Monday, October 20, 2008

ப்ளீச்சிங்பவுடர் - சில உண்மைகள்

யார் இந்த ப்ளீச்சிங் பவுடர்?

இந்தப் ப்ரச்சினை எப்படி ஆரம்பித்தது? எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்கிற ஆராய்ச்சியையெல்லாம் விட்டுவிடுவோம். முடியும் கட்டத்தில் இருக்கிறது என்று நம்புவோம்.


ப்ளீச்சிங் பவுடரின் உண்மையான பெயர் அருண்குமார். (இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வால்பையனின் பெயர் அருண்ராஜ்!) ஹைதராபாத்தில் சத்யத்தில் பணிபுரிந்தவர், தற்போது பெங்களூரில் ஒரு MNC நிறுவனத்தில் NETWORK ENGINEER பணிபுரிகிறார்.

பதிவுகளையும், பதிவுலகத்தைப் பற்றியும் மூன்று நான்கு மாதங்களாகத்தான் தெரியும் அவருக்கு.

“ஒரு சில விஷயங்களைத் தவிர லக்கிலுக்கின் எழுத்துக்கு நான் ஒரு தீவிர வாசகன். ஆனால் நியாயமான சில விஷயங்களை அவர் மறைப்பதும், வெளியிடாததும் என்னை பாதித்தது. அந்தக் கோபத்தைத்தான் பதிவெழுதி தீர்த்துக் கொண்டேன்” என்கிறார்.

“அவர் என்றில்லை. நீங்கள் சொல்வதில் சில விஷயங்கள் பிடிக்காதபோதும் வெளிப்படுத்தினேன். என்னுடைய கோபமெல்லாம் ஒரு நாளைக்குத்தான். அடுத்தநாள் அதை மறந்து விடுவேன்” என்றார்.

எந்தெந்த பதிவுகளைப் படிக்கிறார்?

“இன்றைக்கும் என்னுடைய ஃபேவரைட் லிஸ்டில் இட்லிவடை, லக்கிலுக், பரிசல்காரன், கார்க்கி நான்குபேர்தான் இருக்கிறார்கள். இப்போதுதான் வால்பையன், நல்லதந்தியை சேர்த்திருக்கிறேன்” என்று சொல்லும் இவர் “இந்தப் ப்ரச்சினையில் வால்பையன் பேரை இழுத்துவிட்டது ஆரம்பத்துல எனக்கு விளையாட்டாத்தான் இருந்துச்சு. ஆனா போகப்போக ஜோசப் பால்ராஜ் மாதிரியான சீனியர் பதிவர்களே, அதை நம்பற மாதிரி பின்னூட்டம் போட்டபோது என்னால வால்பையன் கஷ்டப்படுவாரோ’ன்னு தோணிச்சு” என்கிறார்.

‘இந்தப் ப்ரச்சினையை தீர்க்க, என் வலைப்பூவையே அழித்துவிடுகிறேன்’ என்று வால்பையனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். நல்லவேளையாக எனக்கும் CC அனுப்பியிருந்தார். ‘இப்படியே கொஞ்ச நாள் விளையாடுவோமே’ என்று வால்பையன் ஆசைப்பட, எனக்கு அது பிடிக்கவில்லை. இது பெரிதாகி, வேறு ப்ரச்சினைகளில் போய் முடியவும் வாய்ப்புண்டு என்பதால் நான் ப்ளீச்சிங் பவுடரிடம், ‘உங்களைப் பற்றிய உண்மைகளை வெளியிடவா’ என்று கேட்டேன். அனுமதி கொடுத்தார் ப்ளீச்சிங் பவுடர். ‘புகைப்படம் மட்டும் போடவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்.

“என்னை வெளிப்படுத்திக் கொள்வதில் என்ன சங்கடம் என்றால், என் நண்பர்கள் யார் என்ன எழுதினாலும், என்னால் எதிர்க்கருத்து சொல்ல முடியவில்லை” என்கிறார்.

