கோவையில் டிச. 19 அன்று விஷணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக அ.மாதவனுக்கு பரிசளித்த விழாவிற்கு மூன்று மணி நேரம் முன்பாகவே வெயிலான், கோபி ராமமூர்த்தி, நண்பர் சௌந்தருடன் சென்றேன். ஜெயமோகனும், மணிரத்னமும் ஒரு ஃப்ளாட்டில் இருக்க சுற்றிலும் வாசகர் கூட்டம். ராமசந்திர ஷர்மா எனும் இளைஞர் கர்நாடக சங்கீதத்தில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். அருகில் சென்றமர்ந்தோம்.
மணிரத்னத்தின் அருகில் அமர்ந்திருந்த நண்பர் சுரேஷிடம் சிலர் ‘நீங்களும் பாடுவீங்கள்ல.. பாடுங்களேன்’ என்று சொல்ல அவர் ‘ஐயையோ.. எனக்கு அவரை கர்நாடக சங்கீதமெல்லாம் பாட வராதுங்க.. சாதாரண சினிமாப்பாட்டுதான் தெரியும்’ என்று சொன்னார். உடனே நிஜமான ’திடுக்’கிடலோடு சிரித்துக் கொண்டே கேட்டார் மணிரத்னம். “என்னது? ‘சாதாரண’ சினிமாப்பாட்டா?’.
அறையிலிருந்தோர் சிரிப்பை நிறுத்த அரைநிமிடமானது.
அங்கே இருந்த இரண்டு மணி நேரத்தில் மணிரத்னம் இரண்டாவது முறை பேசியது நான் கேமராவின் லென்ஸை கழட்டாமல் ஃபோட்டோ எடுக்க முயல ‘லென்ஸ்’ என்று என்னைப் பார்த்துச் சொன்னது. யாரோ ‘ட்விட்டர் உங்களுக்காகத்தான் வந்திருக்கும் போல’ என்றபோதுகூட சிரிப்புதான். எல்லாரும் எழுதுவதும் சொல்வதும் நூறு சதம் நிஜம். அளவாகத்தான் பேசுகிறார். ஆனால் எல்லாவற்றையும் மிக உன்னிப்பாக கவனிக்கிறார். ஜெயிக்க வேண்டுமென்றால் அவரை மாதிரி பேசாமல் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டதை, அடுத்த நாள் முதல் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் மாய்ந்து மாய்ந்து பேசியபடியே இருந்தேன்.
மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மொபைலில் அலுவலக நண்பனிடம் காண்பித்தேன். சிலிர்த்துப் போனவன், கொஞ்ச நேரத்தில் அருகில் வந்த மற்றொருவரிடம் சொன்னான். “ஹேய்.. இங்க பாரு.. நேத்து பாலசந்தரைப் போய்ப் பார்த்துட்டு வந்திருக்காரு..” நான் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......
இதை இங்கு சொல்லக் காரணம் அவன் தந்தை பிரபல தியேட்டரொன்றில் ஆபரேட்டர் வேலையை மனமுவந்து செய்கிறவர்!
-----------------------------------------
ஜெனரல் மோட்டார் கம்பெனி, ஆசிய மார்க்கெட்டைக் கைப்பற்ற ஷாங்காயில் ஒரு ப்ரமோ-ஈவெண்ட் நடத்தியது. அதிகம் விற்பனையாகும் தன் கெடில்லாக் ப்ராண்ட் கார்களை வைத்து. V-Day என்றழைக்கப்பட்ட அந்த நாளின் நடந்த நிகழ்வின் வீடியோ பதிவு கீழே. தவறாமல் முழுமையாகப் பார்க்கவும். நான் மிக ரசிக்கும் வீடியோக்களில் ஒன்று..
என்ன.. பார்க்கும்போது ஒருமுறையேனும் இதயத்துடிப்பு அதிகரித்ததா இல்லையா? Great Na?
-------------------------------------------------
2011ல் என்ன சபதம் என்று ட்விட்டர்லும், சாட்டிலும் சில நண்பர்கள் கேட்கிறார்கள். சபதம் எடுப்பதில் அபத்தமே அதிகம் என்று நினைக்கும் கட்சி நான். எடுக்கும் சபதமெதுவும் பின்பற்ற முடிவதில்லை.
இந்த வருஷம் ஒரே விஷயம். வாங்கியவை, ஓசியில் வந்தவை என்று பல புத்தகங்கள் சேர்ந்து விட்டன. ஒரு மாதமாக எழுதாமல் இருந்த காலத்தில் மூன்று நான்கு புத்தகங்களைப் படிக்க முடிந்தது. இந்த வருட முற்பாதிக்குள் இப்போது வரை படிக்காமல் வைத்திருக்கும் சில புத்தகங்களை படித்து முடிக்கப் போகிறேன். அதற்குப் பிறகுதான் புதிய புத்தகங்கள் வாங்கப்போகிறேன்... ‘வாங்கினால் அடிவிழும்’ என்று மிரட்டல் வீட்டில். பார்ப்போம்! இது சபதமெல்லாம் இல்லை சாமி!
டிக்ஷ்னரி வாங்கி முப்பது வருஷத்துக்கு மேலாகிவிட்டது.. அதையெல்லாம் படிச்சியா என்ன என்று கேட்காதீர்கள். ஐ’ம் பாவம்!
--------------------------------------------------
பாருங்களேன்.. போன பாராவை எழுதி முடித்தது நேற்று. இன்று காலை புத்தக ஸ்டால் வைத்திருக்கும் நண்பரிடமிருந்து ஃபோன். ‘வாலி 1000 வந்துடுச்சு’ ரெண்டு தொகுதி 440/-. எனக்கு இத்தொகுப்பு வெளியாகிறது என்ற செய்தி கேட்ட நாளிலிருந்தே வாங்க ஆசை. பல பாடல்கள் வாலியா, கண்ணதாசனா என்று குழம்பிக் கொண்டிருப்பேன். போலவே, வைரமுத்துவும் ஆயிரம் பாட்டுக்களைத் தொகுத்துவிட்டார்.
