Thursday, October 23, 2008

அவியல்....!



எப்போதும் நான் ரோட்டோர வண்டிகளில் பொருள் வாங்குவது வழக்கம். ஏதோ உழைக்கும் மக்களுக்கு உதவலாமே என்று. அண்மையில் கோவை காந்திபுரத்தில் ஆப்பிள் வாங்க ஒரு தள்ளுவண்டிக் கடைக்கு சென்றிருந்தபோது அவர் வைத்திருந்த தராசைப் பார்த்து ஆடிப்போய்விட்டேன். தராசு ஒரு தட்டில் இருக்க பொருள் வைக்கும் தட்டு கீழ் நோக்கி இழுக்கும்படி ஒரு ரப்பர் பேண்டைக் கட்டியிருந்தார்கள். தட்டில் ஒன்றுமில்லாதபோது கல்லின் எடைக்கு வெறும் தட்டு மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. ஆனால் இரண்டு, மூன்று ஆப்பிள்களை வைத்தாலே, ரப்பர் பேண்ட் இருப்பதால்/இழுப்பதால் எடை கம்மியாய் இருந்தாலும் மேல் நோக்கிப் போவதில்லை. ஒரு தடவைக்கு 100 கிராமாவது இதனால் அவர்களுக்கு மிச்சமாகிறது. கிட்டத்தட்ட எல்லா பழவண்டிகளிலும் இதே கதைதான்!

உஷாரய்யா உஷாரேய்ய்ய்ய்ய்ய்ய்!

-----------------------

ஷாப்பிங் சமயக் கணிப்பு ஒன்றைச் சொன்னான் என் நண்பன். அதாவது கணவன் மனைவி ஷாப்பிங் முடித்து வருவதை வைத்து அவர்கள் வீட்டில் மதுரை ஆட்சியா, சிதம்பரமா என்று கணிக்க முடியும் என்றான்.

அதாவது நடக்கும்போது மனைவி முன்னால் நடக்க பின்னால் வேர்க்க விறுவிறுக்க கணவன் நடந்தால் அவர்கள் வீட்டில் மனைவின் கை ஓங்கியிருக்குமாம். (அடிக்கவா-ன்னு கேக்கக்கூடாது!!) கணவன் அவசர அவசரமாய் நடக்க மனைவி தொடர்ந்தால் கணவன் ராஜாங்கமாம்.

இருவரும் ஒன்றாக நடந்தால்..?

அப்போதுதான் மணமாகியிருக்கும் என்றான்.

இதெல்லாம் சுத்த ஹம்பக் என்று எனக்கு நேற்று தெரிந்தது. நான் என் மனைவியுடன் ஷாப்பிங் முடித்து நடக்கும்போது கொஞ்சம் முன்னால் நடந்துகொண்டிருந்தேன்!


-------------------

சன் நியூசில் ஒரு செய்தியைக் காட்டினார்கள். அதாவது தீபாவளி பயண நெரிசலைத் தவிர்ப்பதற்காக பத்து சிறப்பு ரயில்கள் விடப்பட்டதாம். காலை 7 மணிக்கு அதற்கான புக்கிங் ஆரம்பமானது. க்யூவில் நின்று கொண்டிருந்த ஒருத்தர் முன்னேறி டிக்கெட் கேட்கிறார். மணி 07.06. அவருக்கு வெயிட்டிங் லிஸ்ட் 206 வந்ததாம்! எல்லா டிக்கெட்டும் இண்டர்நெட்டிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டது!

ஜனத்தொகை, டெக்னாலஜி முன்னேற்றம், ட்ராவல் ஏஜண்ட்களின் அட்டகாசம் என்று எல்லா கோணங்களையும் விட்டு விட்டு இன்னொன்றை யோசியுங்கள்...

பிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் சென்று வாழும் மக்கள் எக்கச்சக்கமாய் ஆகிவிட்டார்கள் என்பதுதானே அது? அவரவர் ஊரில் வேலை பார்ப்பவர்கள் சதவிகிதம் மிகக் குறைந்து வருகிறதோ?


--------------------------

பேருந்தில் பயணித்துவிட்டு ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்சுக்குள் போனேன். அங்கே எஸ்கலேட்டரைப் பார்த்ததும் தோன்றியது....

'பேருந்தில், படியில் பயணிக்க வேண்டாம் என்கிறார்கள். இங்கே படியே பயணிக்கிறதே!'

