Monday, November 24, 2008

அவியல் 24.11.08

நம்ம இதயம் வலது பக்கம் இருக்கா, இடது பக்கம் இருக்கா-ன்னு ஒரு பையனுக்கு சந்தேகம். அப்பாகிட்ட கேட்டானாம். ‘இடது பக்கம்தான் இருக்கு’ன்னாரு. இவனுக்கு நம்பிக்கை வரல. சரின்னு அவங்கப்பா, அவரோட நண்பரான ஒரு மருத்துவர்கிட்ட கூட்டீட்டு போறார். அவரும் சொல்றார் இடது பக்கம்தான்னு. ‘நீங்க எங்கப்பாவோட ஃப்ரெண்டு. என்னவேணா சொல்லுவீங்க’ங்கறான் இவன்.

உடனே அவரு அந்த மருத்துவமனைல இருந்த ஒரு மெடிக்கல் ப்ரொஃபசர்கிட்ட கூட்டீட்டு போறார். அவரு படமெல்லாம் போட்டு விளக்கிக் காட்டியும் இவன் நம்பல. ‘சரி.. வாடா’ன்னு அவனை மார்ச்சுவரிக்கு கூட்டீட்டு போய், அங்க இருந்த ஒரு பிணத்தை அறுத்துக் காட்டி ;

“பார்த்தியா.. இதயம் இடது பக்கம் இருக்கு’ன்னாங்க.

பையன் சொன்னானாம். “அதுனாலதான் செத்துப் போயிருக்கான்..”

(குறும்பட இயக்குனர் சாரதாகுமார் சொல்லக்கேட்டது)

*****************************

ப்ளாக்ல நம்மளை ஃபாலோ பண்றவங்களைப் பத்தி பேச்சுவந்தது. சப்போஸ் யாராவது நம்மளை ஃபலோ பண்ணினதை நிறுத்தினாங்கன்னா யாருன்னு கண்டுபிடிக்கமுடியுமான்னு யாரோ கேட்டாங்க. முடியாதுன்னு சொன்னாங்க. ‘எனக்கு முடியும்’ன்னு சொன்னான் நண்பன் கார்க்கி. ‘எப்படி’ன்னு கேட்டதுக்கு அவன் ப்ளாக்கை ஃபாலோ பண்றவங்களை ப்ரிண்ட் எடுத்து லேமினேஷனெல்லாம் பண்ணி வெச்சிருக்கானாம். நம்மளையும் ஃபாலோ பண்றாங்களேன்னு.. ரொம்ப நல்ல மனசுடா ஒனக்கு!

----------

தமிழை வளர்க்க (க்கும்!) நானும் ஒரு ஐடியா பண்ணலாம் என்று யோசனை செய்து (?!?) நண்பர்களை அழைத்து, “ஹலோ, ஃப்ரெண்ட்ஸ்... உங்களுக்கு ஒரு சேலஞ்ச். ஓக்கேவா?” என்று சவால் விட்டு.. ஒன்றைக் கூறினேன்.

“இன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு அலைபேசியில் பேசும்போது ‘ஹலோ’வுக்கு பதிலாக வணக்கம் என்றும், ‘ஓகே’வுக்கு பதிலாக ‘சரி’ என்றும் மட்டுமே கூற வேண்டும். நம் நண்பர்கள் வட்டத்தில் யார் மற்றொருவர் இதற்கு மாற்றாகக் கூறினாலும், இன்னொருவர் சுட்டிக் காட்டித் திருத்த வேண்டும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யார் அதிகமாக ஹலோவையும், ஓகேவையும் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அந்த வார தேநீர் செலவை ஏற்க வேண்டும் என்றும் முடிவானது.

முதல் இரண்டு வாரம் தேநீர் செலவு என்னுடையதுதான் என்று சொல்லவும் வேண்டுமா...

கிண்டலை விடுங்கள்.. ஆழமாக யோசித்தால் இந்த இரண்டு வார்த்தைகள்தான் தொலைபேசும்போது அதிகமாகப் புழங்கும் வார்த்தையாகப் படுகிறது.

ஹலோ, என்ன நான் சொல்றது ஓகேதானே?

