Wednesday, November 26, 2008

எனக்கு இப்படி.. உங்களுக்கும் இப்படியா?




நான் சந்திக்கற சில பிரச்சினைகள் உங்களுக்கும் இருக்கான்னு தெரிஞ்சுக்க ஆசை...

அதே மாதிரி, சில விஷயங்களை நான் சந்திக்க நேரும்போது என் மனதில் உருவாகும் எண்ணங்கள் (ச்சே.. ரொம்ப ஃபார்மலா இருக்குப்பா வார்த்தைகள்) வித்தியாசமானதா தோணும். உமா சொல்லுவாங்க... ‘நீங்க மட்டும்தான் இப்படியெல்லாம் நெனைக்க முடியும்’ன்னு. இல்லீன்னா.., ‘உங்களுக்கு மட்டும்தான் இப்படித் தோணும்’ன்னு சொல்வாங்க.

சரி.. நம்ம மக்களைக் கேட்டுப் பார்க்கலாமேன்னுதான் இந்தப் பதிவு....

----------------

a) தமிழ்மணத்துல பதிவை இணைக்க, நம்ம பதிவு தலைப்புல தெரியற தமிழ்மண விட்ஜெட்ல இருக்கற ‘அனுப்பு’வை ப்ரஸ் பண்ணினா தமிழ்மண விண்டோ ஓப்பன் ஆகி ‘ங்கொய்யால.. சேர்த்தாச்சுல்லடா? பின்ன எதுக்கு ச்சும்மா நொய் நொய்னு அமுக்கீட்டிருக்க? அஞ்சு நிமிஷம் பொறு.. ஒம்பதிவு தெரியும்’ங்குது. சரின்னு அடுத்தநாள் வேற பதிவு எழுதி, அதை நம்ம ப்ளாக் வழியா அனுப்பாம, தமிழ்மண முகப்புல இருக்கற ‘உங்கள் இடுகைகளைப் புதுப்பிக்க’வுல நம்ம யூ.ஆர்.எல்லை டைப்பி குடுத்தா ‘புதுசா என்னத்தை எழுதிக்கிழிச்ச? நீ கிழிச்சதையெல்லாம் இங்கன போட்டுட்டோம்ல’ன்னு மெரட்டுது.

மொத மாதிரி வகைப்படுத்தற ஆப்ஷனெல்லாம் இல்லியோ? உங்களுக்கும் இப்படித்தானா...?

b) எங்கியாவது சின்ன லெவல்ல சண்டை, சச்சரவுன்னா பைக்ல போயிட்டிருக்கறப்ப நின்னு வேடிக்கை பாக்கறவங்க மேல கோவம் வருது. ‘உன்னால அதைத் தடுக்கவோ, இல்ல போய் சமரசம் பேசவோ முடியும்னா நில்லு. ச்சும்மா நின்னு வேடிக்கை பார்த்து ஏன்யா கூட்டத்தைக் கூட்டறீங்க’ன்னு கேட்கத் தோணும். ஆனா அதை கேட்கமுடியாம கையாலாகாதவனா போய்ட்டே இருக்க மட்டுமே முடியுது.

c) இது உண்மையா வர்ற சிந்தனை. 'இது தப்பு, இப்படி நெனைக்கறியே ச்சீ’ன்னெல்லாம் திட்டக்கூடாது.

சில சமயங்கள்ல ‘கல்யாணமாகாம இருந்திருந்தா தேவலை’ன்னு தோணும். உதாரணத்துக்கு போன பாரா-ல சொன்ன மாதிரி சூழ்நிலைகள்ல நின்னு சண்டையை சமரசம் பண்ணி அது வேற எக்ஸ்டண்டுக்குப் போகுமோங்கற திங்கிங்-ல பேசாம போய்டுவேன். அதே பாச்சிலரா இருந்து கமிட்மெண்ட்ஸ் இல்லைன்னா எறங்கிப் பார்த்துடலாம்டா’ன்னு தோணும்.

கல்யாணமான எல்லாருக்குமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல இந்த எண்ணம் வருமா..? (சண்டையைத் தீர்க்கற மனோபாவத்தைச் சொல்லல. கல்யாணமாகாம இருந்திருக்கலாமே-ங்கற எண்ணம்.)

d) ஒரு நல்ல ஃபிகரைப் பார்த்து பேசறப்போ கண்ணைப் பார்த்து பேசறது பெண்களுக்குப் பிடிக்கும்’ன்னு (யாரு சொன்னா இதை?) கேள்விப்பட்டதால கண்ணைப் பார்த்து பேசிட்டிருப்பேன். ஆனா அப்படி கண்ணைப் பார்த்துப் பேசறது ரொம்ப செயற்கையா உணர்வேன். உங்களுக்கும் அப்படியா?

(c-ஐயும், d-ஐயும் மிக்ஸ் பண்ணி குழப்பிக்காதீங்க..)

e) நல்ல ஒரு மேட்டர் ரெடி பண்ணி அது பத்தி பதிவெழுத ரொம்ப நாளா ட்ரை பண்ணிகிட்டிருப்பேன். ஆனா அதுக்கான வரிகள் செட்டாகாது. சரி எப்படியாவது எழுதலாம்னு சிஸ்டம் முன்னாடி உக்கார்ந்தா திடீர்னு வேற எதுனா மொக்கையா சிந்தனை ஓடி, அது விஷயமா வார்த்தைகள் கடகடன்னு கொட்டி உடனடி பதிவாகி, உங்க கெட்ட நேரத்துக்கு அந்தப் பதிவு ஹிட் வேற ஆகிடும். உங்களுக்கும் இப்படி நடந்திருக்கா?

