Monday, August 25, 2008

இந்தியன் கிரிக்கெட்டும், வலைப்பதிவர்களும்

நம்ம இந்தியன் கிரிக்கெட் டீம் ஒரு மேட்ச்ல ஜெயிக்கறதும், ஒரு மேட்ச்ல தோக்கறதும்ன்னு விளையாடிட்டு இருக்காங்க. நம்ம ஆளுக எப்ப ஜெயிப்பாங்க, எப்ப தோப்பாங்க, ஏன் ஜெயிக்கறாங்க, ஏன் தோக்கறாங்க-ங்கறது புரியாத புதிர்!


ஒரு வேளை நம்ம பதிவுலக பெருந்தலைகள் டீம்ல இருந்து, தொடர்ச்சியா சில மேட்ச் தோத்தா அவங்களுக்கு என்ன மாதிரி வார்னிங் மெய்ல் பி.சி.சி.ஐ-லேர்ந்து வரும்?


ஒரு கற்பனை:-

******************

லக்கிலுக்:

நல்ல ஸ்டார் பேட்ஸ்மேன் நீங்க. அடிக்கடி ‘கிட்னி கார்ட் மாத்தணும், ஜட்டி கிழிஞ்சிடுச்சு, ட்ரவுசர் கிழிஞ்சிடுச்சு’ன்னு பெவிலியன் போறது நல்லால்ல. அதே மாதிரி அடிக்கடி அதிஷா கூட ஷகீலா படம், சோனா படம்ன்னு போய் கன்செண்ட்ரேஷனை குறைச்சுக்கறீங்க.


கோவி.கண்ணன்:

நீங்க திடீர் திடீர்னு லக்கிலுக் அடிச்ச ஷாட்டையே ரிபீட் பண்ணி அவரை வம்புக்கு இழுக்கறீங்க. அதேமாதிரி அடிக்கடி பேட்ஸ்மேன் சந்திப்பு நடத்தி உங்க ப்ராக்டீஸை மிஸ் பண்றீங்க. சிங்கப்பூர்ல மேட்ச் நடந்தப்போ தேவதர்ஷினி, தீபாவெங்கட்டை நீங்க பார்க்கப் போனதுக்கு புகைப்பட ஆதாரம் இப்போ மீடியா கையில சிக்கீருக்கு!


முத்துலெட்சுமி-கயல்விழி

என்ன மேடம் நீங்க. உங்க நம்பர் 11. தென்னாப்பிரிக்காவுல ஒருத்தருக்கு இதே நம்பர் இருக்குன்னு பின்னாடி இருக்கற ஒண்ணை முன்னாடியும், முன்னாடி இருக்கற ஒண்ணை பின்னாடியும் போட்டுக் குடுங்கன்னு கோவிச்சுட்டு சரியா விளையாடலைன்னா எப்படி? எப்படிப் போட்டாலும் உங்களை ரசிகர்களுக்குத் தெரியாதா என்ன?


SP.VR.சுப்பையா:-

சார்.. நீங்க விளையாடத்தானே வந்திருக்கீங்க. அடிக்கடி அம்பயர்கிட்ட போய் பேசீட்டே இருந்தா எப்படி? கோவைல நடந்த மேட்ச்ல நீங்களும், அம்பயரும் ரொம்ப சுவாரஸ்யமா பேசீட்டே இருந்ததுல ஒரு மணிநேரமா மேட்ச் நின்னதுகூட உங்களுக்கு தெரியல. பேசாம... இல்லல்ல.... பேசீட்டே நீங்க வர்ணணையாளரா வந்துடுங்க!


