Saturday, August 1, 2009

Hello Dear...

எனக்கு வந்த ஒரு கடிதம்............


Hello Dear


(ann_5owen@yahoo.com)

Greetings,

My name is Ann,

i saw your profile today at
(www.my-matrimony.com)and became intrested in you,i will also like to know you the more,and i want you to send an email to my email address so i can give you my picture for you to know whom i am.Here is my email address (ann_5owen@yahoo.com) i believe we can move from here!

(Remember the distance or colour does not matter but love matters a lot in life)

I will be happy to seeing a good responds from you

Thanks and remain blessed.

Your's in love Ann.

My email address (ann_5owen@yahoo.com


.

என்ன கொடுமைங்க இது?


.

சரி... ஒரு மீள் பதிவு...

************************************************

சமூகக் கடமை



"அண்ணா.. வாங்கண்ணா.. என்ன சொல்லாமக் கொள்ளாம திடீர்னு?"

"என் பொண்ணு காலேஜ் அட்மிஷன் விஷயமா, ட்ரஷரில வேலை பாக்கற ராஜனைப் பார்க்க வந்தேன். உன் ஆஃபீஸ் பக்கம்தானேன்னு, அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்"

"ஸ்ரீராம் எப்படி இருக்கான்?"

"நல்லா இருக்கான் கிருஷ்ணா. அவன்தான் நீ முந்தி மாதிரி நிறைய எழுத ஆரம்பிச்சுட்ட, ஆனா இப்போ வலையுலகத்துல-ன்னு ரெண்டு நாள் முன்னாடி வீட்ல ப்ரொளஸிங் பண்ணிகிட்டு இருக்கறப்ப கூப்ட்டு காமிச்சான்"

"நீங்க பாத்தீங்களாண்ணா.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மொதல்லயெல்லாம் பத்திரிகைகள்ல என் கதை, கவிதை-ன்னு வர்றப்ப உங்ககிட்டேர்ந்து என்ன விமர்சனம் வரும்னு எதிர்பார்த்துட்டிருப்பேன். என்னென்ன விஷயங்களையெல்லாம் நாம விவாதம் பண்ணியிருப்போம்!. என் blog எப்படி இருந்துச்சுண்ணா?"

"............"

"ஏண்ணா ஒண்ணுமே சொல்ல மாட்டீங்கறீங்க?"

"சங்கடப்படமாட்டியே?"

"சொல்லுங்கண்ணா.."

"நான் உன்கிட்ட எதிர்பார்க்கறது இது இல்லப்பா. நம்மெல்லாம் வேற மாதிரி இருக்கணும்"

"புரியலண்ணா"

"இல்ல கிருஷ்ணா.. சும்மா காமெடியா நாலு மேட்டர் எழுதிப் போடறதுல என்ன சமூக அக்கறை இருக்க முடியும்? நமக்குன்னு சில கடமைகள் இருக்குன்னு நம்பறேன் நான். அதுலயிருந்து தவறக்கூடாதுன்னும் நினைக்கறேன். நம்மளை சுத்தி எவ்வளவு தப்பு விஷயங்கள் நடக்குது? அதையெல்லாம் யாரு தட்டிக் கேக்கறது? அவனுக்கு தானே நடக்குது-ன்னு வேடிக்கை பார்க்கறது என்ன நியாயம்? எல்லாரும் அடுத்தவனை ஏமாத்தறது, பழிவாங்கறது ன்னு உலகம் எவ்ளோ சுயநலமா மாறீட்டு வருது தெரியுமா? இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறைக்கு நாம விட்டுட்டுப் போற செய்தி என்னன்னு நம்ம மனசு உறுத்தாதா? இது சரியா? இதை மாத்தப்போறது யாரு? நமக்கு அந்தப் பொறுப்பு இல்லையா?"

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலண்ணா.. மாத்திக்க முயற்சி பண்றேன். என்னை சுத்தி ஏதாவது தப்பு நடந்தா எழுதறேன்"

"அது உன் இஷ்டம். என் மனசுல பட்டதை சொன்னேன்.. கஷ்டமா நெனைச்சன்னா..."