f) யாராவது புத்தகத்தை படிச்சிட்டிருக்கறப்போ பக்கங்களைத் திருப்ப, கீழ் வலது மூலையை விரல்களால் மடக்கி - அந்தப் பக்கத்துல திருப்பினத்துக்குண்டான அடையாளம் விழற அளவு அழுத்தி - திருப்பறப்போ நமக்கு வலிக்குது. படிக்கற பக்கத்தின் வலது மேல் மூலையை ஒரு விரலாலே... அழகா திருப்பலாமே-ன்னு சொல்லத்தோணும். நம்ம புக்கை வாங்கிப் படிக்கறவர்கிட்ட சொல்லலாம். அவன் காசு போட்டு வாங்கின புக்கை ‘இப்படிப் பண்ணாதே.. அப்படிப் பண்ணாதே’ன்னு சொல்லி ஏன் அடிவாங்குவானேன்.

நீங்க இப்படி நெனைச்சதுண்டா?

g) சீரியல் பாக்கறது என்னமோ தெய்வகுத்தம்ன்னு பெண்களை விமர்சனம் பண்ணிகிட்டிருக்கேன். ஆனா சேனல் மாத்தும்போது, சீரியல்களின் சில சீன்களும் பின்னணில அவனுக கொடுக்கற ப்பப்பரப்பாஆஆஆஆஆஆங்.. ட்டொய்ங்.... ம்யூசிக்கும் என்னதான் சொல்றானுக இவனுக’ன்னு ஒரு அஞ்சு நிமிஷம் பார்க்க வைக்குது.

உங்களுக்கும் இப்படித்தானா?

h) பதிவுகள்லயோ, பத்திரிகைகளிலோ சினிமா விமர்சனங்களைப் படித்தபிறகு அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் குறைந்துவிடுகிறது. அதே சமயம், சினிமா பார்த்துவிட்டு வந்தபிறகு அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தைத் தேடிப் படிக்கிறேன். (பலதடவை இதற்காக ‘ரெண்டு வார முந்தைய விகடன் எங்க’ என்ற ரீதியில் வீட்டைக் கலைத்துப் போட்டுத் தேடியிருக்கிறேன்)

சேம் ப்ளட்?

i) வாழ்க்கையில் பல விஷயங்களில் சமரசப்பட்டு போய்விடுகிறேன். அல்லது மாறிவிடுகிறேன். பிறகு அதற்கு சப்பையாக ஒரு காரணத்தைச் சொல்லி எஸ்கேப்பிஸத்தை கேவலமாக நியாயப்படுத்துகிறேன்.

உதாரணத்திற்கு, குப்பையை பொதுவில் போடக்கூடாது, திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கக்கூடாது, வெளியில் உமிழக்கூடாது, சாலைவிதிகளை மீறக் கூடாது என்பது போன்ற குறைந்த பட்சம் என்னால் முடிந்த சில நியதிகளை கடைபிடித்து வருகிறேன். இந்த லிஸ்டில் திருட்டு டி.வி.டி வாங்கக் கூடாது என்ற ஒன்றும் இருந்தது. ஆனால், அதை பலமுறை மீறுகிறேன்.

அதிலும் ஒரு விதி வைத்திருக்கிறேன்.. தியேட்டரில் பார்த்த படத்திற்குதான் டி.வி.டி வாங்குவேனே தவிர, நேரடியாக டி.வி.டியிலேயே படம் பார்க்கும் வழக்கம் இல்லை.

இந்த தி.டி.வி.டி வாங்குவதை விவாதங்களின்போது நான் நியாயப்படுத்துவது விருமாண்டி படத்துக்குப் போன சம்பவத்தைச் சொல்லி...

40 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டை 75 ரூபாய்க்கு கொடுத்தார்கள். வந்த ரௌத்ரத்தை அடக்கி, சரி என்று பொத்திக் கொண்டு போய் கொடுத்தபோது டிக்கெட் கிழிப்பவன் என் இரு மகள்களில் ஒருத்திக்கு நிச்சயமாய் டிக்கெட் வேண்டும் என்று சொல்லிவிடவே, மறுபடி டிக்கெட் வாங்கப் போனேன். அதே 40 ரூபாய் டிக்கெட் இப்போது 60 ரூபாய்க்கு கொடுத்துக் கொண்டிருந்தான். கவுண்டரில் இரண்டு, மூன்று பேர்தான் இருந்தனர். என் முறை வரும்போது, 60 ரூபாயா என்று நான் உரக்கக் கேட்டதும் ‘சரி.. கடைசி டிக்கெட்.. 50 ரூபா கொடுங்க போதும்’ என்றான்.

என்ன அநியாயம் இது என்று மேலாளர் வரை சென்று வம்பிழுத்து எந்த நியாயமும் கிடைக்காமல் அவமானப்பட்டு வந்து உட்கார்ந்தபோது பசுபதியின் மாட்டை கமல் அடக்கிமுடித்திருந்தார்.

அதே தியேட்டரில் கூல்ட்ரிங்க்ஸ் குடித்தபோது, வெறும் சப்பையாக இருக்கவே சில விசாரணை மேற்கொண்ட போது, அவர்களே டூப்ளிகேட்டாக தயாரிப்பதாய் சொன்னார்கள்.

இதையெல்லாம் சொல்லி, இப்படி இருந்தா திருட்டு டி.வி.டி-ல படம் பார்க்காம என்ன பண்றதாம் என்று கேட்பேன். ஆனால் தியேட்டர் எஃபெக்ட் கிடைப்பதில்லை என்பதால் முதல் முறை தியேட்டர்தான்.

நீங்களும் இப்ப்டி எதிலாவது உங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டதுண்டா?

j) சினிமா பார்க்கும்போது முதல் எழுத்து போடுவதிலிருந்து பார்த்தால்தான் நிம்மதி. இல்லையென்றால் திருப்தியாக மாட்டேனென்கிறது மனது. அதேபோல கடைசியில் டைட்டில் போடும்போது தியேட்டர் ஆபரேட்டர் க்ளோஸ் பண்ணிவிட்டால், அவனை, அந்தத் தியேட்டர் ஓனரை, மேனேஜரை கெட்ட கெட்ட வார்த்தையால் (மனசுக்குள்ளதான்..) திட்டிவிட்டுத்தான் வெளியேறுகிறேன். அதேபோல படம் முடியும் முன்னே எழுந்திருக்கும் முந்திரிக்கொட்டைகளைக் கண்டாலும் கோபம் கோபமாய் வருகிறது.

நீங்க?

k) பயணங்களின் போது, வீட்டில் இருக்கும் படிக்காத சில புத்தகங்களை எடுத்துப் போகிறேன். ஆனால் அவற்றைப் படிக்காமல், போன இடத்தில் வேறு சில புத்தகங்களை வாங்கி வந்துவிடுகிறேன்.

நீங்களும் இப்படியா?

l) ஏதாவது ஆளில்லாத கடைக்குப் போகும்போது, நான் போன பின்னால் நாலைந்து வாடிக்கையாளர்கள் வருவதைக் கண்டிருக்கிறேன். ரோட்டோர இளநிக்கடையில் பைக்கை நிறுத்தினால்கூட எனக்கடுத்ததாய் நாலைந்து பேர் வந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். ‘நான் வந்தா அந்தக் கடைக்கு கூட்டம் வருதுடோய்’ என்று கேனத்தனமாக நினைத்திருக்கிறேன்.

எனக்குத்தான் இப்படியா.. உங்களுக்குமா?


இப்போதைக்கு அவ்வளவுதான். பிற சந்தேகங்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் கேட்கப்படும்!

77 comments:

Dr.Rudhran said...

mostly yes!

cheena (சீனா) said...

ஹல்ல்லோ

A D H J - ஆமா - எனக்கும் அப்படித்தான்

மத்ததெல்லாம் ம்ம்ம் தெரில

எனக்கும் நெரெய இப்படி - ... இப்படியா .... இருக்கு - ஆனா பதிவாப் போடணுமே ....ம்ம்ம்ம்ம்

துளசி கோபால் said...

இந்த உலகில் நீங்க தனியாக இல்லை. உங்ககூடவே ஒரு கூட்டம் இருக்குன்னு புரிஞ்சுக்குங்க:-)))))

Anonymous said...

//(c-ஐயும், d-ஐயும் மிக்ஸ் பண்ணி குழப்பிக்காதீங்க..)//

நாங்க குழம்பினாலும், குழம்பிக்காட்டியும் பிரச்சனை இல்லை.
ஆனால்
உங்க வீட்டில குழம்பிக்காம பார்த்துக்குங்க..
கிகிகிகிகிகி

பரிசல்காரன் said...

முதல் வருகைக்கு நன்றி டாக்டர் சார். இனிமே யாராவது என்கிட்ட கிண்டலா சொன்னா, ‘ருத்ரன்சாரும் இப்படித்தானாம்ன்னு சொல்லிக்குவோம்ல!

@ சீனா

நானும் இப்ப்டித்தான் இதைப்பத்தி யோசிக்கறப்ப தோணின நிறய மேட்டரை விட்டுட்டேன்..

SurveySan said...

12 matters.

Idha naalu padhivaa pottirukkalaamnu naan nenaippen. neenga eppadi? :)

பரிசல்காரன் said...

@ துளசிம்மா

நன்றி

@ தூயா

இதை அவங்ககிட்டயே கேட்டிருக்கேன். நாம யாரு! டெர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ல!

அப்புறம்...

தமிழ்மணத்துல ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு நன்றியோ நன்றி.. பின்றீங்களேப்பாஆஆஆ!

எட்வின் said...

அநேகமாக அனைத்திற்கும் எஸ் தான்!!!

பரிசல்காரன் said...

@ சர்வேசன்

இல்ல தல.

நம்ம வாசகர்கள் என்கிட்ட எதிர்பார்க்கறது இப்படி, ஒரு பதிவுல நிறைய மேட்டர்ன்னு ஏ.சி.நீல்சன் கருத்துக்கணிப்பு சொல்லுது!

ஹா..ஹா..ஹா...

பரிசல்காரன் said...

நன்றி அர்னால்டு!

(பாருங்கப்பா.. எனக்கு அர்னால்டெல்லாம் பின்னூட்டம் போடறாரு!)

Kumky said...

:--))

ஜெகதீசன் said...

கிகிகிகிகிகி...

Kumky said...

எல்லாஞ் சரி சாமி ஆனா c யும் d யும் ஒன்னாத்தான் பாக்கத்தோணுது..

ஜெகதீசன் said...

//
யாராவது புத்தகத்தை படிச்சிட்டிருக்கறப்போ பக்கங்களைத் திருப்ப, கீழ் வலது மூலையை விரல்களால் மடக்கி - அந்தப் பக்கத்துல திருப்பினத்துக்குண்டான அடையாளம் விழற அளவு அழுத்தி - திருப்பறப்போ நமக்கு வலிக்குது. படிக்கற பக்கத்தின் வலது மேல் மூலையை ஒரு விரலாலே... அழகா திருப்பலாமே-ன்னு சொல்லத்தோணும்.
//

இப்பத் தான் யோசிச்சுப் பார்த்தேன் நான் எப்படித் திருப்புறேன்னு....

