Tuesday, November 11, 2008

செக்ஸ்தான் காரணமா?

அந்தப்பெண்ணுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாகிறது. ஒரு மகள், ஒரு மகன். கணவன் திருப்பூரிலேயே ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்தவாரத்தில் ஒருநாள் மகளையும், மகனையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு தனக்குப் பிடித்தமான வேறொருவனோடு - அவனும் மணமானவன் - போய்விட்டாள் அவள்.

“குழந்தைக ரெண்டு பேரையும் தம்பி வீட்டுல விட்டிருக்கேன்ணா. தம்பி சம்சாரம் காலைல சாப்பாடு செஞ்சு வெச்சுட்டு வேலைக்குப் போகணும்னு போய்ட்டா. குழந்தைகளை ஸ்கூலுக்குக் கிளப்பறதுக்குள்ள ரொம்ப சிரமப்பட்டுட்டேன்ணா. சின்னவன் யூனிஃபார்மே போடமாட்டீங்கறான்” என்றான். 'பொண்டாட்டியைத் தேடலியா' என்றதற்கு.. “ஸ்டேஷன்ல கம்ப்ளெண்ட் பண்ணியாச்சு. அவ எனக்கு வேணாம். ஆனா என்னமாச்சும் ஆய்டுச்சுன்னா நான் பொறுப்பில்லன்னு தெரியறதுக்காக ஸ்டேஷன் போனேன்”

“குழந்தைகளை உங்க ஊர்ல விடலாமே”

“எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே வயசாய்டுச்சு. கண்ணும் தெரியறதில்ல. அதுமில்லாம அவங்க ஊர்ல இருந்து வந்து இங்க இருக்க ஒத்துக்கவே மாட்டாங்க. நீங்க யோசிச்சு நான் என்ன பண்றதுன்னு சொல்லுங்கண்ணா” என்று அந்தக் கணவன் என்னிடம் வந்து சொல்லிவிட்டுப் போனான். குழந்தைகளை ஹாஸ்டலில் தங்கவைக்கலாம் என்று விசாரித்ததில் சிறியவன் யூ.கே.ஜி. எங்கும் சேர்க்க மறுக்கிறார்கள். இப்போது மணி இரவு 12. இதுவரை என்னிடம் விடையில்லை.

திருப்பூர் என்றாலே இந்தமாதிரி சமாச்சாரங்கள் சர்வசாதாரணம் என்பது போலப் பேசுகிறார்கள் போலிஸ் ஸ்டேஷனில். இல்லை மற்ற ஊர்களிலும் இதே நிலைதானா எனத் தெரியவில்லை.

இங்கே வேலைக்கு வரும் பெண்களுக்கு ஆண் நட்பு எளிதில் கிடைத்துவிடுகிறது. படிப்பறிவு குறைந்த, வெளியுலகை அதிகம் பாராத பெண்கள் வெகு சுலபமாக ஆண்களின் வலைக்குள் விழுந்துவிடுகின்றனர். சொல்வதற்கும், கேட்பதற்கும் கஷ்டமாக இருந்தாலும் இன்னொரு முகத்தில் அறைகிற உண்மை, சில பெண்களும் சும்மாயிராமல் ஆண்களை சீண்டிவிடுவதும் நடக்கிறது.

பெண்களுக்கெதிரான பாலியல் புகார்களை அவர்கள் எங்கே சொல்வார்கள்? எங்கள் நிறுவனம் உட்பட, பல நிறுவனங்களில் இதற்காக ANTI HARASSMENT COMMITTEE இருக்கிறது. செயல் ரீதியாகவோ (டிஃபன் பாக்ஸைப் பிடுங்குவது, தகாத இடங்களில் தொடுவது), சொல் ரீதியாகவோ (கமெண்ட் அடிப்பது..) வேறு வகையிலோ (விசில், சைகை) பெண்களை துன்புறுத்தும் ஆண்கள் குறித்து, அவர்கள் அந்தக் கமிட்டியில் புகார் அளிக்கலாம். அந்தக் குழுவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பெண்களும், தொழிலாளர்களைச் சார்ந்த பெண்களும் இடம் பெற்றிருப்பார்கள். அது மட்டுமின்றி, மாதம் ஒரு முறை மீட்டிங் நடத்தி நிர்வாகத்தினரும், தொழிலாளர்களும் கலந்து பேசும்போதும் குறையிருப்பின் கூறலாம்.

ஆனால் சில உண்மைகள் வேறு மாதிரி முகத்தில் அறைகிறது.