"ச்சே.. அப்படியெல்லாம் இல்லண்ணா.."

"சரி விடு.. ஐயையோ.. மணி பதினொண்ணு ஆச்சா?"

"என்னது திடீர்னு கிளம்பறீங்க? சாப்பிட ஏதாவது வாங்கீட்டு வரச் சொல்றேண்ணா"

"இல்ல கிருஷ்ணா.. என் பொண்ணு லலிதா காலேஜ் அட்மிஷன் விஷயமா சுத்திகிட்டிருக்கேன். மார்க் கொஞ்சம் கம்மியா வாங்கித் தொலைச்சுட்டா. ஒரே சீட் தான் இருக்குங்கறாங்க. இன்னொரு பையன் இவளைவிட அதிக மார்க்கோட இருக்கான். அவனுக்குத் தான் கிடைக்கும்ங்கறாங்க. கடைசியில யாரு அந்தப் பையன்னு பாத்தா, என் ஆபீஸ் பியூன் கோவிந்தன் பையன்! லலிதாக்கு கிடைக்கலன்னாலும், அந்தப்பையனுக்கு கிடைச்சுட்டா அப்புறம் நான் ஆபீஸ்ல தலை காட்ட முடியாது! ட்ரஷரில வேலை பாக்கற ராஜனுக்கு அந்த காலேஜ் செகரட்டரி மச்சினனாம். மூணு நாளா அலைஞ்சு ராஜனை ‘கரெக்ட்’ பண்ணி வெச்சிருக்கேன். இப்போ ரெண்டு பேருமா செகரட்டரி வீட்டுக்குப் போகணும். நேரமாச்சு. வரட்டா.


(ஒரு வருடத்துக்கு முன்.. நான் பதிவுலகத்திற்கு வந்த புதிதில் எழுதியது)


.

28 comments:

ஆ.சுதா said...

//! லலிதாக்கு கிடைக்கலன்னாலும், அந்தப்பையனுக்கு கிடைச்சுட்டா அப்புறம் நான் ஆபீஸ்ல தலை காட்ட முடியாது!//

ஆமா..! ஆமா..! நம்மல சுத்தி என்னன்னவோ நடக்குது! சுயத்தை நோக்கி இயல்பாக கேட்பதாக உங்கள் மீள்பதிவு ஈட்டிகளை எறிகின்றது.

Cable சங்கர் said...

மீள் பதிவென்றாலும் தூள் பதிவு.. நானூறுக்கு வாழ்த்துக்கள்

VIKNESHWARAN ADAKKALAM said...

பாவம் அவரே அவருக்கு ஆப்பு சொருகிகிட்டாரே :))

சமூக அக்கரையோட பதிவு போட்டுட்டிங்க :)

தராசு said...

தல,

மார்க்கெட்ல இன்னும் நல்ல மதிப்பு இருக்குது போல, ஆமா, நீங்க எதுக்கு மணமகள் தேவை விளம்பரம் குடுத்தீங்க!!!!!!!!

அப்புறம் அந்த மீள்பதிவு, ஒரு நெத்தியடி பதிவு.

Prabhu said...

Hello Dear


(ann_5owen@yahoo.com)

Greetings,

My name is Ann,////

இதெல்லாம் அநியாயம். என்ன மாதிரி நாலு யூத்துகள் இருக்கும்போது உங்களுக்கு மட்டும்?...
நான் ஆர்குட்ல இருந்தா கூட ஆம்பளைங்கதான் ரெக்வஸ்ட் பணறானுங்க! எல்லா 377தூக்கினதோட சைட் எஃபெக்ட். ஆமா அங்கிள், இந்த வயசுல எதுக்கு உங்களுக்கு மேட்ரிமோனி?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பரிசல் சாரு-க்கு எப்ப திருமணம்?

ஆப்பர் வந்திருக்கே!

இதெல்லாம் ஹோம் மினிஸ்டருக்குத் தெரியுமா!?

Vijayashankar said...

Nice!

--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு

நான் said...

ம்ம்ம் நிதர்சன வாழ்க்கை

☀நான் ஆதவன்☀ said...