பக்கத்தில இருந்த ஒரு நோட்டை எடுத்துத் திருப்பிப் பார்த்தேன்... வலது மேல் மூலையைத் தான் திருப்புறேன் நான்!!!
:P

புதுகை.அப்துல்லா said...

ஆமா!ஆமா!ஆமா!

:))

குசும்பன் said...

//பேசாம போய்டுவேன். அதே பாச்சிலரா இருந்து கமிட்மெண்ட்ஸ் இல்லைன்னா எறங்கிப் பார்த்துடலாம்டா’ன்னு தோணும்.//

லக்கிக்கு தம்பி போல இருக்கும் பொழுதே இந்த பில்டப்பா! தள பாலபாரதி மாதிரி பாடிபில்டர்(மிஸ்டர்.சென்னை) மாதிரி இருந்தா என்ன என்னால்லாம் பேசுவீங்க!!!

Kumky said...

சீரியல்களின் பின்னனியில் வரும் ம்யூசிக்கை கவனியுங்கள்..
ஹாலிவுட் பேய்ப்படத்திற்க்கு இனையாக இருக்கும்.(கொடுமைங்க)

பரிசல்காரன் said...

நன்றி கும்க்கி. நன்றி விஜய் ஆனந்த் (நீங்க பதிவையே படிக்கறதில்லை போல.. எப்ப, எங்க போனாலும் ஒரு சிரிப்புதான்!)

நன்றி ஜெகதீசன். (இது வேற மாதிரி சிரிப்பு!)

நன்றி அப்துல்லா,

@ குசும்பன்

அதெல்லாம் அப்படித்தான் குசும்பா. ரத்தத்துலயே ஊறின விஷயம். ரௌத்ரம் பழகு-ன்னு வேற சொல்லீட்டார்ல!!!!!!!!

பாபு said...

நிறைய ஆமாம்
நாம மட்டுதான் இப்படி நினைக்கறோமோ என்ற சந்தேகம் இருந்தது,இப்போ தீர்ந்திருச்சு

Raj said...

என்னவோ ஆகிருச்சு...ஆனா முத கமெண்ட் யார்கிட்டருந்து பார்த்தீங்களா..Dr.ருத்ரன்..எதுக்கும் அவர ஒருமுறை டீடெய்லா கன்சல்ட் செஞ்சிடுங்க.

Busy said...

அநேகமாக அனைத்திற்கும் எஸ் தான்!!!

Nilofer Anbarasu said...

சேம் ப்ளட்

ILA (a) இளா said...

Romba busyo?

poonguzhali said...

என்ன கொடுமை சார் இது, காலங்காத்தால இவ்வளவு கருத்துகளா? உண்மையிலேயே எல்லாரும் இவ்வளவு பிஸி ஆ.

கார்க்கிபவா said...

// Dr.Rudhran said...
mostly yes!//

இத பதிவுக்கு நினைச்சிட்டிங்களா சகா? அவரு கன்ஃபார்ம் ஆயிட்ட மாதிரி சொல்றாரு.. எது கன்ஃபார்ம் ஆயிடுச்சா? ஹிஹிஹிஹி.. ஏ.சி.னீல்சன கேளுங்க.

கார்க்கிபவா said...

//லக்கிக்கு தம்பி போல இருக்கும் பொழுதே இந்த பில்டப்பா! தள பாலபாரதி மாதிரி பாடிபில்டர்(மிஸ்டர்.சென்னை) மாதிரி இருந்தா என்ன என்னால்லாம் பேசுவீங்க!!//

தலைக்கு பெரிய "ள" போட்டதில் என்ன நுண்ணரசியலோ?

//(பாருங்கப்பா.. எனக்கு அர்னால்டெல்லாம் பின்னூட்டம் போடறாரு!)//

அதுவும் தமிழ்ல...

கார்க்கிபவா said...

// Nilofer Anbarasu said...
சேம் ப்ளட்//

இதோ பாருங்க பரிசல் அன்பரசுவும் பின்னூட்டம் போட்டாரு.. ஆனா வரு ப்ளட் எந்த பொதுக்குழுல வந்ததோ!!!!

Mahesh said...

a அப்பிடித்தான்
b அப்பிடியேதான்
c ம்ம்ம்...சில சமயம்
d அட... அப்பிடியேதான்
e போடறது பூரா மொக்கைதானே... ஹி ஹி ஹி
f அதேதான்
g எப்பவாச்சும்
h சேம் ப்ளட்
i முனிசிபாலிடி ஆபீஸ்ல... பிறப்பு சான்றிதழ் வாங்கும்போது..
j தியேட்டருக்குப் போய் 10 வருஷத்துக்கு மேல ஆச்சு... கண்டுக்கறதில்ல
k எப்பவாவது
l சில சமயம்... ஆனா என்னாலயோன்னு நினைக்கரதில்ல

உங்களுக்கு மட்டும் எப்பிடி இப்பிடியெல்லம் பதிவு போடலாம்ன்னு தோணுது?

Anonymous said...

நீங்க பதிவை இணைக்கறதப்பத்தி கவலைப்படறீங்க. நானெல்லாம் இன்னும் கருவிப்பட்டை இணைக்கமுடியாம கஷ்டப்படற கண்ணிக்கைநாட்டு

Sanjai Gandhi said...

சிலது ஒத்துப்போகுது.. :)

Ramesh said...

Sure! c & d super!

You can start looking for a PG soon.

உண்மைத்தமிழன் said...

உங்க பதிவுல முன் பக்கத்துல பின்னூட்டம் போட்டவங்க பெயருக்குப் பதிலா )))))))) என்று மட்டும் வருகிறது..

