Monday, May 26, 2008

காதலுடன் சில கவிதைகளும்

என்னுடைய ‘கடந்து போன கடித நாட்கள்’ பதிவை எழுதுமுன், பழைய கடிதங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, உமாவிற்கு நான் எழுதிய பல காதல் கடிதங்களின் நடுவே 03.11.1996-ல் நான் அவளுக்கு தீபாவளிப் பரிசாய் காதலுடன் கொடுத்த சில கவிதைகள் கண்ணில் பட்டது. படித்து முடித்து கண்மூடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தபோது அருகே வந்த உமா கேட்டாள்..

"ஏன் கிருஷ்ணா..ரொம்ப கஷ்டமாயிருக்கா? அப்போ படிக்கறப்ப எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்!!"

அடிப்பாவி.. அவ்ளோ மோசமாவா இருக்கு? நீங்களே சொல்லுங்க...
---------------------------------------------------------------------------
‘என்னிடம் பிடிக்காதது
ஏதுமிருந்தால் சொல்லுங்கள்’ என்கிறாய்.
பிடிக்காதது ஒன்றுமில்லாததாய்
நீ இருப்பதால்தானே
உன்னையே பிடித்தது!

இருந்தாலும்-
உன்னிடம் ‘பிடிக்கவில்லை’
என்று சொல்ல ஒன்றுண்டு.
இன்னும் நான் உன்னைக்
கட்டிப்
"பிடிக்கவில்லை!"
--------------------------------------
நான் வருத்தப்படும்போதெல்லாம்
நீ கோபப்படுகிறாய்..
நீ கோபப்படும்போதெல்லாம்
நான் வருத்தப்படுகிறேன்..
இதனால்தான் அன்பே..
நம்மை நெருங்க இயலாமல்
வருத்தங்கள் வருத்தப்படுகின்றன..
கோபங்கள் கோபப்படுகின்றன
.
--------------------------------------
என் சந்தோஷங்களின் போதெல்லாம்
நீ பக்கத்திலேயே இருக்க வேண்டும்
என்று நினைப்பேன்..
ஆனாலுமென்ன
நீ பக்கத்தில் இருக்கையிலெல்லாம்
நான் சந்தோஷமாய்த்தான்
இருக்கிறேன்.

-------------------------------------
கேட்டுக்கொண்டேயிருக்கிறாய்..
‘பண்டிகைக்குப் பரிசாய்
என்ன வேண்டும்’ என்று
என்ன தந்துவிடமுடியும் உன்னால்
ஏற்கனவே தந்த
உன் இதயத்தைவிட சிறந்ததாய்?
------------------------------------
பார்க்கப் பார்க்க சலிக்காதது
எதுவென்று கேட்டால்
கடல், ரயில்,யானை என்று
பலரும் பலதும் சொல்கிறார்கள்..
எவனும்
அவனவன் காதலியை
சரிவரப் பார்த்ததில்லை போலிருக்கிறது!

------------------------------------
எத்தனையோ பெண்கள்
காதலித்து
மனிதனை கவிஞனாக்கியதுண்டு.
ஆனால்-
ஏற்கனவே கவிஞனான என்னை
மனிதனாகவும் ஆக்கியவள்-நீ!
------------------------------------------------------
கடைசி கவிதையில் என்னை நானே கவிஞன் என்று சொல்லிக்கொண்டதற்கு மன்னிக்கவும்! (எல்லாம் அறியாத வயசு!)

(ஆமா இந்த பதிவை `கவிதை’ன்னு போடறதா.. நகைச்சுவை-ன்னு போடறதா?)

9 comments:

FunScribbler said...

கவிதை என்றே சொல்லலாம்! நன்றாக உள்ளன.

//இருந்தாலும்-
உன்னிடம் ‘பிடிக்கவில்லை’
என்று சொல்ல ஒன்றுண்டு.
இன்னும் நான் உன்னைக்
கட்டிப்
"பிடிக்கவில்லை!"//

நச்!

//பார்க்கப் பார்க்க சலிக்காதது
எதுவென்று கேட்டால்
கடல், ரயில்,யானை என்று
பலரும் பலதும் சொல்கிறார்கள்..
எவனும்
அவனவன் காதலியை
சரிவரப் பார்த்ததில்லை போலிருக்கிறது!//

நல்லா சத்தமா சொல்லுங்க! :))

rapp said...

avanaa neeyi????

thappaa eduthukkaatheenga krishna.summa sonnen

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

சூப்பர் கவிதைகள் தலிவா. எனக்கு பழைய நினைவுகள் வருகிறதே!
by sudarmani.

பரிசல்காரன் said...

நன்றி தமிழ்மாங்கனி, நன்றி rapp, நன்றி சுடர்..
ரசிப்போர்கள் இருக்கும் வரை நம் பணி தொடரும்!
(ஹையோ..ஹையோ இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.... .)

Girish.K said...

கவிதை இஷ்டமா படிச்சா எதுவுமா கஷ்டமா இருக்காது.


by Girish

guna said...

காதலிக்கும் போது கவிதை காதலை தூண்டும். காதலித்தவள் கிடைத்தால் தான் காதல் கவிதையாய் தோன்றும்....
காதலாய் கவிதையாய் ஆன உணர்வுகள் அருமை.....

தன்னடக்கத்தோடு தலைக்கனமும் சற்றே தெரிகிறது....தவிர்க்கலாம்...

பரிசல்காரன் said...

நன்றி கிரீஷ் , குணா..

தலைக்கனம் என்று எதை சொல்கிறீரென புரியவில்லை. கவிஞன் என்று சொல்லிக்கொண்டதையா? அது வார்த்தை ஜாலத்திற்காக.. மற்றபடி நானெல்லாம் அந்த வார்த்தைக்கு தகுதியில்லாதவன் என்பதை அறிவேன்.
வேறு எதாவது இருக்கிறதா?

நாடோடி இலக்கியன் said...

//என் சந்தோஷங்களின் போதெல்லாம்
நீ பக்கத்திலேயே இருக்க வேண்டும்
என்று நினைப்பேன்..
ஆனாலுமென்ன
நீ பக்கத்தில் இருக்கையிலெல்லாம்
நான் சந்தோஷமாய்த்தான்
இருக்கிறேன்//

அசத்தல் கவிதை நண்பரே...!

Unknown said...

கட்டி "பிடிக்கவில்லை" ........ பட் உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு