Tuesday, February 3, 2009

ஊட்டியும் பதிவர்களும் - பார்ட் 2

ஒரு வ்யூ பாய்ண்டில் வாகனத்தை நிறுத்திப் பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த வனக்காவலர் ஒருவர் அந்த இடத்தைக் குப்பை போட்டு அசுத்தப் படுத்துவதைக் கண்டித்து சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போனார். அவருக்கு எங்கள் நன்றி.

அப்போ WALKவாதமா ‘நடக்க’ ஆரம்பிச்சு கோவை வர்ற வரைக்கும் பல தளங்கள்ல தொடர்ந்தது. அருமையான பல நீயா நானா ப்ரோக்ராம்கள் நடந்தது.

தொட்டபெட்டால இருந்து ஊட்டியப் பார்க்கலாம்னு போனோம்.

இந்த இடத்துல (தொட்டபெட்டால இல்லீங்க. பதிவுல இந்த இடத்துல) ஒரு மேட்டர். நான் ஆஃபீஸ்ல மொத தடவையா வேற பக்கம் போறதா சொல்லி லீவு வாங்கியிருந்தேன். (அந்த சண்டே எங்களுக்கு வேலை) எல்லாம் ஃபிக்ஸ் ஆனப்பறம் எங்க MD ‘நான் ஊட்டிக்கு போகணும். காட்டேஜ் புக் பண்ணு’ன்னுட்டாங்க. ஒரு வழியா எங்க ப்ளானோட மிக்ஸ் ஆகாம அவங்களுக்கு புக்கிங் பண்ணிக் குடுத்தேன்.

தொட்டபெட்டால அத்தனை காரைப் பார்த்ததும் எங்கே எங்க எம்.டி-யும் இங்க இருந்தா என்ன பண்றதுன்னு பயந்துட்டேதான் இருந்தேன். அப்படியும் பார்த்தா இவர்தான் “அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்’னு சொல்லிக்கலாம்னு நம்ம நண்பர்கள் தைரியம் குடுத்தாங்க. அப்படியும் குல்லா, கண்ணாடி, மாஸ்க்னு வித்தியாசமான கெட்டப்போடதான் தொட்டபெட்டால சுத்தினேன்.

அங்கே நாங்க தொப்பி வாங்கிட்டிரும்போது ஒரு முக்கியமான இயற்கைக் காட்சியைப் பார்த்த தாமிரா அத அப்படியே தன் கேமராவுல படம்பிடிச்சார்.

ஒரு பூ. அதோட இதழ்ல இருந்து தேன் வடியறா மாதிரி இருந்தது. அது நீரா, இல்ல ஃப்ளாஷுனால தெரிஞ்சதான்னு தெரியல. ஆனா எக்ஸலண்டா இருந்தது. நாங்க எல்லாருமே பார்த்து பிரமிச்ச படம் அது. ‘அதை பப்ளிஷ் பண்ணாதீங்க’ன்னு தாமிரா கேட்டுகிட்டதால படத்தை வெளியிட முடியல. அவர் ஏதோ காம்பெடிஷனுக்கு அதப் பயன்படுத்தப் போறாராம்.

அங்கிருந்து கிளம்பும்போது லதானந்த் அங்கிளைச் சந்தித்தது ஒரு இன்ப அதிர்ச்சி! காலில் சுளுக்கு ஏற்பட்டு, வலியோடிருந்த தருணத்திலும் நாங்கள் இருக்கும் இடம் கேட்டுக் கேட்டு வந்து சந்தித்தார். கொஞ்சநேரம் பேசிவிட்டு விடைபெற்றுப் போனார். பிறகு நாங்கள் கிளம்பிச் செல்ல, முன்னே சென்று கொண்டிருந்த அவர் தனது சஃபாரியை நிறுத்தி ‘அந்த’ப் பரிசை அளித்தார். ஊட்டியின் குளிருக்கு இதமான அந்தப் பரிசுக்கு அவருக்கு நன்றி!

