Thursday, October 2, 2008

பரிசல்காரனுடன் ஒரு சந்திப்பு


(மகேஷ்)


துக்ளக் மகேஷ்

நான் சிங்கப்பூரிலிருந்து வந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் நெருங்கிவிட்டது. நேற்று (01.10.08) காலை கோவையில் இருந்து திருப்பூர் போய் வெயிலான், பரிசல்காரன், சாமிநாதன் ஆகிய பதிவர்களை சந்திக்கலாம் என்று புறப்பட்டேன். கிளம்பும்போதே பரிசலைத் தொடர்பு கொண்டபோது, வெயிலான் என்னை வந்து பிக்கப் செய்து கொள்வார் என்றும் நேராக ஹோட்டலுக்கு வந்துவிடுங்கள் என்றும் கூறினார். ஆனால் மனுஷன் வெயிலானின் நம்பரை எனக்குக் கொடுக்கவே இல்லை. பின் நான் எப்படி வெயிலானை அழைக்க?

வெயிலான்

பரிசல்காரன் அழைத்து, மகேஷ் இன்னும் கொஞ்ச நேரத்தில் மகேஷ் புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கப்போகிறார் என்று சொன்னதுமே நான் கிளம்பிப் போனேன். பாதிதூரம் போகும்போதுதான் அவர் எனக்கு மகேஷின் நம்பர் கொடுக்காதது ஞாபகத்துக்கு வந்தது. இன்றைக்கு ஞாபகமறதி பற்றி பதிவு போட்டுவிட்டு மனுஷன் அதுக்குத் தகுந்த மாதிரியே நடந்து கொள்கிறாரே என்று நினைத்தேன். பிறகு கூப்பிட்டு கேட்டபோது, “உங்க நம்பரை மகேஷ் கிட்ட குடுத்துட்டேன்”ன்னு சொன்னாரு. ஓக்கேன்னு போனேன்.

சாமிநாதன் (ஈரவெங்காயம்)

பரிசல் என்னை மறந்துட்டார் போல. நானா கூப்பிட்டப்புறம் “இன்னும் கொஞ்ச நேரத்துல எம்.கே.எம்.ஹோட்டல்ல இருப்பாங்க. போங்க” என்று சொன்னார். சரி என்று கிளம்பிப்போனேன். அங்கே வெயிலானும், மகேஷும் காத்திருந்தார்கள்.
(வெயிலான், சாமிநாதன் , மகேஷ்)


(வெயிலான், சாமிநாதன், பரிசல்காரன், மகேஷ்)

மகேஷ்


வெயிலான் வந்து என்னை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்குப் போய், சாமிநாதனையும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம். பரிசல்காரனைக் கூப்பிட்டபோது ‘இதோ வந்தாச்சு. இப்போ வந்துடுவேன்’ என்று சமாளித்துக் கொண்டே இருந்தார். மனுஷன் வரவே இல்லை! வெயிலான் சொன்னார், “இண்டியன் ஸ்டாண்டார்ட் டைம் மூணுக்கு வருவாரு” என்று. அப்போது மணி ரெண்டுதான் ஆகியிருந்தது. நானும் வெயிலானும் சாமிநாதனும் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு சாப்பிட ஐட்டங்களை (லஞ்ச் ஐய்ட்டம்ங்க!) ஆர்டர் செய்தோம்.

வெயிலான்

பரிசல் வர எப்படியும் இன்னும் ஒரு மணிநேரமாகும் என்று தெரிந்துவிட்டது. வேலன் அண்ணாச்சியோடு செல்ஃபோனில் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் டேபிளுக்குப் பின்னால் ஒருத்தருக்கு என்ன பிரச்சினையோ, ஃபோனில் யாரையோ போட்டு வாட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அதைக் கொஞ்ச நேரம் ரசித்துக் கொண்டிருந்தோம். ஃப்ரைடு ரைஸ், தயிர்சாதம் ஆர்டர் செய்தோம்.

(வெயிலான், பரிசல்காரன், மகேஷ்)
மகேஷ்

இருங்க வெயிலான்.. இனி பூரா நானே சொல்றேன்....


