Saturday, August 23, 2008

அவியல் – 23.08.08

வாரா வாரம் வெள்ளிக்கிழமை அவியல் எழுதுவேன். நேற்று திருமணநாளென்பதால் அந்த சோப்புப் பதிவைப் போட்டேன். (நன்றி: யட்சன்) நாம அவியல் எழுதலியே, சூரியன் உதிக்காதோன்னு பயந்துட்டேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கல!

----------------------

திருமண நாள் பரிசாக PIT-ல் என் புகைப்படம் ஒன்று சிறந்ததாக முதல்கட்டத்தில் தேர்வாகி இருப்பதைக் கருதுகிறேன். அடுத்தகட்டமாக பெரிய தலைகளுடன் மோத வேண்டுமாம். இப்போதே கேமராவும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறேன்! நேற்று நந்து (நிலா அப்பா) வேறு ”வாங்க.. அங்க கவனிச்சுக்கறேன் உங்களை” என்று ஒரு பெரிய கேமராவைக் காட்டி மிரட்டினார்.

--------------------------------

நேற்றைய பதிவைப் பார்த்துவிட்டு நான் மிக மதிக்கும் ஒரு பிரபல எழுத்தாளர் தொலைபேசியிலழைத்துப் பாராட்டினார். மகிழ்ச்சியாக இருந்தது. “உன்னை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும்ங்கறதால சொல்றேன். அதுல இருக்கறதெல்லாம் நீ பண்றதில்ல. இல்லையா?” என்றார். “ஆமா சார்’ என்று ஆமோதித்தேன். அது ஒரு கலவை. படிச்சுட்டு ‘நம்ம தப்பையும் சொல்லீருக்கானே’ ன்னு படிக்கறவங்களை நினைக்க வைக்கறது.

அந்தப் பதிவுல இருக்கற எல்லா தப்பையும் பண்ற ஆம்பிளைங்க கண்டிப்பா இருக்க மாட்டாங்க! அந்த மாதிரி இருந்தா அது இல்லறமா இருக்காது. நான் அப்படிப் பட்டவனுமல்ல. நான் உருவாக்கி, உமா உருவேற்றிய பதிவு அது! கணவர்கள் தங்கள் மனைவிகிட்ட எதிர்பார்க்கற எத்தனையோ விஷயங்களுமிருக்கு. அதை எழுதவும் தைரியம் வேணும். தாமிரா மாதிரி! (தாமிராவோட இந்தப் பதிவை அவங்க தங்கமணி படிக்காமலிருக்கப் பிரார்த்திப்போமாக!)

------------------------------

நேற்று முன்தினம் ஒரு போட்டி வெச்சேனில்லையா? ரொம்ப கஷ்டம்க பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கறது! நிறையப் புடிச்சிருந்தது.

புதுகைத் தென்றல்: இணைந்த கைகள்

ரமேஷ் வைத்யா: கை கொடுக்கும் கை

அதிஷா: `மீட்’டாத கைகள் (சிலேடை அருமை)

குசும்பன்: பிரியாத வரம் வேண்டும்

மோகன் கந்தசாமி: மூடு மந்திரம்

இந்த அஞ்சும் எனக்கு புடிச்சது. (இதுல மோகன் கந்தசாமி புக் வேண்டாம்ன்னு சொல்லீட்டாரு.) இந்த அஞ்சுல அது பெஸ்ட்ன்னு மேல வலது மூலைல போய் ஓட்டுப் போடுங்க.

இது இல்லாம ஆர்.நாகப்பன் முதல் படத்துக்கு குடுத்திருந்த ‘OUTGOING கால்கள்’ ங்கற தலைப்பும், அவரே மூன்றாவது படத்துக்கு குடுத்திருந்த ‘மழை திறக்கும் மழலை’ தலைப்பும் எகஸலெண்ட்! NATHAS மூன்றாவது படத்துக்கு குடுத்திருந்த ‘குழாய்க்குள் மழை’ யும் அருமை!

