ஒரு நாளைக்கு 24 மணி நேரம்னா அந்த 24 மணிநேரத்துல நான் பைக் ஓட்டறது வெறும் ஒண்ணரை மணி நேரம். சில நாள் அங்க இங்க போகன்னு வேலை அதிகமானாக் கூட, அதிக பட்சம் நாலு மணி நேரத்தைத் தாண்டாது. ஆனா அந்த கொஞ்ச நேரம் நான் படற டென்ஷன் இருக்கே.. அப்ப்பப்பா! இந்த ஆளுகளாலயே டென்ஷன் ஆகி ஒரு வழி ஆகிடுவோம் நாம. அதுல சில ஆளுகளைப் பத்தி இங்கே:
டர்னிங் டார்ச்சர்மேன்: வலது பக்கம் திரும்பறானா, இடது பக்கம் திரும்பறானான்னு தெரியாது. ஒரு சைஸா உடம்பை வளைப்பானுக. அத வெச்சு ‘ஓஹோ.. சார் திரும்பப் போறார்’னு நாம தெரிஞ்சுக்கணும். ஏண்டா.. இண்டிகேட்டர் போட்டா அப்படி கரண்ட் செலவாகுமாடா உங்களுக்கு?
பில்லியன் பிசாசு: வண்டி ஒருத்தன் ஓட்டுவான். பின்னாடி உட்கார்ந்திருக்கறவன் கை காட்ட ஆரம்பிப்பான். இவன் கை காமிக்கறதுக்கு அரை கிலோ மீட்டர் தள்ளிதான் திரும்ப வேண்டிய இடம் இருக்கும். உட்கார்ந்திருக்கறவன் வலது பக்கம் கை காமிச்சான்-ன்னா,ஓட்டறவன் திரும்பாம லெஃப்ட்ல வண்டிய நிறுத்துவான். அதுக்கு பின்னாடி நீங்க இருந்தீங்கன்னா கொஞ்ச நேரத்துக்கு சீஸோபெர்னியா ஸ்டேஜ்ல இருக்க வேண்டிருக்கும். இதுல க்ராஸ் பண்ணலாமான்னு யோசிச்சு நாம ஸ்லோ பண்ணினா ‘போடா போடா’ன்னு அலட்சியமா நமக்கு கை காட்டுவானுக பாருங்க.. ச்சப்-ன்னு அப்பத் தோணும்.
மெமரிலாஸ் கஜினி: ரைட் இண்டிகேட்டர் போட்டிருப்பான். ‘சார் திரும்பப்போறார்’னு பின்னாடி வர்ற நாம ஸ்லோ பண்ணுவோம். அவன் திரும்பாம நேரா போவான். ‘அட’ன்னு நாம லெஃப்ட்ல ஓவர் டேக் பண்ணி போலாம்னு போனா, சள்ள்ள்-ன்னு அவன் வண்டி லெஃப்ட் ஒதுங்கும்.. சரின்னு ரைட் வந்தா, அவனுதும் ரைட். ஒரு அரை கிலோ மீட்டர்க்கு இந்த விளையாட்டு ஆடி முடிச்சப்பறம் அவனை முந்தும்போது ‘யோவ்.. இண்டிகேட்டர்’ன்னு சொன்னா.. ‘ஓ...!’ன்னு ஆஃப் பண்ணுவான்!
ச்சீப் சின்ஸாமி: வண்டி ஓட்டீட்டே இருப்பீங்க. முன்னாடி போற பைக்ல இருக்கறவன் சடார்னு எச்சில் உமிழ குமிவான். பின்னாடி வண்டி வருதா.. ஆள் இருக்கா எதைப் பத்தியும் அவனுக்கு கவலையில்லை. என்னைக் கேட்டா எமதர்மன்கிட்ட சொல்லி, இந்தச் செயலுக்கு மட்டும் கன்னாபின்னான்னு பனிஷ்மெண்ட் கேட்டகிரியை இன்னும் அதிகப்படுத்தச் சொல்லுவேன். படுபாவிக. எழுதறதுக்கே கேவலமான விஷயமாயிருக்கு இது!