ஐயையோ... அடிக்க வராங்களே...

---------------------------

'தீவிரவாதிகளிடம் போலீஸார் தீவிர விசாரணை' என்ற வாக்கியம் செய்திகளில் அடிக்கடி அடிபடுகிறது! அவர்கள் தங்கள் கொள்கையில் தீவிரமாய் இருந்ததால்தான் தீவிரவாதிகள். அப்படி என்றால் விசாரணையில் தீவிரமாய் இருக்கும் போலீஸாரும் தீவிரவாதிகளா?

இதையெல்லாம் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கும் நானும், தீவிரமாய் படித்துக் கொண்டிருக்கும் நீங்களும்...

வேண்டாம். பொடா சட்டம் வேறு வரப்போகிறதென்று பயமுறுத்துகிறார்கள். நான் பாட்டுக்கு எதாவது சொல்லப்போய்...

-----------------------
ஷங்கர் 'எந்திரன்' என்று பெயர் வைக்க என்ன காரணம்/ வரிவிலக்கா? இருக்காது என்று நினைகத்தோன்றுகிறது நான் கேட்ட ஒரு டயலாக்..

'ஜெண்டில்மேன்ல ஆரம்பிச்சு 'ன்'ல முடியற அவரோட எல்லா படமும் சூப்பர்ஹிட்!

பாய்ஸ் அவ்வளவா வெற்றி பெறல. சிவாஜில கூட ஷங்கர், ரஜினி எதிர்பார்த்த ஹிட் இல்ல. அதான் ரோபோவை எந்திரன்'ன்னு மாத்திட்டாரு!'


எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா.. ஒருவேளை உண்மையா இருக்குமோ...

----------------------------------------

இரண்டு நாட்களுக்கு முன் ஷாப்பிங் செய்துவிட்டு, கடையிலிருந்து பைக்கை எடுத்து கிளம்பினேன். வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் பின்னால் பைக்கைச் செலுத்தி, சாலைக்கு போகவிருந்தேன். வேனின் சைடில் வலதுபுறமாக வந்த ஒருத்தரின் பைக், என் பைக்கில் மோதி நின்றது. அவர் வந்தது வலதுபுறம். நான் நின்றிருந்தது இடதுபுறம். தவறு அவர்மீதுதான். ஆனாலும், என்னைப் பார்த்து ‘என்ன சார்.. திடீர்னு வர்றீங்க?’ என்று கேட்டார். வலதுபுறம் வாகனம் வரும் என்று நான் கண்டேனா? கோவம் வந்தது. ஆனாலும் பொறுமையாகக் கேட்டேன்..

“சார். நான் வந்தது லெஃப்ட். ஆனா நான் வந்தது ரைட். நீங்க வந்தது ரைட். ஆனா நீங்க வந்தது ரைட்டா?”

பைக்கை முடுக்கி காதில் புகை வரக் கிளப்பிக் கொண்டு போய்விட்டார்!

------------------------------------------


38 comments:

rapp said...

me the first:):):)

அருண் said...

me the second =)) Just missed it.

அருண் said...

Google reader didn't reflect immediately.

rapp said...

இதுல இருந்து என்ன தெரியுதுன்னா, நீங்க ரொம்ப ஷாப்பிங் போறீங்கன்னு.

Athisha said...

;-))

மிக பயறுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பா

rapp said...

முதல்ல சொல்லிருக்கற விஷயம் தப்புதான், சூப்பர் மார்க்கெட்ல அவன் ரேஞ்சுக்கு அவன் கொள்ள அடிக்கிறான், அதிலையும் அடாவடியா. இவங்க இவங்க ரேஞ்சுல செய்றாங்க:(:(:(

//ஷாப்பிங் சமயக் கணிப்பு ஒன்றைச் சொன்னான் என் நண்பன்//

வர வர இந்த வகை மாடர்ன் ஜோசியக்காரங்க தொல்ல தாங்க முடியல:):):)

அருண் said...

//பிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் சென்று வாழும் மக்கள் எக்கச்சக்கமாய் ஆகிவிட்டார்கள் என்பதுதானே அது? //

ரொம்ப சரி. தீபாவளி/பொங்கல் சமயத்தில் பெங்களுர் மெஜஸ்டிக் போய் பார்த்தால் தெரியும்.அதேபோல் திருப்பூர் பஸ் ஸ்டாண்ட்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//நான் என் மனைவியுடன் ஷாப்பிங் முடித்து நடக்கும்போது கொஞ்சம் முன்னால் நடந்துகொண்டிருந்தேன்!//

அடிக்கடி இப்படி எதாவது சொல்லி மனச தேத்திக்கிறிங்க போல :P

Mahesh said...

