Saturday, January 19, 2013

சார்பு -சிறுகதை

“ஏங்க கேஸ் புக் பண்ணச் சொல்லி எவ்ளோ நாளாச்சு? இன்னும் பண்லியா?”

"இல்ல”

“நாலு நாளா சொல்லிகிட்டிருக்கேன். ஒரு ஃபோன் பண்ணி புக் பண்ண முடியலயா?”

“கடுப்பைக் கெளப்பாத. எனக்கு எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா? ஒவ்வொரு தடவையும் என்கிட்டயே சொல்லாட்டி என்ன? வீட்லதான் ஃபோன் இருக்குல்ல? கேஸ் புக் எடுத்து, நம்பர் பார்த்து ஃபோன் பண்ணி ஆர்டர் பண்ணிக்கறதுக்கென்ன? இனிமே இதையெல்லாம் சொல்லிகிட்டே இருக்காதே. நீயே பண்ணக் கத்துக்கோ”


----------------------------

“சண்டே என்ன ப்ரோக்ராம்ங்க?”

“தெரியல. வேலை இருந்தாலும் இருக்கும். ஏன்?”

“டிபார்ட்மெண்டல் ஸ்டோர் போகணும். கொஞ்சம் திங்க்ஸ்லாம் வாங்கணும்”

“எத்தனை வாட்டிப்பா சொல்றது? ஒவ்வொண்ணுக்கும் நான் வேணும் ஒனக்கு. பஸ் ஸ்டாப் - இதோ - இங்க இருக்கு. ஏதோ ஒரு நாள் மதியம் போனா ஈவ்னிங் வாங்கீட்டு வந்துடலாம். எனக்கு ஆஃபீஸ்ல ஏகப்பட்ட வேலை இருக்கு. என்னையே எதிர்பார்க்காதே”

------------------------

“ஏங்க.. தண்ணி வர்லிங்க”

“ஏன்? என்னாச்சு? மோட்டர் போடலியா?”

“கீழ்வீட்டுக்காரங்க பொங்கல் லீவுக்குப் போய்ட்டாங்க. நீங்க வேற ஆஃபீஸ் போய்ட்டீங்க. இன்னைக்கு மோட்டர் போடல”

“அதான் அன்னைலேர்ந்து சொல்லிகிட்டிருக்கேன். நம்ம டேங்க் எது, லிவரை எப்படிப் பார்த்து திருப்பி வைக்கணும் எல்லாம் சொல்லித்தர்றேன் வா-ன்னு. வேணாம் வேணாம்ன. இப்பப்பாரு. தண்ணியில்லாம... நான் இருக்கறப்ப கரண்ட் இருக்காது. நீயா எதையும் செய்யக் கத்துக்கவே மாட்டியா? ச்சே!”

-----------------------

“அயர்ன் பண்ண வேண்டிய ட்ரெஸ் கட்டைப்பையில வெச்சிருக்கேன். போறப்ப குடுத்துட்டுப் போய்டுங்க”

“எட்டரைக்கு நான் ஆஃபீஸ்ல இருக்கணும். இதையெல்லாம் நாந்தான் பண்ணணுமா?”

“ஏங்க.. அவ்ளோ பெரிய பையை எப்டிங்க கொண்டுபோறது நான்?”

“ஆமா... இவ்ளோ சேரற வரைக்கும் விட்டுட்டு என்னை வேலை வாங்கு. எத்தனை வாட்டி சொல்லீருக்கேன். நாலைஞ்சு சேர்ந்த உடனே, இப்டி பொடிநடையா போய் குடுத்துட்டு வந்துடு.., எனக்கெப்ப நேரமிருக்கும்னு தெரியாதுன்னு. கேட்கறதே இல்ல நீ. நானே எல்லாம் பண்ணணும்... ச்சே”

------------------

“ஸ்கூல்ல பேரண்ட்ஸ் டே-க்கு வரச் சொல்லிருக்காங்க. வருவீங்கதானே?”

“தெரியல. வேலை எப்டி இருக்கும்னு..”

“தெரியலையா? அப்ப நான் தனியா போகணுமா?”

“ஆரம்பிச்சுட்டியா? தனியா ஒண்ணும் போகவேண்டாம். நிறைய பேர் வருவாங்க பஸ்ல. போய்ப் பழகு”

“டீச்சர்ஸ் எதாவது சொல்லுவாங்க புள்ளைங்களைப் பத்தி. நீங்க வந்து கேட்டா...”

“ஏன் இப்டி பயந்துக்கறே? ஒண்ணும் ஆகாது. ஒரு மீட் நீ தனியாத்தான் போய்ப்பாரு.. என்னையே எதிர்பார்க்காம..”

----------------------

“ஸ்ஸ்ஸ்ஸ்.....”

“அச்சச்சோ.. என்னாச்சுங்க?”

“மொளகாயக் கடிச்சுட்டேன்”

“சீக்கிரம் தண்ணியக் குடிங்க”

“கிச்சன்லேர்ந்தே ஆர்டர் போடு. வா.. வாட்டர் பாட்டிலை வந்து எடுத்துக்குடு. சாப்பிடறப்ப பக்கத்துல வெச்சா என்னவாம்? நானேவா எடுத்துக்க முடியும்?”

அவள் வந்து எடுத்துக் கொடுத்த வாட்டர் பாட்டில், அவனிடமிருந்து ஐந்தடி தூரத்தில் ஒரு ஸ்டூலில் இருந்தது.

--------


7 comments:

ராம்குமார் - அமுதன் said...

நல்லா இருந்துச்சு இந்த ஒரு நிமிடக் கதை... ஆனா பைனல் டச் இன்னும் கொஞ்சம் தூக்கலா இருந்திருக்கலாம்... :))

vimal said...

Kkadhai Arumai mudivai maatrum urimai ennakkilai ippadi irundha nalla irukkumonu thonudhu mannikkanum
ஸ்ஸ்ஸ்ஸ்..... அச்சச்சோ என்னாச்சுங்க ...
ஒண்ணுமில்ல சாமி படத்த மாட்ட சுவத்துல ஆணியடிச்சேன் சுத்தியல் தவறி வெரல பதம் பாத்திருச்சி
பதறியபடி பெத்தடின் பாட்டிலுடன் வந்தவள் , தன்சேலை முந்தானையால் வழிந்த ரத்தத்தை துடைத்தாள் குற்ற உணர்ச்சியுடன் முடிவுக்கு வந்தான் இனி ஒரு முறை அவளை கடிந்து கொள்ளவதில்லை என்று ..

ஓஜஸ் said...

NICE

ஞானசேகர் ராஜேந்திரன் said...

நல்லா எழுதிருக்கீங்கா:-))) @Gnanasekar89

Unknown said...

mudiva innum konjam kaarama edhirparthen. ennachu?

ezhil said...

அருமையா ஒரு ஆணாதிக்கத்தை விளக்கும் கதை....

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் ஸ்டோரி! வாழ்த்துக்கள்! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html