___________________________



ஒரு சொகுசுக் காரைப் பற்றிய விமர்சனம் நடந்து கொண்டிருந்தது.

“அந்தக் கார்ல 140 வேகத்துல போனேண்டா. உள்ள இருக்கற யாருக்குமே ஒண்ணுமே தெரியல. அவ்ளோ ஸ்மூத்”

இன்னொருவன்: “நம்ம கார்ல 140ல போனா எல்லாருக்குமே தெரியும்”

“எப்படி?”

“அடுத்த நாள் பேப்பர்ல வருமே”


______________________

‘என்னைக்குப் ‘போக’ப் போறோம்ன்னு தெரியாது அதுனால நல்லவனா இருப்போம்’ என்பது பலரின் எண்ணம். அது சரிதான் என்பது தினசரிகளில் வரும் விபத்துச் செய்திகளைப் பார்த்தாலே தெரியும்.

ஒருத்தன் எத்தனை நல்லவனா இருந்து, அன்னைக்கு வெறுத்துப் போய் குடிக்க ஆரம்பிச்சவனா இருந்தாலும், வர்ற வழில எதுலயாவது அடிபட்டு செத்துட்டா ‘குடிகாரர் விபத்தில் பலி’ன்னு வரும். என்னமோ அவன் பரம்பரைக் குடிகாரன் மாதிரி!

ஒருத்தன் ஊரையே திருடி உலையில போட்டவனா இருப்பான். உலகத்துல இருக்கற எல்லா கெட்ட பழக்கமும் அவனுக்கு இருக்கும். ஆனா, அவன் மலைக்கு மாலை போட்டிருக்கும்போது இறந்தா ‘ஐயப்ப பக்தர் பலி’ன்னு வரும்.

காலேஜ் போறப்ப இறந்தா ‘கல்லூரி மாணவன் சாவு’ அதே பையன் கட் அடிச்சுட்டு காதலி கூட இருக்கும் போது இறந்தா ‘காதலன் மரணம். காதலி கதறல்’

அதுனால மகாஜனங்களே.. நல்லவனாவே இருங்க!


___________________________

பேருந்துகள்ல இருக்கைகள் அடையாளத்துக்காக ஆண்கள்-பெண்கள்ன்னு போடுவாங்க இல்லையா... சில பஸ்ல (‘சிலபஸ்ல’ இல்ல) வித்தியாசமா பார்த்திருக்கேன்.

‘மலர்கள்-மன்னர்கள்’
‘ராஜாக்கள்-ரோஜாக்கள்’... இப்படி.

என் நண்பன் ஒருத்தன்கிட்ட இது பத்தி பேசிட்டிருந்தப்ப, முந்தைய ஜெ. ஆட்சியின் போது அவங்க ஊர் பஸ்ல பெண்கள் பகுதியில ‘இந்நாள்’ன்னும், ஆண்கள் பகுதியில ‘முன்னாள்’ன்னும் எழுதலாம்ன்னு ஐடியா பண்ணப் பட்டதாகவும், அப்புறம் அந்த ஐடியா கைவிடப்பட்டதாகவும் சொன்னான்!

வித்தியாசமாத்தான் இருக்கு. ஆனா முன்னாளா இருந்த இந்நாளோட அந்நாள் ஆதரவாளர்கள்கிட்ட எந்நாள் அடிவாங்குவோமோன்னு விட்டிருப்பாங்க!

----------------------------------

கவித..கவித....

விடிகிற போது
எழுத உட்கார்ந்தேன்
வெயில் வந்துவிட்டது
இந்த வரியின் மேல்.

இந்த வரியை விட
அழகாக இருக்கிறது
எழுதாத வரியின் நிழல்.
-கல்யாண்ஜி


பி.கு: இந்த வார வலைச்சரம் ஆசிரியரா இருக்கறதால அங்கேயும் வந்து வாழ்த்தீட்டு போங்க...

61 comments:

நாதஸ் said...

//ராஜாக்கள்-ரோஜாக்கள் //

"போக்கிரி" ராஜாக்கள், "ச"ரோஜாக்கள் அப்படின்னு சேத்து எழுதிடாங்கன்னா ;)

Cable சங்கர் said...

