அலுவலக விஷயமாக ஒரு ஃப்ளக்ஸ் கடைக்குப் போயிருந்தேன். ஏற்கனவே ஒரு வாடிக்கையாளர் அவரது பேனருக்கு டிசைன் சொல்லிக் கொண்டிருந்தார்.
டிசைனர்: “என்ன சைஸ் வேணும்?”
வாடிக்கையாளர்: ‘நேத்து அவரு என்ன சைஸ் போட்டாரு?”
“அஞ்சுக்கு பத்து”
வாடிக்கையாளர் திரும்பி, அவருடன் வந்தவரிடன் “அப்ப நாம எட்டுக்குப் பத்து போடுவமா?” என்று விட்டு “எட்டுக்கு பத்துங்க” என்கிறார்.
டிசைனர் ஃபோட்டோஷாப்பில் சைஸ் செட் செய்துவிட்டு “என்ன படம் போடணும்?”
“நேத்து அவரு போட்ட படத்தை விடக் கலக்கலா இருக்கணும். அதுக்கு பத்திருபது அடி தள்ளித்தான் இந்த ஃப்ளக்ஸ் வைக்கப்போறோம். எல்லாரும் இதப்பத்திதான் பேசணும். அந்த மாதிரி படம் வைங்க”
டிசைனர்: “போனவருஷம் நீங்க ரெண்டு பேரும் ஒரே பேனர்தானே வெச்சீங்க?” என்று கேட்க - வாடிக்கையாளர்
“ஆமாங்க. இந்த வாட்டி நான் தனியா வைக்கறேன். சண்டையாகிடுச்சு. அந்தாளை விட நான் கூட்டம் சேர்த்துக் காமிக்கணும்” என்கிறார்.
இவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று யூகிக்க முடிகிறதா?
கட்சியெல்லாம் இல்லை. ஐயப்ப பக்தர்கள் குழுவாம். இந்த வருடம் இரண்டு குழுவாகப் பிரிந்து, அன்னதான விழாவை போட்டியாக நடத்தி, மைக் செட்-பேனர்கள் என்று விளம்பரம் செய்து...
கூடிய சீக்கிரம் நம்மை நாத்திகனாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.
** ** ** ** ** ** ** **
மேலே உள்ள பத்தி நான் முகநூலில் எழுதியது. ’ப்ளாக்ல ஏன் அதிகமா எழுதறதில்ல’ என்ற கேள்விகளால் அவ்வப்போது தோன்றுவதை முகநூலிலேயே எழுதிவருகிறேன். (http://www.facebook.com/Parisalkaaran) ஆனால் பலருக்கு முகநூல் கணக்கு இல்லை. என் நண்பனும், வலையுலகின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவருமான வெண்பூ அமெரிக்கவாசியாகிவிட்டாலும் இன்றும் முகநூல் கணக்கு இல்லை அவருக்கு.
‘நீ பாட்டுக்கு அங்க எழுதினா நானெப்படி படிக்க?” என்று கேட்கிறார். ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், ட்விட்டர், டம்ப்ளர் என்று பலபக்கம் எழுதினால் இதுதான் ப்ரச்சினை. ஆக, இனி அங்கிருப்பவற்றையும், இங்கே எழுதியவற்றையும் மாற்றி மாற்றிக் கொட்டலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
** ** ** ** ** ** ** ** **
பற்பல வருடங்களுக்கு முன் குமுதம் வாங்கிக் கொண்டிருந்த காலத்தில் அதில் வரும் ‘லைட்ஸ் ஆன்’ (சினிமா துணுக்குப் பகுதி) விரும்பிப் படிப்பதுண்டு. வினோத் என்ற புனைப் பெயரில் ரா.கி.ரங்கராஜன் அசத்தலான நடையில் எழுதியிருப்பார். ஒவ்வொரு துணுக்கிலும் ‘நச்’சென்ற ஆங்கிலச் சொற்றொடர்கள் வேறு.
