Friday, September 9, 2011

கண்ணம்மா

“தம்பி இதுல கண்ணம்மான்னு ஒரு பேரிருக்கும். எடுத்துக்குடு” - அந்தப் பெரியவர் தன் சீட்டிலிருந்து என்னிடம் அவரது நோகியாவை நீட்டினார். நோகியா 1100. பலரது ஆல்டைம் ஃபேவரைட் மொபைல்.

பேருந்தில் ஏறும் வாசலை ஒட்டிய, இடதுபுற இரட்டை சீட்டில் நானும் உமாவும் அமர்ந்திருந்தோம். வலது புறம் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார்.

நான் கண்ணம்மாவைத் தேடினேன். மொபைலில். ம்ஹும். ‘K' வரிசையில் அப்படி ஒரு பெயரே இருக்கவில்லை.

“ஐயா.. அந்தப் பேரே இல்லீங்களே..”

“அடென்ன தம்பி.. உன்ரகூட ரோதனையாருக்கு. நமக்கு அதெல்லாம் பார்க்கத் தெரியாததாலதானே கேட்கறேன்.. ரெண்டு நாள் பேசலைன்னா நம்பர் அவிஞ்சு போயிருமா.... இல்லீன்ற?” என்றார் கொஞ்சம், கோபமும் கொஞ்சம் எரிச்சலும் கலந்த தொனியில்.

“இல்லைங்கய்யா.. கே-ல கண்ணம்மாங்கற பேர் இல்லைங்க...”

“அதெ எவன்கண்டான் கேயாவது ஏயாவது... நல்லாப் பார்த்து எடுத்துக்குடு.. வூட்டுல சமைக்கச் சொல்லோணும்” என்றார்.

மணி இரவு ஒன்பதரை. கோவையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தது பேருந்து.

நான் மறுபடி தேடிவிட்டு “இல்லைங்க...” என்றேன்.

அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, உமாவை நோக்கி “நீ பாத்துக்குடும்மணி.. என்ர மருமவப்புள்ள மாதிரி நீயும் வெவரமாத்தான் இருப்ப” என்றார்.

நான் இந்த நேரத்துக்குள் அவரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். உமா சிரித்துக் கொண்டே ‘அந்தப் பேர் இல்லீங்கய்யா.. அவர் பார்க்கறப்ப நானும் பார்த்தேன்’ என்றார்.

“ம்ம்ம்... அப்டீன்னா பாலு இருக்கான்னு பாரேன்” என்றார்.

நான் ஃபோனை வாங்கிப் பார்த்தேன். Balu K, Bala, Balasubbu என்றொரு நான்கைந்து பாலுக்கள் இருந்தனர்.

அவரிடம் சொல்லி, கேட்டேன்.

“எந்த பாலுங்க?”

“என்ர மவன்தான்”

உமா சிரித்துவிட்டார். அவர் பார்க்கவே, ஜன்னலோரம் முகம் திருப்பிக் கொண்டார்.

“அதெல்லாம் இதுல இல்லீங்கய்யா.. என்ன பேர்ல பாலுவை நீங்க இதுல பதிவு செஞ்சிருக்கீங்கன்னு தெரியணும்” என்றேன்.

“என்ர மவனை மொதல்ல ஒதைக்கணும். இந்தக் கெரகம் வேணாம்னா கேட்டாத்தானே..” என்று கொஞ்சம் உரக்கவே - சொல்லிவிட்டு “கொஞ்ச நேரம் முந்திகூட கூப்டான் கண்ணு...” என்றார்.

“அப்டீன்னா இருங்கய்யா..” என்று சொல்லிவிட்டு ரிசீவ்ட் காலை சோதித்தேன். பாலு.கே என்றிருந்தது.

அதை டயல் செய்து ‘பேசுங்க..’ என்று அவரிடம் நீட்டினேன்.

என்னை ஆழமாக முறைத்து.. ‘இப்ப மட்டும் எப்படிக் கெடச்சுதாம்?’ என்று கேட்டுவிட்டு ‘அடே பாலு.. வூட்லயா இருக்கியா தோட்டத்துலயா?...’ என்று உரத்த குரலில் பேசத் தொடங்கியவர் ‘ பாலு... பாலு.... இதென்ன அவன் பேசமாட்டீங்கறான்..?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

நான் ஃபோனை வாங்கிப் பார்க்க ரிங்டோன் போய்க் கொண்டிருந்தது. ‘இன்னும் அவர் எடுக்கலைங்க’ என்று சொல்லச் சொல்ல எடுத்தார் யாரோ. அந்தப் பெரியவரிடம் நீட்டினேன்.

அவர் மகன்தான். இரவே திரும்பிவிடுவதாகவும், அதனால் மருமகளை சமைத்து வைக்கச் சொல்லியும் கூறினார்.

அதற்குள் நான் என் ஃபோனில் Angry Birds விளையாட ஆரம்பித்திருந்தேன். அவர் ஃபோனை வைத்துவிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.