ச்சின்னப்பையன்:

எப்பப்பார்த்தாலும் விளையாடற எல்லாரும் மென்பொருள் நிபுணரானால் என்ன பண்ணுவாங்க-ன்னு சிந்திச்சுட்டே இருக்கீங்க நீங்க. பொழுது போகலைன்னா என்ன பண்றதுன்னு கலவை வேற உங்களுக்கு. ஏதாவது சொல்லீட்டா பெவிலியனைப் பார்த்து முதுகுகாட்டி ஃபோட்டோ எடுத்துட்டு `என் பின்னாடி ஃபுல் க்ரவுடும் இருக்குன்னு மிரட்டறீங்க.


சென்ஷி:

என்ன சொல்றது? வர வர நீங்க மேட்ச்சுக்கே வர்றதில்ல. அப்பப்ப தண்ணி கொண்டுவந்து குடுத்துட்டு போயிடறீங்க. இப்பல்லாம் 5, 10 ன்னு ரன் அடிச்சாலும் க்ளாஸிக் ஷாட்டாதான் அடிக்கறீங்க. ஆனா அடிச்சு ஆடறதில்ல!


மங்களூர் சிவா:

நீங்க தனியா ரன் எடுக்கணும் சிவா. உங்களுக்கு முன்னாடி விளையாடறவங்க ரன் எடுக்கறப்ப `ரிப்பீட்டேய்’ன்னு கத்திட்டே இருக்கறதால உங்களுக்கு ஸ்கோர் கார்டுல ரன் ஏறாது.நாமக்கல் சிபி:

நல்ல ப்ளேயர்தான் நீங்க. ஆனா சமீபகாலமா நயன்தாரா கூட அடிக்கடி வெளில சுத்தறதா மீடியால பேச்சு வருது. பார்த்து நடந்துக்கோங்க.


வால்பையன்:

முதல்ல மாதிரி நைட் பார்டீஸ் இப்ப இல்லன்னு கேள்விப்பட்டோம். நல்லது. ஆனா, க்ரவுண்டல லக்கிலுக்கைப் பார்த்து ‘நான் ஷாட் அடிச்சப்போ ஏன் கைதட்டலை?’ன்னு அவரை வம்புக்கு இழுக்கறது நல்லால்ல.


குசும்பன்:

ரொம்ப குசும்பு ஜாஸ்தியாயிருச்சு உங்களுக்கு. எங்களையே கிண்டல் பண்ணி கார்ட்டூனெல்லாம் போடறீங்க.


தமிழன்;

எல்லா மேட்சுக்கும் போயி நல்லா கைதட்டுறீங்க. உங்க சொந்த க்ரவுண்ட்ல மேட்ச் நடக்கறப்ப ஏனோ சோகமாவே இருக்கீங்க. என்ன சொல்றதுன்னே தெரியல.


தமிழ்பிரியன்:

மேட்சுக்கு முன்னாடி தேசிய கீதம் பாடறப்ப யார் யார் கூடப் பாடறாங்கன்னு கவனிச்சுட்டு, கவலைப் பட்டுட்டே இருக்கீங்க. அதனால உங்க விளையாட்டுல கவனம் கம்மியாய்டுச்சு! அதுவும் கவலைகள் இப்போல்லாம் உங்களுக்கு கலவையா வருது!


நிஜமா நல்லவன்:

போன மேட்ச்சுக்கு அப்புறம் ‘எல்லாரும் நல்லா விளையாடினாங்க. நானும் ஏதோ விளையாடினேன். இனிமே வர்ல’ன்னு ரிட்டயர்மெண்ட் அறிவிக்கறீங்க. முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். இதுவரைக்கும் உங்ககிட்டேர்ந்து விளக்கம் வர்ல. இது சரியில்ல. அடுத்த மேட்ச்ல இறங்கி விளையாடலைன்னா ரசிகர்கள் கோவத்துக்கு ஆளாய்டுவீங்க.


பரிசல்காரன்:

நல்லா விளையாடீட்டு இருக்கறப்ப ‘எல்லா பாலையும் அடிச்சு ஆடாதீங்க, டிஃபென்ஸும் பண்ணுங்க’-ன்னா பேட்டைப் போட்டுட்டு பெவிலியன் வந்துடறதா? அதேமாதிரி ஃபேமிலியை காலரில உக்கார வைங்க.. அடிக்கடி அவங்களை பிட்சுக்குள்ள கூட்டீட்டு வரக் கூடாது.

