Thursday, January 20, 2011

அவியல் 20 ஜனவரி 2011

பொங்கல் விடுமுறை முடிந்து நண்பர் பேருந்தில் வந்து கொண்டிருக்கிறார். டிக்கெட் எடுக்கும்போது, இவருக்கு முன் சீட்டில் தன் ஐந்து -ஆறு வயது மதிக்கத்தக்க மகனுடன் அமர்ந்திருந்த குடும்பத்தலைவர் இரண்டரை டிக்கெட் என்று கேட்டிருக்கிறார். கண்டக்டர் ‘மூணு டிக்கெட்டா எடுத்துட்டீங்கன்னா பையன் நல்லா உட்கார்ந்துட்டு வரலாம். அரை டிக்கெட் எடுத்தீங்கன்னா இன்னொருத்தரை உட்கார வைக்க வேண்டிவரும். இல்லீன்னா செக்கிங் இன்ஸ்பெக்டருக்கு நான் பதில் சொல்லணும்’ என்றிருக்கிறார்.

அவ்வளவுதான். பயங்கரமாகக் கத்த ஆரம்பித்துவிட்டாராம் அந்தப் பயணி. ‘அத்தனை லட்சம் கொள்ளையடிக்கறாங்க... இந்த அரைடிக்கெட்லதான் நாட்டைக் காப்பாத்தப் போற நீ’ என்று ஒரே அர்ச்சனையாம். சகட்டு மேனிக்கு அரசியல் பேச ஆரம்பித்துவிட்டாராம் அந்தப் பயணி. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்து ‘அரை டிக்கெட்டு என்னாய்யா இந்தாளு கவுன்சிலர்லேர்ந்து ஒபாமா வரைக்கு எல்லாரையும் இழுக்கறாரு?’ என்று பிற பயணிகளும் சலசலக்க ஆரம்பிக்க அவர் மனைவி படாரென எழுந்து ‘இப்ப அவரு சொன்னமாதிரி டிக்கெட் எடுங்க.. இல்லைன்னா கம்னு உட்காருங்க.. என்னாத்துக்கு இந்த வாயி?” என்று கத்த பொட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டாராம் அந்தப் பயணி.

சம்சாரம் அது மின்சாரம்!

----------------------------------

துவும் பஸ்ஸில் (கூகுள் பஸ் அல்ல. பேருந்து!) நடந்த விஷயம்.

அதிகாலை ஐந்து மணிக்கு புறப்படத் தயாராக நிற்கிற பேருந்தில் ஏறுகிறார் அவர். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. நெற்றியில் பட்டை. ‘அன்பர்களே.. நான் சிங்காரச் சென்னையிலிருந்து பழனி செல்வதற்காக வந்திருக்கிறேன். அங்கங்கே உங்களைப் போன்றவர்கள் செய்யும் தானத்தைப் பெற்று முருகனை தரிசிக்கப் போகிறேன். எந்த நிபந்தனையும் இல்லை. தானம் இடுபவர்கள் இடலாம்’ என்று கம்பீரமாக அறிவித்துவிட்டு ஒவ்வொருத்தர் அருகிலும் போய் நிற்கிறார். அருகில் நிற்கும்போதுதான் அவர் சுவாசத்தில் டாஸ்மாக் வாசனை ரொம்பவே ஓவராக இருப்பதைக் கவனித்திருக்கிறார்கள். ஒருவரும் ஒரு பைசாகூட கொடுக்கவில்லை. நடந்து நடந்து பின் படிக்கட்டுக்கு வந்தவர் சத்தமாகச் சொன்னாராம்:

“ஒருத்தரும் போடலியா? சரி.. சரி.. பார்த்துப் போங்க.. சபரிமலை ஞாபகமிருக்கில்ல? அந்த மாதிரி ஆகாம இருந்தாச் சரி”

அடப்பாவிகளா..!

-----------------------

ட்விட்டரில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டது கீழே உள்ள புகைப்படம்:




(பெரிதாகப் பார்க்க: http://www.ibelieveinadv.com/commons/enjoy-the-wait.jpg)

காத்திருக்கும் நேரத்தை எவ்வளவு சுவாரஸ்யமாக்குகிறார்கள். பலே யோசனை இது. அதுவும் நீண்ட வரிசையில் காத்திருக்கையில் கீழிருந்து ஒரு கதை ஆரம்பித்து மேலே முடிவது போலிருக்கும் அந்த ஐந்தாவது யோசனை ஆஹா! எத்தனை இடைவெளிவிட்டு அழகாக நகரும் க்யூ!