ரொம்ப ஷாப்பிங் போகாதீங்க.... உடம்புக்கும் ஆகாது...ப்ர்ஸுக்கும் ஆகாது... அப்பறம் நீங்க பின்னால வேர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டி வரும்... ஷாப்பிங் பேகெல்லாம் தூக்கிக்கிட்டு... :)))

சரவணகுமரன் said...

//'பேருந்தில், படியில் பயணிக்க வேண்டாம் என்கிறார்கள். இங்கே படியே பயணிக்கிறதே!'//

//“சார். நான் வந்தது லெஃப்ட். ஆனா நான் வந்தது ரைட். நீங்க வந்தது ரைட். ஆனா நீங்க வந்தது ரைட்டா?” //

எப்படி இப்படி எல்லாம்? :-))

கார்க்கிபவா said...

//---------------------
ஷங்கர் 'எந்திரன்' என்று பெயர் வைக்க என்ன காரணம்/ வரிவிலக்கா? இருக்காது என்று நினைகத்தோன்றுகிறது நான் கேட்ட ஒரு டயலாக்..//


என்ன பேரு வச்சாலும் கலைஞர் வரிவிலக்கு கொடுப்பாருண்ணே.. சிவாஜி, தசாவதாரம் என்ன தமிழ் பேர்களா?

//'பேருந்தில், படியில் பயணிக்க வேண்டாம் என்கிறார்கள். இங்கே படியே பயணிக்கிறதே!'//


நளதம்யந்தில ஒரு வசனம்.. மாதவன் ஏதோ கேட்பார் விமான நிலையத்தில். அதற்கு மனோபாலா படிக்கெட் எப்படி சார் மாடிக்கு போகும்னு சொல்வார். அப்போ மாதவன் எஸ்கலேட்டர் பார்த்துட்டு "அய்யோ இங்க படிக்கட்டே மாடிக்கு போறது" என்பார்.

//அவரவர் ஊரில் வேலை பார்ப்பவர்கள் சதவிகிதம் மிகக் குறைந்து வருகிறதோ?//

யாரங்கே.. ஒரு டாக்டர் பட்டம் கொண்டு வாங்க‌

//நான் என் மனைவியுடன் ஷாப்பிங் முடித்து நடக்கும்போது கொஞ்சம் முன்னால் நடந்துகொண்டிருந்தேன்!//

முன்னால போய் எதையாவது வாங்க சொல்லியிருப்பாங்க..

//“சார். நான் வந்தது லெஃப்ட். ஆனா நான் வந்தது ரைட். நீங்க வந்தது ரைட். ஆனா நீங்க வந்தது ரைட்டா?” //

லெஃப்ட் கூட எப்பவுமே ரைட்டா பேசுவாங்கனு சொல்ல முடியாது. அவங்க அணு ஒப்பந்தத்துக்கு ரைட் சொல்லியிருந்தா லெஃப்டுக்கு சிங் ரைட் போட்டிருப்பர்.

பரிசல்காரன் said...

ரொம்ப நாளைக்கப்புறம் மீ த ஃபர்ஸ்ட் (என் பதிவுல) போட்ட அகிலாண்ட நாயகன் மன்றத்தலைவி, பின்னூட்ட கின்னஸ் சாதனையாளர் வாழ்க.. வாழ்க!

பரிசல்காரன் said...

//முடித்து நடக்கும்போது கொஞ்சம் முன்னால் நடந்துகொண்டிருந்தேன்!//

முன்னால போய் எதையாவது வாங்க சொல்லியிருப்பாங்க..//

இதுக்குத்தான் சகா தாமிரா கூடவெல்லாம் சேரக்கூடாதுங்கறேன். கரெக்டா கண்டுபிடிச்சு, மானத்தை வாங்கறீங்களே...

பரிசல்காரன் said...

// சரவணகுமரன் said...

//'பேருந்தில், படியில் பயணிக்க வேண்டாம் என்கிறார்கள். இங்கே படியே பயணிக்கிறதே!'//

//“சார். நான் வந்தது லெஃப்ட். ஆனா நான் வந்தது ரைட். நீங்க வந்தது ரைட். ஆனா நீங்க வந்தது ரைட்டா?” //

எப்படி இப்படி எல்லாம்? :-))//

சகவாசம் அப்படி!

anujanya said...