சரியாக மணி மூன்றை நெருங்கும்போது பரிசல்காரன் வந்தார். வருவது பரிசலா, ஏதாவது சினிமா ஸ்டாரா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. அவ்வளவு அழகாக இருந்தார். இதையெல்லாம் எழுதினால் அவருக்குப் பிடிக்காது என்பதால் மேற்கொண்டு அவரது அழகைப் பற்றியெல்லாம் எழுதவில்லை. வந்ததும் தாமதத்திற்கு மன்னிக்கவேண்டினார். வந்து உட்கார்ந்ததுமே திருப்பூரில் சிம்பா என்றொரு பதிவர் வர இருந்ததாகக் கூறினார். மறுபடி மறுபடி அவருக்கு ஃபோன் போட்டுக் கொண்டிருந்தார். நாட் ரீச்சபிளாக இருந்தது. அவரிடம் வேறு ஏதோ கதை சொல்லியிருந்தார் பரிசல். ‘அவரு வந்திருந்தா கொஞ்ச நேரம் ஓட்டியிருந்திருக்கலாம்’ என்று புலம்பிக் கொண்டே இருந்தார். ஹூம்! இதே பொழப்புதான் போல என்று நினைத்துக் கொண்டேன்!

பரிசலும் சரி, வெயிலானும் சரி என்னோடு இருந்த நேரத்தில் பாதிநேரம் ஃபோனில் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். திருப்பூர் வாழ்க்கை எவ்வளவு பிசியாக இயந்திரத்தனமாக இருக்கிறது என்பது புரிந்தது. நான் கிளம்பும் அவசரத்தில் பரிசலுக்காக கொண்டு வந்திருந்த கிஃப்டை (பிளாட்டினம் கொஞ்சம் விலை கம்மி சிங்கப்பூரில்) எடுத்துவர மறந்துவிட்டேன். அதை போஸ்டில் அனுப்பவேண்டும். அட்ரஸ் வேறு கேட்க மறந்துவிட்டேன். மெயிலில் அட்ரஸை அனுப்பு பரிசலைக் கேட்டுக் கொள்கிறேன்.(பட்டைச்சாராய வகுப்பை சாமிநாதன் நடத்திக் கொண்டிருந்தபோது ரசித்துக் கொண்டிருந்த மகேஷும், பரிசல்காரனும்)

சாமிநாதன் ‘ஈரவெங்காயம்’ என்ற பெயரில் எழுதிவருவது தெரியும். ஆனால் அவருக்கு வேறு பல விஷ்யங்களும் தெரிந்திருக்கிறது. அவினாசி அருகே வைக்கப்புல்லிலிருந்து பீர் எப்படித் தயாரிக்கிறார்கள், உடுமலை அருகே கருவேலமரத்திலிருந்து பட்டைச் சாராயம் எப்படித் தயாரிக்கிறார்கள் என்றெல்லாம் அழகாக விளக்கினார். அதுவும் பட்டைச் சாராயத்தின் புளிப்பு போக என்ன செய்வார்கள் என்று அவர் சொன்னது... உவ்வேஏஏஏஏஏ..

அதெல்லாம் கூடப் பரவாயில்லை. காங்கேயம் அருகே ஒரு கிராமத்துல காபரே பெண்களைக் கூட்டிவந்து, மக்காச்சோளக் காட்டுக்கு நடுவே சதுரமாக வெட்டிவிட்டு பெரிய மனுஷங்க எல்லாரும் நடுவுல உட்கார அந்தப் பெண்களை ஆடவிட்டு அப்புறமா.....

வேணாம் விடுங்க. இதை எழுதவே முடியாதுன்னு பரிசல் சொல்லீட்டதால நான் எழுத வேண்டியதாச்சு!(காபரே அழகிகள் பற்றி சாமிநாதன் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தபோது...)


சந்திப்பு நாலரை மணிக்கு முடிஞ்சு வெயிலான் கிளம்ப, நான், பரிசல், சாமிநாதன் ஒரு காஃபி சாப்பிட்டுட்டு, பரிசல் என்னை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு கிளம்பினார். இனியதொரு நினைவுகளோடு திருப்பூருக்கு விடை சொல்லிப் பஸ் ஏறினேன் நான்.

28 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))...