அங்கிருந்து கிளம்பி மசினகுடி காட்டேஜ். உள்ள போகும்போதே பக்கத்து காட்டேஜ்ல வோடஃபோன் HR டீம் வந்திருக்குன்னாங்க. ‘HR டீம்ன்னா நிச்சயமா அதுல கேர்ள்ஸ் இருப்பாங்க’ங்கற சந்தோஷத்துல உற்சாகத்தோட உள்ளே போனோம்.

அருமையான காட்டேஜ். கான்க்ரீட் கட்டடங்களால் சூழப்பட்ட நகரத்திலிருந்து மேலே பார்க்கும்போது ஒண்ணுமே தெரியாம இருந்தது. இங்க மேல பார்த்தா நட்சத்திரக் கூட்டம் அவ்வளவு அழகா தெரிஞ்சது. எல்லா நாட்டிலும், எல்லா ஊரிலும் இருக்கும் அதே வானம் எவ்வளவு அழகா, நட்சத்திரக் கூட்டங்களோட இங்கே தெரியுதுன்னு ஆச்சர்யமா இருந்தது. நட்சத்திரங்களை தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்திட்டிருந்து, இப்படி வெளில இவ்வளவு நிஜ நட்சத்திரங்களைப் பார்க்க சந்தோஷமா இருந்தது.

அடுத்த நாள் காலைல அஞ்சுமணிக்கு எழுந்து காட்டுல இருக்கற மான்களைப் பார்த்துட்டு, பக்கத்து காட்டேஜ்ல இருக்கற மான்களைப் பார்க்கலாம்னா எல்லாரும் எஸ்கேப் ஆகியிருந்தாங்க. அப்போ என்கூட இருந்த ஒரு நண்பர் கேட்டார்: “ஆண்கள் அறையின் ஜன்னலில் ஜட்டி காயறதை என்னால புரிஞ்சுக்க முடியுது. பெண்கள் அறை ஜன்னலோரம் பீர் பாட்டில்கள் இருக்கறத புரிஞ்சுக்க முடியல”ன்னு. நான் சொன்னேன். “எல்லா ஆண்களும் ஜட்டி போட மாட்டாங்க, எல்லாப் பெண்களும் பீர் குடிக்க மாட்டாங்க”

அதற்குப் பிறகு கிளம்பி ஒரு ஆற்றில் அட்டகாசமான குளியலும், கருத்துப் பரிமாற்றமும் நிகழ்த்திவிட்டு கோவை திரும்பினோம்!

இவ்வளவுதானா?

ஆமா... அவ்வளவுதான்!

சரி... ஆளாளுக்கு இந்தப் பிரயாணத்தை ‘ஆஹா.. ஓஹோங்கறீங்களேடா.. தாங்கல. அப்படி என்னதான் விசேஷம் இதுல?’ன்னு கேட்கறவங்களுக்காக..

நீங்கள் ஒரு பயணம் போறீங்க. ம்ம்ம்.. ஒரு ஆறுபேர்னு வெச்சுக்கங்க. உங்களுக்கு டி.வி.டில அன்பே சிவம் பார்க்கணும்னு தோணுது. இன்னொருத்தருக்கு குருவி படம் பார்க்கணும்னு இருக்கு. இன்னொருத்தருக்கு குசேலன் பார்க்கணும்னு இருக்கு. எப்படி இருக்கும்?

எங்க பயணத்துல எல்லாருக்கும் ஒரே கருத்துதான். ஆணியப் புடுங்க வேண்டாம்னு வடிவேலு சொன்னமாதிரி.. டிவிடியே போடவேண்டாம்!