//ஹலோ, என்ன நான் சொல்றது ஓகேதானே?//

சரி.. என்ன நான் சொல்றது சரிதானே..?

Kumky said...

:--))

பாபு said...

நீங்கள் சொல்லியிருக்கும் அந்த ஹலோ வுக்கு பதிலாக வணக்கம் என்று சொல்லும் பழக்கம் எங்கள் நிறுவனத்தில் சிலரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக வணக்கம் உபயோகிப்பவர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது

Thamiz Priyan said...

ஓக்கே! ஓக்கே!

VIKNESHWARAN ADAKKALAM said...

பரிசலு நன்னா அடிச்சு ஆடுறேல்... சூப்பரு (சூப் இல்லை)...

Anonymous said...

ஹலோ பரிசல், நீங்க சொல்லிருக்கறது எல்லாருக்கும் ஓகே

Bee'morgan said...

வழக்கம் போல், அவியல் அருமை.. :)

Mahesh said...

வணக்கம்.. நீங்க சொல்லியிருக்கறது ரொம்ப சரி.... ஓகேவா? :)))

அவியல் வழக்கம் போல குணம், மணம் நிறைந்து இருக்கு.

கார்க்கிபவா said...

அவியல்ன்னு வந்தாதான் மனுஷன் பிரிச்சு மேய‌றாரு.. ஆல்ரெடி 17/17 வாங்கி மகுடம் கிட்ட போயாச்சு.. நானா? போட்டாச்சு போட்டாச்சு..

வெண்பூ said...

கலக்கல் பரிசல்.. நாளுக்கு நாள் உங்க எழுத்து இம்ப்ரூவ் ஆகிட்டே வருது.. ஒரு வலைப்பூ என்கிறது போய் ஒரு இணையப் பத்திரிக்கை மாதிரி ஆகிடுச்சி பரிசல். பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எங்க ஊர் பஸ்ல பெண்கள் பகுதில பெண்கள்னும் ஆண்கள் பகுதில திருடர்கள் ஜாக்கிரதைன்னு போட்டிருக்காங்க :(

இந்தக் கொடுமையைக் கேக்கறதுக்கு ஆளில்லையா :)

Ramesh said...

அவியல் கலக்கல்!

பாராட்டுக்கள்!

வாழ்த்துக்கள்!

வணக்கம்! என்னங்க நான் சொல்றது சரிதானே?

நட்புடன் ஜமால் said...

நீங்க சொல்லிட்டா ஓக்கேதான் ...

narsim said...

அவியலின் சுவையும் மணமும் மனம் நிறைத்தது..

(வணக்கம்னு சொன்ன உடனே போன கட்பண்றாங்கய்யா..)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஃபாலோவர் விசயம் நான் கூட கேக்கனும்ன்னு இருந்தேன்.. ஏன்னா என்னோட பதிவில் 20 பேர் ன்னு முந்தாநாள் வரை காட்டியது இப்ப 19 யாரு அந்த ஒருத்தர் தப்பிச்சவர்ன்னு தெரியல.. லேமினேட் செய்யறது ஒன்னு தான் வழியா.. :)

Busy said...

//“பார்த்தியா.. இதயம் இடது பக்கம் இருக்கு’ன்னாங்க.

பையன் சொன்னானாம். “அதுனாலதான் செத்துப் போயிருக்கான்..”//

Nalla avial suvaiaka irunthathu..................

பரிசல்காரன் said...

நன்றி நாதாஸ்... கேபிள்சங்கர், கும்க்கி, ஜெகதீசன், பாபு (வணக்கம் பாபு), தமிழ்பிரியன், விக்னேஸ்வரன், சின்ன அம்மணி, பீ மோர்கன், மகேஷ், கார்க்கி,

வெண்பூ, (எத்தனை நாள் எழுதினாலும் இப்பதாண்டா கொஞ்சமாவது தேறிருக்க-ங்கறீங்களா?),

சுந்தர்ஜி, (என்ன கொடுமை சார் இது? ஒருவேளை பெண்களின் இதயத்தை திருடறவங்கன்னு அர்த்தமோ...?),

