Friday, June 19, 2009

ஆஸ்பத்திரி நாட்கள்



போதிமரமெல்லாம் தேவையேயில்லை. புத்தனிருந்தால் சொல்வேன்.. மருத்துவமனைக்குப் போவென்று. அதுவும் சின்னச் சின்னக் குழந்தைகள் அட்மிட் ஆகியிருக்கும் பிரிவில் ஒரு வாரமிருந்தால் யாரும் எந்த நிலையில் இருந்தாலும் ஆடும் ஆட்டமெல்லாம் அடங்கிவிடும்!


சமீபத்தில் உமாவின் அண்ணன் மகனுக்கு மூச்சு விடுவதில் சிரமமேற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஒன்றரை வயது. தனக்கு என்னவென்றுகூட சொல்ல இயலாத குழந்தையை பலவித பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பிறகு மூச்சுக்குழாய் சுருங்கியிருக்கலாம் என்று கூறி அவன் மூச்சிவிட சிரமப்படும்போதெல்லாம் Nebulizer மூலமாக ஆக்ஸிஜன் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று விளையாடுவான். இரண்டு, மூன்று மணிநேரங்களுக்குப் பிறகு மூச்சு விட மிகுந்த சிரமப்படுவான்.

எக்ஸ்ரே, டிஜிடல் எக்ஸ்ரே என்று என்னென்னவோ எடுத்துப் பார்த்தும் ஒரு வாரமாக ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்கேனில் எதுவோ அடைபட்டிருக்கிறது என்று அரைகுறையாக தெரிந்ததாக டாக்டர்கள் சொன்னார்கள்.

அடுத்த நாள்..


ரேடியாலஜி மூலம் அவனது சுவாசக்குழாயில் ஏதோ அடைபட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்கள் மருத்துவர்கள்.


“அது என்னான்னு தெரியல. ஆனா நிச்சயமா ஆபரேஷன் பண்ணி ஆகணும். எண்டோஸ்கோபிதான் பண்ணணும். அப்போ உள்ள என்ன இருக்கும்னு தெரியும். அதுமூலமாவே அந்தப் பொருளை எடுக்கணும்.. உங்களுக்குத் தெரியும்னு நெனைக்கறேன். சுவாசக்குழாய்ல ட்யூப் விட்டு...”

“எப்ப டாக்டர் ஆபரேஷன்?” மேற்கொண்டு அவர் விளக்குவதைக் கேட்க மனமில்லாமல் இடைமறித்தோம்.


“காலைல எட்டரைக்கு. நைட் பத்து மணிக்கு மேல அவனுக்கு எதுவும் குடுக்க வேண்டாம்”


எத்தனையோ பேப்பர்களை நீட்டி தாய் தந்தை இருவரிடமும் கையெழுத்து மேல் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். ஒன்றரை வயதுக் குழந்தை என்பதால் எதுவும் உறுதியில்லை என்று சொல்லிவிட்டார்கள்.


எல்லாரும் உயிரோடிறந்த நாள் அது! (எழுத்துப் பிழை ஏதுமில்லை முந்தைய வரியில்!)


எதுவும் அறியாமல் வார்டில் இருந்த மற்ற கட்டில்களைச் சுற்றி வந்து விளையாடிக்கொண்டிருந்தான் அவன். திடீரென்று மூச்சு விடச் சிரமப்பட்ட போதெல்லாம் பதைபதைத்து ஐ.சி.யூவுக்குள் கொண்டு சென்று நெபுலைசரில் ஆக்ஸிஜன் கொடுத்துக் கொண்டிருந்தோம். படுக்க வைத்தால் மிகச் சிரமப்பட்டான். எனவே ஒருவர் மாற்றி ஒருவர் தோளில் சாய்த்துக் கொண்டோம்.


மாலை ஏழுமணிக்கு மருத்துவமனை வளாகத்திலேயே உள்ள சின்ன பூங்காவிற்கு அவனைத் தூக்கிக் கொண்டு போனேன். அவன் சிரிக்கச் சிரிக்க விளையாடினான். எதைப் பற்றிய கவலையும் அவனுக்கிருக்கவில்லை. அவனைப்பற்றிய கவலை தவிர வேறெதுவும் எங்களுக்கு இருக்க வில்லை.


அடுத்த நாள்...