'நான் கடவுள்' பாட்டு கேட்டீங்களான்னு ரொம்பத் திமிரோட நான் கேட்கறேன். என்னமோ எனக்குத்தான் ரசனை இருக்குங்கறா மாதிரி. உடனே செல்வேந்திரன் அவரோட செல்லுல அந்தப் பாடலை ஒலிக்க வைக்கறாரு. எல்லாரும் கண்ணைமூடி அதைக் கேட்கறோம். கும்க்கி அவரோட எம்.பி3 ல இருந்து அண்ணாச்சிக்கு போட்டுக் காட்டறாரு. எல்லாரும் மயங்கிக் கிறங்கி ரசிக்கறோம்! எனக்கு பேச்சே வரல. அந்தப் பாடல்ன்னு இல்ல என்ன பாட்டு பத்தி அது சூப்பர்லன்னு பேச்சு வந்தாலும் அந்தப் பாட்டை எங்க எழுவர்ல யார்கிட்டயாவது இருந்தது. முக்கியமா செல்வேந்திரன்கிட்ட. தாமிரா ‘தேரே மேரே பீச்மே' எனக்குப் புடிச்ச பாடல்ன்னு சொல்ல அதைக்கூட அவர் செல்லுல இருந்து ஒலிபரப்பி பிரமிக்க வைச்சார்!

கல்யாண்ஜியப் பத்தி பேசறோம், நாஞ்சில் நாடனைப் பத்திப் பேசறோம், ச.தமிழ்ச்செல்வனைப் பத்திப் பேசறோம், சாருவைப் பத்திப் பேசறோம், தங்கமணிகளைப் பத்திப் பேசறோம், விஜய் ஏசுதாஸ் பத்திப் பேசறோம், விகடனைப் பத்திப் பேசறோம், ரசிச்ச விளம்பரங்களைப் பத்திப் பேசறோம், பதிவர்களைப் பத்திப் பேசறோம்...

எல்லா டாபிக்கையும் ஆரம்பிக்கறதுதான் ஒருத்தர். தொடரறது இன்னொருத்தர், முடிக்கறது இன்னொருத்தர்ன்னு போய்ட்டே இருக்கு. (கார்க்கி சொன்ன டகீலா மேட்டர் தவிர.. அதுமட்டும் எங்க எல்லாருக்கும் புதுசு!) ‘ஒரு கவிதைல கல்யாண்ஜி என்ன சொல்றாருன்னா’ அப்படீன்னு கும்க்கி ஆரம்பிச்சா அந்தக் கவிதையை வரிகளோட சொல்றாரு வடகரை வேலன் அண்ணாச்சி. ஒரு பதிவுல இதப் படிச்சேன்னு ஏதோ ஒரு பாய்ண்டை யாரோ சொன்னா, அது இவரோட பதிவு, அதோட URL இது-ன்னு எடுத்து விடறாரு வெயிலான். சினிமா பத்திப் பேசினா தகவல்களை அள்ளித் தெறிக்கறாரு கார்க்கி. ஒரு இடத்தை, ஒரு காட்சியை நாங்க ரசிச்சுகிட்டிருக்கறப்போ, டக்னு வந்து “இந்தப் படத்தைப் பாருங்க”ன்னு நாங்க ரசிச்ச காட்சியை தன்னோட ஒளிப்பேழைல சிறைப்படுத்தி பிரமிக்க வைக்கறாரு தாமிரா. இப்போதைய தப்பித்தலை விட நெடுநாளைய திட்டமிடலும், தீர்வுகளுக்கான யோசனையும் தேவைங்கறாரு கும்க்கி. (எங்க எல்லாரையும் சகிச்சுட்டு வந்ததுக்கே அவருக்கு கோடி கும்பிடு!)

இந்த இடத்துல கும்க்கிக்கு ஒரு வார்த்தை..

“சட்டம்.. ஒழுங்குங்கறது தனிமனித.....”

ஹலோ... கும்க்கி.. எங்க ஓடறீங்க... ஓடாதீங்க... சரி. சரி.. நான் பேசல.. அண்ணாச்சி.. அவரைப் புடிங்க....”