அவற்றைத் தொகுத்து, தங்கத்தாமரை பதிப்பத்தில் புத்தகமாகப் போட்டதை அறிந்து, விபிபி-யில் வாங்கினேன். படித்தேன்.
எல்லாம் சரி. ஆனால் தொகுத்தவர்கள் ஏன் அவை வெளியான தேதியை (குறைந்த பட்சம் வருஷத்தையாவது) குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. பதிப்பாளர்களின் அசிரத்தையையே அது காட்டுகிறது. உதாரணமாக ஷர்மிலி, ஷாலினியைப் பற்றி விமர்சிப்பதைக் குறித்து ஒரு பத்தியை இப்போது படிக்கும் எனக்கு, ‘அட.. எப்ப நடந்துச்சு இது?’ என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும்தானே?
ப்ச்! போங்க சார்!
** ** ** ** ** ** ** ** ** ** **
http://www.parisalkaaran.com/2008/11/blog-post_19.html
மேற்கண்ட போஸ்டில் கடைசி பாராவைப் படிக்கவும். 2008-ல் கார்க்கியை முதன்முதலில் பார்த்தபோது எழுதிய வரிகள். நண்பர்களுக்கு அருகில் இருக்கவேண்டும், வேலைக்கு வேலையும் செய்து, Passionஆன எழுத்தையும் நண்பர்களோடு கலந்து பேசி கொண்டு செல்ல வேண்டுமென்று நினைத்திருக்கிறேன். நான் சென்னை சென்று செட்டிலாவேன் என்றெல்லாம் கூட நினைத்திருக்கிறேன். ஆனால், இந்தக் கார்க்கி திருப்பூர்வாசியாவான் என்று கனவிலும் நினைத்ததில்லை.
ஆகியிருக்கிறான். சில காலம் இங்கேதான் என்கிறான். எங்கள் ஊரில், என் தெருவில், என் வீட்டுக்கடுத்த வீட்டில் குடிவந்திருக்கிறான். அடிக்கடி ராஜன் வேறு வந்துபோகிறான். ‘டிஸ்கஷன் வாங்க பாஸ்’ என்று என்னை வேறு கூப்பிட்டு உட்கார வைத்துக் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘என்னாங்கடா நடக்குது?’ என்றால் மையமாகச் சிரிக்கிறார்கள்.
என்னமோ திட்டம் இருக்கு!
** ** ** ** ** ** ** ** ** ** **
இன்னொரு முகநூல் பகிர்வு:
எவரையும் கிண்டல் செய்வதில் எனக்கு உடன்பாடில்லைதான். அவரையும்தான். ஆனால் அவரது கிறுக்குத்தனங்களையெல்லாம் இனி ‘தன்னம்பிக்கை’டா என்று ஏற்றி விடுவதிலும் உடன்பாடில்லை.
படம் ஜெயிச்சுடுச்சு. (அப்படித்தானே?) இதுவரை அவர் பொதுவெளியில் செய்த கோட்டித்தனம், கோமாளித்தனத்தையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு - இனி, காமெடியைத் தன் மூலதனமாகக் கொண்டு திரையில் மட்டும் அதையெல்லாம் வெளிப்படுத்தினால் தெலுங்கு ப்ரம்மானந்தம் ரேஞ்சுக்கு அவர் வரமுடியும்.
வாழ்த்துகள் சீனி சார்!
** ** ** ** ** ** ** ** ** ** **
ஜன. 25-ல் இருந்து ஆரம்பமாகப்போகிறது புத்தகக் கண்காட்சி. திருப்பூரில். ஒவ்வொரு வருடம் போலவே மாதக் கடைசியில் ஆரம்பித்து, சம்பளம் கைக்கு வருவதற்கு முன் முடிந்துவிடும். வேடிக்கை பார்க்க மட்டுமே போக முடிகிற சூழலிலிருந்து, திருப்பூர் வலைப்பதிவர்கள் அமைப்பான சேர்தளம் விலக்கு அளித்திருக்கிறது. சென்ற வருடத்திலிருந்து வேடிக்கை பார்க்க மட்டுமல்லாமல், வருபவர்களை வரவேற்கவும், இணையத்தில் எழுதுவது குறித்தும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
என்னிடம் ஆட்டோக்ராஃப் வாங்க, ஃபோட்டோக்ராஃப் எடுக்க விரும்பும் நேய/ரசிக/வாசகப் பெருமக்கள் தினமும் மாலை சந்திக்க வரலாம்.
