Wednesday, August 6, 2008

இரு கவிதைகள்

அவன் இப்படித்தான்
சங்கீதத்தில் பரிச்சயமில்லை
குழந்தைகளின் சிரிப்பு
போதுமவனுக்கு.

வேறெந்த மொழியும்
கற்றுக் கொள்ளவில்லை
மழலையைத் தவிர்த்து.

ஓட்டத்தில் வீரனில்லை
குழந்தை தத்தி நடக்கையில்
தோற்பவன் அவன்

வலிமையின் பலமறியாதவன்
பிஞ்சுக் கைகளில்
புதைந்திருப்பான்

எந்தக் கன்னியர் கண்களும்
தராத போதையை -ஒரு
குழந்தையின் பார்வை
கொடுக்கும் அவனுக்கு.

பெருமழையில்
நனையும் மகிழ்ச்சி
குழந்தை அவனை
நனைக்கையிலும்
உணர்வானவன்.

கொதிக்கும் கனலை
மிதித்தும் அவன்
மெய்யறியா வலி
குழந்தையின் கண்ணீரால்
அவன் மனமுணரும்

இறந்தபின் சொர்க்கமா
என்ற கவலைகள்
அவனுக்கில்லை
இருக்கும்போதே
குழந்தைகளைக்
கொண்டாடுபவனவன்.

****************************

பேருந்து நாட்களில்...

பலமணி நேரம் காத்திருந்து
பஸ் வர, பின்னால் ஓடி
கம்பி பிடித்துத் தொற்றி
கர்ச்சீப் போட்டு
கூட்டம் நெருக்கி
சட்டை கசங்க
போட்ட சீட்தேடி
அமர்ந்து
பெருமூச்சு விடுகையில்...

கண்ணில் நுழைந்து
இதயத்தை உருக்குகிறது
கர்ப்பிணிப் பெண்ணொருத்தி
சீட்தேடி அலையும் காட்சி.

42 comments:

பரிசல்காரன் said...

குறிப்பிட மறந்துவிட்டேன்..

முதல் கவிதை
நண்பர் அதிஷா-வுக்கு
சமர்ப்பணம்!

ஜெகதீசன் said...

கவிதைகள் கலக்கல்...
குழந்தைகளும் சூப்பர்...
கவிதைகள் இரண்டல்ல... நான்கு...
:)

விஜய் ஆனந்த் said...

சூப்பர் !!!!

ரெண்டு கவிதயும் ட்ட்டச் பண்ணிடிச்சி!!!!

விஜய் ஆனந்த் said...

// ஜெகதீசன் said...
கவிதைகள் கலக்கல்...
குழந்தைகளும் சூப்பர்...
கவிதைகள் இரண்டல்ல... நான்கு...:) //

மறுக்கா கூவிக்கிறேன்!!!

ஜோசப் பால்ராஜ் said...

குழந்தைகள் என்றால் ஏறக்குறைய எல்லோரும் அப்படித்தான் ஆகிவிடுவார்கள். நானும் அப்டித்தான்.

எங்க வீட்டு வாண்டுக்கள் எல்லாம் நான் வீட்டில் இருந்தால் என்னைதவிர வேறுயாரிடமும் செல்லமாட்டார்கள்.

ஆயில்யன் said...

இரு கவிதைகளுமே அருமை !

//கண்ணில் நுழைந்து
இதயத்தை உருக்குகிறது
கர்ப்பிணிப் பெண்ணொருத்தி
சீட்தேடி அலையும் காட்சி.//

:(

அதிஷா said...

முதல் கவிதைக்கு

;-))

இரண்டாவது கவிதைக்கு

;-(( , தலைவா அசத்தல் கவிதைங்க

அதிஷா said...

\\
முதல் கவிதை
நண்பர் அதிஷா-வுக்கு
சமர்ப்பணம்!
\\
இதுக்கு பேருதான் கொ.வெ.க

babu said...

மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
//கண்ணில் நுழைந்து
இதயத்தை உருக்குகிறது
கர்ப்பிணிப் பெண்ணொருத்தி
சீட்தேடி அலையும் காட்சி.//
கர்ப்பிணி பெண்களுக்கு சீட் கொடுப்பதில் பெண்களை விட ஆண்கள் முதலில் முன்வருவார்கள் .கவனித்திருக்கிறீர்களா?

Sen22 said...

நல்லா இருக்குங்க கவிதைகள் (போட்டோவையும் சேர்த்து)...

பரிசல்காரன் said...

@ ஜெகதீசன்

அந்தப் படத்தை போட்டதால்தான்
தலைப்பு அப்படி வெச்சேன்!

@ விஜய் ஆனந்த்

நன்றி நண்பா..

@ ஜோசப் பால்ராஜ்

அட... அப்படியா!மகிழ்ச்சி!

@ ஆயில்யன்

எந்த இரு கவிதைகள்?
படத்தில் தெரிவதா...
எழுத்தில் தெரிவதா?

நன்றி!

@ அதிஷா

நேத்து உங்ககிட்ட ச்சாட்'னதால உருவான கவிதை முதல் கவிதை!

//இதுக்கு பேருதான் கொ.வெ.க//

என்னாதிது?

@ babu

//கர்ப்பிணி பெண்களுக்கு சீட் கொடுப்பதில் பெண்களை விட ஆண்கள் முதலில் முன்வருவார்கள் .கவனித்திருக்கிறீர்களா?//

அதுதானே நியாயம்? அவனால்தானே பெண்ணுக்கு அந்த நிலைமை?

சதீசு குமார் said...

வணக்கம் பரிசல்காரரே, இங்கேயும் உங்கள் கவிதை ஒன்றைக் கொடுக்க முடியுமா..

http://olaichuvadi.blogspot.com/2008/08/blog-post_05.html

வெண்பூ said...

அசத்திட்டீங்க தல. வாவ் சொல்ல வைத்த‌ அற்புதமான கவிதைகள்...

வெயிலான் said...

அவனவனுக்கு காட்டில், வீட்டில் கவிதை உருவாகும். உமக்குத்தான் சேட்டில் கவிதை உருவாகியிருக்கிறது.

படத்துக்கான கவிதையும்
கவிதைக்கான படமும்
இரண்டுக்குமான தலைப்பும்
அருமை! அருமை!

//இதுக்கு பேருதான் கொ.வெ.க//

இதுக்கு அர்த்தம் கொலை வெறிக் கவிதை

M.Saravana Kumar said...

// ஜெகதீசன் said...
கவிதைகள் கலக்கல்...
குழந்தைகளும் சூப்பர்...
கவிதைகள் இரண்டல்ல... நான்கு...
:)//

ரிப்பீட்டேய்.. ;)

VIKNESHWARAN said...

இரண்டாம் கவிதை டச்சிங்...

pithan said...

"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்"
கவலைகளையெல்லாம் மறக்கச்செய்யும் அருமருந்தல்லவா குழந்தைகளின் மழலையும் தளர் நடையும் குறும்புகளும்!

கவிதை 2-கொஞ்சம் சிக்கல்தான்; அதுவும் நெடுந்தூரப் பயணமாக இருந்தால்?

இன்னும் நிறையக் கிழியுங்கள்.
வாழ்த்துகள்.

பரிசல்காரன் said...

@ சதீசு குமார்

காலி நிழற்குடைக்கான கவிதை, விரைவில் தருகிறேன் நண்பா..

@ வெண்பூ

நன்றி பார்ட்னர்!

@ வெயிலான்

//அவனவனுக்கு காட்டில், வீட்டில் கவிதை உருவாகும். உமக்குத்தான் சேட்டில் கவிதை உருவாகியிருக்கிறது.//

காட்டிலா? ஒ! டாப்சிலிப் போனப்ப உங்களுக்கு வந்துதா? (கவுஜ..)