ரமேஷ், அதிரை ஜமால், நர்சிம்,

கயல்விழி முத்துலெட்சுமி, (நம்மளுதும் அப்படித்தான் கம்மியாகுது, கூடுது.. ஒண்ணுமே புரியல... பேசாம ஃபாலோயர் பேரை கட் பேஸ்ட் பண்ணி சேவ் பண்ணி வெச்சுக்கலாம். ஆனா நாம ரொம்ப மதிக்கறவங்க வித்ட்ரா பண்ணிருந்தா நாம அவங்களைத் த்ருப்திப் படுத்தலியேன்னு கஷ்டமா இருக்குமே.. அதுனால லூஸ்ல விடறதுதான் பெஸ்ட்!)

& பிஸி.

தமிழன்-கறுப்பி... said...

அவியல் சுவாரஸ்யம்...!

தமிழன்-கறுப்பி... said...

கவிதைக்கு நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

சிரிக்கிற தேவதைகளை சுகம் கேட்டதாக சொல்லுங்க...

கார்க்கிபவா said...
This comment has been removed by the author.
கார்க்கிபவா said...

சகா, 100வது Followerஆ நானிருக்கனும் போன வாரம் stop following பண்ணிட்டேன். இப்போ நான் தான் 100 வது. என்ன ட்ரீட்?

Cable சங்கர் said...

உங்கள் வருகை அவசியம்
http://cablesankar.blogspot.com/2008/11/blog-post_24.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

அகோரப் பசி

அவியல் கண்டேன்

செவிக்குணவு என்பதற்கு பதில்

வள்ளுவன்

கண்ணுக்குணவு என்றிருக்கலாம்

ஆட்காட்டி said...

எனது நண்பர்கள் என்னுடன் மேசும் போதோ, நான் பேசும் போதோ ஆங்கிலம் பெருமளவில் இருப்பதில்லை. வணக்கம், சரி, அப்படியா இன்னும் பல...

பரிசல்காரன் said...

நன்றி தமிழன்..

என்ன ரொம்ப நாள் ஆளைக் காணோம்?

@ கார்க்கி

இது போங்கு ஆட்டம்.. சரி.. ஓக்கே சகா.. வேறென்ன ட்ரீட் இருக்கமுடியும்? நமம் ஃபேவரைட் ராஜமீன்தான்!

@ கேபிள் சங்கர்

இதை இப்பத்தான் பாக்கறேன் தல. முன்னாடியே உங்க வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டு மொய்யும் வெச்சுட்டேனே?

@ டி.வி.ராதாகிருஷ்ணன்

நன்றி ஐயா.

பரிசல்காரன் said...

@ ஆட்காட்டி

மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம்!

கார்க்கிபவா said...

/@ கார்க்கி

இது போங்கு ஆட்டம்.. சரி.. ஓக்கே சகா.. வேறென்ன ட்ரீட் இருக்கமுடியும்? நமம் ஃபேவரைட் ராஜமீன்தான்!//

ஆட்டம் போங்கு என்றாலும் ஆர்வத்த பாருங்க சகா.. ராஜமீனோடு தோட்டா, ஐயாயிரம், ஆறாயிரம், கருப்பு பெயரொட்டி, போன்றவையும் உண்டா?

rapp said...

//பையன் சொன்னானாம். “அதுனாலதான் செத்துப் போயிருக்கான்..”//

அது பையனா இருக்காது, பொண்ணா இருக்கும், பேரு கூட 'அ'ல ஆரம்பிக்கும்:):):)

rapp said...

//கிண்டலை விடுங்கள்.. ஆழமாக யோசித்தால் இந்த இரண்டு வார்த்தைகள்தான் தொலைபேசும்போது அதிகமாகப் புழங்கும் வார்த்தையாகப் படுகிறது.

ஹலோ, என்ன நான் சொல்றது ஓகேதானே?
//

அநியாயத்துக்கு ஜாஸ்தி, இதுக்குக்கூடவா நான் ரெஸ்ட்ல வெச்சிருக்கறதா சொல்லிக்கிற ஒரு வஸ்துவை உபயோகிக்கனும்:):):)

//ஒரு சொகுசுக் காரைப் பற்றிய விமர்சனம் நடந்து கொண்டிருந்தது.