சில வருடங்களுக்கு முன் நடந்தது இது. ஒரு பிரிவில் பணி புரியும் 20 வயதுள்ள ஒரு பெண் என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து ஒரு பெண்மணியின் பெயரைச் சொல்லி ‘அந்தம்மா இன்னைக்கு வேலைக்கு வந்திருக்காங்களான்னு பாருங்க சார்’ என்றாள். பார்த்தேன். இல்லை. எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. காரணம் அந்தப் பெண்மணி எங்கள் நிர்வாகத்தின் பேருந்தில்தான் வருகிறார். விசாரித்ததில் அன்றைக்கும் பேருந்தில் ஏறியிருக்கிறார். ஆனால் உள்ளே வரவில்லை. மறுபடி அந்தப் பெண்ணை அழைத்துக் கேட்டபோது வேறொரு பிரிவில் பணிபுரியும் ஒரு ஆளின் பெயரைச் சொல்லி ‘அவரு இருக்காரான்னு பாருங்க’ என்றாள். இல்லை..

“அவரு தினமும் கம்பெனிக்கு முந்தின ஸ்டாப்ல நின்னுகிட்டு இந்தம்மாவை இறங்கச் சொல்லிகிட்டிருக்காரு. இன்னைக்கு இறங்கிடுச்சு. ரெண்டு பேருமா காங்கயம், சிவன்மலைன்னு சுத்தறாங்க’ என்றாள். கொடுமை என்னவென்றால் இருவரும் திருமணமானவர்கள். (தனித்தனியாக!)

இவள் பெயர் வரக்கூடாது என்று அடுத்தநாள் தனியாக விசாரணை நடத்தி, இருவரையும் பணியிலிருந்து நிறுத்தி விடுவது உத்தமம் என முடிவாகும் தறுவாயில் சம்பந்தப்பட்ட பெண்மணி என்னிடம் தனியாக எனக்கு தகவல் சொன்ன அந்த 20 வயதுப் பெண் பெயரைச் சொல்லி, ‘அவதான் வத்தி வெச்சிருப்பா. சிறுக்கி நாயி’ என்று திட்ட ஆரம்பித்தாள். எனக்கு கடும் கோபமாக வரவே ‘ஏம்மா, நீ கம்பெனி பஸ்ல வர்ற. இங்கெ வரேன்னு வேறெங்காவது போய் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா உங்காளுக இங்க வந்துதானே கேள்வி கேப்பாங்க. நீ பஸ்ல வர்றது தெரியாதா எங்களுக்கு’ என்று திட்டினேன். பிறகு பேசிக்கொண்டே இருந்ததில் அவள் சொன்னாள்.. “அவன்கூட நான் ரெண்டு மூணு தபா போயிருக்கேன். இவளும்தான் கூட வருவா. கொஞ்ச நாளா என்னைத் தனியா கூட்டீட்டுப் போ’ன்னு இவன்கிட்ட கேட்டிருக்கா. இந்தாளு அவளை சும்மா துணைக்குத்தான் கூட்டீட்டுப் போவான். அவளைத் தனியா கூட்டீட்டுப் போகலைன்னு கோவத்துல வத்தி வெச்சுட்டா” என்றாள்.

பெண்கள் சிலரை விட்டு விசாரித்ததில் அது உண்மைதான் எனத் தெரியவந்தது. அந்தச் சின்னப் பெண் சொல்லியிருக்கிறாள்... “என்னையும் கூட்டீட்டுப் போவாங்க. சிவன்மலைல என்னைத் தனியா உட்கார வெச்சுட்டு அவங்க ரெண்டு பேரும் எங்காவது போய்ட்டு வருவாங்க. அதே மாதிரி சினிமா கூட்டீட்டுப் போகும்போது என்னைத் தள்ளி உட்காரச் சொல்லுவாங்க”


அந்தப் பெண்ணுக்கு முறையாக பெண்களை விட்டு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டாள்.

இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு என்ன காரணம்?

“செக்ஸ்தான்” என்கிறது ஒரு தரப்பு. தங்கள் வீட்டில் கணவனோ, மனைவியோ தராத சுகம் வேறு இடத்திலிருந்து கிடைக்கும்போது மனம் தாவுகிறது என்கிறார்கள்.

“அப்படியில்லை. கணவனால் கிடைக்காத ஆறுதலை வேறொருத்தன் தரும்போது அதை நட்பாக பாவிக்கத் தெரியாமல் அத்துமீறும்போதுதான் இது மாதிரியெல்லாம் நிகழ்கிறது” என்கிற சிலர் சொல்கிறார்கள்... “ரொம்ப கீழ்மட்டக் குடும்பங்கள்ல இதுமாதிரி அவன் பொண்டாட்டி கூட இவன், இவ புருஷன் கூட அவ – சமாச்சாரங்கள் நடந்தா அவங்க இதைக் கண்டுக்கறதே இல்ல. அதே மாதிரிதான் ரொம்ப மேல்மட்ட குடும்பங்கள்லயும். அதிகமா பாதிக்கப்படறது மிடில்க்ளால்-ங்கற நடுத்தரக் குடும்பங்கள்தான்.”