எடுத்தவர் பேசத் தொடங்கினார். இப்போது அழைத்தது அவர் மருமகள். பேசியவர் முடிவில்.. “அவன் தோட்டத்துல இருப்பான். உன்ரகிட்டயே சொல்லிடலாமுன்னு பார்த்தா, இங்க ஒரு தம்பி இதுல உன்ர பேரே இல்லைன்னுடுச்சு” என்று என்னைப் பற்றி புகார் வாசித்துக் கொண்டிருந்தார்.

ஃபோனை வைத்துவிட்டு ‘இப்ப பேசிட்டேன்ல? படிச்சவனாட்டம் இருக்க.. இத்தாத்தண்டில போனை வெச்சு நோண்டிகிட்டிருக்க.. பேரில்லைன்ற” என்று அவர் சொல்லவும், ‘இங்க குடுங்கய்யா’ என்று அவர் ஃபோனை வாங்கி ரிசீவ்ட் காலைப் பார்க்க ‘Gannama” என்று இருந்தது.

“ஐயா.. கண்ணம்மாக்கு கே தாங்க வரும்.. இதுல ஜி போட்டிருக்கு. அதான் தெரியல..” என்றேன்.

“அந்தக் கெரகெமெல்லாம் எனக்குத் தெரியுமா.. படிச்சவனுக. உங்களுக்குதான் தெரியணும்.. “ என்றவர் “சரி விடு... என்ர மருமவன்கிட்ட பேசணும்... சுப்புன்னு இருக்கும்பாரு... எடுத்துக் கொடு” என்றார்.

நான் 'A' விலிருந்து தேட ஆரம்பித்தேன்.


.

51 comments:

HVL said...

எல்லாம் தெரிஞ்சவரு போல இருக்கு!

அகல்விளக்கு said...

ஹிஹிஹி...

அட்டகாசம் பண்றாரு போங்க...

இந்தப் பெருசுங்களே இப்படித்தான்... :))

CS. Mohan Kumar said...

Could have been written as a short story. Particularly the last line gives that feeling

Senthil said...

Great!!!!!!!!!!!

senthil(tirupur) Doha

Sen22 said...

நல்ல மனுஷன்-யா அவரு... :))

கடைசி லைன் டாப்பு...

இந்த மாதிரி நிறைய பேரு இருக்காங்க..

RaThi Mullai said...

:-) Nice Narration

Arunkumar said...

thodakkathileye kannamma - gannamma aagi irukkum endru yugithu vitten. Appozhudhu naan manadhukkul solliyadhu ippadhivin kadaisi varigalaai ulladhu.:);)
Innondru Enakum Neengal kurippita nokia model favourite dhaan.:)

நாகை சங்கர் said...

கலக்கல் பதிவு. இது தான் பரிசல். இதை விட்டுட்டு சும்மா ட்விட்டர்ல மொக்கை போட்டு நேரத்தை வீணாக்குறீங்களே?

settaikkaran said...

சூப்பர்! முடிச்ச விதம் அபாரம்! வாய்விட்டுச் சிரிச்சிட்டேன். :-)))))))

கேரளாக்காரன் said...

One of the best article in recent days

sankavi said...

அந்த தாத்தாவை பார்க்கணும் போல இருக்கு அண்ணா

பித்தனின் வாக்கு said...

good parisal. nalla sriththen.

சேலம் தேவா said...

//நான் 'A' விலிருந்து தேட ஆரம்பித்தேன்.//

"இடம்" "பொருள்" பாத்துன்னு சொல்வாங்கல்ல.. அது இதுதான் பாஸ்.. :))

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

சுசி said...

நல்லா எழுதி இருக்கீங்க பரிசல்.

சிரிப்பை மீறி தோணியது.. அவர் வெள்ளை மன மனிதர் போல :))

குறையொன்றுமில்லை. said...

ஆஹா, படிக்க படிக்க நல்லா சிரிக்க முடிந்தது.மொபைல் போன் சிலருக்கு யூஸ் பண்ந்தெரியாமத்தான் இப்பவும் இருக்கு.

Kishore Kumar said...

கலக்கல் பதிவு!!!

KathaiSolli said...

நல்ல பதிவு, ரோதன பண்ணலும் பெரியவர்கிட்ட நல்ல தோரண இருக்கும் போல...

Sukumar said...

This is it! Classic Parisal Shot...!!!

Unknown said...

படிச்சவிகளே இப்படித்தானுங்க...திருவாத்தானுகளா இருக்காங்க...ஏனுங்க நா சொல்றது சரிதானுங்களே..

Unknown said...

புது அனுபவம்

நல்லாத்தான் இருக்கு..

ILA (a) இளா said...

படிச்சவங்களே இப்படித்தான்யா.. ஒன்னுக்கும் உதவாதுங்க

நாகராஜ் said...

நான் 'A' விலிருந்து தேட ஆரம்பித்தேன்.

நான் பயத்தோடு 'A' விலிருந்து தேட ஆரம்பித்தேன்.

இப்படி தான் நடந்திருக்கும்

ghi said...