லெட்டர் குசும்பன் அனுப்பியதா இருக்க போகுது.

ஈரோடு கதிர் said...

//(Remember the distance or colour does not matter but love matters a lot in life)//

ஓகோ... இருக்கட்டும்... இருக்கட்டும்...

அண்ணே அப்பிடியே.. பனியனுக்கும் கொஞ்சம் ஆர்டர் பிடிச்சுக் கொடுக்கச் சொல்லுங்க....

Venkatesh Kumaravel said...

மீள்பதிவு த்தூள்!

//☀நான் ஆதவன்☀ said...
லெட்டர் குசும்பன் அனுப்பியதா இருக்க போகுது.//
LOL

அறிவிலி said...

ரொம்ப ஃபீல் பண்ணி எழுதின லவ் லெட்டர பப்ளிக்ல போட்டு உடைச்சிட்டீங்களே... அந்த பொண்ணு(?) மனசு என்ன பாடுபடும்.

Bad Responds!!!!!

HVL said...

//Remember the distance or colour does not matter but love matters a lot in life//

இது போல எத்தனை பேரு கெளம்பி இருக்கீங்க?

Unknown said...

இதெல்லாம் spam mailங்க்.எல்லாருக்கும் வரும்.காலை விட்டால் அதள பாதாளத்திற்குப் போகும்.

நான் இதை வைத்து ஒரு கவிதையே எழுதியிருக்கிறேன். பார்க்க:-

“மற்றவை நேரில்”

http://raviaditya.blogspot.com/2009/02/blog-post_08.html

-- said...

அவர் சொன்னது சரி.
ஆனால் செய்தது..?

சில / பல வேளைகளில் நாமும் அப்படித்தான்..!

திருந்துவோம்..!

க.பாலாசி said...

உங்களுக்கு அவரு ஒரு குட்டு வச்சிட்டார். நீங்க அவருக்கு ஒன்னு வச்சிட்டிங்க...

லோகு said...

ரெண்டுமே மீள் பதிவு தான்... முதலாவது ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி வந்திருக்க வேண்டியது...........(ஹி.. ஹி..)

Thamira said...

Cable Sankar said...
மீள் பதிவென்றாலும் தூள் பதிவு.. நானூறுக்கு வாழ்த்துக்கள்//

ரிப்பீட்டு.!

அப்புறம் அந்த மெயில் ஹிஹிஹிஹி..

கிர்பால் said...
This comment has been removed by the author.
கிர்பால் said...
This comment has been removed by the author.
Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

அதற்கான முகவரி : www.findindia.net

Kathir said...
This comment has been removed by the author.
கிர்பால் said...

முடியல...
வீட்ல அண்ணி இருக்கும் போதே அண்ணன் my-matrimony -ல profile வச்சிருக்காரே அப்படி என்னதான் வச்சிருக்காருன்னு பாக்க போனா, விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரி website-காரங்க ஒண்ணு பண்ணி வச்சிருக்காங்க... பார்க்க..
http://www.my-matrimony.com/cgi-bin/tamil/personals.cgi?action=search

செல்வம் said...

பரிசல் அந்த மெயிலைத் தொடர்ந்து போனா..... கடைசியா உங்க விவரம், அக்கவுண்ட் நம்பர், விலாசம் எல்லாம் கேப்பாங்க.... என் வாழ்க்கையில் வந்த ஒரே ஒரு யூத் மெயில் இது. இத வச்சு நண்பர்கள் கிட்ட பிட்ட ஓட்டிக்கிட்டு
இருந்தது தனிக்கதை. சாக்கிரதை.

அப்புறம் மீள் பதிவு சூப்பர்.

Vinitha said...

Happy Friendship Day!

Kumky said...

ஆப்பி பிரன்ஷிப் டே....கே.கே.

வால்பையன் said...

புத்தக திருவிழா போட்ருக்காங்க தல!
எப்போ வர்றிங்க!?

pudugaithendral said...

இமெயில் மேட்டர் சகதர்மினிக்கு தெரியுமா????

எதுக்கும் விசாரிச்சு வெச்சுக்கறது நல்லதுன்னு பாத்தேன்.

:))))