Tuesday, January 4, 2011

தமிழ் எழுத்தாளனின் அவல நிலை!

மிழகத்தின் எழுத்தாளனுக்குத்தான் இந்த நிலைமையெல்லாம் என எண்ணிப் பார்க்கும்போது இதயம் வலிக்கத்தான் செய்கிறது. வேறு வழியில்லை.. சொல்லித் தொலைக்கத்தான் வேண்டியிருக்கிறது.

நான் இணையத்தில் எழுதுவதற்கு எப்பேர்ப்பட்ட விஷயங்களையெல்லாம் தியாகம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை சொன்னால் இன்று முழுவதும் போதாது. அப்படி இப்படி ஆஃபீஸில் ஓபியடித்து, வீட்டில் விளக்குமாற்றால் அடிவாங்கி என்று பல குட்டிக்கரணங்களைப் போட்டு தமிழுக்குச் சேவையாற்றிக் கொண்டிருந்த கட்டகாலத்தில்.. மன்னிக்கவும் காலகட்டத்தில் நான் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து புத்தகமாகப் போட ஒருவர் முன்வந்தார்.

சிறுகதைத் தொகுப்பு குறித்த பேச்சு ஆரம்பிக்கும் பொழுதே நான் அவரிடம் கேட்டது: “தொலைபேசியில் அழைத்து அனுமதி கேட்கிறீர்களே... ரஜினிகாந்திடம் இதே போல அவர் பேசிய பேச்சுகளின் தொகுப்புப் போட ஃபோனில்தான் அனுமதி கேட்பீர்களா?”

அவருக்கு பதிலளிக்க முடியவில்லை. ஃபோன் கட்டானது. சரி.. பேலன்ஸ் இல்லாமலிருந்திருக்கலாம். அது இல்லை என் விசனம். என்னைப் பார்த்து இப்படி போகிற போக்கில் கேட்டுவிட்டாரே என்பதுதான்.

அவர் செய்த அந்த அவமானத்தையும் மறந்து புத்தகம் போட அனுமதி அளித்தேன். வெளியீட்டு விழா நடத்தும் பேச்சு வந்தபோது நான் சொன்னது ஒன்றே ஒன்றுதான் ‘எந்தக் காரணம் கொண்டும் என் புத்தக வெளியீடு கலைஞருக்கோ, ரஜினிக்கோ தெரியக்கூடாது’ என்பதே அது. அவர்களுக்குத் தெரிந்தால் அனைத்து அலுவல்களையும் ஓரங்கட்டி விட்டு என்மீதும், என் எழுத்தின் மீதிருக்கும் அன்பிற்காக ஓடோடி வந்துவிடுவார்கள் என்பது தெரியும்.

புத்தகம் வெளியானது. பல பக்கங்களிலிருந்தும் பாராட்டுகள். அந்த நேரத்தில் செல்வேந்திரன் என் புத்தகத்தைக் காட்டமாக விமர்சித்து ஒரு பதிவு எழுதுகிறார். வெலவெலத்துப் போகிறேன் நான். ஒரு நாளின் 26 மணி நேரத்தையும் எழுத்துக்காக அர்ப்பணித்தவனுத்துக்கு இவர்கள் தரும் பரிசு.. கிண்டலும் கேலியுமா?

இவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஊட்டி மசினகுடிக்கு அருகே தெரியும் ஒற்றையடிப்பாதை வழியே சரியாக நாற்பத்தி ஆறேகால் நிமிடம் நடந்தால் தெரியும் பழங்குடியினரிடம் என்னுடைய எழுத்தைப் பற்றிக் கேட்டால் சொல்வார்கள் ‘க்க்வா ச்சா ம்மா ச்சே க்கீ க்கூ’ என்று. எழுத்தாளர்களை மதிக்கத் தெரிந்த சந்ததி அவர்களுடையது. இன்றைக்கும் அவர்களுடைய ஒவ்வொரு முக்கியமான பிரச்சினைகளுக்கும் என்னை அழைக்காமல் விட்டதில்லை. ஆனால் தமிழ்நாட்டில்தான் என் எழுத்தை மதிக்க நாதியில்லை. நாற்பத்தி எட்டாயிரம் ஓவாய்க்கு ஒரு கைக்கடிகாரம் அணிந்து கொண்டு அடுத்த வேளைச் சோற்றுக்குப் பிச்சை எடுக்கும் தலையெழுத்து தமிழ் எழுத்தாளனுக்கு மட்டுமே வாய்த்திருக்கும்.