திடீர் ராமசாமி: இது இந்த டவுன் பஸ் & மினி பஸ்காரனுக பண்ற கொடுமை. போய்ட்டே இருப்பானுக. ரோட்டோரம்லாம் இல்லாம திடீர்னு நடு ரோட்ல நிறுத்துவானுக. பின்னாடி அனுமார் வாலா ட்ராஃபிக் நீண்டாலும் கவலைப்படறதில்லை. பொறுமையா நிறுத்தி ஏத்தி அப்பறம்தான் போவானுக. (இந்த கேப்-ல நம்ம பின்னாடி நிக்கற பிரகஸ்பதிகள் ஹார்ன் அடிச்சே சாவடிக்கறது வேற நடக்கும்)
வழிவிடு முருகா: ஃப்ரீ லெஃப்ட்-ன்னு போர்ட் இருக்கும். அதப் பத்தி அவனுகளுக்கென்ன? சிக்னல் போட்டிருக்கும். நேரா நிக்கறவனையெல்லாம் தாண்டி முன்னாடி நிக்கறேன் பேர்வழின்னு இடது பக்கம் போறவனை, போக விடாதபடிக்கு நின்னுக்குவான்.
முந்திரிக்கொட்டை: சிக்னல்ல நின்னுட்டிருப்பீங்க. பச்சை விளக்கு வர்றதுக்கு நாலஞ்சு செகண்ட் முன்னாலயே பின்னாடி நின்னுட்டு கதற ஆரம்பிப்பாங்க. அட இன்னும் ஒண்ணு ரெண்டு செகண்ட்தானே-ன்னு நாம அவனைப் பார்த்தா - அவன் ஏதோ பூரா ட்ரஸ் போட்டிருக்கறமாதிரியும் நாமதான் நிர்வாணமா இருக்கற மாதிரியும் நம்மளை ஒரு பார்வை பார்ப்பானுக பாருங்க.... ம்ஹும்!
சவுண்ட் பார்ட்டி: உச்சபட்ச எரிச்சல் இதான். முன்னாடி போறவனும் போய்ட்டுதான் இருப்பான். நாமளும் போய்ட்டுதான் இருப்போம். திடீர்னு பின்னாடிலிருந்து ஹார்ன் சத்தம் விடாம கேட்கும். என்னமோ எல்லாரும் நடுரோட்ல நின்னு செஸ் ஆடீட்டிருக்கற மாதிரியும், இவரு மட்டும் வண்டி ஓட்டற மாதிரியும்.
வெளிநாடுகள்ல ஒருத்தன் அதிகபட்சமா – ரோட்ல யாராவது விதி மீறலா நடந்துட்டு - கோவம் வந்தா திட்டறதுக்குதான் ஹார்ன் யூஸ் பண்ணுவாங்களாம். இவனுக எதுக்கெடுத்தாலும் ஹார்ன்தான். ஸ்டியரிங்/ஹேண்டில்லேர்ர்ந்து கை எடுத்தாலும் எடுப்பானுக. ஹார்ன்லேர்ந்து கை எடுக்க மாட்டானுக. இவனுகளை ஒரு சவுண்ட் ப்ரூஃப் ரூமுக்குள்ள அடைச்சு வெச்சு, சுத்திலும் வித விதமான ஹார்ன் சவுண்ட் ஒலிக்க விட்டு ஒரு நாள் முழுக்க கேட்க வைக்கணும். லூசுங்க…
இதெல்லாம் போக பக்கத்துல வந்து முந்தறது, இடதுபக்கமா முந்தறது, கண்ணை உறுத்தற மாதிரி லைட் போட்டுட்டு டிம் பண்ணாம எதிர்ல வர்றது, அடுத்தவன் வந்து எப்படி நிறுத்துவான்னு யோசிக்காம வண்டியை பார்க் பண்ணீட்டு போறதுன்னு நிறைய இருக்குங்க.. எல்லாம் எழுதினா ப்ளாக்கர் தாங்காது!
.