“அந்தக் கார்ல 140 வேகத்துல போனேண்டா. உள்ள இருக்கற யாருக்குமே ஒண்ணுமே தெரியல. அவ்ளோ ஸ்மூத்”

இன்னொருவன்: “நம்ம கார்ல 140ல போனா எல்லாருக்குமே தெரியும்”

“எப்படி?”

“அடுத்த நாள் பேப்பர்ல வருமே”
//

:):):)

நானெல்லாம் கவிதைகள பத்தி பேசக்கூடாதுன்னு வாய்ப்பூட்டுச்சட்டம் போட்டிருக்கறதால கம்னு போயிடறேன்:):):)

rapp said...

நான் யாரையுமே பாலோ பண்றதில்ல, ஏன்னா கிட்டத்தட்ட தமிழ்மணம்ல வர்ற எல்லாரையும் படிக்கிறேன், ஆனா பின்னூட்டம் மட்டும் யாரெல்லாம் என்னை திட்ட மாட்டாங்களோ அங்க மட்டும்தா போடறது:):):)(இங்கயாவது கொஞ்சம் புதுமையான உணர்வு கிடைக்கட்டுமேன்னு:):):))

விலெகா said...

அடிக்கடி வந்துட்டுபோறேன்,
அப்பப்ப வந்துட்டு போங்க!
:---)))))))))))))
super aviyal

Kumky said...

நன்றிகளுக்கு......









நன்றி.

மங்களூர் சிவா said...

/

“பார்த்தியா.. இதயம் இடது பக்கம் இருக்கு’ன்னாங்க.

பையன் சொன்னானாம். “அதுனாலதான் செத்துப் போயிருக்கான்..”
/

நாய் வாலை(இது வேற வால்) நிமித்த முடியாதோ!?!?

மங்களூர் சிவா said...

/
ப்ளாக்கை ஃபாலோ பண்றவங்களை ப்ரிண்ட் எடுத்து லேமினேஷனெல்லாம் பண்ணி வெச்சிருக்கானாம். நம்மளையும் ஃபாலோ பண்றாங்களேன்னு..
/

ரொம்ப நல்லவந்தான்பா நீ!

மங்களூர் சிவா said...

/
இந்த வார வலைச்சரம் ஆசிரியரா இருக்கறதால அங்கேயும் வந்து வாழ்த்தீட்டு போங்க...
/

நீங்கதானா ! கும்மிடுவோம்!!

மங்களூர் சிவா said...

//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எங்க ஊர் பஸ்ல பெண்கள் பகுதில பெண்கள்னும் ஆண்கள் பகுதில திருடர்கள் ஜாக்கிரதைன்னு போட்டிருக்காங்க :(

இந்தக் கொடுமையைக் கேக்கறதுக்கு ஆளில்லையா :)
//

:)))))))))
ROTFL

மங்களூர் சிவா said...

//
narsim said...

(வணக்கம்னு சொன்ன உடனே போன கட்பண்றாங்கய்யா..)
//

ஆஹா
:))

கார்க்கிபவா said...

சகா எங்க ஒரு தடவ தல மாதிரி மாடுலேஷனோட சொல்லுங்க "நான் தனியாள் இல்ல.."

பரிசல்காரன் said...

நன்றி ஸ்ரீமதி, ராப்பக்கா, விலெகா, சிவா

@ கார்க்கி

// சகா எங்க ஒரு தடவ தல மாதிரி மாடுலேஷனோட சொல்லுங்க "நான் தனியாள் இல்ல.."//

ஏய்ய்.. ஃபோட்டவை மாத்துப்பா. நல்லால்ல.

வால்பையன் said...

நன்றாக இருக்கிறது அவியல்.

ரிஷி (கடைசி பக்கம்) said...

//என்னைக்குப் ‘போக’ப் போறோம்ன்னு தெரியாது அதுனால நல்லவனா இருப்போம்’ என்பது பலரின் எண்ணம். அது சரிதான் என்பது தினசரிகளில் வரும் விபத்துச் செய்திகளைப் பார்த்தாலே தெரியும்.

