Monday, January 17, 2011

காவலன்-ஆடுகளம்-சிறுத்தை: ஒரு மிக்ஸிங் ரிப்போர்ட்

பொங்கலுக்கு வந்துள்ள படங்களில் எல்லோரின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் இந்த மூன்று படங்களுக்கும் சம இடமுண்டு.

எனின் – இந்த மூன்றில் எது டாப்? கதையைப் பொறுத்தவரை காவலனும், கதைக்களத்தைப் பொறுத்தவரை ஆடுகளமும், கமர்ஷியலுக்கு சிறுத்தையும் என மூன்றுமே ஜாக்பாட் அடித்திருக்கின்றன.

சிறுத்தை - கல்லாவை மட்டும் குறிவைக்கும் கமர்ஷியல் மசாலா. கார்த்தி தூள் கிளப்பியிருக்கிறார். அதுவும் ரத்னவேல் பாண்டியனாக வெறிக்கும் கண்களும், முறுக்கிய மீசையுமாய் அவர் பார்க்கும் பார்வையில் கனகச்சிதமாய்ப் பொருந்தியிருக்கிறார். அண்ணனை விட அந்த உடுப்புக்கு இவரே பொருத்தம்.

தமன்னா - வாங்கிய சம்பளத்தில் 30% தானும் நடித்து, 70% இடுப்பையும் நடிக்க வைத்திருக்கிறார்.

சந்தானம் - படத்தில் செகண்ட் ஹீரோ. பல இடங்களில் வயிறு நோகச் செய்யும் சிரிப்பு வெடிகள்.


ஆடுகளம் - அட்டகாசம்.

எடுத்துக் கொண்ட கதைக்களனுக்கு வெற்றிமாறனுக்கு ஸ்பெஷல் பூங்கொத்து. சேவல் சண்டையில் ஊரே வியக்கும் நபரான பேட்டைக்காரனின் பாத்திரப்படைப்பும், அதில் நடித்துள்ள கவிஞர் ஜெயபாலனின் உடல்மொழியும், அவருக்குக் குரல் கொடுத்திருக்கும் ராதாரவியின் உழைப்பும் - ஒன்று சேர்ந்து மனசை அள்ளுகிறது. அந்தக் காதல் படத்தோடு ஒட்டவில்லை. ஒரே ஒரு ஃபோன் போட்டு பேட்டைக்காரன் குறித்து தனுஷிடம் சொல்லும் சீன் தவிர அந்தக் காதலால் என்ன பயன்.. ஆங்.. ரெண்டு அருமையான பாடல் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆத்தி ஆத்தி & அய்யய்யோ. ஆத்தி ஆத்தி ஹிட்.. SPB தன் மகனுடன் பாடிய ஐயையோ நெஞ்சு’ பாடலைக் கேளுங்கள். ஏதோ போகிற போக்கில் ஜாலியாகப் பாடியிருக்கிறார் மனுஷன்.

தனுஷ்! என்ன எழுதுவதென்று தெரியவில்லை. இப்படி ஒரு உடல்மொழி எந்த நடிகருக்கும் இருக்கிறதா என்பது சந்தேகமே. அதை அருமையாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குனர் வெற்றி மாறன். உட்காரும் ஸ்டைலாகட்டும், ஏண்ணே இப்படிச் செஞ்ச என்று பேட்டைக்காரனிடம் மருகும் இடமாகட்டும், பாரில் நண்பன் பேட்டைக்காரனைப் பற்றித் தவறாகச் சொல்ல, கோவப்படும் இடம் என்று பல இடங்களில் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

இடவேளைக்கு முன் வரும் சேவல்சண்டை - இதயத்துடிப்பை எகிறச் செய்கிறதென்றால் அதற்கான முழுப் பாராட்டும் வெற்றிமாறனையும், சேவல் சண்டைக்கு கிராஃபிக்ஸ் அமைத்த குழுவுக்கும்தான். சபாஷ்!

பின்னணி இசையில் ஒருபடி மேலேறிவிட்டார் ஜி வி ப்ரகாஷ். ஏதோ கத்தியை சீவுவதைப் போல ஒரு வித ஒலி அங்கங்கே வருகிறது. மிகவும் அருமை.


காவலன்:

விஜய் படங்களிலேயே என் ஃபேவரைட் படமான வசீகராவுடன் இதுவும் லிஸ்டில் சேர்ந்துவிட்டது. விஜய் படத்துல கதையே இருக்காது என்று சொல்பவர்கள் இந்தப் படத்தைக் கொண்டாட வேண்டும். அரசியலெல்லாம் வேண்டாம் விஜய். ரெண்டு கமர்ஷியல் குடுங்கள், நடுநடுவே இப்படி ஒரு படம் கொடுங்கள்.. நாங்கள் இருக்கிறோம் உங்களைக் கொண்டாடுவதற்கு!

எத்தனை நாளாயிற்று இப்படி அருமையான முடிச்சுகளுடன் கதையுள்ள படங்களைப் பார்த்து! சபாஷ் சித்திக்!

விஜய் - பெர்ஃபார்மென்சில் கலக்குகிறார். பல இடங்களில் அடக்கி வாசித்திருக்கிறார். தன் காதலியை சந்திக்க பார்க்குக்கு போக ஆரம்பிக்கும் சீனில் துவங்கி, பார்க் சீன் முடியும் வரை அவரது நடிப்பு - பாராட்ட வார்த்தைகளே இல்லை. அடிதடி, ஏஏஏஏஏஏஏஏஏஏய், பஞ்ச் டயலாக்ஸ், உயிர்த்தெழுதல் ஏதுமில்லாத விஜயையும் நன்றாகவே ரசிக்க முடிகிறது!

வடிவேலு - வழக்கம்போல்.

ஒரே குறை, படத்தின் க்ளைமாக்ஸ் முடிந்த பிறகும் நீட்டிக் கொண்டே போனது பிடிக்கவில்லை. மாது ரயிலில் கட்டிப் பிடித்த இடத்திலேயே படம் முடிந்துவிட்டது - பிறகு மீராவைச் சேர்த்துவைக்க வேண்டும் என்பது யார் இட்ட கட்டளை? புரியவில்லை.

பாடல்களில் ‘யாரது... யாரது’ சொல்லாமல் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது! டிபிகல் வித்யாசாகர் மெலடி. இன்னும் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்!

மூன்று படங்களிலும் முதலிடத்துக்கான என் ஓட்டு - அருமையான கதை + அதைத் தேர்ந்தெடுத்து நடித்த விஜய்க்காக - காவலனுக்கு. ஆடுகளம் - அதேதான். இடைவேளைக்குப் பின் கொஞ்சம் ஸ்லோ ஆகிவிட்டதால் -ஒரு பாய்ண்ட் வித்தியாசத்தில் இரண்டாமிடம்.

நான் பார்த்த மூன்று தியேட்டர்களிலும், மூன்று படங்களைப் பற்றிய நெகடீவ் & பாசிடீவ் கமெண்டுகளைப் பார்க்க முடிந்தது. ஆனாலும் மூன்று படங்களுமே ஏதோ ஒரு விதத்தில் மக்களைக் கவரவே செய்திருக்கிறது. நல்ல கதைக்களன் கொண்ட ஆடுகளமும், காவலனையும் நீங்கள் கொண்டாடாவிட்டால் இழப்பு உங்களுக்கில்லை. மறுபடியும் அடுத்த படத்தில் விஜய் மண்ணுக்குள் புதைந்து, சட்டை கலையாமல் வெளியே வருவார். அதையும் திட்டத் தயாராக இருங்கள்.


.

22 comments:

அன்பேசிவம் said...

சபாஷ்... சரியான விமர்சனம்.. சிறுத்தை....?

கார்க்கிபவா said...

kalakkal thala

antha park scenela vijayin costume sema..

already pazaigiya scene na irunthalum vijay asinkitta love soldra scene super..

yarathu paattula start aagura vijay performence trainla mudiyuthu.. climax thaangala..

step step innum nalla panni irukalaam..

aadukalam, great movie..

ஷர்புதீன் said...

அப்ப ஆடுகளம் முதலா பார்துடவேண்டியதுதான்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ம்.... துபாய்ல மூணு படமும் ரிலிஸ். இங்க ஆடுகளம் மட்டும். காவலன் வியாழனன்று பார்க்கவேண்டும்.
கார்கிகாக!!! :-)

தராசு said...

ஹலோ,

உங்க பிரண்டு தளபதி ரசிகரா இருக்கலாம், அதுக்காக இப்படியெல்லாம் பில்டப் குடுக்க கூடாது.

ஆர்வா said...

எனக்கு ஆடுகளம் ரொம்ப பிடிச்சிருந்தது.. நானும் வெற்றிமாறனைப்பத்தி எழுதி இருக்கேன்..

சுசி said...

ஆடுகளம் பாத்தாச்சு..

சிறுத்தை இன்னும் பாக்கலை.. நீங்க எழுதினத பாத்தா பாக்கலாம்னு தோணுது..

காவலன் நாளைக்கு பார்க்க போறேன்.. அதனால அது பத்தி நீங்க எழுதினதை பாத்துட்டு வந்து படிக்கிறேன்..

விக்னேஷ்வரி said...

காவலன் பார்க்கப் போகத் தான் ப்ளான். ஆடுகளம் யோகிக்குப் பிடிக்குமான்னு தெரியல. சிறுத்தை மசாலால எனக்கு விருப்பமில்லை. ஸோ, இந்த வீக்கெண்ட் காவலன். :)
நல்ல ஒப்பீடு விமர்சனம்.

Unknown said...

பரிசல்..படகு சவாரி

Unknown said...

சும்மாவே ஆடுவாரு கார்க்கி. நீங்க சலங்கய வேற கட்டு வுட்டுட்டீங்களா?

Iyappan Krishnan said...

படம் ஆரம்பிச்சு 10 நிமிஷத்துல டீவிய ஆஃப் பண்ணிட்டேன்.

ஜானகிராமன் said...

//ஒரே ஒரு ஃபோன் போட்டு பேட்டைக்காரன் குறித்து தனுஷிடம் சொல்லும் சீன் தவிர அந்தக் காதலால் என்ன பயன்.. //

என்ன இப்படி பொசுக்குனு சொல்லிட்டீங்க. சேவச் சண்டை நடக்கறப்போ, அந்த 1000 ரூபாய ஐரின் கேட்கறது தானே, மொத்தக்கதையோட பேஸ்மென்ட் பாஸ்?

RK Anburaja said...

@ Vijay


Kavalan - Super Hit Film..



By a Ajith Fan

Anonymous said...

// அண்ணனை விட அந்த உடுப்புக்கு இவரே பொருத்தம். // - ஹி... ஹி...

// மூன்று படங்களிலும் முதலிடத்துக்கான என் ஓட்டு - அருமையான கதை + அதைத் தேர்ந்தெடுத்து நடித்த விஜய்க்காக - காவலனுக்கு. // - இது அதை விட ஹி... ஹி...

மற்ற படி okey :)

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

தேவமதி said...

aadugalam padathukkukku thaan muthal idam, kaavalan niraya pazhaya padathai ninaivu paduthugirathu. ex: punnagaipoo, vasigara, .....

Sundar B said...

this is Honest rEVIEW...Kaavalan is Good...viJAY HAS BROKE HIS pREVIOUS FORMULAS AND SHINED IN THIS FILM...HE IS BACK TO HIS OWN PATH....gOOD ACTING ...ITS A WONDERFUL LOVE STORY WITH COMEDY...THE CLIMAX IS UNEXPECTED AND THE CLIMAX TWIST AND THE ARTISTS DONE SO GOOD IN CLIMAX....ALL THE BEST mR. VIJAY....CONTINUE THE SAME AND GO AHEAD WITH THIS KIND OF GOOD STORY FILMS...IT MAY BE ROMANTIC OR ACTION OR COMEDY..IT SHUD BE DIFFERENT FROM OTHER FILMS..THATS WAT ALL TAMIL PPLS ARE EXPECTING....ALL THE BEST FOR YOUR FUTURE FILMS....sure good hearted ppls and lovers will cry at climax...i've not cn siruthai...but aadukalam oly 1st half ok...2nd half is mokkai....Kaavalan superb...its a romantic family entertainer....u can c a type of vijay as u cn in love today,kadhaluku mariyadhai and friends etc.....Kavalan is nice and sure u can c as a family.....
its a gr8 come back... and i m not a vijay fan....
vj is always gr8...kavalan super...decent family entrtainer...a fresh vijay in kavalan..not like sura,vetaikaran,sivakasi etc...no action mass n masala...soft romantic entertainer....climax is gr8...soft hearted ppls and lovers will sure drops tears in climax...
பலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும் - காவலன் வென்றுவிட்டான்

venkat said...

wise commentary by a would be critic

Sathish said...

ஆடுகளம், சிறுத்தை பார்த்தாச்சு...நீங்கள் எழுத்திய விமர்சனம் சன்னமாகப் பொருந்தும்...சுறா பார்த்த பயத்திலிருந்து மீள முடியாமல் இன்னும் காவலன் கியூவில் இருந்தான்...உங்கள் விமர்சனத்தை நம்பி பார்க்கப்போறேன்....பரிசல் காரரே படம் சொதப்புச்சி, விஜய் கொடுக்க இழுத்த நஷ்ட்ட ஈட நீவிர் தரனமையா :)

ஜி.ராஜ்மோகன் said...

ரொம்ப நடுநிலையான விமர்சனம் பாஸ் ! நச்! நச்! நச்! ............

Thamira said...

குட் ரிவ்யூஸ்.!

kadaroli said...

ஏம்ப்பா பரிசல்!!! விஜய் ரசிகனா நீ?? காவலன் ஒன்னும் அந்த அளவுக்கு இல்ல நீ சொல்ர மாதிரி. வேணும்னா, ஆடுகளம் சொல்லலாம். ஆடுகளம் 2ன்ட் ஹால்ஃப் தான் ஃபாஸ்ட் பா. ஃபர்ஸ்ட் ஹால்ஃப் வெரும் சேவல் சன்டை மட்டும் தான். சிறுத்தை சுமார் தான். வில்லன ரொம்ப பெருஸா காட்டிட்டு, லாஸ்ட்ல வில்லன் கேரக்டரயே கேவலப்படுத்திட்டாங்க.

kadaroli said...

ஏம்ப்பா பரிசல்!!! விஜய் ரசிகனா நீ?? காவலன் ஒன்னும் அந்த அளவுக்கு இல்ல நீ சொல்ர மாதிரி. வேணும்னா, ஆடுகளம் சொல்லலாம். ஆடுகளம் 2ன்ட் ஹால்ஃப் தான் ஃபாஸ்ட் பா. ஃபர்ஸ்ட் ஹால்ஃப் வெரும் சேவல் சன்டை மட்டும் தான். சிறுத்தை சுமார் தான். வில்லன ரொம்ப பெருஸா காட்டிட்டு, லாஸ்ட்ல வில்லன் கேரக்டரயே கேவலப்படுத்திட்டாங்க.