Thursday, February 19, 2009

மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

1) பால் பொங்குது பார்த்துக்கோங்க, குக்கர் ரெண்டு விசில் அடிச்சதுக்கப்பறம் கேஸை ஆஃப் பண்ணுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?

2) கடையில் போய் ஏதாவது வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு பொருளை மறந்துட்டு வர்றீங்க?

3) நண்பர்களுக்கு ஐடியா தர்றது, ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு எதுனா ஹெல்ப்னா ஓடறதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா கேஸ் புக் பண்றது, புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ்க்கு பணம் எடுத்துட்டு வர்றது, அரிசி ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்?

4) புத்தகம் படிக்கறப்பவோ, டி.வி. பார்க்கும்போதோ ‘பளிச்’னு ஏதாவது பகிர்ந்துக்கறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்?

5) நீங்க சீரியல் பார்த்தா அதுல இருக்கற டெக்னிகல் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க பார்த்தா அதுவே சீரியல் பார்த்து கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க?


6) க்ரிக்கெட் மேட்ச்ல கடைசி ஓவர்ல அஞ்சு ரன் தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – எங்களுக்கு ஒரு ப்ரச்னைன்னா ஏன் இருக்க மாட்டீங்குது?

7) ஏதாவது குடும்ப விஷயத்தைப் பத்தி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?

8) ஏதாவது ஃபங்ஷனுக்குப் போய் எங்க ஃப்ரெட்ண்ட்ஸ், ரிலேடீவ்கூட பேசிகிட்டிருக்கறப்போ வந்து ‘போலாம் போலாம்’னு அவசரப்படுத்தற நீங்க.. அதே உங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிகிட்டிருந்து நாங்க கூப்ட்டா மட்டும் ’ஏண்டி அவசரப்படுத்தற.. எத்தனை நாள் கழிச்சு மீட் பண்றோம்’ங்கறீங்களே.. அது ஏன்ங்க?

9) நாங்க ரசிச்சு சமைச்சு வைக்கறப்போ எல்லாம், அதெப்படி உங்க ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன் நடந்து, இன்ஸ்பெக்டர்கூட ஹோட்டல்ல லஞ்சுக்குப் போறீங்க? அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா வைக்கற ஐட்டம் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?


10) ஆஃபீஸூக்கு கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. சாயந்தரம் ஆஃபீஸ்லயும் இதே மாதிரி ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு குதிப்பீங்களா?

********

ச்சாய்ஸில் விடப்பட்ட கேள்விகள்:-


அ) நீங்க இப்படி ஒரு பதிவு எழுதறது ச்சின்னப்பையனுக்கோ, தாமிராவுக்கோ தெரியுமா?

ஆ) இந்தப் பதிவு எழுதறதுக்கு சொல்லு.. சொல்லு-ன்னு உயிரெடுக்கறீங்களே.. அப்பப்போ திட்டறப்பவே எழுதிவைக்கறதுக்கென்ன?

78 comments:

அத்திரி said...

நாந்தான் மொதல்ல

அத்திரி said...

கடைசிக்கேள்விதான் டாப்பு.... எத்தனை நாள் வாங்கியிருப்(போம்)பேன்

நட்புடன் ஜமால் said...

\\ஆஃபீஸூக்கு கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. சாயந்தரம் ஆஃபீஸ்லயும் இதே மாதிரி ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு குதிப்பீங்களா?\\

ஜூப்பரு

Unknown said...

Nice post Krishna...!!!

Cable சங்கர் said...

தாமிரா இப்ப லவ் மூடுல இருக்கிறதுனால நீங்க அவர் வேலைய டேக் ஓவர் பண்ணிட்டதா கேள்வி.. நிஜமா..?

anujanya said...

எல்லாமே சரியான கேள்விகள். கேள்விகள்....நம்மிடம் பதில் இல்லாத கேள்விகள். Good one K.K.

