Wednesday, May 28, 2008

அவியல்

இந்த கிரிக்கெட்டை பாக்கறத விட்டுத்தொலைக்கணும் முதல்ல.. வெறும் 146 ரன் எடுக்க, ஏழு விக்கெட்டை வெச்சுட்டு நம்ம சென்னை கிங்க்ஸ் கடைசி ஓவர் வரைக்கும் டென்ஷன ஏத்துறாங்கப்பா! எப்படியோ ஜெயிச்சுட்டாங்க.. அத விடுங்க.. மேட்ச் முடிஞ்சதும் கில்கிறிஸ்ட் வெறுத்துப் போய் உட்கார்ந்து கிளவுஸை கழட்டீட்டு இருந்ததை பார்க்கப் பாவமா இருந்தது! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் கில்லி!
----------------------------------------------------
இது உண்மையா என்று தெரியவில்லை. அனிமல் சைக்காலஜியின் படி நாய்க்கு நாம் உணவு வைக்கும் போது ‘நமக்கு வந்து இவ்ளோ பெரிய மனுஷன் சாப்பாடு வைக்கிறாரே’ன்ன்னு வாலாட்டுமாம். அதே பூனை, ‘இவ்ளோ பெரிய மனுஷன் வந்து நமக்கு சாப்பாடு வைக்கிறான்னா, நான் எவ்ளோ பெரிய ஆளு’ன்னு நெனச்சுக்குமாம். அப்டீங்களா?
----------------------------------------------------
நாட்டியப் பேரொளி பத்மினி மறைந்தபோது வந்த ஒரு எஸ்.எம்.எஸ்:
‘ஆடிய போது அசையாமல் பார்த்தோம்..
அசையாமலிருந்தபோது ஆடிப்போனோம்’
-----------------------------------------------------
ரெண்டு பெண் குழந்தைகள் இருப்பது என்னவோ பெரிய பாரம் போல, பலரும் ஒரே அட்வைஸ் மழைதான்! நானும் பாரதியாரிலிருந்து ஆரம்பித்து ரெண்டும் பெண்ணாய்ப் பிறக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பேன். உடனே `பேச்சுக்கு சரி, சோத்துக்கு?' என்பார்கள். நானும் விடாமல் கமலஹாசன், ரஜினிகாந்த் என்று உதாரணங்கள் சொல்வேன். நேற்று இப்படித்தான் இந்த வலைப்பூ பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெருசு வந்து இதுக்கு காசு ஏதாவது செலவாகுமா?’ என்று கேட்டார். அதெல்லாமில்லை என்று சொன்ன போது ‘பாத்துப்பா.. ரெண்டு பொட்டப்புள்ள இருக்கு.. நீதான் கரையேத்தணும்’ என்றார். ‘நான்தான் கரையேத்தணும். அதனாலதானே பரிசல்காரன்’ன்னு பேர் வெச்சிருக்கேன்’ என்றேன் நான்.

7 comments:

லக்கிலுக் said...

கலக்கல் பதிவு பரிசல்!!!


கமெண்ட் செட்டிங்ஸில் கமெண்ட் பாக்ஸ் பாப்-அப் ஆக ஓபன் ஆகாதது போல செட் செய்யுங்கள். உங்கள் பதிவுகளுக்கு கமெண்ட் வராததற்கு இந்த பாப்-அப்பும் ஒரு காரணமாக இருக்கும்.

ambi said...

ம்ம். பரிசல்காரன் பெயர் காரணம் இது தானா? :))

எல்லாம் சரி, Rainy Dayக்கு ஸ்பெல்லிங்க் என்னங்க? :p

பரிசல்காரன் said...

ஐயோ என்னுடய பதிவிற்கு லக்கி லுக் கமெண்டா? நாலு பீரை அடித்த மப்பில் இருக்கிறேன் நான்! நன்றி வாத்தியாரே!

சாரி அம்பி.. கவனிக்கலே.. (மாணிக்கம் மாஸ்டர் கோபப்படுவாரு! ப்ளஸ் டூவுல என்னா அடி!)

நிலா said...

அட நீங்க எனக்கு பக்கத்து ஊருதான். அப்புறம் அந்த போட்டோல இருக்க ரெண்டு அக்காவும் செம க்யூட் மாமா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கரையேத்துங்க கரையேத்துங்க..

ஆனா கொஞ்ச நாள் கழிச்சு பெண்கள் ரொம்ப குறைவா இருக்கறதால.. பணம் குடுத்து கல்யாணம் பண்ணிப்பாங்கனு சொல்றாங்களே.. அப்படியா.. வருமா அந்த காலம்..வந்தா எவ்வளவு வரதட்சனை கேக்கலாம்ன்னு யோசிச்சுவைங்க.. :)

பரிசல்காரன் said...

நிலாப் பாப்பா.. அதுக ரெண்டும் என் வாரிசுக தான்!

பரிசல்காரன் said...

கயல்விழி உங்க பின்னூட்டம் பாத்து ஆச்சரியமா இருந்தது எனக்கு. நீங்க எழுதின கரு-வுல ஒரு கதை நான் எழுதி 1993-ல குமுதத்துல ஒரு கதை வந்தது. எடுத்துப் பதிவுல போடறேன். படிச்சுப் பாருங்க!