பின்னூட்டமிட்டத் திலகங்களின் பெயர்களை அறிய வேண்டுமெனில் பின்னூட்டப் பெட்டியைத் திறக்க வேண்டியுள்ளது..

உங்களுக்கு ஏன் இப்படி? இதையும் சேர்த்து எழுதிருக்கலாமே..?

12-ல் பேச்சுலர் வாழ்க்கை பற்றி எழுதியிருப்பதை மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள்.. இப்போது இருப்பதுதான் சொர்க்கம்.. இதன் அருமை உங்களுக்கு பல்லு போன காலத்திலோ, வாக்கிங் ஸ்டிக்கை வைத்திருக்கும் காலத்திலோ தெளிவாகப் புரியும்..

Vijay said...

\\கல்யாணமான எல்லாருக்குமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல இந்த எண்ணம் வருமா..? \\
அண்ணி இந்த வரிகளைப் படிச்சாங்களா. ரொம்பத் தான் தெனாவட்டு உங்களுக்கு. :-)
ஆஃபீஸிலிருந்து இன்னும் கிளம்பலயான்னு அப்ப்ப்ப அன்புத்தொல்லைகள் வரும்போது இந்த எண்ணம் வரும் :-)

\\ஒரு நல்ல ஃபிகரைப் பார்த்து பேசறப்போ கண்ணைப் பார்த்து பேசறது பெண்களுக்குப் பிடிக்கும்’ன்னு (யாரு சொன்னா இதை?) கேள்விப்பட்டதால கண்ணைப் பார்த்து பேசிட்டிருப்பேன். ஆனா அப்படி கண்ணைப் பார்த்துப் பேசறது ரொம்ப செயற்கையா உணர்வேன். உங்களுக்கும் அப்படியா?\\

தலைவா, ஒரே கல்லுல இரண்டு மாங்கா அடிச்ச மாதிரி இது. ஃபிகரைப் பார்த்த மாதிரியும் ஆச்சு, நல்ல பேரும் எடுத்துடலாம். :-)

\\சீரியல் பாக்கறது .. அவனுக கொடுக்கற ப்பப்பரப்பாஆஆஆஆஆஆங்.. ட்டொய்ங்....
உங்களுக்கும் இப்படித்தானா?\\
இந்த சத்தத்தக் கேட்டாலே எனக்குத் தலைவலி வந்துடும். அது ஏன் இப்படி டிரம்பெட்டை இவ்வளவு உபயோகிக்கறாங்க சீரியல் இசையமைப்பாளர்கள். கேட்டுச் சொல்ல முடியுமா?

\\வாழ்க்கையில் பல விஷயங்களில் சமரசப்பட்டு போய்விடுகிறேன். \\
கல்யாணம் என்பதற்கு சமரசம் என்று ஏதோ அகராதியில் பார்த்ததாக ஞாபகம் :-)

நல்ல படம் என்றால் தியேட்டரில் பார்த்து விட்டு டி.வி.டி வாங்கிப் பார்ப்பேன். அட்டு படமென்றால் டி.வி.டி.யில் கூட பார்ப்பது கிடையாது.

\\ஏதாவது ஆளில்லாத கடைக்குப் போகும்போது, நான் போன பின்னால் நாலைந்து வாடிக்கையாளர்கள் வருவதைக் கண்டிருக்கிறேன். \\
உங்களை நிறைய ஃபாலோ செய்கிறார்கள். ஜாக்கிரதை :0-)

பாசகி said...

//என்ன அநியாயம் இது என்று மேலாளர் வரை சென்று வம்பிழுத்து எந்த நியாயமும் கிடைக்காமல் அவமானப்பட்டு வந்து உட்கார்ந்தபோது பசுபதியின் மாட்டை கமல் அடக்கிமுடித்திருந்தார்.

அதே தியேட்டரில் கூல்ட்ரிங்க்ஸ் குடித்தபோது, வெறும் சப்பையாக இருக்கவே சில விசாரணை மேற்கொண்ட போது, அவர்களே டூப்ளிகேட்டாக தயாரிப்பதாய் சொன்னார்கள்.//

சங்கீதா-வா இல்லை ஜோதி-ங்களா???

narsim said...

இந்த ரேஞ்சுல ஒரு பதிவ இப்பத்தான் டிராப்ட் பண்ணேன்.. நல்ல வேளை இதப்படிச்சேன்...( சேம் வேவ் லென்ந்த் ஆ சேம் பிளட் ஆ??)

அந்த படம் பார்த்தவுடன் ஏற்கனவே படித்த விமர்சனத்தை திருப்பி படிக்கும் மேட்டர் மிகச் சரி..

Anonymous said...

சிலது ஒத்துப் போகுது. சிலது வயசு காரனம்னு தோனுது.

பரிசல்காரன் said...

நன்றி பாபு!

நன்றி ராஜ், பிஸி, நிலோஃபர் அன்பரசு

நன்றி இளா. (எதுக்கு இந்தக் கேள்வி.. புரியலையே)

நன்றி பூங்குழலி

நன்றி கார்க்கி

நன்றி மகேஷ். விரிவான பதில்களுக்கு நன்றியோ நன்றி. ஆக்சுவலா இந்தப் பதிவு எழுதினதும் e-ல சொன்னமாதிரிதான் சாரே!

@ நன்றி சின்ன அம்மணி, சஞ்சய், உண்மைத்தமிழன், ரமேஷ், விஜய் (சூப்பர்ங்க விஜய்!)

@ பாசகி

//சங்கீதா-வா இல்லை ஜோதி-ங்களா???//

நல்லவேளை மேல எதுக்கான கேள்வின்னு எடுத்துப் போட்டீங்க. இல்லீன்னா இது d-க்கான கேள்வின்னு நெனைச்சிருப்பாங்க.

