Tuesday, September 6, 2011

ஒரே தகவல்

டந்த மூன்று மாதங்களாக பெரிசாக எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. இது பற்றி இப்போதுதான் முதல்முதலாகச் சொல்கிறேன். முதலிலேயே சொல்லியிருந்தால் மொத்தியிருப்பீர்கள் என்று தெரியும். எழுதாமல் இருப்பது எப்படி என்று எழுதுவதற்காக, எழுதாமல் இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்வதற்காக எழுதாமல் இருந்து அதிலேயே மூழ்கி விட்டேன். எழுதாமல் இருப்பது என்பது நம்பிக்கை சார்ந்தது அல்ல. அது ஒரு வெட்டித்தனம். ஒன்றை எழுதுகிறீர்கள். அதை வெளியிட்டுவிட்டால் எல்லாரும் உங்களை மண்டையிலேயே போடுவார்கள். “இதை நான் நம்ப மாட்டேன்” என்று யாராவது சொன்னால் அது மடமை. எழுதுவது படிப்பவரை சோதித்துப் பார்க்கும் செயல். அது ஒரு விஞ்ஞான உண்மை. அதே போன்றதுதான் எழுதாமல் இருப்பதும். என்னுடைய எழுத்து ஒருவருக்கு இலக்கிய ரீதியாக இன்பம் தருகிறதோ இல்லையோ, அதில் உள்ள ஒரு சில வார்த்தைகளின் சூட்சுமங்கள் அதை வாசிப்பவரின் வாழ்வில் மிகப் பெரிய எரிச்சலை உண்டு பண்ணும். அதில் முக்கியமானவை உங்கள் கையையே கடித்துக் கொள்வது, மண்டையைப் பிய்த்துக் கொள்வது. இதை நான் வெறுமனே பரபரப்புக்காக சொல்லவில்லை. என் எழுத்தைப் படித்து, அதில் நான் சொல்லியிருக்கும் ஒரு விஷத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 48 நாட்கள் மங்காத்தா பார்க்க வேண்டும் என்பது போன்ற நடைமுறை சாத்தியமில்லாத எதுவும் நான் சொல்வதில் இருக்காது. ட்விட்டர், பஸ்ஸ், ப்ளாக், ஃபேஸ்புக் ஆகியவற்றை விலக்க வேண்டும் என்பது போன்ற மனித விரோத பத்தியங்களும் இல்லை. “அப்படிப்பட்ட விஷயத்தை நீயே முயற்சி செய்து மெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகலாமே?” என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். எனக்கும் மெண்டல் பட்டம் வேண்டும்தான். ஆனால் அது என்னை எழுதியவர்களை ஆக்கி, அதை ரசிப்பதன் மூலமாக மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

.

28 comments:

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

இங்க பரிசால்காரன் என்று ஒருத்தர் இருந்தார் அவர எங்கே?

சேலம் தேவா said...

பாஸ்..எதாவது பிரச்சனையா..?! :)

KSGOA said...

என்ன ஆச்சு? ஒண்ணும் புரியலை!!!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நலம் தானா பரிசல்,

HVL said...

what happened? I can't understand anything!

ரைட்டர் நட்சத்திரா said...

உங்களுக்கு கிக்கு வேணுமா !

ICANAVENUE said...

மிக நல்ல பகடி!

பரிசல்காரன் said...

http://charuonline.com/blog/?p=2472

எல்லாரும் அவரைப் படிக்கறத நிறுத்தீட்டாங்களா என்ன? ஐயோ!!!

HVL said...

இதையெல்லாம் சொல்லிட்டு செய்யுங்க!
நான் கூட எங்களுக்கு ஏதாவது டெஸ்ட் வெக்கறீங்களோன்னு நினைச்சேன்!

குறையொன்றுமில்லை. said...

என்ன சொல்ல வரிங்கப்பா?

கொங்கு நாடோடி said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா..

கொங்கு நாடோடி said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

நாங்கலாம் வாரக்கணக்குல எழுதாம இருப்போம்.. சொல்லவே வேணாம்.. அதுவா மத்தவங்களுக்கு தெரியும்..

வால்பையன் said...

என்ன தல, மந்திரிச்சு விடனுமா?

வால்பையன் said...

பின்னூட்டத்துல சொல்லிட்டிங்களா?