“ரெண்டு பேருக்கும் ஒத்துக்கல. அவங்களுக்குப் பிடிச்சவங்களோட போக வேண்டியதுதானே. எதுக்கு சமூகத்துக்காகன்னு பொய் வாழ்க்கை வாழணும்?” என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

என்ன காரணம்? எது நியாயம்? என்ன தீர்வு?

ஆரோக்யமான ஒரு விவாதத்தை பின்னூட்டத்தில் நிகழ்த்துங்களேன்...

49 comments:

கோவி.கண்ணன் said...

மீ த பர்ஸ்ட் !

சூடான இடுகையில் இடம் பிடிக்க வாழ்த்துகள்,

பதிவை இன்னும் படிக்கல.

கோவி.கண்ணன் said...

// இப்போது மணி இரவு 12. இதுவரை என்னிடம் விடையில்லை.//

இதுபோன்ற நிகழ்வின் நேரடித் தீர்வைப் பார்த்து ரத்னேஷ் எழுதி இருக்கிறார் ஓடிப் போனவள்

கோவி.கண்ணன் said...

//“செக்ஸ்தான்” என்கிறது ஒரு தரப்பு. தங்கள் வீட்டில் கணவனோ, மனைவியோ தராத சுகம் வேறு இடத்திலிருந்து கிடைக்கும்போது மனம் தாவுகிறது என்கிறார்கள்.
//

அது இவர்களாகவே சொல்லிக் கொள்ளும் காரணம், பெரும்பாலோர் பால் உணர்வை பெரிதாக நினைப்பது இல்லை, அவர்களெல்லாம் இதுபோல் தகாத உறவு வைத்துக் கொள்வது இல்லை. 'லோலாய்தனம்' செய்யும் ஆண்களும் சில பெண்களும் இது போன்று எதாவது ஒரு குறையைச் சொல்லி தங்கள் 'லோலாய்தனத்துக்கு' ஞாயம் கற்பிப்பார்கள்.

ஆண்கள் சீரழியும் நம் சமூகத்தில் பெண்களின் சீரழிவு குறைவைதான் என்பது ஆறுதலான ஒன்று.

இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு ஒரு தாய் காம சுகத்துக்காக ஓடுகிறாள் என்றால் கண்டிப்பாக அவள் அவனிடமும் திருப்தி அடைவாளா என்பதும் சந்தேகமே, நாளைக்கு வேறொருவன் கிடைத்தால் அவனுக்கு பிறக்கும் இரண்டு குழந்தைகள் கூட அனாதையாகிவிடும்.

குடும்பம் முக்கியம் அல்ல, தனிமனித காம விருப்புகளே முக்கியம், பெண்ணுக்கு அந்த உரிமை இல்லையா ? என்று கேட்பவர்கள் என்னை ஆணாதிக்க வாதியாகப் பார்க்கலாம்.

பெண் போற்றப்படுவதும் அவளுக்கு இருக்கும் தாய்மை என்னும் குணத்தால் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

முரளிகண்ணன் said...

பரிசல் என்ன சொல்லுறதுன்னு தெரியலை. தவறு இருபக்கமும் இருக்கு. நம் சமுதாயத்திலும் இருக்கு. யாரை குற்றம் சொல்லுறதுன்னு தெரியலை.

தென் மாவட்ட நகராட்சி ஒன்றில் நாங்கள் வசித்தோம்( தந்தை பணி இட மாறுதல் காரணமாக). அந்த தெருவில் சில வீட்டு பெண்கள் காதலில் இருப்பதை நான் பார்த்திருக்கேன். சில பெண்களுக்கு பலர் தூதணிப்பி நிராகரித்ததையும் பார்த்திருக்கிறேன்.

நன்கு கவனித்ததில் யார் வீட்டில் தந்தை கடுமையாக இருக்கிறாரோ, குடிகாரராக இருக்கிறாரோ, எண்ணங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறாரோ, மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறாரோ அந்த வீட்டுப் பெண்கள் தான், தந்தையின் குணத்துக்கு நேர்மாறாக ஒருவன் இனிமையாக பேசினாலே காதல் கொண்டுவிடுகிறார்கள் என தெரிந்தது.

