Tuesday, July 7, 2009

ஸஸி

னக்கு ஸஸியைப் பழக்கமானது இன்னொரு நண்பனான வேலுச்சாமி மூலம்தான். என்னவோ ஆரம்பத்திலேயே அவன் ரசனையும் என் ரசனையும் ஒத்துப் போனது என்றெல்லாம் சொல்லமாட்டேன். அவனுக்கு கமலஹாசனைத் தான் பிடிக்கும். எனக்கு ரஜினி என்று வேறுபாடுகள் இருந்தனதான். ஆனாலும் அவன் என்னவோ எனக்கு நெருக்கமானவனான ஆனான்.

உடுமலைப்பேட்டையில் இருந்தபோது ஸஸி அவனது அண்ணனின் ஜனனி ஆர்ட்ஸில் அவரோடு சேர்ந்து வரைந்து/எழுதிக் கொண்டிருந்தான். அந்த ஐடியா இந்த ஐடியா என்று பேசிப் பழகி இருவருக்குள்ளும் நெருக்கம் வளர ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் அவனோடு வேறு யாராவது பேசினால் கோவம் வந்தது. அவனுக்கு கவிதைகள் எழுதினேன். அவனே ‘என்னடா பண்ணினேன் நான் என் மேல இவ்ளோ பாசமா இருக்க’ என்றெல்லாம் கேட்க ஆரம்பத்தான்.

அந்த சமயத்தில் ஒரு வதந்தி உலா வந்தது. ஒரு குறிப்பிட்ட நாள் நள்ளிரவோடு உலகம் முடிந்துவிடப்போகிறது என்று. நானும் அவனும் ’ ‘அப்படி ஆச்சுன்னா நான் உன்கூடதான் இருப்பேன்’ என்றெல்லாம் பேசிக் கொண்டோம். அந்தக் குறிப்பிட்ட நாளில் அவன் இந்தியா சில்க் ஹவுஸ் விளம்பர பேனர் வேலைகளுக்காக திருப்பூர் சென்று தங்கியிருந்தான். நான் அங்கே இங்கே காசு கடன் வாங்கி உடுமலையிலிருந்து கிளம்பி திருப்பூர் சென்று அன்றிரவு அவனோடு தங்கினேன். காலையில் கண்விழித்தபோது சுற்றிலும் குஷ்பூவும், சுகன்யாவும் சிரித்துக் கொண்டிருக்க ‘நாம் இருக்கறது சொர்க்கமா நரகமா’ என்று ஆராய்ந்தபோது பெய்ண்டை முகத்தில் கொட்டி ‘எழுந்திருடா நாயி’ என்று திட்டியபோதுதான் உலகமெல்லாம் அழியவில்லை. இன்னும் நிறைய சந்திக்க வேண்டியிருக்கிறது என்று புரிந்தது.

அவனும் நானும் இன்னொரு நண்பரான நாகராஜும் (பாக்யா ஆர்ட்ஸ்.. இப்போது பாரதி ஆர்ட்ஸ்) சேர்ந்து பாண்டிச்சேரி சென்றோம். முதல்முதலாக நான் வெளியூருக்கு நண்பர்களோடு சென்றது அதுதான். அங்கே பாலாஜி தியேட்டரில் பலான படம் போடுவார்கள் என்று கேள்விப்பட்டு அங்கே சென்றோம். அதுக்கேண்டா அங்க போனீங்க என்று கேட்பீர்களானால்…

ஸஸி உடுமலையில் எல்லா தியேட்டர்களிலும் ஆர்ட்ஸ் வேலை செய்யவதால் எல்லாரையும் பழக்கப் படுத்திக் கொண்டு இந்த மாதிரி அஜால் குஜால் படங்களுக்குப் போய்ப் பார்த்துவிடுவான். எனக்கு உடுமலையில் அந்த மாதிரிப் படங்களை போஸ்டரில் ஓரக்கண்ணால் பார்ப்பதற்கே பயமாக இருக்கும். ஒரு படமாவது பார்க்க வேண்டுமென்பது என் லட்சியமாக இருந்தது.