9 மணிக்கு ஆபரேஷன் ஆரம்பமானது. நம்பிக்கையோடிருக்க மனது சொல்லியது. இருக்கும் சூழலும், சுற்றியிருப்போரின் வாடிப்போன முகமும் அந்த நம்பிக்கையைப் பின்னுக்கிழுத்துக் கொண்டிருந்தன.


அவனது அன்னையைத் தவிர யாரையும் ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுமதிக்கவில்லை. அவனது அன்னைக்கோ கண்ணீரைத்தவிர வேறெந்த மொழியும் அப்போது தெரிந்திருக்கவில்லை.


ஆபரேஷன் ஆரம்பித்த அரைமணி நேரத்திற்கெல்லாம் ஒரு மருத்துவர் வெளியே வந்து “கவலைப்பட ஒன்றுமில்லை. தைரியமா இருங்க!” என்று சிரித்த முகத்தோடு வந்து சொல்லிப் போனார். (மருத்துவர்கள் தெய்வத்துக்கு சமம் என்றுணர்ந்த சமயம் அது!)


அடுத்த ஒரு மணிநேரத்தில் எல்லாம் சுபமென்றாகிப் போனது. அவனது அன்னை அப்போதும் அழுதுகொண்டுதான் இருந்தார்.


விஷயம் இதுதான்.


விடுமுறைக்கு ஊருக்கு சென்ற பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்கள் தோட்டத்தில் விளைந்த நிலக்கடலையை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். இவனது ஆறு வயது அக்கா அதை உரித்துத் தின்று அந்த தொப்பையைக் கீழே போட்டிருக்கிறாள். அதை இவன் எடுத்து முழுங்கியிருக்கிறான். முக்கால் இஞ்ச்சுக்கு ஒன்று, அரை இஞ்ச் அளவுக்கு ஒன்று என்று இரண்டு கடலைத் தொப்பை இவனது நுழையீரலுக்குள் சென்று அடைபட்டிருக்கிறது. அவை ஒருபுறமாக திரும்பும்போது இவன் சிரமப்பட்டிருக்கிறான்!



இந்த விஷயம் அறிந்து ஒருமாதிரி ஆகி.. நண்பர்களோடு பகிர்ந்து கொண்டபோது.. எத்தனை ஆறுதல்கள்! சாய்ந்து கொள்ளத் தோளிருந்தால் தோல்விகூட சுகம்தான். ஆறுதல் சொல்ல ஆளிருந்தால் அழுவது கூட ஆனந்தம்தான். எத்தனையோ கிலோமீட்டர் தூரத்திருப்பவர்களெல்லாம் அழைத்து “பணத்துக்கு என்ன பண்ணினீங்க? அக்கவுண்ட நம்பர் சொல்லுங்க” என்றெல்லாம் மிரட்டியபோது உலகமே எனதாய் உணர்ந்தேன். ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் அலைபேசி என்னைப் போலவே பதை பதைத்துக் கொண்டிருந்ததும்.. நல்லபடியாய் ஆனபோது அவர்கள் பெருமூச்சு விட்டதும் என்னால் உணரமுடிந்தது. என்ன மாதிரியான நட்பையெல்லாம் சர்வ சாதாரணமாக நான் பெற்றிருக்கிறேன் என்று கர்வமாகக் கூட இருந்தது.



இத்தனை ஆறுதல்கள் எனக்கிருப்பதை நினைத்து கர்வப்பட வைக்க அங்கிருந்த சிலரது சூழலும், நான் பார்த்த ஒன்றிரண்டு பேரின் கதையும் காரணம்.


அவை.... பின்னர்...



.

54 comments:

iniyavan said...

குழந்தை குணமாகி விட்டான் எனக்கேட்ட பிறகுதான் என்னால் இயல்பாக இருக்க முடிந்தது.

லக்கிலுக் said...

கிலியை ஏற்படுத்தும் பதிவு :-(

தராசு said...

தலைவரே,

சஸ்பென்ஸோடயே கொண்டு போய் பதைக்க வைக்கறீங்களே.. பையன் பொழச்சிட்டன்னு படிச்சதுக்கப்புறம் தான் நிம்மதியாச்சு.

அப்புறம் அந்த வரிகள்,

"சாய்ந்து கொள்ளத் தோளிருந்தால் தோல்விகூட சுகம்தான். ஆறுதல் சொல்ல ஆளிருந்தால் அழுவது கூட ஆனந்தம்தான்."

அருமை, அருமை, அருமை.

