Friday, May 16, 2008

விருந்தும் மருந்தும்

விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குன்னு சொல்லுவாங்க..

அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் விருந்துல எவ்ளோ மாற்றங்கள்..? ஒரு கற்பனை..

1960 - விருந்தாளிக்கு கடிதத்தில் .. "எப்போது வருவீர்கள்? உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. "

1970 - வந்த விருந்தாளி போகும்போது.. "இவ்ளோ சீக்கிரமா போறீங்களே? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க.."

1980 - "கிளம்பியாச்சா?.. சரி., போய்ட்டு லெட்டர் போடுங்க.."

1990 - "போய் சேர்ந்ததும் போன் பண்ணுங்க.."

2000 - "எப்போ ஊருக்கு போறிங்க? டிக்கெட் ரிசர்வ் பண்ணனும்.. அதான் கேட்டேன்.."

2010 - "நாளைக்கு காலைல இன்டர்சிட்டி -ல டிக்கெட் புக் பண்ணியாச்சு. இந்தாங்க டிக்கெட்"

2020 - "ஹலோ போலீஸ் ஸ்டேஷன் -ஆ? எங்க வீட்ல விருந்தாளிக ரெண்டு வாரமா தங்கி இருக்காங்க.. போற மாதிரி தெரியல.. வந்து நடவடிக்கை எடுங்க.."

2030 - "ஹலோ.. ஆமா., நாந்தான் பேசறேன்.. மொத்தம் மூணு பேர்.. கிட்டத்தட்ட மூணு வாரமாச்சு.. இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு வெளில போய்ட்டு வரப்போ முடிச்சிடுங்க.. அட்வான்ஸ் மாயாண்டிகிட்ட குடுத்தாச்சு.. மீதி காரியம் முடிஞ்சதும் தரேன்.."

10 comments:

Jaisakthivel said...

It's very nice to see your writings. Today KBR send a mail to regarding this. Hope you are well. Convey my regards to all.
Jaisakthivel,
Chennai
www.sarvadesavaanoli.blogspot.com

பரிசல்காரன் said...

Hai JSV.. Its glad to receive a comment from one of my closest well wisher! Continue reading my blog and win exiting prizes!! (eppadiyellam samaalikka vendirukku!!)

களப்பிரர் - jp said...

//2010 - "நாளைக்கு காலைல இன்டர்சிட்டி -ல டிக்கெட் புக் பண்ணியாச்சு. இந்தாங்க டிக்கெட்"

2020 - "ஹலோ போலீஸ் ஸ்டேஷன் -ஆ? எங்க வீட்ல விருந்தாளிக ரெண்டு வாரமா தங்கி இருக்காங்க.. போற மாதிரி தெரியல.. வந்து நடவடிக்கை எடுங்க.."

2030 - "ஹலோ.. ஆமா., நாந்தான் பேசறேன்.. மொத்தம் மூணு பேர்.. கிட்டத்தட்ட மூணு வாரமாச்சு.. இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு வெளில போய்ட்டு வரப்போ முடிச்சிடுங்க.. அட்வான்ஸ் மாயாண்டிகிட்ட குடுத்தாச்சு.. மீதி காரியம் முடிஞ்சதும் தரேன்.." //

போப்பா .... இதுக்கெல்லாம் இம்புட்டு வருடம் கத்திட்டு இருக்க முடியாது..

பரிசல்காரன் said...

அடப்பாவிகளா
இப்போவே பண்ண ஆரம்பிச்சுடுவாங்க போல!
நானில்ல சாமி!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

:)

ரொம்ப நொந்து போய் இருக்கீங்களா :) ..ரசிச்சுப் படிச்சேன்

பரிசல்காரன் said...

மிக மிக சந்தோஷமாக உள்ளது.. என் பக்கங்கள் உங்களால் படிக்கப்பட்டிருப்பதை அறிந்து.. ! பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல!

கிருத்திகா ஸ்ரீதர் said...

தீபாவளி சமயத்தில தலைதீபாவளி மாப்பிள்ளை ஜோக் போடறமாதிரி இருக்கு... ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள். உங்க வீட்டுக்கு வர விருந்தாளில யாரும் வலைப்பதிவு படிக்கமாட்டோங்களோ...

pudugaithendral said...

விருந்தும் மருந்தும் 3 நாளைக்குன்னு சொல்வாங்க.

இந்த 3 நாளா வந்திருந்த என்னைப் படுத்தின பாட்டை எனன்னு சொல்வேன்?

மெயிலைப்பார்த்தா உங்க பதிவு.

ரொம்பவே நொந்து போயிட்டேன்.

:( நானும் ஒரு பதிவு போடறேன்

மங்களூர் சிவா said...

பரிசல் மாயாண்டி அட்ரஸ் கொஞ்சம் குடுங்களேன்

:))))))))))))))))))

வால்பையன் said...

உங்க வீட்டுக்கு விருந்தாளியா வரலாமா, வேண்டாமா!?