அவியல் முழுதும் 'பரிசல்' 'பரிசல்' 'பரிசல்' டச் - அடுத்த ஜு.வி. வந்தாயிற்றா? இங்கு அதை மீள் பதிவு செய்யலாமா?

அனுஜன்யா

கிருத்திகா said...

இந்த தடவை அவியல் சுவையாக் உள்ளது.


//கொள்கையில் தீவிரமாய் இருந்ததால்தான் தீவிரவாதிகள். அப்படி என்றால் விசாரணையில் தீவிரமாய் இருக்கும் போலீஸாரும் தீவிரவாதிகளா? இதையெல்லாம் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கும் நானும், தீவிரமாய் படித்துக் கொண்டிருக்கும் நீங்களும்... வேண்டாம். பொடா சட்டம் வேறு வரப்போகிறதென்று பயமுறுத்துகிறார்கள். நான் பாட்டுக்கு எதாவது சொல்லப்போய்...//


இப்பிடியெல்லாம் சிந்திக்கறிங்களே நீங்க தீவிரவாதியா?!

பரிசல்காரன் said...

@ கிருத்திகா

//இப்பிடியெல்லாம் சிந்திக்கறிங்களே நீங்க தீவிரவாதியா?!//

இவ்ளோ தீவிரமா கேக்கறீங்களே.. நீங்களும்...

:-))))))))

பரிசல்காரன் said...

காலை 12 மணியிலிருந்து என் ப்ளாக் ஓப்பன் ஆகாமல் இருந்தது. நீங்களும் நிம்மதியாக இருந்திருப்பீர்கள் என் நினைக்கிறேன்.

என்ன பிரச்சினை என்று கண்டுபிடித்து சரி செய்த அதிஷாவுக்கும், உதவிய விஜய் ஆனந்திற்க்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

நன்றி ஃப்ரெண்ட்ஸ்!

வெண்பூ said...

அருமையான சுவையான அவியல்..

//
பரிசல்காரன் said...
காலை 12 மணியிலிருந்து என் ப்ளாக் ஓப்பன் ஆகாமல் இருந்தது. நீங்களும் நிம்மதியாக இருந்திருப்பீர்கள் என் நினைக்கிறேன்.
//
உங்க‌ளுக்கு எப்ப‌டி தெரியும்???

//
என்ன பிரச்சினை என்று கண்டுபிடித்து சரி செய்த அதிஷாவுக்கும், உதவிய விஜய் ஆனந்திற்க்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
//
இருக்குடி உங்க‌ ரெண்டு பேருக்கும்...

//
நன்றி ஃப்ரெண்ட்ஸ்!
//
கொஞ்ச‌ம்கூட‌ ந‌ன்றியில்லாத‌ ஃப்ரெண்ட்ஸ் :))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நாளைக்கப்பறம் இந்த பதிவு பழய ஃபேமஸாகாத பரிசலின் போஸ்ட் போல இருந்தது.. சூப்பராக.. ராப் நான் சொல்ல நினைச்சதெல்லாம் பின்னூட்டமா போட்டுருக்காப்ல.. "மீத பர்ஸ்ட்" மட்டும் நான் போட நினைச்ச பின்னூட்டமில்லை.. :)

rapp said...

எனக்கு கொஞ்ச நேரம் முன்ன அதிஷா பிளாக் திறக்கலே:(:(:( இப்போ பாக்கறேன்

பரிசல்காரன் said...

இந்தப் பதிவுக்கு உண்டான கமெண்டை, போன பதிவுலயே போட்ட ஞானி சஞ்சய் வாழ்க!

Sanjai Gandhi said...

இந்த அவியல்ல அடிக்கடி ஷாப்பிங்க் பத்தி எழுதி இருக்கிங்க... என்ன தான் இருந்தாலும் பாப்பாவுக்கு ஷார்ப்னர் வாங்க கடைக்கு போறத எல்லாம் ஷாப்பிங்கனு சொல்றது கொஞ்சம் ஓவருங்ணா.. :))

..ஹிஹி..

குசும்பன் said...

ஹி ஹி ஹி ஒரே ஷாப்பிங் காம்ளக்ஸ் மேட்டர்ஸ்...ஒருவேளை தொழிலதிபர் ஆகிட்டீங்களோ!!!