ஆகவே ஆர்.நாகப்பன், NATHAS இரண்டு பேருக்குமே சிறப்புப் பரிசா அவன்–அது=அவள் புத்தகம் அனுப்பப் போறேன். அவங்க தயவு செஞ்சு என் மெய்ல் ஐ.டி.க்கு அவங்க முகவரியை அனுப்புமாறு கேட்டுக்கறேன். (வெளிநாட்டினரா இருந்தா இந்தியாவுல எங்க அனுப்பணும்ன்னு சொல்லுங்க சாரே.. ப்ளீஸ், பட்ஜெட் பத்தாது! - kbkk007@gmail.com)

--------------

ஒரு வாரமாக நடந்த 2011-க்கான முதல்வர் பதவிக்காக நம்ம ப்ளாக்ல நடத்துன எலக்‌ஷன் ரிசல்ட்:-

மொத்த ஓட்டுகள்: 144

யெஸ்.பாலபாரதி = 19 (13%)
லக்கிலுக் = 42 (29%)
குசும்பன் = 73 (50%)
நாமக்கல் சிபி = 10 (6%)

இதிலிருந்து என்ன தெரியுதுன்னா எப்பப்பாத்தாலும் ப்ளாக்ல இருந்துகிட்டே மொக்கை போடறதுல யார் நெம்பர் ஒன்-னு தெரியுது. அநியாயமா எனக்குப் போயி பகிரங்கக் கடிதம் எழுதீட்டாங்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஒழுங்கா வேலையைப் பார்த்துட்டு இருக்கறதுல நாமக்கல் சிபி முதலிடத்திலயும், பாலா ரெண்டாவது இடத்துலயும் இருக்காங்க!

எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!

ஒரு உபரி தகவல்: நேற்று நான் சந்தித்த ஒரு பெரிய மனுஷன் ‘நான் மட்டுமே குசும்பனுக்கு எட்டு ஓட்டு போட்டேங்க’ என்றார்! என்னத்த சொல்ல!

45 comments:

ரமேஷ் வைத்யா said...

மீ த மொதலாவது..?

VIKNESHWARAN ADAKKALAM said...

:)

பரிசல்காரன் said...

ஆமாங்க ரமேஷ் வைத்யா சார்!

@ விக்கி

என்ன சிரிப்பு?

பாபு said...

பதிவுக்கு சம்மந்தம் இல்லை என்றாலும்,
உங்கள் வீர தளபதிக்கு எதிராக செக் மோசடி வழக்கு வந்திருக்கிறதே கவனித்தீர்களா?

ஆயில்யன் said...

//அநியாயமா எனக்குப் போயி பகிரங்கக் கடிதம் எழுதீட்டாங்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//


இன்னும் ஃபீல் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கீங்களா அண்ணா!!!

விடுங்க! ரொம்ப ஃபீல் பண்ணுனா எனக்கும் அழுகை வந்திடும் !

:(

நந்து f/o நிலா said...

//நேற்று நான் சந்தித்த ஒரு பெரிய மனுஷன் ‘நான் மட்டுமே குசும்பனுக்கு எட்டு ஓட்டு போட்டேங்க’ என்றார்! என்னத்த சொல்ல//

நாட்ல இந்த பெரிய மனுசனுங்க தொந்தரவு தாங்க முடியலப்பா.

Sanjai Gandhi said...

//
ஒரு உபரி தகவல்: நேற்று நான் சந்தித்த ஒரு பெரிய மனுஷன் ‘நான் மட்டுமே குசும்பனுக்கு எட்டு ஓட்டு போட்டேங்க’ என்றார்! என்னத்த சொல்ல!//

அட சிங்கப்பூர் போயி ஜெகதீசனை சந்திச்சிங்களா? :)..
வலை உலகத்தின் கள்ள ஓட்டு மன்னன் அவர்தான். :)

... தாமதா வாழ்த்தறதுக்கு மன்னிக்கனும்....

இனிய திருமன நாள் வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்...

சின்னப் பையன் said...

உள்ளேன் ஐயா!!!

Mahesh said...

காமிராவுக்குள் கண்ணா? கண்ணுக்குள் காமிராவா?

வாழ்த்துக்கள் !! உங்களோட ஃபோட்டோ நல்லா இருந்தாலும், இது மாதிரி எடுக்கிறபோது ஃப்ளாஷ் இல்லாம பாத்துக்கோங்க.

பரிசல்காரன் said...

@ பாபு

காய்ச்சமரம்தான் கல்லடி படும்.

@ ஆயில்யன்

நானா? ஃபீலிங்கா? ஐயோ!

@ நந்து

கண்ணாடியப் பார்த்து சொல்லிக்கறீங்களா?

@ சஞ்சய்

ஒண்ணுமே தெரியாத பச்சக் குழந்தை!

வாழ்த்துக்கு நன்றி தோஸ்த்!

