Thursday, October 16, 2008

எல்லோர்க்கும் நன்றி! (விடைபெறும் பதிவு அல்ல!)


பலருடைய பதிவுகள்ல இதை நீங்க பாத்திருக்கலாம். FOLLOWERSன்னு இருக்கும். அதுக்கு வேற சிலபேர் வெச்சு போட்டிருப்பாங்க. நான் என்கூட நீங்களும் வர்றீங்களா’ன்னு கேட்டிருப்பேன். வலது பக்க சைடு பார்ல இருக்கும். (யாருய்யா அது.. அனுமதி பெற்ற பாரா?-ன்னு கேக்கறது?)

மொத மொதல்ல நான் இந்த WIDGETஐ போட்டப்ப நந்து f/o நிலா-வும் முதலாகவாவும், லக்கிலுக் இரண்டாவதாவும் என் ஃபாலோயரா வந்தாங்க. லக்கிலுக்கை தொடர்ந்து மூணாவதா வந்தது யாரு தெரியுமா? Any Guess?


அதுல FOLLOW THIS BLOGஐ க்ளிக் பண்ணி என் ப்ளாக்கை நீங்க ஃபாலோ பண்ணினா, நான் எந்த போஸ்ட் போட்டாலும் உடனே உங்க டாஷ்போர்டுல தெரியும். (கார் வெச்சிருக்கறவங்க உடனே அந்த டாஷ்போர்டுல பார்த்து தெரியலையேன்னு கேட்கக்கூடாது...)

எனக்கென்ன வசதின்னா, நான் உங்களை அடிக்கடி பார்க்கணும்ன்னா, உங்க பதிவைப் படிக்கணும்ன்னா, நீங்க என் ஃபாலோவராய்ட்டீங்கன்னா, உங்க படத்துல க்ளிக்கினா ஈஸியா போயிடும்!

என்ன ஒரு சந்தோஷமான சமாச்சாரம்ன்னா, ரெண்டுநாள் முன்னாடி என் 47வது ஃபாலோவரா டாக்டர்.ருத்ரன் வந்திருக்காரு. எனக்கு சந்தோஷம் தாங்காம கத்துன கத்துல டாக்டர் ருத்ரன்கிட்ட கூட்டீட்டு போகணும்போல-ன்னு ஆஃபீஸ்ல இருக்கறவங்க சொன்னாங்க. நான் கத்தறதே அவராலதான்னு சொன்னேன்! :-)

அவரோட வாழ நினைத்தால் வாழலாம் புத்தகம் என்னோட வாழ்க்கைல மறக்க முடியாத ஒரு புத்தகம். என் துணைவி உமா, (மேரேஜுக்கும் - காதலிக்கறதுக்கும் முன்னாடி) அந்தப் புத்தகத்தைத்தான் எனக்கு முதல்ல பரிசா குடுத்தாங்க. படிச்சுட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன். எப்போ மனசுக்கு ஆறுதல் தேவைன்னாலும் அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிப்பேன்.

அந்தப் புத்தகத்தை குடுத்துட்டு படிச்சாச்சா, படிச்சாச்சா-ன்னு பலதடவை உமா என்கிட்ட கேட்டாங்க. ‘ஓ'ன்னு சில அத்தியாயங்களை அவங்ககிட்ட பகிர்ந்துக்குவேன். சுரத்தேயில்லாம கேட்பாங்க. எனக்கு ஏண்டா, எவ்ளோ இண்ட்ரஸ்ட் இல்லாம கேக்கறாங்க'ன்னு தோணும்.

அப்பறம் காதலை பரிமாறிகிட்டு ரொம்பநாள் கழிச்சு அந்தப் புத்தகத்தை கொண்டுவரச் சொல்லி காட்டினாங்க. அதுல ‘இதுவும் இன்னமும் வர உடனிருக்கும் உமாவுக்கு'ன்னு டாக்டர் சமர்ப்பணம் பண்ணியிருப்பாரு. நம்ம மரமண்டைக்கு அப்பதான், ஓஹோ.. இதுதான் மேட்டரா-ன்னு வெளங்கிச்சு!

அப்பறம் அவரோட பல புத்தகங்களை தொடர்ந்து வாசிச்சேன். என் ப்ரதர்-இன் -லா வோட பையன் பேரு ருத்ரேஷ். அதுவும் டாக்டரோட தாக்கம்தான். பேர் வைக்கறப்ப இதுதான் வேணும்னு அடம்பிடிச்சு வெச்சோம்!