அனுஜன்யா

Vidhya Chandrasekaran said...

நியாயமான கேள்விகள் தானே.

SK said...

பிரமாதம். அசத்திபுட்டீங்க போங்க பரிசல்.

வல்லிசிம்ஹன் said...

மனசே நிறைஞ்சு போச்சு. நன்றின்ங்கோவ்.:)

SK said...

பிரமாதம். அசத்திபுட்டீங்க போங்க பரிசல்.

Venkatramanan said...

பரிசல்!
ரொம்ப கவனமா, ஒரு வாரத்துல என்னென்ன பண்றீங்கனு உங்களை நீங்களே கண்காணிச்சுக், (நண்பர்களையும்!) குறிப்பெடுத்து எழுதின மாதிரி இருக்குது! இதுல பெரும்பாலும் நான், எங்கப்பா ரெண்டு பேரும் எங்கம்மாகிட்ட பாட்டு வாங்கின மேட்டர்! அப்புறம் இந்த வார்ர்புரு ரொம்ப நல்லாயிருக்கு! (அழைப்பிதழ் கான்செப்ட்தானே?) இதுலே வேற ஒரு சிக்கல்! நிரந்தர சுட்டில மறுமொழியாளர்களின் படங்கள் வரலை! முடிஞ்சா கவனிங்க! இல்லன்னா விட்டுங்க!

அன்புடன்
வெங்கட்ரமணன்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Vadielan R said...

சரியான நெத்தியடி கேள்விகள்

அதுவும் கடைசி கேள்வி மிகசரியானது

pudugaithendral said...

படிக்கும்பொழுது சந்தோஷமா இருக்கு.

இந்தக் கேள்விகளுக்கு ஒவ்வொரு ரங்கமணிகளும் பதில் சொல்வதாய் தொடர் பதிவிட கூப்பிடுங்க.

(பதில் வருதா? என்ன விஷயம்னு பாப்போம்)

பாராட்டுக்கள்

அமுதா said...

ஆஹா... படிக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க...

narsim said...

2,4,6 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். மற்றவை.. நொடிக்கு நொடி..

அந்த முதல் கேள்வி.. பால பொங்க விட்டு.. கைய சுட்டு இயலாமையை கோவமா மாத்தி.. இப்படி நம்ம என்ன ரியாக்‌ஷன் பண்ணாலும்.. ஒரு “ஹும்”மில் முடித்துவிடுவார்கள்..

Vijay said...

அதெப்படிங்க எல்லா மனைவிகளும் ஒரே மாதிரி யோசிக்கறாங்க ???

வால்பையன் said...

உங்க வீட்ல மாதிரியே எல்லோரும் அமைதியா கேட்க மாட்டாங்க

இங்கேயெல்லாம் ஸ்டைட்டா ஆக்‌ஷன் தான்

குசும்பன் said...

ஹா ஹா இப்படி எல்லாம் வேற கேட்பாங்களா?
இதுபோல் எந்த கேள்வியையும் இதுவரை எதிர்நோக்காமல் நோகாமல்
குடும்பம் நடத்தும்

உங்கள்
குசும்பன்

கோவி.கண்ணன் said...

//மனைவிகள் கணவர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! //

பண்மை இல்லாமல் ஒருமையில் தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் ! :)

இந்த கட்டுரை விகடன் குழுமத்தில் வெளிவர வாழ்த்துகள் !

பரிசல்காரன் said...

//venkatramanan said...

பரிசல்!
ரொம்ப கவனமா, ஒரு வாரத்துல என்னென்ன பண்றீங்கனு உங்களை நீங்களே கண்காணிச்சுக், (நண்பர்களையும்!) குறிப்பெடுத்து எழுதின மாதிரி இருக்குது!//

வெங்கட்.. எல்லாமே என் அனுபவமல்ல. உமாகிட்ட உட்கார்ந்து பொதுவா லேடீஸ் என்ன நினைப்பாங்கன்னு கேட்டு எழுதினது. அந்த 4வது பாய்ண்ட் எழுதினப்போ ‘ஐயையோ நீங்க அப்படி இல்லைப்பா. உடனே என்ன வேலை செஞ்சிருந்தாலும் விட்டுட்டு வா’ன்னு என்னைத்தானே கூப்பிடுவீங்க’ன்னாங்க!