மகாஜனங்களே..இது ரெண்டும் திருப்பூர்ல இருக்கற தியேட்டர் பேரு.

பாசகி... இது நடந்தது பல்லடம் அலங்கார். ஆனா மேக்ஸிமம் எல்லா தியேட்டர்லயும் டூப்ளிகேட் ட்ரிங்க்ஸ்தானாம்!

பரிசல்காரன் said...

நன்றி நர்சிம்.

பரவால்ல..போடுங்களேன். காசா..பணமா.. நம்ம பதிவை அடுத்தவன் காப்பி அடிச்சு போடறான், புக்ல அடுத்தவன் பேர்ல போடறான்... ஒரே டைப்ல ரெண்டு பதிவு எழுதினா என்ன தப்ப்புங்கறேன்..

@ வேலன்

அப்பாடா... ரொம்ப நாள் கழிச்சு பெரியவர் நம்ம வூட்டுப் பக்கம் வந்திருக்காரு.

நீங்க சொல்றது உண்மைதான் அண்ணாச்சி!

பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

Sundar சுந்தர் said...

//அப்படி கண்ணைப் பார்த்துப் பேசறது ரொம்ப செயற்கையா உணர்வேன். //
எந்த விஷயத்தையும் ரொம்ப concisous ஆ பண்ணினா இயல்பா இருக்க முடியாது.
அடுத்த முறை ஒரு ஆண் கிட்ட அல்லது ரொம்ப பழகியவர்களுடன் (அ) மொக்கை பிகருடன் பேசறதா நினச்சிக்கிட்டு பேசி பாருங்க.

பரிசல்காரன் said...

99988.


ஐ! ஃபேன்ஸி நம்பர்!!!

வால்பையன் said...

தியேட்டர் அனுபவம் தவிர மற்ற அனைத்தும் பொதுவான மனநிலை கூறுகளாக நான் பார்க்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

ஆமாங்கங்கோ.

இப்படியெல்லாம் எப்டீங்க யோசிக்கிறீங்க - அப்டீன்னு எத்தனை பேருக்கு தோனுதுப்பா

rapp said...

ஹா ஹா ஹா, இதுல இருந்து என்ன தெரியுதுன்னா, உமா அண்ணி எல்லா பெண்களை மாதிரியும் சும்மாவே கணவன ஏத்தி விட்டு ஜாலியா சைலண்டா சிரிச்சிக்கிறவங்கப் போல:):):)

rapp said...

நீங்க சொல்லிருக்க எல்லாமே, கூடவே ஒரு அம்பது பாயிண்டையும் சேத்துக்கங்க, இப்டி பலதை எல்லாரும் நெனச்சுக்கறதுதான்:):):)

rapp said...

//முதல் வருகைக்கு நன்றி டாக்டர் சார்//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏற்கனவே ஒரு தரம் வந்திருக்காரு கிருஷ்ணா சார்:):):) நான் ஞாபகம் வெச்சிருக்கேன், நீங்க மறந்துட்டீங்களே:):):)

rapp said...

மொதோ விஷயத்தை எப்டி இந்த லிஸ்ட்ல நீங்க சேர்த்தீங்க? ஆனா சர்வேசன் சார் சொல்லிருக்க மாதிரி அவங்க இப்போ ஜாலியா இருக்கேன் பேர்விழின்னு மொக்கப் போடறதுதான் காமடியா இருக்கு:):):)

rapp said...

//சில சமயங்கள்ல ‘கல்யாணமாகாம இருந்திருந்தா தேவலை’ன்னு தோணும். உதாரணத்துக்கு போன பாரா-ல சொன்ன மாதிரி சூழ்நிலைகள்ல நின்னு சண்டையை சமரசம் பண்ணி அது வேற எக்ஸ்டண்டுக்குப் போகுமோங்கற திங்கிங்-ல பேசாம போய்டுவேன். அதே பாச்சிலரா இருந்து கமிட்மெண்ட்ஸ் இல்லைன்னா எறங்கிப் பார்த்துடலாம்டா’ன்னு தோணும்.

கல்யாணமான எல்லாருக்குமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல இந்த எண்ணம் வருமா..? (சண்டையைத் தீர்க்கற மனோபாவத்தைச் சொல்லல. கல்யாணமாகாம இருந்திருக்கலாமே-ங்கற எண்ணம்.)
//

எல்லாம் ஓகே, நீங்க பேச்சிலரா இருக்கும்போது என்ன தட்டி கேட்டு சாதிச்சீங்க, அதச் சொல்லுங்க, அப்போதானே இப்போ நெனக்கறது பத்தி என் கருத்துப் போலீஸ் வேலைய செய்ய முடியும்:):):)

rapp said...

//நீங்களும் இப்ப்டி எதிலாவது உங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டதுண்டா?//

இல்லாதவங்களும் இருக்காங்களான்னு கேட்டிருக்கனும்ல:):):)

rapp said...

me the 50TH

rapp said...

மனசாட்சியே இல்லாம எந்தப் பதிவுலையும் என்னை மீ த பர்ஸ்ட் போட விடாம தடுக்கறாங்க, கடசீல இப்டி ஒவ்வொரு பதிவா போய், நாப்பது பின்ன்னூட்டம் ஆச்சா, இருபது ஆச்சா, 95 ஆச்சான்னு பாத்து பாத்து வரலாத்துல எம் பேரை பதிய எம்மாம் பாடு பட வேண்டியிருக்கு:):):)

pudugaithendral said...

வலைச்சர ஆசிரியரா நிறைய பதிவுகள் தேடித்தேடி மண்டை காஞ்சு போயிடுச்சோ.