இதுனால என்ன சொல வர்றேன்னா, அந்த ஃபாலோயர்ஸ்ல நீங்களும் கலந்துக்குங்க...! (எல்லாம் ஒரு வெளம்பரம்தான்..!) எனக்கும் உங்க பதிவுப் பக்கம் வர ஈஸியா இருக்கும்ல!

லக்கிலுக்கைத் தொடர்ந்து மூணாவதா வந்தது யாரா இருக்கும்னு நிறையபேர் கண்டுபிடிச்சிருப்பீங்க. யெஸ்... வால்பையன்!


இந்த நேரத்துல நந்து, லக்கிலுக், வால்பையன், வெண்பூ, விஜய், கார்க்கி, வீரசுந்தர், முரளிகண்ணன், வெட்டிப்பயல், கார்த்திக், கூடுதுறை, வடகரை வேலன், சிம்பா, விக்னேஸ்வரன், தாமிரா, பொடியன், குசும்பன் ,சர்வேசன், karthik, அகநாழிகை, வெயிலான், அதிஷா, தியாகராஜன், தென்றல், ஜிம்ஷா, மதுசூதனா, TBCD, புதுகைத்தென்றல், கணேஷ், Ara, முத்துலெட்சுமி-கயல்விழி, திவ்யா, கும்க்கி, ரமேஷ், மதுரை நண்பன், விலெகா, ஜீவன், sen, ரோஜா காதலன், நர்சிம், கேபிள் சங்கர், Raj, Pondy-Barani, இராம், கோவி.கண்ணன், டாக்டர்.ருத்ரன், Busy, Pradeep எல்லாருக்கும் என்னோட ஸ்பெஷல் நன்றி!

(இதப்படிக்கறவங்களுக்கு இத்தனை பேரை ஏன் எழுதி அறுக்கணும்ன்னு தோணலாம்... பதிவெழுதாம படிக்க மட்டும் செய்யற நிறையபேர் இதுல இருக்காங்க. அவங்களுக்கு ஒரு சின்ன நன்றிக்கடன்!)


ரெண்டாவது முக்கியமான விஷயம், இந்த தமிழிஷ் டூல்பார். இதோ இதுல நம்ம பதிவுலயே இணைச்சுட்டா எல்லாரும் ஓட்டுப் போடுவாங்கன்னு பார்த்தா, ஒருத்தரும் போடறதில்ல! ஓட்டுப் போடறதுன்னாலே சோம்பேறித்தனம்தானே. என்னமோ உங்க இஷ்டம்... பார்த்து பண்ணுங்க!


முக்கியமான பின்குறிப்பு:-

இதப் படிச்சவங்க இதையும் போய்ப் படிங்க. சமீபத்துல நான் படிச்சதுலயே எனக்கு மிகப் பிடிச்சது!

44 comments:

Ramesh said...

Thanks Parisalkaran. Nandri!

Appuram Junior Vikatanle pathivubothai pathi eluthuveenga ille?

கார்க்கி said...

அண்ணே நீங்க ஓட்டு போட்டிங்களா?

VIKNESHWARAN said...

எனக்கு தமிழிஸ் டூல் பாரை எப்படி இணைப்பது என தெரியலை... :(

பதிவு அருமை... :))

narsim said...

வழக்கமான துள்ளல், கலக்கல்.. ஒருபக்கம் ஜ்யோவ்ராம்சுந்தர் ஒரு பக்கம் ருத்ரன்.. கலக்கல் பரிசலாரே..

50வதா ஃபாளோ பண்ண போற‌ ஆளு யாரு?? (3 ??)

அந்த இதுக்கு நன்றி..

நர்சிம்

வெண்பூ said...

அடுத்த மைல்கல்.. 50 ஃபாலோயர்ஸ்.. கலக்குங்க பரிசல்... வாழ்த்துக்கள்..

வினையூக்கி said...

:) நாங்க எல்லாம் பாலோயர்ஸ் ல இல்லை என்றாலும், பரிசல் பேரைத் திரட்டியில் பார்த்தால் உடனே வந்து வாசிப்போம்ல

Anonymous said...

ஹி..ஹி ..ஹி ..
நானும் தொடருறேன்

http://pakkilook.blogspot.com/2008/10/blog-post_15.html

Arun said...

Me the 52nd.

Raj said...

நன்றி!

பரிசல்காரன் said...