போங்க, கிக்கே போச்சு!

தராசு said...

எல்லாரும் ஓடுங்க,,, அது நம்மை நோக்கி வந்துகிட்டே இருக்கு....

சேலம் தேவா said...

அவரு இந்தமாதிரி எழுதுனா சாதாரணம்... நீங்க எழுதுனா அசாதா"ரணம்" :)

அசோகபுத்திரன் said...

எதுவாயிருந்தாலும் தமிழ்ல சொல்லுங்க... எனக்கு துரெகுபலினடிஃபஜங் பாஷையெல்லாம் தெரியாது...

ஷர்புதீன் said...

//
எல்லாரும் அவரைப் படிக்கறத நிறுத்தீட்டாங்களா என்ன? //

அவரை படிக்க என்ன இருக்கு ? எல்லாம் தெரிந்ததுதானே..... ( புத்திசாலித்தனமாக பேசுறேனாம் )

KSGOA said...

இப்போ புரியுது!!!!

அமுதா கிருஷ்ணா said...

என்ன ஆச்சு?

சுசி said...

எதுக்கு?? அவர படிச்சு நாங்களும் இப்டி ஆகவா??

nandhu said...
This comment has been removed by the author.
nandhu said...

உங்களின் தீவிர வாசகன் நான். உங்களின் அனைத்து புத்தகங்களும் படித்து விட்டேன். டாஸ்மாக் இல் உங்களை முதல்முதலில் பார்த்தேன். அப்போது உங்கள் பேச்சைக் கேட்டு ஸ்தம்பித்துப் நின்றன் . அருகில் வந்து பேச நினைத்தேன் . ஆனால் நீங்கள் மப்பில் மட்டையாகி விட்டிர்கள் .அப்படியும் நீங்கள் என்னை பார்த்து கண்டபடி திட்டினீர்கள் . அன்பு செலுத்துவது வேறு..அன்பாகவே வாழ்வது வேறு என்பது அப்போது புரிந்தது,,, நீங்கள் மிகவும் கனிந்து இருப்பதும் , ஆன்மீக நிலையில் முதிர்ந்த நிலையை அடைந்து இருப்பதும், பேச்சிலும், செயலிலும் பிரதிபலித்துகொண்டே இருக்கும். நீங்கள் ஒரு ஜென் ஞானி . ஏனோ என் காதலியை 100 வருடம் பார்க்காதது போல் இருக்கிறது…அடுத்த முறை உங்களை கண்டிப்பாக சந்தித்து விடுகிறேன். நீங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் எனக்குக் கவலையில்லை. ஒரு வாசகனை கூட ஒரு நண்பனைப்போல் பாவிக்கும் மனப்பக்குவம். உங்களை வாசிக்காமல் தவறவிட்டது ஒரு மிக பெரும் ஈடு செய்ய முடியாத இழப்பு. என்னால் சகித்துக்கொள்ள முடியாத உங்கள் எழுத்தை வாசிப்பது ஒரு தவம் . அதை எழுதும் நீங்கள் ஒரு சித்தர் . எந்தக் குழந்தை பிறந்தாலும் உங்கள் பெயர் வைப்பதாக இருக்கிறன்.. ( வாசகர் வட்ட சந்திப்பு எப்போது என்று தெரிவிக்கவும் .. உங்களுடன் விடிய விடிய full ஆக உலக இல்லக்கியத்தை பருக வேண்டும் ).

இசைப்பிரியன் said...

naan nethe padichuten , Adhanaala pudichirunthuthu !

சுரேகா.. said...

சூப்பர்... கடைசியா என்ன சொல்ல வர?

இப்பதானேடா நல்லவன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்..!! :)

Noolulagam said...

புரியரமாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு.....

www.noolulagam.com

jalli said...

thampi ippaththaan koncha naala
unka blog ellam padikka thodanki
irukkean. mendal athu ithunu eluthi
mirattureenkaley. irunthaalum sarithaan oorukku pokaama rompa naal thiruppuril irunthal ippadiththaan irukkum. eathukkum
orunadai oor poi panchalinka aruvila gummunu oru kuliyal podunkka ellam sari aayidum.seventhiran kitta adikkadi
peasunaalum ippadi aayidum.
eathukkum manasai vitraathinka. eavvaluvu selavaanalum paarthukkalaam.

jallipatty palanisamy.