இந்தியாவுலயும் ஆராச்சும் செய்ங்கப்பா இந்த மாதிரி யோசனையெல்லாம்!

-------------------------------------------

ரு டெக்னிகல் மேட்டர்: ட்விட்டரில் பலர் அடிக்கடி வந்து ‘இங்க்லீஷ்ல டைப்புங்க. நான் மொபைல்ல படிக்கறேன். தமிழ்ல அடிச்சா படிக்க முடியாது’ என்கிறார்கள். நீங்கள் ஓபரா மினியில் உலவுபவராக இருந்தால் தமிழில் படிக்க முடியும்..

ஓபரா மினி அட்ரஸ் பாரில் www எல்லாம் இல்லாமல் டைரக்டாக config: என்று டைப்பி ஓகே கொடுக்கவும். செட்டிங்ஸ் பகுதி வரும். அதில் கடைசியாக 'use bitmap fonts....' என்று முழ நீளத்துக்கு ஒரு கேள்வி இருக்கும். அது ‘NO’ என்றிருக்கும். அதை ‘YES’ என்று மாற்றுங்கள். இனி நீங்கள் உங்கள் வலை, ட்விட்டர், மின்னஞ்சல்களை தமிழிலேயே படிக்கலாம்!

------------------------------

மொபைல் நம்பரை மாற்றாமல் சர்வீஸ் ப்ரொவைடரை மாற்றும் வசதி இன்னும் கொஞ்சநாட்களில் வரவிருக்கிறது. 19 ரூபாய்க்கு ஓர் எஸ்ஸெம்மெஸ் தட்டிவிட்டால் நீங்கள் வேறு நெட்வொர்க்குக்குத் தாவலாமாம். ஆனால் முக்கிய விஷயம் பழைய நெட்வொர்க் கணக்கில் உங்களிடம் பாக்கி ஏதும் இருந்தால் அது புது நெட்வொர்க்கில் கணக்கில் வராது.

வரவர இந்த மொபைல் ஃபோன்காரர்கள் - சிம்கார்டு விற்பவர்கள் என்று இவர்களது வளர்ச்சி ஏகபோகமாய் ஏறிக்கொண்டிருக்கிறது. அன்றொருநாள் புதுப்பட இசைத்தட்டு ஒன்று வாங்க அலைந்து கொண்டிருந்தேன். அவிநாசியில். ஒரு சி.டி கடைகூட இல்லை. இருந்த ஒன்றிரண்டு கடைகளிலும் ஒரிஜினல் ஆடியோ சி.டி இல்லை. ‘அதெல்லாம் வருதா இப்ப?’ என்று ஒரு கடைக்காரர் கேட்டது அதிர்ச்சி!அதே நேரம் பத்து கடைகளுக்கு ஒரு கடை சிம்கார்டு, செல்ஃபோன் கடையாக இருந்தது.

என் நண்பர் ஒருவர் புத்தாண்டு அன்று way to smsலிருந்து ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். ‘இன்று முதல் நான் அலைபேசி உபயோகிப்பதிலை என்று முடிவு செய்திருக்கிறேன். என் மின்னஞ்சல் முகவரி இது:........................ நான் தங்களைத் தொடர்புகொண்டு ஏதேனும் சொல்ல விரும்பினால் way to sms இருந்து தொடர்பு கொள்கிறேன். நீங்கள் என்னிடம் ஏதேனும் சொல்ல விரும்பினால் ஒரு மின்னஞ்சல் தட்டுங்கள்’ என்று.

பொறாமையாக இருந்தது அவரெடுத்த முடிவு கண்டு!

-----------------------------------

மெக்கானிக் ஷாப் ஒன்றில் கண்ட வாசகம்:

மாதா, பிதா, ஸ்குரு, தெய்வம்.

----------------------


.

22 comments:

கொல்லான் said...

Fine Guru...
//மாதா, பிதா, ஸ்குரு, தெய்வம்.//

Anand said...