@ ச்சின்னப்பையன்

பதிவுல சொல்லிக்கறா மாதிரி ஒண்ணுமே இல்லங்கறீங்க. இல்லையா?

@ மகேஷ்

ஃப்ளாஷ் இருந்தா இப்படி எடுக்கறது கஷ்டம் சார்!

குசும்பன் said...

திருமணநாள் வாழ்த்துக்கள்..

//ஒரு உபரி தகவல்: நேற்று நான் சந்தித்த ஒரு பெரிய மனுஷன் ‘நான் மட்டுமே குசும்பனுக்கு எட்டு ஓட்டு போட்டேங்க’ என்றார்! என்னத்த சொல்ல!//

அந்த பெரியமனுசன் யார் என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துவிட்டார்:)))

KARTHIK said...

// ஒரு உபரி தகவல்: நேற்று நான் சந்தித்த ஒரு பெரிய மனுஷன் ‘நான் மட்டுமே குசும்பனுக்கு எட்டு ஓட்டு போட்டேங்க’ என்றார்! என்னத்த சொல்ல! //

தல இதுக்கு நீங்க நந்துணா சொன்னாருன்னே சொல்லிருக்கலாம்.

Thamira said...

கவனித்தீர்களா பரிசல், வழக்கமான அவியலாக இல்லாமல், அனைத்துமே உங்கள் பதிவுகள் குறித்ததாக இருக்கிறது. பரவலான கவனிப்பைப்பெற்றவர் நீங்கள், உங்கள் பதிவில் எனக்கான இணைப்பை வழங்கிய பெருந்தன்மைக்கு நன்றி.!

தமிழன்-கறுப்பி... said...

\\
அநியாயமா எனக்குப் போயி பகிரங்கக் கடிதம் எழுதீட்டாங்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
\\

நீங்க பதிவு போடுறிங்க நாங்க பதில் கும்மி அடிக்கறோம் பரிசல், நானெல்லாம் பின்னூட்டம் எழுதணும்ணே புளொக் ஆரம்பிச்சவனாக்கும்..:)

தமிழன்-கறுப்பி... said...

அந்தப்படத்துக்கு நான் தலைப்பு எதுவும் தரலைங்கிறதால இப்ப சொல்லிக்கறேன்...

1)உன்னருகே நானிருந்தால்...

தமிழன்-கறுப்பி... said...

2) உயிரே...

தமிழன்-கறுப்பி... said...

3) நானிருக்கிறேன் உனக்கு...

தமிழன்-கறுப்பி... said...

சொல்லாமலே...

தமிழன்-கறுப்பி... said...

5) மௌனகீதம்...

தமிழன்-கறுப்பி... said...

அல்லது மௌனராகம்...

தமிழன்-கறுப்பி... said...

7) உயிரோடு உயிராக...

தமிழன்-கறுப்பி... said...

இந்தப்படத்தை பாத்தா எவ்வளவோ சொல்லலாம் போல இருக்கு,
அதே போல உமாவுக்கு அப்படின்னு நீங்க எழுதின பதிவுல இருந்த படத்துக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

நீங்க தந்திருக்கிற தலைப்புகளில் எனக்கு 'பிரியாத வரம் வேண்டும்' பிடிச்சிருக்கு...

Mahesh said...

ஃப்ளாஷ் போட்டா இப்பிடி எடுக்க முடியாதுதான்....நான் ஒரு சேஃப்டிக்காக சொன்னேன்.

அப்பறம்....புது பதிவு போட்டாச்சு.... நல்வரவு !!

மங்களூர் சிவா said...

பத்து ஓட்டு போட்ட பெரிய மனுசங்க எல்லாம் சும்மா இருக்கப்ப எட்டு ஓட்டு போட்டதை சொன்ன பெரிய மனுசர் !?!?

என்னத்த சொல்ல நமக்கு வேண்டியவரா போய்ட்டாரு

:)))

விஜய் ஆனந்த் said...

// ஒரு உபரி தகவல்: நேற்று நான் சந்தித்த ஒரு பெரிய மனுஷன் ‘நான் மட்டுமே குசும்பனுக்கு எட்டு ஓட்டு போட்டேங்க’ என்றார்! என்னத்த சொல்ல! //

சரி...சரி...நாங்கள்ளாம் வெளில சொல்லிக்கறதுல்ல...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி குசும்பர்ர்ர்ர் வாழ்க வாழ்க....