என்ன மாதிரி பதிவு இது?!!!

இப்படி எல்லாம் பதிவு எழுதலாம்னு உக்காந்து யோசிப்பாங்களோ!!

தப்பா சொல்லல்லீங்க. பலதை யோசிப்போம். ஆன அம்புட்டையும் ஒரே பதிவில் போட்டு ஒள்வையார் மாதிரி கேள்வி கேட்டிருக்கீங்களே அதைச் சொன்னேன்.

ரமேஷ் வைத்யா said...

புத்தகங்களை நக்கி நக்கிப் புரட்டுபவர்களைப் பார்க்கும்போதெல்லாம் பரிகாசம் செய்திருக்கிறேன்.

மொக்கைப் படங்களை வேறு காரணங்களுக்காகப் பார்க்கும்போதெல்லாம் கட்டாயம் திருட்டு டிவிடிதான். ஒருத்தனே அநாவசியமாக பல கோடிகளைக் குவிப்பதைத் தவிர்த்து, பல குடும்பங்கள் வாழ்கிறதே என்பதுதான்.

ambi said...

//சில சமயங்கள்ல ‘கல்யாணமாகாம இருந்திருந்தா தேவலை’ன்னு தோணும். //

அவ்வ்வ்வ்வ், வேணாம் அளுதுடுவேன். :))

இங்கயும் ராப்புக்கு பஷ்ட்டு இடம் போச்சா? :))

பாசகி said...

//மகாஜனங்களே..இது ரெண்டும் திருப்பூர்ல இருக்கற தியேட்டர் பேரு.//

தன்னிலை விளக்கமெல்லாம் பலமா இருக்கே, பதிவர் வட்டத்தில அன்பருக்கு ரொம்ப நல்ல பேருனு நினைக்கிறேன் :-)

பரிசல்காரன் said...

@ Rapp

முதல் வருகைன்னா, மீ த ஃபர்ஸ்ட் வருகை-ங்கற அர்த்தத்துல சொன்னேன்...

டாக்டர் சார் நம்ம ஃபாலோவரில்ல...

Unknown said...

:))

vellayan said...

மொக்கைப் படங்களை வேறு காரணங்களுக்காகப் பார்க்கும்போதெல்லாம் கட்டாயம் திருட்டு டிவிடிதான். ஒருத்தனே அநாவசியமாக பல கோடிகளைக் குவிப்பதைத் தவிர்த்து, பல குடும்பங்கள் வாழ்கிறதே என்பதுதான்.
ஆனாலும் ட்ரெயினில் பல முறை திருட்டு டி வி டி வாங்கி ஏமாந்து நொந்து நூலாகி நம்ம குடும்பம் பிழைக்கிற வழியை பார்ப்போமென காசை மிச்சப்படுத்தி விடுகிறேனாக்கும்.என் மகன்கள் வாங்கி வரும் தி-டிவ்டி-ல் படம் பார்ப்பதை கண்டுக்கவேண்டாம்.

Rangs said...

b) அப்புறமா f) ரெண்டும் டிட்டோ அண்ணா..

அதுவும் இந்த கூட்டம் சேருது பாருங்க...இன்னும் சொல்லப் போனா பஸ்ல போகும்போது விபத்து ஏதாவது ஆயிருந்தா எட்டிப் பாப்பாங்க பாருங்க நம்ம ஆளுங்க...எனத்த கிழிக்கப்போறாங்க இவங்கன்னு செம கடுப்பு ஆயிரும்..

என்ன செய்றது.,.நம்ம ஆளுங்க ஆர்வம் அப்டி!

அன்புடன்...

ரங்ஸ்

அன்புடன் அருணா said...

நிறைய சேம் ப்ளட்....
அன்புடன் அருணா

Tech Shankar said...

//j) சினிமா பார்க்கும்போது முதல் எழுத்து போடுவதிலிருந்து பார்த்தால்தான் நிம்மதி. இல்லையென்றால் திருப்தியாக மாட்டேனென்கிறது மனது. அதேபோல கடைசியில் டைட்டில் போடும்போது தியேட்டர் ஆபரேட்டர் க்ளோஸ் பண்ணிவிட்டால், அவனை, அந்தத் தியேட்டர் ஓனரை, மேனேஜரை கெட்ட கெட்ட வார்த்தையால் (மனசுக்குள்ளதான்..) திட்டிவிட்டுத்தான் வெளியேறுகிறேன். அதேபோல படம் முடியும் முன்னே எழுந்திருக்கும் முந்திரிக்கொட்டைகளைக் கண்டாலும் கோபம் கோபமாய் வருகிறது.

பாட்டு, பைட்டு, விளம்பரம் - எல்லாத்தையும் நீக்கிட்டு ஃபார்வர்ட் பார்வர்ட் பண்ணியே படம் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

உங்கள் பார்வை வித்யாசமானது

மங்களூர் சிவா said...

//
ambi said...

//சில சமயங்கள்ல ‘கல்யாணமாகாம இருந்திருந்தா தேவலை’ன்னு தோணும். //

அவ்வ்வ்வ்வ், வேணாம் அளுதுடுவேன். :))

//

இதுக்கு ரிப்பீட்டு போடலாம்தான் , அப்பிடி போட்டா நாளைக்கு சோறு கிடைக்குமான்னு தெரியலை அதனால மீ தி அப்பீட்டு.

மங்களூர் சிவா said...

எதுக்கு கஷ்டப்பட்டுகிட்டு செயற்கையாய் நீங்க நீங்களாகவே இருங்களேன்!!