இது திருமணமான பென்களுக்கும் பொருந்துமா (தந்தை - கணவன்)

ஆணோ, பெண்ணோ தன் துணையை உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் திருப்திப்படுத்தாவிட்டால் இது நேரக்கூடியதே.

Cable சங்கர் said...

நல்ல பதிவு பரிசல்.. உங்கள் பதிவு என்னை ஓரு கதை எழுத தூண்டுகிறது.. விரைவில் எழுதி உங்களை அழைக்கிறேன்.. நன்றி

Robin said...

தற்போது மீடியா சினிமா எல்லாமே காம உணர்ச்சியை தூண்டி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கின்றன. இதனால் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். முன்பெல்லாம் காமத்தை கட்டுப்படுத்துவது ஒரு தியாகம் என்ற நிலையில் பார்க்கப்பட்டது. தற்போது எப்படியாவது மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்ற நிலை வந்துள்ளது. இந்த நிலைக்கு தங்களை அதி மேதாவிகள் என்று கூறிக்கொள்பவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. பெற்ற குழந்தைகளை விட எவனோ ஒருவன் கொடுக்கும் சுகம்தான் முக்கியம் என்று நினைப்பவளை எல்லாம் மனித இனத்திலேயே சேர்க்க முடியாது.

கார்க்கிபவா said...

ஒன்றும் செய்ய முடியாது சகா.. வ‌ரும் காலங்களில் இதை தைரியமாக எல்லோருக்கும் தெரியும்படி செய்ய முன்வருவார்கள்.. உலகம் சுருங்கிக் கொன்டே வந்தாலும் அனைவரும் அன்னியர்க‌ளாக மாறிக் கொன்டு வருகிறார்கள்.. தன்க்கு தேவையானது கிடைக்காத போது சமூகம் குறித்த கவலை அவ்ர்களுக்கு கிடையாது. என்னதான் விழிப்புணர்வு வந்தாலும் செக்ஸ் விஷயத்தில் வேலைக்காவாது. இப்போது இது தவறு எனப் பேசும் நாம் இதை சரியென சொல்லும் காலம் வரக்கூடும்.. இதை தடுக்க வழியேயில்லை.. ஒரு பொருள் எளிதாய் சந்தையில் கிடைத்தால் அதன் விலை குறையும். தட்டுப்பாடு இருக்கும் போது விலையேறும். அது இதற்கும் பொருந்தும்.

குட்டிபிசாசு said...

ஒருவரைஒருவர் புரிந்து காதலித்து மணமுடித்தால் இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கலாம். அதையும் மீறி யாராவது தவறு செய்தால் அவர்களை கண்டுகொள்ளத் தேவையில்லை. அவர்கள் மனிதர்கள் அல்ல.

Athisha said...

;-))

இந்த பிரச்சனைய கால்சென்டர்களில் நடக்கும் பாலியல்மீறல்களோடு ஒப்பிட இயலுமா?

வருண் said...

அறியாமைதான் காரணம். :-)

---------------------------

இந்தப்பெண்களுக்கு படிப்பறிவு இல்லைனு சொல்றீங்க இல்லையா?

மேலும் இதுபோல் குழந்தையைவிட்டு ஓடுபவர்களுக்கு என்ன மாதிரி அப்பா அம்மா, இருப்பாங்க, என்ன மாதிரி சூழலில் வளருகிறார்கள்னு தெரியலை. இதுமாதிரி இல்லீகல்- அஃபயர்ஸ் லோ-க்ளாஸ் ல சாதாரணம்னு சொல்லுவாங்க.

"அம்மாவை வணங்காது உயர்வில்லையே" -வாலியின் வரி!

இந்த அம்மாவையெல்லாம் வணங்க முடியாது! :-(

குசும்பன் said...

படிக்க கஷ்டமாதான் இருக்கு என்ன செய்வது:(

கும்மியர்களின் பார்வையில்: இவன் பொண்டாட்டிய அவன் வெச்சுருக்கேன் என்கிறான், அவன் பொண்டாட்டிய இவன் வெச்சிருக்கேன் என்கிறான் என்ன உலகம் இது!


பின்நவீனத்துவர்களின் பார்வையில்: இந்த திருமணம், சடங்கு புள்ளை குட்டி எல்லாத்தையும் கட்டுடைக்கனும் அப்படி கட்டுடைத்தா இந்த பிரச்சினையே இருக்காது!

venkatesh said...

serial spoiled the society , all the serials stories have two wifes or two husband stories this shuld be the cause.

King... said...

இது ரொம்பப்ப பழைய பிரச்சனை...

King... said...

சம்பந்தப்பட்டவர்களுக்கிடையில் இருக்கிற சரியான புரிதல் பெரும்பங்கு தீர்வாகலாம்...

narsim said...