கே.என்.சிவராமன் said...
This comment has been removed by a blog administrator.
நர்சிம் said...

பரிசல்.. கோ இன்ஸிடன்ஸ் பத்தி வெண்பூ பதிவுல நேத்து நீங்க சொன்னது நினைவிருக்கா.. என்னோட லேட்டஸ்ட் பதிவ படிச்சீங்களா?

என்ன சொல்றது.. நல்லா சொல்லி இருக்கீங்க பரிசல்.

பரிசல்காரன் said...

@ இனியவன்

நன்றி இனியவன்!

@ லக்கிலுக்

சிறிய, முழுங்கும் வகையிலுள்ள பொருட்களை குழந்தைகள் கண்ணில் படும், அல்லது விளையாடும் வகையில் வைக்காதீர்கள் தோழர். மற்றபடி கவலைப்படவெல்லாம் வேண்டாம். தமிழுக்கு எப்போதுமே ஒன்றும் ஆகாது!

@ தராசு

அந்த வரிகளுக்கு முழுச் சொந்தம் நானல்ல நண்பரே. எங்கொ படித்த இரவல்தான்!

@ பைத்தியக்காரன்

அண்ணா.. எழுதி படித்துப் பார்க்காமலே போட்டுவிட்டேன். நீங்கள் சொன்னது 100% நிஜம். எடிட் செய்துவிட்டேன்! (இப்படியெல்லாம் எங்களுக்கு அட்வைஸ் செய்துவிட்டு உடனே அலைபேசி விளக்கம் சொன்னால் அதுக்கு ஒரு பதிவு போட்டு திட்டுவேன் பாருங்க.. முழு உரிமையுண்டு உங்களுக்கு! ஓகே?!?)

anujanya said...

முதல் பத்தி மிகச் சரி. நல்ல பதிவு கே.கே. And what a relief!

அனுஜன்யா

பரிசல்காரன் said...

@ அனுஜன்யா

நன்றி (உங்க பின்னூட்டத்துக்கு அல்ல!!!)

கே.என்.சிவராமன் said...

இப்போது பதிவு ஓகே பரிசல். எனது முந்தைய பின்னூட்டத்தை நீக்கிவிடுங்கள். அலுவலகத்தில் பிளாக் தடைசெய்யப்பட்டுள்ளது. பின்னூட்டங்கள் மட்டுமே போடலாம். அதை நீக்க முடியாது. அன்பின் சுந்தர்தான், மெயிலில் அனுப்பும் எனது பதிவுகளை என் வலைத்தளத்தில் ஏற்றுகிறார். ஸோ, முந்தைய பின்னூட்டத்தை நீக்கிவிடுங்கள். இனி படிக்க வரும் பதிவர்களுக்கு அது தவறான அர்த்தத்தை தரும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

RRSLM said...

முதல் 3 பத்தி படித்தவுடன் கடைசி வரிக்கு தாவிவிட்டேன்....மன்னிக்கவும் :(-

பரிசல்காரன் said...

@ RR

அது தவிர்க்க முடியாததுதான் தோழர்! நன்றி!

Mahesh said...

அப்பாடா !!! அப்ப நான் நினைத்தது சரிதான்.... ஆனா நீங்கதான் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டீங்க :(

கார்க்கிபவா said...

:((((..

நர்சிம் said...

மிஸ்டர் பரிசல்.. அந்தப்பக்கம் தான் வரமாட்டீங்கறீங்கன்னு பார்த்தா.. எல்லாருக்கும் பதில் சொல்லிட்டு எனக்கு மட்டும் ஒன்னும் சொல்லலையே என்ன மேட்டர்..(பொழுது போகலப்பா..)

சிவக்குமரன் said...

///எல்லாரும் உயிரோடிறந்த நாள் அது!///

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......

Vinitha said...
This comment has been removed by the author.
Vinitha said...