ஒரு வழியாக ரிக்‌ஷாக்காரர் அந்த தியேட்டரை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது நேரமாகி அதற்குப் பதில் வேறு ப்ரோக்ராமை ஏற்படுத்திக் கொண்டு அதை கேன்சல் செய்தோம். பாண்டிச்சேரியைப் பற்றி இங்கே குறிப்பிடக் காரணம் அங்கேதான் நாங்கள் மூவரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டோம்.

“நாம மூணு பேரும் இப்படியே இருக்கணும். கல்யாணமானாலும் மூணு பேரும் ஒரே காம்பவுண்ட்ல வீடு பார்த்து போகணும். (வீடு கட்டணும் என்று கூட சொல்லத் தெரியவில்லை அப்போது!) நாம எப்படி ஃப்ரெண்ட்ஸா இருக்கமோ, அதே மாதிரி ஃப்ரெண்ட்ஸா இருக்கற மூணு பேரை செலக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்” - இப்படிப் போனது அந்த ஒப்பந்தம்.

அங்கிருந்து வந்து உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோவில் மூவருமாக க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். ‘ஸ்டூடியோவுக்குள்ள வேண்டாம்ணா. வெளில வந்து எடுங்க. வித்தியாசமா இருக்கணும்’ என்று சொல்லி வெள்ளை சுவர் பிண்னணியில் எடுத்த அந்த புகைப்படத்தில் மூவரும் ஒரே மாதிரி கைகட்டிக் கொண்டதால் போலீஸ் ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட மாதிரி ஆனது வேறு கதை!

தற்குப் பிறகு நடந்ததெல்லாம் வேறு..

எனக்கு திருமணம் நடந்தபோது ஸஸியோ நாகராஜோ என்னுடன் இல்லை. அதே மாதிரிதான் மற்ற இருவருக்குமே. ஸஸியும் என்னைப் போலவே கந்தர்வ கல்யாணம் செய்து கொண்டான். ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை என வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டான்.

சென்ற மாதத்தில் “ஜூலை 2 குழந்தைகளுக்கு காதுகுத்து வெச்சிருக்கேன்” என்று அழைப்பிதழோடு வந்தான். ஸ்டிக்கர் பொட்டை கம்மல் மாதிரி ஒட்டி வித்தியாசமாக அழைப்பிதழை வடிவமைத்திருந்தான். மேடைக்குப் பின்னால் பேனர் வைக்க “ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கு ஒண்ணு”ன்னு எழுதவா என்று கேட்டு என்னிடம் திட்டு வாங்கிக் கொண்டான்.

அப்பேர்ப்பட்ட ஸஸியின் குழந்தைகள் காதுகுத்துக்கு நான் போகவில்லை. தேதியை மறந்துவிட்டேன் என்ற உண்மை இந்த இடத்தில் இந்தப் பதிவை புனைவாக மாற்றும் அம்சமாக ஆக்கிவிடுகிறது. ஆனால் அதற்குப் பிறகு அவன் அழைத்துப் பேசியது புனைவை விட சுவாரஸ்யம்.

அதே ஜூலை 2 மாலை அவன் அழைப்பு வந்தபோதுதான் “ஐயையோ எனப் பதறினேன். என்ன சொல்வது என்று தெரியாமல் ‘கொஞ்சநேரம் கழிச்சு கூப்பிடறேண்டா’ என்று கட் செய்துவிட்டு ‘மறந்துவிட்டேன் என்ற உண்மையைச் சொல்லிவிடலாம்’ என்று அடுத்த நாள் தயக்கத்தோடே அலைபேசினேன்.

எடுத்த உடனே “மன்னிச்சுக்கடா... என்னாச்சுன்னா” என்று ஆரம்பித்தவனை இடைமறித்தான்.