மீ த பஸ்ட்ட்டூ!!!

Kumky said...

நாந்தே செகண்டு.

Kumky said...

ஏனுங்க பட்டய பத்தி பேசயில ரெண்டு பேரு போட்டோவையும்.,காபரே பத்தி பேசயில ஒருத்தர் போட்டோவையும் போடுறியலே...என்னன்னே நாயம்?

கோவி.கண்ணன் said...

நல்லதொரு சந்திப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

///ஜெகதீசன் said...

//கோவி.கண்ணன் said...

நல்லதொரு சந்திப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள்.//
ரிபீட்டேய்ய்.....
////

ஜோசப் பால்ராஜ் said...

எங்க மகேஷ நாங்களே இன்னும் பார்க்கல, அதுக்குள்ள நீங்க முந்திக்கிட்டீங்க.
வாழ்த்துக்கள்.

மகேஷ், சீக்கிரம் சிங்கப்பூர் வாங்க, உங்களுக்காக ஒரு சந்திப்பு ஏற்பாடு செஞ்சுருவோம்.

நாதஸ் said...

//வருவது பரிசலா, ஏதாவது சினிமா ஸ்டாரா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. அவ்வளவு அழகாக இருந்தார். இதையெல்லாம் எழுதினால் அவருக்குப் பிடிக்காது என்பதால் மேற்கொண்டு அவரது அழகைப் பற்றியெல்லாம் எழுதவில்லை//

:) :) :)

ஜோசப் பால்ராஜ் said...

கோவி.கண்ணன் said...
நல்லதொரு சந்திப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

///ஜெகதீசன் said...

//கோவி.கண்ணன் said...

நல்லதொரு சந்திப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள்.//
ரிபீட்டேய்ய்.....
////


ரிபீட்டேய்ய்.....

விஜய் ஆனந்த் said...

// ஜோசப் பால்ராஜ் said...
கோவி.கண்ணன் said...
நல்லதொரு சந்திப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

///ஜெகதீசன் said...

//கோவி.கண்ணன் said...

நல்லதொரு சந்திப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள்.//
ரிபீட்டேய்ய்.....
////


ரிபீட்டேய்ய்..... //

ரிப்ப்ப்பீட்டேய்ய்.....

ஜோசப் பால்ராஜ் said...

//சரியாக மணி மூன்றை நெருங்கும்போது பரிசல்காரன் வந்தார். வருவது பரிசலா, ஏதாவது சினிமா ஸ்டாரா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. அவ்வளவு அழகாக இருந்தார். //

சந்திப்புக்கு லேட்டா போயிட்டு பேச்ச பாரு.

இத இவரு பெயரப் போட்டு எழுதுனா அடிவிழும்னு, மகேஷ் பெயர போட்டு எழுதுனா மட்டும் நாங்கல்லாம் சும்மா விட்ருவோமா?
என்னுயிர் தோழன் குசும்பனுக்கு சொல்லிவிட்ருக்கேன், வந்ததும் இருக்கு உங்களுக்கு.

இந்த விக்கி எங்க போனாருன்னு தெரியல, தம்பியும் வந்துட்டா இன்னும் நல்லா இருக்கும்.

வெண்பூ said...

நல்ல சந்திப்பு.. அதைவிட அருமையான வர்ணனைகள்.. பாராட்டுகள் பரிசல்.

Ramesh said...

;-) நல்லதொரு சந்திப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

சினிமா ஸ்டாரா? பரிசலா?

entha hotel athu? Poppys / Velan / Angel?

narsim said...

படிக்கிறவங்களும் சந்திப்புல இருந்தமாதிரி ஃபீல் எழுத்துல கொண்டுவந்துட்டீங்க.. நல்ல சந்திப்பு..

(2 நாளாச்சு பதிவுபக்கம் வந்து..)

நர்சிம்

சென்ஷி said...

//வருவது பரிசலா, ஏதாவது சினிமா ஸ்டாரா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது.//

:))

cheena (சீனா) said...

திருப்பூர்லே சந்திப்பா - நல்லது - பக்கத்துலே கோயம்புத்தூரு ஈரோடு கூப்பிட்டிருக்கலாமே ! கலக்கி இருக்கலாமே !!