குசும்பன் said...

ஊருக்கு ஒரு தொழிலதிபர் போதும்மய்யா சஞ்சய் இருக்கும் பொழுது நீங்க வேற எதுக்கு!!!

ILA (a) இளா said...

உங்க அவியல்லையே ரொம்ப பிடிச்சது இன்னிக்குதான் அதுவும், ரடி-லெப்ட்,லிப்ட்

Rangs said...

ணா,

உண்மையிலேயே இந்த சென்னைல இருந்து ஊருக்கு வர்ற கொடுமை...ஐயோ சாமி இப்பதான் தெரியுதுங்க...நெம்ப கஷ்டந்தான்..டிக்கெட் வாங்க முடிலீங்!

அப்புறம்..(நம்ம கவுண்டர் ஸ்டைல்ல படிங்க..) அடடடடா..நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா...பருத்திக்கொட்டை விக்கிறவன் புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர்ங்கறாங்க (சும்மா தமாசுக்கு)

MADURAI NETBIRD said...

//
ஹி ஹி ஹி ஒரே ஷாப்பிங் காம்ளக்ஸ் மேட்டர்ஸ்...ஒருவேளை தொழிலதிபர் ஆகிட்டீங்களோ!!!


ஊருக்கு ஒரு தொழிலதிபர் போதும்மய்யா சஞ்சய் இருக்கும் பொழுது நீங்க வேற எதுக்கு!!!
//

அவியல் சூப்பரு..................

MADURAI NETBIRD said...

காப்பி பேஸ்ட் கலாச்சாரம்....
தப தப வந்து பாருங்க

http://madurainanpan.blogspot.com/2008/10/blog-post_4376.html

rapp said...

me the 30th

Anonymous said...

//“சார். நான் வந்தது லெஃப்ட். ஆனா நான் வந்தது ரைட். நீங்க வந்தது ரைட். ஆனா நீங்க வந்தது ரைட்டா?” //

கோவைக் குசும்பு...

சின்னப் பையன் said...

இந்த வாரம் ஷாப்பிங் வாரம்!!!

பாபு said...

"//ரொம்ப நாளைக்கப்பறம் இந்த பதிவு பழய ஃபேமஸாகாத பரிசலின் போஸ்ட் போல இருந்தது.. சூப்பராக.. //


repeattu

வால்பையன் said...

இனி கடைக்கு சென்றால் முதலில் கவனிக்க வேண்டியது தராசை தான்

வால்பையன் said...

கடைசி

அவர் வந்ததும் ரைட்
நீங்க வந்ததும் ரைட்

Raj said...

//இதெல்லாம் சுத்த ஹம்பக் என்று எனக்கு நேற்று தெரிந்தது. நான் என் மனைவியுடன் ஷாப்பிங் முடித்து நடக்கும்போது கொஞ்சம் முன்னால் நடந்துகொண்டிருந்தேன்!//

நீங்க முன்னாடி நடந்தாலும்..வீட்டில் அவங்க ஆட்சிதானே

//“சார். நான் வந்தது லெஃப்ட். ஆனா நான் வந்தது ரைட். நீங்க வந்தது ரைட். ஆனா நீங்க வந்தது ரைட்டா?” //

இதெல்லாம் டூ மச்...பாவம் அவர்.

Rajthilak said...

//“சார். நான் வந்தது லெஃப்ட். ஆனா நான் வந்தது ரைட். நீங்க வந்தது ரைட். ஆனா நீங்க வந்தது ரைட்டா?” //


சூப்பர். அவருக்கு இது தேவைதான். நானும் அடுத்த முறை இதையே பயன்படுத்தறேன்.

Thamira said...

“சார். நான் வந்தது லெஃப்ட். ஆனா நான் வந்தது ரைட். நீங்க வந்தது ரைட். ஆனா நீங்க வந்தது ரைட்டா?” //

நான் என் மனைவியுடன் ஷாப்பிங் முடித்து நடக்கும்போது கொஞ்சம் முன்னால் நடந்துகொண்டிருந்தேன்!//

இந்த‌ முறை அனைத்துமே ரசனைக்குரியதாக இருந்தன‌. சில நிகழ்ச்சிகள் உங்கள் நடையால் சிறப்பு பெறுவதை உணரமுடிகிறது. வாழ்த்துகள் பரிசல்.!