"கற்பு" என்பதை உடல்சம்பந்தமாக.. அதுவும் பெண்ணின் பிறப்புறுப்போடு தொடர்பு படுத்தி மட்டும் பார்க்கும் பார்வையையும் மீறி அது "மனம்" சம்பந்தப்பட்டது என்ற தெளிவு பிறக்கும் போதுதான் தீர்வு கிடைக்கும்..

அவசியமான பதிவு பரிசலாரே!

நர்சிம்

King... said...

கணவன் மனைவிக்கிடையில் காமம் கட்டவிழ்ந்திருக்க வேண்டும் என்பது அவசியமான விசயம் என்று நினைக்கிறேன்...

நிகழ்காலத்தில்... said...

ஓடிப் போகுமுன் தன் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்காத பெண்ணிற்க்கு எப்படி பரிந்து பேசுவது?.
தன் உடல் தேவையை தன் கணவனிடமே போதுமான அளவு ஒத்துழைப்பு கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.
தவிர்க்க முடியாத பட்சத்தில் இலைமறை காயாக பிற ஆணுடன்
உடல்தொடர்பு மட்டும் வைத்துக்கொள்வது தவறில்லை
மாறாக இரு குடும்பத்திலும் குழப்பம் விளைவிப்பது தவறு.
நம் சமுதாய அமைப்பினை மனதில்
கொண்டு பார்த்தால் பெண்ணிற்கே
பழி அதிகம். எனவே பெண்ணிற்கே
பொறுப்பு அதிகம்.

எட்வின் said...

மனசு கனக்குது பரிசல்காரரே...
எப்படி அந்த அம்மாவுக்கு பிஞ்சுக் குழந்தைகளை விட்டுப் போக மனம் வந்தது என தான் புரியவில்லை.மேலே சிலர் கூறியபடி இது தொன்றுதொட்டு நிகழ்பவை தான் என எனக்குத் தோன்றுகிறது.காமம் ஒரு புறம் காரணமாயிருக்கலாம் ஆனாலும் வெவ்வேறு குடும்ப சங்கதிகளில் கணவன் மனைவுயிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் தான் முக்கிய காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

நந்து f/o நிலா said...

மிக நல்ல பதிவு க்ருஷ்னா. விரிவாக இங்கு விவாதிக்க விருப்பமில்லை. மனிதனும் ஒரு விலங்குதான் என்பதை மட்டும் மனதில் வையுங்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

ஹம்ம்ம்... என்ன சொல்வதென தெரியலை... இப்படி செய்பவர்கள் அவர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்...

பரிசல்காரன் said...

// ஒருவரைஒருவர் புரிந்து காதலித்து மணமுடித்தால் இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கலாம்/

ஒரு உண்மை.. முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட சம்பவத்தில் உள்ள கணவனும், மனைவியும் காதல் தம்பதியினர்தான். :-(

Ramesh said...

Sex, but compassion is the real thing... I know friends have been tricked into one off situations!

I have seen enough in Higher Levels in govt. job. - that is mostly done for show off! (I have the capability!) I cannot comment on lower levels, since they don't seek legal recourse!

I have to compare US culture here, those who have had service (army etc..) record, have a decent life with a single, heartthrob... that too from young age.

I think upbringing is the reason.

Sorry for the comment in English, for want of time.

Your Personnel management skill is visible!

பரிசல்காரன் said...

இது குறித்து நாங்கள் விவாதிக்கும்போதெல்லாம் வரும் ஒரு விஷயம். சிலரை மனம் ஆட்சி செய்கிறது. சிலரை அவர்களது மூளை ஆட்சி செய்கிறது. சிலரையோ, அவர்கல் உடல் ஆட்சி செய்கிறது.

மனமும், மூளையும் மட்டும் கூட்டணி சேர்த்து செலுத்தப்படும் மனிதர்கள் இந்த மாதிரியான தவறுகளைச் செய்வதில்லை.

☼ வெயிலான் said...

மற்ற விசயங்களை விவாதிப்பதை விட குழந்தைகளின் நிலைக்கு யாராவது ஒரு தீர்வு சொன்னால் நல்லது.

புருனோ Bruno said...

//நன்கு கவனித்ததில் யார் வீட்டில் தந்தை கடுமையாக இருக்கிறாரோ, குடிகாரராக இருக்கிறாரோ, எண்ணங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறாரோ, மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறாரோ அந்த வீட்டுப் பெண்கள் தான், தந்தையின் குணத்துக்கு நேர்மாறாக ஒருவன் இனிமையாக பேசினாலே காதல் கொண்டுவிடுகிறார்கள் என தெரிந்தது.//

உண்மை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒவ்வொருவர் பிரச்சனையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இவற்றையெல்லாம் ஒட்டு மொத்தமாக பேசினால் பல அபவாதங்கள்தான் கிளம்பும்

விலெகா said...