பதிவுலகில் நல்ல நட்பான சூழல்தானே நிலவுகிறது என்று கேட்டதற்கு... “அது நல்லாத்தான் இருக்கு. ஆனால் நிறைய நண்பர்களை பெற்றிருப்பவர்கள், சீரியசான விஷயங்களிலும், அரசியல் சம்மந்தமான விவாதங்களிலும், தங்களுடைய கருத்தை கூறினால் எங்கே நட்பு பாதிக்குமோ என்று ஒதுங்கியே இருகிறார்கள். இதற்கு நல்ல உதாரணம் வேற யாரு.. நீங்கள் தான் பரிசல்!” என்று வெளிப்படையாகக் கூறினார்.

என்னுடைய வேண்டுகோள் ஒன்றுதான். வால்பையனாகட்டும், ப்ளீச்சிங் பவுடர் ஆகட்டும்... உங்களுக்கு பிடிக்காத கருத்தை எதிர்ப்பதில் உங்களின் உரிமையை யாரும் மறுக்க முடியாது. அது தொடர்ந்த தனிமனிதத் தாக்குதலாக மற்றவர்களால் விமர்சிக்கப் படுவதைத் தவிர்க்க, ஆரோக்யமாகவே வெளிப்படையாகவே விமர்சிக்கலாம்.

நான் ரஜினிகாந்த் பற்றி பாராட்டி எழுதியது பிடிக்கவில்லையா, அதை நேரடியாக விமர்சியுங்கள். உனக்கு எப்படி ரஜினிகாந்தைப் பிடிக்கலாம் என்று கேட்பது என் உரிமையில் கை வைக்கும் செயலாகி விடுகிறது! (ஒரு உதாரணத்துக்கு சொல்றேங்க... நீங்க இப்படிச் செய்றீங்கன்னு சொல்லல..)


சிங்கைப் பதிவர்களிடம் இந்தப் பண்பை நான் பார்த்திருக்கிறேன். நேருக்கு நேர் என்று கருத்து மோதல்கள் மட்டும் செய்து, அந்த மோதலை ஆரோக்யமான விவாதமாக மாற்ற வேண்டும்.


அதேபோல ப்ளீச்சிங்பவுடரின் சில பார்வைகள் பிரமிப்பூட்டுபவை, வால்பையனின் சில எழுத்துகளும், தனக்கு என்ன தெரிந்திருக்கிறது என்று தெரிந்து வைத்திருக்கும் தெளிவும் பாராட்டக் கூடியது.

மற்றபடி, நட்புக்காக என்று எதையும் எதிர்த்துப் பேசத் தயங்குகிறீர்கள் என்று என்னைப் பற்றி ப்ளீச்சிங் பவுடர் சொன்னதும் உண்மைதான். இல்லையென்று வாதிட்டு ப்ளீச்சிங் பவுடரின் நட்பை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை! உண்மையில், வலையுலகில் எழுதுவதால் பணம் சேர்க்கவோ, புரட்சி பண்ணவோ முடிவதில்லை. நட்பைத்தான் சேர்க்க முடிகிறது. அதையும் கெடுத்துக் கொள்வானேன்!


“உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அந்தக் கருத்தை கூறுவதற்கு உங்களுக்கு இருக்கும் உரிமைக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார்” -வால்டேர்.

.

54 comments:

குடுகுடுப்பை said...

இவ்வளவு பிரச்சினை இருக்கா, நீங்க சொல்றத பாத்தா பதிவுலகத்தை உட்டு ஓடுரதுதான் நல்லது போல இருக்கு.

Anonymous said...

//“ஒரு சில விஷயங்களைத் தவிர லக்கிலுக்கின் எழுத்துக்கு நான் ஒரு தீவிர வாசகன். ஆனால் நியாயமான சில விஷயங்களை அவர் மறைப்பதும், வெளியிடாததும் என்னை பாதித்தது. அந்தக் கோபத்தைத்தான் பதிவெழுதி தீர்த்துக் கொண்டேன்” என்கிறார்.

“அவர் என்றில்லை. நீங்கள் சொல்வதில் சில விஷயங்கள் பிடிக்காதபோதும் வெளிப்படுத்தினேன். என்னுடைய கோபமெல்லாம் ஒரு நாளைக்குத்தான். அடுத்தநாள் அதை மறந்து விடுவேன்” என்றார். //

நானும் இதற்கு உடன் படுகிறேன் ....

