Friday, February 20, 2009

இந்த மாதம்... வக்கீல்கள் vs போலீஸ்

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக நேற்றைக்கும் ஒரு நேரடி ஒளிபரப்பு காண்பிக்கப்பட்டது. சென்றமுறை சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டதைக் காண்பித்தார்களல்லவா? இந்தமுறை சட்டத்தை படித்து முடித்தவர்களும், அதே போலீஸும். சென்றமுறை பேசாமல் வேடிக்கை பார்த்த போலீஸ் இந்தமுறை அதிரடியாகக் களமிறங்க வேண்டியதாயிற்று. காரணம் இந்தமுறை போட்டியாளர்களில் ஒருவராக அவர்கள் இருந்ததுதான்.

உயர்நீதிமன்ற வளாகம். ராமானந்த் சாகரின் மகாபாரதத்தில் பாண்டவர்களும், கௌரவர்களும் போருக்கு நிற்பதுபோல ஒருபுறம் போலீஸ் லத்தி, தடுப்பான்களுடன் நிற்க ஐம்பது-நூறடி தூரத்தில் வழக்கறிஞர்கள் நிற்கின்றனர். எந்தப்பக்கத்திலிருந்து முதலில் என்று தெரியவில்லை.. கற்கள் வீச்சு ஆரம்பமாகிறது. வழக்கறிஞர்களில் ஒருவர் தைரியமாக (!!) முன்னே வந்து பெரிய சைஸ் செங்கல்லைத் தூக்கி வீசுகிறார். போலீஸ் ‘ங்கொய்யால.. நாங்ளும் வீசுவோம்ல’ என்பது போல அவர்களும் கற்களை வீசுகின்றனர்.

கொஞ்சநேரத்தில் ‘ஷூட்.. ஷூட்’ என்ற குரல் ஒலிக்க, வக்கீல்கள் சிதறி நாலாபுறமும் ஓட கண்ணீர் புகை குண்டுகளும், வான் நோக்கிய துப்பாக்கிச் சூடும் நடக்கிறது.

வீரமிக்க நமது காவல்துறையினர் அருகிலிருக்கும் இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை அடித்துக் கொண்டும், அவற்றின்மீது கற்களை வீசிக்கொண்டும் முன்னே செல்கின்றனர்.

வெள்ளைச் சட்டையோடு வருவோரையெல்லாம் லத்தியில் அடித்துத் தாக்குகின்றனர் போலீஸார். ‘நீதி எங்கே.. நீதிபதி எங்கே’ என்று நம் மனசு நினைக்கும்போது அங்கே வருகிறார் நீதிபதி.. தலையில் ரத்தத்தோடு! அவரை கைத்தாங்கலாக ஒரு வாகனத்தில் ஏற்றுகின்றனர். “CONTROL THIS SITUATION. WHERE IS SP?” என்று கேட்டபடி பதட்டமாகவே வண்டி ஏறுகிறார் அவர். எஸ்.பி. எங்கே யாரை அடித்துக்கொண்டிருக்கிறாரோ அவரை எங்கே தேட என்று நினைத்த காவலர்கள் மீண்டும் களத்தில் இறங்கி போரிட ஆரம்பிக்கின்றனர்.

காட்சி மாறுகிறது. உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கிற காவல்நிலையம். அதற்குள் இருக்கிற பீரோ, மேஜை, நாற்காலிகள் எல்லாமே வெளியே கொண்டுவரப்பட்டு திகுதிகுவென எரிந்துகொண்டிருக்கிறது. பீரோவில் இருந்த கோப்புகள் வெளியே விழ ஒரு வெள்ளைச் சட்டைக்கார்ர் அதைச் சரியாக எடுத்து தீயில் போடுகிறார். பாவம். அவரோட கேஸ் கட்டா இருக்கும். என்ன நிலைமைல இருக்கோ.. என்ன கஷ்டமோ!

என்ன நடக்குது தமிழ்நாட்ல?

இன்றைக்கிலிருந்து உண்மையாக நடந்தது என்ன என்ற விபரங்கள் தெரியவரும். என் வக்கீல் நண்பன் ஒருத்தன் ‘இது முன்னரே திட்டமிட்டது. மொத நாளே நாளைக்கு இருக்கு உங்களுக்கு’ என்றபடியேதான் போலீஸ் திரிந்தனர் என்கின்றான்.