அப்பறம்.. ப்ரொஃபைல் படம் தெரிய என்ன பண்றதுன்னு தெரியல. முதல்ல பேரே தெரியாம இருந்தது! அதான் மாத்தினேன். மறுபடி வேற டெம்ப்ளேட் மாத்திப் பார்க்கறேன்!

பரிசல்காரன் said...

@ நர்சிம்

// narsim said...

2,4,6 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். மற்றவை.. நொடிக்கு நொடி..

அந்த முதல் கேள்வி.. பால பொங்க விட்டு.. கைய சுட்டு இயலாமையை கோவமா மாத்தி.. இப்படி நம்ம என்ன ரியாக்‌ஷன் பண்ணாலும்.. ஒரு “ஹும்”மில் முடித்துவிடுவார்கள்..//

ஓஹோ.. அங்கயும் சேம் ப்ளட்-டா????

பரிசல்காரன் said...

//குசும்பன் said...

ஹா ஹா இப்படி எல்லாம் வேற கேட்பாங்களா?
இதுபோல் எந்த கேள்வியையும் இதுவரை எதிர்நோக்காமல் நோகாமல்
குடும்பம் நடத்தும்

உங்கள்
குசும்பன்//

Miles to go!

@ கோவி. கண்ணன்

பரிசீலிக்கப்பட்டது தோழர்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பத்து கேள்விகளை மட்டும் கேட்டிருக்கிறீங்க!
விடுபட்டவைன்னு போட்டு தாக்கலாமே?
நல்லா இருக்கு பரிசல்!

CA Venkatesh Krishnan said...

நான் எப்பவுமே பால் பொங்கறதப் பாப்பேன் ! ! !

அப்புறம் தங்கமணியிடம் கேக்க வேண்டியதைக் கேட்டுக்குவேன் ! ! !

pudugaithendral said...

அதெப்படிங்க எல்லா மனைவிகளும் ஒரே மாதிரி யோசிக்கறாங்க ???//

அதெப்படி எல்லா ரங்கமணிகளும்
மனைவி சொல்வது எதுக்கும் காது கொடுக்கக்கூடாதுன்னு இருக்காங்க.

பாச மலர் / Paasa Malar said...

கலக்கல் போங்க..

pudugaithendral said...

இதுபோல் எந்த கேள்வியையும் இதுவரை எதிர்நோக்காமல் நோகாமல்
குடும்பம் நடத்தும்

உங்கள்
குசும்பன்//

இன்னும் ஒரு வருஷம் கூட முடியலைல்லா... அதான் இப்படி பின்னூட்டம் போடறீங்க.

அப்புறம் பாருங்க. :))

Nilofer Anbarasu said...

Lots of questions go unanswered,
lots of things go unquestioned,
Some dreams are buried alive,
We call it 'LIFE'. :)

மாசற்ற கொடி said...

இங்கே சில கேள்விகள் - விடுபட்டவை பல கேள்விகள் sample க்கு

அதெப்படி வருடா வருடம் உங்க அக்கா-தங்கை வீட்டுக்கு போவதற்கு லீவ் கிடைக்கிறது - ஆனா எங்க அண்ணன் வீட்டுக்கு மட்டும் போக லீவ் கிடைக்கல ?

நாங்க ஒரு நாள் லேட்டா வந்தா - அக்கறையே இல்ல பசங்க படிப்பில ! ஆனா நீங்க
டெய்லி லேட்டா வரது எங்களின் நலனுக்காக !