//என்னுடைய வேண்டுகோள் ஒன்றுதான். வால்பையனாகட்டும், ப்ளீச்சிங் பவுடர் ஆகட்டும்... உங்களுக்கு பிடிக்காத கருத்தை எதிர்ப்பதில் உங்களின் உரிமையை யாரும் மறுக்க முடியாது. அது தொடர்ந்த தனிமனிதத் தாக்குதலாக மற்றவர்களால் விமர்சிக்கப் படுவதைத் தவிர்க்க, ஆரோக்யமாகவே வெளிப்படையாகவே விமர்சிக்கலாம்.
//

அப்படியே ஆகட்டும் ....

நானும் விட்டு விடுகிறேன் ...

நல்லதொரு பதிவு ...நன்றி பரிசல் ...

கிரி said...

தலை சுத்துது அவ்வ்வ்வ்வ்

Robin said...

//அதேபோல ப்ளீச்சிங்பவுடரின் சில பார்வைகள் பிரமிப்பூட்டுபவை// ;) :)

கூடுதுறை said...

இந்த பிரச்னைக்கு தீர்வு கண்ட பரிசல் வாழ்க...

அப்படியே இந்த பக்கிலுக் யார் என்றும் அறிவித்துவிடுங்களேன்...

(எனக்கு என்னவோ பரிசல்தானோ என்று சந்தேகம்)

கார்க்கிபவா said...

//ஆனா போகப்போக ஜோசப் பால்ராஜ் மாதிரியான சீனியர் பதிவர்களே,//

சொல்லவே இல்ல...

//ஹைதராபாத்தில் சத்யத்தில் பணிபுரிந்தவர்,//

ஜஸ்ட் மிஸ்..

//பதிவுகளையும், பதிவுலகத்தைப் பற்றியும் மூன்று நான்கு மாதங்களாகத்தான் தெரியும் அவருக்கு.
//

அப்போ என் செட்..

/“இன்றைக்கும் என்னுடைய ஃபேவரைட் லிஸ்டில் இட்லிவடை, லக்கிலுக், பரிசல்காரன், கார்க்கி நான்குபேர்தான் இருக்கிறார்கள். //

ஹிஹிஹி.. தங்கத்துக்கும் பித்தளைக்கும் வித்தியாசம் தெரியாத சின்னபுள்ள...

//சிங்கைப் பதிவர்களிடம் இந்தப் பண்பை நான் பார்த்திருக்கிறேன்.//

சிங்கம் என முதலில் தவறாக படித்துவிட்டு என்னைத்தான் சொல்றீங்களோனு நினைச்சுட்டேன்..

குசும்பன் said...

மீ தி எஸ்கேப் ( முதல் பத்தி மட்டும் படிச்சேன்)

பரிசல்காரன் said...

//குசும்பன் said...

மீ தி எஸ்கேப் ( முதல் பத்தி மட்டும் படிச்சேன்)//

இதெல்லாம் நல்லால்ல தலைவா.. நீங்கள்லாம் இருக்கறப்ப நான் பேசவே கூடாது.. இருந்தாலும் பேசறேன்ல.. அதே மாதிரி உங்க கருத்தைச் சொல்லணும்ல..

(சிக்கமாட்டீங்கறானே-ங்கற வயித்தெரிச்சல்தான்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......)

பரிசல்காரன் said...

@ பக்கிலுக்

//அப்படியே ஆகட்டும் ....

நானும் விட்டு விடுகிறேன் ..//

மிக மகிழ்கிறேன்!

பரிசல்காரன் said...

@ கார்க்கி

ஒனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு.. ஒருத்தர்கிட்ட சொல்லிவெச்சிருக்கேன்!

பரிசல்காரன் said...

// Robin said...

//அதேபோல ப்ளீச்சிங்பவுடரின் சில பார்வைகள் பிரமிப்பூட்டுபவை// ;) :)//

சும்மா சொல்லல ராபின். எனக்கு மின்னஞ்சலில் அவர் அனுப்பிய ஒரு சில விஷயங்களை வைத்துச் சொல்கிறேன்.

நந்து f/o நிலா said...

//உண்மையில், வலையுலகில் எழுதுவதால் பணம் சேர்க்கவோ, புரட்சி பண்ணவோ முடிவதில்லை. நட்பைத்தான் சேர்க்க முடிகிறது. அதையும் கெடுத்துக் கொள்வானேன்!//

அட நம்ம சாதிக்கார பயலுங்க நிறய இருப்பாங்க போல?