“ஏன் வர்லன்னு கேட்க கூப்பிடலடா.. ஏதாவது வேலை இருந்திருக்கும் விடு. நான் கூப்டது… ஆடித்தளுபடிக்கு குறிஞ்சி சில்க்ஸுக்கு நோட்டீஸ் அடிக்கணும். கலக்கலா ஒரு மேட்டர் யோசி. சாயந்திரமா கூப்பிடறேன்” என்று வைத்துவிட்டான்.

எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.

உங்களுக்கும் இதேபோன்ற நண்பர்கள் இருக்கக் கூடும். எந்த பிரதிபலனும் இல்லாமல், எதிர்பார்க்காமல் புரிந்துணர்வோடு உங்களோடு அவர்கள் இருக்கக்கூடும். பார்த்துக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதில்லை என்பதையெல்லாம் மீறிய அந்த நட்பு, எப்போதாவது பார்த்தாலும் பேசினாலும் ஈரம் காயாமலே இருக்கும். உறவுகளிலேயே அந்த சக்தி நட்புக்கு மட்டும்தான் உண்டு!

ஐ லவ் யூ ஸஸி!

44 comments:

☀நான் ஆதவன்☀ said...

1st

நர்சிம் said...

//அப்பேர்ப்பட்ட ஸஸியின் குழந்தைகள் காதுகுத்துக்கு நான் போகவில்லை. தேதியை மறந்துவிட்டேன் என்ற உண்மை இந்த இடத்தில் இந்தப் பதிவை புனைவாக மாற்றும் அம்சமாக ஆக்கிவிடுகிறது.//

போகிற போக்கில் எழுதுகிற இந்த ஸ்டைல் நன்றாக இருக்கிறது பரிசல்..

நட்சத்திரப் பதிவு.

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்கு பரிசல்

கோவி.கண்ணன் said...

//பார்த்துக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதில்லை என்பதையெல்லாம் மீறிய அந்த நட்பு, எப்போதாவது பார்த்தாலும் பேசினாலும் ஈரம் காயாமலே இருக்கும். உறவுகளிலேயே அந்த சக்தி நட்புக்கு மட்டும்தான் உண்டு!//

அதென்னவோ வாஸ்தவம் தான் கிருஷ்ணா, பதிவுலகில் குடியேறிய பிறகு மறந்த புற உலக நண்பர்கள் குறித்து இப்படித்தான் தேற்றிக் கொள்ள வேண்டி இருக்கு.
:)

முரளிகண்ணன் said...

அருமையான பதிவு பரிசல்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\மூணு பேரும் ஒரே காம்பவுண்ட்ல வீடு பார்த்து போகணும்//
:))

பரிசல்காரன் said...

@ நீங்கள் ஆதவன்

மிக்க நன்றி ஆதவா!

@ நர்சிம்

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி!

@ கோவி கண்ணன்

நெஜம்தான் நீங்க சொல்றது!

@ முரளி கண்ணன்

நன்றி நண்பரே!

Nalina said...

பரிசல்,
முதல் வரியில் ஜூலை என்றும், அடுத்த வரியில் ஜூன் என்றும் உள்ளது. மற்றபடி மிக அருமை. நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

நன்றி முத்துலெட்சுமி!

நன்றி Muthulatchumi!

(பேரை மாத்தி மாத்தி வெச்சு கின்னஸ்ல எடம் பிடிக்கப் போறீங்களா?)

பரிசல்காரன் said...

@ Nalina

மாற்றி விட்டேன்! மிக்க நன்றி!

டக்ளஸ்....... said...

கந்தர்வக் கல்யாணம்னா என்னாங்கோ..?99

Anonymous said...

கிருஷ்ணா,

A true friend is one with whom you can be silent and yet can maintain the relationship.

உனக்கும் சசிக்கும் வாழ்த்துகள்.

தராசு said...

தலைவரே,

டச்சிங்,

உலகத்தின் எல்லா உறவுகளையும் விட நட்புங்கறது, அதுவும் பால்ய காலத்து நட்புங்கறது, ம்ம்ம் ...., என்ன சொல்றது,,,,,... குடுத்து வெச்சவங்க, இன்னைக்கும் அந்த நட்பை அனுபவிக்கறிங்க,

வயித்தெரிச்சலா இருக்கு.