புலம்ப வெச்சுடீங்களே பரிசல் !

அன்புடன்
மாசற்ற கொடி

மேவி... said...

கல்யாணம் ஆச்சுனா....
இந்த மாதிரி எல்லாம் கேள்வி வருமா ????
ஐயோ சாமி பயமா இருக்கு கல்யாணத்தை பார்த்து.......
நாங்க எல்லாம் எக்ஸாம் ல கேட்குற கேள்விகே பதில் எழுத மாட்டோம்....
இதுக்கு எல்லாம் நான் பதில் சொல்வதா........
ஹி ஹி

மேவி... said...

nalla padivu ....

Vinitha said...

கேள்விகள்....பிரமாதம்!

இராகவன் நைஜிரியா said...

ஹும் வீட்டுக்கு வீடு வாசப்படி.

தாமிரா இதுக்கு நல்ல எதிர் பதிவு போட்டு இருக்காரு .. அதுல எல்லோரும் படிச்சு பாருங்க

sindhusubash said...

அட எல்லார் வீட்டிலையும் இப்படி தானா.....எங்க வீட்டில் மட்டும் தான் இப்படினு நினைச்சேன்.......

Test said...

ச்சாய்ஸில் விடப்பட்ட கேள்விகள்:-
இ) உங்க கூட பிறந்தவங்களுகும்/நண்பர்களுக்கும் பத்து நாளுக்கு முன்னாடி வந்த ஒரு சின்ன தலைவலிகு கூட பத்து போன் செஞ்சு விசாரிக்குறீங்க. எனக்கு பத்து நாளா ஒர கால் வலி ஒரு Iodex வாங்கி வந்தீங்கள?

:)

அசோசியேட் said...

அனுபவம் பேச வைக்குதுங்க !!

பரிசல்காரன் said...

இதற்குச் சுடச்சுட எதிர்ப்பதிவு போட்ட தாமிராவுக்கும், ரமேஷ் வைத்யாவிற்கும் நன்றி.

அவர்கள் இருவருமே இங்கே தங்கள் கருத்தைச் சொல்லாததற்கு கண்டனங்கள்!!

ரமேஷ் வைத்யா said...

இங்கே பின்னூட்டம் போட்டிருந்தால் சுடச்சுட எதிர்ப்பதிவு போட்டிருக்க முடியுமா?

சிரித்த சிரிப்பின் வீர்யம் அடங்கிவிடுமோ என்கிற பயம்தான்.

ரமேஷ் வைத்யா said...

நகைச்சுவைக்கும் பின்னால் ஓர் அழகான குடும்பச் சித்திரம் கண்முன் விரிகிறது.

வெற்றி said...

ஒவ்வொரு கேள்விக்கும் சாய்ஸ் வெச்சாதான் எங்களுக்கு ஆன்சர் வரும்.

படகு said...

படிக்கும்பொழுது சந்தோஷமா இருக்கு.
இதை எல்லாம் சரிபண்ணி மனைவியை சந்தோஷம வைச்சியிருகேன். என யாராவது நினைக்கிறிங்கள......
எல்லாரும் இப்படிதான். நான் சொன்னது சரிதானே. :))))))))))))))))

Unknown said...

கல்யாணம் ஆனவனுக்கு ஆயிரம் கவலைகள், கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரே கவலை - கல்யாணம் ஆகவில்லை என்பது தான்.

KarthigaVasudevan said...

அதெப்படி வெறும் பத்தே பத்துக் கேள்விகளை மட்டும் மனசாட்சியே இல்லாம உங்க இஷ்டத்துக்கு சுருக்கிப் பதிவிட்டீங்க பரிசல் ? இன்னும் எவ்ளோ கேள்வி மிஸ் ஆகுது ?!
தனிப் பதிவு போட்டாக்கூட எத்தனை பதிவுகள் போடரதாம்? மலையளவு கேள்விகள் இருக்குங்க. அதிர்ச்சியா இருக்கு வெறும் பத்து கேள்விகளை மட்டும் பார்த்து!!!