ஒருத்தன் எத்தனை நல்லவனா இருந்து, அன்னைக்கு வெறுத்துப் போய் குடிக்க ஆரம்பிச்சவனா இருந்தாலும், வர்ற வழில எதுலயாவது அடிபட்டு செத்துட்டா ‘குடிகாரர் விபத்தில் பலி’ன்னு வரும். என்னமோ அவன் பரம்பரைக் குடிகாரன் மாதிரி!

ஒருத்தன் ஊரையே திருடி உலையில போட்டவனா இருப்பான். உலகத்துல இருக்கற எல்லா கெட்ட பழக்கமும் அவனுக்கு இருக்கும். ஆனா, அவன் மலைக்கு மாலை போட்டிருக்கும்போது இறந்தா ‘ஐயப்ப பக்தர் பலி’ன்னு வரும்.

காலேஜ் போறப்ப இறந்தா ‘கல்லூரி மாணவன் சாவு’ அதே பையன் கட் அடிச்சுட்டு காதலி கூட இருக்கும் போது இறந்தா ‘காதலன் மரணம். காதலி கதறல்’

அதுனால மகாஜனங்களே.. நல்லவனாவே இருங்க!//

Hi Parisal,

Nice

:-))

selventhiran said...

“இன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு அலைபேசியில் பேசும்போது ‘ஹலோ’வுக்கு பதிலாக வணக்கம் என்றும், ‘ஓகே’வுக்கு பதிலாக ‘சரி’ என்றும் மட்டுமே கூற வேண்டும்.

இதன் மூலமாக தமிழ் நின்றவாக்கில் மூன்று செண்டிமீட்டர்களும், பக்கவாட்டில் இரண்டு செண்டிமீட்டர்களும் வளர வாய்ப்பிருக்கிறது.

ரமேஷ் வைத்யா said...

செண்டிமீட்டர் போன்ற ஆங்கிலப் பதங்களை அவாய்டு செய்யவும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதியசயத்திலும் அதிசயம்.. பரிசல் பின்னூட்டத்துக்கு பதிலெல்லாம் சொல்றாருப்பா..

வால்பையன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

அதியசயத்திலும் அதிசயம்.. பரிசல் பின்னூட்டத்துக்கு பதிலெல்லாம் சொல்றாருப்பா..//

இங்கே ரிப்பீட்டேடேடே

போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
இல்லையென்றால் என் மனசாட்சி என்னை குத்தும்

கார்க்கிபவா said...

அய்.. மீ த 50..

Kumky said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...
அதியசயத்திலும் அதிசயம்.. பரிசல் பின்னூட்டத்துக்கு பதிலெல்லாம் சொல்றாருப்பா..

அதாங்க தமிழ்நாட்ல மழை கொட்டுது.

(பரிசல்-விஷயத்த விட்டுட்டு வேற எங்கியோ இழுக்கறாங்களே.....சாளரத்த திறந்தா புயல் அடிக்கிறாமாதிரி ஆயிடுமோ...)

Nilofer Anbarasu said...

//
தமிழ்மணம் மகுடம்
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
அவியல் 24.11.08 - 21/23
பரிசல்காரன்
//

வாழ்த்துக்கள்.

Kumky said...

@ கார்க்கி

// சகா எங்க ஒரு தடவ தல மாதிரி மாடுலேஷனோட சொல்லுங்க "நான் தனியாள் இல்ல.."//

ஏய்ய்.. ஃபோட்டவை மாத்துப்பா. நல்லால்ல.

போட்டதெல்லாம் போட்டதுதான்...

போட்டோவை வேனா மாத்தலாம்.

Anonymous said...

அண்ணா தமிழ வளர்க்கிறிங்களா? "“ஹலோ, ஃப்ரெண்ட்ஸ்... உங்களுக்கு ஒரு சேலஞ்ச். ஓக்கேவா?”"

கிகிகிகி என்னை போலவே ரொம்ப பேர் இருக்காங்கய்யா...

வீ. எம் said...

தலைப்புக்கு ஏற்றது போல நல்ல அவியல்.. சுவையுடன்..