ம்ம்ம்ம்ம் - நல்லது

Sanjai Gandhi said...

//ஏதாவது சினிமா ஸ்டாரா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. அவ்வளவு அழகாக இருந்தார். இதையெல்லாம் எழுதினால் அவருக்குப் பிடிக்காது என்பதால் மேற்கொண்டு அவரது அழகைப் பற்றியெல்லாம் எழுதவில்லை//

நல்லவேளை தப்பிச்சோம்.. அடங்கவே அடங்காதா இந்த பெருசு? :)

31ம் தேதி காலைல இருந்து மாலை 8 மனி வரை நான் திருப்பூர்ல தான் இருந்தேன்.. அப்போ இந்த சந்திப்பு வச்சிருக்கக் கூடாதா.. நல்ல இருங்கய்யா எல்லாரும் :(

Raman Kutty said...

நான் தான் அழைப்பிருந்தும், தவிர்க்கமுடியாத அலுவல்தான் காரணத்தால் மிஸ் பண்ணிவிட்டேன். இப்பொழுது வருந்துகிறேன் எவ்வளவு அரிய விஷயங்கள்..

ரவி said...

டி.வியில வில்லத்தனம் பண்னுற வேணு அர்விந்த் மாதிரியே இருக்கார் :))))

சிம்பா said...

//வந்து உட்கார்ந்ததுமே திருப்பூரில் சிம்பா என்றொரு பதிவர் வர இருந்ததாகக் கூறினார். மறுபடி மறுபடி அவருக்கு ஃபோன் போட்டுக் கொண்டிருந்தார். நாட் ரீச்சபிளாக இருந்தது.//

இதற்காக சீனியர் அனைவரிடமும் நான் பொது மன்னிப்பு கேட்டுகறேன்.

ஆனா ஒன்னு நான் மாட்டியிருந்தா வடிவேலு கதை தான் போல... இருந்தும் சந்திப்பு வாய்ப்பை தவற விட்டது வருத்தம் அளித்தது.

Thamira said...

நர்ஸிம் :படிக்கிறவங்களும் சந்திப்புல இருந்தமாதிரி ஃபீல் எழுத்துல கொண்டுவந்துட்டீங்க.. நல்ல சந்திப்பு..// ரிப்பீட்டேய்..

ரெண்டு பேரு சந்திச்சாலே கலக்கல் பதிவு போட்டு கலக்குறாரு பரிசல். இங்கே சென்னைல 6 பேரு சந்திச்ச ஒரு சந்திப்ப பத்தி மூச்சையே காணோமே..!

வால்பையன் said...

//மனுஷன் வெயிலானின் நம்பரை எனக்குக் கொடுக்கவே இல்லை. பின் நான் எப்படி வெயிலானை அழைக்க?//

பகலில் தானே, வானத்தை பார்த்து தான்

வால்பையன் said...

வித்தியாசமான முயற்சி
நன்றாக இருந்தது

Anonymous said...

செப்டம்பர் 31ஆம் தேதி?

என்ன நடக்குது இங்க?

Anonymous said...

இப்போல்லாம் ஆண்கள் கூட சைனிஸ் போஸ் குடுக்கிறாங்களா? ;)

சிநேகிதன்.. said...
This comment has been removed by the author.
சிநேகிதன்.. said...

உங்க mail id தர இயலுமா?

MADURAI NETBIRD said...

நல்லதொரு சந்திப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

பரிசல்காரன் said...

சிநேகிதன்..

என் ப்ரொஃபைலிலேயே ஐ.டி.உள்ளது!

இருந்தலும் இதோ... kbkk007@gmail.com

Mahesh said...

அட.... நான் எழுதியிருந்தாக் கூட இவ்வளவு இன்ட்ரெஸ்டிங்கா இருந்திருக்காது..... நம்ம ப்ராக்ஸி ரொம்ப சிறப்பாவே எழுதியிருக்காரு.... :D :D
நன்றி க்ருஷ்ணா....

@ செந்தழல் ரவி: தவறைத் திருத்திக் கொள்ளவும். வேணு அரவிந்த் என்ன மாதிரி இருக்காரு :D இப்பிடி சொல்ற நாலாவது ஆள் நீங்க,