Showing posts with label blooggers meet. Show all posts
Showing posts with label blooggers meet. Show all posts

Thursday, October 2, 2008

பரிசல்காரனுடன் ஒரு சந்திப்பு


(மகேஷ்)


துக்ளக் மகேஷ்

நான் சிங்கப்பூரிலிருந்து வந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் நெருங்கிவிட்டது. நேற்று (01.10.08) காலை கோவையில் இருந்து திருப்பூர் போய் வெயிலான், பரிசல்காரன், சாமிநாதன் ஆகிய பதிவர்களை சந்திக்கலாம் என்று புறப்பட்டேன். கிளம்பும்போதே பரிசலைத் தொடர்பு கொண்டபோது, வெயிலான் என்னை வந்து பிக்கப் செய்து கொள்வார் என்றும் நேராக ஹோட்டலுக்கு வந்துவிடுங்கள் என்றும் கூறினார். ஆனால் மனுஷன் வெயிலானின் நம்பரை எனக்குக் கொடுக்கவே இல்லை. பின் நான் எப்படி வெயிலானை அழைக்க?

வெயிலான்

பரிசல்காரன் அழைத்து, மகேஷ் இன்னும் கொஞ்ச நேரத்தில் மகேஷ் புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கப்போகிறார் என்று சொன்னதுமே நான் கிளம்பிப் போனேன். பாதிதூரம் போகும்போதுதான் அவர் எனக்கு மகேஷின் நம்பர் கொடுக்காதது ஞாபகத்துக்கு வந்தது. இன்றைக்கு ஞாபகமறதி பற்றி பதிவு போட்டுவிட்டு மனுஷன் அதுக்குத் தகுந்த மாதிரியே நடந்து கொள்கிறாரே என்று நினைத்தேன். பிறகு கூப்பிட்டு கேட்டபோது, “உங்க நம்பரை மகேஷ் கிட்ட குடுத்துட்டேன்”ன்னு சொன்னாரு. ஓக்கேன்னு போனேன்.

சாமிநாதன் (ஈரவெங்காயம்)

பரிசல் என்னை மறந்துட்டார் போல. நானா கூப்பிட்டப்புறம் “இன்னும் கொஞ்ச நேரத்துல எம்.கே.எம்.ஹோட்டல்ல இருப்பாங்க. போங்க” என்று சொன்னார். சரி என்று கிளம்பிப்போனேன். அங்கே வெயிலானும், மகேஷும் காத்திருந்தார்கள்.




(வெயிலான், சாமிநாதன் , மகேஷ்)






(வெயிலான், சாமிநாதன், பரிசல்காரன், மகேஷ்)

மகேஷ்


வெயிலான் வந்து என்னை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்குப் போய், சாமிநாதனையும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம். பரிசல்காரனைக் கூப்பிட்டபோது ‘இதோ வந்தாச்சு. இப்போ வந்துடுவேன்’ என்று சமாளித்துக் கொண்டே இருந்தார். மனுஷன் வரவே இல்லை! வெயிலான் சொன்னார், “இண்டியன் ஸ்டாண்டார்ட் டைம் மூணுக்கு வருவாரு” என்று. அப்போது மணி ரெண்டுதான் ஆகியிருந்தது. நானும் வெயிலானும் சாமிநாதனும் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு சாப்பிட ஐட்டங்களை (லஞ்ச் ஐய்ட்டம்ங்க!) ஆர்டர் செய்தோம்.

வெயிலான்

பரிசல் வர எப்படியும் இன்னும் ஒரு மணிநேரமாகும் என்று தெரிந்துவிட்டது. வேலன் அண்ணாச்சியோடு செல்ஃபோனில் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் டேபிளுக்குப் பின்னால் ஒருத்தருக்கு என்ன பிரச்சினையோ, ஃபோனில் யாரையோ போட்டு வாட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அதைக் கொஞ்ச நேரம் ரசித்துக் கொண்டிருந்தோம். ஃப்ரைடு ரைஸ், தயிர்சாதம் ஆர்டர் செய்தோம்.









(வெயிலான், பரிசல்காரன், மகேஷ்)




மகேஷ்

இருங்க வெயிலான்.. இனி பூரா நானே சொல்றேன்....