ஒரே சந்தேகம்.. பேருந்தில் ஆன்களுக்கு தனி இருக்கை இருக்கா??

சென்னையில் எனக்கு தெரிந்து பேருந்தில் பென்களுக்கு மட்டும் தான் தனி இருக்கை வசதி.. பென்களுக்கு என்று ஒதுக்கப்படாத (ஊன்முற்றோர்/முதியோர் தவிர்த்து) மற்றவை எல்லாம் பொது தான். பென்கள் என்று எழுதியிருப்பது போல ஆண்கள் என்று எங்கும் பார்க்க முடியாது..

ஆனால் இது தெரியாமல், பலர் , இவங்க சீட் ல உட்கார்ந்தா எழுப்பிடுறாங்க.. ஜென்ட்ஸ் சீட் ல இந்த பொம்பளைங்க சட்டமா உட்கார்ந்து இருப்பாங்கனு முனுமுனுப்பாங்க..

பரிசல்காரன் said...

கயல்விழி முத்துலெட்சுமி

வேலை தங்கச்சிக்கா.. அதுமில்லாம என்னைக்காவது பெஞ்சாத்தான் மழையை ரசிக்க முடியும். எப்பவும் பெஞ்சுகிட்டே இருந்தா அதுல என்ன ஸ்பெஷல் இருக்க முடியும் சொல்லுங்க...

@ கும்க்கி

அப்பறமா வெச்சுக்கறேன் உங்களை. ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு இதைச் சொல்லுங்க. அப்புறம் தெரியும் கஷ்டம். தினமும் பதிவும் போட்டு, மொய் வைக்கறமாதிரி நன்றி நன்றின்னு சொல்றது என்ன இருக்கு தோழர்? என்னைப் புரிஞ்சுகிட்டவங்கதானேன்னு தான் படிச்சுட்டு போயிடறேன். பின்னூட்டத்துக்கு பதில் சொல்லி, இன்னைக்கு பதிவே போட முடியல கவனிச்சீங்களா?

@ வால்/ கார்க்கி

நன்றி. (சகா.. பிழையைக் கண்டுபிடிக்க நானும் ஆரம்பிக்கவா.. தீர்ந்த நீ!)

பரிசல்காரன் said...

@ செல்வேந்திரன்

சொல்லாமல் சொன்ன சேதி புரிந்துகொள்ளப்பட்டது!

@ கிழஞ்செழியன்

யூ ஆர் ரைட் குரு!

@ கடைசிப்பக்கம்

நன்றீ

@ வீ.எம்

இருக்கு நண்பரே!

பரிசல்காரன் said...

மிக்க நன்றி தூயா & நிலோஃபர் அன்பரசு. (பெயர் அருமை. கமலஹாசன், கௌதம் மேனன் பட கதாபாத்திரங்களின் பெயர் போல சுண்டி இழுக்கிறது!)

thamizhparavai said...

அவியல் அறுசுவை.

ஃபாலோ பண்ணா லேமினேட் பண்றாங்களா...? சரி நானும் ஃபாலோயர் ஆகிடுறேன். எனக்கும் ஒரு காப்பி அனுப்பிடுங்க...

பரிசல்காரன் said...

நன்றி தமிழ்பறவை..

பண்ணீட்டாப் போச்சு!

லதானந்த் said...

செல்வேந்திரன்1
”மூலமாக தமிழ்”
பாராட்டுக்கள். ஒரு வாக்கியத்தில் ஒரு பிழை மட்டும் வரும் அளவு தமிழ் கற்றதற்கு!

Thamira said...

எப்படி’ன்னு கேட்டதுக்கு அவன் ப்ளாக்கை ஃபாலோ பண்றவங்களை ப்ரிண்ட் எடுத்து லேமினேஷனெல்லாம் பண்ணி வெச்சிருக்கானாம்.// ரசித்தேன், சிரித்தேன்.!

Thamira said...

எப்படி’ன்னு கேட்டதுக்கு அவன் ப்ளாக்கை ஃபாலோ பண்றவங்களை ப்ரிண்ட் எடுத்து லேமினேஷனெல்லாம் பண்ணி வெச்சிருக்கானாம்.// ரசித்தேன், சிரித்தேன்.!