Friday, May 23, 2008

நையப்புடை



அரசியல்வாதி மறைமுகமாய்
துரோகம் செய்கையில்

அவசரமென்று வாங்கிய

பெருந்தொகையை

நண்பன்

திருப்பியே

தராது போகையில்

பஞ்சாயத்து ஆபிஸில்

ரேஷன் கடைகளிலென

பலவிடங்களில்

பலவகைகளில்

ஏமாற்றப்படுகையிலெல்லாம்

ஓடி ஒளிகிற கோபம் ...

பாக்கி காசை

கண்டக்டர் தராதபோதும்

சர்வர் தோசை கொணர

தாமதமாகும்போதும்தான்

வெளிப்பட்டுத் தொலைக்கிறது..

3 comments:

KC! said...

I cant read this page :( font problem

Sathiya said...

நல்ல சிந்தனை. ஆனா எனக்கு இந்த மாதிரி சர்வர்கள் மேல கோவப்படறவங்கள பார்த்தா தான் கோவம் வரும். ஒரு சர்வர் கிட்ட அவங்க தெனாவட்டு, வீரம், பந்தா, யார் கிட்டயோ போட்ட சண்டை எல்லாத்தையும் சேர்த்து காட்டுவாங்க.

பரிசல்காரன் said...

அதான் நான் சொல்லிருக்கேனே சத்யா, சர்வர்கள் கிட்ட சண்டை போடறவங்க.. வேற வழியில்லாத கோழைகள் என்று!