ஆனால் அந்தக் கற்களும், லத்தியும் நேற்றைக்கு வந்ததல்ல. பல தலைமுறை தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது இவர்களுக்கிடையேயான பகை. நேற்றைக்கு நடந்ததும் வெறும் முன்னோட்டம்தான். இதன் பின்விளைவுகளும், இன்னும் பல சண்டைகளும் நேரடியாக – மறைமுகமாகத் தொடரத்தான் போகிறது.

எனக்கிருக்கும் கேள்வி: தோற்றத்தில் சக மனிதனாய்ச் சிரித்துப் பழகிக்கொண்டிருக்கும் உங்களுக்குள் இவ்வளவு பகையை சேர்த்து வைக்க எப்படி முடிகிறது?

கல்வியும், இந்தச் சமூகமும் உங்களுக்குக் கற்றுத் தந்தது என்ன? இதையா? நேரடியாகவோ, மறைமுகமாகவோ இது போன்ற நிகழ்வுகளுக்கு சக மனிதன் என்கிற முறையில் நானும் ஒரு காரணம்தான். நான்.. நாங்கள் என்ன செய்ய வேண்டும் இப்போது?

என் தலைமுறையிலேயே இதெல்லாம் நடக்கிறதே.. என் மகன், மகள் தலைமுறை எப்படி இருக்கும்?

இனி பள்ளிக்கூடத்தில் போர்க்காலத்தில் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதைக் கட்டாயப்பாடமாக்கத்தான் வேண்டும்போல இருக்கிறதே! பள்ளியிலேயே கத்தி, துப்பாக்கி பயிற்சி கொடுக்கவேண்டுமா?

ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கவே முடியாது. ‘சண்டை போட்டா பழசு மறந்துடும்’ என்ற ‘அமாவாசை’யின் தத்துவத்தைத் தான் ஆட்சியாளர்கள் பின்பற்றுகின்றனர்.

பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை.. ஸ்ரீஇலங்காவில் பாதுகாப்பில்லை என்கிறோம். அங்கே தீவிரவாதிகளால், இராணுவத்தால் இப்படிச் சண்டைகள் நடக்கிறது. இங்கே மனிதனோடு மனிதனாய்ப் பழகும் இவர்களுக்குள் இவ்வளவு வன்மமா? கைது செய்து வரச் சொன்னால்.. கண்ணில் பட்ட வாகங்களை எல்லாம் நொறுக்க யார் சொல்லிக் கொடுத்தார்கள் போலீஸுக்கு? சென்னையில் இது நடந்தது என்று பதிலுக்கு கோவையில் ரகளையில் ஈடுபட்டு காவல்துறை வாகனம் ஒன்றில் கண்ணாடியை உடைத்த வக்கீல்கள் இந்தச் சமூகத்திலிருந்து கற்றுக் கொண்டது என்ன? தங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு அவர்கள் விட்டுச் செல்வது அந்தக் கற்களைத்தானா?

கடைசியில் என்மீதே எனக்கு பயமாய் இருக்கிறது. சென்றமுறை சட்டக்கல்லூரி சம்பவத்தின்போது ‘ஐயோ.. இப்படியெல்லாம் நடக்கிறதே’ என்று இரண்டு நாட்கள் அந்த்த் தாக்கத்திலேயே இருந்தேன். நேற்றைக்கு அத்தனை சமூகச்சீர்கேடான காட்சிகளைப் பார்த்தபிறகும் அடுத்த பத்து நிமிடத்தில் AMERICA’S FUNNIEST VIDEOS பார்த்துச் சிரிக்கமுடிந்தது என்னால்.

சிலரிடம் பேசியபோதும் இதையே உணர முடிந்தது. புதியபடம், நேரடி கலைநிகழ்ச்சிகள் எல்லாம் போரடித்து இப்பொதைய ட்ரெண்ட் இதுதான் என்பது போல ஆகிவிட்டது. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும்போது மதுரையில் மூன்று பஸ்கள் எரிக்கப்பட்டதாய் செய்தி சொல்கிறது.

ஒன்றும் சொல்வதற்கில்லை!

26 comments:

மேவி... said...

ippo than news yai tv la parthen

மேவி... said...

அண்ணாதே.....
இவங்க எல்லாம் சோழ, சேர, பாண்டியன் மாதிரி ....
வேணும்னா அடிசுப்பங்க ....
வேணும்னா "முஸ்தபா முஸ்தபா dont worry முஸ்தப்பா ...."
பாட்டு படுவாங்க .......

மேவி... said...

news ல நானும் பார்த்தேன்.....
போலீஸ் ஆளுங்க தான் கார் கண்ணாடி break பண்ணினாங்க.....

நான் நினைக்குறேன் .... யாரையோ காப்பத்த போலீஸ் இப்படி செய்கின்றனரோ ....