நல்ல படைப்பு.

விலெகா said...

நான் முன்பு கேள்விப்பட்டேன் இது போல கேரளாவில் 40வயது பெண் ஒருவர் 20 வயது பையனுடன் ஓடிப்போய் குடும்பம் நடத்துகிறார்கள், இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என நினைக்கிறீர்கள்.(அந்த பெண்னணுக்கு(?)இவனை போன்று ஒரு மகன் வேறு இருக்கிறான்)

நல்ல தாய், தந்தையர்க்கு பிறந்த எவரும் தடம் மீறுவதில்லை.

உண்மைத்தமிழன் said...

காதல்தான் காரணமாக இருக்க முடியும். இரண்டாம்பட்சமாகத்தான் காமம் இருக்கலாம்.

பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமெனில் அது ஆண், பெண் இருவரில் ஒருவருக்குப் பிடிக்காமல் வேறு வழியில்லாமல் பந்தத்தில் இணைந்திருந்தாலும் இப்படித்தான் நடக்கும்.

முன்பு சமூக அமைப்புகள் குடும்பத்தை மீறாமல் இருந்ததனால் நமக்கு இப்போது இது அதிர்ச்சியாக இருக்கிறது.

இது காலம் அல்லது கலாச்சாரத்தின் வளர்ச்சிதான்.. நெருங்கிக் கேட்டீர்களானால் தனி மனித உரிமை என்று பதில் வரும்.

ஒரு கோணத்தில் அது சரியாகத்தான் இருக்கும். மறுகோணத்தில் சிலருக்கு அது தவறாகத் தெரியும்..

நம்மால் எளிதில் விட முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களில் இதுவும் ஒன்று..

குழந்தைகளுக்காக வருத்தப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது..

மனமொத்தப் பிரிவுதான் ஒரே வழி..

Anonymous said...

ரெம்ப சென்சிட்டிவ்வான விஷ்யம் பரிசல். பொதுப்படுத்திக் கூற முடியாது. அவரவர் நிலையில் இருந்து பார்த்தால் சரியான காரணம் இருக்க்கூடும்.

ஜோசப் பால்ராஜ் said...

பாலியல் தேவை மட்டுமே காரணமாக இருக்கும் என்பதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் சொல்லியுள்ள தம்பதியினர் காதல் திருமணம் செய்தவர்களாய் இருப்பினும் அவர்களது திருமணத்திற்கு பின்னர் கணவர் தன் மனைவியின் மேல் காட்டும் அன்பில் மாறுதல் ஏற்பட்டிருக்கலாம், அதோடு ஏதேனும் பிரச்சனைகளும் ஏற்பட்டிருக்கலாம். அதை விசாரித்தீர்களா? என்னதான் நடந்திருந்தாலும் பெற்ற இரு குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு சென்றது முறையான செய்கையல்ல.

Sundar சுந்தர் said...

ஊரகப்பகுதிகளின் நடப்பை ரொம்ப தெள்ள தெளிவா எழுதிட்டீங்க, கூடவே உங்கள் உங்கள் கற்பு பற்றிய நடைமுறை கண்ணோட்டமும் & உங்கள் மேலான்மைதிறனும் தான்.

முறை மாறும் காதல் பல காலங்களாக, பல கலாச்சாரங்களிலும் சகஜமாக இருக்கும் விஷயம் தான். அது பற்றிய judgements மட்டும் தான் மாறும். சகஜமாக எடுத்துக்கொள்ளப்படும் சமூகங்களில் அத்தகைய செயல்கள் வெளிபடையாக நடக்கிறது, அதனால், அதன் விளைவுகளும் வெளிப்படையாக சாமாளிக்க படுகின்றன. இதே விஷயம் மேற்கத்திய சமூகங்களில் நடக்கும் போது சம்மந்த பட்டவர்கள் தங்களுக்கென வரையறுக்கப்பட்ட முறைகளை மாற்றி அமைக்கவும் முடியும். I see it as a social trend that is just an indication of certain dimensions of the significant inconsistent changes we are undergoing as a society - Well developed media and communication channels, options for highly individualistic life tangled up in an archaic social norms and much more complex political and legal framework on an antiquated caste & patriarchal social system. கலாச்சார காவலர்களின் கயமைத்தனமும் வெளிப்படை.

பாவம் குழந்தைகள் - அம்மா என்ற வாழ்வியல் ஆதாரமே மாயையான நிலையில் அவர்களுக்கு வாழ்வில் நல்ல நம்பிக்கை உண்டாக மற்ற values துணையிருக்கட்டும்.