//இதுக்கு அர்த்தம் கொலை வெறிக் கவிதை//

அதெல்லாம் தெரியற அளவுக்கு வளந்துட்டேன் நண்பா.. நான் கேட்டது, அவருக்கு சமர்ப்பணம் பண்ணினத எதுனால இப்படிச் சொல்றாருன்னு தான்!

"என்னாதிது.. நல்லாயில்லைங்கறீங்களா?" என்ற அர்த்தத்தில..

@ சரவணகுமார்

நன்றி சரவணா..

@ விக்கி...

நன்றி நண்பா..

@ பித்தன்

கிழிக்கறேன்!

Poonai kutty said...

பரிசல் கார அண்ணே.. கூகிள் தமிழ் Translater லிங்க் குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்.
கூகிள் தினமும் 1000 தடவ use பண்ணினாலும், தமிழ் டைப் ஆப்சன் பக்கம் எல்லாம் எட்டி பாத்ததே இல்லே.

லாஸ்ட் சண்டே உங்க ப்லோக் பாத்தேன். கிட்டததட்ட நீங்க எழுதுன எல்லா பதிவையும் படிச்சுட்டேன். Feedback போடாததுக்கு மன்னுச்சுக்குங்க. இன்னிக்கு தான் முதல் முதலா தமிழ் டைப் பண்ண கதுக்குட்டு உங்களுக்கு Feedback போடறேன்.

ரொம்ப நல்லா intersting ஆ எழுதறீங்க.. எப்படி உங்களுக்கு திருப்பூர் ல இருந்துட்டு இவ்ளோ டைம் கிடைக்குது?. நானும் உங்க ஊர் தான்.. Tiruppur வொர்க் லைப் balance பத்தி தெரிஞ்சாதல கேக்குறேன்.

என்னையும் தமிழ் ல ப்லாக் எழுத வெச்சுட்டீங்க.. :-).

உங்க இந்த எழுத்து பணி தொடர என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முகுந்தன் said...
This comment has been removed by the author.
முகுந்தன் said...

//கண்ணில் நுழைந்து
இதயத்தை உருக்குகிறது
கர்ப்பிணிப் பெண்ணொருத்தி
சீட்தேடி அலையும் காட்சி.//

படிப்பவர் இதயத்தையும் தான் ...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

முதல் கவிதையில் 2, 7, 8 கவிதைப்பத்திகள் ரொம்பவே ரொம்ப்வே பிடிச்சது...

இராம்/Raam said...

பாஸ்,

Flickr'லே அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க.... உங்க போட்டோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு..

பரிசல்காரன் said...

@ பூனைக் குட்டி

மகிழ்ச்சி!

எங்க இருக்கீங்க?

ப்ரோபைல்ல மெய்ல் ஐ. டி. இருக்கு. போன் நம்பர் அனுப்புங்க.

மனம் திறந்த பாராட்டுக்கு, மனம் நெகிழ்ந்த நன்றிகள்!

@ முகுந்தன்

நன்றி நண்பரே!

@ முத்தக்கா

குறிப்பிட்டு சொன்னதற்கு தேங்க்சுங்க..

@ இராம்

அக்கவுண்ட் இருக்கு தோழரே.. என் வீட்டு இணையம் மிக ஸ்லோ.. அப்லோடு பண்ண லேட்டாகுது!. கூடிய சீக்கிரம் பண்றேன்..

பாராட்டுக்கு நன்றி!

ச்சின்னப் பையன் said...

கலக்கல் கவிதைகள்.... புகைப்படமும் அருமை... அசத்துங்க....

Anonymous said...

K K - ன்னா இனிமேல் கிருஷ்ண குமார் இல்ல - கலக்கல் கிருஷ்ணா.

பரிசல்காரன் said...

@ ச்சின்னப்பையன்

நன்றி CP!