விஜய் ஆனந்த் said...

// ஒழுங்கா வேலையைப் பார்த்துட்டு இருக்கறதுல நாமக்கல் சிபி முதலிடத்திலயும், பாலா ரெண்டாவது இடத்துலயும் இருக்காங்க! //

அண்ணே...அது இருக்கட்டும்....குசும்பர் 50%...லக்கி 29%...சரி....ஆனா நீங்க 100%-தான???அப்போ நீங்க வேலையே பாக்குறதில்லயா???

விஜய் ஆனந்த் said...

// எப்பப்பாத்தாலும் ப்ளாக்ல இருந்துகிட்டே மொக்கை போடறதுல யார் நெம்பர் ஒன்-னு தெரியுது //

ஹிஹி....அது கண்டிப்பா நீங்க இல்லீங்கண்ணோவ்வ்!!!!

நீங்க அவனில்லை.....அவனில்லை......இல்லை...

விஜய் ஆனந்த் said...

அவியலே...
சுவையாயிருக்கிறாய்.....
பயமாயிருக்கிறது...

விஜய் ஆனந்த் said...

// நாம அவியல் எழுதலியே, சூரியன் உதிக்காதோன்னு பயந்துட்டேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கல! //

ஆமாமா...அப்படி எதுவும் நடக்கல...நல்ல வேள!!!!

விஜய் ஆனந்த் said...

// திருமண நாள் பரிசாக PIT-ல் என் புகைப்படம் ஒன்று சிறந்ததாக முதல்கட்டத்தில் தேர்வாகி இருப்பதைக் கருதுகிறேன். //

வழ்த்துக்கள்!!!!!

பரிசல்காரன் said...

@ குசும்பன் & கார்த்திக்

போட்டுக் குடுத்துட்டீயளே!

@ தாமிரா

அது அறிந்தே செய்த குசும்புதான் தாமிரா.

@ தமிழன்

லேட்டா வந்து தலைப்பு சொன்னாலும், இத்தனை பின்னூட்டம் போட்டதுக்காக எதுனா பண்ணணுமே உங்களுக்கு...

பரிசல்காரன் said...

@ மங்களூர் சிவா

அப்ப எல்லாரும் போசி வெச்சுட்டுதான் பண்றீங்களா?

@ விஜய் ஆனந்த்

என்ன எறங்கீடுச்சா? :-)

வேண்டாம் விட்டுடு... said...

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!

//


நன்றிக்கு நன்றி :)


//
அப்பப்ப வந்துட்டு போங்க!
//


சரிங்க :)

வேண்டாம் விட்டுடு... said...

@ விஜய் ஆனந்த்

என்ன எறங்கீடுச்சா? :-)
//

ச்சே இப்ப வர்ர சரக்கு ஒன்னும் சரியில்லையே...:(

வேண்டாம் விட்டுடு... said...

இனிய திருமன நாள் வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்...
//


மருக்கா :)

பரிசல்காரன் said...

@ வேண்டாம் விட்டுடு

சரி.. விட்டுடுடறேன்..

புதுகை.அப்துல்லா said...

நா வந்தது லேட்! அதுனால ஓன்லி :)

ஜெகதீசன் said...

:)

ஜெகதீசன் said...

:)))))))

ஜெகதீசன் said...

:)))))))))))))

ஜெகதீசன் said...

:)))))))))))))))))))))))))))))

☼ வெயிலான் said...

பரிசல்,

நீங்க எங்களுக்கு வேணும். பெரிய எழுத்தாளர்கள்,ளிகள் கூப்பிட்டாலும் வேற எங்கேயாவது போகக்கூடாது.

இது என்னோட, எங்களோட அன்புக்கட்டளை!!!

சரி!!! போனாப் போங்க. ஆனா பிளாக்ல எழுதுறத விட்டுடக்கூடாது.

என்ன நான் சொல்றது சரியா? வலைப்பெருமக்களே சொல்லுங்க.

குசும்பன் said...

//லேட்டா வந்து தலைப்பு சொன்னாலும், இத்தனை பின்னூட்டம் போட்டதுக்காக எதுனா பண்ணணுமே உங்களுக்கு...//

தங்கம் விலை குறைஞ்சு இருக்குதாம் அதனால் ஒரு தங்க காப்பு செஞ்சுடுங்க:))

குசும்பன் said...

பரிசல் அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்:))

(செய்தி எங்களுக்கு லீக் ஆகிடுச்சு:))