38 comments:

கோவி.கண்ணன் said...

//நம்ம ஆளுக எப்ப ஜெயிப்பாங்க, எப்ப தோப்பாங்க, ஏன் ஜெயிக்கறாங்க, ஏன் தோக்கறாங்க-ங்கறது புரியாத புதிர்!//

ரஜினி படத்துக்கே இந்த நிலமைதான் !
:)

புதுகை.அப்துல்லா said...

அப்பாடி! நா எஸ்கேப்ப்ப்ப்ப்பு!

:)

Athisha said...

பூண்டி முருகா ...

இந்தாளுக்கு நல்ல புத்தி குடுரா....

Athisha said...

திங்கள் கிழமை காலைலயே பல பேரு டவுசர கிழிச்சு

ஏன் இந்த கொலைவெறி

Thamiz Priyan said...

பரிசலுக்கான நோட்டீஸூல், பாரதிக்கான நோட்டிஸூம் ஜோர்!

Thamiz Priyan said...

///அதிஷா said...
திங்கள் கிழமை காலைலயே பல பேரு டவுசர கிழிச்சு
ஏன் இந்த கொலைவெறி///
ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

Thamiz Priyan said...

///நாமக்கல் சிபி:
நல்ல ப்ளேயர்தான் நீங்க. ஆனா சமீபகாலமா நயன்தாரா கூட அடிக்கடி வெளில சுத்தறதா மீடியால பேச்சு வருது. பார்த்து நடந்துக்கோங்க.///
தள! இப்படியாவது சந்தோசமா இருக்கட்டும். விடுங்கப்பா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)) 11 நல்லாருக்கே .. என்னை எல்லாருக்கும் தெரியும் என் பதிவை ஆயிரம் பேர் படிக்கிறாங்கன்னு எல்லாம் நான் பெரிய எழுத்தாளர்கள் மாதிரி மனக்கோட்டை கட்டுவதில்லை அண்ணா.

.. அது என்ன பெருந்தலைகள் வரிசையில் என் பேரு புரியலயே.நீங்க புதுசா வந்தா என்னை லிஸ்ட்ல சேர்த்துடறதா?

\\அதேமாதிரி ஃபேமிலியை காலரில உக்கார வைங்க.. அடிக்கடி அவங்களை பிட்சுக்குள்ள கூட்டீட்டு வரக் கூடாது.//
:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிபிக்கு எழுதினது சூப்பர்.

ஜோசப் பால்ராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு
சிரிச்சுக் கிட்டே இருக்கேன்.

ஆயில்யன் said...

:))))))

Mahesh said...

நல்ல வேளை... நானெல்லாம் இப்பொதான் லீக் ஆடிக்கிட்டுருக்கேன்.... இல்லாட்டி எனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கும்... திண்டல்மலை முருகந்தான் காப்பாத்தினான்...

மரியாதயா வவுத்துப் புண்ணுக்கு மாத்திரை சொல்லீருங்க...

குசும்பன் said...

லக்கி கற்பனை செம கலக்கல்:))

KARTHIK said...

:))))))))

வந்தியத்தேவன் said...

ரஜனி ரசிகன்: இந்திய டீமுக்கு எதிராக விளையாடும் அணிக்கு குசேலன் படத்தைப்போட்டுக்காட்டுங்கள் பட்டையைக் கிளப்புவார்கள் இந்தியன் டீம்.

வந்தியத்தேவன் said...
This comment has been removed by the author.
ரமேஷ் வைத்யா said...

மென்பொருள் நிருபர்!

பரிசல்காரன் said...

@ கோவி. கண்ணன்

ரஜினியை விடவே மாட்டீங்களா நீங்க?