Anonymous said...

பரிசல்,

பல் மருத்துவரையும், மகப்பேறு மருத்துவரையும் வச்சு அவர் ஒரு நகைச்சுவை எழுதியிருப்பாரு நல்லா இருந்துச்சு.

இந்த அரசியல்ல இறங்குனதுக்குப் பிறகு அவர் பக்கம் நான் போகல.

எப்படியோ வலையுலக நாட்டாமை ஆகீட்டிங்க வாழ்த்துக்கள்.

திருப்பூர் போனஸ் பிரச்சினையும் உங்களால தீர்க்க முடிஞ்சா நல்லது.

கார்க்கிபவா said...

//பரிசல்காரன் said...
@ கார்க்கி

ஒனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு.. ஒருத்தர்கிட்ட சொல்லிவெச்சிருக்கேன்!//


ஆஹா..கிள‌ம்பிட்டாங்கய்யா..கிள‌ம்பிட்டாங்க‌

கார்க்கிபவா said...
This comment has been removed by the author.
புதுகை.அப்துல்லா said...

நம்ம முன்பே ஒருமுறை பேசிக்கொண்டோம் இருவரும் ஒருவ்வர் அல்ல என்று. இருவரின் எழுத்துநடை பார்வை என்று பல வித்யாசம் பார்க்க முடியும். அட நம்ம முன்னாடியே கணிச்சுட்டோமேன்னு நினைக்கும் போது ஒரு அல்ப சந்தோசம் :))

குப்பன்.யாஹூ said...

முதல் பத்தி மட்டும் புடிச்சேன், புரியவும் இல்லை, படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இல்லை.

தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர் போல இருக்கும் போல. (விவேக் ஒரு திரைப்படத்தில் கூட நெடுந்தொடர் கதை குழப்பம் பற்றி நகைச்சுவை செய்து இருப்பார்).

பதிவு உலகத்தை நல்ல விவாதங்கள், கருத்து பகிர்தலுக்கு மட்டும் பயன் படுத்தலாமே.

வாழ்த்துக்களுடன்

குப்பன்_யாஹூ

வெண்பூ said...

பதிவுக்கும் விளக்கத்திற்கும் நன்றி பரிசல். உண்மையை விளக்கியதற்கு நன்றி.

ஆனால் ஒரு விசயம். இந்த பிரச்சினை இவ்வளவு சீரியஸ் ஆனதற்கு காரணம் லக்கியோ அவரை சார்ந்தவர்களோ இல்லை. ஆரம்பம் அங்கே என்றாலும், ப்ளீச்சிங் பவுடர் தனது பின்னூட்டத்தில் வால்பையன் என்று கையெழுத்திடுவதும், வால்பையன் தனது பின்னூட்டத்தில் ப்ளீச்சிங் பவுடர் என்று கையெழுத்திடுவதும் படிக்கிறவர்களை (நான் உட்பட) மிகவும் குழப்பியது.

அது ஏதோ விளையாட்டான விசயம் என்றால் பரவாயில்லை. லக்கிலுக் என்ற தனிமனிதனை விமர்சிப்பது தொடர்பானது. நான் ஏற்கனவே பல பிரச்சினைகளில் சொன்னது போல (நீங்கள் இந்த பதிவில் சொல்லியிருப்பது போலவும்) பிரச்சினைகளை மட்டுமே விவாதிக்க வேண்டும், தனிமனிதர்களை அல்ல.

இருவருக்குமே என் கண்டனங்கள்.

எனவே இந்த பிரச்சினை இத்துடன் முடியும் என்று நம்புகிறேன்.

Athisha said...

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அந்தக் கருத்தை கூறுவதற்கு உங்களுக்கு இருக்கும் உரிமைக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார்னுலாம் சொல்லமாட்டேன்...

ஏன்னா உங்க கருத்தில் எனக்கு உடன்பாடில்லை..

Athisha said...

இந்த பதிவு சிலரது தவறுகளை மறைக்கும் முயற்சியாகவே இருக்கிறது..

ஒரு வேளை அந்த சிலர் உங்கள் நண்பர்களாக இருப்பதால் அப்படி இருக்கலாம்..

அருண் said...

பதிவுலக நாட்டாமை பரிசல் வாழ்க!

Ramesh said...

Interesting discussions!

கோவி.கண்ணன் said...

இருவரும் ஒருவரே அல்ல என்று எனக்கு முன்பே தெரியும்.

நானும் என்ன நடக்கிறது என்று பார்த்தேன் !

:)

கார்க்கிபவா said...

//அதிஷா said...
இந்த பதிவு சிலரது தவறுகளை மறைக்கும் முயற்சியாகவே இருக்கிறது..

ஒரு வேளை அந்த சிலர் உங்கள் நண்பர்களாக இருப்பதால் அப்படி இருக்கலாம்..

20 October, 2008 11:18 AM//

பரிசலின் நண்பர் அதிஷாவென எல்லோருக்கும் தெரியும். ஹிஹிஹிஹி

பரிசல்காரன் said...

அதிஷா said...

இந்த பதிவு சிலரது தவறுகளை மறைக்கும் முயற்சியாகவே இருக்கிறது..

ஒரு வேளை அந்த சிலர் உங்கள் நண்பர்களாக இருப்பதால் அப்படி இருக்கலாம்..//

உண்மைதான். ஒத்துக்கறேன் நண்பா!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
இவ்வளவு பிரச்சினை இருக்கா, நீங்க சொல்றத பாத்தா பதிவுலகத்தை உட்டு ஓடுறதுதான் நல்லது போல இருக்கு.
//

அண்ணன் சொல்லுறதுதான், தம்பிக்கும்....

Unknown said...

சீரியசான விஷயங்களிலும், அரசியல் சம்மந்தமான விவாதங்களிலும், தங்களுடைய கருத்தை கூறினால் எங்கே நட்பு பாதிக்குமோ என்று ஒதுங்கியே இருகிறார்கள். இதற்கு நல்ல உதாரணம் வேற யாரு.. நீங்கள் தான் பரிசல்!” என்று வெளிப்படையாகக் கூறினார்.

உண்மைதான் பரிசல் சார் ..

வால்பையன் said...

//யார் இந்த ப்ளீச்சிங் பவுடர்?//


ஆமா யாரு

வால்பையன் said...

//ஹைதராபாத்தில் சத்யத்தில் பணிபுரிந்தவர்//

சத்யம் தியேட்டர் சென்னையிலனா இருக்கு

வால்பையன் said...

//பெங்களூரில் ஒரு MNC நிறுவனத்தில் NETWORK ENGINEER பணிபுரிகிறார்.//

ஆபிசரா

வால்பையன் said...

//இதற்கு நல்ல உதாரணம் வேற யாரு.. நீங்கள் தான் பரிசல்!” //

நோட்டேடு

வால்பையன் said...

//அது தொடர்ந்த தனிமனிதத் தாக்குதலாக மற்றவர்களால் விமர்சிக்கப் படுவதைத் தவிர்க்க, ஆரோக்யமாகவே வெளிப்படையாகவே விமர்சிக்கலாம்.//

எங்களுக்கு வேற வேலை இல்லையா சாமி

வால்பையன் said...

//வால்பையனின் சில எழுத்துகளும், தனக்கு என்ன தெரிந்திருக்கிறது என்று தெரிந்து வைத்திருக்கும் தெளிவும் பாராட்டக் கூடியது.//

எனக்கு என்ன தெரியும்னு எனக்கு தெரியுமா
அது எப்படி உங்களுக்கு தெரியும்.
எனக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாதுன்னு எனக்கு தெரியும்

VIKNESHWARAN ADAKKALAM said...

ஹம்ம்ம்ம்...

Anonymous said...

//ப்ளீச்சிங் பவுடர். ‘புகைப்படம் மட்டும் போடவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். //

முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு. ...?
இதோ ப்ளீச்சிங் பவுடர் புகைப்படங்கள்

அவை உங்களுக்காக ...

http://pakkilook.blogspot.com/2008/10/blog-post_20.html

தல என்னை மன்னிச்சிடுங்க ...

ஜோசப் பால்ராஜ் said...

//ஆனா போகப்போக ஜோசப் பால்ராஜ் மாதிரியான சீனியர் பதிவர்களே//

இது என்னக் கொடுமைங்க பரிசல் அண்ணே? நான் எல்லாம் சீனியரா? ஒரு சின்னப் பையனப் பார்த்து இப்டியா சொல்வீங்க?

வால்பையன், ப்ளீச்சிங்பவுடர், பக்கிலுக் இது எல்லாம் ஒரே ஆளுன்னுதான் நான் இம்புட்டு நாளு நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா ஒரு நாளு கோபப்படுவோம் அப்றம் மறந்துருவோம்னு சொல்ற இவங்க, ஏன் இப்படி தனிமனித தாக்குதல்களச் செய்யிறாங்க? ப‌க்கிலுக்னு எல்லாம் ஒரு வ‌லைய‌ ஆர‌ம்பிச்சு தாக்குத‌ல் ந‌ட‌த்துற‌து போலிக‌ளின் இர‌ண்டாம் வ‌ருகையோங்கிற‌ அள‌வுல‌ இருக்கா இல்லையா? இதக் கேட்டா ல‌க்கிக்கு நான் அல்ல‌க்கையான்னு கேட்பாங்க‌. நானும் ல‌க்கியும் எவ்வ‌ள‌வு க‌ருத்து மோத‌ல் செஞ்சுருக்கோம்னு என் ப‌திவுக‌ள‌ப்பார்த்தாலே தெரியும். க‌ருத்து மோத‌ல்க‌ள் வேற‌, த‌னி ம‌னித‌ ந‌ட்பு வேற‌. இத‌ப் புரிஞ்சுக்கிட்ட‌ போதும். இந்த‌ பிர‌ச்ச‌னைய‌ப்ப‌த்தி இவ்வ‌ள‌வு தெளிவா ப‌திவெழுதுன‌துக்கு வாழ்த்துக்க‌ள் ப‌ரிச‌ல் அண்ணா.

வால்பையன் said...

//வால்பையன், ப்ளீச்சிங்பவுடர், பக்கிலுக் இது எல்லாம் ஒரே ஆளுன்னுதான் நான் இம்புட்டு நாளு நினைச்சுக்கிட்டு இருக்கேன். //

அண்ணே
ஆரம்பத்திலேயே நான் அந்த மாதிரியெல்லாம் எழுதறது இல்லைன்னு ஒரு பதிவே போட்டேன். உங்கள மாதிரி இன்னும் எத்தனை பேரு நினைச்சிகிட்டு இருக்காங்களோ.
ஆரம்பத்தில் ப்ளீச்சிங் பதிவுகளில் நான் அவனில்லை சேட்டையெல்லாம் நான் செய்யவில்லை. மீண்டும் மீண்டும் என்னை தாக்கியது யார்! நான் நாகரிகமாக தானே எனது கருத்தை எழுதினேன்.

இதில் இந்த குழப்பத்துக்கு காரணம் என்னுடைய நண்பர்களே! அவர்களின் அன்புக்கு அடிபணிந்து நான் கொஞ்சம் விளையாண்டு பார்த்தேன்.

நல்லதந்தி எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.
ப்ளீச்சிங் பவுடர் புகைபடம் அனுப்பியிருக்கிறார்.
பக்கிலுக் யாரென்று எனக்கு தெரியாது.

அது நீங்களாகவும் இருக்கலாம்
யார் கண்டா
ஹீ ஹீ ஹீ

நல்லதந்தி said...

//நல்லதந்தி எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.
ப்ளீச்சிங் பவுடர் புகைபடம் அனுப்பியிருக்கிறார்.
பக்கிலுக் யாரென்று எனக்கு தெரியாது.//

எனக்குப் புகைப் படம் அனுப்பலையே! :(

thamizhparavai said...

ஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........
ஒரு சோடா கிடைக்குமா.....?

புதுகை.அப்துல்லா said...

நானும் ல‌க்கியும் எவ்வ‌ள‌வு க‌ருத்து மோத‌ல் செஞ்சுருக்கோம்னு என் ப‌திவுக‌ள‌ப் பார்த்தாலே தெரியும். க‌ருத்து மோத‌ல்க‌ள் வேற‌, த‌னி ம‌னித‌ ந‌ட்பு வேற‌.
//

அண்ணே நம்ம ரெண்டு பேரும் அடுச்சுகிட்டத விடவா?