Cable சங்கர் said...

ரெண்டு வர்ஷன் வ்ந்திச்சு டிவியில, ஒண்ணூ சண்டிவி வர்ஷன். அதில போலீஸ் சப்போர்ட்டா காட்டினாங்க.. மக்கள் டிவில வக்கிலுங்க சப்போர்டா காட்டினாங்க..

anujanya said...

கே.கே. ,

எதுவும் நடக்கும் போல!

//ராமாயணம் சீரியலில் பாண்டவர்களும், கௌரவர்களும் போருக்கு நிற்பதுபோல//

நான் அது மகாபாரதம் சீரியல் என்று நினைத்திருந்தேன் :))

அனுஜன்யா

பொன்.பாரதிராஜா said...

இவனுங்கள திருத்த முடியாது பாஸ்.சட்டத்தை தெரிஞ்சு வெசுருக்கரவங்க எல்லோருமே ரவுடிகளாவேதான் இருக்காங்க!!!!!

narsim said...

இந்த ஞாயிறு டி வி ல என்ன படம்? ஆமா.. வேலை எல்லாம் எப்படி போகுது? வேற என்ன விசேசம் திருப்பூர்ல??

Vinitha said...

//வேற என்ன விசேசம் திருப்பூர்ல??//

:-)

Paavai said...

this is what psychologists keep talking about as desensitization, more than even the events it is the desensitization process that needs more concern. Just like the way you could watch (many of us are able to ) funny american videos after viewing this violence, our kids will stop responding to violence in real life even when they see it first hand or worse still may start engaging in violence. You are absolutely right when you say it is really scary to think what kind of a world that our children will have to live in.

ஸ்ரீதர்கண்ணன் said...

பழகிப்போச்சு :(

Truth said...

தமிழ் நாடு லைட்டா கொஞ்சம் பீகார் மாதிரி ஆகுதுல?

karthi said...

tholare,
senra murai ungalukku manasu marathup ponatharku 'avarkalellaam manavarkal, ilaiya samuthayam, naalai eppadi irupparkalo enra bayamum, varuthamum than kaaranam. intha murai "mathikkave maatatha police karanga, niraiya kasu vangi neethiyai elam vidura vakkilunga" endru nam manathil pathinju ponavanga. so 'adichutu sakatum'nu namale ul manasula ninaikarathalayo ennamo afv paarthu sirikka mudikirathunnu naan ninaikaren. enna solringa?

ரமேஷ் வைத்யா said...

போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்ததன் மிகச் சரியான நூறாவது நாள் இந்த கைவெட்டி வேடிக்கை காட்டிய நாள்.
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
அவர்கள் எப்படியும் நாசமாய்ப் போகட்டும். வழக்கு விஷயமாக நீதி மன்றத்துக்குப் போயிருந்த என் நண்பரின் தகப்பனார் என்ன பாவம் செய்தார்?
நீதித் துறையும் காவல் துறையும் வேறு வேலையில் ஈடுபட்டிருப்பதால் இனி ரவுடித் துறை மும்முரமாகக் களத்தில் இறங்கலாம்.
வேறென்ன சொல்ல? ஞாயித்துக்கெளம என்ன படம்தான்.

எம்.எம்.அப்துல்லா said...

வீட்ல எல்லாரும் சவுரியமா??

விமல் said...

மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம்..

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய வக்கீல் மற்றும் காவல் துறையினரே இவ்வாறு நடப்பது மிகவும் துரதிஷ்ட்டவசமானது.

நீங்கள் கூறியது போல வருங்கால சந்ததியினரும் வன்முறைக்குப் பழகிப் போகாமல் தடுக்க வேண்டும்.

ஸ்ரீ.... said...

இவர்கள்தான் சமூகத்தின் நுணுக்கமான பதவி வகிக்கும் நிலையிலிருக்கிறார்கள் என்பதை நினைக்கவே அவமானமாக இருக்கிறது. அர்த்தமுள்ள பதிவு.

ஸ்ரீ....

கிருத்திகா ஸ்ரீதர் said...

"நேற்றைக்கு அத்தனை சமூகச்சீர்கேடான காட்சிகளைப் பார்த்தபிறகும் அடுத்த பத்து நிமிடத்தில் AMERICA’S FUNNIEST VIDEOS பார்த்துச் சிரிக்கமுடிந்தது என்னால்.

உண்மைதான் ஒரு நிமிடம் அப்படித்தான் மனதில் தோன்றி மறைந்தது.

HS said...

Submit your blog to the Tamil Blogs directory http://kelvi.net/topblogs/

சிவக்குமரன் said...