கார்க்கி said...

எனக்கும் ஒருத்தன் இருக்கான்..பேரு பாலாஜு.. குசும்பனுக்கும், அய்யணாருக்கும் தெரியும். அவரக்களுடைய பழைய ரூம் மேட் அவன்,...

சூப்பர் சகா..

நாஞ்சில் நாதம் said...

//எப்போதாவது பார்த்தாலும் பேசினாலும் ஈரம் காயாமலே இருக்கும். உறவுகளிலேயே அந்த சக்தி நட்புக்கு மட்டும்தான் உண்டு!\\

நட்சத்திரப் பதிவு.

J said...

தொடர்பு இருந்தாலும் இல்லையென்றாலும் உயிர் நண்பர்கள்
அவர்கள்

குசும்பன் said...

கோயிங் த வே ரைட்டிங் ஸ்டைல் குட் பரிசல்...

ஸ்டார் போஸ்ட்!

(என்னா யோசிக்கிறீங்க, நர்சிம் சொன்னத கொஞ்சமா ஆங்கிலத்தில் சொல்லி பார்த்தேன்:))))) ஹி ஹி ஹி நாங்க எல்லாம் அஞ்சாம் வகுப்போட சரி அதான் இப்படி:)))

குசும்பன் said...

//A true friend is one with whom you can be silent and yet can maintain the relationship.//

பரிசல் அண்ணாச்சி என்ன சொல்றக:))

Mahesh said...

அருமை பரிசல்...

முதல் பதிவு 1 எழுத்து... ரெண்டாம் நாள் 2 எழுத்து... நாளைக்கு? "காதல்"தானே? :))))

Truth said...

நல்லாருக்கு பரிசல்.

chidambaram said...

அருமை. அதுவும் குறிப்பாக நம்ம ஊரைப் பற்றிய நினைவுகள். உடுமலையில் ஸஸி ஆர்ட்ஸ் நடத்தி வருபவர்தான் உங்கள் நண்பர் ஸஸியா?

புன்னகை said...

"Those who are very special never go apart... They walk beside u everyday... Unseen, unheard, stil near, stil special n stil missed"
இன்று காலை எனக்கு வந்த குறுஞ்செய்தி இது :-)

பரிசல்காரன் said...

@ டக்ளஸ்

காதல் கல்யாணம்கோ...

@ வடகரை வேலன்

நன்றி அண்ணாச்சி

@ தராசு

ஏன் ஸ்டமக்பர்னிங்? உங்களுக்கும் இருக்கும்.. யோசிச்சுப் பார்த்து புதுப்பியுங்கோவ்

பரிசல்காரன் said...

@ கார்க்கி

பாலாஜி? எனக்கு தப்பா எஸ்ஸெம்மெஸ் அனுப்பினயே அந்த பாலாஜி?

மிக்க நன்றி நாஞ்சில் நாதம்!

@ J

Thank Friend!

@ குசும்பன்


அடங்குய்யா சாமீ!

@ மகேஷ், Truth, புன்னகை

மிக்க நன்றி!

@ Chithambaram

அவரே.. அவரே...!

எவனோ ஒருவன் said...

ம்ம்ம்ம்... நல்லாருக்கு.

T.V.Radhakrishnan said...

நல்லாயிருக்கு

ஆதிமூலகிருஷ்ணன் said...

பழம்நினைவுகளை கிளறியுள்ளீர்கள் பரிசல்.. மூவரின் இனிஷியலகளும் பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரங்கள் நினைவில் வருகிறது. ஒரே சருடத்தில் நான் தொலைத்துவிட்டேன். ஒருவனிடம் இன்னும் அது இருக்கிறது. கல்யாணத்துக்குப்பின்னால் நாங்கள் திசைக்கொன்றாக பிரிந்துவிட்டாலும், அடிக்கடி பேசிக்கொண்டிருக்காவிட்டாலும் ஈரமான நட்பு என்றும் காயாது.