Last one is the highlight.

Intha mathiri regular'a post's pakka evlo nalla irukku. Hope this continues.

Apologies for the 'pinootam' in English.

Ananth,
Chicago.

Philosophy Prabhakaran said...

இதுவாச்சு பரவாயில்லை இன்னும் சில பேர் மூணு ரூபாய் டிக்கெட்டுக்கு கஞ்சத்தனம் பார்த்து 6 வயது பிள்ளையை மூன்று வயது என்று கூஒச்சமே படாமல் பொய் சொல்வார்கள்...

மாணவன் said...

“அவியல்” அசத்தல் சார்

தகவல்கள் அருமை

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

Rathnavel Natarajan said...

Dear Krishnakumar,
Your Blog is good. When you travel by bus you can learn the world trends, our people's behaviour, different culture etc., it is enjoyable.
Sorry commenting in English, I have to learn tamil transliteration.
Thanks.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுவரசியம் பரிசல்..
அந்த புக் ஐடியா ரொம்பவும் நல்லா இருக்கு...
வரிசை இவ்ளோ தள்ளித்தள்ளி இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்..

ராம்ஜி_யாஹூ said...

LG Samsung make mobile phones dont support Tamil fonts. Even one cant download Tamil fonts at later stage.

Hence if we want to read Tamil fonts better to go for Nokia.

ஆறுமுகம் said...

ரொம்ப சுவாரசியமான பதிவு

ஜி.ராஜ்மோகன் said...

அவியல் அருமை ! மாதா, பிதா, ஸ்குரு, தெய்வம்.
எப்படித்தான் யோசிப்பாங்களோ !

கார்க்கிபவா said...

ராம்ஜி,

சேம்ச‌ங் தான் வைத்திருக்கிறேன். opera mini ட‌வுன்லோட் செய்தால் த‌மிழ் ப‌டிக்க‌லாம். நான் ப‌டித்துக் கொன்டிருக்கிறேன்

ஷர்புதீன் said...

வர வர சுஜாதா மாதிரி ஆயிட்டுவர்றீங்க

அரபுத்தமிழன் said...

இன்றைய அவியல் செம டேஸ்ட்

அன்பேசிவம் said...

நல்ல அவியல்

Anbu said...

கலக்கல் அண்ணே..

விக்னேஷ்வரி said...

வழக்கம் போல் சுவாரசியம்.

மாதா, பிதா, ஸ்குரு, தெய்வம் - நல்லாருக்கே.

சேலம் தேவா said...

தமிழை படிக்கறதுக்கு யோசனை சொன்னதுக்கு நன்றி. இதே மாதிரி தமிழை அலைபேசியில எழுதறதுக்கும் யோசனை சொன்னா நல்லாருக்கும்..!! :)

நர்சிம் said...

பின்றீங்களே.

middleclassmadhavi said...

அவியல் பிரமாதம்

Thamira said...

முதலிரண்டும் :-)))))

R.Gopi said...

தல....

செம பின்னல்....

அசத்துங்க....

venkat said...

not only our people have to learn standing in que ,they should also learn not to collapse it by intruding.

சி. முருகேஷ் பாபு said...

அன்பு பரிசல்,
அந்த வெயிட்டிங் மேட்டர் செம வெயிட்... இங்கே சென்னையில் ஹாட் சிப்ஸ் ஹோட்டலில் மெஜையில் விரிக்கும் காகிதத்தில் ஹாட் சிப்ஸ் பற்றிய குறிப்பும் சென்னையின் சிறந்த காபியாக ஹாட் சிப்ஸ் கருதப்படுவது பற்றியும் சொல்லியிருப்பார்கள். காத்திருக்கும் நேரத்தில் படிக்கலாம்.
அதேபோல எழும்பூர், ராஜா முத்தையா ஹால் அருகே உள்ள வசந்த பவனில் டேபிள் எல்லாமே சென்னை மேப் டிசைனில் இருக்கும். சாலை வழித்தடங்களைப் பார்த்துக் கொண்டு காத்திருக்கலாம். பல சமயங்களில் உரையாடலைத் தொடங்க அந்த மேப் வழியமைத்துக் கொடுக்கும்.
சுவாரஸ்யமான பதிவு!