டிஸ்கி: வீட்டுல சிஸ்டத்துல வைரஸ் இஷ்டத்துக்கு விளையாடுது. சரியா எழுத முடியல. ஆஃபீஸ்ல ஆணி அதிகம். நேரம் கிடைக்கறப்போ ஊட்டில அப்பப்போ நடந்த விவாதங்களின் தொகுப்பை வசனமா எழுதறேன்.

10 comments:

பரிசல்காரன் said...

ஊட்டி பற்றிய பதிவிற்கு முதல் கமெண்ட் இயற்கையிடமிருந்து!

ஆஹா!!!

Nilofer Anbarasu said...

//'நான் கடவுள்' பாட்டு கேட்டீங்களான்னு ரொம்பத் திமிரோட நான் கேட்கறேன். என்னமோ எனக்குத்தான் ரசனை இருக்குங்கறா மாதிரி. உடனே செல்வேந்திரன் அவரோட செல்லுல அந்தப் பாடலை ஒலிக்க வைக்கறாரு. எல்லாரும் கண்ணைமூடி அதைக் கேட்கறோம்.//

நான் கடவுள் பாடல்கள் சாதரணமாகத்தான் இருக்கின்றன. படத்தோடு இசை ஒன்றியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை ஆனால் தனியாக பாடல்கள் ஓகே ரகம் தான். நாட் த பெஸ்ட். படம் வெளி வந்தவுடன் இன்னும் கொஞ்சம் பிடிக்கும் என நினைக்கிறேன்.

நந்தலாலா பாடல்கள் இதைவிட அருமையாக இருக்கிறது. அப்படியே இளையராஜா டச்.

narsim said...

ஆரம்பம் முதல் டிஸ்கி வரை சர்ர்ர்ரென்று சென்றது பதிவு.. உங்கள் பயணம் போலவே.. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க பரிசல்.

(ங்... விட்டுட்டு போய்ட்டு பார்ட் 1 பார்ட் 2னு.. நல்லா இருங்க..)

முரளிகண்ணன் said...

ம்ம் நடத்துங்க நடத்துங்க

கார்க்கிபவா said...

//ஒரு பூ. அதோட இதழ்ல இருந்து தேன் வடியறா மாதிரி இருந்தது. அது நீரா, இல்ல ஃப்ளாஷுனால தெரிஞ்சதான்னு தெரிய//

நான் கிட்டப் போய் பார்த்தேன். அது நீர்தான்.. என்னவொரு அழகு.. யப்பா.....

//அப்படியும் குல்லா, கண்ணாடி, மாஸ்க்னு வித்தியாசமான கெட்டப்போடதான் தொட்டபெட்டால சுத்தினேன்//

நாங்களே பரிசல காணோம்னு தேடினோமில்ல..

// சினிமா பத்திப் பேசினா தகவல்களை அள்ளித் தெறிக்கறாரு கார்க்//

கிகிகி.. அவ்ளோதானா என்னைப் பத்தி...

Anonymous said...

ஏம்பா அங்கிளுக்கு ஹேர்லைன் பிராக்சர். நீ பாட்டுக்கு சுளுக்குன்னு எழுதியிருகே? அவரு கோவிச்சுக்கப் போறாரு.

இதற்கு வசனம் தேவையில்லைன்னு அவரு ஒரு பதிவு போட்டிருக்கார் பாரு.

மத்தபடி பதிவுல எழுதுனது முற்றிலும் உண்மை. ஒத்த அலைவரிசைங்கிறதுதான் சுற்றுலாவைச் சுகமாக்கியது.

Truth said...

super. nadula punch dialogue ellam class :-)

Unknown said...

parisal,
innum tiruppur book fair 09 kku pogalaiya?

Natty said...

// வீட்டுல சிஸ்டத்துல வைரஸ் இஷ்டத்துக்கு விளையாடுது. //

ஹி. ஹி.. 'லா' ஆராய்ச்சியாலேதானே வைரஸ் வந்தது .... :)

ரமேஷ் வைத்யா said...

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவின் பாடல்களில் அசத்தியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. Another maestro in making!