Chandrasekharan said...

was able to enjoy the questions. Well stated. Answers if I am asked will be only blinking!!!

சின்னப் பையன் said...

ஹாஹா.. தலைப்பை பாத்தவுடனே -- என்னடா இது தலயும் பத்துக்கு பத்து மேட்டர்லே இறங்கிட்டாரேன்னு நினைச்சேன்...

ஹிஹி... என்னோட பேரையும் போட்டதற்கு நன்றி....

:-)))))))

சின்னப் பையன் said...

எல்லா கேள்விகளும் அருமை... கடைசி கேள்வி சாட்டையடி.....

சூப்பர்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சாய்ஸில் (ஆ) சூப்பர்..
டவுட் பின்னூட்டம் ரசித்தேன்.. :)

அப்துல்மாலிக் said...

நல்ல கேள்விகள்
என்ன பதில்சொல்றது குழப்பமா இருக்கா
இதுக்கெல்லாம் பதிலே இல்லீங்கோ

வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

50

ஆஹா இங்கேயும் நாந்தான் அரை சதமா

Sundar சுந்தர் said...

//ஏதாவது குடும்ப விஷயத்தைப் பத்தி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?//
:)

சிவக்குமரன் said...

நடக்கட்டும்! நடக்கட்டும்!

Unknown said...

// 1) பால் பொங்குது பார்த்துக்கோங்க, குக்கர் ரெண்டு விசில் அடிச்சதுக்கப்பறம் கேஸை ஆஃப் பண்ணுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்? ///


ஏனுங் அம்முனி ... அதுவரைக்கும் உங்குளுக்கு அப்புடி என்ன வேல .... ???
சீரியலு பாக்கோனுமா......?????? புரசங்காரன்னா என்னோ நெனச்சுகிட்டிருகீங்கோ .... " வெளியில புலி மீசைக்காரன் .. ஊட்டுல பூன மீசகாரன்னா....... " நெம்ப தப்பு .... மருவாதியா இதையெல்லா மனசுல வெச்சுபோட்டு அடுப்பு வேலைய ஒழுக்கமா பாருங்கோ ...


// 2) கடையில் போய் ஏதாவது வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு பொருளை மறந்துட்டு வர்றீங்க? //


நீங்க குடுக்குற மலிக சாமானோ லிஸ்ட்ட பத்தி தெரியாதா எங்குளுக்கு ..!!!

கோயலுக்கு வெளியில தேங்கா பழ காடக்கார மாதிரி லிஸ்ட்டு போடுவிங்கோ ....

" மஞ்சதூள் - 100 கிராம் , டர்மரிக் தூள் - 100 கிராம்.....

தக்காளி - 1 கிலோ , டொமேட்டோ - 1 கிலோ ......... "

இப்புடி எழுதுனா எந்த புரசந்தான் கொளம்பி போகாம இருப்பா ....




// 3) நண்பர்களுக்கு ஐடியா தர்றது, ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு எதுனா ஹெல்ப்னா ஓடறதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா கேஸ் புக் பண்றது, புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ்க்கு பணம் எடுத்துட்டு வர்றது, அரிசி ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்? //


அவிகளைஎல்லாம் எவிறி நைட் சரக்கு கெட்டுகெதர்ல மீட் பான்றங்காட்டி ஞாபகம்
வெச்சுருக்கோம் ...... அப்புடி ஊட்டுல எதுவேமே நடக்கமாட்டேன்குது ....

நீ தட்டுல சோத்த போட்டுட்டு போய் ... டி . வி முன்னாடி உக்காந்துகிட்டு சீரியல் பாத்துகிட்டே சாப்புடுற ..... கொழந்தைங்களும் அதே மாதிரி அவிக ரூமுல போகோ டி . வி பாக்குதுங்க ... வரசத்துக்கே 10 நாளுதான் முழுசா ஒருத்தர ஒருத்தர்
பாத்துக்குறோம் ........