முதல் திருமணத்தில் மற்ற இருவரும் ஆர்வமாய் கலந்துகோண்டோம். அந்த கோலாகலம் இன்னும் பசுமையாக நினைவிலிருக்கிறது. முதல் மணப்பெண்ணுக்கு மற்ற இருவரையும் ஓரளவு நினைவிலிருக்கும், அந்த ஒரு வார கூத்துக்களினால். மற்ற இரண்டு பேருக்கும் பிறர் யாரெனத்தெரியாமலே போய்விட்டது. இரண்டாவது திருமணத்தில் சில கஷ்டங்களோடு மற்றவர்கள் கல்ந்தோம். கடைசி என் திருமணத்திலும் மனைவியை அழைத்துவர இயலாவிட்டாலும் கலந்துகொண்டனர். குறைந்த பட்சமாய் மூவரும் மூவர் திருமணங்களிலும் கலந்துகொண்டோம். அதோடு சரி.! பெண்கள்தான் திருமணத்துக்குப்பின்னர் உறவுகளை இழப்பதாக ஒரு மாயை உண்டு. ஆண்களும் விதிவிலக்கல்ல என்பேன் நான்.

பரிசல்காரன் said...

நன்றி எவனோ ஒருவன்

நன்றி டிவியார் ஐயா

@ ஆதிமூலகிருஷ்ணன்

இன்றைய (இதுவரை) சிறந்த பின்னூட்ட விருது உங்களுக்கு! சூப்பர்!

Kathir said...

//உங்களுக்கும் இதேபோன்ற நண்பர்கள் இருக்கக் கூடும். எந்த பிரதிபலனும் இல்லாமல், எதிர்பார்க்காமல் புரிந்துணர்வோடு உங்களோடு அவர்கள் இருக்கக்கூடும். பார்த்துக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதில்லை என்பதையெல்லாம் மீறிய அந்த நட்பு, எப்போதாவது பார்த்தாலும் பேசினாலும் ஈரம் காயாமலே இருக்கும். உறவுகளிலேயே அந்த சக்தி நட்புக்கு மட்டும்தான் உண்டு!//

இதைப் படிச்சவுடனே, சந்தோஷமா சோகமா ன்னு தெரியாம ஒரு இனம்புரியாத உணர்வு..

வாழ்த்துக்கள்.

பேரரசன் said...

சூப்பர் ஸ்டார்.... (தமிழ்மணத்தின்)


நீங்களும்... சூப்பர் சார்...

வாழ்த்துக்கள்..கலக்குங்கள்...

வால்பையன் said...

அடுத்த படத்துக்கு கதை ரெடி!
தயாரிப்பாளர் சிக்கினால் போதும்!
இயக்குனர்கள் வலையுலகில் நிரைய பேர் இருக்காங்க!

எம்.ரிஷான் ஷெரீப் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் பரிசல்காரன் !!!

லவ்டேல் மேடி said...

அழகு...!! அழகு...!!! எனக்கும் இதே மாதரிதான் ஸ்கூல் படிக்கும்போது ஒரு ப்ரெண்டு .... எல்லா விஷயங்களையும் , எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்போம் .... !!ஒருவருக்கு ஒருவர் பிரிந்து வாழ்வதை வெறுத்தோம்...... !!
இருவருக்குமே ரசனைகள் , ஆசைகள் ஒத்திருந்தது....!!!

ஒருவருக்கொருவர் .. மற்றவர்களிடம் பேசுவதை தவிர்த்தோம்....!!!


தனிமையில் பேசுவதையே விரும்பினோம்.....!!!


அடிக்கடி பார்வையாலேயே பேசிக்கொள்வோம்....!!