Sundar சுந்தர் said...

// வெயிலான் said...
மற்ற விசயங்களை விவாதிப்பதை விட குழந்தைகளின் நிலைக்கு யாராவது ஒரு தீர்வு சொன்னால் நல்லது.//
குழந்தைகளை அம்மாவிடம் விட்டுவிட்டு ஓடும் தந்தைகளின் செயலுக்கு உண்டான தீர்வு தான் இதற்கும். அந்த அப்பா - அம்மா இல்லாத குழந்தைகளுக்கு பெற்றவருக்கு உண்டான கடமைகளை செய்வதற்காக தன் வாழ்வின் மற்ற விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் - வேலை குழந்தை வளர்ப்பு உள்பட... இல்லை குழந்தைகளை தத்து கொடுக்க வேண்டும். முடிந்தால் மனப்பூர்வமாய் வரும் மறு உறவை தேடவேண்டும்.

ஆனால் என்ன இதை சாக்காக வைத்து 'முடியாது' என்று சொல்லும் நிலையில் இல்லா ஒரு பெண்ணை, 'முறைப்படி' 'குழந்தைகளுக்காக' மறுமணம் செய்வதற்கு அதிக வாய்ப்பு என்று எனக்கு தோன்றுகிறது.

Sundar சுந்தர் said...

// கார்க்கி said...
ஒன்றும் செய்ய முடியாது சகா.. வ‌ரும் காலங்களில் இதை தைரியமாக எல்லோருக்கும் தெரியும்படி செய்ய முன்வருவார்கள்.. உலகம் சுருங்கிக் கொன்டே வந்தாலும் அனைவரும் அன்னியர்க‌ளாக மாறிக் கொன்டு வருகிறார்கள்.. தன்க்கு தேவையானது கிடைக்காத போது சமூகம் குறித்த கவலை அவ்ர்களுக்கு கிடையாது. என்னதான் விழிப்புணர்வு வந்தாலும் செக்ஸ் விஷயத்தில் வேலைக்காவாது. இப்போது இது தவறு எனப் பேசும் நாம் இதை சரியென சொல்லும் காலம் வரக்கூடும்.. இதை தடுக்க வழியேயில்லை.. ஒரு பொருள் எளிதாய் சந்தையில் கிடைத்தால் அதன் விலை குறையும். தட்டுப்பாடு இருக்கும் போது விலையேறும். அது இதற்கும் பொருந்தும்.//
100% agreed!

Sundar சுந்தர் said...

// பரிசல்காரன் said...
இது குறித்து நாங்கள் விவாதிக்கும்போதெல்லாம் வரும் ஒரு விஷயம். சிலரை மனம் ஆட்சி செய்கிறது. சிலரை அவர்களது மூளை ஆட்சி செய்கிறது. சிலரையோ, அவர்கல் உடல் ஆட்சி செய்கிறது.

மனமும், மூளையும் மட்டும் கூட்டணி சேர்த்து செலுத்தப்படும் மனிதர்கள் இந்த மாதிரியான தவறுகளைச் செய்வதில்லை.//

your words remind me Woody Allen's words - it goes something like ...god gave @#$% & brain but not enough blood for both :)

வெண்பூ said...

பதில் தெரியவில்லை பரிசல். ஆனால் நீங்கள் சொன்ன ஒரு விசயம் நிஜம்.. இது பெரிதாகத் தெரிவது, பேசப்படுவது மிடில் கிளாஸில் மட்டும்தான்.. :(

RAGUL said...

intha karuthu than valaipathivil en mudhal karuthu....innum tamil font'l yaepadi yaeluthukirkalnu kuda enaku thaeriyathu....mannikavum....!!! vaethanai yaenpathaiveda vetkamaga irukkinrathu olukamatra ivargal yaen valginraral nu ninaikum pozhuthu...!!!

பரிசல்காரன் said...

@ Ragul

// RAGUL said...

intha karuthu than valaipathivil en mudhal karuthu....innum tamil font'l yaepadi yaeluthukirkalnu kuda enaku thaeriyathu....mannikavum....!!! vaethanai yaenpathaiveda vetkamaga irukkinrathu olukamatra ivargal yaen valginraral nu ninaikum pozhuthu...!!!//

வலையுலகிற்கு வரவேற்புகள் நண்பா. இன்னும் எதுவும் எழுதத் துவங்கவில்லையா?

கருத்தைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. வேலைப்பளு காரணமாக அடிக்கடி இணையம் பக்கம் வர இயலுவதில்லை.

புருனோ Bruno said...

