Thursday, May 15, 2008

குருவி - விமர்சனம்

May 15, 2008

ரொம்ப ரொம்ப ஆசையா குருவி ரிலீஸ் ஆன அன்னைக்கு நைட் ஷோ கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி, தரணி -விஜய் கூட்டணியாச்சே-ன்னு பொண்டாட்டிய வேற கூட்டிட்டு போனா…

ஏன்பா இவங்க படம் எடுத்த பின்னாடி , போட்டு பாக்க மாட்டாங்களா? கில்லில - கபடி , ATM-ல running race, இதுல car race - லேட்டா வந்து ஜெயிக்கறது - ஏன் சார் இந்த கொடும? சரி படமாவது கொஞ்சம் பெட்டரா பண்ணிருக்கலாமே சார்? நாங்க என்ன பாவம் பண்ணினோம்? எப்படி எடுத்தாலும் பாப்பாங்கடா - இவங்க ரொம்ப நல்லவங்க-டா"ன்னு எடுத்திருப்பாங்க போல!

ஏன் விவேக் சார், இந்த கொடும நமக்கு வேணாம்னு தானே பாதி படத்துல நீங்க கழண்டுட்டீங்க? சரி நாமளும் அந்த மாதிரி போலாம் -னு interval ல கேட்டா, வெளிய விட மாட்டீனுட்டாங்க!

தரணி சார், ஒரு வேளை ரொம்ப tension-ஆகி தொலையுது -ன்னு படம் எடுத்தீங்களா? வேண்டாம் சார், ஒரு பேரரசு போதும் தமிழ்நாட்டுக்கு , இப்படி எல்லாரும் கிளம்பினா நாங்க எங்க போய் அழறது?

1. நல்லா யோசிச்சு பாருங்க, MALASIA ஷூட்டிங் தேவையே இல்ல. குருவி-ன்னு பேர் வெச்சதுக்காக விஜய்,விவேக்க மலேசியா அனுப்பி, திரும்ப அங்கிருந்து வந்து ...

2. அவ்ளோ பெரிய தாதா, பணக்காரன் கோட்சா -வோட தங்கச்சி flight travel பண்ணினதே இல்ல! . அப்படி flight travel கூட பண்ணாத ஒரு பொண்ணு, ஒரு பையனுக்காக தனியா சென்னை வருது. ரொம்ப சூப்பர் சார்!

3. By the way, "குருவியோட பாட்டு" ல 'ஏன் சாப்பாட்டில் உப்புகல்லு நீயடா, ஏன் வீட்டுக்கு செங்கல்லு நீயடா" ன்னு வருது. விஜய் வீட்டுக்கு ரசிகர்கள் செங்கல்லா இருக்கறதா? "நான் வீட்டுல நிம்மதியா இருப்பேன், நீ செங்கல்லா கஷ்டப்படு " ன்னு ஹீரோ பாடலாமா? Instead of that, உன் வீட்டுக்கு செங்கல்லு நானடா'-ன்னு எழுதி இருக்கலாமே!

வேற சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

6 comments:

ambi said...

வழவழன்னு யம்மா யம்மா! மொழமொழன்னு யம்மா யம்மா!னு அவங்களே பாடிட்டாங்களே! :))

பரிசல்காரன் said...

சரியாச் சொன்னேள் போங்கோ! சரியாச் சொன்னேள் போங்கோ!

manjoorraja said...

ஆமா, இதுக்கெல்லாம் விமர்சனம் எழுதலேன்னு யார் அழுதா. அந்த நேரத்தில் வேறு ஏதாவது உருப்படியா செஞ்சிருக்கலாம்.

அதை மெனக்கெட்டு படிக்கறோமே, எங்களை சொல்லணும்....

வால்பையன் said...

இது தான் உங்கள் முதல் பதிவா!?

இருங்க கார்க்கிகிட்ட போட்டு குடுக்கிறேன்!

சின்ராஸ் said...

அருமை அண்ணா :-)))

சின்ராஸ் said...

அருமை அண்ணா:-)