சபதமாவது மண்ணாங்கட்டியாவது, வாங்கித்தான் ஆகவேண்டும். போதாக்குறைக்கு இம்மாத இறுதியில் புத்தகக் கண்காட்சி வருகிறது திருப்பூரில்! நம்மெல்லாம் என்னைக்குச் சொல்பேச்சு கேட்டிருக்கோம்.. ஹூம்!
---------------------
Twitter Updates:
என்னைப் பின் தொடரும் 2322 (Twitterல் 1058, Blogல் 882, BUZZல் 382) பேருக்கும் (கட்சி ஆரம்பிச்சுடலாம் போலிருக்கே) புத்தாண்டு வாழ்த்துகள்!
மொத்த க்ரிக்கெட் ராமாயணத்தில் ராமர் சச்சின்தான். ஆனால் டெஸ்ட்டில் மட்டும் லட்சுமணன்தான் ராமர்!
லாண்ட்க்ரூஸரில் ஒருத்தர். அருகில் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு ஒரு மினிடோர். எது விலையுயர்ந்த வண்டி என்பதில் குழப்பமேற்படுகிறது எனக்கு.
பாஸுடன் டின்னர் சாப்பிடுகையில், ஆனியன் ரோஸ்ட் ஆர்டர் செய்ய பயமாயிருக்கிறது. ரொம்பப் பணக்காரன் என்று நினைத்துவிடுவாரோ என்று..
காதலிக்கும்போதும் தூக்கம் வருவதில்லை. கல்யாணம் ஆனபிறகும் தூக்கம் வருவதில்லை. ஆனால் இரண்டுக்குமான காரணங்கள்தான் வேறு வேறு..
நாளை கார்த்திகையாம். தீபமேற்றமேண்டுமாம். கண் சிமிட்டாமல் இருக்கச் சொல்ல வேண்டும் தோழியை.
ரத்தன் டாடா DOn't COme for MOre-ன்னு ராசாகிட்ட சொன்னதுதான் DO CO MO -வோ?
வேலை தேடும் இளைஞர்களை சி.பி.ஐ-க்கு சேர்த்து விடுங்கள். அவ்வளவு ஆட்கள் தேவைப்படுமளவு ஊழல்கள் பெருகிவிட்டன. (அதுக்கும் லஞ்சம் கேட்பாங்களோ?)
நூல் விலையுயர்வைக் கண்டித்து நாளை உண்ணாவிரதம். நானும் கலந்து கொள்ளப்போகிறேன் என்றேன் ‘ லஞ்ச் என்ன செய்ய?’ என்கிறாள் மனைவி.
--------
20 comments:
Video Super
// நாளை கார்த்திகையாம். தீபமேற்றமேண்டுமாம். கண் சிமிட்டாமல் இருக்கச் சொல்ல வேண்டும் தோழியை.//
நீங்களுமா...
baasu! hpy new year!!
minidor onion soooperu !!
ரைட்டு..!!
ட்வீட்டர் அனைத்தும் ஸ்வீட்டர்
பகிர்வுகள் அனைத்தும் சுவாரசியம். குறிப்பாக ட்வீட்டுகள் எல்லாம் ஸ்வீட்டுகள்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
//
என்னைப் பின் தொடரும் 2322 (Twitterல் 1058, Blogல் 882, BUZZல் 382) பேருக்கும் //
கட்சின்னவுடனே கணக்கும் அவங்கள மாதிரியே காட்றீங்களே. ஏன் ஒரே ஆளே மூணுலயும் ஃபாலோ பண்ண மாட்டாங்களா????
ரொம்ப நாள் கழிச்சு அவியல் வந்திருக்கு...
எப்பவும் போல அருமை பரிசல் !!!
மணி என்ன படம் பண்றார்னு சொல்லலையா??
அவியல் சூப்பர்..... இப்பல்லாம் அவியல்ல நிறைய வெங்காயம் சேக்குறீங்க...
ட்விட்டர்லாம் சூப்பர் பரிசல்...
க்ளுக்னு சிரிச்சட்டேன்....
லாண்ட்க்ரூஸரில் ஒருத்தர். அருகில் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு ஒரு மினிடோர். எது விலையுயர்ந்த வண்டி என்பதில் குழப்பமேற்படுகிறது எனக்கு.
கொன்னு கொலையெடுத்திட்டய்யா...!
தல ,பதிவு சூப்பர். ஆனா கலக்கலான ட்விட்டர் மேட்டரை தனி பதிவா போட்டிருக்கலா,செம கலக்கல் வாத்தியாரே..இந்த வார விகடனில் 3 வரும்னு கெஸ்ஸிங்க்
அண்ணா மணிரத்தினம் மேட்டர் அருமை .!
பரிசல் சார் ! வணக்கம் ! எல்லாமே சூப்பர் ட்வீட்ஸ் ! அவியல் அருமை!
டைம் கெடைச்சா நம்ம வலைப்பூவிற்கு வாருங்கள்
சுவாரஸ்யமான பகிர்வுகள். நன்றி.
எல்லாமே வழக்க போல சிறப்பு. கூடுதலாக ட்விட்ஸ்.!
ஜெயிக்க வேண்டுமென்றால் அவரை மாதிரி பேசாமல் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டதை, அடுத்த நாள் முதல் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் மாய்ந்து மாய்ந்து பேசியபடியே இருந்தேன்.
boss idhu ennoda dialogue
Post a Comment