நானும் பார்த்தேன்,,எதுவும் நடக்கும் போல!

Thamira said...

எம்.எம்.அப்துல்லா..
வீட்ல எல்லாரும் சவுரியமா??//

ரிப்பீட்டு..
(ச‌மூக‌ப்பிர‌க்ஞையுட‌ன் சிந்தித்து அவ‌ல‌ங்க‌ளுக்காக‌ வ‌ருந்த‌வோ/ வேத‌னைப்ப‌ட‌வோ செய்தால் இப்போதுள்ள‌ சூழ்நிலையில் குடும்ப‌ உற‌வுக‌ளை அறுத்தெறிந்துவிட்டு அரசியலில் இணைந்து ச‌க‌ல‌வித‌ அநியாய‌ங்களுக்கும் ஒத்துப்போவ‌து போல‌ ந‌டித்துக்கொண்டு சினிமாவில் வ‌ருவ‌து போல‌ அதிகார‌த்துக்காக‌ காத்திருக்க‌லாம். அல்ல‌து குறைந்தபட்சமாக சில‌ ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் செய்வ‌து போல‌ எந்த‌ ஆப‌த்துக‌ளுமில்லாத‌ 'ர‌த்த‌தான‌ம் செய்த‌ல்' 'ம‌ர‌ம் ந‌டுத‌ல்' போன்ற‌ செய‌ல்க‌ளை க‌ரும‌மே க‌ண்ணாக‌ செய்துகொண்டு வ‌ர‌லாம்.. அப்ப‌டியே ந‌ம‌து குழ‌ந்தைக‌ளுக்கு ந‌ல்வாழ்க்கையினை ப‌யிற்றுவிக்க‌லாம். வேறொன்றும் செய்வ‌த‌ற்கில்லை. இதைப்போன்ற‌ ச‌மூக‌ அவ‌ல‌ங்க‌ளைக்க‌ண்டு க‌ண்ணீர் சிந்தி, வெட்க‌ப்ப‌டுவ‌த‌னால் என்ன‌ ப‌ய‌ன்.? நீங்க‌ள் தொட‌ர்ந்து நகைச்சுவை விடியோஸ் பாருங்க‌ள்.. நாங்க‌ள் ஒரு சோக‌ ஸ்மைலி போட்டுவிட்டுபோகிறோம்.)

KULIR NILA said...

Rendu Thirudangalum Sanda Potturukkanga Avvlotha. Ithukkaga makkal neenga feel pannakoodathu.

Oruthanga Meratti Kasu Vangaravaru

Innoruthar Vaaide mel vaaidha vaangiye case iluthu kaasu vangaravaru.

Thirudanga adichukutta Makkalaukku Santhosam thaane

வெண்பூ said...

//
தாமிரா said...
எம்.எம்.அப்துல்லா..
வீட்ல எல்லாரும் சவுரியமா??//

ரிப்பீட்டு..
//

இந்த கமெண்ட்ஸ் படிச்சிட்டு சிரிச்சேன்... என்ன செய்ய!!! மனசு மரத்து போயிட்டே வருது, மனிதம் மரிச்சுட்டே வருது, நம்ம ஒவ்வொருத்தரோட கையாலாகததனத்தோட உச்சம் இது.. வேறென்ன சொல்ல..

நையாண்டி நைனா said...

அண்ணே ... கொஞ்சம் நம்ம வீட்டுக்கும் வந்து தலைய காட்டுங்க...

தமிழ் உதயன் said...

அன்பு பரிசில்

உணர்வுகளை கொட்டி உள்ளிர்கள்.... ஆனால் இந்த நிலைக்கு நம்முடைய முந்தய தலைமுறை தான் காரணம் ஆனால் இதைவிட மோசமானால் நீங்களும் நானும் தான் காரணமாக இருக்க வேண்டும்.

நன்றி

தமிழ் உதயன்

அசோசியேட் said...

இங்க குவைத்துல நாலு நாளைக்கு முன்னாடி லைட்டா மழை வந்ததால குளிர் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. அங்க திருப்பூர்ல எப்படிங்க , ? மழை ஏதாவது ??

Prabhu said...

இது என்னவோ உண்மைதான். எங்க மதுரையிலயே ரவுடிகளுக்கு ஆதரவாக கல்லூரிக்குள் வந்து கல்லூரி மாணவர்களை அடித்த காட்சிகள் அரங்கேறியிருக்கும் போது வன்முறை பழகிப் போன வக்கில் போலீஸ் விவகாரம் பற்றி சொல்லத் தேவையில்லை.