்த்தனை செய்கிறேன்.

நாஞ்சில் நாதம் said...

வாழ்த்துகள் மோகனபிரியா !!

வாழ்த்துகள் பரிசல் !! follow-up செய்ததற்கு...

Raju said...

அப்துல்லாவை நினைத்து புல்லரிக்கின்றது...!

மோஹனாவிற்கு வெற்றிகள் பல குவிக்க வாழ்த்துக்கள்.

குசும்பன் said...

வாழ்த்துக்கள் அப்துல்லா & மோகனபிரியா

கார்த்திக் said...

வாழ்த்துக்கள் மோகனபிரியா & அப்துல்லா!! இமயத்தை எட்டும் தூரம் தொலைவில் இல்லை..

கே.என்.சிவராமன் said...

அண்ணன் அப்துல்லாவுக்கும், தங்கை மோகனபிரியாவுக்கும், அன்பின் பரிசலுக்கும் வாழ்த்துகள் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பி.கு: அதென்னவோ தெரியலை, இன்னிக்கி போடற பின்னூட்டம் பூரா 'வாழ்த்துகள்'னே இருக்கு. அது ஏன்ன்ன்ன்ன்ன்ன்?

butterfly Surya said...

வாழ்த்துகள் மோகனபிரியா.


அப்துல்லாவிற்கு நன்றிகள் பல..

நன்றி பரிசல்..

Suresh Kumar said...

மோகன பிரியா போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அதற்கு உதவி செய்த அப்துல்லா அவர்களுக்கும் , நினைவூட்டிய பரிசலுக்கும் நன்றிகள்

☼ வெயிலான் said...

முன்னெடுத்தமைக்காக உங்களுக்கும், முடித்துக் காட்டியமைக்காக அப்துல்லாவுக்கும், வெற்றிகளை பறித்தமைக்காக மோகனப் பிரியாவுக்கும்
வா ழ் த் து க ள் ! ! !

ஆதவா said...

மோஹனப்ரியா வெல்ல வாழ்த்துக்கள்!!!
திறமையுள்ளவர்களுக்கு என்றுமே நல்வழியுண்டு!!

-- said...

"மனிதர்கள் நேசமாய் உள்ள இடத்தில் வேம்பும் தித்திப்பாய் இருக்கும்"
.
.
என்று எங்கேயோ ஒருமுறை படித்தது.
.
.
.
உண்மைதான்...!
.
.
அண்ணன் அப்துல்லாவுக்கும்,
தங்கை மோகனபிரியாவுக்கும்,
அன்பின் பரிசலுக்கும் வாழ்த்துகள்...!

நர்சிம் said...

மிக நல்ல ஃபாளோஅப் பதிவு பரிசல்.