ஆஹா.. இதுதான் சும்மாப் போற சாத்தானை கூப்ட்டு ஒக்கார வெச்சு விருந்து போடறதுன்னு சொல்வாங்களா...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

rapp said...

எனக்கு தமிழிஷ் மேல கடுப்பா இருக்கு. ஒரு கள்ள ஓட்டுக் கூட போற போக்குல போட முடியல:(:(:(பெருசா வந்துட்டீங்க ஓட்டு கேட்டு, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................

கூடுதுறை said...

இவர் தமிழிஷிக்கு சப்மிட் கூட செய்யவில்லை... ஓட்டு போட வேண்டுமாம்...

இந்த பதிவையே நாந்தான் தமிழிசுக்கு அளித்துள்ளேன்...

புதுகை.அப்துல்லா said...

எங்கண்ணே நம்பள விட்டுட்டீங்க???

புதுகை.அப்துல்லா said...

நானும் உங்க ஃபாலோவர்ண்ணே...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றிக்கு ஒரு பதில் நன்றி. :)

தாமிரா said...

எனது ஒரு பதிவில் டாக்டர் பின்னூட்டம் போட்டதில் இன்னமும் நான் புல்லரிச்சுகிட்டேயிருக்கேன்.. இதி அவர் உங்க பாலோயரா.? பொறாமையா இருக்குங்க..

பின்னூட்டம் படிக்க நேரமில்லை. வேக வேகமாக பதிவுகளை மட்டுமே படித்துக்கொண்டிருக்கிறேன். இதையே யாரும் ஏற்கனவே சொல்லியிருந்தால் என்னோடதை ரிப்பீட்டாக கொள்க.

தாமிரா said...

வெறுமனே ஓட்டு என்றால் போட்டுவிடலாம். தமிழிஷில் ஓடு போட ஐடி, பாஸ் தேவைப்படுகிறதே. அதை உள்ளிடும் நேரத்தில் ரெண்டு பதிவைப்படித்துவிடலாம் போல இருக்கிறது.

விஜய் ஆனந்த் said...

அண்ணே...

பரிசலண்ணே...

உங்களால மட்டும் எப்படிண்ணே இதெல்லாம் முடியுது...

விதவிதமா யோசிச்சி பதிவு போடறீங்கண்ணே...

சூப்பர்...

ச்சின்னப் பையன் said...

சூப்பர் பரிசல்....

Anonymous said...

வாழ்த்துக்கள் சின்னச்சாமி.

வால்பையன் said...

//லக்கிலுக்கை தொடர்ந்து மூணாவதா வந்தது யாரு தெரியுமா? Any Guess?//

நானில்லைன்னு நினைக்கிறேன்

வால்பையன் said...

//ரெண்டுநாள் முன்னாடி என் 47வது ஃபாலோவரா டாக்டர்.ருத்ரன் வந்திருக்காரு.//

யாருக்கு அவரோட உதவி தேவைப்படுதோ அங்கேயெல்லாம் நிப்பார்

வால்பையன் said...

//நம்ம மரமண்டைக்கு அப்பதான், ஓஹோ.. இதுதான் மேட்டரா-ன்னு வெளங்கிச்சு!//

இப்போ மண்டை எப்படி இருக்கு

வால்பையன் said...

//பேர் வைக்கறப்ப இதுதான் வேணும்னு அடம்பிடிச்சு வெச்சோம்!//

நம்பிட்டேன்.. டோம்

வால்பையன் said...

//அந்த ஃபாலோயர்ஸ்ல நீங்களும் கலந்துக்குங்க...! //

சிறப்பு பரிசு ஏதாவது உண்டா

வால்பையன் said...

//லக்கிலுக்கைத் தொடர்ந்து மூணாவதா வந்தது யாரா இருக்கும்னு நிறையபேர் கண்டுபிடிச்சிருப்பீங்க. யெஸ்... வால்பையன்!//

நான் ப்ளீச்சிங் பவுடர்னு நினைச்சேன்

வால்பையன் said...

//எல்லாருக்கும் என்னோட ஸ்பெஷல் நன்றி!//

வெறும் நன்றி தானா

வால்பையன் said...

//ஓட்டுப் போடுவாங்கன்னு பார்த்தா, ஒருத்தரும் போடறதில்ல! //

ரீடர்ல படிச்சிட்டு அப்படியே பின்னூட்டம் பாக்ஸ ஒப்பன் பண்ணிட்டு பின்னூட்டம் போடறதால ஓட்டு போட முடியல. இனிமேல் கள்ள ஓட்டாவது போட்டுறேன்

வால்பையன் said...