இதையெல்லாம் இங்கே சொல்லக் காரணம்?

நேற்றைக்கு என் பதிப்பாளர் அழைத்தார். எனக்கும் அவருக்குமான உரையாடல்:
“சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நீங்கள் எழுதிய புத்தகம் ஸ்டால் எண்: 448 மற்றும் 176ல் கிடைக்கிறது”

“நான் எழுதிய டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதைத் தொகுப்பு ஸ்டால் எண் 448 மற்றும் 176ல் கிடைக்கிறதா?”

“ஆமாம் பரிசல்.. ஸ்டால் எண் 448 மற்றும் 176ல் கிடைக்கிறது. ஆனால் இதை நீங்கள் உங்கள் பதிவில் போடவேண்டாம்”

எனக்குப் புரிந்துவிட்டது. இருந்தாலும் கேட்டேன்.

“நான் எழுதிய டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதைத் தொகுப்பு ஸ்டால் எண் 448 மற்றும் 176ல் கிடைக்கிறது என்பதை ஏன் எழுதவேண்டாம் என்கிறீர்கள்?”

“புத்தகக் கண்காட்சி 17ம் தேதி வரைக்கும்தான் நடக்கிறது. நீங்கள் எழுதிய புத்தகம் ஸ்டால் எண்: 448 மற்றும் 176ல் கிடைக்கிறது என்பதைப் பதிவில் எழுதினால் அசுர கதியில் அவை விற்றுத்தீரும் பட்சத்தில் உடனடியாக அடுத்தடுத்த பதிப்புகள் போட முடியாதே அதனால்தான் சொன்னேன்”

நான் ஃபோனை அணைத்துவிட்டேன். என்ன கொடுமை பாருங்கள்.

சிலி நாட்டின் MEKRE TOZXCO (இதை மெக்ரே டோழ்ஸ்கோ என்று உச்சரிப்பார்கள் சிலர். ஆனால் இவர் பெயரை கேம்சே ஓஸ்கோ என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் இரண்டே பேர்தான். ஒன்று நான். இன்னொன்று அவரது அம்மா) புத்தகம் வெளியானபோது வெளியான அன்றே விற்றுத்தீர அந்நாட்டின் அதிபர் தலையிட்டு ஒரே நாளில் தலா 5 பிரதிகள் கொண்ட நாற்பது பதிப்புகளை அச்சிட்டுக் கொடுத்தாராம். இங்கேதான் இந்தநிலை!

இதைப்பற்றி மேலும் பேசி என் இதயத்துடிப்பை அதிகரித்துக் கொள்ள விருப்பமில்லை. இரவு ரெண்டு இட்லி வாங்க வழியில்லை. கிம் கி டுக்கின் திருட்டு டிவிடியை நண்பர் பார்க்கக் கூப்பிட்டிருக்கிறார். அவரது பி எம் டபிள்யூவுக்காக வெய்ட்டிங். பிறகு சந்திக்கிறேன்.


.

62 comments:

ILA (a) இளா said...

ங்கொய்யால விளம்பரத்துக்கு அவர்தான் ‘சாம்பாரா’. ஆமாம் வலது - மேல் பக்க முனையில் “சென்னைப் புத்தகக் கண்காட்சியில் - ஸ்டால் எண்: 448 மற்றும் 176ல் கிடைக்கும்” அப்படிங்கிறது ஏன் எனக்கு மட்டும் தெரியல?

பிச்சைப்பாத்திரம் said...

//இவர் பெயரை கேம்சே ஓஸ்கோ என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் இரண்டே பேர்தான். ஒன்று நான். இன்னொன்று அவரது அம்மா//

செம நக்கல். :-)

Balakumar Vijayaraman said...

அடுத்து என்ன வாசகர் கடிதம் தானே!
எப்படி, நீங்க சொன்ன மாதிரி நான் எழுதி அனுப்பனுமா, இல்ல என் சார்பா நீங்களே எழுதிக்கிவீங்களா?

அப்புறம் சண்டை போட ஆள் வேணும்னா சொல்லுங்க, இங்க‌ சீப் ரேட்ல நம்ம பசங்க கிடைப்பாங்க.

MSK / Saravana said...

