Tuesday, May 27, 2008

கடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன்

டென்ஷனின் உச்சத்தில் இருந்தேன் நான். ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் பதினைந்து ரன்கள் தேவை. மும்பை அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆடிக்கொண்டிருக்கிறது. தோற்றால் அரையிறுதி வாய்ப்பு பறிபோகும். 19-வது ஓவர் முடிந்து விளம்பரம் போட்டிருந்த வேளையின் போன் ஒலித்தது. சௌந்தர்!

உடனே எடுத்தேன்..

"சௌந்தர்.. மேட்ச் பாக்கறியா?"

"இல்லடா. நான் ஃபேக்டரிலதான் இருக்கேன். இன்னைக்கு நைட் வொர்க்"

"ஆமாமா.. எங்கப்பா கூட வந்திருப்பாரு" சௌந்தர் பணிபுரியும் ஃபேக்டரியில், கட்டிங் செக்ஷனில்தான் என் அப்பாவும் பணிபுரிகிறார்

"ஆமா, மேனேஜர் இல்லயா? எப்படி உள்ளேர்ந்து இவ்ளோ தைரியமா கூப்பிடற?"


"நான் யாருக்கும் சொல்லாம வந்து பாத்ரூமுக்குள்ள இருந்து பேசறேன்.. அத விடு.. மேட்ச் என்னாச்சு?"


"போடா... சரியான மேட்ச். கடைசி ஒவர்ல பதினஞ்சு ரன் வேணும் ராஜஸ்தானுக்கு."


"டேய்.. லைன்லயே இருக்கேன்.. என்னாகுதுன்னு சொல்லுடா"


"தில்ஹாரா பௌலிங்.. முதல் பால் ஒரு ரன்.. ரெண்டாவது பால் நாலு.. இல்லல்ல.. மூணு ரன்"


"இன்னும் நாலு பாலுக்கு பதினொரு ரன் வேணுமா?"

"ஆமா .. ஹையோ.. சிக்ஸ்! ச்சே..இது வேற.. எவன்னே தெரியல, புது நம்பரா இருக்கு.. கால் வெயிட்டிங்ல கூப்பிட்டுட்டே இருக்கான்"

"இந்நேரத்துக்கு யாரா இருக்கும்? என்னை மாதிரி உன் ஃபிரண்ட்தான் ஸ்கோர் கேட்க கூப்புடுவான். கட் பண்ணிடாத. என்னாச்சுன்னு சொல்லுடா"

"கடைசி மூணு பாலுக்கு அஞ்சு ரன் வேணும்.. நாலாவது பாலுக்கு சிங்கிள் எடுத்துட்டாங்க"


"இன்னும் ரெண்டு பால்தான? நாலு ரன் வேணும்ல?"

"அஞ்சாவது பாலும் சிங்கிள். கடைசி பால்.. மூணு ரன் வேணும்.. ச்சே.. இப்போ போய் வைடு பால் போடறான்டா.."

"ஐயோ.. நல்ல மேட்ச் மிஸ் பண்ணீட்டேன் போல.. சொல்லுடா"

"இரு இரு.. லாஸ்ட் பால். ரெண்டு ரன் வேணும்.. அடிச்சுட்டான்.. ஐயோ.. தில்ஹாராவே தடுத்திருக்கலாம்.. விட்டுட்டான்.. ஒரு ரன் ஓடீட்டாங்க.. செகண்ட் ரன் எடுக்கறது கஷ்டம்.. டிராதான் ஆகும்.. ஐயையோ.." நான் பேச்சற்றுப் போனேன்.

"என்னாச்சுடா.. ஹலோ..ஹலோ.."

"போடா.. ஈஸி ரன் அவுட். ஜெயசூர்யா பௌலர் எண்ட்-ல வந்து நின்னுட்டு கைக்கு வந்த பாலை மிஸ் பண்ணீட்டான்டா.. ச்சே.."

"ஐயையோ.. சரி விடு.. இப்போ நம்ம சென்னை டீம் செமி ஃபைனல் போறது ஈஸியாய்டுச்சுல்லியா?"


"ஆமா.. ஆனா.. இருடா.. யாரோ கதவைத் தட்டறமாதிரி இருக்கு" நான் எழுந்து போய் கதவைத் திறந்தேன்.


அப்பாவுடன் கட்டிங் செக்ஷனில் பணிபுரியும் வாசு நின்றிருந்தார்.
"என்ன தம்பி இது.. எவ்ளோ நேரம் உன் ஃபோனுக்கு ட்ரை பண்றது? உங்க அப்பா க்ளவுஸ் போடாம லே-கட்டிங் மெஷின் ஓட்டி, கைல கத்தி பட்டு ரெண்டு விரல் துண்டா விழுந்துடுச்சு. ஆஸ்பத்திரி கொண்டு போயாச்சு.. ஆபரேஷன் பண்ணணும்ன்னு சொல்றாங்க. சீக்கிரம் கிளம்பு"
எதிர்முனையில் சௌந்தர் போனைத் துண்டித்தான்.

5 comments:

ராமலக்ஷ்மி said...

கிரிக்கெட் பார்க்கலாம், பைத்தியமாகக் கூடாது. அதன் மெசேஜ்!

கதை நல்லாயிருக்கு!

பரிசல்காரன் said...

மிக்க நன்றி! (என்னாது மெசேஜா? நாம சொல்லி நாமளே கேட்கறதில்ல! அப்புறம் என்ன அடுத்தவனுக்கு சொல்றது?

☼ வெயிலான் said...

திருப்பூர் தானா? அதான் என்னடா கட்டிங், லே கட்டிங், பார் கட்டிங் ;) - அப்படினு கேள்விப்பட்ட வார்த்தைகளா இருக்குதேனு பார்த்தேன்.

கலக்குறீங்க! வாழ்த்துக்கள்!!!

உங்க மெயில் ஐடி கொடுங்க.

சின்னப் பையன் said...

கதை சூப்பர்!!!

பரிசல்காரன் said...

nanri!