//பார்த்து பண்ணுங்க!//

நீங்களும் பார்த்து பண்ணனும்
இங்கே எல்லாமே கொடுக்கல் வாங்கல் முறை தான்

வால்பையன் said...

30

K.Ravishankar said...

நானும் வந்துட்டேன் சார்! அப்பப்ப வந்துட்டு போக சொன்னிங்க

"கன்னாபின்னான்னு வழிமொழியறேன்!

இந்த வார்த்தை மைன்டுக்கு வருதா ?

என்ன சார் ஆச்சு! என்னோட கமேண்ட்க்கு
பதிலே காணும். டாக்டர் ருத்ரன் படிக்கிறிங்க! ஜுனியர் விகடன்ல எழுதறிங்க .
"சுஜாதா "வை "சொன்னதும்காணாம போய்ட்டிங்க ! ரெண்டு வார்த்தை சொல்லுங்க சார்! புண்ணியமா போகும் .

கே.ரவிஷங்கர்

பரிசல்காரன் said...

//K.Ravishankar said...

நானும் வந்துட்டேன் சார்! அப்பப்ப வந்துட்டு போக சொன்னிங்க

"கன்னாபின்னான்னு வழிமொழியறேன்!

இந்த வார்த்தை மைன்டுக்கு வருதா ?

என்ன சார் ஆச்சு! என்னோட கமேண்ட்க்கு
பதிலே காணும். //

ஒண்ணுமே புரியல ரவி! ஸாரி...

பரிசல்காரன் said...

பக்கிலூக் மொத தடவையா வந்திருக்காரு. வாலும் வந்தாச்சு. இன்னும் ரெண்டு பேரைக் காணோமே..

VEYILAAN said...

மொக்கைச்சாமி என்ற சின்னச்சாமிக்கு வாழ்த்துக்கள்!!!!!!!

அதிஷா said...

வாழ்த்துக்கள் பரிசல் அண்ணா!!

சிம்பா said...

தல சொல்லவே இல்ல. ஜூ.வி வரை போய்டீங்கலாமே. உண்மையா ரொம்ப சந்தோசமா இருக்கு. இதுக்கு எப்போ பார்ட்டினு சொல்லுங்க.

ஆமா இப்படி கூட பதிவு போடலாமா... உங்க கிட்ட இருந்து நிறையா கத்துக்கணும்.

Subash said...

//எனக்கு தமிழிஷ் மேல கடுப்பா இருக்கு. ஒரு கள்ள ஓட்டுக் கூட போற போக்குல போட முடியல:(:(:(பெருசா வந்துட்டீங்க ஓட்டு கேட்டு, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................//

hehehehehehehe

Subash said...

G V க்கு வந்ததில் மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்

R A J A said...

//அவரோட வாழ நினைத்தால் வாழலாம் புத்தகம் என்னோட வாழ்க்கைல மறக்க முடியாத ஒரு புத்தகம். ..................அப்பறம் அவரோட பல புத்தகங்களை தொடர்ந்து வாசிச்சேன். //
"வாழ நினைத்தால் வாழலாம்" படித்ததில்லை ஆனால் 8 ஆண்டுகளுக்கு முன்பு ருத்ரனின் "தேவைகள் ஆசைகள்" என்கின்ற புத்தகம் படித்திருக்கிறேன். ஏனோ அவ்வளவாக ஈர்க்கவில்லை. அது மட்டும் அல்லாமல் சரியாக புரியவும்மில்லை.

Pondy-Barani said...

very nice sir

K.Ravishankar said...

புரியலையா? ஒரே ஒரு ஊரிலே அதிஷா என்ற ஒருத்தர் இருந்தார்
.அவர்க்கு கடிதம் எழுதினேன் .அந்த கடிதத்தை அவர் பதிவில் போட்டார் "வாசகர் கடிதம்" .என்ற தலைப்பில் .அதற்க்கு நீங்களும் மறு மொழி போட்டிர்கள்.அதற்க்கு நானும் மறுமொழி போட்டேன் .மறுமொழிக்கு மறுமொழி வரவில்லை . வருத்தம் ஆகி போச்சு .

Busy said...

நன்றிக்கு ஒரு பதில் நன்றி. :)

Thanks Anna!!!

coolbaby said...

ungalala mattum eppadi ippdi ellam yosika mudiyuthu?

kurinji said...

valkavazhlamudan