//இவர் பெயரை கேம்சே ஓஸ்கோ என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் இரண்டே பேர்தான். ஒன்று நான். இன்னொன்று அவரது அம்மா//

ROTFL :)))))

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//கிம் கி டுக்கின் திருட்டு டிவிடியை நண்பர் பார்க்கக் கூப்பிட்டிருக்கிறார். அவரது பி எம் டபிள்யூவுக்காக வெய்ட்டிங். பிறகு சந்திக்கிறேன்.//

ha ha..

பெருசு said...

//சிலி நாட்டின் MEKRE TOZXCO//
இப்பிடி ஒரு பிட்டை போட்டு
சாரு ரேஞ்சுக்கு அடி போடுறீங்களே
பரிசல்.

இவன் சிவன் said...

நொறுக்கல்... அவர்லாம் எப்பயோ நோபல் பரிசு வாங்க வேண்டியவருங்க...

அமர பாரதி said...

உங்களோட இந்த புத்தகத்தப் பத்தி தமிழகத்தில் ஒவ்வொரு நகரமும், கிராமமும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று சொல்லிக் கொள்கிறேன். புத்தகம் இந்த கண்காட்சியில் மட்டும் 2000000 பிரதிகள் விற்க வேண்டும்.

அது சரி, அடுத்த புத்தக வெளியீடு எப்போது என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Unknown said...

நக்கல்...

மேவி... said...

வுஸ் ..... முடியல

Mahesh said...

unfortunately you are not a latin-american writer :((((

சி.பி.செந்தில்குமார் said...

எழுத்தாளனுக்கு தமிழ்நாட்டில் என்றும், மரியாதை இருந்த தில்லை. சுபா வசனம் எழுதிய நாம் இருவர் நமக்கு இருவர் படத்துக்கு வெறும் ஒரு லட்சம் மட்டுமே சம்பளமாம்.அவரது நாவலுகு ரூ2000 மட்டும்தான் தர்றாங்களாம். ராஜேஷ்குமாருக்கே ரூ 5000 தான்.

எனவே நாம்தான் நம் மனதை பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும். உங்க்ள் வேதனையையும் ,உணர்வையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ஆனந்த விகடனில் ட்வீட்டரில் 8 லட்சம் மக்களை கவர்கிறீர்களே அது ஒன்று போதாதா?

சி.பி.செந்தில்குமார் said...

15 வருடங்களாக நீங்கள் பத்திரிக்கைகளில் எழுதி வருவதை நான் அறிவேன். ஆனால் எழுத்து வீரியம் இருக்கும் அளவு நமக்கு பெயரோ புகழோ பணமோ கிடைத்ததா? என்றால் இல்லை என்றே வருத்தத்துடன் சொல்ல வெண்டி இருக்கிறது.. என்ன செய்வது?

பெயரில்லா பெரிய பெருமாள் said...

/*நாற்பத்தி எட்டாயிரம் ஓவாய்க்கு ஒரு கைக்கடிகாரம் அணிந்து கொண்டு அடுத்த வேளைச் சோற்றுக்குப் பிச்சை எடுக்கும் தலையெழுத்து தமிழ் எழுத்தாளனுக்கு மட்டுமே வாய்த்திருக்கும். */

எனக்கும் இதே சந்தேகம். அது கைகடிகாரம் அல்ல. கூலிங் கிளாஸ்.
ரொம்ப நாள் முன்னாடி ஆ.வில அவரோட வளர்ப்பு பிராணி போட்டோ பார்த்ததில் இருந்தே எனக்கு சந்தேகம்.

Anonymous said...

//“புத்தகக் கண்காட்சி 17ம் தேதி வரைக்கும்தான் நடக்கிறது. நீங்கள் எழுதிய புத்தகம் ஸ்டால் எண்: 448 மற்றும் 176ல் கிடைக்கிறது என்பதைப் பதிவில் எழுதினால் அசுர கதியில் அவை விற்றுத்தீரும் பட்சத்தில் உடனடியாக அடுத்தடுத்த பதிப்புகள் போட முடியாதே அதனால்தான் சொன்னேன்”//
ஏற்கனவே இருக்க ஒரு கொடுமை போதாதா? நீங்க வேற ஆரம்பிச்சுட்டீங்களா?

a said...

ithukku perthann kadai thenkaya yeduthu vazhippillaiyarukku udaikkarathaa....

rasithenn....

Mahesh said...

@ சி.பி.செந்தில்குமார் : Have you taken this seriously? I guess you havent got the intended pun here.

பினாத்தல் சுரேஷ் said...

டியர் பரிசல்,

உங்கள் சிருகதாய்த் தொகுப்பு வாஙினேன், வாங்கியவுடன் பூஜையறையில் வைத்துவிட்டதால் ஒருவருடமாவது ஆகும் படிக்க என்று நினைக்கிறேன்.

மேலே கூவ, மேலே கொடுக்கவும்.

2நன்றி.

Romeoboy said...

செம நக்கல் .... பதிவு அருமை தலைவரே ..

புன்னகை said...

Came here after a very long time! ROTFL :-)

rajasundararajan said...

நன்றி, எழுத்தாளரே, உங்கள் புத்தகங்கள் இரண்டையும் வாங்குவேன். ஸ்டால் எண்: 448 & 176.
நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் ;)

புரட்சித்தலைவன் said...

ஊட்டி மசினகுடிக்கு அருகே தெரியும் ஒற்றையடிப்பாதை வழியே சரியாக நாற்பத்தி ஆறேகால் நிமிடம் நடந்தால் தெரியும் பழங்குடியினரிடம் என்னுடைய எழுத்தைப் பற்றிக் கேட்டால் சொல்வார்கள் ‘க்க்வா ச்சா ம்மா ச்சே க்கீ க்கூ’ என்று. எழுத்தாளர்களை மதிக்கத் தெரிந்த சந்ததி அவர்களுடையது.//

‘க்க்வா ச்சா ம்மா ச்சே க்கீ க்கூ

அகல்விளக்கு said...

அட அட அட...
சீக்கிரமாவே பிரவல எழுத்தாளர் ஆயிடுவீங்க பரிசல் அண்ணா... அப்படியே லத்தீன்-அமெரிக்க-கிரேக்க-பாரசீக இலக்கிய எழுத்தாளர் மாதிரியே எழுதுறீங்க... :-)

#சி.பி. சார்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

CS. Mohan Kumar said...

உங்க புக்கு எந்த ஸ்டால்களில் கிடைக்கும் என்பதை மறுபடி மறுபடி மறுபடி மறுபடி சொல்ல எழுதப்பட்ட பதிவு மாதிரி தெரியுதே !!

க.பாலாசி said...

இம்மாம்பெரிய போஸ்ட் போட்டு நீங்க செஞ்ச வேலையை எங்கண்ணன் சி.பி.எஸ் நாலுவரி கமெண்ட்லேயே செஞ்சிட்டார்.. :-)))))

ஆறுமுகம் said...

*நாற்பத்தி எட்டாயிரம் ஓவாய்க்கு ஒரு கைக்கடிகாரம் அணிந்து கொண்டு அடுத்த வேளைச் சோற்றுக்குப் பிச்சை எடுக்கும் தலையெழுத்து தமிழ் எழுத்தாளனுக்கு மட்டுமே வாய்த்திருக்கும். */

எனக்கும் இதே சந்தேகம். அது கைகடிகாரம் அல்ல. கூலிங் கிளாஸ்.
ரொம்ப நாள் முன்னாடி ஆ.வில அந்த பிராணியோட வளர்ப்பு பிராணி போட்டோ பார்த்ததில் இருந்தே எனக்கு சந்தேகம்.

ஈரோடு கதிர் said...

மனசு வலிக்குதுங்க பரிசல். இந்த வேதனை எதன் பொருட்டும் தீராது. இப்படிப் பட்ட மோசமான சூழலில் எழுதுவதற்கென்று.. ச்ச்சீய்.. டைப்புவதற்கென்று கீ போர்டை தொடும்போது நெஞ்சம் கொதிக்கிறது ((((:

ஈரோடு கதிர் said...

இந்த தமிழ் எழுத்தாளனின் அவல நிலையைத் தீர்க்க நம்மை மாதிரி திறமை வாய்ந்த பதிவர்கள்தான் ஏதாவது செய்ய வேண்ண்ண்ண்ண்ண்டும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்

ஈரோடு கதிர் said...

நீங்கள் அனுமதி கொடுத்தால் பரிசல்காரனின் பரிதாப நிலைன்னு ஒரு தலைப்பு டகால்டியா வச்சு இடுகை போட்டேன்னு வச்சுக்குங்க, எனக்கு ஹிட் தேறும்... ங்கொய்யாலே, உங்க அவலத்துக்கும் ஒரு தீர்வு கிடைக்குங்க பரிசல்!!!

ஈரோடு கதிர் said...
This comment has been removed by the author.
ஆறுமுகம் said...

Hi Charu
The last article in the blog is the same as this one http://charuonline.com/blog/?p=1476 . Names are different too .
Deepika
Sorry Deepika. சமயங்களில் இது போன்ற தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன. புத்தகமாக வரும் போது சரி செய்து விடலாம்.
சாரு
4.1.11.
12.08 a.m.
Comments

இவர் நேர்மயை பற்றி பேசுகிறார்

Unknown said...

மிஷ்கினுக்கு அடுத்து நீங்கதானா :) அந்த சீரியலே இன்னும் முடியவில்லை. உங்களுக்கு நேரம் சரியில்லை போலிருக்கு

குறையொன்றுமில்லை. said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

karthi said...

hilarios

அமுதா கிருஷ்ணா said...

லொள்ளு..

Mohan said...

ரெமி மார்ட்டினை மறந்துட்டீங்களே பாஸ்! பதிவு செமையா இருந்துச்சு!

அன்பேசிவம் said...

:)

செல்வா said...

சத்தியமா எனக்கு இதுக்கு கமெண்ட் போடவே தெரியல அண்ணா .!

விக்னேஷ்வரி said...

செம நக்கல் பதிவு. கூடவே விளம்பரமும் பண்ணியாச்சு. குட்.

SurveySan said...

naraya perukku idhan ulkuththu puriyala polarukke?

flashback padhivu idho:http://surveysan.blogspot.com/2008/10/ceo.html

சுசி said...

:)

ஜி.ராஜ்மோகன் said...

என்ன கொடுமை பரிசல் சார் இது! சத்தியமாக நீங்கள் இந்தப்பதிவில் யாரைப்பற்றியும்குறிப்பிடவில்லை என்று தெரிகிறது! ழார் பத்தாய்., கொய்யாலே குசாய், இசாகோ மோரியோ,இவர்களை எல்லாம் விட்டு விட்டீர்களே!

வார்த்தை said...

ebookee.comல இந்த புத்தகம் கிடைக்கல.....
வேற எதுனா டோர்றேன்ட் சைட்ல கிடைக்குமா ....

ஷர்புதீன் said...

:)
vada poche

இளங்கோ said...

Hahahaha..
Sirithuk konde irukkiren.. :)

Ganesan said...

அடித்து ஆடுங்கள் பரிசல்.

iniyavan said...

பரிசல்,

உங்களின் இந்த இடுகை எனக்கு பிடிக்கவில்லை.

என்றும் அன்புடன்,
என்.உலகநாதன்

அவிய்ங்க ராசா said...

sariyaana nakkal...)))

ரவி said...

கலக்கல் !!!

கிருபாநந்தினி said...

வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி, கேலி, கிண்டல், நையாண்டி என விளாசித் தள்ளிட்டீங்க பரிசல்! சுய நக்கல் எல்லாருக்கும் வந்துடாது. உங்க சிறுகதைகளும் சுவாரஸ்யமாவே இருக்கும்னு நம்புறேன்.

vinu said...

vaalthukkal bro

Ganpat said...

ஒரு கடிதம்,ஒரு பதில்!

அன்புள்ள பரிசல்,

உங்கள் பதிவைக்கண்டு மிக வேதனை அடைந்தேன்.சென்னையிலிருந்து
5oo km கூட இல்லாத எங்கள் விஜயவாடாவில் உங்களை தெய்வமாக வழிபடும்போது சென்னையில் மட்டும் ஏன் இப்படி?பேசாமல் நீங்கள் தமிழ் எழுதுவதை நிறுத்தி விட்டு தெலுகில் மட்டும் எழுதலாமே!
அன்பு வாசகி,
விஜயவாடா விஜயா
பி.கு:சென்ற முறை உங்களிடம் autograph வாங்கும்போது நீங்கள் என்னிடம் வாங்கிய பேனாவை திரும்பிக்கொடுக்கவில்லை.பரவாயில்லை அதை என் அன்பு பரிசாக வைத்துக்கொள்ளவும்

அன்புள்ள விஜயா,
உங்கள் மடலை காலை இரண்டு மணிக்கு படித்து என் mood totally out.நான் உங்களுக்கு என்ன தீங்கு செய்தேன்? என் இப்படி முட்டாள்தனமான ,மூர்கதனமான ஒரு யோசனையை எனக்கு சொல்கிறீர்கள்? நான் கேனையந்தான் ஒப்புகொள் கிறேன் ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு இல்லை இதுவே ஒரு ஆண் பதிவர் இதை எழுதியிருந்தால் "*த்த,*ம்மால' என்றெல்லாம் எழுதியிருப்பேன் (*இடத்தில் "ஓ" போட்டுக்கொள்ளவும்)
ஏதோ பெண் என்பதால் நாகரீகம் கருதி அமைதிகாக்கிறேன்.
என்னுடைய பிரச்சினையே இதுதான்.
என் எதிரிகள் என்னை வெறும் கையால் அடிக்கிறார்கள்.என் நண்பர்களோ என்னை செருப்பால் அடிக்கிறார்கள்
இனிமேல் எனக்கு கடிதம் எழுதாதீர்கள்
நன்றி,
பரிசல்காரன்

damildumil said...

Bank Account number பதிவு எழுதிய நேரம் இரண்டையும் எழுத மறந்துட்டீங்க போல

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அருமை :)

ஷர்புதீன் said...

கொய்யாலே... வட போச்சே

ஆமா லக்கி எங்கே??!!!

Unknown said...

Parisal - Arumai....

Ganpat - Super

Unknown said...

தமிழ் எழுத்தை வளர்க்கிறேன் என்று சொல்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.
நீங்கள் தமிழ் மொழியையும் , தமிழ் எழுத்துக்களையும் வளர்கிறேன் என்று ஆதாரத்துடன் முன் வந்தால் எங்கள் சங்கத்தின் சார்பாக இந்தியப் புகழ் நாயகி " நீரா ராடியா " வின் குத்து டான்ஸ் வீடியோ டி.வி.டி முற்றிலும் இலவசமாக தரப்படும்.இங்ஙனம்,
லவ்டேல் மேடி,
செயலாளர்,
த.ஷ.கி.மு.பே (தலைவி ஷகிலா கில்மா முன்னேற்றப் பேரவை )
ஈரோடு கிளை.

Dubukku said...

செம நக்கல்ஸ் :)))) தூள்

ஆர்வா said...

//ரஜினிகாந்திடம் இதே போல அவர் பேசிய பேச்சுகளின் தொகுப்புப் போட ஃபோனில்தான் அனுமதி கேட்பீர்களா?”//

என்னா ஒரு நக்கலு???

//இன்றைக்கும் அவர்களுடைய ஒவ்வொரு முக்கியமான பிரச்சினைகளுக்கும் என்னை அழைக்காமல் விட்டதில்லை. //

ஓ..அவங்களுக்கு மைனர் குகுகுகுகு.... நீங்க தானா?
குருன்னு சொல்ல வந்தேன்..

எனக்கும் கிம் டூ கிக்' படத்தோட ரெண்டு காப்பி போட்டு கொடுங்க..
இல்ல உங்க கூட டூ விட்டுடுவேன்

Kanagu said...

ரொம்ப ரசித்து படித்தேன் Boss. :-). simply superb !!!
Ganpat கமெண்ட் யும்...

nandhu said...

அடுத்து என்ன வாசகர் கடிதம் தானே!
எப்படி, நீங்க சொன்ன மாதிரி நான் எழுதி அனுப்பனுமா, இல்ல என் சார்பா நீங்களே எழுதிக்கிவீங்களா?

அப்புறம் சண்டை போட ஆள் வேணும்னா சொல்லுங்க, இங்க‌ சீப் ரேட்ல நம்ம பசங்க கிடைப்பாங்க.

உங்கள் சிருகதாய்த் தொகுப்பு வாஙினேன், வாங்கியவுடன் பூஜையறையில் வைத்துவிட்டதால் ஒருவருடமாவது ஆகும் படிக்க என்று நினைக்கிறேன்.

மேலே கூவ, மேலே கொடுக்கவும்.

மிஷ்கினுக்கு அடுத்து நீங்கதானா :) அந்த சீரியலே இன்னும் முடியவில்லை. உங்களுக்கு நேரம் சரியில்லை போலிருக்கு

Bank Account number பதிவு எழுதிய நேரம் இரண்டையும் எழுத மறந்துட்டீங்க போல


செம நக்கல் .... பதிவு.