38 comments:
\\ச்சீப் சின்ஸாமி: வண்டி ஓட்டீட்டே இருப்பீங்க. முன்னாடி போற பைக்ல இருக்கறவன் சடார்னு எச்சில் உமிழ குமிவான்\\
அதிலும் குறிப்பா வலது பக்கமாத்தான் துப்புவாய்ங்க....
இடது புறமா துப்பினாக்கூட ஓரளவிற்கு நாம தப்பிச்சிக்கலாம்:))
உண்மைதான். சரியாக எழுதி இருக்கீங்க. அதிலயும் இந்த ஹார்ன் அடிக்கறவன் தொல்லை ரொம்ப அதிகம்தான்.
உண்மைதான். சரியாக எழுதி இருக்கீங்க. அதிலயும் இந்த ஹார்ன் அடிக்கறவன் தொல்லை ரொம்ப அதிகம்தான்.
//வெளிநாடுகள்ல ஒருத்தன் அதிகபட்சமா – ரோட்ல யாராவது விதி மீறலா நடந்துட்டு - கோவம் வந்தா திட்டறதுக்குதான் ஹார்ன் யூஸ் பண்ணுவாங்களாம்.//சத்தியம்ங்க!இங்க (மஸ்கட்) ஹார்ன் அடிக்கவே மாட்டாங்க அப்படி அடிச்சா அது ஏதோ பிரச்சனை ஆனாத் தான்!இதனாலேயே நான் ஊருக்கு வந்தா வண்டி எடுக்குறதுக்கு ரொம்ப யோசிப்பேன்!அதுவும் மதுரையில அஞ்சாநெஞ்சன் படம் போட்டுக்கிட்டு ஆட்டோக்காரனுங்க ஓட்டுறதப் பாக்கணுமே!..
இருசக்கர வாகன ஓட்டிகளின் பிரச்சனைகளை தெளிவாக பதிவிட்டுள்ளீர்கள்
நல்ல பதிவு ங்கோ. நல்ல வேளை நான் இன்னும் வண்டி எடுக்கலை.
பாஸூ,நான் ஹாரன் அடிச்சு எப்பிடியும் ஒரு 2 மாசமாவது இருக்கும் . எவனாவது தப்பு பண்ணுவான் , நானும் ஹாரன் அடிக்கலாம்னு பாக்கறேன் . எவனும் சிக்க மாட்டேங்குறான்
உண்மைதான் நண்பா.
ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.
இவனுகளை ஒரு சவுண்ட் ப்ரூஃப் ரூமுக்குள்ள அடைச்சு வெச்சு, சுத்திலும் வித விதமான ஹார்ன் சவுண்ட் ஒலிக்க விட்டு ஒரு நாள் முழுக்க கேட்க வைக்கணும். //
சரிதான்.
சிலர் தன் வண்டியில் சைடு ஸ்டான்டை எடு்ககாமல் வண்டி ஓட்டி வருவார்கள்..
அவர்கள் எங்கு விழுவார்களோ எனப் பல முறை பதறியிருக்கிறேன்.
தலைப்பும் அனுபவத்தைச் சொன்னவிதமும் அருமை நண்பா.
தங்களை ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பில் பார்திருக்கிறேன் பேசும் வாய்ப்பு ஏற்படவில்லை.
// முனைவர்.இரா.குணசீலன் said...
சிலர் தன் வண்டியில் சைடு ஸ்டான்டை எடு்ககாமல் வண்டி ஓட்டி வருவார்கள்..
அவர்கள் எங்கு விழுவார்களோ எனப் பல முறை பதறியிருக்கிறேன்.
//
ரிப்பீட்டு
தலைப்பு அருமை.இந்த சவுண்டு பார்டிகளை பற்றி நீங்கள் எழுதியதெல்லாம் ரொம்ப சரி.அடிக்கடி
எழுதுங்க.
//நாமதான் நிர்வாணமா இருக்கற மாதிரியும் //
:))
நீங்க எழுதாத ஒண்ணு இருக்கு பரிசல், நாம வலது பக்கம் சிக்னல் காட்ட கையைத் தூக்கறானு நினைப்போம், பின்னாடி இருக்கிறவன் முன்னாடி இருக்கிறவனிடம் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதற்காக தூக்கிய கையாக இருக்கும். நாம இடது பக்கம் ஒதுங்கினா பின்னால யார் வராங்கன்னே பார்க்காம அவனும் இடது பக்கம் ஒதுங்கி மோத வருவான். இதில் நம்மைப் பார்த்து முறைப்பு வேறு.
அருமையான பதிவு.
இரண்டு குற்றத்திற்கு மேல் வந்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். நமது மக்கள் கடுமையான தண்டனைக்குத்தான் பயப்படுவார்கள். உங்களது பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றேன்.
நன்றி. வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html
:))
சில இடங்களின் நானே திட்டறது போலவும் சில இடங்களில் என்னைத் திட்டறது போலவும் இருக்கு :))) மொத்தத்தில் மனதில் இருந்ததை பிரதிபலித்தன எழுத்துக்கள் :))
நடுரோட்ல பஸ்ஸ நிறுத்திறதோட இந்த பைக்கர்ஸ் தொல்லை இங்கேயும் கொஞ்சமான்னாலும் இருக்கத்தான் செய்யுது..
அதுவும் சம்மர்ல ஆக்ஸ்டிண்ட்டுக்கு அதிகமான காரணம் பைக்/சைக்கிளாளர்கள்தான்..
கஷ்டத்தை கூட சூப்பரா எழுதி இருக்கிங்க.. பார்ட் டூ.. விரைவில் எதிர்பார்க்கிறேன் :)
இது பரவாயில்லை. பின்னால சுமாரா ஒரு ஃபிகர வச்சிக்கிட்டு ஓட்டுவானுங்க பாருங்க. அந்த அம்மிணி துப்பட்டாவ முகத்துக்கு போட்டிருக்கும். இவரு ஹெல்மெட் போட்டிருப்பாரு. இதுல அவங்க “உனக்கு என்ன கலரு பிடிக்கும்ன்னு” கேட்பாங்க. அவர் வண்டிய ஸ்லோ பண்ணி “க்ரீன்”ன்னு சொல்வாரு. இந்த அம்மிணி காதுதான் துப்பட்டால மூடியிருக்கே. “ஹாங்” அபப்டின்னு சொல்வாங்க. உடனே வண்டிய கிட்டத்தட்ட நிறுத்தி க்ரீன்னு சொல்வாரு, தலையை கொஞ்சம் திருப்பி. உடனே அம்மிணி சிரிக்கும். இவர உலக அதிசயத்த பார்க்கணுமேன்னு திரும்புவாரு,. 2 செகண்ட்ல அம்மிணி மீண்டும் ஸ்டார்ட் பண்ணும் “நீ அஜித் ஃபேனா விஜய் ஃபேனா”.. ங்கொய்யால..
முக்கிய குறிப்பு: இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்ன்னு கேட்டா பரிசல் கமெண்ட்டை டெலீட்டி விடுவார்
இங்கே அமெரிக்காவிலேயும் இந்த பிரகஸ்பதிகள் இருகங்கே..
அவசரத்துக்கு பொறந்தவன்(ள்): ஒரு கையிலே செல் போன் இன்னொருகையில் பர்கர்...
சொருகல் மன்னன் : லெப்ட் அல்லது ரைட் லேன் முடியும் முன் மத்தவங்க எல்லோரும் அடுத்த லைனுக்கு ஒழுங்கா போயிடுவாங்க.. இவருமட்டும் அமுத்திபிடிச்சு வேகமா போயி உள்ளே சொருகிகுவாரு...
வழிவிடு முருகா: ஹை வேலே ரைட் லேன்லே ஸ்லோவா போறவங்களுக்கு, லெப்ட் லேன்லே வேகமா மற்றும் முந்தி செல்வதற்கு, இவரு லெப்ட் லேன்லேவந்து அவங்களுக்கு தொணையா கார் ஒட்டி பின்னடிவரவங்களை தடுக்கற ஆசாமிகள்..
ஹா...ஹா... சிந்தனை செய்ய வேண்டிய விஷத்தை காமெடியா சொல்லியிருகிங்க...
அண்ணே... ஹனிமூன் போறத விட்டுட்டு பதிவு போடும் உங்க கடமையுனர்ச்சிக்கு ஒரு சல்யூட்...
வண்டியை எடுக்க முடியாதபடி பார்க் செய்பவர்களைப் பற்றி சொல்லவில்லயே
வழக்கமான பரிசல் டச் மிஸ்ஸிங்...,
அப்புறம் கார்க்கி..... நல்லாயிரு சாமி
I REPEAT ALL...........
திடீர் ராமசாமி: இது இந்த டவுன் பஸ் & மினி பஸ்காரனுக பண்ற கொடுமை. போய்ட்டே இருப்பானுக. ரோட்டோரம்லாம் இல்லாம திடீர்னு நடு ரோட்ல நிறுத்துவானுக. பின்னாடி அனுமார் வாலா ட்ராஃபிக் நீண்டாலும் கவலைப்படறதில்லை. பொறுமையா நிறுத்தி ஏத்தி அப்பறம்தான் போவானுக. (இந்த கேப்-ல நம்ம பின்னாடி நிக்கற பிரகஸ்பதிகள் ஹார்ன் அடிச்சே சாவடிக்கறது வேற நடக்கும்)
வழிவிடு முருகா: ஃப்ரீ லெஃப்ட்-ன்னு போர்ட் இருக்கும். அதப் பத்தி அவனுகளுக்கென்ன? சிக்னல் போட்டிருக்கும். நேரா நிக்கறவனையெல்லாம் தாண்டி முன்னாடி நிக்கறேன் பேர்வழின்னு இடது பக்கம் போறவனை, போக விடாதபடிக்கு நின்னுக்குவான். //
எல்லாமே ஓகேன்னாலும் இந்த இரண்டும் சென்னையில ரொமப் இம்சைங்க.. எல்லா சிட்டி பஸ்ஸுமே நடு ரோட்லதான் நிக்கிதுங்க..
எங்கயாவது போய் முட்டிக்கலாமான்னு இருக்குது.
:-))))))))
காரணப் பெயர் எல்லாம் கலக்கல்
//
இண்டிகேட்டர் போட்டா அப்படி கரண்ட் செலவாகுமாடா உங்களுக்கு?
//
innum sirichu mudikkala naan...
appuram.thalaippu nallaayirukku!
vaazhthukal parisal!
You also missed one more - speaking in cellphone while driving..Lot of accidents not for them but they cause to otherss...
சூப்பர் அப்பு
என்ன பரிசல் கதை எழுதுவது இல்லை ஏன் ? டைம் இல்லையா ?
எப்படில்லாம் தேடிப் பேர் வெச்சிருக்கீங்க.. பாவம், ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கீங்க போல.
வண்டில பின்னாடி ஒரு பொண்ணு கூட போய்ப் பாருங்க. இந்த கிங்கரர்கள் யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க.
உண்மைதான், மிகவும் அருமையான பதிவு.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
இந்த சவுண்ட் பார்ட்டிகளைப் பற்றி க.சீ.சிவகுமார் ஒருமுறை அடித்த கமெண்ட்... ‘ஏன் பாபு இவர் இப்படி ஹாரன் அடிக்கிறான்... ஒருவேளை சத்தம் கேட்டு பாலம் அகலமாகும்னு நினைக்கிறானோ..!’
கலக்கல் மாப்பிள உங்கள் பதிவுகல ஆரம்பத்தில் வாசித்து வந்தேன் இடையில் நேரமின்மையால் வாசிக்க முடியவில்லை.. இப்போது மீண்டும் வாசிக்கிறேன் அதுவும் ஒரு பதிவராக சந்தோசம்.. மொய்க்கு மொய்ன்னு என்ர பதிவுக்கு வர வேண்டாம் நான் பதிவுகள் எழுதுவது மிக மிக குறைவு ...
வழ்த்துக்கள்..
Post a Comment