@ விஜய் ஆனந்த் & அப்துல்லா

நன்றி!

@ அதீஷா
உங்களுக்கும் டவுசர் ப்ராப்ளமா?

@ தமிழ் பிரியன்

மொதல்ல நீங்க ப்ரோபைல் படத்தை மாத்துங்க. சின்னப்போ எடுத்தத போட்டு ஊரை ஏமாத்தீட்டு..

Jaisakthivel said...

மிக லேட்ட்டான திருமண நாள் வாழ்த்துகள்

-சக்தி

பரிசல்காரன் said...

@ முத்து தங்கச்சி

// என்னை எல்லாருக்கும் தெரியும் என் பதிவை ஆயிரம் பேர் படிக்கிறாங்கன்னு எல்லாம் நான் பெரிய எழுத்தாளர்கள் மாதிரி மனக்கோட்டை கட்டுவதில்லை அண்ணா.//

அதுசரி.. அப்ப அவங்க அப்படி நினைக்கறது மனக்கோட்டை-ங்கறீங்களா?
நூறு படம் டைரக்ட் பண்ணின ராமநாராயனனைவிட `அவள் அப்படித்தான்' ருத்ரையா சில விஷயங்கள்ல பிரபலம்!

@ ஜோசப் பால்ராஜ்

சீக்கிரம் சிரிச்சு முடிங்க.

@ ஆயில்யன்

நன்றி!

சென்ஷி said...

ஹா..ஹா..ஹா.. செம்ம கலக்கல்.. எனக்கு லக்கி, ஆசானை கலாய்ச்சது ரொம்ப பிடிச்சுருக்குது.

கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க தலைவா.. பழையமாதிரியே வந்துடறேன்... :)

சென்ஷி said...

//வானொலி said...
மிக லேட்ட்டான திருமண நாள் வாழ்த்துகள்

-சக்தி
//

ரிப்பீட்டே :)

சென்ஷி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
:)) 11 நல்லாருக்கே .. என்னை எல்லாருக்கும் தெரியும் என் பதிவை ஆயிரம் பேர் படிக்கிறாங்கன்னு எல்லாம் நான் பெரிய எழுத்தாளர்கள் மாதிரி மனக்கோட்டை கட்டுவதில்லை அண்ணா.

//

அக்கா.. நீங்க சாருவை சொல்லலையே :)

சென்ஷி said...

ஹப்பாடி மறுபடி 25 :)

Thamira said...

அதிஷா : //காலைலயே பல பேரு டவுசர கிழிச்சு, ஏன் இந்த கொலைவெறி//
ரிப்பீட்டேய்..
தமிழுக்கு பரிசல் ://மொதல்ல நீங்க ப்ரோபைல் படத்தை மாத்துங்க. சின்னப்போ எடுத்தத போட்டு ஊரை ஏமாத்தீட்டு//

அப்படியே விளம்பரம் போட்டுக்கறேன், கண்டுக்காதீங்க பரிசல்.! (இல்லேன்னா கூட்டம் வரமாட்டேங்குதுபா..)

"வடை ரெடி"

பரிசல்காரன் said...

@ மகேஷ்

உங்களுக்கு வேற வருது...

@ குசும்பன்

என்ன இன்னைக்கு மூடு சரியில்லையா?

நன்றி கார்த்திக்..

@ வந்தியத்தேவன்

எத்தனை நாளா இந்தக் கெட்ட எண்ணம்?

@ விடமாட்டேன்

மாத்தீட்டேன் நண்பரே! சாரி!

@ வானொலி..

எனக்கு லேட்ட திருமணமாகலியே.. ரொம்ப எர்லியா ஆயிடுச்சு!

@ சென்ஷி

//கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க தலைவா.. பழையமாதிரியே வந்துடறேன்... :)//

அதுக்குத் தானே அப்பப்ப இப்படி கலாய்க்கறேன்..

@ தாமிரா ..

