Thursday, May 29, 2008
கி.பி.2013
என்னோட அவியல் பதிவுக்கு கயல்விழி முத்துலட்சுமி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாங்க. "ஆனா கொஞ்ச நாள் கழிச்சு பெண்கள் ரொம்ப குறைவா இருக்கறதால.. பணம் குடுத்து கல்யாணம் பண்ணிப்பாங்கனு சொல்றாங்களே.. அப்படியா.. வருமா அந்த காலம்..வந்தா எவ்வளவு வரதட்சனை கேக்கலாம்ன்னு யோசிச்சுவைங்க.. :- ன்னு. படிச்சுட்டு எனக்கு ஆச்சரியமா இருந்தது! ஏன்னா, அவங்க எழுதின கருத்தை வெச்சு 1993-ல (15 வருஷம் முன்னாடி!) நான் குமுதத்துல ஒரு, ஒருபக்கக்கதை எழுதிருந்தேன். (அப்போ அரசு தொட்டில் திட்டம் வந்த நேரம்ன்னு நினைக்கறேன்) என்னா ஒரு ஒற்றுமை பாருங்க! உங்க தலைஎழுத்து, இப்போ அந்தக் கதைய நீங்க படிக்கப் போறீங்க! (கயல்விழி மேடத்த திட்டாதீங்க!)
-------------------------------------------------
கி.பி. 2013
"முடிவா என்ன சொல்றீங்க?"
"ரெண்டு லட்சம் ரூபா கேஷ், இருபத்தஞ்சு பவுன் தங்கம், என் மூணாவது பொண்ணு எழுதப் படிக்க ஒரு கம்ப்யூட்டர் இதெல்லாம் இருந்தா மேற்கொண்டு சம்பந்தம் பேசலாம்" பெண்ணின் தாயார் உறுதியாய் சொல்ல, என் மனைவி என்னை முறைத்தாள். அதன் அர்த்தம் புரிந்த நான் தலை கவிழ்ந்து கொண்டேன்.
"சரி' என்று என் மனைவி சம்மதித்துவிட பிரிண்ட் செய்யப்பட்ட பேப்பர்கள் பரஸ்பரம் கையெழுத்திட்டு மாற்றிக்கொள்ளப்பட்டது.
*****************************************************
"பார்த்தீங்களா.. அவ என்னெவெல்லாம் கேக்கறான்னு? இருபது வருஷம் முந்தி ரெட்டைக் குழந்தை பொறந்தப்ப-வரதட்சிணைக்கு பயந்து-பெண் குழந்தையை அரசு தொட்டில்ல விட்டீங்க. இப்ப என்னடான்னா மாப்பிள்ளை வரதட்சிணை கொடுக்க வேண்டியதா இருக்கு!"
என் மனைவி என்னைத் திட்டத்தொடங்க, நான் இருபது வருஷத்துக்கு முன் மனைவியை கணவன் திட்டிக் கொண்டிருந்த பொற்காலத்தை நினைத்தவாறே கொதிக்கும் சாம்பாரை இறக்க சமையலறைக்குள் புகுந்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
எனக்குத்தான் பதிவெழுத மேட்டரில்லை.. ஆனா என் பின்னூட்டத்தை வைத்தே பதிவு எழுதறீங்க.. வாழ்க..:)
கதையோட முதல் பாதி பாத்து செம குஷியானேன். இப்படி நடந்தா சூப்பர்தான்னு.
ஆனா முடிக்கும் போது வெச்சீங்களே ஆப்பு
இது அரபு தேசங்களில் நடப்பது தான். பெண்ணுக்குத் தருவதற்கு பணம் இல்லாத காரணத்தால் திருமணம் ஆக இயலாத ஆண்கள் பலர் உள்ளனர். இதற்காக அரசாங்கங்கள் Marriage Fund திட்டங்களை உருவாக்கி ஆண்களுக்கு திருமணம் செய்ய பணம் தருகின்றன.
//நான் லக்கி லுக்-கோ, பாலபாரதி-யோ அல்ல! என் எழுத்து உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்! (சாரி சார்!, இதுக்கு கூடசொந்த சரக்கு குடுக்க முடியல!//
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல! :(
இந்த கதையின் கரு நடந்தால் தேவலாம். ஆனால் எப்போதோ இப்படி நடந்திருக்க வேண்டும். ராமாயணத்துல இதுமாதிரி காட்சி வரும்.., வில் ஒடிக்கிறமாதிரி வர்ற சீன்ல, எல்லா நாட்டு அரசரும், பொன்னும் பொருளும் கொண்டு வந்து, காத்திருப்பார்கள் வில் ஒடிக்க! அப்படீன்னா..
ம்ம், நான் கூட இதே டாபிக்ல வ.வா சங்கத்துல ஒரு மாசம் அட்லாஸ் வாலிபரா இருந்த போது எழுதி இருக்கேன்.
என்னது லிங்கா?
என் பதிவுல சிங்கம்லே நாங்க! அதுல இருக்கு. :p
ணா! ஒங்க நெலமய நெனச்சி நா(ன்) ரொம்பப் பரிதாபப் படறேங்கண்ணா. சரிசரி கொழம்புத் தீயற வாட வருது போய் எறக்குங்க.
நந்து f/o நிலா said...
//கதையோட முதல் பாதி பாத்து செம குஷியானேன். இப்படி நடந்தா சூப்பர்தான்னு.
ஆனா முடிக்கும் போது வெச்சீங்களே ஆப்பு//
கதையோடு இதையும் ரசித்தேன்.
பரிசல்!
இந்த கதை குமுதத்தில் வந்தபோதே வாசித்திருக்கிறேன். நல்ல கதை, நன்றி!
thank u Lakkiyaare!
Post a Comment