// 4) புத்தகம் படிக்கறப்பவோ, டி.வி. பார்க்கும்போதோ ‘பளிச்’னு ஏதாவது பகிர்ந்துக்கறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்? //


சும்மா உங்களையெல்லாம் டென்சன் பன்னனும்முன்னுதான் .. எந்நேரமு குடும்பம் ஒத்துமையா இருந்தா பக்கத்தூட்ட்கரவிங்க கண்ணு பட்டுபோடுங் சாமி
....




// 5) நீங்க சீரியல் பார்த்தா அதுல இருக்கற டெக்னிகல் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க பார்த்தா அதுவே சீரியல் பார்த்து கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க? //


ஆமா .... ரெண்டுக்கும் வித்தியாசம் இல்லியா...?????


நீங்க பாக்றது " கோலங்கள் " , " சித்தி ." ..... இப்பிடி அழுவாச்சி புடுச்ச சீரியலா

பாக்குறிங்க ... ஊட்டுக்கு வந்து .. ஏங்கண்ணு சோராக்குலனு கேட்டா .. " சித்தில சித்தப்ப மண்டைய போட்டுட்டாரு ..... " .... " கோலங்கள்ல இன்னைக்கு கலர்பொடி இல்லாத மொக்க கோலம் ....... " இப்புடீன்னு சொல்லுறது ......


ஆனா நாங்க பாக்கறது ...... ஸ்டார் வோல்ட்ல வர்ற " பே வாச் " .. அதுல எத்தன கலரு ... எத்தன டெக்குனிக்கு .... அதெல்லா உங்குளுக்கு எங்க தெரியபோவுது ....





// 6) க்ரிக்கெட் மேட்ச்ல கடைசி ஓவர்ல அஞ்சு ரன் தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – எங்களுக்கு ஒரு ப்ரச்னைன்னா ஏன் இருக்க மாட்டீங்குது? //

உங்குளுக்கு பிரச்சனையே எங்க அம்மா ஊடுதான ........ சும்மா.... சும்மா ....

" ஏனுங் உங்கம்மா கொட்டி வெச்சுபுட்டாங்க .... கில்லி வெச்சுபுட்டாங்க "
" உங்கக்கா அண்டாவ தூக்கிட்டு போயிருச்சு ... குண்டாவ தூக்கிட்டு போயிருச்ச .... " எத்தனையதான் நாட்டாம பண்றது .......





// 7) ஏதாவது குடும்ப விஷயத்தைப் பத்தி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க? //

சாம கோடாங்கி மாதிரி நடு ராத்திரி 12 மணிக்கு எங்களையா உக்கார வெச்சு சீரியஸா கத சொன்னீங்கனா ..... செத்துப்போன உன்கொப்புச்சிகோடா குழியில இருந்து எந்திரிச்சு வந்து பதிலு சொல்லமாட்டாரு ...... அப்பரோ நாங்க எங்க .......



// 8) ஏதாவது ஃபங்ஷனுக்குப் போய் எங்க ஃப்ரெட்ண்ட்ஸ், ரிலேடீவ்கூட பேசிகிட்டிருக்கறப்போ வந்து ‘போலாம் போலாம்’னு அவசரப்படுத்தற நீங்க.. அதே உங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிகிட்டிருந்து நாங்க கூப்ட்டா மட்டும் ’ஏண்டி அவசரப்படுத்தற.. எத்தனை நாள் கழிச்சு மீட் பண்றோம்’ங்கறீங்களே.. அது ஏன்ங்க? //


நீங்கெல்லாம் கூடி பேசுநிங்கனா நாடு வெளங்குன மாதிரிதான் ...... " எங் மாமியா ஒரு எடுபட்ட சிரிக்கி .... எங் நங்க.. கொழுந்தியா .. எல்லா பைத்தியகாரிங்க .. " இப்புடுதான பேசுவிங்க .....