படித்தவுடன் உதட்டில் ஒரு புன்னகை அரும்பியது... அந்த மகிழ்ச்சியுடன்....

மிக அருமை....

R. Gopi said...

:-)

bandhu said...

நீங்க நேர J ல தேட ஆரம்பிச்சிருக்கலாம். எப்படியும் Jubbu ன்னு தான் இருக்கும்! (நான் அவருக்கு உறவு இல்லீங்கோ)

சஹஜமொழி said...

very nice, Innocent man

KSGOA said...

அக்மார்க் பரிசல் டச் !!!!! நல்லாயிருக்கு.இப்படி எழுதுரத விட்டுட்டு..........

ponsiva said...

அனுபவத்தை கூட சிறந்த சிறுகதை போல் எழுதுகிறிர்கள்
வாழ்த்துகள் பரிசல்

கடைக்குட்டி said...

:) sema..

வால்பையன் said...

தேடுங்க தேடுங்க தேடிகிட்டே இருங்க!

Damodar said...

Oru Pakka Kathai !!1

Saran said...

i dont know whether its real incident or not.. but its interesting one with a final punch !! :)

R. Jagannathan said...

Jubbu என்று பார்த்திருந்தால் உடனே கிடைத்திருக்குமே! - ஜெ.

R. Jagannathan said...

Jubbu என்று பார்த்திருந்தால் உடனே கிடைத்திருக்குமே! - ஜெ.

Madhavan Srinivasagopalan said...

// நான் 'A' விலிருந்து தேட ஆரம்பித்தேன். //

'கே'வில் நீங்கள் தேடி கிடைக்கவில்லையென சொன்னபோதே... நான் நினைத்த விஷயம் இது ('A' விலிருந்து தேடுவது ).
நம்பர் பூட்டின் எண் மறந்து விட்டால் என்ன செய்வது..
ஜஸ்ட் காமன் சென்ஸ்..

jalli said...

"thodarpu eallaikku veliyil ullar"
padava raaskol oru nimisam adanki
veettula irukka maattaney.
kannamma-kalakkal chellamma.

இரசிகை said...

//நான் இந்த நேரத்துக்குள் அவரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன்.//

:)

naan H..-il kidachirumnu ninachutte vaasithen.

but,A-yai yaethirpaarkkala.

vaazhthukal parisak..

Nat Sriram said...

Excellent Parisal ji..

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

இது பரவா இல்லீங்க!

மொட்டை, சொட்டைன்னு ஏதாவது செல்லப்பேர்ல பதிவு செஞ்சுட்டு அப்புறமா நானே வேற பேர்ல தேடி அல்லாடி இருக்கேன்!

இப்பல்லாம் உஷாரா ‘வெங்கடேசன், கசின்” அப்படின்னெல்லாம் போட ஆரம்பிச்சாச்!

இப்பவும் பொழுது போகாம போன் டைரக்டரிய நோண்டும்போது, பாதிப்பேரு யாருன்னே ஞாபகம் வரமாட்டேன்னுது.

’என்ன கெரகண்டா இது, எவன் என் போன்ல இதெல்லாம் பதிஞ்சது’ன்னு கோவமும் வருது, ஹிஹி!

அன்பேசிவம் said...

பரிசல் சீரியஸா சொல்றேன், இதுதான் உங்க ப்ளஸ். நீங்க ட்விட்டர்ல நேரம் செல்விடுவதை குறை சொல்லவில்லை, ஆனால் இதை விட்டுவிடாதீர்கள். ஐ லைக் திஸ் போஸ்ட் வெரி மச்.

நிறமில்லா சிந்தனை said...

பரிசல்.. ஒரு விஷயத்தை சுவாரசியமாக எழுத்தில் வடிப்பதற்கு தனித் திறமை வேண்டும். உங்களிடம் அது அதிகம். சிறுகதை முயற்சியிலும் நாவல் எழுதுவதிலும் உங்கள் எழுத்தாண்மையை நிருபியுங்கள் நண்பரே

sriram said...

ஹாஹாஹா! So sweet old man! loved it. :)

ஈரோட்டான் said...

உங்களுக்கு மட்டும் எப்டிங்க கரெக்டா மாட்டுது..:)

Unknown said...

SuPer

selventhiran said...

சபாஷ்யா...! நீ தாமிராவை தாண்டுற இடம் இதுதாம்யா...!

Preetha said...

Superb!! rombe nalla irukuu....nerayave sirichen :))

Alex boobalan said...

sema kathai i like this

சுரேகா.. said...

சூப்பர் மக்கா! பகார்ன்னு சிரிச்சேன்...!!

chinnapiyan said...

“சரி விடு... என்ர மருமவன்கிட்ட பேசணும்... சுப்புன்னு இருக்கும்பாரு... எடுத்துக் கொடு” என்றார்.

அட ங்கொய்யாலே ன்னு சொல்லன்னும்போல இருந்துச்சு

பிரதீபா said...

pannaiyaarum padminiyum maadhiri idhaiyum azhagaa oru short film-aa eduththaa superb-aa irukkunga.