சிம்பா said...

எங்கள் தங்கம், பதிவுலக அமைதிப்புறா, அமைதி விரும்பி, படிகிரவங்களோட மனசுக்கு புடுச்ச மாதிரி எழுதுகிற எங்கள் பரிசல் வாழ்க.


(பி. கு: இந்த கருத்தில் யாருக்காவது உடன்பாடு இல்லை என்றால் கூறுங்கள். உங்க உரிமைய நிலைநாட்ட பரிசல் தன்னோட உயிரை கூட தருவார்)

:)))))

Anonymous said...

//நல்லதந்தி எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.
ப்ளீச்சிங் பவுடர் புகைபடம் அனுப்பியிருக்கிறார்.
பக்கிலுக் யாரென்று எனக்கு தெரியாது.

அது நீங்களாகவும் இருக்கலாம்
யார் கண்டா
ஹீ ஹீ ஹீ //

ரிபீட்டே...........

Anonymous said...

//ப‌க்கிலுக்னு எல்லாம் ஒரு வ‌லைய‌ ஆர‌ம்பிச்சு தாக்குத‌ல் ந‌ட‌த்துற‌து போலிக‌ளின் இர‌ண்டாம் வ‌ருகையோங்கிற‌ அள‌வுல‌ இருக்கா இல்லையா? //
அதாருங்க போலிகள் ?
அதென்ன ரெண்டாம் வருகை ?

இயேசு ரெண்டாம் வருகைன்னு சொல்லக்கேட்டுருக்கேன்...

நான் புதுசுப்பா ..கொஞ்சம் விளக்கமா விளக்குங்க ....

Anonymous said...

நான் இப்போ திருந்திட்டேன்க ..

பரிசல் என் கண்ண திறந்திட்டார் ...

நம்புங்கப்பா ...!!!

Anonymous said...

//எனக்குப் புகைப் படம் அனுப்பலையே! :( //

நம்ம பதிவுல பாருங்க ...

Anonymous said...

//வால்பையன், ப்ளீச்சிங்பவுடர், பக்கிலுக் இது எல்லாம் ஒரே ஆளுன்னுதான் நான் இம்புட்டு நாளு நினைச்சுக்கிட்டு இருக்கேன். //

இப்போ தானே ஒரு பஞ்சாயத்து முடிஞ்சிருக்கு ... மெல்ல பரிசல் ..ஈழப் பிரச்சினை முடிஞ்ச பிறகு ..அடுத்த பஞ்சாயத்தையும் நடத்தி வைப்பார் ...

கொஞ்சம் பொறுங்க ....

Anonymous said...

47

Anonymous said...

48

Anonymous said...

49....

50 நான் போட மாட்டேன் ..
ராப் இல்லனா வேற யாராவது போடட்டும்

VIKNESHWARAN ADAKKALAM said...

rapp தான் 50 போடனுமா? நான் போட்டா பரிசல் கோவிச்சுக்குவாரா :P

இததான் கேட்க வந்தேன்... ஆனா பாருங்களேன் அது 50வது கும்மியா போச்சு...

Anonymous said...

யப்பாடா ....50 நான் போடல ....

இல்லனா இதுக்கும் வாலுக்கும் யாராவது முடிச்சு போட்டுடுவாங்க ...

வால்பையன் said...

//யப்பாடா ....50 நான் போடல ....
இல்லனா இதுக்கும் வாலுக்கும் யாராவது முடிச்சு போட்டுடுவாங்க ... //


மக்களுக்கு 90 போட்டா தான் நான்னு தெரியும்

rapp said...

ஆஹா, இதே வேலையாப் போச்சு உங்க செட்டுக்கு:):):) ஆனா நாங்கெல்லாம் பல்பு வாங்குறதில் சேம்பியன்சாக்கும், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................................

rapp said...

'நான்' படத்துல, அம்மா கேரெக்டர் நாகேஷ் சொல்றாப்போல, கொமட்டுல குத்துனாத்தான் சரி படுவீங்க:):):) மேகா கிட்டதான் பொறுப்ப ஒப்படைக்கணும்:):):)