நாங்க ரொம்ப டீசன்ட் ....



//
9) நாங்க ரசிச்சு சமைச்சு வைக்கறப்போ எல்லாம், அதெப்படி உங்க ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன் நடந்து, இன்ஸ்பெக்டர்கூட ஹோட்டல்ல லஞ்சுக்குப் போறீங்க? அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா வைக்கற ஐட்டம் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது? //


நீங்குளும் .. ஆபீசு போரவிகளா இருந்தா ... அந்த கஷ்டம் தெரியும் .....



// 10) ஆஃபீஸூக்கு கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. சாயந்தரம் ஆஃபீஸ்லயும் இதே மாதிரி ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு குதிப்பீங்களா? //

மாசங்கண்டா அவியஅவிய அப்பநூட்டுல இருந்து 50,000 சம்பளமா வாங்கீட்டுவாங்கோ .... ஆபீஸ்ல இருந்து ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு சொல்லீட்டு வந்தர்றோம் .....

Kumky said...

எனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆய்ட்டதுனால இந்த கேள்விகளுக்கு பதில் தெரியல...

Sanjai Gandhi said...

டெம்ப்ளெட் கலக்குதுங்ணோ.. :)

ஊர்சுற்றி said...

இதெல்லாம் எங்கள மாதிரி யூத்துக்கு

PASS --- PASS...

:)

Truth said...

//
ஆ) இந்தப் பதிவு எழுதறதுக்கு சொல்லு.. சொல்லு-ன்னு உயிரெடுக்கறீங்களே.. அப்பப்போ திட்டறப்பவே எழுதிவைக்கறதுக்கென்ன?


பிரமாதம் :-)

அறிவிலி said...

ஹையா... நானும் ஒரு எதிர் பதிவு போட்டுட்டனே!!!!

M.Rishan Shareef said...

//அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா வைக்கற ஐட்டம் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது? //

கொஞ்சமா உங்களுக்குன்னு மட்டும் சமைச்சு வச்சு சாப்பிடுவீங்க..அத மட்டும் சூப்பரா சமைச்சிருப்பீங்க..அதான் எங்களுக்கு அது அவ்ளோ பிடிக்குது.. :P

Kavi said...

//பால் பொங்குது பார்த்துக்கோங்க, குக்கர் ரெண்டு விசில் அடிச்சதுக்கப்பறம் கேஸை ஆஃப் பண்ணுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை.//

அதான் தெரியுதில்ல.. அப்புறம் ஏன் அந்த வேலைகளை திரும்ப திரும்ப குடுக்கிறீங்க?!

மங்களூர் சிவா said...

//
ஹா ஹா இப்படி எல்லாம் வேற கேட்பாங்களா?
இதுபோல் எந்த கேள்வியையும் இதுவரை எதிர்நோக்காமல் நோகாமல்
குடும்பம் நடத்தும்

உங்கள்
குசும்பன்
//

சேம் ப்ளட்

மங்களூர் சிவா said...

@லவ் டேல் மேடி
கலக்குறீங்ணா

Anonymous said...

கிருஷ்ணா,

ஆரம்பிச்சாச்சா உன் திருவிளையாடலை?

Gajen said...

ஹாஹாஹா..பரிசல் சார்..இது மனைவி கணவனிட்ட கேக்க நினைக்கிறதா?இல்லாட்டி யாரோ யாருட்டயோ கேட்டதா? ;)

நான் அந்த பாதாளத்துல விழக்கூடாது/ விழமாட்டன் என்டு திடமா, 'அறிவுபூர்வமா' முடிவு எடுத்தது நல்லதா போச்சு..ஒழுங்கா ஒரு கோப்ப தேத்தண்ணி ஊத்த தெரியாது நமக்கு, இதுல பால் பொங்குமாம், விசில் குக்கர் அடிக்குமாம்..அப்பாடா..தப்பிச்சேன் சாமி..