சரியாக மணி மூன்றை நெருங்கும்போது பரிசல்காரன் வந்தார். வருவது பரிசலா, ஏதாவது சினிமா ஸ்டாரா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. அவ்வளவு அழகாக இருந்தார். இதையெல்லாம் எழுதினால் அவருக்குப் பிடிக்காது என்பதால் மேற்கொண்டு அவரது அழகைப் பற்றியெல்லாம் எழுதவில்லை. வந்ததும் தாமதத்திற்கு மன்னிக்கவேண்டினார். வந்து உட்கார்ந்ததுமே திருப்பூரில் சிம்பா என்றொரு பதிவர் வர இருந்ததாகக் கூறினார். மறுபடி மறுபடி அவருக்கு ஃபோன் போட்டுக் கொண்டிருந்தார். நாட் ரீச்சபிளாக இருந்தது. அவரிடம் வேறு ஏதோ கதை சொல்லியிருந்தார் பரிசல். ‘அவரு வந்திருந்தா கொஞ்ச நேரம் ஓட்டியிருந்திருக்கலாம்’ என்று புலம்பிக் கொண்டே இருந்தார். ஹூம்! இதே பொழப்புதான் போல என்று நினைத்துக் கொண்டேன்!

பரிசலும் சரி, வெயிலானும் சரி என்னோடு இருந்த நேரத்தில் பாதிநேரம் ஃபோனில் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். திருப்பூர் வாழ்க்கை எவ்வளவு பிசியாக இயந்திரத்தனமாக இருக்கிறது என்பது புரிந்தது. நான் கிளம்பும் அவசரத்தில் பரிசலுக்காக கொண்டு வந்திருந்த கிஃப்டை (பிளாட்டினம் கொஞ்சம் விலை கம்மி சிங்கப்பூரில்) எடுத்துவர மறந்துவிட்டேன். அதை போஸ்டில் அனுப்பவேண்டும். அட்ரஸ் வேறு கேட்க மறந்துவிட்டேன். மெயிலில் அட்ரஸை அனுப்பு பரிசலைக் கேட்டுக் கொள்கிறேன்.



(பட்டைச்சாராய வகுப்பை சாமிநாதன் நடத்திக் கொண்டிருந்தபோது ரசித்துக் கொண்டிருந்த மகேஷும், பரிசல்காரனும்)

சாமிநாதன் ‘ஈரவெங்காயம்’ என்ற பெயரில் எழுதிவருவது தெரியும். ஆனால் அவருக்கு வேறு பல விஷ்யங்களும் தெரிந்திருக்கிறது. அவினாசி அருகே வைக்கப்புல்லிலிருந்து பீர் எப்படித் தயாரிக்கிறார்கள், உடுமலை அருகே கருவேலமரத்திலிருந்து பட்டைச் சாராயம் எப்படித் தயாரிக்கிறார்கள் என்றெல்லாம் அழகாக விளக்கினார். அதுவும் பட்டைச் சாராயத்தின் புளிப்பு போக என்ன செய்வார்கள் என்று அவர் சொன்னது... உவ்வேஏஏஏஏஏ..

அதெல்லாம் கூடப் பரவாயில்லை. காங்கேயம் அருகே ஒரு கிராமத்துல காபரே பெண்களைக் கூட்டிவந்து, மக்காச்சோளக் காட்டுக்கு நடுவே சதுரமாக வெட்டிவிட்டு பெரிய மனுஷங்க எல்லாரும் நடுவுல உட்கார அந்தப் பெண்களை ஆடவிட்டு அப்புறமா.....

வேணாம் விடுங்க. இதை எழுதவே முடியாதுன்னு பரிசல் சொல்லீட்டதால நான் எழுத வேண்டியதாச்சு!







(காபரே அழகிகள் பற்றி சாமிநாதன் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தபோது...)


சந்திப்பு நாலரை மணிக்கு முடிஞ்சு வெயிலான் கிளம்ப, நான், பரிசல், சாமிநாதன் ஒரு காஃபி சாப்பிட்டுட்டு, பரிசல் என்னை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு கிளம்பினார். இனியதொரு நினைவுகளோடு திருப்பூருக்கு விடை சொல்லிப் பஸ் ஏறினேன் நான்.