@ வ.வேலன்

பட்டத்துக்கு நன்றிண்ணா!

அகரம்.அமுதா said...

/////கண்ணில் நுழைந்து
இதயத்தை உருக்குகிறது
கர்ப்பிணிப் பெண்ணொருத்தி
சீட்தேடி அலையும் காட்சி.////

வாழ்த்துகள் அய்யா உமக்கு!

Mahesh said...

அறுசுவை அறியாதவன்
மழலை மீதம் வைத்த சோற்றை
அமுதமென்பான்

ஹி....ஹி...நானும் கொஞ்சம் மானே தேனே போட்டுப் பார்த்தேன்....துப்பறவங்க துப்பலாம்....ஜூட்

Mahesh said...

தலைவரே....உங்களுக்குள்ள ஒரு வைரமுத்து வாடகை இல்லாம குடி இருக்காப்ல.....வாழ்த்துக்கள் !! நல்ல கவிதைக்கு ஒரு சின்ன "கவுஜ" வால் போட்டதுக்கு மன்னிக்கவும்....

Anonymous said...

ரொம்ப நல்லா எழுதுறீங்க. இப்ப தான் நான் தமிழ் பதிவுகளை படிக்க ஆரம்பிச்சுருக்கேன். உங்க பதிவுகளை தொடர்ந்து படிக்க வருவேன். முக்கியமா உங்களோட தமிழிலிள் அச்சடிக்க வழி சொன்னதுக்கு நன்றி.... சுந்தர்.

Anonymous said...

//இறந்தபின் சொர்க்கமா
என்ற கவலைகள்
அவனுக்கில்லை
இருக்கும்போதே
குழந்தைகளைக்
கொண்டாடுபவனவன்.//

சூப்பராயிருக்கு.
புதிதாக வந்திருக்கும் என்னையும் உங்கள் குளாமில் சேர்த்துக்கொள்ளவும். நன்றி

தமிழன்... said...

கவிதைகள் நல்லாருக்கு...

தமிழன்... said...

படத்தின் தரம் மற்றயவைகளோடு ஒப்பிடுகையில் ஏதோ குறைகிறது...

தமிழன்... said...

\\
இறந்தபின் சொர்க்கமா
என்ற கவலைகள்
அவனுக்கில்லை
இருக்கும்போதே
குழந்தைகளைக்
கொண்டாடுபவனவன்.
\\

இது அருமையான வரிகள்...!

தமிழன்... said...

குழந்தைகள் அழகு...!
ஆனா உங்க கமராவை கழுவுங்க...:)

கயல்விழி said...

அழகான கவிதைகள்

பரிசல்காரன் said...

பின்னூட்டமிட்ட எல்லாருக்கும் நன்றி!

ஹைசுபாஷுக்கு ஒரு ஹை!

ஒரு விஷயம் - முக்கியமாக தமிழனுக்கு.

அந்தப் புகைப்படம் அவுட் ஆஃப் போகஸ் ஆகவில்லை. அதை சில நகாசு வேலைகள் செய்து அப்படி ஒரு தோற்றத்தை கொண்டுவந்திருக்கிறேன். சில, பல காரணங்களுக்காக!

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Mahesh said...

அந்த "appendage" கவுஜ-ய கடிச்சு துப்புவீங்கன்னு பாத்தேன்....பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுட்டீங்க...நன்றி...(ஆமா "appendage" -க்கு தமிழ்ல என்ன?)

Ramjee Nagarajan said...

உங்கள் பேருந்து நாட்களில் கவிதை வெகு சிறப்பாய் அமைந்துள்ளது.

Ramjee Nagarajan said...

7 August 2008 நீங்கள் blur செய்து இருகிறீர்கள் என்பது தெரிகிறது. ஷுட்டெர் ஸ்பீடை வெகு குறைவாக வைத்திருந்தால் இதே வில் வித்தையை கேமரா மூலமாகவும் செய்யலாம், அழகாகவும் வரும்!