MSK / Saravana said...

//இந்தப் பதிவு எழுதறதுக்கு சொல்லு.. சொல்லு-ன்னு உயிரெடுக்கறீங்களே.. அப்பப்போ திட்டறப்பவே எழுதிவைக்கறதுக்கென்ன?//

விழுந்து விழுந்து சிரிச்சேன் பரிசல் அண்ணா.. :)

சுரேகா.. said...

SUPER
SUPER
SUPER...

WITH EXPERIENCE!
:)

Unknown said...

// மங்களூர் சிவா said...

@லவ் டேல் மேடி
கலக்குறீங்ணா //




நெம்ப சந்தோசமுங்கோவ் ...........

புன்னகை said...

//2) கடையில் போய் ஏதாவது வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு பொருளை மறந்துட்டு வர்றீங்க?//
நான் மிகவும் ரசித்து சிரித்த கேள்வி இது. எங்க வீட்ல என் அப்பா அடிக்கடி திட்டு வாங்குறது இந்த மாதிரி கடைக்குப் போய் எதையாவது மறந்து வரும் போது தான். உங்களுடைய அனுபவம் கூட இப்படி தானோ? :-)

பட்டாம்பூச்சி said...

எப்படியோ மனைவிங்க சார்புல பதிவு போட்டு உமா அக்கா மேல ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப அக்கறை இருக்குன்னு சைக்கிள் கேப்-ல ஆட்டோ ஒட்டிடீங்க...கலக்கலா இருக்குங்கோவ்.....
:)))
ஆனா எல்லா கேள்வியும் நியாயமாதானே படுது?

Poornima Saravana kumar said...

// ஆஃபீஸூக்கு கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. சாயந்தரம் ஆஃபீஸ்லயும் இதே மாதிரி ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு குதிப்பீங்களா?
//

கலக்கல்:))

Poornima Saravana kumar said...

//புத்தகம் படிக்கறப்பவோ, டி.வி. பார்க்கும்போதோ ‘பளிச்’னு ஏதாவது பகிர்ந்துக்கறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்?
//

சரியான கேள்வி!!!

தமிழன்-கறுப்பி... said...

:)

Thamira said...

ஜாரிங்க.. கொஞ்சம் லேட்டாயிருச்சு.. இந்தப்பதிவு ஜூப்பர்னு நான் பின்னூட்டம் வேற போடனுமாக்கும்.. அதான் ஊரே பத்துகேள்விகள் மழையில் நனைஞ்சுக்கிட்டிருக்குதே..

suthan said...

பத்து கேள்விகளை மட்டும் கேட்டிருக்கிறீங்க!
விடுபட்டவைன்னு போட்டு தாக்கலாமே?
நல்லா இருக்கு பரிசல்

p.suthan

vels-erode said...

யார் மொதல்ங்கரது முக்கியமில்ல.
என்ன சொல்றோங்கறதுதான் முக்யம்,இன்னா? புர்தா?
10 கேள்வி இருக்கட்டும். புருசனுக்கு புடிக்காத கேள்வின்னு இப்பதாம்ப்பா ஒரு சைட்-ல படிச்சேன், "அவ்லோதானா?"(குறிப்பா நைட்ல!)
வேல்ஸ் / ஈரொடு
(திருப்பூர்ல பொலப்பு ஓட்டுனவன்)

தமிழ். சரவணன் said...

ஐயா கொடுத்து வச்ச கணவன்மார்களா....

இப்படியெல்லாம் கூட மனைவிகள் இருக்கிறாங்களா... வாய்பிருந்தா எங்கதைய படிச்சி பாருங்க

அஜீம்பாஷா said...

iyya, i am lucky becasue i am in saudi arabia, she is in india. we never had such a problem.

aayush maan bava.

nTamil said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்