:))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

எல்லாம்..கிட்டத்தட்ட அப்படித்தான்...
ஆனால் f மட்டும்...என்னுடய புத்தகம் என்றால்..யாராயிருந்தாலும்...பக்கம் திருப்பும் போது..குழந்தையைப்போல..புத்தகத்தை தீண்டவேண்டும்..என எதிர்ப்பார்ப்பேன்..
சிலர் திருப்பும் போது..பக்கத்தின் முனை கிழிக்கப்படும்..அல்லது..எச்சில் தொட்டு திருப்பப்படும்..அல்லது..பாதி படித்து..எழும்போது அடையாளமாக முனையை மடித்து வைப்பர்..அப்படிப்பட்டவர்கள் யாராயிருந்தாலும்...முகத்தில் அடித்தாற்போல் சொல்லி விடுவேன்.

தருமி said...

a) ஆமாங்க ஆமா .. அதுவும் நட்சத்திர வார்ததில உயிரை வாங்கிரிச்சி
b) அந்த மாதிரி சமயத்தில அந்த சண்டைக்கு நடுவில நானே இருக்கிறதும் நடந்திடுது.
c) ஆமாங்க ஆமா ..
d) சரியா தப்பான்னு தெரியாது. ஆணோ பெண்ணோ நான் வாயசைப்பத்தான் பார்க்கிறேன்.
e) //அந்தப் பதிவு ஹிட் வேற ஆகிடும்//
பதிவு ஹிட் ஆகுறதுன்னா என்னங்க?
f) & g) இல்லைங்க
h)சேம் ப்ளட்
i) தப்புன்னு தெரிஞ்சும் டிவிட் வாங்குறேன்.
j) k) l)இல்லைங்க

CA Venkatesh Krishnan said...

100/100

பரிசல்காரன் said...

விரிவாகப் படித்து பின்னூட்டியதற்கு நன்றிகள் தருமி ஐயா..

Natty said...

D தவிற மத்த எல்லாத்துக்கும் சேம் ப்ளட்...

C கேள்விக்கு டபுள் ப்ளட்.. பட் சேம் ப்ளட் .....

:)

Natty said...

g) நானும் அப்படித்தான், ஆனா பெண்கள் சீரியல் இல்லை... என்னோட பையன் சுட்டி டீவி பார்த்தா கொஞ்ச நாள் கண்டிச்சேன்.. (நல்ல வசனங்களாக இல்லை.. சில நிகழ்ச்சிகள் ஜீபூம்பா போன்றவை, தவறான பழக்கங்களை சொல்வதாக இருந்தது) அப்புறமா, நானும் சுட்டிக்கு அடிக்ட் ஆகி, ஜாக்கி ஃபேன் ஆயிட்டேன் ;))

Natty said...

ஹைய்யா மீ த 70 ;))

விலெகா said...

ரொம்ப நல்லா இருந்துச்சுங்க.,

SurveySan said...

use tamilize java script in ur template to display the commentators name properly.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லாத்தையும் ஒரே பதிவில் போட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு நாளில் படிச்சிட்டேன்..
உங்களால நாலு கடைக்காரங்க நல்லா இருக்காங்கன்னு சொல்லுங்க..கூட்டம் வருதுல்ல..:)
மத்தபடி அடிக்கடி நம்மளைப்பத்தியே யோசிக்கலாம்ன்னு உக்காந்துயோசிப்பீங்க போல..

ரிஷி (கடைசி பக்கம்) said...

hey parisal,

Where u find the theatre problem?

Very fishy....

Bee'morgan said...

a ) yes yes. என் பதிவுகள் தமிழ்மணத்தில வந்து 10 மாசத்துக்கு மேல ஆச்சு.. என்ன பிரச்சனைன்னும் இன்னைய வரைக்கும் தெரியல. எல்லாம் முன்ஜென்ம கர்ம பலன்கள் யாரோ ஒரு பதிவர் சொன்னத நம்பி பரிகாரங்களைத் தேடிகிட்டிருக்கேன் இப்போ..! ;)

f,g,h,i,j ) அட ஆமாங்க ஆமாம்..

Thamira said...

நல்ல தொகுப்பு பரிசல்.!

நானும் சில சமயங்களில் பைத்தியம் புடிச்சு திரிஞ்சுருக்கேன்.

தமிழ்மணம் பதிவேற்றம் : ஆமாஞ்சாமி ஆமா.!

கல்யாணம் ஆகாமலிருந்தா தேவலையோ : இதை நினைக்காத நாளில்லை..

புத்தகத்துல ஏதாவது கிறுக்குறவங்கள பாத்தா கொலவெறியே வந்திரும் எனக்கு..

சினிமா விமர்சனம், தியேட்டர் அனுபவம் எல்லாத்துக்கும் ஆமா...

//பதிவு ஹிட் வேற ஆகிடும்.// இது மட்டும் எனக்கு நடக்குறதே இல்லை.!

☀நான் ஆதவன்☀ said...

எனக்கு கண்ணாடி முன்னாடி நின்னு கேள்வி கேக்குறாப்ல இருக்கு....

தேவன் மாயம் said...

ப்ளாக் ஆரப்பிச்சு என்னத்தடா எழுதுறதுன்னு
போட்டு குழப்பிக்கிட்டு உக்காந்திருக்கும்
எனக்கு நல்ல பதிவு.!!!!
என் கேள்விக்கு பதில் சொல்லுங்க!
1.தமிழ்மணத்தில் சேர்ரது எப்படி- உங்கள்
url எட்ட முடியாததாக உள்ளதுன்னு
வருது.
2.ப்ளாக்கருக்கான பதிவுப்பட்டயை
சரியா ஒட்ட முடியவில்லை.
உதவி செய்யவும்!!!
தேவா.