//ஒவ்வொருவர் பிரச்சனையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இவற்றையெல்லாம் ஒட்டு மொத்தமாக பேசினால் பல அபவாதங்கள்தான் கிளம்பும்//

வழிமொழிகிறேன்

புருனோ Bruno said...

//பதில் தெரியவில்லை பரிசல். ஆனால் நீங்கள் சொன்ன ஒரு விசயம் நிஜம்.. இது பெரிதாகத் தெரிவது, பேசப்படுவது மிடில் கிளாஸில் மட்டும்தான்.. :(//

இதில் மற்றொரு கோனமும் இருக்கிறது

இப்படி “ஓடுவது” பெரும்பாலும் மிடில் க்ளாஸில் தான். மற்ற இடங்களில் ஓடுவது கிடையாது. அதே ஊரில் உறவு தொடரும் :(

குடுகுடுப்பை said...

இதெல்லாம் மாறவே மாறாது, இதுதான் உலகம். இதெல்லாம் தவறா? சரியா? ஒடியவருக்குதான் தெரியும்

ஆட்காட்டி said...

உண்மையான காதல், அன்பு, பாசம், கருத்துப் பரிமாற்றம் இல்லாதது தான் காரணம். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமையும் ஒன்று. இதில் காதல் திருமணம், பேசிய திருமணம் இரண்டும் சேரும்.

மணமானாவர்கள் தங்களுக்குள் எவ்வாறு பேசுகிறார்கள்? எவ்வளவுக்கு அக்கறை கொள்ளுகிறார்கள்? சும்மா மேம்போக்காக வாழ்ந்தால் பிரச்சினைகள் தலை எடுக்கும்.கணவன் மனைவி தங்களுக்குள் பரிவோடு பேசுவது குறைவு. ஆனால் பிறருடன்? அது ஒப்பீட்டுக்குப் போய் கள்ளக்காதலாக மாறுகிறது.

இருவரும் என்ன எதிபார்க்கிறார்கள் என்பதை புரிந்து வாழ்ந்தால் தேவலை.

வால்பையன் said...

இது பற்றி தனியாக பதிவிடுகிறேன்

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு பரிசல்

Chandravathanaa said...

ithaiyum parunkal
http://manasukulmaththaapu.blogspot.com/2008/01/blog-post_30.html

Saminathan said...

பரிசல், இது நம்ம ஊர்ல மட்டும் இல்லை..சென்னை பெங்களூர் என கார்மெண்ட்ஸ் தொழில் நடக்கும் எல்லா இடங்களிலும் இது சகஜம்.

ஒரு மாதமோ, இரண்டு மாதமோ பொறுங்கள்...ஒடிப்போன தாய் திரும்ப வந்து விடுவார்...அவள் கணவனும் ஏற்றுக்கொள்வார்...

பதிவெழுதிய உங்களுக்குத்தான் லு..லு..லு காண்பிப்பார்கள்...!

ராஜ நடராஜன் said...

வணக்கம் பரிசல்.வால்பையனுக்குப் பின்னூட்டமிடுவதற்கு முன் அவரது பதிவிலிருந்து இங்கு வந்தேன்.என்ன சொல்வதென்று கொஞ்சம் திகைப்பு.ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடிகிறது.இந்த மாதிரி பிரச்சினைகள் திருப்பூருக்கோ அல்லது பெண்கள் வேலை செய்யும் இடத்துக்கோ அல்லது சமூக அடையாளங்கள் மாறுவதால் வரும் மாறுதல்களுக்குச் சொந்தமில்லை என நினைக்கிறேன்.கூடவே மனசில் படுவது குழந்தைகளைக் கூட விட்டு விட்டு எடுக்கும் முடிவுகளுக்கும் சில கண நேர மன பிரமையில் மலைமேலிருந்து குதித்து தற்கொலைக்குத் தயாராவதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

Unknown said...

//“அப்படியில்லை. கணவனால் கிடைக்காத ஆறுதலை வேறொருத்தன் தரும்போது அதை நட்பாக பாவிக்கத் தெரியாமல் அத்துமீறும்போதுதான் இது மாதிரியெல்லாம் நிகழ்கிறது”//

இதுதான்ப்பூ காரணம்.

ஆளவந்தான் said...

//திருப்பூர் என்றாலே இந்தமாதிரி சமாச்சாரங்கள் சர்வசாதாரணம் என்பது போலப் பேசுகிறார்கள் போலிஸ் ஸ்டேஷனில். இல்லை மற்ற ஊர்களிலும் இதே நிலைதானா எனத் தெரியவில்லை.//
Its because of aliens.. வெளியூர் மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் இது போன்று நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.