** ** ** ** ** ** ** ** ** ** **
உமாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். சிக்னலுக்காக முன்னால் சென்ற பேருந்து நிற்கவே, நானும் நிறுத்தினேன். என் பின்னால் கைனடிக் ஹோண்டாவில் வந்து கொண்டிருந்த வயதானவர் ஒருவர், ‘போங்க சார்’ என்று என்னிடம் சொன்னார். அவர் சொன்னது, அந்தப் பேருந்தின் வலதுபுறம் இருந்த இடைவெளியில் போகச் சொல்லி. அந்த வழியே சிலர் நடந்து வந்து கொண்டிருக்கவே, ‘ஆளுக வந்துட்டிருக்காங்க சார்’ என்றேன். அவர் கொஞ்சம் கோபமாக, ‘நமக்குத்தாங்க வழி. வந்துட்டிருக்காங்கன்னு நின்னா, நின்னுகிட்டே இருக்க வேண்டியதுதான்’ என்று கோவமாய்ச் சொன்னபடி, என்னைத்தாண்டிச் சென்றார்.
எனக்குக் கடுப்பானது. ‘எப்டிச் சொல்றாரு பாரு? கொஞ்சம் கூட ரோட் சென்ஸ் இல்லாம. அங்க போய் நிக்கத்தானே போறாரு. இல்ல, ‘நமக்குத்தான் வழி’ன்னு ட்ராஃபிக் போலீஸை இடிச்சுட்டே போகப்போறாரா?’ என்று புலம்பினேன்.
உமா சொன்னார்: ‘விடுங்க. வயசானாலே கண்டதுக்கும் கோவம் வரத்தான் செய்யும்”
நான்: “ஆமாமா. கரெக்ட். என்னமா கோவப்படறான் அந்தாளு” என்றதும், உமா மறுபடி சொன்னார்:
‘நான் அவரைச் சொல்லலைங்க”
ஙே!
** ** ** ** ** ** ** ** ** **

13 comments:
தெரியாத பல விஷயங்கள்.... நன்றி
@kolaiyali
write regularly here.
Facebook is a pain to check regularly.
அது ராகி ரங்கராஜன் தான் என்று எப்படி கன்பார்ம் செய்கிறீர்கள்?
நானும் முகநூல் பக்கம் போவதே இல்லை. அதனால அங்கே போடுவதை இங்கேயும் பதிவிடுங்கள். (உங்க சில ட்விட்டுக்கள் குங்குமம், விகடன் ஆகியவற்றில் படித்திருக்கேன்)
//அது ராகி ரங்கராஜன் தான் என்று எப்படி கன்பார்ம் செய்கிறீர்கள்?//
இதை ராகி ரங்கராஜனே சொல்லியிருக்கிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"அவியல்" சுவைத்தது.
சுவையான அவியல்! அருமையான பகிர்வு! நன்றி!
உருப்படியா எழுதறதை எல்லாம் தொகுத்து பதிவுல போட்டுக்கலாம். அட, நம்ம referenceக்காவது பிற்காலத்துல உபயோகமாயிருக்கும்
கார்க்கி. ராஜன் திட்டம் கைக்கூட வாழ்த்துக்கள்
//உமா சொன்னார்: ‘விடுங்க. வயசானாலே கண்டதுக்கும் கோவம் வரத்தான் செய்யும்”
நான்: “ஆமாமா. கரெக்ட். என்னமா கோவப்படறான் அந்தாளு” என்றதும், உமா மறுபடி சொன்னார்:
‘நான் அவரைச் சொல்லலைங்க”
//
ஹ ஹ... ரசித்தேன்... அவியல் அருமை.....
yellaame nallaayirukku.....
:)
Post a Comment