இந்த மாதிரி விஷயம், எங்கள் குடும்பத்திலும் ... என் மகனுக்கும் நடந்தது. நான் அவரைக்குழ்ம்பு செய்ய அவரை ( ராஜ்மா ) ஊற வைத்திருந்தேன். அப்போது அவனுக்கு மூன்று வயது. பள்ளிக்கு காலை ஒன்பது முதல் பன்னிரண்டு வரை - பேபி க்ளாஸ் - சென்று வருவான். மகள் பள்ளியில் இருந்து மூன்று மணிக்கு தான் திரும்புவாள்....அன்று, அவனை அழைத்து வந்துவிட்டு, குக்கரில் அவரை வேக வைத்து சமைக்க ஆரம்பித்தேன். அவர் டிவி முன் இருந்தான். கொஞ்சம் நேரம் கழித்து அவனை பார்க்கும் போது, மூக்கை நோண்டிக்கொண்டு இருந்தான். என்னடா என்று கேட்டதற்கு, ஒண்ணுமில்லே சும்மா என்று சொல்லிவிட்டான். நானும் கவனிக்கவில்லை. ஒரு மணிக்கு என்னவர் வீட்டிற்க்கு சாப்பிட வந்தார். அப்போது அவன் மூக்கின் இடது புறம் வீங்கியிருந்தது. டார்ச் அடித்து பார்த்ததில், மூக்கில் ஒரு அவரை இருந்தது. ஏன்டா பண்ணினே என்ற கேட்டதில், அழுக்கு என்றான்! ( எனக்கு திட்டு பலம்... ). டாக்டரிடம் சென்றோம். ஏ.வி.எம். ஈ.என்.டி. மைலாபூர். குறடு மாதிரி ஆயுதம் வைத்து எடுத்தார்கள். அப்பப்பா என்ன பயம்...

ஆறு மாதத்தில்...மீண்டும் ஒரு முறை, ஸ்கூலில் காதில் நோடேபூக் அட்டை பேப்பர் போட்டு விட்டான். திரும்பவும் அதே டாக்டர் .... என்னடா என்று கேட்டால், க்ளாசில் ஒரே சத்தம். பஞ்சு இல்லே, அதனாலே பேப்பரில் அடைத்தேன் என்றான்!

பெண் குழந்தைகள் இந்த விசயத்தில் கொஞ்சம் பொறுப்பு என்று தோனுது...

பெற்றோர்கள் தான் கவனமாக இருக்கணும். ஆபத்து என்று ஒன்று வரும் போது ( எப்படி வரும் என்று தெரியாது, எந்த ரூபத்தில் இருக்கும் என்று தெரியாது ) டாக்டர்களோ, நண்பர்களோ காப்பாற்றுவார்கள்.

குழந்தைகளை கண் முன்னாள் வைத்திருங்கள்!

Vijayashankar said...

எல்லோர் வீட்டிலும் ( குழந்தைகள் மூலம் - சிறிய , பெரிய ) இந்த விஷயம் நடந்திருக்கு.

எழுதுகிறவர் எழுதினால், அதன் தன்மை இதயத்தில் அடிக்கும்.

--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு

iniyavan said...

//மிஸ்டர் பரிசல்.. அந்தப்பக்கம் தான் வரமாட்டீங்கறீங்கன்னு பார்த்தா.. எல்லாருக்கும் பதில் சொல்லிட்டு எனக்கு மட்டும் ஒன்னும் சொல்லலையே என்ன மேட்டர்..(பொழுது போகலப்பா..)//

பொழுது போகலையா? ரொம்ப பிஸினு நினைச்சேன்.

சென்ஷி said...

:-((

க.பாலாசி said...

//சாய்ந்து கொள்ளத் தோளிருந்தால் தோல்விகூட சுகம்தான். ஆறுதல் சொல்ல ஆளிருந்தால் அழுவது கூட ஆனந்தம்தான்.//

உண்மையிலும் உண்மை.

Sundar சுந்தர் said...

//எதைப் பற்றிய கவலையும் அவனுக்கிருக்கவில்லை. அவனைப்பற்றிய கவலை தவிர வேறெதுவும் எங்களுக்கு இருக்க வில்லை//

:(

Thamira said...

படித்து முடித்ததும் பெருமூச்சொன்று விட்டேன்.. யப்பா இந்தக்குழந்தைகளை விபரம் தெரியும் வரை எந்த ஆபத்துமில்லாமல் வளர்த்தெடுப்பது பெரும் சவால்தான்.

கோபிநாத் said...

;((

sowri said...

//எதைப் பற்றிய கவலையும் அவனுக்கிருக்கவில்லை. அவனைப்பற்றிய கவலை தவிர வேறெதுவும் எங்களுக்கு இருக்க வில்லை.//
அதான் குழந்தை. 100%உண்மையான பதிவு. கடைசியில்தான் நிம்மதி மூச்சு வந்தது. கோவிலுக்கோ பள்ளிக்கோ சென்று வந்தால் கூட இந்த ஞானம் கிடைகாது. ஒவ்வரு ஹோச்பிடல் அன்பவமும் மனிதனை கண்டிபாக பக்குவப்படுத்தும். My prayers for the child to live long and healthy life.

☀நான் ஆதவன்☀ said...

:((

:))

மங்களூர் சிவா said...

குழந்தை குணமாகி விட்டான் எனக்கேட்ட பிறகுதான் நிம்மதி.

பரிசல்காரன் said...

@ Mahesh

நன்றிங்க. எதுக்கு களேபரப்படுத்தணும்னு விட்டுட்டேன். நீங்க கேக்கறப்போ நான் டென்ஷன் ஃப்ரீயாய்ட்டேன். மறுபடி அதைப் பத்திப் பேச முடியல!

@ கார்க்கி

தேங்க்ஸ்டா!

@ நர்சிம்

பாஸு.. என்னதிது? வந்தேன். முழுசா படிக்கல. பெரிசா இருந்தது. அதுமில்லாம அந்தக் கதையைப் பத்தி ஆதி சொன்னதப் பாத்தா... அது அவசர அவசரமா படிக்கக் கூடிய பதிவு அல்லன்னு தெரியுது. ஓகே?? (என்னைப் போய் வம்புக்கு இழுக்கறீங்களே.. பாவம்க நானு!)


@ இரா சிவக்குமரன்

நன்றி

@ வினிதா

உங்க அனுபவம் இன்னும் பயங்கரமா இருக்கு! நன்றி!

@ Vijay

மிக்க நன்றி தோழர்!

@ இனியவன்

நல்லாக் கேளுங்க!

@ சென்ஷி, பாலாஜி, சுந்தர், ஆதி

நன்றிங்க!

@ கோபிநாத்

நன்றி

@ Sowri

கரெக்ட்!

@ நான் ஆதவன்

நன்றி

பரிசல்காரன் said...

நன்றி மங்களூர் சிவா!

அது ஒரு கனாக் காலம் said...

அருமையான பதிவு ... இந்த மாதிரி சமயங்களில் மட்டும் நாம் வேறு நிற கண்ணாடி அணிந்து கொள்கிறோம் ... எல்லாரையும் மிகவும் மரியாதையாக , பரிமாறுகிறோம் . காருண்யம் சற்று கூடுகிறது , இந்த உலகம் நல்லவர்களால் தான் சூழப்பட்டிருக்கிறது ... இப்படி என்னவெல்லாமோ என்ன அலைகள் ...

வேகமாக ஒரே மூச்சில் படித்தேன் .... குழந்தைக்கும் , உதவிய, உதவ தயாராய் இருந்த எல்லா நல்ல உள்ளங்களையும் வணங்குகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அந்தக் குழந்தை நீண்ட நெடிய நாட்கள் ஆனந்தமும் ஆரோக்கியமும் பெற்று வாழப் பிரார்த்திக்கிறேன்.
சில்லிட்டு விட்டது மனம். குழந்தைகளைக் காக்கும் வைத்தியத் தெய்வங்களும் நன்றி.

குழந்தைகள் எப்போதும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

ஆற்றில் தவறி விழுந்த எங்கள் பிள்ளையை, பதினெட்டு அடி ஆழத்துக்கு உடனே டைவ் செய்து காப்பாற்றிய என் கணவரை இன்றும்,எப்போதும் மனதில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
சாமி ,கடவுளே எப்போதும் துணை இருக்க வேண்டும்.

வசந்த் ஆதிமூலம் said...

:( to :).

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

குழந்தைகள் மேல எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் பரிசல்.எனக்கும் இது போல ஒரு அனுபவம் உண்டு.குழந்தை வெகு விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

Unknown said...

//நர்சிம் said..
பரிசல்.. கோ இன்ஸிடன்ஸ் பத்தி வெண்பூ பதிவுல நேத்து நீங்க சொன்னது நினைவிருக்கா..//

நேற்று தான் அவரின் கதை படித்தேன்..
இன்று உங்களின் நிஜம்..

கதைக்கு அந்த முடிவு சரி..
நிஜத்திற்கு இந்த முடிவுதான் சரி..

செல்லம் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்..

பட்டாம்பூச்சி said...

குழந்தை நலமாக இருக்கின்றான் என்ற செய்தி நிம்மதியை தருகிறது.
கவனமாக பார்த்து கொள்ளவும்.