வார இறுதிகளை கூட ஒன்றாகக் கழித்தோம்.....!!!
இப்பொழுது பிரிவால் வாடுகிறோம்.....!!என் உயிரே... ஐ லவ் யூ.....!!!உயிரின் பெயர் : சானியா மிர்சா ...............!!!!ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........!!!!!!!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

பதிவுல விளக்கெண்ணெய் விட்டுப்பார்ப்பது போல இனி பின்னூட்டங்களிலும் பார்க்கணும்ப்பா.. ரெண்டு பாராவில் எத்தனை மிஸ்டேக்கு.. மானம் போவுது, சை..!!

Cable Sankar said...

/பெண்கள்தான் திருமணத்துக்குப்பின்னர் உறவுகளை இழப்பதாக ஒரு மாயை உண்டு. ஆண்களும் விதிவிலக்கல்ல என்பேன் நான்///

நானும் ஆதியை ரிப்பீட்ட்டு இடுகிறேன்..

KISHORE said...

படித்தபின் உண்மையாவே எனது நண்பனின் நினைவு வந்தது... நானும் அவன ரொம்ப மிஸ் பண்றேன்...

தமிழ் பிரியன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் பரிசல் !!!

pappu said...

அப்பேர்ப்பட்ட ஸஸியின் குழந்தைகள் காதுகுத்துக்கு நான் போகவில்லை. தேதியை மறந்துவிட்டேன் என்ற உண்மை இந்த இடத்தில் இந்தப் பதிவை புனைவாக மாற்றும் அம்சமாக ஆக்கிவிடுகிறது.////

ஆனால் இது இயல்பென்பது, நான் என் பிறந்த நாளயே மறந்த கதையை கேட்டால் தெரியும்!

Bleachingpowder said...

Back to form :) கலக்கல் தல.

//அந்த சமயத்தில் ஒரு வதந்தி உலா வந்தது. ஒரு குறிப்பிட்ட நாள் நள்ளிரவோடு உலகம் முடிந்துவிடப்போகிறது என்று.//

ஆமா தல, எனக்கும் ஸ்கூல்ல ஒருத்தன் வந்து சொன்னான் டிசம்பர் 31, 1999ல் உலகம் அழிஞ்சிடும்னு, அபோ என்னோட ஒரே கவலை, இன்னும் அஞ்சு தீபாளிக்கு தான் பட்டாசு வெடிக்க முடியும்னு

//மூவரும் ஒரே மாதிரி கைகட்டிக் கொண்டதால் போலீஸ் ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட மாதிரி ஆனது வேறு கதை!//

இல்லாட்டியும் அப்படி தான் இருக்கும்

//நாம மூணு பேரும் இப்படியே இருக்கணும். கல்யாணமானாலும் மூணு பேரும் ஒரே காம்பவுண்ட்ல வீடு பார்த்து போகணும்//

கணவு

//ஏன் வர்லன்னு கேட்க கூப்பிடலடா.. ஏதாவது வேலை இருந்திருக்கும் விடு. நான் கூப்டது… ஆடித்தளுபடிக்கு குறிஞ்சி சில்க்ஸுக்கு நோட்டீஸ் அடிக்கணும். கலக்கலா ஒரு மேட்டர் யோசி. சாயந்திரமா கூப்பிடறேன்” என்று வைத்துவிட்டான்.//

யதார்த்தம்

" உழவன் " " Uzhavan " said...

அந்த போட்டோவையும் போட்டிருக்கலாமே...

பட்டாம்பூச்சி said...

நட்சத்திரப் பதிவு நல்லாயிருக்கு.
நட்பை அனுபவிக்கறிங்க :) வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

புரியுது!
அப்பனா இது கவிதையில்லை!

ஒரு வாரம் ஜ்யோவ்ராம் சுந்தரிடமும், அனுஜன்யாவிடமும் ட்ரைனிங் எடுத்துட்டு வந்து கவிதை எழுதுங்க தல!

பட்டிக்காட்டான்.. said...

நெஞ்சைத் தொட்ட பதிவு பரிசல்..!

பாலராஜன்கீதா said...

நானும் பலநேரங்களில் ஸஸிபோல இருக்கிறேன்.