அய்யய்யோ... உங்களுக்கு ஒரு மேட்டர் எழுதணும்ன்னு நெனைச்சிருந்தேன்.. மிஸ் ஆயிடுச்சு......

சின்னப் பையன் said...

காலங்கார்த்தாலே என்ன இந்த கொலவெறி....

சின்னப் பையன் said...

சூப்பரா இருக்கு.... சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.... :-)))))

சின்னப் பையன் said...

என்ன இருந்தாலும், மன்றத்தின் பொருளாளரை நீங்க விட்டிருக்கக்கூடாது... நான் எதிர்பார்த்த இன்னொருவர்... வெண்பூ....

பரிசல்காரன் said...

//ச்சின்னப் பையன் said...

என்ன இருந்தாலும், மன்றத்தின் பொருளாளரை நீங்க விட்டிருக்கக்கூடாது... நான் எதிர்பார்த்த இன்னொருவர்... வெண்பூ....//

ரெண்டு மூணு பேரோடது மிஸ் ஆகிடுச்சு நண்பா,,

வெண்பூ-க்கு நான் நெனைச்சு வெச்சிருந்தது...

வெண்பூ:-

நீங்க அப்பப்ப ச்சின்னப்பையன் வீட்டு க்ரவுண்ட்ல போய் வால்பையன்கூட சேர்ந்து செஞ்சுரியெல்லாம் அடிக்கறீங்க.. ஆனா உங்க ஹோம் க்ரவுண்ட்ல ப்ராக்டீஸ் பண்ற நேரம் கம்மியாய்ட்டே வருது”

Mahesh said...

அவ்வ்வ்வ்.... நீங்க சும்மாத்தான் இருந்தீங்களா... நாந்தான் வாயக் குடுத்துட்டனா.... இருந்தாலும் அந்த திண்டல் மலை முருகன்......

தமிழன்-கறுப்பி... said...

சூப்பரு...:)

தமிழன்-கறுப்பி... said...

லக்கி அண்ணனுக்கு கலக்கல் கமன்ட்...

தமிழன்-கறுப்பி... said...

தள சிபியை கலாய்ச்சுட்டிங்க :)

(சரிதான் இப்பல்லாம் அவரு கலாய்க்கறது ரொம்ப குறைஞ்சிடுச்சு)

தமிழன்-கறுப்பி... said...

\
தமிழன்;
எல்லா மேட்சுக்கும் போயி நல்லா கைதட்டுறீங்க. உங்க சொந்த க்ரவுண்ட்ல மேட்ச் நடக்கறப்ப ஏனோ சோகமாவே இருக்கீங்க. என்ன சொல்றதுன்னே தெரியல.
\

அட நாமளும் இருக்கோமா...!

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\
///நாமக்கல் சிபி:
நல்ல ப்ளேயர்தான் நீங்க. ஆனா சமீபகாலமா நயன்தாரா கூட அடிக்கடி வெளில சுத்தறதா மீடியால பேச்சு வருது. பார்த்து நடந்துக்கோங்க.///
தள! இப்படியாவது சந்தோசமா இருக்கட்டும். விடுங்கப்பா!
\


ரிப்பீட்டு...:))

செல்வ கருப்பையா said...

சூப்பரா இருக்குங்க...;-)

வால்பையன் said...

பதிவுலக நடுவர்கள்!

டோண்டு சார்! -ன்னு கேட்டா அவுட்டா இல்லையான்னு சொல்லுங்க!
நீ கேள்வி கேட்ட்ருக்க என் ப்ளாக்குல பதிலா பாத்துக்கோன்னு சொல்லக்கூடாது.


தருமி சார் - விளையாட்டுல அவுட்டா இல்லையான்னு மட்டும் சொல்லுங்க சார்!
அவரோட தமிழ் உச்சரிப்பு சரியில்லை அதானால அவுட்டுன்னு சொல்லக்கூடாது