தீப்பெட்டி said...

:((

ny said...

frightening foreign body!!
இனிது நம் குழந்தை குணம் !!
இனி கவனம் குழந்தைக் குணம்..

//ஆபரேஷன் ஆரம்பித்த அரைமணி நேரத்திற்கெல்லாம் ஒரு மருத்துவர் வெளியே வந்து “கவலைப்பட ஒன்றுமில்லை. தைரியமா இருங்க!” என்று சிரித்த முகத்தோடு வந்து சொல்லிப் போனார்.//
........உளம் மகிழ்ந்தேன் :))

selventhiran said...

உள்ளூரிலே இருந்தும் ஓடி வந்து பார்த்து, கூட மாட இருந்து உதவிகளைச் செய்யாத நான் என்ன சொன்னாலும் போலியாகத்தான் இருக்கும்.

"குழந்தையைப் போய் பாத்தீயா?" என்றவள், "இல்லை" என்ற பதிலைக் கேட்டதும் காறித் துப்பினாள்.

மன்னித்துக்கொள்ளுங்கள் பரிசல்!

உண்மைத்தமிழன் said...

பதிவுலகத்திற்குத் தேவையான பதிவு..

ஆரம்பத்துலேயே திக் என்ற உணர்வைத் தந்துவிட்டது..

குழந்தைக்கு எனது அன்பு முத்தங்கள்..

இந்தப் பதிவு மிக முக்கியமானதாக ஒருவருக்குக் கூடவா தோன்றவில்லை.

இப்போது நான் பார்க்கின்றபோதும் தமிழ்மணத்தில் ஒரு ஓட்டுகூட விழவில்லை. கொடுமை..

பகிர்தலுக்கு நன்றி பரிசல்..

உங்களுடைய இந்தத் தளம் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.. என்ன விஷயம் என்று எனக்குத் தெரியவில்லை.

கொஞ்சம் பார்க்கவும்..!

பரிசல்காரன் said...

@ அது ஒரு கனாக்காலம்

//குழந்தைக்கும் , உதவிய, உதவ தயாராய் இருந்த எல்லா நல்ல உள்ளங்களையும் வணங்குகிறேன்.//

நானும்..

@ வல்லிசிம்ஹன்

நன்றி அம்மா!

@ வசந்த் ஆதிமூலம்

:-)))

@ ஸ்ரீதர்

நன்றிங்க...

@ பட்டிக்காட்டான்

குணமடைந்து.... சுருட்டிய வாலை, மீண்டும் எடுத்துவிட ஆரம்பித்துவிட்டான்!

@ பட்டாம்பூச்சி, தீப்பெட்டி, Kartin

நன்றி நண்பர்களே...

@ செல்வேந்திரன்

யோவ்... என்னா பீலிங்கு? எதுனா வேணும்னா உங்க மூணுபேருக்குத்தானே மொதல்ல கூப்பிட்டிருப்பேன்? மன்னிப்பாம்.... போய்யா.. போஓஓஓஓஓ...

பரிசல்காரன் said...

@ உண்மைத்தமிழன்

அண்ணா.. உணர்ச்சிவசப்படாதீங்க.. எல்லாரும் படிக்கறாங்களே அதுபோதும்... ஓட்டெல்லாம் எதுக்கு நமக்கு!

நன்றிண்ணா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

குழந்தைகளுக்கு ஒரு உடம்பு என்றால்..கேட்கவே மனம் பதைபதைக்கிறது...
பரிசல்...முழு பதிவும் கடைசிலிருந்து படிக்கவிட்டீர்கள்.
மன நிம்மதி.

வெண்பூ said...

குழந்தைகளை மருத்துவமனையில் பார்ப்பதை விட நரக வேதனை வேறெதுவும் இல்லை பரிசல். அனுபவப் பூர்வமாக அழுதததால் சொல்கிறேன். :(

ராஜ நடராஜன் said...

குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

RRSLM said...

பீலிங்குல ஓட்டு போடா மறந்துட்டேன்.....இப்போ குத்திட்டோமில்லா

Prabhu said...

ஒரு மாதிரி பதைபதைப்போடு கொண்டு சென்றீர்கள் உங்கள் உரையை!

மணிநரேன் said...

முதல் பத்தியில் கூறியிருப்பது மிகவும் உண்மை.
மேலும் குழந்தைகள் இருக்கும் இடத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

பரிசல்காரன் said...

@ டி வி ஆர் ஐயா

நன்றி!

@ வெண்பூ

ப்பா! உண்மைங்க!

நன்றி ராஜநடராஜன், RR, Pappu & மணிநரேன்

AvizhdamDesigns said...

குழந்தைகளை கண் முன்னால் வைத்திருங்கள்!


குழந்தைகளை மருத்துவமனையில் பார்ப்பதை விட நரக வேதனை வேறெதுவும் இல்லை பரிசல்.


எவ்வளவு எதார்த்தமான,
யோசிக்க வேண்டிய வரிகள்..!



இந்தக்குழந்தைகளை விபரம் தெரியும் வரை எந்த ஆபத்துமில்லாமல் வளர்த்தெடுப்பது பெரும் சவால்தான்.

Unknown said...

நர்சிம் பதிவு படித்ததன் விளைவால் கொஞ்சம் பயத்துடனே இந்தப் பதிவைப் படிக்க ஆரம்பித்தேன். குழந்தை நல்லபடியாக குணமாகியது படித்து நிம்மதி. Thank god.

//அதுவும் சின்னச் சின்னக் குழந்தைகள் அட்மிட் ஆகியிருக்கும் பிரிவில் ஒரு வாரமிருந்தால் யாரும் எந்த நிலையில் இருந்தாலும் ஆடும் ஆட்டமெல்லாம் அடங்கிவிடும்!//

சத்தியமான உண்மை. என் குழந்தை பிறந்ததும் ஐசியுக்கு கொண்டுச்செல்லப்பட அங்கே எங்கள் நிலாவைப் போலவே இன்னும் 12 குழந்தைகள். ஒவ்வொரு நாளும் குழந்தை பிறந்த சந்தோஷத்தையும், குழந்தை ஐசியுவில் இருக்கும் சோகத்தையும் இரு கண்களிலும் தேக்கி பார்வை நேரத்தில் சில மணித்துளிகள் மட்டும் குழந்தையைப் பார்க்க காத்திருக்கும் தந்தைகள், நாளுக்கு இருமுறையாவது பாலூட்ட மாட்டோமா என காத்திருக்கும் தாய்களும் - மறக்க முடியாதவை

வால்பையன் said...

கொடுமையான விசயம்!
குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளவேண்டும்!

தொப்பை இரைப்பைக்கு செல்லாமல் ஏன் நுரையீரலுக்கு சென்றது!
ஆராய்ச்சிக்கு உள்ளாக்கபட வேண்டிய கேள்வி! உரையாடல் முக்கியம்!

kumar said...

//போதிமரமெல்லாம் தேவையேயில்லை. புத்தனிருந்தால் சொல்வேன்.. மருத்துவமனைக்குப் போவென்று. //

முற்றிலும் உண்மை.. இந்த வருட ஆங்கில புத்தாண்டு எனக்கு மறுபடியும் (ஆம் மறுபடியும்) இதை உணர்த்தியது... எனக்கு சில கடினமான தருணம் வரும்பொழுது இந்த புத்தாண்டு உணர்த்தியதை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வேன்.. நினைவுபடுத்தியதற்கு நன்றி !!!

அருமையான பதிவு...

kumar said...

//போதிமரமெல்லாம் தேவையேயில்லை. புத்தனிருந்தால் சொல்வேன்.. மருத்துவமனைக்குப் போவென்று. //

முற்றிலும் உண்மை.. இந்த வருட ஆங்கில புத்தாண்டு எனக்கு மறுபடியும் (ஆம் மறுபடியும்) இதை உணர்த்தியது... எனக்கு சில கடினமான தருணம் வரும்பொழுது இந்த புத்தாண்டு உணர்த்தியதை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வேன்.. நினைவுபடுத்தியதற்கு நன்றி !!!

அருமையான பதிவு...

கிரி said...

கே கே இதை படித்தவுடன்..என் பையன் மீதான பயம் கொஞ்சம் வந்து விட்டது.

அவன் குணம் அடைந்ததில் சந்தோசம், அதுவும் அவன் மூச்சு திணறும் போது..ஐயோ! நினைத்தே பார்க்க முடியவில்லை..நானும் ஒரு தகப்பனாக நினைத்து பார்த்தால் ரொம்ப பதட்டமாக உள்ளது.

அவர்களின் பெற்றோர்கள் எப்படி தவித்து இருப்பார்கள் :-(